செவ்வாய், 3 ஏப்ரல், 2018

புத்தக வாசிப்பு - 2

No automatic alt text available.

No automatic alt text available.

புத்தக வாசிப்பு -ஒரு வாரத் தொடரில் இன்று வாசிப்புப் புத்தகமாய்
எஸ். ரா அவகள் தொகுத்த பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள்.

ஒரு தொகுப்பில் 100 கதைகள் உள்ளது இப்படி  இரண்டு பாகம் உள்ள தொகுப்பு .

மகனுடைய ஊருக்குப் போய் இருந்த போது  மகனின் நண்பர் வீட்டுக்கு அழைத்துப் போனான். நண்பருக்கு பிறந்த நாள் விழா. எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தபோது நானும், என் கணவரும் வரவேற்பு அறையில் இருந்த சிறு அலமாரியில் இருந்த புத்தகங்களைப்  பார்வையிட்டோம்.  அதில் இந்த சிறுகதைத் தொகுப்புகள் இருந்தன. நண்பரிடம் கேட்டு எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம், நண்பர் எடுத்து சென்று படித்து விட்டுத் தாருங்கள் என்றார்.  மகிழ்ச்சியுடன் வாங்கி வந்து   படித்துக்கொண்டு இருந்தோம்.

முழுவதும் படிக்கவில்லை அது மனக்குறைதான் . திடீர் என்று நாங்கள் ஊர் திரும்ப நேர்ந்து விட்டதால் (அத்தை அவர்களுக்கு உடல் நலமின்மையால் அவர்களைப் பார்க்க ஊர் திரும்பி விட்டோம்) கதை வாசிப்புக்குத் தடங்கல் ஏற்பட்டு விட்டது. மருமகள் தான் படித்து விட்டு திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்.

பழைய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அதில் இடம் பெற்று இருக்கிறது. வார இதழ்களில் வந்த கதைகள். முத்திரைக் கதைகள் என்று விகடன் வெளியிட்ட கதைகளும் இடம் பெற்று இருக்கிறது.




"ராஜா வந்திருக்கிறார்" என்ற சிறுகதை என் மனதை மிகவும் தொட்டது.

இந்த கதையை எழுதியவர் கு.அழகிரிசாமி அவர்கள்.

இந்த கதை "அழியாச்சுடரில்" இடம் பெற்று இருக்கிறது படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

//தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. "எதை மூடிக்கிறது? ஊம்? என்று ஒரு கணம் யோசித்தால். அப்புறம், "என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு?" என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய், மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த - உண்மையில் 'பீத்தல்' இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வந்து ராஜா உட்பட உல்லோருக்கும் சேர்த்துப் போர்த்தினாள்.//

தன் இரண்டு குழந்தைகளுக்கும், வீட்டுக்கு வந்த பையனுக்கும் சேர்த்து போர்த்தும் அன்பு.

'//யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்."//

தன் கணவருக்கு வாங்கிய துண்டை தீபாவளி புதுத்துணியாகக் கொடுக்கும் பண்பு எல்லாம் வியக்க வைக்கும்.

வறுமையிலும் பிறருக்கு உதவும் தாய் உள்ளம், குழந்தையின் அன்பு உணர்ச்சி, குழந்தைகளிடத்தில் படிக்கும் காலத்தில் உள்ள போட்டா போட்டி எல்லாம் இருக்கும் .

"காலத்தை வென்ற கதைகள்" என்று குங்குமம் சிநேகிதியில்  வந்து கொண்டு இருந்தது பெண் எழுத்தாளர்களின் கதைகள். இப்போது உள்ள இளம் தலைமுறையினருக்குப் படிக்க நல்ல வாய்ப்பு.

அரிசோனாவில் பேரன் படிக்கும்  பள்ளியில்  வாசிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு ஒரு ஆப் (app)டவுண்லோட் செய்து கொள்ள சொல்கிறார்கள் அதில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள வேண்டும் தினம் மாணவன் 20 நிமிடம் வாசிப்பது ஆசிரியருக்கு தெரியும் ஆசிரியர்  500 நிமிடம் படித்தவுடன் ஓட்டலில் சாப்பிட கூப்பன், (பீட்ஸா கூப்பன்)தருகிறார்.

நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகம் வாசித்தால் 1000 நிமிடம் வாசித்தால் புத்தகம் அன்பளிப்பு உண்டு. புத்தகம் படிக்க பாயிண்ட் தருகிறார்கள்,  நூலகபேட்ஜ் குத்தி  போட்டோ எடுத்துக் கொண்டால் அதற்கு புத்தகம் எடுப்பதில் சலுகை தருகிறார்கள் குழந்தைகளுக்கு.
இப்படி குழந்தைகளின் வாசிப்பு அனுபவத்தை வளர்க்கிறார்கள்.

வாசிப்பு தொடரும்.

                                                         வாழ்க வளமுடன். 

39 கருத்துகள்:

  1. உங்கள் மகனின் நண்பருக்கு வாழ்த்துக்கள். அயல்நாட்டில் தன் வீட்டில் தமிழ்ப் புத்தகங்கள் கொண்ட நூலகத்தைக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.
    இவர்களால் தான் தமிழ் வாழ்கிறது என்று தீர்மானமாகச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  2. //புத்தக வாசிப்பு -ஒரு வாரத் தொடரில் இன்று வாசிப்புப் புத்தகமாய் எஸ்.ரா அவர்களின் சிறுகதைகள் தொகுப்பு.//

    எஸ்.ரா. அவர்களின் சிறுக்தைத் தொகுப்பு மாதிரி இந்த வரி அர்த்தப்படுகிறது.

    ஒரூ சின்ன திருத்தம். 'எஸ்.ரா. அவர்கள் தொகுத்த 100 சிறுகதைகள்' என்று மாற்றி விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. 'ராஜா வந்திருக்கிறார்' கதையின் ஆசிரியர் கு. அழகிரிசாமி இல்லையா?

    நீங்கள் இவ்வளவு ரசித்த சிறுகதையின் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு விடுங்கள்.

    100 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு எஸ்.ரா.வின் வேலை முடிந்தது.
    ஆனால் அவர் பெயர் தான் அட்டையில்.

    நூறு கதாசிரியர்களின் பெயர்களையும் அட்டையில் எழுத முடியாது தான். இருந்தாலும் முன்னட்டை, பின்னட்டையில் அவர் தொகுப்பில் உள்ள சில பிரபல சிறுகதை ஆசிரியர்களின் புகைப்படங்களையாவது பிரசுரித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    திருத்தம் செய்து விட்டேன்.
    நன்றி சார்.

    அவர்கள் தமிழ் பள்ளியில் சர்வீஸ் செய்கிறார்கள்.
    என் மருமகளும் தமிழ் பள்ளியில் தமிழ் கற்று தருகிறாள்.
    சனிக்கிழமை மதிய வேளையை அதற்கு என்று ஒதுக்கி சேவை
    செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. எஸ் ரா என் கதைத் தொகுப்பை படிக்க வில்லை என்று தெரிகிறதுஅமேசான் கிண்ட்லியில் மின்னூல்களைப் படிக்க முடியுமாமே என்னுடையதும் பிறருடையதுமான மின்னூல்கள் புஸ்தகா வெளியிட்டிருக்கிறது படித்து ஊக்குவிக்கலாமே

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    ராஜா வந்திருக்கிறார்' கதையின் ஆசிரியர் கு. அழகிரிசாமி இல்லையா?//
    அவரின் பெயரை கீழே (கடைசியில்)
    குறிப்பிட்டு இருந்தேன்.

    "ராஜா வந்திருக்கிறார்" என்ற இடத்திற்கு பக்கத்திலேயே குறிப்பிட்டு விட்டேன் சார்.
    திருத்தங்கள் சொன்னதற்கு நன்றி. மாலை கோவிலுக்கு போவதால் காலையில் அவரமாய்
    பதிவு போட்ட விளைவு, சில தவறுகள்.

    //முன்னட்டை, பின்னட்டையில் அவர் தொகுப்பில் உள்ள சில பிரபல சிறுகதை ஆசிரியர்களின் புகைப்படங்களையாவது பிரசுரித்திருக்கலாம்.//

    எழுத்தாளர்களின் படங்கள் அழியசுடர்கள் பதிவிலிருந்து எடுத்துப் போட்டு விட்டேன்.

    உங்கள் கருத்துக்கு மிக நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் ஆலோசனைக்கும்
    கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  8. //எழுத்தாளர்களின் படங்கள் அழியசுடர்கள் பதிவிலிருந்து எடுத்துப் போட்டு விட்டேன்.//

    உங்கள் செயல் போற்றுதற்குரியது.

    அப்படிச் செய்திருக்கலாம் என்று நான் பதிப்பகத்தாரைச் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    பதிப்பத்தார் செய்து இருக்கலாம் தான்.
    மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  10. பதிப்பகத்தார் செய்து இருக்கலாம் தான்.

    பதிலளிநீக்கு
  11. துளசி: நல்லதொரு புத்தக அறிமுகம். அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கதை மிக நன்றாய் இருக்கும் போலத் தெரிகிறது. அந்த வரிகளே அதைச் சொல்லிவிடுகிறது. மிக்க நன்றி சகோதரி..

    கீதா: இப்புத்தகம் பற்றி நீங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். அங்கு இருந்த போது வாசிப்பதாக...

    நண்பருக்கு வாழ்த்துகள்! புத்தக கலெக்ஷன் மட்டுமல்ல அதைக் கொடுத்ததற்கும்....

    அப்போதே இப்புத்தகம் கிடைத்தால் வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் கு அழகிரிசாமியின் கதை பற்றி சொன்னது அருமை. அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள்...அருமை..அத்தாய் என்ன ஒரு அன்பு வறுமையிலும் அன்பு...

    அரிஜோனா பள்ளி நூலகம் வியப்பு. பொதுவாக அங்கு பள்ளியில் நூலகம் வாசிப்பு மிக மிக ஊக்கப்படுத்தப்படுகிறது.

    எழுத்தாளர்களின் படங்கள் தந்ததும் அருமை ஆம் இப்படித்தான் அறியாதோரும் அறிய முடியும்..

    அருமையான பதிவு அக்கா...

    பதிலளிநீக்கு
  12. இந்தப் புத்தகம் வெளியாகும் முன்பே இதன் பி டி எஃப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நானும் தரவிறக்கிக் கொண்டேன். அதற்கு திட்டும் வாங்கி கொண்டேன்!!

    பதிலளிநீக்கு
  13. நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகம் வாசித்தால் 1000 நிமிடம் வாசித்தால் புத்தகம் அன்பளிப்பு உண்டு. புத்தகம் படிக்க பாயிண்ட் தருகிறார்கள், நூலகபேட்ஜ் குத்தி போட்டோ எடுத்துக் கொண்டால் அதற்கு புத்தகம் எடுப்பதில் சலுகை தருகிறார்கள் குழந்தைகளுக்கு.
    இப்படி குழந்தைகளின் வாசிப்பு அனுபவத்தை வளர்க்கிறார்கள்.

    நம் நாட்டில் நடக்குமா
    ஏக்கம்தான் வருகிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோ துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

    //நல்லதொரு புத்தக அறிமுகம். அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கதை மிக நன்றாய் இருக்கும் போலத் தெரிகிறது. அந்த வரிகளே அதைச் சொல்லிவிடுகிறது.//

    நன்றாக இருக்கும் குழந்தைகளின் பேச்சு , தாயின் பேச்சு எல்லாம் நேரில் கேட்பது பார்ப்பது போல் நம் மனக் கண்ணில் விரியும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    அன்பு கீதா புட்டுத்தோப்புக்கு சென்ற போது எஸ்.ரா வந்த போது இந்த தொகுப்பை படித்தாக அவரிடம் சொன்னேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
    அதை நினைவாக சொன்னீர்கள்.

    கதையின் சுட்டி கொடுத்து இருக்கிறேன் பாருங்கள் கீதா படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்.

    இதில் உள்ள கதைகள் பல முன்பே படித்தது தான். மீண்டும் படிப்பதில் ஆனந்தம்
    அரிசோனா நூல் நிலையம் நன்றாக இருக்கிறது. தமிழ்புத்தகம் இல்லை அதுதான் வருத்தம்.

    இன்னொரு நூலகம் இருக்கிறது அதில் பார்ப்போம் என்றான் மகன் போக மூடியவில்லை
    இந்தியா வந்து விட்டதால்.

    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //இந்தப் புத்தகம் வெளியாகும் முன்பே இதன் பி டி எஃப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நானும் தரவிறக்கிக் கொண்டேன். அதற்கு திட்டும் வாங்கி கொண்டேன்!!//

    திட்டு வாங்கினீர்களா? யார் திட்டியது.
    நிறைய கதைகள் இருப்பதால் அத்தனையும் தரவிறக்கியதால் நெட் காலியாகி வீட்டில் உள்ளோரிடம் திட்டு வாங்கினீர்களா?
    அப்போது அத்தனை கதையும் படித்து இருப்பீர்கள்.
    எல்லாம் படித்த கதை தான். இருந்தாலும் சேர்த்து படிக்க ஆசை பட்டேன்.
    நன்றி கருத்துக்கு.





    பதிலளிநீக்கு
  16. //திட்டு வாங்கினீர்களா? யார் திட்டியது //

    வீட்டில் இருப்பவர்கள் இல்லை. எஸ்ரா, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், சுப்ரஜா ஸ்ரீதரன் இன்னும் சிலர்!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    //நம் நாட்டில் நடக்குமா
    ஏக்கம்தான் வருகிறது சகோதரியாரே//

    நடந்தால் மகிழ்ச்சிதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஸ்ரீராம்

    //வீட்டில் இருப்பவர்கள் இல்லை. எஸ்ரா, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், சுப்ரஜா ஸ்ரீதரன் இன்னும் சிலர்!//

    இப்படி வேறு திட்டுவார்களா?

    ஓ தரவிறக்க கூடாதா?

    பதிலளிநீக்கு
  19. அயல் தேசத்தில் அலமாரியில் புத்தகம் வைக்கும் நிலையில் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்தான்.

    பதிலளிநீக்கு
  20. ஓ அடுத்த பகுதியும் வந்து விட்டதோ.. என் கண்ணில இப்போதானே பட்டது.. 100 சிறுகதைகள்.. அட்டைப் படத்தில் இருக்கும் பெண்களை மிக அழகாக வரைஞ்சிருக்கினம்..

    //"ராஜா வந்திருக்கிறார்" என்ற சிறுகதை என் மனதை மிகவும் தொட்டது.//

    ஓ லிங் தந்திருக்கிறீங்க.. இப்போ நேரம் போதாது, கிடைக்கும்போது போய்ப் படிச்சுப் பார்க்கிறேன்.. நீங்க சொல்லியிருக்கும் விதம் பார்க்க.. நிட்சயம் மனதைக் கவரும் கதையாகவே இருக்கும் எனும் நம்பிக்கை வந்திருக்கு.

    தொடருங்கோ வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    ஆமாம், பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //ஓ அடுத்த பகுதியும் வந்து விட்டதோ.. என் கண்ணில இப்போதானே பட்டது.. 100 சிறுகதைகள்.. அட்டைப் படத்தில் இருக்கும் பெண்களை மிக அழகாக வரைஞ்சிருக்கினம்.//

    நானும் ரசித்தேன் அதிரா, மரக்கிளை ஊஞ்சலில் அமர்ந்து படிப்பது அழகுதான்.

    நேரம் கிடைக்கும் போது கதையை படிங்க.
    உங்கள் கருத்துக்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  23. அப்போது வந்த போது சுட்டி ஹைலைட் ஆகவில்லை என் கணினியில். இப்போது ஹைலைட் ஆகிறது கோமதிக்கா...வாசித்துவிடுகிறேன்...மிக்க நன்றி அக்கா..ஆமாம் அக்காங்கள் எஸ் ரா அவர்களிடம் சொன்னதோடு அமெரிக்காவில் இருந்து எழுதும் போதும் பதிவில் சொன்னதாக நினைவு.எனக்கு...புத்தகம் பற்றி..விரிவாக அல்ல..
    கீதா

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரி

    அருமையான புத்தகம். ஒரு கதை நாம் படித்ததாக இருந்தாலும் பிடித்துப் போயிருந்தால், மீண்டும் படிக்கும் போது புதிதாகவே தோன்றும். நீங்கள் குறிப்பிட்ட 'ராஜா வந்திருக்கிறார்' கதை ரசித்து ரசித்து மீண்டும் மீண்டும் நான்கைந்து தடவைக்கு மேலாக படித்திருக்கிறேன். மிகவும் அழகான கதை. இதை படிக்கும் ஒவ்வொரு சமயமும் அந்த கதைக்குள் நானும் இருப்பது போன்ற உணர்வே வரும். தீபாவளி சமயம் இந்த கதை நினைவுக்கு வர தவறுவதேயில்லை எனலாம். அயல் நாட்டில் இருந்தாலும், தமிழார்வத்துடன் இருக்கும் தங்கள் குடும்பத்துக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. நூலை இதுவரை படிக்கவில்லை. விரைவில் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    மீண்டும் வந்து கதையை படிக்கிறேன் என்று சொன்னதற்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

    'ராஜா வந்திருக்கிறார்' கதையை ரசித்து படித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    தீபாவளி சமயம் இது போல் ஏழைகுழந்தையை கண்டால் இந்த கதை நினைவுக்கு வரும்.
    ஒவ்வொருவரும் தீபாவளி சமயம் ஒரு ஏழைகுழந்தைக்கு புது துணி வாங்கி தரும் எண்ணம் வரும்.

    //அயல் நாட்டில் இருந்தாலும், தமிழார்வத்துடன் இருக்கும் தங்கள் குடும்பத்துக்கு பாராட்டுக்கள்//

    உங்கள் பாராட்டுகளுக்கும், கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  28. வணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. இங்கும் ஒரு நூலகத்தில் தமிழ் புக் இருக்கின்றதென அறிந்த்தேன். ஆனா மிகவும் தூரம். அதனால் நான் ஊருக்கு போய் வரும்போது சிலது வாங்குவேன். இப்போ ஆன் லைனில் வாசிக்க முடிகிறது. ஆனாலும் எனக்கு கையில் புத்தகம் வைத்து வாசிப்பது போல் ஆன்லைனில் வாசிப்பது ரசனையில்லாமல் இருக்கு. ஆனா ஆர்வத்தினால் வாசிக்கிறேன். இப்புத்தகமும் வாசிக்க ஆவலை தூண்டிவிட்டது.
    அறிமுகம் செய்யும் நூல்களை குறித்து வருகிறேன் அக்கா. நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    கையில் ஏந்தி படிப்பது வராதுதான் ஆன்லைனில் வாசிப்பது.

    புத்தகங்கள் படிப்பது மீண்டும் இளமை காலம் திரும்பியது போல் இருக்கு. நூல்களை குறித்து வருவது மகிழ்ச்சி.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
    .

    பதிலளிநீக்கு
  32. இந்தப்புத்தகம் படித்ததில்லை. வாங்க வேண்டும் விரைவில்.புத்தக வாசிப்பிற்கான தொடர் உண்மையிலேயே மிகுந்த சுவாரஸ்யத்தைத் தருகிறது.
    பொதுவாய் புத்தக கண்காட்சி வரும்போது நிறைய புத்தகங்கள் வாங்குவேன். சென்னையில் ஒரு பழைய புத்தகக்கடை இருக்கிறது. எப்போது சென்னையில் வந்து இறங்கினாலும் அங்கே சென்று வேண்டிய அளவிற்கு ஆங்கில, தமிழ்ப்புத்தகங்கள் வாங்கிக்கொண்டு திரும்ப துபாய் செல்லும்போது பெட்டியில் பாதியளவு அவற்றை நிரப்பிச் செல்வேன். வீட்டிலிருந்தும் பழைய புத்தகங்களை எடுத்துச் செல்வேன். வயதாவதால் ஏற்படும் மறதி இந்த வகையில் ஒரு வரப்பிரசாதம். பத்து வருடங்களுக்குப்பிறகு ஒரு புத்தகம் மீண்டும் ஒரு புதிய புத்தகம் போலத்தோன்றும்.

    இப்போது தஞ்சையில். அடுத்த வாரம் மகனிடம் [ துபாய்] செல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் மனோ சாமிநாதன் வாழ்க வளமுடன்.

    புத்தக கண்காட்சி போனால் வாங்காமல் வர முடியாதுதான். நான் வாங்கி பரிசளிக்க வைத்துக் கொள்வேன்.
    குழந்தைகள் வந்தால் அவர்களுக்கு ஏற்ற புத்தகம், சிறு வயதினர் வந்தால் அவர்களுக்கு பிடித்த புத்தகம்.
    வயதனவர்கள் வந்தால் ஆன்மீகம் விரும்பினால் அந்த புத்தகம் அல்லது அவர்கள் விரும்பி படிக்கும், பலதரபட்ட புத்தகங்கள் கொடுப்பேன்.

    பெட்டி பாதியளவு புத்தகம் என்று கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    மறதி ஒரு வரப்பிரசாதம் தான் வீட்டில் இருக்கும் புத்தகங்களை மீண்டும் புத்தக வாசிப்பு பகிர்வுக்கு எடுத்துப் படிக்கிறேன்.

    உங்கள் விரிவான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. சிறந்த கதைகளின் தொகுப்பு. நல்லதொரு அறிமுகம்.

    அரிசோனாவில் குழந்தைகளுக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் செயல்கள் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    //அரிசோனாவில் குழந்தைகளுக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் செயல்கள் பாராட்டுக்குரியது.//

    ஆமாம் ராமலக்ஷ்மி, பாரார்ர்ட்க்குரியதுதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அரிசோனா பள்ளி பாராட்டுக்குரியது. ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் ஆச்சரியம் தான். இதனால் படிக்கும் பழக்கம் அதிகம் ஆகும். இந்தப்புத்தகம் படித்தேனா இல்லையா என்பது நினைவில் இல்லை. புத்தகத்தைப் பார்த்தால் தான் தெரியும். கு.அழகிரிசாமி கதை படித்த நினைவு உள்ளது.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    பழைய எழுத்தாளர்கள் கதைகள் படித்திருப்பீர்கள்.

    படித்தால் நினைவு வந்து விடும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு