புதன், 10 ஜூலை, 2019

மலை அழகு

ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு  சமணச்சின்னம்
அதன் தொடர்ச்சி இந்த பதிவு.

சமணச்சின்னம் இருக்கும்  பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில்  பிள்ளையார், முருகனின் வேல் மட்டும் இருக்கும் கோயில்


அடுத்து சமணப் படுக்கை இருக்கும் பக்கத்தில் ஒரு வேல்  மட்டும் இருக்கிறது.

முருகன் வேல் இருக்கும் பக்கத்தில் உள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவே வேப்பமரம்
காலை 8 மணிக்கு சூரியன் ஒளி 
சூரியனும் வான் மேகமும் ஒரே மாதிரி இருக்கிறது
மலையடிவாரத்தில் ஆலமரம்  கிளைகளின்  ஊடே சூரிய ஓளி எட்டிப்பார்க்குது
பூவையைக் கவலைப் படாமல் இருக்கச் சொல்கிறார்

நேரே தெரியும் மலை மேல் என்ன இருக்கிறது?
பசுமை இயக்க திரு. முத்துகிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்பது அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன். மலை அழகைப் பார்த்துக் கொண்டே வாருங்கள் உங்களுக்கே தெரியும்.

பாறையில் அழகாய் சின்ன படிகளாகச் செதுக்கி இருந்தார்கள்.
ஆங்காங்கே இப்படி சுனை நீர் -அதில் வான்மேகம் (வெண்மையாக) தெரியுது
அழகான  முட்டை போன்ற பாறைகளை கடந்து செல்லவேண்டும்
முட்டை உடைந்தது போல்


முட்டை உடைய விரிசல் விட்டு இருப்பதைக் காட்டுகிறார்கள்.
எலுமிச்சைப் புற்கள் இடை இடையே அழகை மெருகூட்டுது

இன்னும் கொஞ்சம் கிட்டே போகலாம்
சின்ன முட்டை பாறை குன்று வெடித்து இருக்கிறது
மலைகள் கூடி பேசுகிறதோ நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று
இறைவன் உருட்டி விளையாடிய கல்லோ!

இப்படி பெரிய மலைத்தொடர் கீழவளவில் இருந்து இருக்கிறது

வயல் முழுவதும் வெள்ளையாக இருப்பது என்ன?

இன்னும் பக்கமாய் போய் பார்க்கலாம்
மலைகள் ரொட்டித் துண்டுகளாகத் துண்டு போடப் பட்டு வயல் முழுவதும் கிடக்கிறது.
எங்குஎங்கு நோக்கினும்

கிரானைட் வைத்து  வீடு கட்ட ஒருவர் ஆசைப் பட்டாலும்  மலைகள் சிதையும்
நீங்கள்  இந்த மலைகளைக் காப்போம் என்று உறுதி எடுத்து கொள்ளுங்கள் என்றார்.


// குன்று கிரானைட் கற்களைக் கொண்டதாக உள்ளது. இந்தக் குன்றில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதால் இங்குள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளில் சில அழிவுற்றன.[7][10]இதனால் 2008 ஆம் ஆண்டு இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்விளைவாக 2011 இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இந்த இடத்தில் 51 ஏக்கர் (21 ஹெக்டேர்), பரப்பளவில் உள்ள கிரானைட் பாறைகளை வெட்டி எடுக்க தமிழ்நாடு கனிம நிறுவனம் (Tamin) மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தடை விதித்து,[11][12] மலையைச் சுற்றியுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சைன நினைவுச்சின்னங்களைக் காப்பதற்காக தடைவிதிப்பதாகக் கூறியது.[13][14]//
நன்றி.-விக்கிப்பீடியா

இந்த இடத்தைபற்றி படித்தும் பார்த்தும் இருப்பீர்கள் இருந்தாலும் தகவலுக்கு.


சமணர்கள் இங்கு வந்து  சிலைகளைச் செதுக்கியும் கல்வெட்டுக்களைப் பொறித்து வைத்ததும் நன்மையே, மலைகள் காக்கப் படுகிறதே! என்று நினைத்துக் கொண்டே இறங்கி வந்தோம்.




பார்த்து வந்தவுடன் உணவு இட்லி, சட்னி , சாம்பார்

No photo description available.
கீழவளவு மலை பிரட் போல வெட்டப்பட்ட மலை 2015 ம் ஆண்டு முகநூலில் பகிர்ந்த படம்

 இந்த படம் 2015ல் நாங்கள் மாயவரத்தில் இருந்த போது மதுரைக்கு வரும் பாதையில் காரில் போகும்போது  பார்த்து ரொட்டியைத் துண்டு போட்டது போல் இருக்கே ! என்று வியந்து போய் எடுத்த படம்.  2018ல் அந்த இடம் போய் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. 

மலைகளைப் பற்றி படித்த போது பிடித்தது.

மலைகள் காப்போம்

மலை வாழிடத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இதனால் மண்அரிப்பு ஏற்பட்டு உயிரினங்களின் வாழிடம் கேள்விக் குறியாகி உள்ளது.
மலை வாழிடமானது சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் போது வாகனங்கள், மனிதனின் கழிவுகள் ஆகியவற்றால் மாசுபாடு உருவாகிறது. இம்மாசுபாடு மலை வாழிடத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கிறது.
மலைகளில் உள்ள கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மனிதனால் சுரண்டப்படும் போது அவை பெரும் பாதிப்பினை மலை வாழிடத்தில் ஏற்படுத்துகின்றது.
மலைச் சரிவுகளில் உள்ள மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
மலைகளில் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் அவ்விடத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளை நட்டு மரங்களை வளர்க்க வேண்டும்.
இயற்கையின் நன்கொடையான மலை வாழிடத்தைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மலை வளத்தைக் காப்போம். வருங்கால சந்ததியினருக்கு அதனைப் பரிசளிப்போம்.


கீழவளவு மலை அழகு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.


வாழ்க வளமுடன்.

50 கருத்துகள்:

  1. அருமையான கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் அழகு.

    இயற்கையை அழிப்பதை மனிதனும், அரசும் போட்டி போடுகின்றனர்.

    எல்லாம் பணத்துக்காகத்தானே.... முடிவில்தான் தெரியும் பணத்தை தின்ன முடியாது என்று.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
    நன்றாக சொன்னீர்கள்.
    வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழமுடியாது என்பதை தெரிந்து கொண்டால்
    நல்லது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு.

    'வேல்' பிற்கால இடைச்செருகலாகத் தெரிகிறது.

    இந்த மாதிரி புராதானச் சின்னங்களைக் கூறு போட யார் அனுமதித்திருப்பார்கள்? இதுல இவங்க 'தமிழன்' என்று வேற சொல்லிக்குவாங்க. ரொம்பவும் வருத்தமுறச் செய்த படங்கள்.

    ஒரு சில படங்களை இதற்கு முந்தைய இடுகைகளில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //வேல்' பிற்கால இடைச்செருகலாகத் தெரிகிறது.//

      பிற்காலத்தில் இங்கு வசிக்கும் கிராம மக்கள் வைத்து இருக்கலாம்.

      அரசாங்கமே கூறு போடும் போது மற்றவர்களை என்ன சொல்வது?

      இரண்டு படம் பழைய பதிவில் வந்தது தான் இந்த பதிவுக்கு தொடர்புடையது.
      இதை மட்டும் படிப்பவர்களுக்கு புதிதாக இருக்கும்.
      உங்கள் கவனத்திற்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. வயல்களில் கிடக்கும் மலைத்துண்டுகள் மனதைக் கனக்கச் செய்தன. நல்லவேளையாக நீதிமன்றத் தீர்ப்பு வந்ததால் தடை செய்திருக்காங்க! அதனால் பாதி மலையானும் பிழைத்தது! ஆனாலும் மனிதனுக்குப் பேராசை தான் அதிகம்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      வயல்களில் கிடக்கும் மலைத்துண்டுக்கள் மட்டும் இல்லை, போற வழி எல்லாம் நீண்ட பதை முழுவதும் பெரிதாக அடுக்கி வைத்து இருப்பதை பார்த்தால் இன்னும் மனது கஷ்டபடும்.
      அந்த படங்களாய் முன்பு எடுத்து இருக்கிறேன் அதை தேடினேன் கிடைக்கவில்லை.
      மனிதனுக்கு ஆசை அதிகம் தான். எல்லாம் தனக்கே படைக்கபட்டு இருப்பதாக நினைப்பு.

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் மிக அழகு. இத்தனை அழகான மலைத்தொடர்கள் மதுரைக்கு அருகே இருந்தும் யாரும் அதைக் குறித்த அறிவோ, ஆர்வமோ இல்லாமல் மலைகளை வெட்டித் துண்டாடுவதிலேயே குறியாய் இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையைச்சுற்றி மலைத்தொடர்கள்தான்.

      பசுமைநடை இயக்கத்தால் நிறைய இடங்கள் பிழைத்து இருக்கிறது.
      அவர்கள் நோக்கம் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.பண்டையகால தொன்னமையை, வரலாற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. மூடர்களால் இந்த மலையும் சிதைவுற்றதா!...

    இந்த ஊரில் கிராம நிர்வாக அலுவலர் இல்லையா...

    இருந்தும் கண்கள் அவிந்து போயினவா!..

    புறம்போக்கு மரத்துக்கும் அந்த கி.நி.அலுவலிடம் கணக்கு இருக்கும்...

    இவ்வளவு பெரிய மலையை உடைக்கும் போது அரசுக்கும் காதுகள் செவிடாகியதோ...


    சாதாரண மக்களாகிய நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      தமிழ்நாடு கனிமநிறுவனம் , தனியார் நிறுவனமும் சேர்ந்து செய்தது தானே!

      பணம் தரும் கிரானைட் இல்லையா?

      நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? விளை நிலங்களை வாங்க மாட்டோம், அங்கு வீடு கட்ட மாட்டோம் வீடு முழுவது கிரானைட் போட மாட்டோம் என்று தான் உறுதி மொழி எடுக்க முடியும்.

      நீக்கு
  7. இயற்கை தன்னையே காத்துக் கொண்டால் தான் உண்டு...

    மனம் நிறைந்த படங்கள்...
    ஒருமுறையாவது சென்று வரத் தூண்டுகின்றன..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை தன்னை தானே பாதுகாக்கும் அந்த நாளும் வந்தால் நல்லதுதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. கற்பாறையில் பெரிய எழுத்துகளாய் பூவையை கவலைப்படாமலிருக்கச் சொல்பவர் எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்...!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கற்பாறையில் எழுத நிறைய சிரமபட்டு இருப்பார் தான்.
      அவருக்கு அது அப்போது சிரமமாய் தெரிந்து இருக்காது.

      நீக்கு
  9. மலையிலிருக்கும் அந்தப் படிகள் வித்தியாசம் இல்லை? அவைகள்சுனை நீரா? பள்ளமாய்ப்போன பாறைகளில் தேங்கி இருக்கும் மழை நீரா? அழகான மலைகளைக் கடந்து செல்லவேண்டும் என்று சொல்வதைவிட அவற்றை பெரிய பாறைகள் என்றுதானே சொல்லவேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லுகுள் ஈரம் இருக்கும் என்பார்கள் மழை நீரை வாங்கி வைத்துக் கொண்டு வற்றாமல் குட்டை போல் தேங்கி இருக்கும் மலைத்தொடரில் வரும், பறவைகள், ஆடு, மாடுகள், விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் சுனை என்று தான் சொல்வார்கள்.
      பெரிய பாறைகளை தாண்டி செல்ல வேண்டும் என்று சொல்லலாம். அது ஒரு நீண்ட மலைத்தொடர் அதை கடந்து போனால் வயல் வருதே அதனால் அப்படி சொன்னேன்.

      நீக்கு
    2. இந்த அழகான பெரிய பாறைகளை கடந்து போனால் என்று கூட போடலாம் இல்லையா?

      நீக்கு
  10. அவை டைனோசர் முட்டைகளோ! உடைந்ததும் டைனோஸர் குட்டிகள் வெளிவருமோ!! வெடித்த பாறைகள் சொல்லிக் கொள்கின்றன... "உடைந்திருந்தாலும் இணைந்தே இருப்போம்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // டைனோஸர் முட்டைகளோ !உடைந்ததும் டைனோஸர் குட்டிகள் வெளிவருமோ!! //
      நல்ல கற்பனை ஸ்ரீராம்.


      வெடித்த பாறைகள் சொல்வதும் நன்றாக இருக்கிறது. ஒற்றுமை ஒன்றே பலமாம்.

      நீக்கு
  11. இறைவன் உருட்டி விளையாடிய கல்லோ... இல்லை எந்த இடத்திலும் விகண்டையாய்ப் பேசி தனிக்கட்சி காணும் பாறைகளோ! பிரிவினைவாதிகள் எங்கும் உண்டே!

    பதிலளிநீக்கு
  12. வியாபாரிகள் பணத்தின் மீது மட்டுமே ஆசை வைக்கிறார்கள். அதனால்தான் விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் எதையும் வெட்டி எடுத்து விற்று விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.

      பணம் ஒன்றே வாழ்க்கை என்று இருப்பவர்களுக்கு வேறு எதைபற்றியும் கவலை இல்லை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. மலைகளின் அழகையும், பசுமையின் பாதையில் செல்லும் உங்கள் குழுவும்
      ஏற்றுக் கொண்ட பிரம்மாண்ட முயற்சிகளுக்கு மிகப் பெரியவந்தனம்.
      மதுரையிலிருந்து வெளிவரும் சாலைகளில் ஆனை மலை ,நாகமலை
      என்று அடையாளம் காட்டியபடி சென்ற நாட்களும் உண்டு.
      நீங்கள் தந்திருக்கும் கீழவளவு அற்புதமாக இருக்கிறது.
      இத்தனை அழகைச் சுரண்டி இருக்கிறார்களே.
      கல்லில் கடவுள் கண்ட நாடு நம் நாடு.
      அதை உடைத்துப் பணம் செய்ததும் இல்லாமல் வயல் வெளியில் நிரப்பி இருக்கிறார்களே.
      மனம் கொதிக்கிறது.

      இறைவன் நல்ல பாடம் தந்தாலொழிய இதற்கு ஏது விடிவு.

      நீக்கு
    3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஆமாம், மதுரையின் அடையாளம் ஆனைமலை, நாகமலை , .பசுமலை, திருப்பரங்குன்ற மலை என்று மலைகள் நிறைய இருக்கே!
      கீழவளவு அழகான இடம். இப்போது கிராம மக்கள் விழித்து கொண்டார்கள்.
      இயற்கை மீது அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
      இனி மேலும் மலையை அழிக்காமல் இருந்தால் போதும்.
      மனம் கஷ்ட படுவது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  13. இந்த டிஜிடல் உலகில் இப்படிப்பட்ட இடங்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது..

    இதையெல்லாம் சம்பந்தப்பட்ட துறைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வராமலும், தகுந்த
    பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமலும் எப்படி இருஜ்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

      வெகு கால போராட்டத்திற்கு பிறகுதான் முடிவுக்கு வந்து இருக்கிறது.
      கிராம மக்கள் ஒத்துழைப்பால் மீட்டு இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. இதற்கெல்லாம் எதற்குப் போராட வேண்டும்? எனக்குப் புரியவில்லை.
      இதெல்லாம் வெளியுலகிற்குத் தெரிவதால் யாருக்கு நன்மை? யாருக்குத் தீமை?
      அப்படி நன்மை--தீமையாக பொய்மையான ஒரு தோற்றத்தை உருவாக்கி நம்மைக் குழப்புகிறார்களோ?..
      இதனால் யாருக்கு ஆதாயம்?

      நீக்கு
  14. வெட்டப்பட்ட மலைகள் வேதனையினைத் தருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கக் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. மலைகளின் அழிவால் வரலாறுகளும் அழிந்துபோக காரணமாகிறது. சமணப் படுக்கைகள் தப்பிபிழைத்திருப்பதே பெரிய விடயம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் மாதேவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    நல்ல பகிர்வு. அழகான படங்கள். அதற்கு அழகான விமர்சனங்கள். வேல் இருக்கும் படங்களும், இரு பாறைகளுக்கிடையே வேப்ப மரமும், ஆலமரத்தின் இடையே சூரியனின் ஒளிக்கதிர்கள் தெரியும்படியான படமும் மிக அழகாக இருக்கின்றன.

    பூவையைப் பற்றி நிறையவே கவலைப் பட்டுள்ளார் போலும் மதன் கார்த்திக். ஹா ஹா.

    அழகான மலை பகுதிகள். அந்த சின்ன சுனை நீர் ஊறுமா? இல்லை அப்படியே இருந்தால் வெய்யிவின் வெப்பத்தில் நீர் வற்றாமல் இருக்குமா? அதில் தெரியும் வான் மேகங்கள் அழகாக உள்ளது.

    முட்டை போன்ற பாறைகள், விரிசல் விழுந்து உடைந்தது போல் காட்சியளிக்கும் பாறைகள், கூடிப் பேசி மகிழும் பாறைகள் என எல்லாமுமே கண்ணை கவர்கிறது. அழகான விளக்கங்களுடன், அழகாக படங்கள்.

    இயற்கை நமக்கு கொடுத்த கலை பொக்கிஷமான மலைகளை மக்கள் வெட்டி சேதபடுத்தாமல் இருக்க வேண்டும். இதற்கும் நாம் இயற்கை அன்னையைதான் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த மலையின் அழகு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களால் நானும் இயற்கையை, இயற்கையன்னை நமக்கு கொடுத்த கொடையை கண்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      பதிவின் ஒவ்வொரு படத்தையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      மலை பகுதியில் இப்படி உள்ள தண்ணீர் அப்படியே இருக்கிறது. நிறைய இடங்களில் அப்படி பார்த்து இருக்கிறேன். மலைபகுதிக்கு வரும் ஜீவன்களுக்கு இறைவன் அளித்தது.
      இயற்கையின் விந்தை! இப்படி பாறைகள் வெட்டிய இடத்தில் உண்டான பள்ளத்தில் மழை நீர் தேங்கி அப்படியே வற்றாமல் இருக்கும் நீரை எடுத்து தான் (சென்னை நகருக்கு )கொடுக்கிறார்கள் இப்போது உள்ள நீர் தேவைக்கு.

      இயற்கை நமக்கு அளித்த கொடையை மதித்து நடந்தால் இயற்கை இன்னும் அள்ளி அள்ளி வழங்கும்.

      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. மலையை வெட்டிக் காசாக்கும் பேராசை. இயற்கையை நாசம் செய்தால் அழிவு நமக்குதான் என்பதை ஏனோ இந்த பேராசைக்காரர்கள் அறிவதே இல்லை. மனத்தை நோகடிக்கும் காட்சிகள். விழிப்புணர்வு இப்போதாவது உண்டானதே என்று நிம்மதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
      ஆமாம், கணிம வளத்தை விற்று காசாக்கும் பேராசை தான் இப்படி இயற்கையை நாசம் ஆக்கி விடுகிறது. மலைகள், மரங்கள் நமக்கு அளித்து வரும் நன்மைகளை அறிந்தும் அறியாது போல் இப்போது கிடைக்கும் லாபத்திற்கு அழித்து வருகிறார்கள்.

      பின்னால் அவர்கள் சந்ததிதான் கஷ்டபடும் என்பதை உணர்ந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

      நாளுக்கு நாள் தண்ணீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. குன்றுகளுக்கு பக்கம் இருக்கும் ஊறணிகள் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும். மலைகளை அழித்தால் ஊறிணிகளும் அழிந்து போகும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  18. ஒவ்வொரு படமும் தான் எத்தனை அழகு... அதனுடன் பேசுவது போல் உள்ள கருத்துக்களும் மிக அழகு... மிகவும் ரசித்தேன் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் வாழ்க வளமுடன்
      ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  19. ஒவ்வொரு படமும் கதை சொல்லுகின்றன மா...அத்தனை அழகு ..

    முட்டை உடைந்தது போல் ..ஆஹா மாமல்லபுரத்தில் நிற்கும் ஒரு கல் போல இங்கு பல கற்கள் .. பார்க்கவே அட்டகாசமாக உள்ளன...



    எத்தகைய சிறப்பு மிக்க இடங்கள் ...அதன் பராமரிப்பு காணும் போது வேதனை தான் வருகிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      ஆமாம் அனு, மாமல்லபுரத்தில் பெரிய கல் ஒன்று இருக்குமே ! அது போல் தான் பெரிய பெரிய உருண்டை கற்கள் இங்கு இருக்கிறது.

      இப்போது இந்த இடத்தை கிராம மக்கள் நங்கு பராமரிப்பு செய்கிறார்கள், தொல்லியல் துறையுடன் சேர்ந்து அனு.
      கற்கள் உடை பட்டு கிடப்பது பல ஆண்டுகளுக்கு முன்பு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. அருமையான படங்கள். பெரிய பெரிய முட்டை போன்ற பாறைகளும், சுனையும் கவர்ந்தன.
    மலையை வெட்டி, ஆற்று மண்ணை சுரண்டி, காடுகளை அழித்து மனிதன் என்னதான் சாதிக்காய் போகிறான்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //மலையை வெட்டி, ஆற்று மண்ணை சுரண்டி, காடுகளை அழித்து மனிதன் என்னதான் சாதிக்காய் போகிறான்?//
      ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் சாதனை செய்யதான்.
      பாறைகளை, சுனையை ரசித்தமைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  21. வரலாற்றறிஞர்களும், ஆர்வலர்களும் படிக்கவேண்டிய அவசியமான பதிவு. நுணுக்கமாகப் பகிர்ந்த விதம் அருமை. இதுபோன்றவற்றைப் பாதுகாக்க போதிய விழிப்புணர்வு நம்மவர்களிடையே இல்லை என்பது வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      வெளி நாடுகளில் பழமையை போற்றி பாது காக்கிறார்கள்.
      நம் நாட்டில் பழமையை போற்றவில்லை என்றாலும், பாழ் படுத்தாமல் இருக்கலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. மிக மிக அழகான படங்கள் அதுவும் வெவ்வேறு கோணங்களில் எடுத்து அசித்தீட்டீங்க கோமதிக்கா...

    முதல் மூன்று படங்கள் அதுவும் அந்தப் பாறையின் இடுக்கில் மரம் தெரிவது ஃபோட்டோ செம..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      ஊருக்கு போய் வந்து, வீட்டு வேலை, வெளி வேலை எல்லாம் பார்த்து கொண்டு பின்னூட்டமும் விரிவாக அத்தனையும் படித்து, ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      நீக்கு
  23. ஹையோ அந்தக் காலை 8 மணி சூரியன் அந்தப் பாறையில் பட்டு ஆஹா என்ன அழகு அந்த இளி படும் இடம் ரொம்ப கவித்துவமாக இருக்கிறது... ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா...

    அங்கும் நம் மக்கள் எதையோ எழுதி வைக்கிறார்கள்...எப்படித்தான் செய்கிறார்களோ?!!!!!!!

    மலை மேல் படிகள் செமையா இருக்கு அழகாக இருக்கிரது. கஷ்டப்பட்டுச் செதுக்கியிருப்பான இல்லையா..

    சுனை நீர் அதில் தெரியும் வானம் எல்லாம் சூப்பரா இருக்கிறது. ரொம்பவும் அழகாக வந்திருக்கிறது படம்.

    முட்டைப் பாறை ஆஹா! என்ன அழகு இருந்தாலும் உருண்டு உடைந்துவிடுமோ என்ற அச்சம்...

    பாறை விரிந்திருக்கிறதைக் காட்டும் படம் செம. அப்புறம் பாறை விரிந்து என்ன வரும் உடைந்து கற்கள் வரும் இல்லையா...பிளந்தால் என்ன ஆகும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு இருந்த ஒவ்வொரு கல்லும் அழகு கீதா.
      மரம் அழகு, பாறை அழகு.
      தன் பெயரை தன் அன்புக்கு உரியவர் பெயரை காலம் முழுவதும் நினைவு வைத்துக் கொள்ள எழுதி விட்டார்.
      படிகளை கஷ்டப்பட்டு தான் செதுக்கி இருப்பார்கள்.
      சுனை நீரையும் அதில் தெரியும் வானத்தை ரசித்தமைக்கு நன்றி.
      கால காலமாய் உருவாகிய பாறை . பக்கத்தில் இயந்தைரங்களை வைத்து அறுத்த அதிர்வால் இவைகளில் விரிசல்.

      நீக்கு
  24. எலுமிச்சை புற்கள் அழகு என்றால் தூரத்தில் தெரியும் பாறைக் கூட்டாம் வாவ் போட வைக்கிறது. அத்தனை அழகு...

    மலைகள் கூடிப் பேசுகின்ற படம் செம. தப்பித்தோம்? ச்சே ச்சே விட்டு வைச்சுடுவாங்களா என்ன? மக்கள். பாறைகளை வெடிக்க வைத்து ஏதேனும் கட்டிடுவாங்களா...தொல்லியல் துறையின் கீழ் என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாதுதான்...

    உருட்டி விளையாடிய கல்லும் பச்சை பசேலும் ரொம்ப அழகா இருக்கு...எங்கெங்கும் காணினும் வெள்ளையடா என்று சொல்லிய படங்கள் எல்லாமே வெகு வெகு சிறப்பு.

    நான் நினைச்சேன் பாருங்க மேலே கூடச் சொல்லியிருக்கிறேன்...அரசும் எவ்வழி அவ்வழி மக்கள்...ஹப்பா நான் அங்கு சொல்லியிருப்பது போல் சட்டம் போட்டது சூப்பர். இப்படி எல்லா இடத்துக்கும் கோர்ட் தடை போடவேண்டும் அப்பத்தான் பச்சை கொஞ்சமேனும் இருக்கும்..

    இப்படி நம் முன்னோர்கள் சமணர்கள் வாழ்க என்று கோஷம் போடுவோம். நினைவுச் சின்னம் என்று..இப்படி சமணர்கள் எல்லா இடத்திலும் ஏதேனும் உருவச் சிலை வடித்திருந்தால் பல இடங்கள் சிமென்ட் காடுகளாக ஆகாமல் இருந்திருகும்...

    அனைத்துப் படங்களும் செம. கடைசியில் வ முனீஸ்வரன் சொல்லியிருப்பது அருமை. காப்போம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. இங்குள்ள பாறை கூட்டங்கள் எலுமிச்சை புற்களுடன் காண்ப்படுவது அழகு.
    தொல்லியல் துறை, பசுமைநடை இயக்கம், இந்த ஊர் பொது மக்கள் இணைந்து காக்க முயற் சி செய்கிறார்கள். காப்பார்கள்.

    மலைகளில் இது போல் முன்னோர்கள், சமணர்கள் வாழ்ந்து இருந்தால், அவர்கள் சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து இருந்தால் தப்பித்து இருக்கும் தான்.
    முனீஸ்வரன் சொன்னது அருமை இல்லையா? அது தான் பகிர்ந்தேன்.


    உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு