வெள்ளி, 8 மார்ச், 2019

புத்தக வெளியீடு


கீழக்குயில்குடியில் "செட்டிப்புடவு" என்னூம் குகை வாசலில் ஆரம்பமானது 100வது  பசுமைநடை விழா. முதலில் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு உரை  ஆற்றினார்கள். அப்புறம் தொல்லியல்  பேராசிரியர் சொ. சாந்தலிங்கம் உரையாற்றினார்.   அவர் சொன்ன செய்திகள் அடுத்த பதிவில். என்று குறிப்பிட்டு இருந்தேன், அவைகளைத் தொடர்ந்து பார்க்கலாம் இந்த பதிவில்.

முத்துக்கிருஷ்ணன் அவர்களின் 9 ஆண்டு பசுமை நடைக்கு. 100 வது வகுப்பறை இது.  100 நடைகளின் தொடர்ச்சி பெருமிதம், இளைஞர்கள் குழுவின் சாதனை  என்றார்.

                                                    பேசுவது முத்துக்கிருஷ்ணன்
திரு. சொ. சாந்தலிங்கம் தொல்லியல் அறிஞர்

முதலில் தொல்லியல்  பேராசிரியர் சாந்தலிங்கம் ஐயா பேசினார்.
பசுமை கூட்டம் முதன் முதலில் இங்கு துவங்கிய போது பேரா.சுந்தர்காளி  தமிழறிஞர் ஆரம்பித்து  வைத்து இருக்கிறார். 

அவரே இந்த 100வது பசுமைநடை விழாவின் இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகுப்பறையை தொடங்கி வைக்க  முத்துக்கிருஷ்ணன்  ஆவலாக இருந்தார், ஆனால் காலையில் வர இயலவில்லை. மாலை விழாவிற்கு வந்து சிறப்புரை ஆற்றினார்.

பேரா .சொ.சாந்தலிங்கம்  அவர்கள் பேசும் போது பண்பாட்டு வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது  பசுமை நடை என்றார். 5, 6 தடவை வந்து இருக்கிறோம் இந்த சமண மலைக்கு அலுக்கவே அலுக்காது  என்றார், இதை மட்டும் தான் சமணமலை என்று சொல்கிறோம் என்றார்.

 திறந்த வெளிப் பல்கலைக்கழகம் என்று  மதுரைகாமராஜர் பல்கலைக்கழகத்தைச் சொல்வோம். பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள்  'இங்கு வந்தால் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கிடைப்பது போல ஞானம் கிடைக்கும், உத்வேகம் கிடைக்கும்,  ஒரு அதிர்வு கிடைக்கும்' என்று சொன்னதாக சொன்னார்.

  'நான் கல்லூரியில்  பாடம் நடத்தும்  போது  மாணவர்களுக்கு மட்டும் தெரியும் என்று இருந்த என்னை, உலகம் முழுவதும் தெரியவைத்தது      இந்த பசுமைநடை. அதற்கு நன்றிகள். முதலில் எனக்கும் மலைகள் ஏற முடியவில்லை ,  மூச்சு வாங்கியது அப்போது உதவிகள் செய்தார்கள். இப்போது எத்தனையோ மலைகள் ஏறி விட்டேன். இளைஞரை போல்  உணர்கிறேன்' என்றார். 

'இந்த இடத்தில்  ஒரு அதிர்வை உணர்ந்தேன்  உங்களுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டு இருக்கும். வகுப்பறையில் பாடம் நடத்தியதை விட இங்கு  வரலாற்றை நடத்தியது பெருமை கொள்ளச் சொல்கிறது' என்றார்.

'தொல்லியல் வகுப்புகள் நடத்தினால் 10 பேர் வந்தாலே பெரிய விஷயம். ஆனால் பசுமை நடை வகுப்பறைக்கு எல்லாத் தரப்பு மக்களும் பாடம் கேட்கிறார்கள் அது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

'உங்களோடு நானும் வளர்ந்தேன், படித்தேன், புதிய புதிய புத்தகங்களைப் படைத்தேன் ' என்று மிகவும் அருமையாகப் பேசினார்.


வகுப்பறையில் பாடம் கேட்ட அன்பர்கள்.
முகநூலில்  "திருவிழாக்களின் தலைநகரம்" என்ற  புத்தகத்தை எழுதிய சித்திரவீதிக்காரன் அவர்கள் தனது பக்கத்தில் போட்டு இருந்த படம். நாங்கள் இருக்கிறோம் கடைசியில்,  வகுப்பறையில் பாடம்  கேட்டுக் கொண்டு. சித்திரவீதிக்காரன் அவர்களுக்கு நன்றி.
அப்புறம் புத்தகங்கள் வெளியீடு நடந்தது ".மதுர வரலாறு அறியப்படாத வெளிகளின் ஊடே" என்ற புத்தகம்  ஆறாம் பதிப்பாக வெளியிடப்பட்டது,  அகழாய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார். பெற்றுக் கொண்டவர், பசுமைநடை துவங்கிய பொழுதில் உறுதுணையாக இருந்த ஒரு  வழக்கறிஞர்; அவர் பெயரை நான் எழுத மறந்து விட்டேன் மன்னிக்கவும்.

இந்தப் புத்தகத்தைப் பசுமை நடை வெளியீடு செய்து இருக்கிறது. 

 மதுரை தாயகமாக கொண்டாலும் வரலாற்று காரணங்களால் இப்பொழுது வந்தவாசி பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் சமணர்களுக்கும் இந்த  நடையை பத்து ஆண்டுகளாக தங்களின் தொடர்ந்த ஈடுபாட்டால் சாத்தியப்படுத்திய தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் , சுந்தர்காளி மற்றும் கண்ணன் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புத்தகத்திலிருந்து  சிறு துளி:- 
  கோவலன் பொட்டல் என்ற கட்டுரையிலிருந்து:-
//வரலாறு என்பது ஆங்காங்கே நாம் புழங்குகிற இடங்களில் எல்லாம் புதைந்து கிடக்கிறது, அதுவும் மதுரை போன்ற மிக பழைய நகரங்களில் எங்குநோக்கினும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விசயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. //

கீழடி அகழாய்வு  இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகாலத் தொன்மையும் , தொடர்ச்சியும் கொண்ட மதுரை என்ற சொல்லிற்குச் சான்றாக  அமைந்துள்ளது.

கீழடிக்கு அருகிலுள்ள கொந்தகை, 'குந்திதேவி சதுர்வேதிமங்கலம்' என்று முன்னர் அழைக்கப்பட்டுள்ளது. என்று அகழாய்வாளர், அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்கிறார்.

அமர்நாத் ராமகிருஷ்ணன்  மற்றும் அவரது குழுவினரான வீரராகவன், ராஜேஷ் ஆகியோருடைய பங்கு அளப்பரியது. ஒராண்டு காலக் களப்பணியில் இந்த அகழாய்விடத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்த கீழடி பற்றிப் படிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது, இந்த நூலில்.

கீழடி பற்றி நான்' பசுமை நடை'யுடன் போய் வந்ததையும், படங்களையும் பதிவு போடுகிறேன்.
  


 'சித்திரைவீதிக்காரன்' என்ற புனைபெயர் வைத்துக் கொண்ட சுந்தர் அவர்கள் எழுதிய  ' திருவிழாக்களின் தலை நகரம்' என்ற நூலை  திரு. ட்ராஸ்கி மருது அவர்கள் (ஓவியர்)  வெளியிட,  அதனைப்பெற்றுக் கொண்டவர்,  திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள். அவர் சூழலியல் அறிஞர். நூல் ஆசிரியர் தன் மனைவி ,குழந்தையுடன் அருகில் இருக்கிறார்.


//மதுரை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடக்கும் அத்தனை திருவிழாக்களிலும் ஈடுபாட்டுடன் பங்கேற்பவராக சித்திரைவீதிக்காரன் திகழ்கிறார். ஜாதி, மதங்களைக் கடந்து மதுரையில் நடக்கும் எல்லாத் திருவிழாக்களிலும் பங்கேற்பதன் மூலம் தனக்கு வாய்த்த ஒரு அற்புதமான மனநிலையைத் தன் சொற்களின் வழியே நமக்கு கடத்துகிறார்.// என்று நூலைப்பற்றிச்  சொல்கிறார்-- அ. முத்து கிருஷ்ணன்.

நானும் புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொண்டு இருக்கிறேன். 130 ரூபாய் விலையுள்ள புத்தகம் அன்று சலுகை விலையில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஓவியர் மருது அவர்கள் , பாஸ்கரன் எல்லாம் மாலை விழாவில் பேசினார்கள்.

'புத்தக வெளியீடு முடிந்தபின் கீழே உணவு உண்டு எல்லோரும் உலகத் தமிழ்ச் சங்க கலை அரங்கத்தில்  மாலை 3.30க்கு  நடக்கப் போகும் விழாவிற்கு வந்து விடுங்கள்' என்று அன்புடன் அழைப்பு விடுத்தார்,
 திரு. முத்துக் கிருஷ்ணன் அவர்கள்.

கீழே இறங்கத் துவங்கினோம்

வரும் வழியில் மலை அழகு




பூத்து குலுங்கும் மா பூக்கள்.


இந்த ஆலமரத்தின் கிளைகள் அமைத்த கூடாரம்

இமயமலையில் கொடி பறக்க விட்டது போல் ஒரு செடி மலையில் இருந்தது.
பார்த்தால் ஆலமரம் போல்தான் இருக்கிறது.

படம் எடுத்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு கருங்குருவி வந்து அமர்ந்தது

விழுதுகள் தாங்கும் ஆலமரம் 
விழுதுகள் போல் குழந்தைகள் தாங்க வேண்டிய ஆலமரம்:-  நாங்கள்
விழா அழைப்பிதழில் கேட்கப்பட்ட கேள்விகள்
  சமண மலை அடிவாரத்தில் வைத்து  இருந்த அதற்கான பதில்கள்.


அடுத்த பதிவில்  இந்த சமணர் மலை என்று அழைக்கப்படும்  கீழ் குயில்குடியில்  உள்ள அய்யனார் கோவில் .

இன்று உலக மகளிர் தினம். அனைத்து மகளிர்களுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்.

========================================================================

75 கருத்துகள்:

  1. எங்கெங்கும் நலம் பெருகட்டும்...
    அன்பின் மகளிர் தின நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
      போன பதிவுக்கு நீங்கள் வரவில்லையே வேலை அதிகமோ?

      நீக்கு
  2. பாறையின் உச்சியில் வேர் விட்டிருக்கும் செடியை நீங்கள் படம் எடுக்கின்றீர்கள் என்றதும் கருங்குருவி பறந்து வந்து அமர்ந்து கொண்டது...

    அழகு.. அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு தூரம் அந்த பாறை ஜூம் செய்து எடுத்தேன், அவ்வளவுதான் எடுக்க முடிகிறது.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. அக்கா ஜூம் செய்து எடுத்தது நன்றாகவே வந்திருக்கிறதே....என் கேமராவில் இந்த அளவு கூட வராது அக்கா...

      சூப்பரா இருக்கு

      கீதா

      நீக்கு
    3. கீதா, படத்தை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
    4. படங்கள், நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அருமை.

      பல படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
    5. மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
    6. வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அழகு... நடை பெற்ற நிகழ்வு சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. கோமதிக்கா வணக்கம். பெண்கள் தின வாழ்த்துகள்!

    அவர் சொன்ன செய்திகள் அடுத்த பதிவில். என்று குறிப்பிட்டு இருந்தேன், அவைகளைத் தொடர்ந்து பார்க்கலாம் இந்த பதிவில்.//

    ஆமாம் கோமதிக்கா சொல்லியிருந்த நினைவு…அப்புறம் புத்தகம் வெளியீடு பற்றியும் சொல்லியிருந்தீங்க இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      மகளிர்தின வாழ்த்துக்களுக்கு நன்றி.
      தொடர் பதுவு தொடர்ந்து எழுத வேண்டும் விட்டு விட்டு எழுதினால் நினைவு வைத்துக் கொள்வது சிரமம். ஆனால் உங்கள் நினைவாற்றல் அற்புதம் அல்லவா!

      நீக்கு
  5. // முதலில் எனக்கும் மலைகள் ஏற முடியவில்லை , மூச்சு வாங்கியது அப்போது உதவிகள் செய்தார்கள். இப்போது எத்தனையோ மலைகள் ஏறி விட்டேன். இளைஞரை போல் உணர்கிறேன்' என்றார். //

    சூப்பர். ஏற ஏற த்தான் பழகும் என்று சொல்வதற்கு ஏற்ப. நடைப் பயிற்சியும் கூட அப்படித்தான். பழக பழகத்தான்…எல்லாமே ..

    அவர் பேச்சு அருமை கோமதிக்கா…
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னை உலகம் முழுவதும் தெரிய வைத்தது பசுமை நடை என்பதில் ஒரு பெருமிதம்.
      நல்ல படிப்பாளி, நினைவாற்றல் இந்த வயதிலும் அருமையாக இருக்கிறது. குறிப்புகள் வைத்துக் கொள்ளாமல் தங்கு தடையின்றி பேசுகிறார்.

      நான் சுருக்கெழுந்து நம் கீதாசாம்பசிவம் போல் கற்றுக் கொண்டு இருந்தால் விரைந்து குறிப்புகள் எழுதி இருப்பேன்.

      ஓரளவு குறிப்பு எடுத்தேன், அந்த பகிர்வுதான் இது.
      நடக்காமல் இருந்து விட்டு நடந்தால் , மாடி ஏறி இறங்கி பழகி விட்டு இப்போது லிபட் உபயோகித்தால் படிகள் ஏறி இறங்குவது சிரமமாய் உள்ளது.எல்லாம் பழக்கம் விட்டு போனால் கஷ்டம் தான்.

      நீக்கு
    2. நான் கற்றது ஆங்கிலச் சுருக்கெழுத்து. தமிழ்ச் சுருக்கெழுத்து கற்கவில்லை! :)))))

      நீக்கு
    3. ஆங்கிலச் சுருக்கெழுந்து என்றாலும் நல்லது தானே! வீட்டுக்கு வந்து தமிழில் தட்ச்சு செய்து கொள்ளலாம் அல்லவா?
      எனக்கும் அதுவும் தெரியாதே கீதா.

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா வந்திருக்கு…
    அந்தப் படத்தில் நீங்களும் மாமாவும், அந்தப் பாறையின் கீழ் அப்பாறை வளைந்து அழகான இருக்கை போல இருக்கு போல அதில் உட்கார்ந்திருக்கீங்களே!! பார்த்துட்டனே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, கீழே உட்கார முடியாத வயதானவர்களுக்கு அந்த இடம் கொடுக்கபட்டது.சின்னவயது காரர்களும் கீழே உடகார முடியாமல் சிரமபடுவது மனது கஷ்டமாய் இருந்தது.

      நீக்கு
  7. //வரலாறு என்பது ஆங்காங்கே நாம் புழங்குகிற இடங்களில் எல்லாம் புதைந்து கிடக்கிறது, அதுவும் மதுரை போன்ற மிக பழைய நகரங்களில் எங்குநோக்கினும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விசயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. //

    இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமோ கோமதிக்கா. இருப்பது மட்டுமல்ல இடைச் செருகல்களும் இருக்கும் இல்லையா…
    // ழடிக்கு அருகிலுள்ள கொந்தகை, 'குந்திதேவி சதுர்வேதிமங்கலம்' என்று முன்னர் அழைக்கப்பட்டுள்ளது. என்று அகழாய்வாளர், அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்கிறார்.//
    தகவல் இது. ஆம் இவர்களின் பங்கும் உழைப்பும் அளப்பரியதுதான்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமோ கோமதிக்கா. இருப்பது மட்டுமல்ல இடைச் செருகல்களும் இருக்கும் இல்லையா//

      நீங்கள் சொல்வது உண்மைதான், இடைசெருகல்களும் உண்டுதான்.
      ஆதாரத்துடன் சொல்லும் போது அவை சரித்திர சான்றுகள்.
      சில வரலாற்று தன்மையை அறிய கல்வெட்டுக்கள் இருக்கிறது.
      அந்த கால பாண்டியர்கால காசுகள், நாயக்கர் கால காசுகள் எல்லாம் கீழடியில் கிடைத்து இருக்கிறது.

      நீக்கு
  8. அட டாஸ்கி மருது – ஓவியரும் அவரை ஏதோ ஒரு இதழில் பார்த்திருக்கிறேன் புகைப்படத்தில்…இங்கும் பார்க்க முடிந்தது.. தியோடர் தான் வித்தியாசமாக இருப்பது போல இருக்கு நான் வேறு இடங்களில் புகைப்படத்தில் பார்த்ததற்கும் இதற்கும். ஒரு வேளை அதெல்லாம் பழைய புகைப்படமாக இருக்கலாம்.. நூல் ஆசிரியரையும் பார்க்க முடிந்தது. இதுதான் முதல் முறை உங்கள் மூலம் அறிகிறேன். புத்தகத்தில் தலைப்பே பொருத்தம்தான் மதுரைக்கு… அவரது புனைபெயரும் வித்தியாசமாக சித்திரைவீதிக்காரன்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருது மதுரைக்காரார், இப்போது வசிப்பது சென்னை என்று நினைக்கிறேன். கணவரின் சித்தப்பா மகனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் . சித்தப்பா பேத்தி திருமணத்திற்கு வந்து இருக்கிறார்.

      தியோடர் பாஸ்கரன் உங்கள் ஊரில்தான் இருக்கிறார், இப்போது கொஞ்ச்சம் கொஞ்சம் வயதான தோற்றம் வந்து விட்டது.
      சித்திரைவீதிக்காரனை எல்லோரும் திருவிழாவில் காணமல் போன குழந்தை என்பார் களாம் அந்த அளவு திருவிழா கூட்டத்தில் காணமல் போய் விடுவாராம் குடும்பத்தை விட்டு விட்டு ஒவ்வொன்றையும் ரசித்து படங்கள் எடுக்க செய்திகள் சேகரிக்க என்று.
      நிறைய திருவிழா ஓவியங்கள் அவர் வரைந்தது இடம் பெற்று இருக்கிறது இந்த புத்தகத்தில்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. மலையின் படங்கள் செமையா இருக்கிறது கோமதிக்கா…ஹையோ அழகு!! அந்த நீளமன பூங்கொத்து பொக்கே போல என்ன அழகு!! ஆலமரத்தின் கிளைகள் படமும் செம…அழகான நிழல் தரும் இடம்…நல்ல களிக்க ஏற்ற இடம்…

    அந்த ஆலமரக் கொடியின் நுனியில் கருங்குருவி செம க்யூட்!! அழகா இருக்கு அக்கா அந்தப் படம்…

    மீண்டும் ஆலமரங்கள் படம் ஹையோ… என்ன அழகா இருக்கு…அடையார் ஆலமரம் போல ….குவிந்து இருக்கே…..எனக்கு இதைப் பார்த்ததும் பாட்டு நினைவுக்கு வந்தது……இளங்காற்று வீசுதே பாடல் அருமையான பாடல் அதில் நீங்கள் சொல்லியிருப்பது போல விழுதுகளில் தொங்கி ஆடுவார்கள்…சூப்பரா இருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையின் படங்கள், குளங்கள் படங்கள், ஆலமரங்கள் படம் எல்லாம் நிறைய இருக்கிறது கொஞ்சம் தான் பகிர்ந்து இருக்கிறேன்.
      குடும்பத்துடன், குழந்தைகளுடன் பார்க்க களிக்க ஏற்ற இடம். தனிமையில் இனிமை காணமுடியாது. கூட்டமாய் கலகலப்பாய் அந்த இடங்களுக்கு போனால் பயமும் இல்லை, மகிழ்ச்சியாகவும் இருக்கும். கல்மூட்டி, சுள்ளிகளை வைத்து கூட்டாம்சோறு சமைத்து சாப்பிடலாம், அல்லது கட்டிக் கொண்டு போய் பகிர்ந்து உண்ணலாம்.

      குழந்தைகள் விழுதுகளில் ஆடலாம், பெரியவர்கள் ரசிக்கலாம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  10. இனிய மகளிர் தின வாழ்த்துகள் சகோ.
    அழகிய படங்களும், விபரங்களும் நன்று நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. பதிவின் படங்களும், நிகழ்வும் அதைச் சொன்ன விதமும் அருமை கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா , அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

      நீக்கு
  12. உடன் வந்த உணர்வு ஏற்பட்டது. அருமையான புகைப்படங்கள், செய்திகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. மிக பரவசமான நிகழ்வு அல்லவா ...

    படிக்கும் போதே மனதில் மகிழ்ச்சி வருகிறது ..இப்படி பட்ட நிகழ்வுகளை நேரில் காணும் ஆவலும் ஏற்படுகிறது

    படங்கள் எல்லாம் வெகு அழகு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான். அவர்கள் வரலாறு சொல்லும் போது மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது. நாம் இது போன்ற இடங்களுக்கு சுற்றுலா போவது குறைவு .
      பாதுகாப்பு, அது இது என்று போக மாட்டோம், இப்படி குழுவோடு போவது மகிழ்ச்சி, பாதுகாப்பு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் அக்கா.
    சமணர் சிலை மலை அழகு. மாமரபூக்கள் உள்ள படம்,கருங்குருவி படம் மிக அழகு. ஆலமரம் படம் பார்க்க விழுதில் ஊஞ்சல் ஆடிய நினைவு வருது. படங்கள்தான் ஹைலைட்டே. மிக அழகாக இருக்கு. புத்தகவெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. படங்கள் மூலம் அறிந்துகொண்டேன். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்.
    உங்களுக்கும் இனிய மகளிர்தின நல் வாழ்த்துக்கள்.
    நல்வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மு.
    சிறு வயதில் ஆலம்விழுதில் ஆடிய நினைவு வந்தது மகிழ்ச்சி.

    உங்கள் வரவும் கருத்தும் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.அம்முவின்வரவு தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
  16. சித்திரவீதிக்காரன் மூலம் புத்தகவெளியீடு குறித்த தகவல் எனக்கும் வந்திருந்தது. இம்மாதிரியான சுற்றுலாக்களில் கலந்து கொள்ளும் ஆவல் எனக்குள்ளும் உண்டு. ஆனால் இயலாது என்பதே யதார்த்தம்! :) மலையும், சுற்றுவட்டாரங்களும் அழகு. நீங்கள் இருவரும் உட்கார்ந்திருக்கும் படத்தில் பார்த்ததுமே கண்டு கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      நாங்களும் மதுரை என்பதால் கலந்து கொண்டோம், வேறு ஊராக இருந்தால் கலந்து கொள்வது இயலாது.
      மலையும் சுற்றுவட்டாரங்களும் அழகாய் இருந்தது. எங்களை கண்டு கொண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  17. சோர்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் வார்த்தைகள் இல்லை. அந்த ஆலமர நிழலில் அமர்ந்து கொண்டு சாப்பிடணும் போல் இருக்கிறது. அவ்வளவு அடர்த்தியான விழுதுகளுடன் கூடிய மரமாக இருக்கிறது. கருங்குருவி மதுரையிலிருந்து உங்களைத் தொடர்ந்து வந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோர்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் தான்.

      அந்த ஆலமர நிழலில் குளத்திலிருந்து சில் என்று காற்று வர (சின்ன அழகான குளம் எதிரில் அதை போட மறந்து விட்டேன்) அமர்ந்து இயற்கையை ரசித்து கொண்டு சாப்பிடும் அனுபவம் அருமையாகதான் இருக்கும்.

      கருங்குருவி மதுரையிலிருந்து என்னை தொடர்ந்தா? கேட்க நன்றாக இருக்கிறது.

      நீக்கு
  18. கேள்விகளும்,பதில்களும் அருமை! கலந்து கொள்ள முடியவில்லையே என்னும் ஏக்கமும் இருக்கிறது. நல்லதொரு ஆக்கபூர்வமான பணியைத் தொடர்ந்து செய்து நம் வரலாற்றையும் தொன்மையையும் பாதுகாத்து அவற்றை இளைஞர்களுக்குத் தெரியப்படுத்தும் இந்தக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். தொடர்ந்து ஆயிரமாவது விழாக் காணவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, கேள்விகளையும் பதில்களையும் நீங்கள் படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
      இளைஞர்களுக்கு மட்டும் அல்ல என் போன்ற வயதானவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு நிறைய புது விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது, அதற்கு பசுமை நடை குழுவினருக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.

      உங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அவர்களை உற்சாகமாய் மீண்டும் தொடர வைக்கும்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. மகளிர் தின வாழ்த்துகள். பசுமைநடையில் கலந்துகொள்ளும் ஸார் மற்றும் உங்கள் உற்சாகம் போற்றத்தக்கது.வகுப்பில் படிக்க முடியாததை அல்லது கவனத்தில் வாங்க முடியாததை இது மாதிரி இடங்களில் கவனம் செய்ய முடிவது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.
      எனக்கு பிடித்த பாடம் வரலாறு. சிறப்பு பாடமாய் வரலாறு எடுத்து படித்தேன் பள்ளியில்.
      கணக்கு, ஆங்கிலம் இரண்டிலும் கவனம் சிதறும். கவனம் செய்ய முடியாது.
      வரலாறு கவனம் செய்து படித்து அதிகமதிப்பெண் வாங்குவேன்.

      நீக்கு
  20. டிராட்ஸ்கி மருது ஸார் வந்தார்களா? சிறப்பு. சித்திரவீதிக்காரன் என்கிற பெயர் கேள்விப்பட்டது போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருது சார் மாலை பேசினார்கள் அது தனி பதிவாக வரும்.

      சித்திரவீதிக்காரன் மதுரைக்காரர் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.
      முகநூல் நண்பரா? அவர் புத்தகத்தை படித்து மதுரையை முடிந்தவரை வலம் வர வேண்டும், உடலும ஒத்துழைக்க வேன்டும், இறைவனும் அருள்புரியவேண்டும்.

      நீக்கு
  21. படங்கள் யாவும் சிறப்பு. பாறைமேல் கொடி... இமயத்தின் மேல் கொடி! அருமை.

    அந்த ஆலமரம்... எவ்வளவு பழமையான மரம்! அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலமரங்கள் நிறைய காணப்படுகிறது சமணமலையை சுற்றி . கவர்ந்த மரங்கள் மட்டும் படமாக.

      நீக்கு
  22. நேரத்தை உபயோகமாகவும், உற்சாகமாகவும் செலவழிக்கும் உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றி மகிழ்ச்சி. நல்ல பொழுதாக போவதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் அதற்கு உங்கள் உற்சாகமான பின்னூட்டங்களும் தான் இயங்க வைக்கிறது.
      உங்களின் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  23. ம்லைப்பாறைக்கடியில் நல்ல அழகிய இடத்தில் வைத்தே பேசுகிறார்கள், பார்க்க ஆசையாக இருக்கு. வெயில் குறைவாக இருக்கு.. ஓ இது சமண மலையோ.. பார்க்கவே சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      இது தொடர் பதிவு. பசுமை நடை 100வது தொல்லியல் திருவிழா தொடர்ச்சி. சமணமலை மகாவீரர் படம் பார்த்தீர்கள் தானே? நினைவிருக்கா?
      மலையும் கோவிலும், தாமரை தாடகமும் பார்த்தீர்கள் அல்லவா?
      அதேதான்.

      நீக்கு
  24. //'நான் கல்லூரியில் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு மட்டும் தெரியும் என்று இருந்த என்னை, உலகம் முழுவதும் தெரியவைத்தது இந்த பசுமைநடை. அதற்கு நன்றிகள். முதலில் எனக்கும் மலைகள் ஏற முடியவில்லை , மூச்சு வாங்கியது அப்போது உதவிகள் செய்தார்கள். இப்போது எத்தனையோ மலைகள் ஏறி விட்டேன். இளைஞரை போல் உணர்கிறேன்' என்றார். //

    உண்மைதான், நாமாக ஏதும் செய்ய நினைத்தால் கொஞ்ச நாளில் அலுத்துப் போய் விட்டுவிடுவோம், இப்படி ஒன்றிருப்பதால், சேர்ந்து நடக்கும் போது, உடம்பு பழகி, உள்ளிருக்கும் பல வருத்தங்கள் ஓடி ஒளிந்துவிடும்தானே.. நீங்களும் விடாமல் தொடருங்கோ கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நீங்கள் சொல்வது உண்மை.
      நாமாக செய்ய நினைத்தால் அலுத்துவிடும்தான்.
      இப்படி சேர்ந்து நடக்கும் போது உள்ளிருக்கும் பல வருத்தங்கள் ஓடி ஒளிந்து கொள்வது 100க்கு 100 உண்மை.
      அவர்கள் தொடர்ந்தால் தொடர காத்து இருக்கிறோம்.

      நீக்கு
  25. ஹா ஹா ஹா பாறையில் ஏறியிருந்தும் கேட்கிறார்கள், பார்க்க எனக்கு அப்படி ஏறி இருக்கோணும் போல வருது:)..

    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேச்சு துவங்கும் முன் சொல்லி விட்டார்கள், பாறையில் அமர முடிந்தவர்கள் அமர்ந்து விடுங்கள் , கீழே கொஞ்ச இடம்தான் இருக்கிறது என்று.
      பார்த்தால் உங்களுக்கும் ஆசை வருது இல்லே!

      நீக்கு
  26. //நானும் புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொண்டு இருக்கிறேன். //

    ஆவ்வ்வ் இப்போ நாம் எல்லோருமே புத்தகம் படிக்கிறோம் போல இருக்கே.. நான் இப்போ
    “முப்பது நாளும் பெளர்ணமி”யின் முடிவில் நிற்கிறேன் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, புத்தகம் படிக்கிறோம் எல்லோரும்.
      கோமதி அக்கா கோவிலாக போவதால் புத்தகம் படிக்கவில்லை என்றீர்கள்தானே ? அதுதான் நானும் படிக்கிறேன்.
      கதை புத்தகம் படிப்பது முன்பு போல் இல்லை. சிறு வயதில் நிறைய கதைகள் படிப்பேன். இப்போது வலைத்தள அன்பர்கள் எழுதும் கதைகள் படிக்கிறேன்.
      நீங்கள் படிக்கும் கதையின் தலைப்பு படித்தது போல் இருக்கிறது யார் எழுதியது?
      தெய்வீக சிரிப்பு அதிரவின் சிரிப்பு.

      நீக்கு
  27. //'புத்தக வெளியீடு முடிந்தபின் கீழே உணவு உண்டு//

    ஹா ஹா ஹா இதுக்காகத்தானே அதிராவும் வெயிட்டிங்:)).

    ஆவ்வ்வ்வ் மாம் பூக்கள் அழகு.. இப்போ பூக்கும் பருவமோ?

    பழமையான ஆலமரம் மிக அழகு..


    பாறையில் முளைச்ச மரம்:)) சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இதுக்காகத்தானே அதிராவும் வெயிட்டிங்:)).//

      போன பதிவில் அவசரமாய் உங்களுக்காக போட்டு விட்டேன்.
      பாக்கு தட்டில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், சாம்பார், சட்னியுடன்.

      இப்போது மாவடு பருவம் அல்லவா? கடைகளில் மாவடு, மாங்காய் வந்து விட்டது சித்திரை தமிழ் புத்தாண்டுக்கு மாம்பழம் வந்து விடும்.

      பாறையில் முளைச்ச மரம், ஆலமரம் எல்லாம் ரசிப்பீர்கள் என்று நினைத்து போட்டேன் அது போலவே கவர்ந்து விட்டது அனைவரையும்.

      நீக்கு
  28. அந்தப் பாறையில் முளைச்ச மரத்தில் இருக்கும் குருவிப் பிள்ளை ஹா ஹா ஹா சூப்பர்ர்..

    ஆஅவ்வ்வ்வ்வ் ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன.. வேரென நீயிருக்கிறாய்.. அதில் வீழ்ந்துவிடாமல் நான் எனக் கோமதி அக்கா ஜோடியாக இன்றுதான் படமெடுத்திருக்கிறீங்க... வாழ்க வளமுடன்.. ஆல மரமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவி பிள்ளையை ரசித்தமைக்கு நன்றி.
      பாட்டாக பாடி விட்டாச்சா? சூப்பர், நன்றி. பொருத்தமான பாட்டுதான்.
      நான் என் கணவரை மட்டும் ஆலமரத்து பக்கம் வைத்து எடுத்தேன், ஒரு பையன் அம்மா நீங்களும் நில்லுங்கள் நான் எடுக்கிறேன் என்று எடுத்து தந்தார், அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
      வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  29. //விழா அழைப்பிதழில் கேட்கப்பட்ட கேள்விகள்
    சமண மலை அடிவாரத்தில் வைத்து இருந்த அதற்கான பதில்கள்.//

    ஓ அதில் பொது அறிவும் சொல்கிறார்களோ.. படிக்க படிக்க ஆசையாக இருக்கு, நமகுத்தெரியாத எவ்ளோ விசயங்கள்.. தொடருங்கோ..

    பதிலளிநீக்கு
  30. குழந்தைகள் திருவிழா, பறை இசை, சிலம்பாட்டம் எல்லாம் நடந்து இருக்கிறது. நடந்து இருக்கிறது மதியம் 3.30 மணியிலிருந்து. மாலை உரைகள் கேட்க மட்டும் போனோம் தமிழ்ச் சங்கத்தில்.

    குழந்தைகள் சரிபார்த்து கொண்டு இருந்தார்கள் கேள்வி, பதில்களை.
    அன்றைய பொழுது நல்ல பொழுதாக போனது.

    உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  31. நிகழ்வைப் பற்றிய சிறப்பான தொகுப்பு. படங்கள் அருமை. கீழடி பற்றியப் பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  32. படங்கள் அழகு
    போற்றதலுக்கு உரிய நிகழ்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  33. வணக்கம் சகோதரி

    நல்லதோர் பதிவு. தங்கள் பதிவு நல்ல தெளிவான கற்று கொடுத்தலின் மூலம் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

    தொல்லியல் பேராசிரியர் திரு. சாந்தலிங்கம் அவர்களின் பேச்சுக்கள் சுவையானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. புத்தக வெளியீடு நிறைவாக உள்ளது. அந்த புத்தகத்தின் சில பகுதிகளை தங்கள் விளக்கியதையும் படித்து ரசித்தேன்.
    மலைகளின் படங்களும், இயற்கை வனப்பு நிறைந்த படங்களும் மிக அழகு.
    ஆலமர வேர்களின் அந்தப்படம் மிகவும் அழகாக இருக்கிறது. தங்களின் தமிழார்வ பசுமைநடை பதிவுகளும் ஆலமர வேராக எங்கள் மனதில் ஆழ ஊன்றியுள்ளது. தங்களது இந்த ஆர்வத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். விழா அழைப்பிதழில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு சமண மலையடிவாரத்தில் உள்ள பதில்களும் படித்தேன். அருமை. நல்ல பொது அறிவை உண்டாக்கும் தூண்டுதல் நிகழ்ச்சி. அடுத்த பகுதியையும் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      பதிவில் எழுதிய ஒவ்வொன்றையும் ஆழ்ந்து வாசித்து அனைத்துக்கும் அழகான கருத்துரை அளித்த உங்களுக்கு என் நன்றிகள்.
      உங்கள் உற்சாகமான பின்னூட்டத்தால் விரைவில் அடுத்த பதிவை வெளியிட மனது விரும்புகிறது. எதிர்ப்பார்ப்புக்கு நன்றி கமலா.

      நீக்கு
  34. சிறப்பான நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

    தமிழகத்தில் இல்லாமல் இங்கே இருப்பதில் இப்படி சில இழப்புகள்! நம் ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொள்ள முடிவதில்லை!

    பசுமை நடை - அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    தமிழகத்தில் என்றாலும் இருக்கும் இடத்தில் ஒரு விழா நடநதால் கலந்து கொள்ள வசதியாக இருக்கும், இதுவே வேறு ஊரில் என்றால் கலந்து கொள்வது சிரமம் தான் வெங்கட்.
    சாரை மாயவரத்தில் அவர்கள் பணி ஓய்வுக்கு பின் வேலை பார்த்த கல்லூரியில் பேச கூப்பிடுகிறார்கள், மலைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
    உங்கள் வாழ்த்துக்கள் பசுமை நடை இயக்கத்தை மீண்டும் இயங்க வைக்கும் என்று நினைக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அன்பு கோமதி உங்கள் கண் வழியே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரசித்தேன். மதுரை என்றும்
    பசுமை தான். இந்தப் பயணங்களை விடாமல் தொடரும் உங்கள் இருவருக்கும் இறைவன் நல்ல் தேக சௌக்கியத்தை க்கொடுக்க வேண்டும். தியோடர் பாஸ்கர் தொடர்களி ஹிண்டுவில் பதித்திருக்கிறேன்,.ஓவியர் மருது எவ்வளவு எளிமையாக இருக்கிறார்.
    மேலே இருந்த கேள்விகளுக்குக் கீழே பதில் கொடுத்திருப்பது அற்புதம். கட்டுப்பாட்டோடு செயல் படும் இந்தக் குழு இன்னும் நிறைய சாதிக்கும்.
    அந்த ஆலமரமும், அந்த மலைக் குருவியும் மனதை விட்டு அகலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      பிப்ரவரி 10 தேதி போய் வந்த பழைய பதிவு தான் அக்கா , அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு இனி வரும் பதிவுகளும் அதன் தொடர்ச்சிதான்.

      புகழ பெற்றவர்கள் எல்லாம் மிக எளிமையாக இந்த பசுமை நடைக்கு வந்து போகிறார்கள், அதுதான் பசுமைநடை இயக்கத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.
      நாங்கள் மாயவரத்தில் இருந்த போது பெரிய பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்கள். 10 வருட பயணம் அல்லவா?

      நாங்களும் ஒரு சில பயணங்களில் கலந்து கொண்டதும், 100வது விழாவில் கலந்து கொண்டதும் மகிழ்ச்சி தருகிறது.

      மீண்டும் அவர்கள் தொடர வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்பதுதான் எல்லோர் விருப்பமும்.

      பதிவை ரசித்து கருத்துக்களும், வாழ்த்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  37. இப்ப தான் முதல் முறையா பார்க்கிறேன் பாறை அடியில் புத்தகவெளீயீடு, நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜலீலா, வாழ்க வளமுடன்.
      பல காலம் ஆச்சு உங்களை என் வலத்தளத்தில் பார்த்து.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு