வியாழன், 24 பிப்ரவரி, 2011

உன்னையே நீ உணர்!

//மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா//
என்று பெண்ணின்பெருமையைக் கவிமணி கூறினார்.

//பெண் என்பவள் கணவன் , மகன், மகள், மாமா, மாமி, தாய், தந்தை , உடன் பிறந்தோர் என பலகிளைகளைக் கொண்ட விருட்சத்தின் வேர். அவள் ஆரோக்கியமே அம் மரத்தின் நீடித்த வாழ்வின் அஸ்திவாரம். இதனை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். //

பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)

//எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே
வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனைபேர்?//

//ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டுப் பண்பாடு பெரும்பாலும் பெண்களிடத்தில்தான் அப்படியே நிலைத்து, தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.//----------வேதாத்திரி மகரிஷி.

நவராத்திரி போன்ற பண்டிகையின் நோக்கம் பெண்களின் சிறப்பைப் பெண்கள் உணர வேண்டும் என்பது தான். தேவி ,கெட்டதை அழித்து நல்லதை நிலை நாட்டுகிறாள். அது போல் நாம் கெட்ட எண்ணங்களை களைந்து ,நல்ல எண்ணங்களை நம்மைச் சுற்றிப் பரவவிட வேண்டும். மனதிடம் உடையவர்களாய் இருக்க வேண்டும்,எப்போதும் நல்லதையே காண்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும். பெண்மைக்குரிய எட்டுக் குணங்களாகப் பெரியவர்கள் சொல்வது
அடக்கம், பொறுமை, தியாகம், பிறர்நலம், இரக்கம், ஒப்புரவு, தொண்டு, சேவை. தேவைப்படும் போது இந்த பண்புகளை வெளிப்படுத்தி எண்ணங்களையும்,செயல்களையும் நிறைவேற்றுபவர்களாய் இருந்தார்கள்.

இந்த நோக்கத்தைத் தமிழில் தோன்றிய முதல் புதினமாகிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் கூறிவிட்டது. புதினத்தின் கதாநாயகி ஞானாம்பாள் பெண்மைக்குரிய குணங்கள் உடையவளாகவும் ,எண்ணங்களையும் செயல்களையும் நிறைவேற்றுபவளாகவும் இருக்கின்றாள். வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் ஆண் வேடம் பூண்டு அதீத சக்தியுடன் அரசாட்சி உரிமையும் பெற்று அறிவுக் கூர்மையுடனும், திறமையுடனும் ஆட்சி புரிகின்றாள். சோதனைக் காலத்திலும் பெண் மனம் தளராமல் தன் அறிவைப் பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் துணிவுடன் பாதுகாப்பதைப் பெண்களுக்கு உணர்த்துகிறது.

பெண்கள் பிறர் மனதில் பதியுமாறு விஷயங்களைத் திறமையுடன் எடுத்துரைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இத்தகைய பெண்கள் நாட்டுத் தொண்டு, வீட்டுத் தொண்டு, சமயப் பணி, முதலியவற்றில் காட்டியுள்ளார்கள். மொழி வளர்ச்சிக்காவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருக்கும் உறுதுணையாக ஒரு பெண்தான் இருக்கிறாள். அம்மா நிதி மந்திரி,மதிமந்திரி, சமையல் எகஸ்பர்ட்,அலாரம் களாக், சாய்ந்து கொள்ள தூண், குடும்பத்தின் வைட்டமின் டானிக், நல் ஆசிரியர், சிறந்த காரிய தரிசி, பொறுமையின் எல்லை. வாழ்க்கை துணை (வாழ்க்கை கூட்டாளி)-இப்படி ஒருவருக்கு அமைந்து விட்டால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடும்.

நாமக்கல் கவிஞ்ர் இராமலிங்கம் அவர்கள் ’பெண்மை ’ என்ற கவிதையில் சொல்வது:

// தாயாய் நின்று தரணியைத் தாங்கும் ;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும் ;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும் ;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும் ;
அயலார் தமக்கும் அன்பே செய்யும் ;//

// பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுவதற்கு //

இப்படிச் சொல்கிறார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உலகம் முன்னேற ஆண் பெண் இருவரும் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று பாரதி கூறினார்.

//ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்//

என்றார்.

//நம் பெண்கள் வெறும் போகப் பொருள்களாக ஆக்கப்படக்கூடாது
பெண்களை ஆண்கள் படிக்க வைக்க வேண்டும்.அவர்களுக்கு உலகப்படிப்பும் பகுத்தறிவும் ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும்//
இப்படி தந்தை பெரியார் சொல்கிறார்.

பெரியார் சொன்னமாதிரி ஒவ்வொரு வீட்டிலும் இப்போது பெண்ணைப் படிக்க வைக்கிறார்கள். பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் சில பெண்கள் எவ்வளவு படித்து இருந்தாலும் சோதனை ஏற்படும் போது அதை எப்படி சமாளிப்பது என்று
யோசிக்காமல் வேறு முடிவு எடுத்து விடுகிறார்கள். அதற்கு காரணம் தன் இரக்கம் தான் . கழிவிரக்கத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பெண்ணைப் பற்றி கூறுகிறார் ,ஒரு பாட்டில்:

//அருமையுடன் வளர்ந்து அறிவுள்ளபெண்ணாக
ஆக்கிதரும் பொறுப்பு அன்னையிடந்தான்-குலப்
பெருமைதனைக் காத்துப்பெற்றவர் மனம் நாடும்
பேரைப் பெறும் பொறுப்பு பெண்ணிடந்தான்.//

திருமணம் ஆன பெண்கள் இரு வீட்டுக்கும் நட்புப் பாலமாக இருந்து பெற்றவர்களுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு தையல் என்று பெயர். புகுந்தவீட்டையும்,பிறந்த வீட்டையும் இணைப்பதால் தான் தையல் என்று பெயர் வந்தது போலும்.

ஒரு வீட்டில் பெண் படித்து இருந்தால் அந்த வீடே பல்கலைக்கழகமாக மாறிவிடுகிறது என்கிறார், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். உலகில் பெண்கள் ஆண்களைப் போல் சரி பங்குடையவர்கள். ஆண்களுக்குச் சற்றும் குறைந்தவர்களல்ல .இப்படி கவிமணி,பாரதி, பாவேந்தர் , திரு.வி.க, தந்தை பெரியார் , மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற சான்றோர்கள் பெண் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டாலும் அவர்களின் நோக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. பெண்கள் தான் மனது வைக்க வேண்டும், முழுமை அடையச் செய்ய. அவர்கள் தான் புறப்பட வேண்டும்.

வாழ்வில் அனைத்து உயர்வுகளையும் தரவல்ல பெண்ணின் பெருமையை உணர்ந்து பெண்கள் இரண்டாவது இடத்தில் உள்ள தன் நிலையை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம். பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டுடைய முன்னேற்றம்.

அந்தக் காலத்தில் மனையறம் புரிதலை மகளிரும், வினையறம் புரிதலை ஆடவரும் செய்தார்கள். ஆனால் இந்தக்காலத்தில் பெண்களுக்கு வீடு,அலுவலகம் என்று இரட்டைப் பளு தூக்குதல்! அதில் உள்ள சிரமங்கள் எவ்வளவு? இரண்டையும் திறம்படச் செய்யும் பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார்கள்.

தன் திறமைகளை முடக்காமல், தன்னைச் சுதந்திரமாய், தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய விடும் குடும்பம் சிலருக்குக் கிடைக்கும் . சிலருக்குப் போராடித் தான் ஜெயிக்க வேண்டும், குடும்பத்தார் ஆதரவு இல்லாமல். இப்படி தன் திறமைகளை வளர்த்துக் கொண்டு தன் குழந்தைகளையும் சிறப்பாய் வளர்த்து சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வழி செய்வதில் பெண்ணின் பொறுப்பு அதிகம்.

பெண்கள் எவ்வளவு கற்றாலும் வாழ்க்கைக் கல்வி கற்க வில்லை என்றால் வாழ்க்கையைத் திறம்பட நடத்தமுடியாது. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் வேண்டும் என்றால் பிறருடைய சுதந்திரத்தை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். எதிலும் வரையறை தாண்டாத கட்டுப்பாடே நாகரிகத்தின் அளவுகோல். இது இரு பாலருக்கும் பொதுவானது- குறிப்பாகப் பெண்களுக்கு.

அன்னை சொல்வது போல் பெண் ஐவகைக் கடமைகளைச் செய்தால் இவ் பூவுலகில் நன்றாக வாழலாம். அவை:

1. தன் உடல் நலம் காத்தல்
2. தன் குடும்ப நலம் காத்தல்.
3. சுற்றத்தார் நலம் காத்தல்
4. நாட்டு நலம் காத்தல்
5. உலக நலம் காத்தல்.

இல்லத்தை ஆளும் அரசி சிறப்பாக ஆட்சி செய்தால் நாடும் வீடும் நலம் பெறும்.

வாழ்க வளமுடன்.

35 கருத்துகள்:

 1. / பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
  வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுவதற்கு //

  நல்ல பல கருத்துக்களை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. பெண்கள் எவ்வளவு கற்றாலும் வாழ்க்கைக் கல்வி கற்க வில்லை என்றால் வாழ்க்கையைத் திறம்பட நடத்தமுடியாது. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் வேண்டும் என்றால் பிறருடைய சுதந்திரத்தை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். எதிலும் வரையறை தாண்டாத கட்டுப்பாடே நாகரிகத்தின் அளவுகோல். இது இரு பாலருக்கும் பொதுவானது- குறிப்பாகப் பெண்களுக்கு.


  .....நீங்கள் சொல்லிய விஷயத்தில், இந்த பத்தி மிகவும் பிடித்து இருந்தது.

  பதிலளிநீக்கு
 3. //பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம். பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டுடைய முன்னேற்றம்.//

  முற்றிலும் உண்மை.

  //பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)//

  அப்படிச் சொல்லுங்கள்:)!

  பெண்கள் தம்மைத் தாம் உணர நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. எல்லாரிடமிருந்து நல்ல கருத்துக்களைக் குறிப்பிட்டு சொல்லி இருக்கீங்க..
  5 கடமையில் முதலில் தன்னைக்காத்து மற்றவரைக் காத்து என்று வரிசை இருப்பது நல்லா இருக்கு :)

  பதிலளிநீக்கு
 5. ஆம் ராமலக்ஷ்மி, தம்மை தான் உணர்ந்தாலே போதும்.

  நன்றி ராமலக்ஷமி.

  பதிலளிநீக்கு
 6. ஆம் முத்துலெட்சுமி, முதலில் தன்னைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் மற்றவர்களை பார்த்துக் கொள்ள முடியும்.

  இப்போது சில பெண்கள், வேலைக்கு போகிறவர்கள் வீட்டில் உள்ளவர்களை கவனித்து விட்டு அவர்கள் சாப்பிடாமல் ஒடிக் கொண்டு இருக்கிறார்கள்.

  சாப்பிட நேரம் ஒதுக்க முடியவில்லை.

  பெண்கள் தியாகிகள் என்று குறிப்பிட்டு விட்டதால் பிறர் நலத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் பெண் தனநலத்தை பொருட்படுத்துவது இல்லை.

  திருவள்ளுவர்,அன்னை, மகரிஷி போன்ற பெரியோர் தன்னை காத்துக் கொண்டால் தான் மற்றவர்களை பாதுகாக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

  உணவு மட்டும் என்று இல்லை எல்லாவற்றிலும் தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும்.
  நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் சொன்னது அனைத்தும் சரி.

  பெண்களுக்கு தம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளோடு இருக்கும் செம்மை மாதர் எது வந்த போதும் எதிர்கொள்வார்!!

  பதிலளிநீக்கு
 8. வாங்க மாதவி, உங்கள் கருத்தும் நன்றே.

  நன்றி மாதவி.

  பதிலளிநீக்கு
 9. அழகிய கருத்துகளை அழகாக எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள் கோமதி அரசு.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள் அம்மா. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அருமையான பகிர்வு,இந்த இடுகையை படித்தவுடன் கிடைத்த புத்துணர்ச்சிக்கு நன்றி.அழகாக எடுத்து சொல்லியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 12. A relevant and a lovely post. My wishes.

  >>//பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம். பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டுடைய முன்னேற்றம்.//<<

  We must voice out this little more!

  பதிலளிநீக்கு
 13. பெண்ணின் பெருமை பேசும் சிறப்பான பதிவு கோமதி.. அனைத்து வரிக்ளும் அருமை..

  பதிலளிநீக்கு
 14. இல்லத்தை ஆளும் அரசி சிறப்பாக ஆட்சி செய்தால் நாடும் வீடும் நலம் பெறும்./

  முற்றிலும் உண்மை.

  பதிலளிநீக்கு
 15. தேனம்மை, உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லி லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கைக்கு எழுதியது,
  இந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 16. இராஜராஜேஸ்வரி, உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. //இல்லத்தை ஆளும் அரசி சிறப்பாக ஆட்சி செய்தால் நாடும் வீடும் நலம் பெறும்.//
  மிகச்சரி!

  பதிலளிநீக்கு
 18. சென்னை பித்தன், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

  பதிலளிநீக்கு
 19. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

  மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

  பதிலளிநீக்கு
 20. பெண்களின் பெருமை பேசும் பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. ஆண்டவன் எல்லோர் முன்னும் பிரத்தியட்சமாதல் இயலாதது. அதற்காகத்தான் தாயைப் படைத்தான். முன்னறி தெய்வமல்லவா. தாயிறசிறந்த கோவிலுமில்லை. சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாமே.
  குணாதிசயங்கள் அமையக் காரணங்கள் குறித்து ஒரு அலசல் கட்டுரை எழுதியுள்ளேன். படித்துப் பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 22. ராமலக்ஷ்மி, வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. லக்ஷ்மி அக்கா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. G.M.பாலசுப்பிரமணியன் சார், உங்கள் கருத்து நல்லா இருக்கிறது.
  உங்கள் பதிவைப்படிக்கிறேன்.

  உங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. This is a fine essay. Students can copy, paste it on notebook, mug it up and reproduce in exams if qn is asked on Women or Women's Day.

  Lot of quotes from a variety of authors.

  My opinion?

  In spite of all that the poets told you, I feel, we miss the Woman herself.

  She is an individual. She needs self-fulfilment on her own. She will get it in all roles she is supposed to play, yet, her satisfaction will be complete only if she is able to be a free Individual exercising her own choices and realising them.

  She is a mother, sister, sister in law and granny. Ok. So also, a man. He is a husband, bro, bro in law and grandpa. But no poet wrote and advised a man what he should be and how he should be.

  It is to her only these poets write.

  Why?

  பதிலளிநீக்கு