தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின் வெட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. இணையதளத்தில் இணைய முடியவில்லை. இன்வெர்ட்டருக்கோ, சார்ஜ் ஆகும் அளவு மின்சாரம் இல்லை. இப்படி இருக்கும் போது நமக்கு கை கொடுப்பது பாட்டரி போடும்வசதி உள்ள ரேடியோ தான்.
நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் , முன்பு நாம் தெளிவாக கேட்டுக்கொண்டு இருந்த மத்திய அலை வரிசை, சிற்றலை வரிசையில் வானொலி நிகழ்ச்சிகளை சரிவர கேட்க முடியாமல் இருந்தது. பண்பலையில் மட்டுமே கேட்க முடிந்தது. இப்போது மின்சாரத் தடையால் மற்ற மின்சாதனங்கள் இயங்காததால் மத்திய அலை வரிசையை நன்கு கேட்க முடிகிறது. மின் பற்றாக்குறையால் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இது !
முன்பெல்லாம் ,வானொலியில் காலை ‘வந்தே மாதரம்’, ‘மங்கள இசை’, ‘பக்தி பாடல்’, ‘நேயர் விருப்பம்’, சினிமா பாடல், நாடகம், ‘இசை விருந்து’ என்று, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த நாளும் இப்போது மீண்டும் வந்து விட்டது மின்சாரப் பற்றாக்குறையால.
வெகு நாட்களுக்குப் பிறகு டிரான்ஸிஸ்டருக்கு சென்ற வெள்ளிக்கிழமை யன்று பேட்டரி போட்டு காலை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தேன்.
குறள் அமுதம், சான்றோர் சிந்தனை, மங்கள இசை ஆங்கிலத்தில் செய்திகள் முடிந்து பக்தி இசை தொடங்கியது. எனக்கு பிடித்த பாடல்கள் ‘முருகனுக்கு ஒருநாள் திருநாள் ‘ என்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே ! அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே! எல்லாம் கிடைக்குமே!’ என்ற பாடலும் ,பி. லீலாவின் ‘வரவேண்டும் எனது அரசே! அருணோதய ஒளி பிரகாசா!’ என்றபாடலும், ‘யா அல்லா!ஈடில்லா ஏகாந்தம் நீயே அல்லா! யார் இங்கே வேறே கதியே! மாமறையே போற்றும் நீதியே! நாடியே வேண்டினேன்’ என்று உருகி பாடினார் நாகூர் ஹனிபா. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு கொஞ்சம் நில்லு எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு , என்ற பாடலும் நாகூர் ஹனீபா பாடினார். இந்த பாடலும் மிக நன்றாக இருக்கும். எனக்கு தெரியாத இன்னொரு பாடகர் ‘இறை தூதர் நபியே! மறை தூதர் நபியே! ‘என்று பாடினார்.
எல்லா மதத்திற்கும் உள்ள பாடலை வானொலிதான் இன்றும் இணைத்துத் தந்துகொண்டு இருக்கிறது.
வானொலி நிலயம்.டில்லி
பாடல் முடிந்து ‘விவசாய நிகழ்ச்சி’, ‘நலம் நேரம்’ என்று டாக்டரின் ‘ஆலோசனை நேரம்’, மாநிலச் செய்திகள்:
அடுத்து ‘பாடும் பண்பலை’,அடுத்து ‘தகவல் நேரம்’,என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.
மீடியம் அலை வரிசையும் நன்கு கேட்பதால் அதில்
வெள்ளிக்கிழமை வைக்கும் ‘காந்திய சிந்தனை’யை கேட்க முடிகிறது. ‘வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ! ‘பாடலை இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் தேன்குரல் இழைய இழைய பாடிய பாடலைக் கேட்டு ரசித்தேன். சத்திய சோதனையிலிருந்து சிலபகுதிகளைப் படித்தார்கள். அன்று காந்தி மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற அதில் பயணித்து காசி சென்றதை காசி பயணம் என்ற தலைப்பில் எழுதியதைப் படித்தார்கள்.
வெள்ளிக்கிழமை அன்று மகளிர் சங்கத்தின் பல்சுவை நிகழ்ச்சி, வைத்தார்கள். கஸ்தூரிபாய் மகளிர்சங்கம் தொகுத்துஅளித்த பல்சுவை நிகழ்ச்சி. பாரதியார் பாட்டு, ஹோலி பண்டிகை பற்றிய செய்தி, நாடகம் முதலியவை இருந்தன. நாடகத்தில் கொடுக்கப் பட்ட சிறிது நேரத்தில் படிப்பினை ஊட்டும் கதை ஒன்றைச் சொல்லி விட்டார்கள். ஒரு பெண் காதலனை நம்பி வீட்டை விட்டு வந்து அவனால் கைவிடப் பட்டு, வீட்டுக்கு வந்தபோது, குடும்பமானத்தை வாங்கி விட்டாய் என்று புறக்கணிக்கும் பெற்றோர்..அபலையாகிய அவள் பிச்சை எடுக்கும் நிலை. பின்பு அவள் ,பணம் படைத்த நல்ல உள்ளம் படைத்த முதிய தம்பதிகளால் ஆதரிக்கப்பட்டு, அவர்கள் வீட்டில் தங்கி வேலை செய்துகொண்டு, தையல் கலை படித்து, தையல் கலையில் சிறந்து விளங்கி வாழ்வில் நலம் பெறுகிறாள். அந்தப் பெண்ணை ஆதரித்தவர்களின் குழந்தைகள் அயல் நாட்டில் இருக்கிறார்கள். பாசத்துக்கு ஏங்கிய அவர்கள் அந்த பெண்ணைத் தங்கள் மகள் போல் அன்பு செலுத்தி ஆதரிக்கிறார்கள். நாடகத்தைக் காட்சி காட்சியாய் விவரித்த போது மிக நன்றாய் இருந்த்து.
மீரா பஜன், சமையல் குறிப்பு, குழந்தைப் பாதுகாப்பு என்று பல நிகழ்ச்சிகள் இருந்தன. வெயிலில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வாராமல் பாதுகாப்பது, பரீட்சை நேரத்தில் குழந்தைகளை நன்கு சாப்பிட வைத்துச் சரியான நேரத்தில் தூங்கவைப்பது, சரியான நேரத்தில் படிக்கவைப்பது என்று நிறைய டிப்ஸ்கள் வழங்கி அசத்தி விட்டாட்கள்.
மகளிர் தின வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று. . அதில் கணினி சாதனையாளர் கே. புவனேஸ்வரி அவர்கள் பேசினார்கள். கணினியின் சேவை குறித்து பேசினார்.
“கண் தெரியாதவர்களும் கணினியை இயக்கி திருக்குறளை படிக்கலாம் ; தமிழில் எழுதுபவர்கள் நிறைய நல்ல கட்டுரைகள எழுதுகிறார்கள், அதைப் படிக்கலாம் ; குழந்தைகள் கணினியில் யாரோடு பேசுகிறார்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனமாய் பார்த்து அவர்களை வழி நடத்த வேண்டும். பெண்கள் ஐ.டி துறையில் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வேலையை மனபூர்வாமாக் செய்யவேண்டும்.அழுகை, கோபம் இரண்டையும் பெண்கள் விட வேண்டும், மென்மை தனமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று பெண்கள் முன்னேறுவதற்கான சில வழிகளைக் கூறினார்கள்.
மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி அரசின் தலமைச் செயலர் சத்தியவதி அவர்கள் ‘பெண்மையைப் போற்றுதும்’ என்ற தலைப்பில் பேசினார்கள்.
“பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும், வறுமை காரணமாய் சிசுக்கொலையை செய்கிறவர்களை விட செல்வந்தர்கள் தான் இந்த செயலை அதிகமாய் செய்கிறார்கள். கீழ் மட்டத்து மக்களை விட உயர் மட்டத்து மக்கள், படித்த பணக்காரர்கள் தான் பெண்சிசுக் கொலையைச் செய்கிறார்கள். இதற்கு உதராணம் பஞ்சாப் என்றார்கள். அங்கு அதிகமாய் பெண் சிசுக் கொலை நடை பெறுகிறது ” என்றார்கள்..
“பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாய் செயல் பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் கணவர், சுற்றம் சொல்படி நடக்க வேண்டி உள்ளது. அவர்கள் சுத்ந்திரமாய் செயல்பட வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
“பெண்கள் ஆண்களுக்கு சமமாய், ஐ.டி துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்யும் போது மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
அதற்கு ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும் ” என்றார்கள்
“ஆண்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இருபாலரும் மனமாற்றம் பெற வேண்டும். பெண்மை வாழ்க! என போற்றுவோம்” என்றார்கள்.
எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை இச்சமயத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன்
வானொலி நிகழ்ச்சிகள் பற்றி மேலும் பார்ப்போம்:
முன்பு எல்லாம் வியாழக்கிழமைகளில் நாடகம், ஞாயிறுகளில் சினிமா ஒலிச்சித்திரம் என்று வானொலியில் நிகழ்ச்சிகள் தருவார்கள்.
‘மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்.
நல்ல இசை கச்சேரிகள், ‘விரும்பிக் கேட்டவை’ என்ற சினிமா பாடல்கள் தொகுப்பு, ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’ வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி, சேர்ந்திசை, நிலைய வித்வான் களின் வாத்திய இசை, எல்லாமே மறக்க முடியாதவை.
வானொலியில் தர இருக்கும் நிகழ்ச்சிகளை ‘வானொலி’ என்ற பத்திரிகை மூலம் முன்னதாக அறிந்துகொள்ளலாம். அதை என் கணவர் வாங்குவார். நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கோட்டிட்டு வைத்து இருப்பார்கள் மறக்காமல் கேட்க.
‘இசைச்சாரலில்’ வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு கர்நாடக இசை கேட்கலாம். டிரான்ஸ்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் போது என் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது விட்டது. 1970-ஆம் ஆண்டு. நானும் என் அண்ணனும் ‘விவிதபாரதி’யில் போட்டி போட்டுக் கொண்டு இந்திப் பாடல், ‘தேன் கிண்ணம்’ கேட்டு மகிழ்ந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.கிரிக்கெட் நடக்கும் காலங்களில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
வானொலி என்றால் இலங்கை வானொலியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வர்த்தக ஒலிப்பரப்பை எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள். தமிழ்நாட்டில் ஒலிக்காத இடம் இருக்காது.
இலங்கை வானொலி என்றால் திரு. மயில்வாகனன் அவர்களை மறக்கமுடியாது என்று என் கணவர் கூறுவார்கள்.
நான் பிறந்த வருஷம் (1954), அவர் இலங்கை வானொலி நிலையத்திற்கு வேலைக்கு வந்து இருக்கிறார் !
இலங்கை வானொலியில் தேசிய ஒலிபரப்பில் சிவன் ராத்திரி சமயம், கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்வார்கள். கந்த சஷ்டி சமயம் சஷ்டி கவசம், ஒலிபரப்புவார்கள்.
அது ஒரு பொற்காலம் !
சென்னை, மதுரை, கோவை போன்ற நகரில் நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள் கேட்கிறது. எங்கள் மயிலாடுதுறையில் சில எஃப் எம் கள்தான் கேட்கும். காரைக்கால் பண்பலை நன்கு கேட்கும் அதில் இன்று ஒரு தகவல் அளித்து வந்த திரு.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களை மறக்க முடியாது.
தினம் ஒரு தலைப்பில் நேயர்களை பேச வைப்பது, விடுகதை நேரம் அது இது என்று
இப்போதும் நாள்தோறும் காரைக்கால் வானொலி நிலையம் புதுச் செய்திகளை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.
வானொலி கேட்பதையும்,. புத்தகம் வாசிப்பதையும், தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தவுடன் மக்கள் மிகவும் குறைத்துக் கொண்டார்கள். இப்போது மறுபடியும், வானொலி கேட்பதும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமும் வந்து கொண்டு இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் விற்கும் புத்தகங்கள் அதற்கு சாட்சி.
மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதும் பழைய நினைவுகள் வந்து இளமை
திரும்பியதில் மகிழ்ச்சிதானே!
படங்கள் உதவி: கூகிள்
ரேடியோ நினைவலைகள் போலவே சுவையாக இருந்தது உங்களது இந்தப் பகிர்வும்...
பதிலளிநீக்குவீட்டில் வால்வ் வைத்த ரேடியோவில் சிறுவயதில் நிறைய பாட்டுகள், நாடகங்கள் கேட்டு இருப்பது நினைவிற்கு வந்தது....
:) நல்ல விசயம்..எஞ்சாய் செய்திருக்கீங்க..
பதிலளிநீக்குஐ!... ரேடியோ.. அதுவும் வால்வ் ரேடியோ!.. எங்கையோ மியூசியத்தில் வைத்துப் பார்க்கிற மாதிரி இருந்தது..
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் அழகான வால்வ் ரேடியோ ஒன்றிருந்தது. முள்ளைத் திருப்பும் பொழுது அவ்வளவு நைஸாக இருக்கும். குமிழ்கள் வெயிட்டாய் கிண்ணென்று இருக்கும்.
நிறைய வானொலி பற்றிய மலரும் நினைவுகள். படிக்க படிக்க சுகமாக இருந்தது.
ஒண்ணே ஒண்ணு விட்டுப் போயிடுத்து. அந்த காலத்தில் ரேடியோ நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு 'வானொலி' என்கிற இதழ் வெளிவரும். வெறும் அட்டவணைக் குறிப்புகளாய் இல்லாது ஒரு சிறு பத்திரிகை போலவே படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். காலஞ்சென்ற எழுத்தாளர் சமுத்திரம்
துணை ஆசிரியராய அந்த இதழுக்கு இருந்தது நினைவிருக்கிறது.
நீங்கள் 'வானொலி' இதழைப் பார்த்திருக்கிறீர்களோ?..
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிலளிநீக்குநன்றி
யாழ் மஞ்சு
ரேடியோவில் இத்தனை நிகழ்ச்சிகள் கேட்டு அதனை பகிர்ந்த விதம் அருமை.கோமதியக்கா.நானும் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ரேடியோ பிரியை தான்.
பதிலளிநீக்குமிகவும் இனிமையான பசுமையான நினைவுகளை நினைவில் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஉண்மையிலேயே அது பொற்காலம் தான். அதில் காதுக்கு மட்டுமே நமக்கு வேலை.
//காரைக்கால் பண்பலை நன்கு கேட்கும் அதில் இன்று ஒரு தகவல் அளித்து வந்த திரு.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களை மறக்க முடியாது.//
அவரை எப்படி மறக்க முடியும்?
அருமையாகப் பொறுமையாக நகைச்சுவையாக, தான் சிரிக்காமல் பிறரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவந்த மாமனிதர் அல்லவா!
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பார்த்தீர்களா! மாற்றங்கள் கேட்டவுடன் பிடிக்காது. இதை சகித்துக் கொண்டு பழகினால் அதுவும் இனிமை என்பது உங்கள் பதிவிலிருந்து புரியலாம் மகிழ்ச்சி வாழ்த்துகள் சகோதரி.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
உங்களது வானொலி பற்றிய நினைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பதிலளிநீக்குஇலங்கை வானொலி தமிழ்நாட்டவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று அறிந்திருக்கிறேன்.
வாங்க வெங்கட், உங்கள் முதல் வரவுக்கும், உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு:) நல்ல விசயம்..எஞ்சாய் செய்திருக்கீங்க..//
பதிலளிநீக்குமுத்துலட்சுமி வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்க தெரிந்தால் தான் இப்போது நாங்கள் இருக்கும் காலக் கட்டத்தை கடக்க முடியும்.
வாங்க ஜீவி சார், உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஒண்ணே ஒண்ணு விட்டுப் போயிடுத்து. அந்த காலத்தில் ரேடியோ நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு 'வானொலி' என்கிற இதழ் வெளிவரும். வெறும் அட்டவணைக் குறிப்புகளாய் இல்லாது ஒரு சிறு பத்திரிகை போலவே படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். காலஞ்சென்ற எழுத்தாளர் சமுத்திரம்
துணை ஆசிரியராய அந்த இதழுக்கு இருந்தது நினைவிருக்கிறது.,,//
நீங்கள் 'வானொலி' இதழைப் பார்த்திருக்கிறீர்களோ?.//
நான் வானொலி இதழைப் பார்த்து இருக்கிறேன்.
வானொலியில் தர இருக்கும் நிகழ்ச்சிகளை ‘வானொலி’ என்ற பத்திரிகை மூலம் முன்னதாக அறிந்துகொள்ளலாம். அதை என் கணவர் வாங்குவார். நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கோட்டிட்டு வைத்து இருப்பார்கள் மறக்காமல் கேட்க.
இப்படி இதை பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன் ஜீவி சார்.
வாங்க யாழ் மஞ்சு, உங்கள் வரவுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஆசியா, நீங்களும் ரேடியோ பிரியை என்று அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கு நன்றி.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், நீங்கள் சொன்ன மாதிரி அப்போது காதுக்கு மட்டும் தான் வேலை.இப்போது கண் தான் அதிக வேலையை செய்கிறது.
பதிலளிநீக்கு//அவரை எப்படி மறக்க முடியும்?
அருமையாகப் பொறுமையாக நகைச்சுவையாக, தான் சிரிக்காமல் பிறரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவந்த மாமனிதர் அல்லவா!//
நீங்கள் சொல்வது போல் தென்கச்சி அவர்கள் மாமனிதர் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க வேதா, நீங்கள் சொல்வது போல் மாற்றங்களை சகித்து கொண்டு இனிமையாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.
பதிலளிநீக்குஅம்மியை மூலையில் போட்டவர்கள் இப்போது மின் வெட்டால் மிக்ஸியை இயக்க முடியாமல் அம்மியில் அரைத்து கொண்டு மிக சுவையாக இருப்பதாய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி வேதா.
மின் வெட்டு எல்லோரையும் சுறு சுறுப்பாய் இயங்க வைக்கிறது!
கரண்ட் போய் விடும் சீக்கீரம் எல்லா வேலைகளையும் கரண்ட் இருக்கும் போதே முடிப்போம் என்ற சொல் தான் எங்கேயும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
வாங்க baleno, என் வானொலி பற்றியநினைவுகள் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇலங்கை வானொலி எல்லோருக்கும் பிடிக்கும்.
சூப்பரு பதிவு ;-)
பதிலளிநீக்குRasithu padiththEn.
பதிலளிநீக்குவாங்க கோபிநாத், உங்களை என் பதிவுக்கு வரவழைக்க வேண்டும் என்றால் மலரும் நினைவுகள் எழுத வேண்டும் போல் உள்ளது.
பதிலளிநீக்குவரவுக்கு நன்றி.
வாங்க மாதவி, நீங்கள் ரசித்து படித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு//வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்க தெரிந்தால் தான்//
பதிலளிநீக்குமிக உண்மை.
இருந்தாலும், கோடை வெயில், அக்னி நட்சத்திரம் என்பதுதான் பயமுறுத்துகிறது. ஆங்காங்கே சின்னம்மை வேறு வந்து படுத்துகிறதாம். கேள்விப்பட்டேன்.
மின் வெட்டால் இப்படி ஒரு பலனா:)? அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். கூடவே எங்கள் நினைவலைகளையும் எழுப்பி விட்டீர்கள்.ஒலிச்சித்திரம், நாடகம், நீங்கள் கேட்டவை, ரேடியோ அண்ணா என நீண்ட பட்டியல் உள்ளது. நல்ல பதிவு கோமதிம்மா.
பதிலளிநீக்குஜீவி அவர்களுக்கு,
“வானொலி” பத்திரிகை எங்கள் வீட்டில் வாங்குவார்கள்:)!
வாங்க ஹுஸைனம்மா,
பதிலளிநீக்குஇருந்தாலும், கோடை வெயில், அக்னி நட்சத்திரம் என்பதுதான் பயமுறுத்துகிறது. ஆங்காங்கே சின்னம்மை வேறு வந்து படுத்துகிறதாம். கேள்விப்பட்டேன்.//
அந்த காலத்தில் உள்ளவர்கள் சொன்னது போல் வெயில் காலத்துக்கு ஏற்ற உணவு முறை, தினம் இரண்டு வேளை குளிப்பது, நிறைய தண்ணீர், இளநீர் குடிப்பது என்று பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ,என்ன செயவ்து! மின்சாரம் இல்லாமல் நம் முன்னோர்கள் வாழ்ந்த அனுபவங்களை பெற நமக்கு வாய்ப்பு போல் இந்த மின் வெட்டு.
பனை நுங்கின் தோலை வேர்க்குருவிற்கு உடம்பில் தேய்த்தல் நல்லது, சந்தனம் அரைத்து உஅடம்பில் பூசலாம்.
பனை நுங்கை சாப்பிட்டு உடல் சூட்டை தணித்துக் கொள்ளலாம்.
வெயிலில் போகும் போது, குடை, தண்ணீர் எடுத்து போகலாம்.
என்ன செய்வது வரும் துன்பத்திற்கு பயந்து கொண்டே இருக்க முடியாதே!
வாங்க ராமலக்ஷ்மி, மின் வெட்டால் இது ஒரு நன்மை தான்.
பதிலளிநீக்குஉங்கள் நினைவலைகளை எழுப்பி விட்டதா? மிகவும் சந்தோஷம்.
நன்றி ராமலக்ஷ்மி.
ஆம்ம்......மெல்லப் பின்னோக்கி நடர்ந்து போய் அந்தச் சுகங்களை மீட்டெடுப்பது சுவாரசியம்..
பதிலளிநீக்குஆம்ம்......மெல்லப் பின்னோக்கி நடர்ந்து போய் அந்தச் சுகங்களை மீட்டெடுப்பது சுவாரசியம்..
பதிலளிநீக்குநல்ல பகிர்வும்மா. நானும் ஒரு ரேடியோ பிரியை தான்....
பதிலளிநீக்குகாலையில் வந்தே மாதரம், மங்கள இசை, பக்தி பாடல், செய்திகள், திரைப்பட பாடல்கள் என்று பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வரை கேட்கும் பழக்கமிருந்தது. மாலையிலும்...
ஞாயிறுகளில் திரைக்கதை, குழந்தைகள் நிகழ்ச்சி என்று கேட்பேன். அதையெல்லாம் இன்று மிஸ் பண்ணுகிறேன்.
சாரி.. 'வானொலி' இதழ் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருப்பது என் பார்வையில் படாமல் எப்படியோ தப்பி விட்டது! இவ்வளவுக்கும் உன்னிப்பாக வாசிப்பவன் நான்.
பதிலளிநீக்குராமலஷ்மி அவர்களின் பகிர்தலுக்கு நன்றி. நிறைய எழுதுலக ஜாம்பவான்கள்
'வானொலி'யில் பொறுப்பில் இருந்திருந்திருக்கிறார்கள் என்பதும் தாங்கள் அறிந்ததே. எனது எழுத்தாளர்கள் பதிவில் அவர்களில் பலரை நினைவு கொண்டிருக்கிறேன்.
வாசித்து மகிழலாம். தங்கள் தகவலுக்காக.
வாங்க பாசமலர், நீங்கள் சொல்வது போல் நினைவுகளை மீட்டெடுப்பது சுவாரசியம் தான்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கு நன்றி.
வாங்க ஆதி, நீங்களும் ரேடியோ பிரியை என்று கேள்வி படும் போது சந்தோஷம்.
பதிலளிநீக்குஇப்போது நீங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ரேடியோவில் கேட்க முடியாது என்று நினைக்கும் போது கஷ்டமாய் உள்ளது.
தமிழ் நாட்டுக்கு வரும் போது கேட்டு மகிழலாம்.
உங்கள் வரவுக்கு நன்றி ஆதி.
வாங்க ஜீவி சார்,
பதிலளிநீக்குகாலஞ்சென்ற எழுத்தாளர் சமுத்திரம்
துணை ஆசிரியராய அந்த இதழுக்கு இருந்தது எனக்கு நினைவு இல்லை. நீங்கள் தான் நினைவூட்டினீர்கள். நன்றி.
நான் சமுத்திரம் அவர்களின் கதைகளை நிறைய படித்து இருக்கிறேன்.
நிறைய எழுதுலக ஜாம்பவான்கள்
'வானொலி'யில் பொறுப்பில் இருந்திருந்திருக்கிறார்கள் என்பதும் தாங்கள் அறிந்ததே. எனது எழுத்தாளர்கள் பதிவில் அவர்களில் பலரை நினைவு கொண்டிருக்கிறேன்.
வாசித்து மகிழலாம். தங்கள் தகவலுக்காக.//
நான் உங்கள் பதிவில் சில எழுத்தாளர்கள் பதிவைப் படித்து இருக்கிறேன்.
எல்லா எழுத்தாளர்களையும் படிக்கிறேன்.
உங்கள் தகவலுக்கு நன்றி சார்.
ஆஹா! ரேடியோவில் இசை கேட்கும் சுகமே தனிதான்!
பதிலளிநீக்குவாங்க கே.பி ஜனா, நீங்கள் சொல்வது போல் ரேடியோவில் இசை கேட்பது
பதிலளிநீக்குசுகம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
//என்ன செய்வது வரும் துன்பத்திற்கு பயந்து கொண்டே இருக்க முடியாதே!//
பதிலளிநீக்குஆமாம்க்கா. இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளோம், இன்ஷா அல்லாஹ். நல்லெண்ணெய், நீராகாரம், சந்தனம், மண்பானைத் தண்ணீர், இதுபோன்ற எவையெல்லாம் பயன்படுமென்று யோசித்து மனதில் லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டேயிருக்கிறேன்!! :-))))))
வாங்க ஹுஸைனம்மா,இந்தியா வரப்போவது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅம்மாவீடு, மாமியார் வீடு,உறவினர்கள், என்று எல்லோரையும் பார்க்கும் போது வெயில் எல்லாம் தெரியாது.
இருந்தாலும் குழந்தைகளை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். வெயிலில் போகும் போது குளிர்பானங்கள் குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம் ஊரில் தான் நுங்கு, இளநீர் எல்லாம் கிடைக்குமே வாங்கி கொடுங்கள். CALADRYL என்ற லோசன் தடவினால் வேர்க்குரு வராது.
மயிலாடுதுறை வாருங்கள்.
இறைவன் அருளால் உடல் நலத்திற்கு ஒன்றும் வராது பயப்படாமல் வாருங்கள்.
மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குமலரும் நினைவுகள் அழ்காய மலர்ந்து தேனாய சுவைத்தன.. பாராட்டுக்கள்..
பின்தொடரும் வசதியை கூகுள் அகற்றிவிட்டதால், நீங்கள் கொடுத்திருக்கும் டிப்ஸ்களை இப்போத்தான் பார்க்க முடிந்தது. நினைவில வைத்திருப்பேன். மிகவும் நன்றிக்கா.
பதிலளிநீக்குரிவியும் கணனியும் வந்தபின் ரேடியோ கேட்பது குறைந்துதான் போய்விட்டது.
பதிலளிநீக்குஇலங்கை வானொலி நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சிதருகின்றது.
நான் ஊருக்கு போய் விட்டு இப்போது தான் வந்தேன் ஸாதிகா. அதனால் பதில் போட தாமதம்.
பதிலளிநீக்குஉங்கள் வலைச்சர பகிர்வுக்கு நன்றி.
அன்பு ஹுஸைனம்மா, உங்களுக்கு தெரியாத டிப்ஸ்கள் இல்லை இருந்தாலும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்வது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅன்பு மாதேவி நலமா?
பதிலளிநீக்குஇலங்கை வானொலி நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சிதருகின்றது.//
வானொலி என்றாலே இலங்கை என்ற பொற்காலத்தை மறக்க முடியாது மாதேவி.
உங்கள் வரவுக்கு நன்றி.
வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇதெல்லாம் மீண்டும் நாம் அனுபவிக்கனும்தான் கரண்ட் கட் பண்றாங்களோ என்னவோ?!
பதிலளிநீக்குஇதெல்லாம் மீண்டும் நாம் அனுபவிக்கனும்தான் கரண்ட் கட் பண்றாங்களோ என்னவோ?!//
பதிலளிநீக்குவாங்க ராஜி , நீங்கள் சொலவது உண்மைதான் .
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
"மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு திரும்பியதில் மகிழ்ச்சி'' எல்லாவற்றையும் பாசிடிவாக எடுத்துக் கொள்வது நல்லதுதானே!
பதிலளிநீக்கு"மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு திரும்பியதில் மகிழ்ச்சி'' எல்லாவற்றையும் பாசிடிவாக எடுத்துக் கொள்வது நல்லதுதானே!//
பதிலளிநீக்குவாங்க வியபதி,
நீங்கள் சொல்வது உண்மை.
எல்லாவற்றையும் பாசிடிவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மின் வெட்டால் தொலைகாட்சி பார்க்க முடியவில்லை, அதனால் புத்தகங்களும் படிக்க முடிகிறது.
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.
சிறு வயதில் மின்சாரம் வீட்டிர்க்கு வராத காலத்தில் பக்கத்துவீட்டில் வானொலி {இலங்கை வானொலி} கேட்டது நினைவிற்கு வருகிறது.
பதிலளிநீக்குசிறு வயதில் மின்சாரம் வீட்டிர்க்கு வராத காலத்தில் பக்கத்துவீட்டில் வானொலி {இலங்கை வானொலி} கேட்டது நினைவிற்கு வருகிறது.//
பதிலளிநீக்குவாங்க சந்திரவம்சம்,
உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.
நன்றி.
மின்சாரம் கைநழுவியதால்
பதிலளிநீக்குவானொலின் நிகழ்வுகளையும்
நினைவுகளையும் சுவையோடு
தந்தீர்கள்.
வாங்க டாக்டர், நீங்கள் சொன்னமாதிரி மின்சாரம் கைநழுவியதால் வானொலியின் தேவை மறுபடியும் அதிகரித்து அதன் பெருமைகளை நினைவுகூற வைத்து விட்டது.
பதிலளிநீக்குஉங்கள் வருமைக்கும், கருத்துக்கும்
நன்றி சார்.
எவ்வளவுத் தகவல்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள்! அருமை.
பதிலளிநீக்குமிகவும் அழகாக கோர்வையாக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல் இப்பொழுது டி.வி. வந்து எல்லோர் நேரத்தையும் திருடிக் கொண்டு விட்டது.உண்மை தான்.
அருமையான பகிர்விற்கு நன்றி
வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் இந்த பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.