ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஸ்வயம்புநாத் கோயில் காத்மாண்டு


Swayampunath temple (stupa)
ஸ்வயம்புநாத் கோயில்(ஸ்தூபி)
காத்மாண்டு

நாங்கள் காத்மாண்டில் தங்கியிருந்த
போது 20.09.2011 அன்று காத்மாண்டு
நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு அருகில்
உள்ள சுவயம்புநாத் கோயிலுக்குச்
சென்று வந்தோம்.

காத்மாண்டு பெரிய நகரமாய்
இருக்கிறது. அகன்ற சாலைகள்,
கடைவீதிகள், மால்கள், வணிக
நிறுவனங்கள், அரண்மனை, அருங்
காட்சியகம், பூங்காக்கள், கோயில்கள்
என ஒரு தலைநகருக்கு உரிய எல்லா
அம்சங்களும் பொருந்தியுள்ளது.












சுறுசுறுப்பாக மக்கள் இயங்குகிறார்கள். நேபாளத்
துக்கே உரிய அந்த வித்தியாசமான தொப்பிகளை
ஆண்கள் அணிகின்றார்கள். பல வண்ணங்கள்,
டிசைனில் அந்தத்தொப்பிகள் இருக்கினறன. பேருந்து
களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிலசமயங்களில்
பேருந்தின் மேற்கூரைகளில் கூடப் பயணம் செய்
கிறார்கள்.



வாடகை கார்கள், டெம்போக்கள் உள்ளன.
வாடகைக்கார்களில் அதிகமாக மாருதி 800 கார்களே
உள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளைப் பார்த்த
வாறே சென்றோம்.


தர்பார் மார்க் (durbar marg)
ஒரு முககியப் பகுதியாக விளங்குகிறது. இப்பகுதி
யில் நிறைய வங்கிகள் உள்ளன. ஸ்டேட் பாங்க்
ஆப் இந்தியாவின் கிளை, ஏடிஎம் ஆகியவை இங்கு
உள்ளன. இதில் நேபாள ரூபாய்க்கு ஒரு நாளைக்கு
அதிகபட்சம் பத்தாயிரம் , ஏடிஎம்மில். நம் கார்டை
வைத்து எடுக்கலாம். நேபாள ரூபாய் இந்திய
ரூபாயைவிட மதிப்பு குறைவு. நகரில் கடைக்
காரர்கள், சைக்கிள் ரிக்க்ஷாகாரர்கள், இந்திய
ரூபாயைக் கொடுத்தாலும் விகிதத்தைக் கணக்கிட்டு
வாங்கிக் கொள்கிறார்கள். பணமாற்றம் செய்யும்
கடைகள் இங்கு நிறைய உள்ளன. அமெரிக்க டாலர்,
இந்திய ரூபாய், நேபாள ரூபாய், சீன யுவான்
இவற்றை ஒன்றிலிருநது மற்றொன்றிற்கு மாற்றிக்
கொளளலாம். பணமாற்ற விகிதத்தை கடைக்கு
வெளியே பட்டியலிட்டு வைத்திருக்கின்றனர்.

கலைப்பொருட்களை விற்கும் கடைகள் நிறைய
உள்ளன. எச்சரிக்கையாக இல்லாவிட்டால் சிலர்
ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். ஒரு கடையில் கலைப்
பொருள் வாங்கியபோது, கடைக்காரர் நாங்கள்
கொடுத்த பணத்தில் ஒரு நூறு ரூபாயை மறைத்து
வைத்துக் கொண்டு குறைவாய் கொடுத்து இருப்ப
தாகக் கூறி இன்னும் ஒரு நூறு கொடுக்கவேண்டும்
என்றார். உடன் வந்த திரு. ராஜேந்திரன் அவர்
களுக்கு இந்தி நன்கு தெரியும். அவர் ’நாங்கள்
இவ்வளவு செலவு செய்து உங்கள் ஊருக்கு வந்து
இருக்கிறோம். நூறு ரூபாய் ஏமாற்ற வேண்டிய
அவசியம் இல்லை. எங்கள் ரூபாய் உன் பெட்டியில்
இருக்கும் பார்’ என்ற பின் கடை முதலாளி பார்த்து
விட்டு சரி சரி என்றார். தன் தவறுக்கு மன்னிப்புக்
கோரவில்லை. இப்படியும் சில மனிதர்கள்!

காத்மாண்டு நகரின் மேற்குப் பகுதியில் ஒரு மலை
மீது அமைந்துள்ளது, சுயம்புநாத் கோயில்.
கோவிலுக்குச் செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு.
அடிவாரத்தில் புத்த ஸ்தூபிகள் சிறிய அளவில்
உள்ளன. கண் உருவம் ஓவியமாக வரையப்
பட்டுள்ளது.



தோரணங்கள் நிறையக் கட்டப்பட்டுள்ளன. கீழே ஒரு
தடாகம் கட்டப்பட்டுள்ளது. உலக அமைதியின் அடை
யாளமாக இது உள்ளது.




மேலே கோவிலுக்குச் செல்ல இரண்டு வழிகள்
உள்ளன. ஒன்று வலது புறமாகப் படிப்பாதையாக
உள்ளது. மற்றொரு பாதை கார் செல்லும்படியாக
இடது புறமாகச் செல்லுகிறது. நாங்கள் படிப்
பாதையில் சென்றோம். பழனிப்படிக்கட்டுகள் போல
உள்ளன. படிகளில் யாசிப்பவர்கள் உட்கார்ந்திருக்
கிறார்கள். அவர்களிடம் பன்னாட்டு கரன்சிகள்,
நாணயங்கள் உள்ளன. அவர்களிடமும் நாணயத்தை
மக்கள் மாற்றிக் கொள்கின்றனர்

படிகள் மொத்தம் 365. மலைமீதேறிக் கோயிலை
அடைந்தோம். இக்கோயிலை குரங்குக்கோயில் என்று அழைக்கிறார்கள்
முதலில் வஜ்ராயுதம் நம்மைக் கவர்கிறது/அச்சுறுத்து
கிறது? தங்க நிறத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.
ஒரு மேடையின் மீது வைக்கப்பட்டுள்ளது.



கோயில் பரப்பின் நடுவில் மிக உயர்ந்து ஸ்தூபி
விளங்குகிறது. புத்தரின் இரு அருட்கண்கள் மேலே
உள்ள சதுரப்பகுதியின் நான்கு பக்கங்களிலும் அழகாக
வரையப்பட்டுள்ளது. ஸ்தூபியின் மீது மஞ்சளால்
அபிஷேகம் பண்ணுகிறார்கள். ஸ்தூபியின் நான்கு
புறங்களிலும் புத்தருக்கு தங்க நிறத்தில் சந்நதிகள்
உள்ளன. அங்கு விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.
ஊதுவத்தி வைக்கிறார்கள்









மிகுந்த வேலைப்பாட்டுடன் உள்ளன. சிங்கம்
போன்ற விலங்குகளின் வெண்கல உருவங்கள்
உள்ளன. வெண்கலமணிகளும் நிறைய உள்ளன.

கோயில் வரலாறு கூறும் பெரிய கல்வெட்டு ஒன்று
உள்ளது. பலகடவுள் உருவங்கள் உள்ள சிறு சிறு
கோயில்கள் இங்கே உள்ளன.



இக்கோயிலின் ஒருபுறத்தில் சீதளாதேவி அம்மன்
கோயில் உள்ளது. இங்கே நிறைய இந்துக்கள்
வந்து வழிபடுகின்றனர். பூசைக்குத்தேவையான
பொருட்களை விற்கும் சிறிய கடைகள் பக்கத்தி
லேயே உள்ளன. வலமாகச்சுற்றி வரும்போது
புத்தருக்கான ஒரு சந்நிதி மிகப்பெரிதாக உள்ளது.
பெரிய புத்தர் சிலை உள்ளது.




பெளத்த பிக்‌ஷுக்கள் அங்கு வழிபாடு
முதலியவற்றை நிர்வகித்து வருகிறார்கள்.
சுயம்புநாத் கோயிலில் இருந்து பார்த்தால்
காத்மாண்டு நகர் கீழே அழகாகத் தெரிகிறது.





தரிசனம் முடிந்து மலையைவிட்டுக் கீழே
இறங்கினோம்.அங்கே வாயில் அருகே கலைப்
பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன. சில
கலைப்பொருட்களை வாங்கினோம் புத்தரின்
முகங்கள், அம்பாளின் முகங்கள்(தாரா தேவி),
பசுபதிநாத் கோயிலில் உள்ள இறைவனின் சிறிய
உருவச்சிலைகள், மணிகள் இன்னும் பலபொருட்கள்
இங்கு கிடைக்கின்றன.

தாராதேவியின் சிலைகள் (வெண்கலத்தில்) வீணை
வாசித்துக் கொண்டிருப்பது போல் விடுதிகளின்
வரவேற்பறைகளில் அழகாய்க் கொலுவீற்றிருக்கிறது.

பின்னர் டாக்சியில் ஏறி காத்மாண்டு திரும்பினோம்.
சுயம்புநாத் கோவில் வழிபாடு இப்படி இனிமையாக
நிறைவேறிற்று.
_____________________________________

19 கருத்துகள்:

  1. அழகான படங்கள். அருமையான கட்டுரை. நாங்களும் உங்களுடன் பயணிப்பதுபோல ஓர் சுகானுபவம் ஏற்படுகிறது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள். அருமையான கட்டுரை. நாங்களும் உங்களுடன் பயணிப்பதுபோல ஓர் சுகானுபவம் ஏற்படுகிறது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஸ்வயம்புநாத் கோவிலில் நல்ல தரிசனமும், நிறைய தகவல்களும் தெரிந்து கொண்டோம் அம்மா.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பகிர்வும் அருமை.

    சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுவதற்கே ஒரு கூட்டம் இருப்பார்கள் போல உலகெங்கும்.

    அமைதித் தடாகம், வஜ்ராயுதம் படங்கள் குறிப்பாகக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள் மற்றும் விளக்கங்கள் அம்மா... ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  6. ராமலக்ஷ்மி சொல்வது போல் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுபவர்கள் எங்கேயும் உண்டு....படங்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  7. நேபாள ரூபாய் இந்திய
    ரூபாயைவிட மதிப்பு குறைவு

    சென்ற பல நாடுகளில் நம் இந்திய ரூபாயை மதிக்கும் நேபாளம் மிகவும் ஆச்சரியப்படுத்தியது..

    பதிலளிநீக்கு
  8. இனிமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. அழகான படங்கள். பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. காத்மண்டு கடைவீதிகள், வஜ்ராயுத காட்சி, ஸ்வயம்புநாத் கோயில் தரிசனம் என்று இந்தப் பதிவும் அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
  11. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார்,
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ஆதி,உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுவதற்கே ஒரு கூட்டம் இருப்பார்கள் போல உலகெங்கும்.//

    வாங்க ராமலக்ஷ்மி, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் தானே!

    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க வெங்கட், உங்கள் ரசிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க பாசமலர், உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. நேபாள ரூபாய் இந்திய
    ரூபாயைவிட மதிப்பு குறைவு//

    ஆம், இராஜராஜேஸ்வரி,

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஜீவி சார், உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நிறைந்த படங்களுடன் காத்மாண்டு தர்சனம்.

    பதிலளிநீக்கு