பகுதி-9
தேவப்பிரயாகை
DEV PRAYAG
19.05.2012
இன்று காலை 6.30 மணிக்கு நக்ராசு என்னும் இடத்தில் இருந்து புறப்பட்டோம். 10.30
மணியளவில் தேவப்பிரயாகை வந்தோம்.
 |
தேவப்பிரயாகையில் அலக்நந்தா ஆறு |
 |
தேவப்பிரயாகை நகரம் |
ஒருகரையில் இறங்கி கோயிலை வணங்கி பாலம் கடந்து
ஏறி மறுபுறம் வந்தோம். பஸ் அங்கு எங்களை ஏற்றிக் கொண்டது.
கண்டங்கடி நகர்
KANTANKATINAGAR
தேவப்பிரயாகையில் உள்ள கோயிலை ரகுநாத்ஜி மந்திர் என்று அழைக்கிறார்கள். இது பெரியாழ்வாரால் பாடப்பெற்ற கண்டங்கடிநகர் என்னும் திவ்ய தேசமாகும்.
கோயிலுக்கு இறங்கிச்செல்ல நிறைய படிகள் உள்ளன. மூலஸ்தானத்தில் பெரிய
உருவத்தில் பெருமாள் .பெரிய பெரிய கண்கள். சந்நிதி திருமுன்பு
திவ்யபிரபந்தப்பாடல்கள் எழுதப்பட்டுளளன. அந்த பாடலை படம் பிடிக்க கூடாது என்று
சொல்லி விட்டார் பூஜாரி. திருக்கோயிலைச்
சுற்றி வலம் வந்தோம். பிரகாரத்தில் சந்நிதிகள் உள்ளன. அனுமனுக்கு சந்நிதி உள்ளது.
ராமன் அமர்ந்த இடம் என்ற ஓர் இடம் உள்ளது. அங்கு ஒரு இருக்கை உள்ளது. ஒரு பெரிய
மரத்தின் கீழ் இவ்விடம் உள்ளது.
 |
கோயிலின் முன்னர் |
 |
சந்நிதி நுழைவாயில் |
வடதிசைமதுரை சாளக்கிராமம் வைகுந்தம்துவரை அயோத்தி
இடமுடைவதரி யிடவகையுடைய எம்புருடோத்தமன் இருக்கை
தடவரையதிரத் தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக் கடுத்திழிகங்கைக் கண்டமெனும்கடி நகரே
என்று பெரியாழ்வார் இத்தலத்து இறைவனைப்பாடியுள்ளார்.
 |
விமானம் |
 |
இராமன் அமர்ந்த இடம் |
 |
கோயில் திறந்திருக்கும் நேரம் -குளிர்காலம்:7-12,5 -9 வெயில் காலம்-6 -12,4 -8 |
 |
கோயிலுக்குச் செல்லப் படிகள் |
 |
நகரின் நடுவே |
அலக்நந்தா ஆற்றுடன், பாகீரதி ஆறு சேரும் இடம் தேவப்பிரயாகை. இந்த இடத்திலிருந்து கங்கையாறு என்ற பெயரைப் பெறுகிறது. சங்கமத்திற்கு சிறிது தூரம் நடந்து
சென்று பிறகு நிறைய படிகள் இறங்கி காணவேண்டும்.
 |
சங்கமம் |
அலக்நந்தா பச்சை கலரிலும், பாகீரதி வேறு கலரிலும் நன்கு தெரியும். அங்கு
தட்டில் குங்குமத்தை வைத்துக் கொண்டு நம்மிடம் காசு வாங்குபவர்கள் ஆண்கள், பெண்கள்
என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கு ஒரு கல்லில் அனுமன் பாதம் இருக்கிறது. அதற்கு
சிந்துரம் பூசி வைத்துக் கொண்டு நம்மிடம் காணிக்கை வாங்க ஒரு பூசாரி இருக்கிறார்.
 |
மறுகரையிலிருந்து தோற்றம் |
சனி பகவானுக்கு அங்கு தர்மராஜன் என்று பெயர் . எருமை வாகனத்தில் இருக்கும் அவரது
சிலையின் முன்பு, இருப்புச் சட்டியில் எண்ணெய்க்குள்
சில நாணயங்களை போட்டு வைத்துக் கொண்டு கறுப்பு வஸ்திரம் அணிந்து உட்கார்ந்து
கொண்டு காசு வசூல் செய்கிறார்கள்.
பாலம் கடந்து நம் பஸ்ஸை அடையும் இடத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க
நடந்து வருபவரின் களைப்பைப் போக்க சர்பத் ம்ற்றும், குளிர் பானங்கள், வெள்ளரிக்காய்
போன்றவைகளை விற்கிறார்கள். நாங்களும் தாகசாந்தி செய்து கொண்டோம்.
.பின்னர் பஸ் ஏறி மாலை 3 மணியளவில் ரிஷிகேசம் புறப்பட்டோம். வழியில் ஒரு விடுதியில் சாப்பிட்டோம். அந்த விடுதியருகே கண்டகாட்சி! உருண்டு விழுந்திருந்த காரும் லாரியும்!
மாலையில் ரிஷிகேஷ் அடைந்தோம். அங்கு ஒரு இடத்தில்
பஸ்ஸை நிறுத்தி விட்டு சிவானந்தா ஆசிரமம் சென்றோம்.
 |
சிவானந்த ஆசிரமத்தைப் பற்றி விளக்குகிறார் அங்குள்ள கைடு(நீலச்சட்டை) |
 |
வழிபாட்டு நேரம் |
 |
விஸ்வநாதர் சந்நிதி |
 |
சுவாமி சிவானந்தரின் சமாதி |
 |
சமாதி |
 |
சுவாமி சிவானந்தரின் திருவடிகள் |
 |
ராம் ஜூலா |
சிவன் கோயில்,
நூலகம், புத்தகவிற்பனை நிலையம், சிவானந்தர் சமாதி ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.
கங்கையின் வடகரையிலிருந்து ராம் ஜுலா வழியாக நடந்து தென்கரை வந்து சேர்ந்தோம்.
 |
ராம் ஜூலாவில் போக்குவரத்து நெரிசல் |
 |
சூரிய அஸ்தமன வேளையில் கங்கை |
 |
படகு சவாரி |
அங்கு கீதாசிரமம், சொர்க்காசிரமம் பார்த்தோம். படகில் ஏறி மீண்டும் வடகரை வந்தோம்.
மாலை 7 மணியளவில் ஹரித்வார் விடுதி அடைந்தோம். அங்கு இரவு தங்கினோம். சார்தம் யாத்திரை முடிவுற்றது
எனலாம்.
20.05.2012
இன்று காலை 7 மணிக்கு ஹரித்துவாரிலிருந்து இரயில் மூலம் டில்லி புறப்பட்டோம். .எங்களுடன் வந்தவர்களிடம் ரயில் ஏறும் முன்பு விடை பெற்றுக் கொண்டோம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பெட்டி. பார்த்துக் கொள்ள முடியவில்லை.
 |
ஹரித்வார் ரயில் நிலயத்தில் |
 |
இனி ஊருக்குத் திரும்ப வேண்டியது தான் |
திரும்பிவரும் போது போகும்போது இருந்ததை விட மிக கஷ்டமான பயணம். எங்களை அழைத்து
சென்றவர் தனி பஸ் வசதி செய்து ஹ்ரித்வாரிலிருந்து அழைத்து சென்று இருக்கலாம்,
அல்லது எல்லோருக்கும் ஏஸி கோச்சில் வசதியாக அழைத்து சென்று இருக்கலாம். ரயிலில் முன்
பதிவு செய்து அழைத்து போனாலும் முன் பதிவு செய்யாதவர்கள் வந்து அமர்ந்து கொண்டு
நமக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்பது கஷ்டமாய் உள்ளது. நான்கு இளம் வயது பையன்கள்
எங்களுக்கு உதவி செய்து உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
டெல்லியில்
இறங்கும் போது மிகவும் கஷ்டம் . நாம் இறங்குவதற்குள் ஏறுகிறார்கள். ரயில் சிறிது
நேரம் தான் நிற்கும். அந்த பைய்ன்கள் ’நீங்கள் இறங்குங்கள் சாமான்களை எடுத்து
தருகிறோம்’ என்று எடுத்துக் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி சொன்னோம்.
சில கஷ்டங்கள்
இருந்தாலும் சார்தம் யாத்திரை திருவருள் துணையோடு இனிது முடிந்தது.
டில்லியில் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள்
21.05.2012 அன்று காலை 7 மணியளவில் டில்லியிலிருநது விமானம் மூலம்
தமிழ்நாடு திரும்பினோம்.
திருக்கேதாரத் தலப்பயணக்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.
-----------------------