சனி, 18 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி-5




                                    பகுதி-5

                                  கங்கோத்ரி
13.05.2012
இன்று காலை 4.20 மணிக்குப் புறப்பட்டோம். முக்கிய லக்கேஜ்களை உத்தரகாசி அறையிலே வைத்துவிட்டு குறைவான பொருட்களுடன் சென்றோம். பேருந்து செல்லும் வழியில் மலைக்காட்சிகள் அருமை. அச்சம் தருவதும் கூட . 
கங்கைப்பள்ளத்தாக்கு


இயற்கை அழகு
சூரியோதயம்
யமுனோத்திரிக்கு சொல்லப்பட்டது போலவே மே, ஜுன், செப்டம்பர். அக்டோபர் மாதங்கள் கங்கோத்ரி செல்ல உகந்ததாம். அக்ஷ்ய திரிதியை முதல் தீபாவளி வரை கோயில் திறந்திருக்கும்

பேருந்து கங்கோத்ரி வரை செல்லுகிறது. கோயில் வருவதற்கு   முன்பாக ஒரு கி. மீ தூரத்திலேயே பேருந்தை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நடக்கவேண்டும். நடக்க  முடியாதவர்கள், மிக வயதானவர்கள் மட்டும்  டோலியில் செல்லலாம். பால்கியும் இருக்கிறது.(ஒருவரை கூடையில் முதுகில் தூக்குவது).  யமுனோத்திரியில் நிறைய டோலி. குதிரைகள் இருக்கும் இங்கு அப்படி  இல்லை.

கங்கோத்ரி நுழைவாயில்
கங்கோத்ரியில் நிறைய கடைகளும் ,உணவு விடுதிகளும் உள்ளன. தென்னிந்திய உணவுகள் கிடைக்கின்றன. தமிழில் நம்மை அழைக்கிறார்கள்.

கங்காதேவி கோயில்
கியூவரிசை


விமானம்
கோயிலில் நிறைய கூட்டம். பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் கோயிலுக்குள் சென்று விட்டோம். உள்ளே  ஒரு சில விநாடிகளே நின்று தரிசிக்க அனுமதிக்கிறார்கள். வெளியே இழுத்து விட்டுவிடுகிறார்கள்.  திருப்பதி தேவலாம் என்றாகிவிட்டது. கங்கையம்மன் உருவச்சிலை பெரியதாக அழகாக உள்ளது. இரண்டு நொடிகளில் தரிசித்துக்கொள்ள வேண்டும். நம் நெற்றியில் குங்கும பொட்டை வைத்து, போங்க  என்கிறார்கள்.  பிரகாரத்தின்  சுவர்களில் ஸ்டிக்கர் பொட்டுக்களை ஒட்டி வைத்து இருக்கிறார்கள்.

500 ரூபாய் கொடுத்து விசேஷபூசை டிக்கட் வாங்கினால் கியூவில் நிற்காமல் உள்ளே போகலாம் என்று சிலர் கூறினார்கள். அது பற்றி விசாரிக்கவில்லை. 

பாராமிலிட்டரிக்காரர்கள் மற்றும் வாலண்டியர்கள் நிறைய பேர் ஒழுங்கு படுத்தியவண்ணம் இருக்கிறார்கள்.

கோயிலுக்கு முன்னால் கங்கை பூலோகத்திற்கு இறங்கி வரும் புராணக்கதையைக் கூறும் பெரிய சிற்பங்கள் உள்ளன. சிவபெருமான் கங்கையைத் தலையில் தாங்கும் காட்சி தத்ரூபமாகக் காணப்படுகிறது.



யாகசாலை
கோயிலுக்கு வடக்கே கௌமுக் என்ற தலத்திற்குச் செல்லும் பாதை அமைந்துள்ளது. கெளமுக் செல்ல அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற வேண்டுமாம்.
ஸ்நானக் கட்டம் செல்லும் வழி


கங்கையாறு

கங்கையில் நிறைய பேர் நீராடுகின்றார்கள். கங்கை உற்பத்தி ஆகும் இடம் இன்னும் மேலே இருக்கவேண்டும்.


கங்கை உற்பத்தியாகும் மலைத்தொடர்கள்
ஹரித்துவாரில் இருப்பதைவிட இங்கு கங்கைநீர் ஜில் என்று இருககிறது. இன்னும் சிலநாட்கள் பயணம் செய்து எங்களின் சமயக்குறிக்கோளான திருக்கேதாரம், பத்ரிநாத் பயணம் நல்லபடியாக முடியவேண்டுமே. அதனால் நாங்கள் நீராடாமல் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டோம். கங்கா மாதாவிற்கு என்று  சட்டைதுணி, வளையல், மஞ்சள், குங்குமம் எல்லாம் தண்ணீரில் விடச்சொன்னார்கள்,
முதலில் போய் வந்தவர்கள்.  இதை எல்லாம் போட்டு  நீரை அசுத்தம் செய்யவேண்டுமா என்று நினைத்து அங்கு வைத்து வணங்கி விட்டு ஒரு அம்மா அங்கு குளித்துக் கொண்டு இருந்தவர்களிடம் கொடுத்தேன் அவர்கள் எனக்கு வேண்டாம் கங்கா மாதாவிற்கு கொடு என்று சொல்லி அதை கங்கை ஆற்றில் விட்டு விட்டார்கள்.

கோயிலின் உள்ளே சிவன் சந்நிதி உள்ளது. கங்கையிலிருந்து பக்தர்கள் சிறிய பாத்திரங்களில் கங்கை நீரை  எடுத்துவந்து இங்கு சுவாமிக்கு அவர்களே அபிஷேகம் செய்கிறார்கள். நாங்களும் செய்தோம்.


இந்த நீரை ராமேஸ்வரத்திற்கு எடுத்து சென்று அங்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்களாம்.
பனிமலை
இயற்கைக்காட்சி


நிலச்சரிவு

அங்கு கடைகளில் எல்லோருக்கும் கொடுக்க, படங்கள் வாங்கினோம்.
நாற்படைவீடு யாத்திரை என்று தமிழில் சிடி விற்கிறார்கள்.
உத்திரகண்ட் மாநிலத்தில் நான்கு புண்ய தாமங்கள் என்றும் சிடி விற்கிறார்கள்.
சாரோ தாம், யாத்ரீ மஹாத்மீயம் என்று சிறு புத்தகம் விற்கிறார்கள் 
நம் மக்கள் நிறையபேர் வாங்கினார்கள். தீர்த்தம் எடுத்துப் போக சிறிய கேனிலிருந்து பெரியகேன் வரை எல்லாம் கிடைக்கிறது.

பின்னர் பேருந்தில் ஏறி உத்தரகாசி திரும்பினோம். வழியில் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு அவை சரிசெய்யப்பட்டிருந்தன.
காசி விசுவநாத்ர் கோயிலுக்கு மீண்டும் சென்று தரிசித்தோம்.
மறுநாள் திருக்கேதாரம் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் காணலாம்.




28 கருத்துகள்:

  1. கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்... மிகவும் அருமை... தொடர்கிறோம் நன்றி...(TM 1)

    பதிலளிநீக்கு
  2. விரிவான பகிர்வு. படங்களைப் பெரிதாகக் காட்டியிருப்பது இன்னும் அருமை. அரிய இயற்கைக் காட்சிகள். அழகு. கூட்டம் காரணமாக சில நொடிகளே அனுமதியென்றாலும் வெளியேறக் கேட்டுக் கொள்வதை விட்டு ’இழுத்து விடுவது’ பல இடங்களில் வாடிக்கையாகி வருகிறது.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

  3. இழுத்துவிடுமளவுக்கு அவ்வளவு கூட்டமா. ?சில இடங்களுக்கு சக்தியை சேம்க்கும் பொருட்டு போகவில்லை என்றிருக்கிறீர்கள். இன்னொரு முறை பார்க்கலாம் என்று கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா. இம்மாதிரி பயணங்கள் மேற்கொள்ளும்போது சக்தி தானாக வரும். ரிஷிகேஷ் வரைமட்டும் சென்ற அனுபவம் இருக்கிறது. கங்கோத்திரி யமுனோத்திரி, கேதார்நாத் எல்லாம் செல்லக் கொடுத்து வைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  4. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாங்க ராமலக்ஷ்மி, படம் பெரிதாக காட்டி இருப்பது நன்றாக இருக்கா! மகிழ்ச்சி. கூட்டம் வாசலிருந்து ஆரம்பித்து கோவிலை சுற்றிக் கொண்டு வருகிறது. நீங்கள் சொல்வது போல் எல்லா கோவில்களிலும் இழுத்து விடுவது வாடிக்கையாகத்தான் போய் விட்டது.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. வாங்க பாலசுப்பிரமணியம் சார், நம் ஊர் அளவு கூட்டம் இல்லை, இருந்தாலும் அவர்கள் அப்படி எல்லோரையும் தள்ளி விடுகிறார்கள்.

    இந்த மாதிரி பயணங்களில் சக்தி தானக வரும் நிச்சியமாய் நீங்கள் சொன்னமாதிரி.

    ஆனால் முன்பு போய் வந்த உறவினர் என் கணவரிடம் கேதார் நாத், பதிரி நாத் தான் முக்கியம் மற்ற வழியில் உள்ள கோவில்கள் எல்லாம் பார்த்து சிரமபடுத்திக் கொள்ள வேண்டாம் என அறிவுரை கூறி விட்டார்கள். பாடல் பெற்ற தலம், திருகேதாரம், திவ்ய தேசம் பத்ரிநாத் அது பார்த்து முடித்தபின் கூட்டி சென்ற கோவில்களை கவலை இல்லாமல் பார்த்தோம்.

    எங்களுடன் வந்தவர்கள் நிறைய பேர் பின்னால் கஷ்டப்பட்டு விட்டார்கள்.


    இப்போதுதான் இந்த கோவில்களைப் பார்க்க நல்ல நேரம் போய் வரலாமே நீங்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பதிவுகளை விடாமல் படித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமையானதோர் புனிதப் பயணம்.

    முதல் படம் ரொம்ப அழகாருக்கு..

    பதிலளிநீக்கு
  8. வாங்க அமைதிச்சாரல், முதல் படம் அழகா இருக்கா மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க கோபிநாத், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. உங்களை வெகு நாளாய் காணவில்லையே வேலை அதிகமோ!

    பதிலளிநீக்கு
  10. வாங்க பழனி கந்தசாமி சார், உங்கள் தொடர் வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இன்றுவிடுமுறை நாள்
    குடும்பத்தில் எல்லோரும் காலையில் முதலில் இருந்து
    தங்கள் யாத்திரையைக் கண்டு ரசித்தோம்
    எல்லோருக்கும் பரம திருப்தி
    இந்த ஸ்தலங்களுக்கு செல்ல நினைப்பவர்கள்
    தங்கள் பதிவை படித்துவிட்டுச் சென்றால் இன்னும்
    சிறப்பாக பயணத்தை அனுபவிக்கமுடியும் என நினைக்கிறேன்
    பயணப் பதிவின் முடிவில் இதை இதை செய்திருக்கலாம்
    இவைகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது போன்ற
    பொதுக் குறிப்புகள் கொடுத்தால் இன்னும்
    பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனதுஅபிப்பிராயம்
    மனத்தை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வாங்க ரமணி சார்,குடும்பத்தில் எல்லோரும் முதலிருந்து பார்த்து படித்தது அறிந்து மகிழ்ச்சி.

    திருக்கயிலை யாத்திரை தொடர் பதிவு எழுதி இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள். அதில் நீங்கள் சொன்னது போல் குறிப்புகள் கொடுத்து இருப்பேன்.
    .
    பயணப் பதிவின் முடிவில் உங்கள் ஆலோசனைப்படி குறிப்புகளை கொடுக்கிறேன்.

    உங்கள் அப்பிராயத்திற்கு நன்றி.
    உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    .

    பதிலளிநீக்கு
  13. ரமணி சார், திருக்கயிலை யாத்திரை
    6 பகுதியாக எழிதி இருக்கிறேன்.

    http://mathysblog.blogspot.com/2012/01/6_15.html

    உங்கள் தமிழ்மண ஓட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. படங்களை பெரிதாக தெளிவாக சேர்த்திருப்பது சிறப்பாக இருக்கு. வர்ணனைகளும் அபாரமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. வாங்க லக்ஷ்மி அக்கா. உங்கள் வரவுக்கும் , பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. படங்களும் இடங்களும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  17. அழகிய படங்கள்;
    அற்புத விளக்கங்கள்.

    விறுவிறுப்பான இந்தப் பயணப்பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    vgk

    பதிலளிநீக்கு
  18. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஆசியா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. படங்களும் பயண அனுபவங்களும் அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    பதிலளிநீக்கு
  21. வாங்க சுரேஷ், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    உங்கள் வலைத்தளம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. கங்கோத்ரியின் அழகு அப்படியே எம்மை எல்லாம் கட்டிப் போட்டு விடுகின்றது.

    படங்களைப் பார்த்து மனம் லயித்து நிற்கின்றோம்.

    தர்சனம் ரொம்பவே பிடித்தது. மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க மாதேவி, கங்கோத்ரியின் அழகு நம்மை கட்டிதான் போடும் அவ்வளவு அழகு.
    நனறி மாதேவி.

    பதிலளிநீக்கு
  24. கங்கோத்ரி அழகு கொஞ்சுகிறது. ஒவ்வொரு இடங்கள் பற்றியும் சொல்லிச் செல்லும் விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  25. கங்கை பள்ளதாக்குப் படமும், கங்கோத்திரியில் கங்கையாற்றின் தோற்றமும் மனத்தில் பதிந்து விட்டன.
    புகைப்படங்கள், அங்குப் போய்ப் பார்த்த உணர்வை ஏற்படுத்துவது தான் அவற்றின் சிறப்பு.

    மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு