வியாழன், 15 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள் (நியூ செர்சியிலிருந்து)

ஏப்ரல் 11ம் தேதி அமெரிக்க பயணம். எட்டு மாதம் ஆன பேரனைப் பார்க்க.
19 மணி நேரம் பயணித்து வந்த கஷ்டம் எல்லாம் பேரன் மலர் போல சிரித்த முகத்துடன்
மலர் செண்டு கொடுத்து வரவேற்றவுடன் மறந்து விட்டது.

அவனின் கள்ளமில்லா சிரிப்பில் எங்களை மறந்தோம்.
இரண்டு நாள் சுவை மறந்த நாக்குக்கு புத்துயிர் கொடுத்தாள் மருமகள்.

இந்த புத்தாண்டு மகன், மருமகள், பேரனுடன்.

முக்கனியில் ஒன்று குறைந்தாலும் மற்ற பழங்கள் கிடைத்தன,’விஷுகனி காணல்’
சிறப்பாய் நடந்தது.

ஆசிர்வாதம் செய்து கை நீட்டம் அளித்தார் என் கணவர்.இந்த புத்தாண்டு வாழ்வில் இனிமை சேர்க்கும் புத்தாண்டு.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்ற ராமகிருஷ்ணர் கருத்திலிருந்து-

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
எல்லோரும் நோய்களிலிருந்து விடுபடட்டும்
எது நன்மை என்பதை எல்லோரும் உணரட்டும்
யாரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கட்டும்.

37 கருத்துகள்:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //இந்த புத்தாண்டு வாழ்வில் இனிமை சேர்க்கும் புத்தாண்டு.//

    உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சி:)!

    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பேரன் தூங்கும் நேரத்தில் பதிவுகள் தாருங்கள். குறிப்பாக அவரைப் பற்றிய அப்டேட்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  3. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா :))))

    பேரனுடன் விளையாடி இனிமையாக நாட்களை அனுபவித்து வாருங்கள் :)

    பதிலளிநீக்கு
  4. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு
  6. ஆஹா, பேரரோடயா இருக்கீங்க, அப்ப ஜாலிதான்!! 8 மாசம்னா நல்லா விளையாடுவாரே, நேரம் போறதேத் தெரியாது!!ம்ம்.. எஞ்சாய்ங்க!!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! அமெரிக்கா போயாச்சா! நல்லதும்மா. உடம்பை பார்த்துக்கங்க. பேரனோட நல்லா விளையாடி அந்த அனுபவங்களை பதிவா போடுங்கம்மா. :)

    பதிலளிநீக்கு
  8. //
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.

    ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்ற ராமகிருஷ்ணர் கருத்திலிருந்து-

    எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
    எல்லோரும் நோய்களிலிருந்து விடுபடட்டும்
    எது நன்மை என்பதை எல்லோரும் உணரட்டும்
    யாரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கட்டும்.//

    நன்றாகச் சொன்னீர்கள்..
    உங்களுக்கு, எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆகா பேரனுடன் புத்தாண்டா...கலக்கல்ம்மா ;))

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்;)

    பதிலளிநீக்கு
  10. ஹுஸைனம்மா said...
    ஆஹா, பேரரோடயா இருக்கீங்க, அப்ப ஜாலிதான்!! 8 மாசம்னா நல்லா விளையாடுவாரே, நேரம் போறதேத் தெரியாது!!ம்ம்.. எஞ்சாய்ங்க!!

    //ரிப்பீட்டேய் ..

    வாழ்த்துக்கள் .. :)

    பதிலளிநீக்கு
  11. முதல் நாள் இரவு பூ, பழங்கள்,கண்ணாடி,விளக்கு ,என்றும் மங்கலப் பொருட்களை வைத்து அதிகாலை கண்விழித்து பார்த்தால் அந்த ஆண்டு முழுவதும் நலமாக இருக்கும் என்று சொன்ன முன்னோர்கள் வழக்கபடி நான் எடுத்து வைத்து என் குழந்தைகளைப் பார்க்க சொல்வேன் இந்த ஆண்டு என் மகனும், மருமகளும் நாங்கள் எடுத்து வைக்கிறோம். நீங்கள் வந்து பாருங்கள் என்றார்கள்.நாங்கள்ப் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  12. இனியா,உங்கள் மெயில் ஜ.டி அனுப்புக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பேரன் குறும்புகளை ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

    எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி,ஆயில்யன்.

    நீங்கள் சொன்னமாதிரி நாட்களை ரசித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. ***ஏப்ரல் 11ம் தேதி அமெரிக்க பயணம். எட்டு மாதம் ஆன பேரனைப் பார்க்க.
    19 மணி நேரம் பயணித்து வந்த கஷ்டம் எல்லாம் பேரன் மலர் போல சிரித்த முகத்துடன்
    மலர் செண்டு கொடுத்து வரவேற்றவுடன் மறந்து விட்டது.
    ***

    :)))

    இதுதான் அமெரிக்கா விசிட் செய்ய நல்ல தருணம்!

    அமெரிக்காவில் இப்பொழுது வசந்தகாலம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  16. நேரம் போவதே தெரியவில்லை.
    ஹீஸைனம்மா,நீங்கள் சொன்னது போல்.

    பதிலளிநீக்கு
  17. ஆதவன் ,நீங்கள் சொன்ன மாதிரி உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன்.
    நன்றி.

    அனுபவங்கள் தொடரும்.

    பதிலளிநீக்கு
  18. ஆமாம்,வருண் இப்போது வசந்தகாலம் தான்.
    ஊட்டி,கொடைக்கானல் போல் இருக்கிறது.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அட....

    பேரனோட நியூ ஜெர்ஸில புத்தாண்டு கொண்டாட்டமா... தூள் தான் போங்க...

    தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    இதோ என் புத்தாண்டு சிறப்பு பதிவு...

    மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

    பதிலளிநீக்கு
  20. பேரனுடன் விளையாட்டு உற்சாகத்தில் பதிவுலகை மறந்துவிட வேண்டாம். :))

    பதிலளிநீக்கு
  21. தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. அன்பு கோமதி,
    இனிய வாழ்த்துகள். எங்கள் மகள் சிகாகோவில் இருக்கிறாள். தொலைபேசி எண் கிடைத்தால் பேசச் சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. //மலர் செண்டு கொடுத்து வரவேற்றவுடன் மறந்து விட்டது. ***//
    பேரனே ஒரு மலர் செண்டுதானே!!
    செண்டோடு மணக்க மணக்க விளையாடி எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்க. சேரியா?
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    பேரனுக்கு என் அன்பும் ஆசியும்.

    பதிலளிநீக்கு
  24. கோபி,
    புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

    உங்கள் பதிவை படித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  25. சென்ஷி,நலமா?

    பேரனுடன் விளையாட்டில் உலகை மறந்து தான் போகிறேன் .(பதிவுலகை மறக்க முடியாது)

    உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அன்பு வல்லி அக்கா,வணக்கம்.
    வாழ்த்துக்கு நன்றி.

    என் மகன் தொலைபேசி எண் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. நானானி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பேரனே மலர் செண்டு தான் நீங்கள் சொன்னமாதிரி.

    பேரனுக்கு உங்கள் ஆசிகள் கிடைத்தது மகிழ்ச்சி.

    பேரனுடன் விளையாடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. பேரனுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் மிக்க சந்தோசம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. //பேரனுடன் விளையாடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//

    கட்டாயம்..கோமதி அரசு,
    அவற்றைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

    என் பேரனோடு விளையாடியதையெல்லாம் பதிவிட்டிருக்கிறேனே!!!

    பதிலளிநீக்கு
  30. மாதேவி,உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு