வியாழன், 16 ஜூலை, 2015

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்


கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற  முருகன் தலம் . இந்த ஊரே பாறையின் மீது அமைந்து உள்ளதாம். நாங்கள் போனமாதம் போய் இருந்தோம்.


”கோவில் போகும் வழி எல்லாம் பாதை கொஞ்சம் மோசமாக இருக்கும் மரங்கள் அவ்வப்போது விழும் ஆனால் உடனே அப்புறப்படுத்தி
விடுவார்கள் ” என்றார் எங்கள்  டிரைவர். சில இடங்களில் அவர் சொன்னது போல் வழியில் சில இடங்களில்  மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கோவில் குருக்கள் கொடைக்கானலில் இருந்து தான் வருகிறார். 

நாங்கள் போனபோது குருக்கள் கோயிலில் இருந்தார்,  குழந்தை வேலப்பரை மிக அழகாய்  விபூதி அலங்காரம் செய்து இருந்தார்.  அன்று சஷ்டி என்றும் மாலை சஷ்டி பூஜை செய்யும் குழுவினர் வருவார்கள்  என்றும் அபிஷேகம் நடக்கும் என்றும் குருக்கள் சொன்னார். ஆஹா! நம்மை சஷ்டி அன்று முருகன் அழைத்து இருக்கிறாரே! என்று  சொல்லிக்கொண்டு இருந்த போது அதைக் கேட்ட குருக்கள் ,”ஆமாம் இந்த  முருகன் நினைத்தால் தான் இங்கு வர முடியும்” இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம்  என்றார்.   ”கோவில் வாசல் வரை வந்தாலும்  தண்ணீர் குடித்து வரலாம், சாமான்கள் வாங்கி வரலாம் என்று போய் விடுவார்கள்  அவர்கள் திரும்பி வரும் போது நடை சாத்திய நிகழ்வுகள் உண்டு” என்றார். உடனே நாங்கள் நம்மை  அன்றே அவரை வணங்க அனுமதித்ததற்கு நன்றி கூறி  மீண்டும் மனம் மகிழ்ந்து வணங்கினோம். மூன்று நாட்களாக ஊர் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தபோதும் இன்வெர்ட்டர் போட்டு நாங்கள் பார்க்கும்படி ஒளியேற்றினார்.

 பழனி மலை  முருகன் போல இவரும் நவபாஷணத்தால் செய்யப்பட்ட சிலை. போகரால் செய்யப்பட்டது என்றும் சொன்னார். தீர்த்தம் கொடுத்தார்கள் பால் என்று நினைத்து குடித்தால்  பஞ்சாமிர்த தீர்த்தம் மிக ருசியாக இருந்தது. இது தான் கோவில் சிறப்பாம்.   முருகனுக்குச் செய்திருந்த அந்த ராஜ அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்  போன்று இருந்தது. ”அலங்காரம் மாலை கலைக்கப்படும், மீண்டும் அபிஷேகம்” என்று அவர் கூறியபோது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. மீண்டும் அழகாய் அலங்காரம் செய்வார்- இருந்தாலும் இந்த மனது இருக்கிறதே! அப்படியே இருக்கக்கூடாதா  என்று நினைக்கத்தான் செய்தது.
அருள்மிகு குழந்தை வேலப்பர் என்பது இத் தலத்தின் இறைவன் பெயர்அலங்கார வளைவு நேரே இருக்கும் வாசல்
குழந்தை வேலப்பர் சன்னதி முன் கொடி மரத்தோடு மற்றொரு வாயில் ,அதன் அருகில் பிள்ளையார் சன்னதி
வேலப்பர் சன்னதி விமானம்
இடும்பன் சன்னதி மற்றும் , சிவன் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதிகள் உள்ளன

அருணகிரிநாதர்  திருப்புகழ் பாடல்

வெகு சுத்தமாய் பராமரிக்கப்படுகிறது

சிவன் சன்னதி

இடும்பன், அருணகிரிநாதர், சிவன் சன்னதிகள் 
மரத்தடியில் நாகர் 
நுழைவு வாயில்
கோவிலின் முன்புறம் அழகிய சிறு தேர்
ஊரின் அழகிய தோற்றம்

கோவிலுக்கு கொடைக்கானலில் இருந்து பேரூந்து வசதி உண்டு. 

வாழ்க வளமுடன். 
------------------

20 கருத்துகள்:

 1. ஏற்கனவே ஒரு முறை கொடைக்கானல் சென்றபோது வாய்ப்பு கிடைக்கவில்லை... அடுத்த முறை போகும்போது தரிசிக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 2. நீண்ட நாட்களுக்குப் பின்னான பதிவு. அழகிய படங்களுடன் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. நீண்ட நாட்களுக்குப் பின் அழகிய படங்களுடன் இனிய பதிவு..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 4. அப்பகுதிக்குச் செல்லும்போது இக்கோயிலுக்குச் செல்ல முயற்சிப்பேன். நல்ல தரிசனம். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. குறிஞ்சி ஆண்டவர் கோயில் சென்றதுண்டு... அடுத்த முறை கொடைக்கானல் செல்லும் போது இந்தக் கோயிலுக்கு சென்று வர வேண்டும்... நன்றி...

  மீண்டும் வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி... தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன்.
  வாய்ப்பு கிடைக்கும் போது தரிசித்து வாருங்கள் அழகிய முருகன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  நான்கு மாதங்களுக்கு பின் பதிவு எழுதுகிறேன்.
  தொடர்ந்து எழுதுகிறேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி. வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 9. எம் பெருமான் முருகனை தரிசித்த மகிழ்ச்சி அம்மா...
  அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் துரைசெல்வராஜூ சார் , வாழ்கவளமுடன்.
  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  நாங்களும் இந்த முறைதான் இந்த பூம்பாறை முருகன் கோவில் போனோம்.முன்பு எல்லாம் போன போது குறிஞ்சி ஆண்டவர் கோவில் மட்டும் தான் பார்த்து இருக்கிறோம்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன் , வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. புதிய கோயில் அறிமுகம். அதுவும் மலைக் கோயில்...அழகாக இருக்கிறது. புகைப்படங்கள் ரொம்ப அழகாக இருக்கிறது. அதுவும் ஊரின் புகைப்படம் அழகோ அழகு....

  தொடருங்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், புகைப்படங்களை ரசித்தமைக்கு , நன்றி.
  தொடர்கிறேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. தளிர் சுரேஷ்:-


  அருமையான ஓர் திருக்கோயிலை அழகுற கண் முன்னே நிறுத்திய பதிவு! படங்கள் அழகு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்கவளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. இதுவரை அறிந்திராத கோயில் பற்றி அறிந்தேன். இயற்கை வளம் சூழ்ந்திருக்கும் அழகும் சுத்தத்துடன் பராமரிக்கப்படும் விதமும் கோயிலின் அழகுக்கு அழகூட்டுகின்றன. பகிர்வுக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு