பசுமை நடை இயக்கத்துடன் இந்த மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று (8/4/2018) மதுரையில் உள்ள விளக்குத்தூண், பத்துத்தூண், திருமலைநாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களுக்குப்போய் இருந்தோம்.
திருமலைநாயக்கர் அரண்மனைக்குப் போய் வந்ததைப் பற்றி இரண்டு பதிவு முன்பு எழுதி இருக்கிறேன். அதனால் இந்த முறை பசுமை நடை இயக்கத்தின் கைஏட்டில் உள்ளதைப் படித்து பாருங்கள்
காலை 6மணிக்கு விளக்குத்தூண் அருகில் காத்து இருக்கச் சொன்னார்கள். 200 பேர் வந்து இருப்பார்கள் நல்ல கூட்டம்.
தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் சென்னையிலிருந்து வர காலதாமதம் ஆனதால்
விளக்குத்தூண் வரலாற்றை விளக்குத்தூண் அருகிலிருந்து பசுமைநடை இயக்கத்தின் ஒரு அன்பர் சொன்னார்.
காலையில் என்ன கூட்டம் இங்கு என்று பார்த்த காகம்
விளக்குத்தூண் அருகே நம் கர்மவீரர் காமராஜ் அவர்களுக்குச் சிலை
விளக்குத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து பத்துத்தூண் நோக்கி எங்கள் நடை ஆரம்பம் ஆனது.
பத்துத்தூண் பற்றிய விவரங்கள் அடங்கிய கல்வெட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் . பாதுகாப்புக்குக் கம்பித் தடுப்பு வேலி போட்டுக் காணப்படுகிறது.
தூண்களுக்கு இடையே வீடுகள், கடைகள்.
பத்தாவது தூண்
ஒரு தூணில் மணி கட்டி இருந்தது
பத்துத்தூண் பற்றி தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் பேசுகிறார்
ஞாயிறு என்பதால் கடைகள் அடைத்து இருந்தது,
ஒரு தூணில் விளக்குமாடம் . பத்துத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து எங்கள் நடைப் பயணம் தொடர்ந்தது.
குதிரைலாயத் தெருவழியாக எங்கள் நடைப் பயணம் போகும் வழியில் பழைய சத்திரம் ஒன்று இருந்தது. இப்போது வாசல்படி கூட இல்லை மூடப்பட்டு இருக்கிறது.
கடைத்தெருவிலிருந்து அரண்மணை மேல் மாடக் காட்சி
காலை 8மணிக்கு இடியாப்பம், புட்டு விற்றுச் செல்கிறார்.அடுத்த பதிவில் திருமலை நாயக்கர் அரண்மனை .
வாழ்க வளமுடன்.