Monday, October 30, 2017

ஆலோவீன் திகில்
ஆலோவின் தினக்கொண்டாட்டம்.

நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

 ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிக்காய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர்த் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.


ஆலோவின்  தின கொண்டாட்டம் 2013ல் எழுதிய  பதிவு. நியூஜெர்சியில் நடந்த கொண்டாட்ட படங்களை பார்க்கலாம்.

கீழே வரும் படங்கள் அரிசோனாவில் எடுத்த படங்கள்.


மகன் செய்த ஆலோவீன் டிராகன் வாயிலிருந்து கலர் புகை வரும்  காணொளி  பிறகு
Image may contain: 1 person, smiling, hat and closeup
கடையில் பேரன் 
No automatic alt text available.


பக்கத்து வீடுகளில் 
Image may contain: outdoor


Image may contain: one or more people, people standing, tree and outdoor


Image may contain: one or more people, people standing and outdoor
திகில் ஊட்டும் காட்சி


கடையில்


கடையில் சூனீயக்காரி, டைனோசர் எலும்பு கூடு

கார் கண்காட்சியில் பெரியவர்கள்  பிச்சைக்காரர் வேடமிட்டுகார் கண்காட்சி நடந்த இடத்தில் ஆலோவீன் அலங் காரங்களுடன் மக்கள்


முன்னோர்களை  வணங்கும் நாளாகவும் இருக்கிறது.

மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் (பேய்) இருள் விலக்கும் பண்டிகை.


மன உறுதி ,பயமின்மை போன்றவற்றை வளர்க்கவும் ஆலோவீன் திருவிழா பயன்படுமே..!

குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் வேடமிட்டுக் கொண்டு மகிழ்ச்சியுடன் செல்வது முன்னோர்களின் ஆசிதான்.
                                                            வாழ்க வளமுடன்.

36 comments:

ஜீவி said...

Brick or treat!..

வீடு வீடாக மால் மாலாக வால்மார்ட் வால்மார்ட்டாக தெருக்குத் தெரு ஊர் முச்சூடும்
திகில் படக் காட்சிகள் போலக் காணப்பட்டாலும் மிகவும் ரசனைக்குரிய திருவிழா இது.

உள்ளார்ந்த அர்த்தம் கொண்ட கொண்டாட்டம் இது.

சாக்லெட் பைகள் வாங்கி வைத்து விட்டீர்களா, வீட்டு வாசலில் வந்து நிற்கும் குழந்தைகளுக்கு அள்ளித் தர?..

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

//வீடு வீடாக மால் மாலாக வால்மார்ட் வால்மார்ட்டாக தெருக்குத் தெரு ஊர் முச்சூடும்
திகில் படக் காட்சிகள் போலக் காணப்பட்டாலும் மிகவும் ரசனைக்குரிய திருவிழா இது.//
ரசனையான திருவிழா தான்.
படங்கள் ஏராளம் இருக்கிறது.
கடகளில், வீடுகளில் எடுத்தது.

//உள்ளார்ந்த அர்த்தம் கொண்ட கொண்டாட்டம் இது. //

கார்த்திகை மாதம் விளக்கு திருவிழா இருளை அகற்றி ஓளி தீபம் ஏற்றுவது போல் இங்க்கு இருள் சக்தியை விரட்டும், கெட்டசகதியை விரட்டும் ஓளி நாளாக


மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் (பேய்) இருள் விலக்கும் பண்டிகை.


//சாக்லெட் பைகள் வாங்கி வைத்து விட்டீர்களா, வீட்டு வாசலில் வந்து நிற்கும் குழந்தைகளுக்கு அள்ளித் தர?..//

அள்ளித் தர சாக்லெட் பைகள் ரெடி அவர்களை மகிழ்விக்க வாசலில் புகை கக்கும் டிராகன், எங்களுக்கும் ஆலோவீன் உடைகள் தயார்.

உங்கள் உற்சாகமான கருத்துக்கு நன்றி.
வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான கொண்டாட்டம் தான்.

படங்கள் அழகு.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

வித்தியாசமாக இருக்கிறதே படங்கள் அனைத்தும் ஸூப்பர்

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
வித்தியாசமான திருவிழா தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

அப்பாவி athira said...

வெளி நாடுகளில் இது தீபாவளிக் கொண்டாட்டம்போல இருக்கும்... தொடராக பார்ட்டிகளும் இருக்கும்.. இதற்காக தாயாரிக்கும் கேக் சுவீட்ஸ் எல்லாம் ரத்தம் ஒழுகுவது போலவும் பூச்சி புளு ஊர்வதுபோலவும் செய்திருப்பார்கள்.

உங்கள் படங்கள் அழகு..இதனை ஹலோவின் எனத்தான் சொல்வோம்.. ஏன் அங்கு ஆலோவின் என்கிறார்களோ? தலைப்புப் பார்த்து எதுவும் புரியாமல் உள்ளே வந்தேன்.

அப்பாவி athira said...

Trick and treat எனச் சொல்லிக்கொண்டே பிள்ளைகள் வீடுகளுக்குப் போவினம்.. ஏதும் trick செய்து காட்டோணும்... இ தில் ஜோக் பாட்டு ஸ்டோரி விடுகதைகள் எதுவாயினும் இப்படி செய்ததும் treat ஆக சுவீட்ஸ் பாக் கொடுப்பது வழக்கம்.

கோமதி அரசு said...

வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரிதான். மேல் நாட்டில் ஹலோவின் என்றும் இங்கு ஆலோவீன் என்றே சொல்கிறார்கள். ரத்தம் ஓழுகும் பொம்மைகள், காரில் ஒரு கை மட்டும் ரத்தம் ஓழுகுவத் போல் தொங்கிய் காட்சி எல்லாம் எடுத்தேன்.
நிறைய படங்கள் ஆகி விட்டதால் போடவில்லை.
இங்கு மிட்டாய்கள் வாங்க்கி வைத்து இருக்கிறோம் வரும் அன்பர்களுக்கு , குழந்தைகளுக்கு கொடுக்க. இந்த முறை விடுமுறை நாள் வரவில்லை ஹலோவின் அதனால் நிறைய பேர் வரமாட்டார்கள் என்றாள் மருமகள்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

Geetha Sambasivam said...

ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்ட போது 2011 ஆம் ஆண்டு ஹூஸ்டனில் இருந்தேன்! குழந்தைகள் கூட்டமாக வந்து சாக்லேட்டை அள்ளிக் கொண்டு போனார்கள். இதுவும் அடுத்து வரும் நன்றி தெரிவிக்கும் நாளான தாங்க்ஸ் கிவிங் தினமும் அங்கே பிரமாதமாகக் கொண்டாடப்படும்! இப்போவே கிறிஸ்துமஸ் அலங்காரங்களும் ஆரம்பித்திருக்கும். அருமையான படப் பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்தான். படங்களையும், அதில் பேரனையும் ரசித்தேன்.

துரை செல்வராஜூ said...

>>> ரத்தம் ஓழுகும் பொம்மைகள், காரில் ஒரு கை மட்டும் ரத்தம் ஓழுகுவது போல் தொங்கிய் காட்சி..<<<

இப்படியும் ரசனை மக்களிடத்தில்..
ஆயினும் மக்கள் மனங்களில் சந்தோஷம்..

ஆலோவீனைக் காட்சிப்படுத்துகின்றது பதிவு..

துபாய் அபுதாபியிலும் அங்குள்ள மேற்கு நாட்டவர்கள் ஔசரிக்கின்றார்கள் போலிருக்கின்றது..

ஆலோவீன் பொம்மை ஒன்றை பேத்திக்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றார்கள்..
அவள் அதனுடன் விளையாடும் படம் ஒன்று எனக்கு வந்துள்ளது..

மற்றவர் மகிழ்ச்சியைக் காண்பதுவும் மகிழ்ச்சிதானே..
வாழ்க நலம்..

கோமதி அரசு said...

வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

//இதுவும் அடுத்து வரும் நன்றி தெரிவிக்கும் நாளான தாங்க்ஸ் கிவிங் தினமும் அங்கே பிரமாதமாகக் கொண்டாடப்படும்! //

ஆமாம் , நாளைக்கும் விருந்தினர் வருகிறார்கள் வீட்டுக்கு, தாங்க்ஸ்கிவிங்க் தினத்திற்கும் விருந்தினர் வருகை இருக்கு வீட்டில்.

கிறிஸ்துமஸ் அலங்காரங்களும் கடைகளில் ஆரம்பித்து விட்டார்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க் வளமுடன்.

//ஆலோவீன் பொம்மை ஒன்றை பேத்திக்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றார்கள்..
அவள் அதனுடன் விளையாடும் படம் ஒன்று எனக்கு வந்துள்ளது..

மற்றவர் மகிழ்ச்சியைக் காண்பதுவும் மகிழ்ச்சிதானே..
வாழ்க நலம்..//

ஓ! அங்கும் உண்டா? பேத்தியை பார்த்து மகிழ்ந்தீர்களா?
மற்றவர்கள் மகிழ்ச்சியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சிதான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.


பூ விழி said...

இதை பற்றி பார்த்து யூ டியூபில் படித்து இருக்கிறேன் ஆனால் நீங்க பக்கத்து வீட்டில் உள்ளவரையெல்லாம் படமெடுத்து பகிர்ந்தது உங்கள் மகன் செய்து எல்லாம் பகிர்ந்த்து தான் சிறப்பு சிஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

அட....! வித்தியாசமான கொண்டாட்டம் தான்...!

படங்கள் அனைத்தும் அருமை...

பரிவை சே.குமார் said...

படங்களுடன் பகிர்வு அருமை அம்மா.

middleclassmadhavi said...

தகவல்களையும் புகைப்படங்களையும் ரசித்தேன். நன்றி!

Angelin said...

இன்னிக்கு இங்கே ஈவ்னிங் நிறைய பேய்க்குட்டிகள் :) உலா வரும் நானா இப்போவே கடைக்கு போய் ஸ்வீட்ஸ் வாங்கி வைக்கணும் :) அவங்களுக்கு கொடுக்க ..கடைகள் எல்லாம் இந்த பொம்மைகள்தான் ..எல்லா வீடுகளிலும் ஹெட்ஜ் வேலி எல்லாம் சிலந்தி வலை செட்டப் செஞ்சிருக்காங்க .பிள்ளைங்களுக்கு சந்தோஷம் ..இந்த ஆல் சோல்ஸ் தினம் அன்று கீழ்பாக செமிட்ரி பக்கம் பஸ்ஸில் போகும்போது பார்ட்பேன் எல்லா கல்லறைமேலும் விளக்கு இருக்கும் அன்று இரவு மட்டும் ஜெகஜோதியா எரியும் அந்த இடமே ஒளிமயமா ..

படங்கள் எல்லாமே அழகு அக்கா .உங்க வீட்டு குட்டிப்பிள்ளைங்களும் போறாங்களா :)

கோமதி அரசு said...

வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
இன்னும் நிறைய இருக்கிறது பக்கத்து வீட்டு படங்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
வித்தியாசமான கொண்டாட்டம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
உங்கல் தொடர் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி, நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
நம் ஊரில் கல்லரை திருவிழா நடப்பது போல் இங்கும் இன்று தான் நடக்கும் போல்!
முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அவர்களின் ஆசியை வேண்டும் நாளாகவும் , கெட்ட சக்திகளிடமிருந்து விடுபட வேண்டும் நாளாகவும் இருக்கிறது.

எங்கள் வீட்டிலும் குழந்தை போவான் தனியாக போக முடியாது என்பதால் பெரிய குழந்தைகளும் (மகன், மருமகள் ) போகிறார்கள்.

நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். ஆலோவீன் மாறுவேடம் அணிய உடைகள் தயார். அவை அடுத்த பதிவில்.

உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.
உங்களுக்கும் ஆலோவீன் வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

இருள் விலக்கும் பண்டிகை
அறிந்தேன்
வித்தியாசமான விழா
நன்றி சகோதரியாரே

கோமதி அரசு said...

வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Anuradha Premkumar said...

படங்கள் எல்லாம் அருமை மா...

இங்கயும் இப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொண்டாட ஆரம்பிக்கிறாங்க...

பசங்க கூட நேத்து இதை பத்தி தான் பேசிகிட்டாங்க..நான் கேட்டப்போ ஸ்கூல்ல சொன்னாங்க ன்னு சொன்னாங்க..

G.M Balasubramaniam said...

இந்த முறை அமெரிக்காவில் ஹாலோவின் கொண்டாட்டம் தீவிர வாதிகளின் செயலாக இருந்ததுபோல் இருக்கிறதே

நெல்லைத் தமிழன் said...

ஹாலோவின் தினப் பதிவு - நல்லா இருக்கு. படங்களும் அருமை.

காமாட்சி said...

படங்களெல்லாம் விவரமாக அழகாக வந்துள்ளது. சென்ற வருஷம் கூட நான் ஸ்விஸ்ஸில் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்த்தேன். அர்த்தம் தெரியாத போது என்ன வேஷம் இது என்பேன். அவரவர்கள் கலாசாரங்கள். அர்த்தமுடன்தான் உள்ளது. அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் அவரவர்கள் கலாசாரங்க்கள் அர்த்தமுடையதுதான்.
முன்னோர்களை வணங்கும் நாளும் அதுதான்.
இங்குள்ளவர்கள் வயதானவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள் என்று சொல்கிறார்கள். பேரனை பள்ளிக்கு அழைக்க செல்லும் போது பார்க்கிறேன், எவ்வளவு முதியோர்கள் பேரனை பேத்தியை அழைக்க வந்து இருக்கிறார்கள்! சிறியவர்கள் பெரியவர்களிடம் அன்பாய் இருப்பதை எங்கும் காண்கிறேன்.


உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
தங்கள் கருத்துக்கு நன்றி.

Bhanumathy Venkateswaran said...

எங்களையும் ஹாலோவீன் கொண்டாட வைத்து விட்டீர்கள். நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.