வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலப்பயணம். பகுதி-4



                 

                             உத்தரகாசி
                            (UTTARKASHI)

உத்தரகாசி நகரம்


இவ்வூர் பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
இங்கு உத்தரகாசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.



காசி விஸ்வநாதர் கோயில்

அழகான கோயில். 
தான்தோன்றி  நந்தி
சிவன் சந்நிதி அருகில் சுயம்பு நந்தி தேவர் உருவம் உள்ளது.
மூலஸ்தானத்தில் சிவலிங்கம் சற்று சாய்ந்தாற் போல் உள்ளது. 
சிவலிங்கமும் சுயம்பு .
அருள்மிகு விஸ்வநாதர்

போட்டோ எடுப்பதற்கு அனுமதி உண்டு போலும். எல்லோரும் எடுததுக கொண்டிருந்தார்கள் . நாங்களும் போட்டோ எடுத்தோம். 


இங்கு சிவலிங்கத்துக்கு ஊமத்தம்பூவை வைத்து வழிபடுகிறார்கள். ஊமத்தம்பூவை ப்ரசாதத் தட்டில் வைத்து கடைகளில் விற்கிறார்கள்

சிவலிங்கத்தருகே பார்வதிக்கு திருவுருவச்சிலை உள்ளது. ஆனால் இங்குள்ள பார்வதியை விசாலாட்சி என்று கூறுவதில்லை. பார்வதி என்றே கூறுகிறார்கள்.

அருள்மிகு பார்வதிதேவி
 நுழைவாயிலில் படிக்கட்டுக்கள் உள்ளன. மேலே மணிகள் கட்டப்பட்டுள்ளன. பார்வதி தேவிக்கு பக்கத்தில் உள்ள நுழைவாயில் வழியாக இறங்கினால் இங்குள்ள அரசமரத்தில் நூல் சுற்றப்பட்டுள்ளது. 2 வாழை மரங்கள் பக்தர்கள் சுற்றிவரும்படியாக இருந்தது அதிலும் சிவப்பு கயிறுகள் சுத்தி இருந்தார்கள். 
நூல் சுற்றப் பட்ட இரண்டு வாழை மரம்

கருவறையும் விமானமும்



சக்தி கோயில்
இச்சந்நிதிக்கு எதிரே சக்தி கோயில் உள்ளது. இக் கோயிலில் 8 மீட்டர் உயரமுள்ள பித்தளையினாலாகிய ஒரு பெரிய சூலாயுதம் உள்ளது. இது சக்தி ஸ்தம்பம் எனப்படுகிறது. அதன் அருகில் கிழே ஒரு அம்மன், மயிலுடன் கூடிய முருகன், காளி உருவச்சிலைகள் உள்ளன.

மழு

திரிசூலம்


 இவை பற்றி அங்குள்ள பூசாரி இந்தி மொழியில் கூறினார். எங்களுக்கு அது புரியவில்லை. அவர் ஆரத்தி காட்டும்போது பக்தியோடு பக்தர்கள் தொட்டுப் பார்த்து வணங்கினார்கள்.  இதில் கை வைக்கும்போது அதிர்வுகளை உணரலாம் என்றனர். 

. நாங்கள் கோயிலின் வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். கிழக்கு வாயில் அருகில் பிள்ளையார் சந்நிதிகள் இரண்டு உள்ளன. அதிலும் சிவப்பு நூல் சுத்தி இருக்கிறது. அருகில் மார்க்கண்டேயருக்கு ஒரு சந்நிதி உள்ளது. கோயிலின் பாதைகளில் சாதுக்கள் பலர் பிச்சை பெற்ற வண்ணம் இருந்தனர்.




அனுமன் கோயில்



அனுமன் கோயில்

கோயிலின் தென்புறத்தில் ஒரு அனுமன் கோயில் உள்ளது. அங்கு ஒரு உயரமான ஒரு கொடிக்கம்பம் போன்ற கம்பம் உள்ளது. அதில் கீழேயிருந்து மேலே வரை சிவப்புத் துணிகளில் வைத்துக் கட்டப்பட்ட தேங்காய்கள் காணப்படுகின்றன. பக்தர்கள் வேண்டுதலுக்காக அவற்றைக் கட்டியிருக்கிறார்களாம்.. 
தேங்காய் முடிச்சுகள்
இங்கு இராமன் ,லக்ஷ்மணன், சீதை உருவச்சிலைகள் உள்ளன.
ஒரு சிவன் கோயில்

இக்கோயிலுக்கு அருகில் இன்னொரு சிவன் கோயில் இருந்தது. அங்கும் சென்று வழிபட்டோம். 


புராதன பரசுராமர் கோயில்
பரசுராமர் கோயில் ஒன்றும் இங்கு தனியாக உள்ளது. இது மிகவும் புராதனமானது என்றும் பரசுராமருக்கு உலகிலேயே இரண்டு கோயில்கள் உண்டு ,அவற்றில் இது ஒன்று என்றும் கூறினார்கள். பஞ்சபாண்டவருக்கு சந்நிதிகள் உள்ளன.

பின்னர் விடுதிக்குத் திரும்பினோம்.
மறுநாள் கங்கோத்ரி சென்றோம்.அது பற்றி அடுத்த பதிவில்.

(தொடரும்)

34 கருத்துகள்:

  1. படமும், பதிவும் மிகவும் அருமை... தொடருங்கள்... தொடர்கிறோம்... நன்றி... (TM 1)

    பதிலளிநீக்கு
  2. புனிதப்பயணம் சிறப்பாக போய்க்கொண்டு இருக்கு படங்களும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஒரு சுற்றுலா சென்ற உணர்வு .. தொடரரட்டும் ........

    பதிலளிநீக்கு
  4. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு ஆன்மீக பயணத்தில் எங்களையும் அழைத்துச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது மிகவும் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  6. வாங்க ல்க்ஷ்மி அக்கா, உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ராஜபாட்டை “-ராஜா, சுற்றுலா சென்ற உணர்வு ஏற்பட்டதா!
    மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க “என் ராஜபாட்டை”-ராஜா, உங்கள் பதிவைப்பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க இந்திரா, நீங்களும் எங்களுடன் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. Piramandamana kovil pola irukku. Padankal anaithum arumai. Pathivu pakthimayam

    பதிலளிநீக்கு
  11. சிவப்புத் துணிகளில் வைத்துக் கட்டப்பட்ட தேங்காய்கள் காணப்படுகின்றன. பக்தர்கள் வேண்டுதலுக்காக அவற்றைக் கட்டியிருக்கிறார்களாம்..

    அருமையான புனிதப்பயணப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  12. அழகான படங்களுடன் அருமையான பதிவு. தொடரட்டும். பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk

    பதிலளிநீக்கு
  13. வாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் மற்றும் விளக்கங்கள் அருமையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  15. வாழை மரத்தில் நூல் சுற்றி வழிபடுவது, திருமண வரம் வேண்டி என நினைக்கிறேன். விரிவான பதிவு.

    பதிலளிநீக்கு
  16. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க வை.கோ, உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க சந்திரவம்சம், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    திருமணம் நிறைவேற வாழைக்கு நூல் சுற்றி வழிபடுவார்கள் நானும் கேள்விப் பட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  20. வாங்க சுரேஷ், உங்கள் முத முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  21. கோயிலுக்குப் போகும் பாதை பயம் தருவதாக இருக்கிறதுடொலியிலும் குதிரைகளிலும் பயணம் என்று திகிலாயிருக்கிறது என்று கேள்விப்படும்போது அப்பேர்ப்பட்ட இடத்தில் அழகிய கோயில்கள் உருவாகி இருப்பது ஆச்சரியமாக இல்லையா.?

    பதிலளிநீக்கு
  22. வாங்க பாலசுப்பிரமணியம் சார், நானும் அப்படித்தான் நினைத்தேன். எந்த வசதிகளும் அந்தகாலத்தில் இல்லாமலே மக்கள் கஷ்டப்பட்டு கோயில்களை தரிசித்து வந்து இருக்கிறார்கள். அது தான் ஆச்சரியம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  23. சிறந்த புகைப்படகலைஞர்கள் கூட
    இத்தனை சிறப்பாக புகைப்படங்கள் தரவோ
    பயண்க கட்டுரை விற்பன்னர்கள் கூட
    இத்தனை சிறப்பாக அழகாக காட்சி விளக்கம்
    அளிக்கவோ முடியாது
    குடும்பத்துடன் தங்கள் பதிவுகளை
    கண்டு மகிழ்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. வாங்க ரமணி சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி. குடும்பத்துடன் பதிவை படித்து வருவது மனதுக்கு மகிச்சியாக இருக்கிறது.

    உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. உங்களுடனேயே அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்து விட்டீர்கள். அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  26. உத்தரகாசி விஸ்வநாதர் தர்சனம் கிடைக்கப் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
  27. வாங்க ராமலக்ஷ்மி, தரிசனம் செய்தீர்களா நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க மாதேவி உத்தரகாசி பார்த்து விட்டீர்களா! மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. இனிய படங்கள். அருமையான பயணக்குறிப்புகள். அருமை. மூன்று வாரங்களுக்கு முன் சென்ற காசி நினைவில்....

    பதிலளிநீக்கு
  30. நேற்று தான் டிஸ்கவரி சேனலில் இந்த காசி பற்றிய முழு விபரங்களை பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  31. //இது சக்தி ஸ்தம்பம் எனப்படுகிறது. அதன் அருகில் கிழே ஒரு அம்மன், மயிலுடன் கூடிய முருகன், காளி உருவச்சிலைகள் உள்ளன.//

    மனமே முருகனின் மயில் வாகனம்!

    அரிய தகவல்.

    பதிலளிநீக்கு
  32. ஹிந்தியில் அவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள் கோமதி அம்மா........


    அன்னை இங்கே பிரம்மாண்ட 19.5 அடி உயர திரிசூலமாக வணங்கபப்டுகின்றாள். இந்த திரிசூலம் விஸ்வநாதர் சன்னதிக்கு நேரெதிராக அமைந்துள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்த போது இந்த திரிசூலம் பய்ன்படுத்தப்படது. இந்த யுத்ததில் திரிசுலம், பரசு, சுதர்சனம் ஆகிய மூன்று ஆயுதங்களின் சக்தி உள்ளது எனவே தேவர்கள் வெற்றி பெற்ற பின் இந்த திரி சூலத்தை இங்கே ஸ்தாபிதம் செய்தனர். அன்றிலிருந்து
    இத்திரிசூலம் அம்மனாக வணங்கப்படுகின்றாள். நாம் கையால் இந்த சூலத்தை தொட்டால் அது ஆடும் ஆகவே இதன் அடியைக் காண பிரிட்டிஷார்கள் முயற்சி செய்தார்களாம் ஆயினும் இந்த திரிசூலத்தின் அடியை காண முடியவில்லையாம். பிரம்மாண்ட மூன்று தலைகளுடன் பரசு ஒரு பக்கத்துடன் அருமையாக அருட்காட்சி தருகின்றது திரிசூலம்.

    பதிலளிநீக்கு
  33. வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்கவளமுடன்.
    திருக்கேதாரத் தலப்பயணம் படித்து திரிசூலம் பற்றிய அரிய செய்தி சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.
    இந்தியில் சொன்னதால் புரியாமல் இருந்தது, நீங்கள் அழகாய் சொல்லிவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு