திங்கள், 16 அக்டோபர், 2017

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


என் கைகளுக்கு மருமகள் வைத்த மருதாணி
மருமகள் கைகளுக்கு மகன் வைத்த மருதாணி
தீபாவளி துணிமணிகள்
தீபாவளி பலகாரங்கள். 

இவை நான்கு  வருடங்களுக்கு முன் நியூஜெர்ஸியில்   கொண்டாடிய போது   எடுத்த படங்கள்.

எல்லாப் பண்டிகைகளுக்கும் கையில் மருதாணி வைத்து விடுவேன். அது தெரிந்த மருமகள் வட இந்தியக் கடையில் மருதாணிக் கோன் வாங்கி என் கைகளுக்கு வரைந்து விட்டாள். எனக்கு மருதாணி இலையை அரைத்து அதை வைத்து தான் பழக்கம். என் குழந்தைகள், பேத்தி எல்லாம் வேறு டிசைன் வரைய சொன்னால் முதலில் கையில் பேனாவால் வரைந்து விட்டு அதன் மேல் மருதாணியை வைத்து விடுவேன்.

மகன் மருமகளுக்கு புஷ்வாணம், தரைச்சக்கரம், கம்பி மத்தாப்பு போல் வைத்து விட்டான்.


போன வருடம் எங்கள் வீட்டில்  (மதுரையில்) எளிமையாக தீபாவளி அன்று காலை பஜ்ஜி, வடை, சுசியம் செய்து கும்பிட்டாச்சு.

தீபாவளி நினைவலைகள்  பதிவை எப்போது மீள் பதிவாக போட்டாலும் விரும்பிப் படிக்கிறார்கள். படிக்க எண்ணம் இருந்தால் மீண்டும் படிக்கலாம்.
எல்லோருக்கும் அந்த   சிறு வயது நினைவு இருக்கிறது . அந்த நாள் மீண்டும் வராதா என்ற ஆசையும் இருக்கிறது. 

பண்டிகைகள் எதிர்பார்ப்பையும் குதூகலத்தையும் கொடுத்தது அன்று. அந்த அளவு இப்போது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இங்கே இருக்கும் நிறையபேருக்கு தங்கள் உறவுகளுடன் பண்டிகை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. சிலருக்கு ஊரிலிருந்து பெற்றோர் வந்து இருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு குழந்தைகள் வரும் நாள் தீபாவளியாக இருந்தது.  கூடவே  இருந்தால் மேலும் மகிழ்ச்சிதான்.

மாலை மலரில் படித்த செய்தி :-

//தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாடவேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. 

இலங்கையை ஆண்ட ராவணன் சீதையைக் கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டுக்கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன், சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.//

எப்படி இருந்தாலும்  பண்டிகைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கே!



இறைவன் எல்லோருக்கும் மன சந்தோஷத்தை கொடுக்க வேண்டும்.


இந்த வருடம் மகன் வீட்டில் தீபாவளிப் பண்டிகை எங்களுக்கு.  அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


                                                                  வாழ்க வளமுடன்.!

--------------------------------------------------------------------------------------------------------------------------

54 கருத்துகள்:

  1. எங்கிருந்தாலும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

    காலம் மாறும் பொழுது நாமும் அதன் வழியே ஓடியே தீரவேண்டும்.
    பழைய கால தீபாவளிகள் இப்போது இல்லை இனிமேலும் வராது.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்களுடன் இனிய பதிவு.. அருமை..

    அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. முந்தைய தீபாவளி நினைவுகளும் ..படங்களும் அருமை அம்மா...


    இந்த வருடமும் மிக மிக மகிழ்வோடு உங்கள் தீபாவளி நன்னாள் அமைய எனது வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  4. தீபாவளி நல் வாழ்த்துகள். ஐந்து வருடங்களுக்குப்பிறகு இந்த வருடம், எனக்கு குடும்பத்துடன் கூடிய தீபாவளி.

    பதிலளிநீக்கு
  5. மாமியாருக்கு மருமகள் மருதாணி வைக்க, மனைவிக்கு மருதாணி வைக்கும் மகன். அதை ரசிக்கும் தாய்... நல்லதொரு குடும்பம். வாழ்த்துகள்ம்மா. சுத்தி போடுங்க.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    //காலம் மாறும் பொழுது நாமும் அதன் வழியே ஓடியே தீரவேண்டும்.
    பழைய கால தீபாவளிகள் இப்போது இல்லை இனிமேலும் வராது.//

    நீங்கள் சொலவது சரியே!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அனுராதாபிரேம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் இனிய நல் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
    ஐந்து வருடங்க்களுக்கு பிறகா!
    மகிழ்ச்சியான தீபாவளி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் .

    உங்களுக்கும் , உங்கள் குடும்பாத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    சுத்தி போட்டுவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தீபாவளி நன்று . கொண்டாடுவோம் காரணங்கள் எதுவானாலும்

    பதிலளிநீக்கு
  13. முதலில் வாழ்த்துகள்! தங்களுக்குத் தங்கள் மருமகள் மருதாணி டிசைன் போட மருமகளுக்குத் தங்கள் மகன் டிசைன் போட அட அட!!! அதை நீங்கள் இங்கு பதிவிட்டி மகிழ!!! அன்பும் மகிழ்ச்சியும் ததும்பும் தங்கள் இனிய குடும்பத்திற்கு எங்கள் இருவரின் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!!!மகிழ்ச்சி என்றும் நிலைத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளும்...வாழ்க நலமுடன்...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  14. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! மருதாணி டிசைன்கள் அழகு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் குடும்பத்தினர் அனைவருக்கும். ஆசிகளும்,அன்பும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. தீபாவளி நாள் வாழ்த்துக்கள் சிஸ்
    என்ன சொல்லுங்க அந்நாள் தீபாவளி போல் வரவே வராது டிரேடிஷனோட மீடியா தொல்லைகள் இல்லாமல் மனம் நிறைய ஆர்வத்தோடும் ஆர்பரிப்போடும் கொண்டடிய நாட்கள் உங்கள்பதிவால் மலரும் நினைவுகள் முக்கியமாய் மருதாணி பறித்து அரைத்து .....

    பதிலளிநீக்கு
  17. அன்பும் அரணுமாகப் பெற்றோர் கூட இருக்கும்
    தீபாவளி நன்னாள். அதற்கான வாழ்த்துகள்.
    என்றும் இந்த இன்பம் நிலைத்திருக்க
    இறைவனிடம் பிரார்த்தனைகள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  18. அந்த நாள் போல இந்த நாள் இல்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தில் பழைய உற்சாகம் இல்லை. இளைய தலைமுறையே அப்படித்தானிருக்கிறது. படங்கள் பார்ப்பதிலும், டீவி பார்ப்பதிலும் பொழுது போய்விடுகிறது!

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    பண்டிகை கொண்டாட காரணம் எதுவானல் என்ன எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவது தான் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் துளசிரரன், கீதா வாழ்க வளமுடன்.

    //அன்பும் மகிழ்ச்சியும் ததும்பும் தங்கள் இனிய குடும்பத்திற்கு எங்கள் இருவரின் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!!!மகிழ்ச்சி என்றும் நிலைத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளும்...வாழ்க நலமுடன்...//

    உங்கள் இருவரின் அன்பான வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் மிகவும் நன்றி.
    உங்கள் ஆசிகள் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    வீட்டுக்குள் புகுந்த தொலைக்காட்சி, அலைபேசி எல்லாம்
    விழாக்களை வேறு போக்கில் கொண்டு சென்று விட்டது உண்மை.
    என் அம்மா டின் டின்னாக பலகாரம் செய்த களைப்புடன் அக்கா, தம்பி தங்கைகளுக்கு, எனக்கு எல்லாம் மருதாணி அரைத்து வைத்து விடுவார்கள். சாப்பாட்டை முடித்து விட்டு வைத்தாலும், தண்ணீர் வேண்டும், முதுகு அரிக்குது , கையில் வைத்த பெரிய வட்டத்தை சுற்றி வைத்த சின்ன வட்ட புள்ளிகள் கீழே விழுந்து விட்டது வைத்து விடுங்கள் மறுமடியும் என்று படுத்திய பாடுகள் நினைவுக்கு வருது.

    அம்மா அன்பாக அலுத்துக் கொள்வார்கள், மருதாணி வைப்பதுகூட பெரிய வேலை இல்லை, அப்புறம் நீங்கள் படுத்து பாடு இருக்கே! என்பார்கள்.

    வைத்தவுடன் எடுக்க சொல்லும் தம்பியிடம் இன்னும் சிறிது நேரம் வைத்து இருந்தால் தான் சிவக்கும் என்று அவனை தஜா செய்வது என்று அம்மா படும் பாடு.

    மறுநாள் சிவந்த கைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியடைந்தது எல்லாம் அருமையான மலரும் நினைவுகள்.

    உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.






    பதிலளிநீக்கு
  24. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    //என்றும் இந்த இன்பம் நிலைத்திருக்க
    இறைவனிடம் பிரார்த்தனைகள்.
    வாழ்க வளமுடன்//

    உங்கள் அன்பான கருத்துக்கும், பிராத்தனைகளுக்கும் நன்றி அக்கா.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //அந்த நாள் போல இந்த நாள் இல்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தில் பழைய உற்சாகம் இல்லை. இளைய தலைமுறையே அப்படித்தானிருக்கிறது. படங்கள் பார்ப்பதிலும், டீவி பார்ப்பதிலும் பொழுது போய்விடுகிறது!//

    அந்த நாளிலும் சில இளைய தலை முறையினர் தீபாவளி அன்று வரும் திரைப்படம் பார்க்க சென்று விடுவார்கள் . வீட்டில் திட்டு வாங்குவார்கள்.

    சிலர் பலகார எதிர்பார்ப்பு, புதுசாக வந்த தீபாவளி துணியை வாங்கிய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள நண்பர்கள், தோழியுடன் பேச ஆசைபடுவார்கள்.

    இன்று எப்போதும் வித விதமான பலகாரம் செய்கிறார்கள், (திங்கள் கிழமை வரும் எங்கள் ப்ளாக் மூலம்) வாராவாரம் தீபாவளிதான்.

    புது துணிகள் நினைத்த போது வாங்கி கொள்கிறார்கள்.
    மக்களிடம் தேவைகளை பூர்த்தி செய்ய வசதி, வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    சிறு குழந்தையாக இருப்பவர்களுக்கு பண்டிகை எதிர்பார்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

    உங்கல் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.






    பதிலளிநீக்கு
  26. அன்பான தீப ஒளி வாழ்த்துக்கள் அரசு ஐயாவுக்கும் தங்களுக்கும்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  27. மருதாணி டிசைன் சூப்பரா வந்திருக்கிறது இருவருக்குமே. உங்களுக்கும் அன்பான உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான தீப ஒளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. மகிழ்ச்சியான தருணங்களை மலரும் நினைவுகளாக படைத்து விட்டீர்கள். எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் தமிழ் இளங்கோ , வாழ்க வளமுடன்.
    உங்கள் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. மங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்,,,/

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. மருமகள், மகன் இருவர் கைவண்ணமும் அழகு. இனிய நினைவலைகள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  35. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்துக்கள்க்கா ..
    பண்டிகை என்றாலே உற்றார் உறவினர் அண்டை அயலார் எல்லாருடனும் கொண்டாடிய நாட்ட்கள் இன்னும் நினைவில் இருக்கு .
    அழகிய நினைவுகலாய் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிக்கா

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் ராமலஷ்மி , வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. நீங்கள் சொல்வது சரியே. அந்த நாள் நினைவுகள் என்றுமே நீங்காத நினைவுகளாய் நெஞ்சில் நிலைத்துவிடுகின்றன.தீபாவளி நினைவுகளும் அப்படியே.

    நியூஜெர்சியில் வசிப்பது ஒருவகையில் பாக்கியம் செய்தவர்களுக்கே கிடைக்கும். ஏனெனில் இந்தியாவில் கிடைக்கும் எல்லாப்பொருட்களும் அங்கு கிடைக்கிறது - மருதாணி 'கோன்' உட்பட.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    நாங்கள் சிறு வயதில் கொண்டாடிய நினைவுகள் மனதில் வந்து போகும் ஒவ்வொரு தீபாவளியின் போதும்.
    பலகாரங்களை எடுத்துக் கொண்டு பக்கத்து வீடு உறவினர் வீடு என்று போய் கொடுத்து வந்தது எல்லாம் அருமையான நினைவுகள்.

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்க்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.


    //அந்த நாள் நினைவுகள் என்றுமே நீங்காத நினைவுகளாய் நெஞ்சில் நிலைத்துவிடுகின்றன.தீபாவளி நினைவுகளும் அப்படியே. //

    நீங்கள் சொல்வது சரியே.

    //நியூஜெர்சியில் வசிப்பது ஒருவகையில் பாக்கியம் செய்தவர்களுக்கே கிடைக்கும். ஏனெனில் இந்தியாவில் கிடைக்கும் எல்லாப்பொருட்களும் அங்கு கிடைக்கிறது - மருதாணி 'கோன்' உட்பட.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! //

    சில காலம் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது. எல்லா பொருட்களும் கிடைக்கும் தான் அந்த ஊரில்.

    உங்கள் கருத்துக்கும்
    வாழ்த்துக்களுக்கும் நன்றி.






    பதிலளிநீக்கு
  41. படங்கள் அழகு.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  42. ஆஆஆஆவ்வ்வ்வ் கோமதி அக்கா... அங்கடிபட்டு இங்கடிபட்டு இன்றுதான் இங்கு வந்து சேர்ந்தேன்.... மழை விட்டும் தூவானம் நிற்கவில்லை என்பதுபோல, தீபாவளி முடிஞ்சிட்டாலும் அதன் கொட்டாட்டங்கள் முடிய முன்பே வந்திட்டேனே ...:).

    உங்கள் கை மருதாணிதான் ரொம்ப அழகாக இருக்கு... மருமகள் உண்மையான பாசத்தோடுதான் போட்டுவிட்டிருக்கிறா. படங்கள் அனைத்தும் அருமை...

    தீபாவளிக் கதையும் நன்று... நானும் கேதாரகெளரி விரதம் பிடிக்கிறனான்... அப்படியே கந்தசஷ்டியும் தொடருது.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் அப்பாவி அதிரா, வாழ்க வளமுடன்.
    ஏன் என்னாச்சு? தீபாவளிக்கு பின் விழாக்கள் எல்லாம் தொடர்கிறதே!

    மருதாணியை ரசித்தமைக்கு நன்றி.
    நானும் கந்தசஷ்டி விரதம் இருப்பேன், கேதாரகெள்ரி விரதம் இருப்பது நன்று, மகிழ்ச்சி.
    அம்மன் எல்லா வளமும் நலமும் தருவாள்.

    உங்கள் பிஸியான நேரத்தை ஒதுக்கி இங்கு அக்காவின் பதிவுக்கு வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  44. மகன்,மருமகள் மருதாணி டிசைன் அருமை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. தாமதமான வாழ்த்துகள். இருமுறை வந்து கருத்துச் சொல்லியும் இணையக் கோளாறால் போகலை.இதாவது போகுமானு தெரியலை! :)

    உங்கள் மருமகள் உங்களுக்கு வைத்ததும், உங்கள் மகன் தன் மனைவிக்கு மருதாணி வைத்ததும் பார்க்கவும், கேட்கவும் அழகு, ஆனந்தம். பகிர்ந்து கொண்டதுக்கும் மகிழ்ச்சி. தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி.
    தீபாவளி அன்று விடுமுறை இல்லை மகனுக்கு ஆபீஸ் வேலை, பேரனுக்கு உடம்பு சரியில்லை, வைரஸ் பீவர். மாலை மகனின் நண்பர் குடும்பத்துடன்
    வந்த பின் கொண்டாடினோம்.
    நம் ஊர் போல் இல்லை. குழந்தைகளுடன் இருக்கிறோம் என்பது மட்டும் தான் ஆனந்தம்.
    கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. பெற்றோர்களுக்கு குழந்தைகள் வரும் நாள் தீபாவளியாக இருந்தது. கூடவே இருந்தால் மேலும் மகிழ்ச்சிதான்.//
    அழகு !

    கால மாற்றங்கள் எத்தனை இருந்தாலும் பாரம்பரியப் பண்டிகைகளின் தாத்பரியங்களும் குதூகலங்களும் நிலைத்திருப்பது சிறப்பு. உறவுகளின் நெருக்கத்தை புதுப்பித்துக் கொள்ளவும் அதிகரித்துக் கொள்ளவுமான ஏற்பாடாக இருப்பதே இப்படியான வாழ்வியல் முறையின் பலமாக இருக்கிறது.

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் நிலாமகள், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மை. உறவுகளை புதுபித்து கொள்ள உதவும். உறவுகள் தான் பலம், அந்த பலத்தை தருவது அன்பு.

    உங்கள் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு