வியாழன், 13 ஜனவரி, 2022

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

 


பேரனின் லெகோ பொங்கல்.

//லெகோ விளையாட்டுப் பொருளில் செய்த பெரிய பொங்கல் பானை பொங்குகிறது. முன்னால் அலங்கார மின் விளக்குகள் போட்டு இருக்கிறான் , வாசலில் வரவேற்கக் காத்து இருக்கிறான். பானை அருகில் கரும்பு நிற்க வைத்து இருக்கிறான். 

தாத்தா, ஆச்சி,  அப்பா, அம்மா மற்றும் உறவுகள், மற்றும் ஆடு மாடு  பூனை நாய் குதிரைகளுடன் பொங்கல் கொண்டாடுகிறான். அழைத்து இருக்கிறான் எங்களை. உங்கள் ஊரில் கேஸ் அடுப்பில் பொங்கல் .இங்கு பாரம்பரிய பொங்கல் வைக்கிறோம் வாருங்கள் என்கிறான் மகன்.//

பொங்கல் வருது ! பொங்கல் வருது ! கொண்டாடலாம் வாங்க  2020 ல் போட்ட பதிவு படித்து பாருங்கள் பேரனின் பொங்கல் பாடல், மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளின் பகிர்வு.



2015 ம் ஆண்டு மகன், மருமகள், மகள் பேரனுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த முறை மகன் குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர்களுடன் பொங்கல் பண்டிகை.



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

--------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. வாங்க கோமதி அக்கா..   இந்தியா வந்தது முதல் சைலண்ட்டா இருக்கீங்களேன்னு யோசித்தேன்.  வாழ்த்துகளுக்கு நன்றி.  பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஶ்ரீராம் , வாழ்க வளமுடன்
      ஊருக்கு வந்தது முதல் வேலைகள் காத்து இருந்தன , ஒவ்வொன்றாக செய்து வருகிறோம்.
      வருகிறேன் விரைவில்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. கோமதிக்கா முதல் படமே அட்டகாசம்! பேரன் கவின் குட்டியாக இருந்தப்ப உள்ள படம் க்யூட் வரவேற்கிறார். ரொம்ப அழகு.

    பேரனின் லெகோ பொங்கல் அமைப்பும் ரசித்தேன் அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      பேரனையும், அவன் வைத்த பொங்கலையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி

      நீக்கு
  3. தாத்தா, ஆச்சி, அப்பா, அம்மா மற்றும் உறவுகள், மற்றும் ஆடு மாடு பூனை நாய் குதிரைகளுடன் பொங்கல் கொண்டாடுகிறான். அழைத்து இருக்கிறான் எங்களை. உங்கள் ஊரில் கேஸ் அடுப்பில் பொங்கல் .இங்கு பாரம்பரிய பொங்கல் வைக்கிறோம் வாருங்கள் என்கிறான் மகன்.//

    ஹாஹாஅஹா...அதானே!! வந்துடறோம்.

    பொங்கல் நல் வாழ்த்துகள் கோமதிக்கா உங்கள் எல்லாருக்கும். கவினுக்கும் சொல்லிடுங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க பாரம்பரிய பொங்கலை பார்தீர்களா.?
      பொங்கல் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. பொங்கல் நல்வாழ்த்துகள் உங்கல் எல்லோருக்கும்

    பேரனின் விளையாட்டுப் பொருளில் அமைக்கப்பட்ட பொங்கல் விழா கொலு போன்று சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்கள் நல் வாழ்த்துக்கும், பேரனின் பொங்கல் விளையாட்டை ரசித்து வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.

      நீக்கு
  5. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    பேரனின் புகைப்படம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனின் பொங்கல் செட்டப்பும் சூப்பர்.

    சந்தோஷத்திலும், அரசு சார் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க் வளமுடன்

      //பேரனின் புகைப்படம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனின் பொங்கல் செட்டப்பும் சூப்பர்.//

      நன்றி.


      //சந்தோஷத்திலும், அரசு சார் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை...

      நினைவுகள் தினம், பண்டிகையில் இன்னும் அதிகமாக அவர்கள் நினைவுகள். மாவிலை கட்டுவது, சுவாமி படங்களை துடைத்து பொட்டு வைப்பது என்று எனக்கு உதவி செய்வார்கள்.
      அதுவும் பேரன், மகன் எல்லோரும் வந்து இருக்கும் போது அவர்கள் இல்லாத வெறுமை மனதை கனக்க வைக்கிறது. குழந்தைகளுக்காக மனதை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும் , கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  6. இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ என்றென்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் பொங்கல் வாழ்த்துக்களுக்கும் மனநிறைந்த வாழ்த்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  7. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அன்பு கோமதிமா.
    இனிய நினைவுகள் என்றும் நம்முடன்.

    பேரங்கள்,பேத்தி. அனைவரும் சூழ
    நன்னாளைச் சிறக்க வைப்பது இறைவனே.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      ஆமாம் அக்கா இனிய நினைவுகள் என்றும் நம்முடன் இருந்து வழி நடத்தி செல்ல வேண்டும்.

      பேரன் இப்போது, இன்னும் கொஞ்ச நாளில் பேரன், பேத்தி, மகள் வருவாள்.
      இறைவன் என்றும் வழி நடத்தி செல்ல வேண்டும் என்னை. மனபலமும், உடல் பலமும் தர வேண்டும் எனக்கு . அதுதான் என் பிரார்த்தனை.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  8. கேரன் கவினின் கைத் திறன் மேலும் மேலும் சிறப்பு அடைவதாக..

    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
      பேரனை வாழ்த்தியதற்கும் பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  9. பேரனின் படம் அழகு. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      பேரனின் படத்தை ரசித்து இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. இந்தியாவில் வந்து பொங்கல் கொண்டாட்டம்.. மகிழ்ச்சி மா.. முடிந்தபோது பதிவு பக்கம் வாருங்கள் அவசரம் இல்லை. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      ஆமாம், இந்தியா வந்து விட்டோம். முடிந்த போது வருகிறேன்.
      நிறை பதிவுகள் படிக்க வேண்டி இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    நலமா? எப்படியுள்ளீர்கள்? பதிவு அருமையாக உள்ளது. பேரனின் சிறுவயதில் எடுத்த புகைப்படம் அழகாக உள்ளது. கைகூப்பி அனைவரையும் வரவேற்கும் முறையில் எடுத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

    அவரின் விளையாட்டு சாமான்களும் அருமை. நல்ல முறைகளில் பாரம்பரியத்தை விடாது விளையாட கற்றுக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள்.

    இந்த முறை மகன். மருமகள், பேரனுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    நீங்கள் தந்த வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மகன் மருமகள் பேரனுக்கும், எங்கள் இனிய வாழ்த்துகளை தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்


      //நலமா? எப்படியுள்ளீர்கள்? //

      உடல் நிலை சரியில்லை ஊரிலிருந்து வந்தது முதல். மருந்துகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.


      //பேரனின் சிறுவயதில் எடுத்த புகைப்படம் அழகாக உள்ளது. கைகூப்பி அனைவரையும் வரவேற்கும் முறையில் எடுத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.//

      பழைய படம் தான். மகிழ்ச்சியை தருவது கேட்டு எனக்கு மகிழ்ச்சி.

      //அவரின் விளையாட்டு சாமான்களும் அருமை. நல்ல முறைகளில் பாரம்பரியத்தை விடாது விளையாட கற்றுக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள்.//
      அவன் பிறந்தது முதல் மகன் தன் நண்பர்களுடன் ஊரில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடி மகிழ்வான். அதை பார்த்து பார்த்து அவனும் செய்கிறான்.

      பாரம்பரிய முறையில் கொண்டாடிய நாங்கள் இப்போது கேஸ் ஸ்டவில் பொங்கல் பானையை வைத்து பொங்கல் செய்கிறோம்.

      //இந்த முறை மகன். மருமகள், பேரனுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

      //நீங்கள் தந்த வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மகன் மருமகள் பேரனுக்கும், எங்கள் இனிய வாழ்த்துகளை தெரிவியுங்கள்.//

      உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுகிறேன்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.








      நீக்கு
  12. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி.

      நீக்கு
  13. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். பேரனின் லெகோ பொங்கல் பிரமிக்க வைக்கிறது. இங்கே என் மகளிடமும் காண்பித்தேன். நல்ல கற்பனை வளம். சிறு வயதில் ரொம்ப க்யூட்டாக இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      லெகோ பொங்கலை மகளிடம் காட்டியது மகிழ்ச்சி.
      பேரனையும், அவன் கற்பனை வளத்தையும் பாராட்டியதற்கு நன்றி.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. நல்ல கற்பனை வளத்துடன் கூடிய லொகோ பொங்கல். பேரனுக்கு வாழ்த்துகள்/ஆசிகள். அவர்கள் இந்தச் சமயம் உங்கள் கூடவே வந்திருப்பது உங்கள் மனதுக்கும் ஆறுதலாக இருக்கும்.ரொம்ப நாட்களாக உங்களிடமிருந்து தகவல் இல்லையேனு நினைச்சேன். பின்னர் தான் தி/கீதா மூலம் தெரிய வந்தது பயணத்தில் இருந்தீர்கள் என்பது. வரும் நாட்கள் நல்ல நாட்களாகக் கழியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் , வாழ்க வளமுடன்
      பேரனுக்கு வாழ்த்துக்கள், ஆசிகள் வழங்கியதற்கு நன்றி.
      அவர்களும் என்னுடன் சேர்ந்து வந்தது மனதுக்கு மகிழ்ச்சி.

      வரும் நாட்கள் நீங்கள் சொன்னது போல நல்ல நாட்களாக இருக்கட்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பேரனின் பொங்கல் சிறப்பாக இருக்கிறது. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    பேரனின் பொங்கலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு