புதன், 25 ஏப்ரல், 2018

மதுரை விளக்குத்தூண், பத்துத்தூண்

பசுமை நடை இயக்கத்துடன் இந்த மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை  அன்று (8/4/2018) மதுரையில் உள்ள விளக்குத்தூண், பத்துத்தூண், திருமலைநாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களுக்குப்போய் இருந்தோம்.

திருமலைநாயக்கர் அரண்மனைக்குப் போய் வந்ததைப் பற்றி இரண்டு பதிவு முன்பு எழுதி இருக்கிறேன். அதனால் இந்த முறை பசுமை நடை இயக்கத்தின் கைஏட்டில் உள்ளதைப் படித்து பாருங்கள்

காலை 6மணிக்கு விளக்குத்தூண் அருகில் காத்து இருக்கச் சொன்னார்கள்.  200 பேர்  வந்து இருப்பார்கள் நல்ல கூட்டம்.

தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் சென்னையிலிருந்து வர காலதாமதம் ஆனதால் 
விளக்குத்தூண் வரலாற்றை விளக்குத்தூண் அருகிலிருந்து பசுமைநடை இயக்கத்தின்   ஒரு அன்பர் சொன்னார்.


காலையில் என்ன கூட்டம் இங்கு என்று பார்த்த காகம்

விளக்குத்தூண் அருகே நம் கர்மவீரர்  காமராஜ் அவர்களுக்குச் சிலை

விளக்குத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து  பத்துத்தூண் நோக்கி எங்கள் நடை  ஆரம்பம் ஆனது.
பத்துத்தூண் பற்றிய விவரங்கள் அடங்கிய கல்வெட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் . பாதுகாப்புக்குக் கம்பித் தடுப்பு வேலி போட்டுக் காணப்படுகிறது.

தூண்களுக்கு இடையே வீடுகள், கடைகள்.
பத்தாவது தூண்

ஒரு தூணில் மணி கட்டி இருந்தது

பத்துத்தூண் பற்றி   தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள்  பேசுகிறார்
ஞாயிறு என்பதால் கடைகள் அடைத்து இருந்தது,

ஒரு தூணில் விளக்குமாடம் . பத்துத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து  எங்கள் நடைப் பயணம் தொடர்ந்தது.

குதிரைலாயத் தெருவழியாக எங்கள் நடைப் பயணம் போகும் வழியில் பழைய சத்திரம் ஒன்று இருந்தது. இப்போது வாசல்படி கூட இல்லை மூடப்பட்டு இருக்கிறது.


கடைத்தெருவிலிருந்து அரண்மணை மேல் மாடக் காட்சி
காலை 8மணிக்கு இடியாப்பம், புட்டு விற்றுச் செல்கிறார்.
அடுத்த பதிவில்  திருமலை நாயக்கர் அரண்மனை .
                                                                 வாழ்க வளமுடன்.

23 கருத்துகள்:

  1. படங்கள் அருமை சகோ நானும் திருமலை நாயக்கர் மஹால் படங்களுடன் பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    மதுரை வந்தீர்களா? எப்போது?

    //நானும் திருமலை நாயக்கர் மஹால் படங்களுடன் பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறேன்.//

    அடுத்த பதிவா? மகிழ்ச்சி.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய படங்களோடு அந்நாளைய வரலாற்றைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றியும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ , வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. கர்ம வீரர் பக்கத்தில் சிவாஜி முகம் தெரிகிறதே...! இந்த விளக்குத்தூண் பக்கத்தில்தான் ஒரு கடையில் சிறந்த ஜிகர்தண்டா கிடைக்கும் (என்று என் மதுரை நண்பர் வாங்கி கொடுத்தார்!)

    பதிலளிநீக்கு
  6. அரண்மனையின் மற்ற பகுதிகள் அழிந்து, தூண்கள் மட்டும் இன்னும் நிற்பது வேதனையா? ஆச்சர்யமா? இரண்டுமா?!

    பதிலளிநீக்கு
  7. திருமலை நாயக்கர் மஹால் பார்த்திருக்கிறேன். அதில் காணொளிக் காட்சியும் பல வருடங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    கர்ம வீரர் பக்கத்தில் சிவாஜி முகம் தெரிகிறதே...!//
    படியில் சிவாஜி படம் ஒட்டி இருக்கிறார்கள்.
    எம்,ஜி.ஆர் அவர்களும், சிவாஜி அவர்களும் தான் கர்மவீரர் சிலையை திறந்து வைத்து இருக்கிறார்கள்.

    விளக்குத்தூண் பக்கம் பெரிய காப்பி ஓட்டல் இருந்தது எல்லோரும் காத்து இருக்கும் நேரம் காப்பி குடித்தார்கள் , அங்கு ஜிகர்தண்டவும் கிடைக்குமோ என்னவோ!


    திருமலை நாயக்கர் மஹால் பார்த்திருக்கிறேன். அதில் காணொளிக் காட்சியும் பல வருடங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.


    //அரண்மனையின் மற்ற பகுதிகள் அழிந்து, தூண்கள் மட்டும் இன்னும் நிற்பது வேதனையா? ஆச்சர்யமா? இரண்டுமா?!//

    அரண்மனை அழிந்தது வேதனை, தூண்கள் காலத்தை கடந்து நிற்பது ஆச்சரியம்.


    //திருமலை நாயக்கர் மஹால் பார்த்திருக்கிறேன். அதில் காணொளிக் காட்சியும் பல வருடங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.//

    நானும் நிறைய தடவை மஹால் பார்த்து இருக்கிறேன், ஒலியும், ஓளியும் காட்சிப் பார்த்து இருக்கிறேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.




    பதிலளிநீக்கு
  9. இந்த மாதிரி நிகழ்வுகள் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவும். உங்கள் மூலமாக நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. படங்களுடன் வரலாற்றுப் பதிவு அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

    //இந்த மாதிரி நிகழ்வுகள் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவும். //

    நீங்கள் சொல்வது சரிதான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam , வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரி

    அருமையான மிகவும் அழகான படங்களுடன் நல்ல பகிர்வு.
    மதுரையை தாண்டி எத்தனையோ தடவைகள் பயணப்பட்டிருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் காணும் பேறு இன்னமும் வரவில்லை. தங்கள் பதிவின் வழியாக பார்த்து படிப்பது நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் ரசித்தேன். பசுமை நடை இயக்கத்திற்கும், அவர்களுடன் சென்று பார்த்து தங்கள் அனுபவங்களை விளக்கமாக கூறி எங்களையும் தங்களுடன் அழைத்துச் சென்ற பாங்கினிற்கும், எனது மனம் நிறைந்த நன்றிகள் சகோ. தொடரட்டும் தங்களது பயணங்கள். அடுத்த பதிவையும் காண ஆவலாயிருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

    நாங்களே இப்போதுதான் பார்த்தோம்.
    அம்மாவீட்டுக்கு விடுமுறைக்கு வரும் போது உறவினர் வீடு கோவில் என்று போய் விடும்.
    இப்போதுதான் கொஞ்சம் மதுரை ஊரை தெரிந்து கொள்கிறேன்.
    எல்லா இடங்களையும் பார்ப்பது என்பது முடியாத காரியம் முடிந்தவரை பார்ப்போம்.
    பசுமைநடை இயக்கத்துடன் செல்வதால் கூடுதல் தகவல்கள் கிடைக்கிறது. பகிர்ந்து கொள்கிறேன்.

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  15. மூன்று நான்கு முறை மதுரைக்குச் சென்றிருந்தாலும் இந்த தூண்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வில்லை திருமலை நாயக்கர் மஹால் பறிப் புகைப் படங்களுடன் பதிவு எழுதி இருந்தேன் மதுரையைப் பற்றி இன்னுமோர் விவரம் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. வனக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    திருமணத்திற்கு முன் இரண்டு வருடம் இருந்து இருக்கிறேன் இந்த தூண்கள்பற்றி தெரியாது, அதன் பின் எத்தனை வருடங்கள் ஆச்சு! விடுமுறைக்கு வந்து வந்து திருவிழாக்காளைப் பார்த்து சென்று இருக்கிறேன் பார்த்தது இல்லை இந்த தூண்களை இப்போது பசுமைநடையால் சாத்தியமாச்சு.

    நானும் இரண்டு மூன்று பதிவு திருமலை நாயக்கர் மஹால் பற்றி எழுதி இருக்கிறேன்.
    அடுத்து எழுத போவது மாறுபட்டது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மதுரையில் வாழ்ந்த பழைய நினைவுகளை தங்கள் பதிவு மீட்டெடுத்தது.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    முன்பு திருமலை நாயக்கர் மஹால் பதிவில் உங்கள் மதுரை நினைவுகளை பகிர்ந்துகொண்டீர்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அன்பு கோமதி மதுரைத் தூண்கள் பார்த்த நினைவே இல்லை.
    விளக்குத் தூண் வைத்தவர் , கோட்டை சுவரை இடித்தாரா. என்ன வேதனை. இந்தத்
    தூண்களுக்கும் இடையில் போட்டி போட்டு கடைகள்.

    உலகத்தில் மற்ற இடங்களில் ஒரு கல்லை அப்புறப் படுத்த முடியாது.
    பசுமை நடை வளம் பெறட்டும்.
    இன்னும் தகவல்கள் பெறக் காத்திருக்கிறேன்.

    மிக நன்றி கோமதி. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    அந்நியர் படையெடுப்பு முதலில் நம், கோட்டை கொத்தளங்களை அழிப்பது தானே முதல் வேலை.

    இந்த தூண்கள் உள் பகுதியில் இருக்கிறது, அதனால் அதை பார்க்க வேண்டும் என்று தேடி போய் பார்த்தால் தான். ஆனால் இங்கு உள்ள கடைகளுக்கு போகும் ஆட்கள் பார்ப்பார்கள் அடிக்கடி.

    உங்கள் அன்பான் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. துளசி: இந்த இடங்கள் எல்லாம் நான் மதுரையில் படித்த காலத்தில் சுற்றியிருக்கிறேன். நன்ன நினைவுகள். ஆனால் அப்போது இருந்ததற்கும் இப்போதைக்கும் வித்தியாசங்கள் பல உள்ளது போல் தெரிகிறது.

    கீதா: இணையம் இத்தனை நாள் பிரச்சனையில் இருந்ததால் எங்கள் கருத்துகளைப் பதிய முடியவில்லை. வாசித்துவிட்டோம் அன்றே மொபைலில். கருத்துகளை துளசி அனுப்பிட நான் என் கருத்துகளையும் சேர்த்து வேர்ட் டாக்குமென்டில் போட்டு வைத்துக் கொண்டேன்…இப்போது எல்லாம் வெளியிடல்…
    அக்கா படங்கள் அனைத்தும் அத்தனை அழகு. விளக்குத் தூண் ரொம்ப அழகாக இருக்கிறது
    காகமும் அதன் கமென்டும் அருமை ஹா ஹா ஹா ஹா ஹா
    பத்துத்தூண்கள் ரொம்பவே அழகாக இருக்கிறது. அப்போதெல்லாம் இந்த வீடுகள் இருந்திருக்காது இல்லையா….அந்த விளக்கு மாடம் உட்பட அழகு….அத்தனையும் அழகு தகவல்களும் அறிந்து கொண்டோம் அக்கா..
    அந்தக் காலத்தில் சுற்றி இத்தனைக் கட்டடங்கள் இருந்திருக்காது இல்லையா..ஆஹா இடியாப்பம் புட்டு….இங்கும் கூட இப்போதெல்லாம் வாசலில் விற்றுக் கொண்டு வருகிறார்கள் அதுவும் கோடம்பாக்கத்தில் ரெகுலராக வருகிறார்கள்.


    பதிலளிநீக்கு
  22. வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.

    மதுரை மாறி கொண்டே இருக்கிறது.
    பழைய கட்டிடங்கள் இப்போது இல்லை.
    நாளுக்கு நாள் மாறுதலை காண்கிறது மதுரை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    உங்கள் புதிய பணிக்கு வாழ்த்துக்கள்.

    வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.



    //இணையம் இத்தனை நாள் பிரச்சனையில் இருந்ததால் எங்கள் கருத்துகளைப் பதிய முடியவில்லை. வாசித்துவிட்டோம் அன்றே மொபைலில். கருத்துகளை துளசி அனுப்பிட நான் என் கருத்துகளையும் சேர்த்து வேர்ட் டாக்குமென்டில் போட்டு வைத்துக் கொண்டேன்…இப்போது எல்லாம் வெளியிடல்//

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    //பத்துத்தூண்கள் ரொம்பவே அழகாக இருக்கிறது. அப்போதெல்லாம் இந்த வீடுகள் இருந்திருக்காது இல்லையா….அந்த விளக்கு மாடம் உட்பட அழகு….அத்தனையும் அழகு தகவல்களும் அறிந்து கொண்டோம் அக்கா.//

    அப்போது அரண்மனையாக இருந்ததில் தூண்கள் மட்டும் மிச்சம்.
    அப்போது வீடுகள் இல்லை.


    //ஆஹா இடியாப்பம் புட்டு….இங்கும் கூட இப்போதெல்லாம் வாசலில் விற்றுக் கொண்டு வருகிறார்கள் அதுவும் கோடம்பாக்கத்தில் ரெகுலராக வருகிறார்கள்.//

    மருத்துவர்களும் உணவில் இடியாப்பம் சாப்பிட சொல்கிறார்கள், அவசர உலகம் இடியாப்பம் செய்ய நேரம் இல்லை அவர்களுக்கு ரெடிமேட் இடியாப்பத்தை விட இது மிகவும் நல்லது.
    அதனால் எங்கும் இந்த வியாபாரம் நன்கு நடக்கிறது.

    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  23. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil Us

    பதிலளிநீக்கு