துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை உணபவர்களுக்குத்
தானும் உணவாக இருப்பது மழையாகும்.
மழை நீர் அமிழ்தமாக உயிர்களை வாழவைக்கிறது.இத்தகைய நீரை மாசு படுத்துவதை மக்கள்
உணரவில்லை.குளங்கள் எல்லாம் தாமரையும்,அல்லியும் மலர்ந்துகாணப்படவில்லை.பாலீதீன் கவர்களும்,மற்றும் வீட்டுக் கழிவு குப்பைகளும் தான் நிறைந்து காணப்படுகிறது துர் வாடை வீசி சுற்றுப்புறத்தை நாசமாக்கிக் கொண்டு இருக்கிறது.சில குளங்களில் ஆகாசத் தாமரை படர்ந்து குளத்து நீரையே மறைத்துள்ளது. ஏரி, குளங்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுத்து அவற்றைத் தூர்வாரி, மழைக் காலத்தில் மழை நீரை சேகரித்து கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாகுறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் சுத்தமாய் இல்லை என்று காய்ச்சி வடிகட்டிய தண்ணீருடன் பயணம் செய்கிறோம்.
குடி தண்ணீர் மூலம் தான் நோயகள் பரவுகின்றன. பஞ்சபூதத்தையும்கெடுத்து விட்டோம்.
சுற்றுச் சூழலைமாசு படுத்துபவர்களைத் தண்டிக்க வேண்டும் தொழிற்சாலைக் கழிவுகளைஆறு,குளங்களில் கலக்காமல் பார்த்துக்கொள்ள தீவிர கண்காணிப்புத் தேவை.நீர் மேலாண்மை பற்றிய விழிப்புண்ர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
7 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை.இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்.இயற்கை வளத்தை பாதுகாக்கா விட்டால் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாமல் போய்விடும் இந்த உலகம்.
சிலர் தண்ணீரை வீணடிப்பதை பார்த்தால் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே பாடல் நினைவுக்கு வருகிறது.சிக்கனத்துக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்கள் தங்கை வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்தாராம் சாப்பிட்டு முடிந்தவுடன் தங்கச்சி மகன்(ஈரோடு சாமி)மாமாவுக்கு கை கழுவ தண்ணீரை நிறைய ஊற்றிக்கொண்டே இருந்தாராம் பெரியார் பொட்டுன்று ஒர் அடி அடித்து ஏன் அடித்தேன்னு கேளு அப்படின்னாராம் “ஏன் அடிச்சிங்க?”ன்னு கேட்டார் தங்கச்சி மகன். அதுக்கு பெரியார்”இது தண்ணியா இருக்கிறதுனாலே தானே இப்படி தாராளமாக ஊத்தறே. நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா? தண்ணியா இருந்தாலும் அதை அளவோடதான் செலவு பண்ணனும் வீணக்கப்புடாது” என்று சொன்னாராம். இந்தக்காலத்துக்கும் எந்தக் காலத்துக்கும் தேவையான் ஒர் அறிவுரை.
பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள் என்பார்கள். அதை மாற்றி தண்ணீரை பணம் மாதிரி செலவு செய் என்று சொல்ல வேண்டும். நிலத்தடிநீர் என்பது உலகமக்களின் சொத்து. ஆறுகள் வரண்டு போனால் நிலத்தடி நீர் எங்கு இருக்கும்.குழாய்ப் போட்டு உறிஞ்சி எடுத்து கொண்டே இருந்தால் ’சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ நிலத்தடி நீர் வளத்தை பெறுக்க மரங்கள் வளர்ப்போம்.மரம் வளர்த்து மழை பெறுவோம்.மழை நீரைச் சேமிப்போம்.நீர் இல்லாத ஏரி குளங்களில் வீடு கட்டுவதைத் தவிர்ப்போம்.
இரசாயன் உரத்தைக் கொட்டி, உயிர்க்கொல்லிகளைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கி விட்டோம் இயற்கை உரங்களைப் போட்டு நிலத்தை நல்ல நிலமாக மீட்டால் நந்நீர் பெறலாம்.
நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும்.மழை பொழிந்தால் தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.
விவசாயத்திற்குச் சொட்டு நீர்ப் பாசனம் இருந்தால் நீர் தேவையின்றி ஆவியாவது தடுக்கப் படும். வேருக்குச் சொட்டு நீர்ப் பாசனம், நீர் சிக்கனத்தைத் தருவது போல இலைகளுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம் நன்மை தரும். நீர்ப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்,நகர் ஆக்கம்,காலநிலை மாறுபாடு,மாசுபாடு,வணிகம் ஆகியவை காரண்ம்.
நீர்ப் பற்றாக் குறை காரணமாக அண்டை வீடுகளுக்கும், அண்டை வயல்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகினறன. கி.மு 2500ல் சுமேரியாவில் இருந்த லகாஷ்,உம்மா ஆகிய நாடுகளுக்கு இடையே நதி நீரைப் பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதே நிலமை இப்படி இருந்தால் இப்போது கேட்கவா வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கபப்டுகிறது. இந்த வருடம் சுத்தமான் நீரின் அவசியம் பற்றி மக்களிடையே”சுத்தமான் நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்”’ என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தர உள்ளனர்.
” ஏரி, குளம்,கிணறு,ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க”
வாழ்க வளமுடன்!!
இப்பதிவினை மண் மரம் மழை மனிதன் பதிவில் மரவளம் வின்சென்ட் அவர்கள் எழுதியிருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
உயிரைக் காக்கும் தண்ணீரை உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும்
பதிலளிநீக்குஅருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.எல்லோரும் புரிந்து நடந்தால் நல்லது
பதிலளிநீக்குஒரு சிலர் தண்ணி வீணாக்கறதைப்பாத்தா ரொம்ப கோபம் வரும். பெரியவங்களா இருந்தா ஒண்ணும் சொல்லவும் முடியாது.
பதிலளிநீக்குதொடர்ந்த முறையில் பதிவுகளும் பெருகட்டும் உலக நன்னீரும் பெருகி வழியட்டும். நன்றி - பதிவிற்கு அம்மா!!
பதிலளிநீக்கு//பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள் என்பார்கள். அதை மாற்றி தண்ணீரை பணம் மாதிரி செலவு செய் என்று சொல்ல வேண்டும்.//
பதிலளிநீக்குஅழகாய் சொன்னீர்கள்.
//நிலத்தை நல்ல நிலமாக மீட்டால் நந்நீர் பெறலாம்.//
கவனிக்க வேண்டிய கருத்து.
என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மிக அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். நல்ல பதிவுக்கு நன்றி!
மிகவும் அருமையான கட்டுரை அம்மா, எந்த விஷயத்தையும் விட்டு விடாமல் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் - பின்பற்றுவோம்!
பதிலளிநீக்குகோமா, முதல் ஆஜருக்கு நன்றி.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி.
எல்லோரும் புரிந்து நடப்பது காலத்தின் கட்டாயம்.
சின்ன அம்மிணி, அவர்கள் திருந்த இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டும்.
பதிலளிநீக்குநம்மால் முடிந்ததது அது தான்.
தெகா, பதிவுகளும் பெருகும்,உலக நன்னீரும் பெருகி வழியும்.
பதிலளிநீக்குராமலட்சுமி,பாராட்டுக்கு நன்றி.
பதிலளிநீக்குநீங்கள், முத்துலெட்சுமி ,தெகா,முகுந் அம்மா எல்லாம் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
முல்லை,நீங்கள் இன்னும் அழகாய் சொல்லுவீர்கள். எதிப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன், உங்கள் பதிவை.
பதிலளிநீக்குவிவசாயத்தில் தண்ணீர் உபயோகம் பத்தியும் அழகா சொல்லியிருக்கீங்களேம்மா. நன்றி :)
பதிலளிநீக்குHello Friend, Hope everything is fine.
பதிலளிநீக்குI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
ஆதவன்,விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லையே.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி.
நீங்கள் எப்போது எழுத போகிறீர்கள்?
நன்றாக எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
//இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்.//
பதிலளிநீக்குபயமாத்தான் இருக்கு, நம்ம பிள்ளைங்க எப்படி சமாளிக்கப் போறாங்களோன்னு!!
இப்போ தான் உங்க தளத்திற்கு வர்றேன். தண்ணீர் தினத்தை பற்றிய தங்களின் பதிவு அருமை. உரங்கள் போட்டு மண்ணையும், நீரையும் கெடுத்ததை அழகா சொல்லி இருக்கீங்க. நல்ல பதிவு
பதிலளிநீக்குஹீஸைனம்மா,பயம் வேண்டாம்.
பதிலளிநீக்குநம்ம பிள்ளைகள் நலமாக இருக்க தானே இந்த விழிப்புணர்வு பதிவு.
இயற்கை வளத்தை பெருக்கினால்
நாளைய சமுதாயம் நலமாக இருக்கும்.
நம்புவோம்,நம்பிக்கை தான் வாழ்க்கை.
முகுந் அம்மா,உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்குநீங்களும் அருமையாக எழுதியிருக்கிறீகள்.
பதிவு இட்டதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு"7 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை.இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்".
இன்றைய தலைமுறையின் மனநிலையை கூறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
நீர்ப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்,நகர் ஆக்கம்,காலநிலை மாறுபாடு,மாசுபாடு,வணிகம் ஆகியவை காரண்ம்.///
பதிலளிநீக்குஉண்மை தான்.. பெருகிவரும் மக்கள் தொகைக்கு கழிவுநீர் முழுக்க நேரா நீராதரத்துல நேரடியா இணைப்பது தான் நடக்கிறது.திட்டமிட்ட நகரங்கள் இப்போது இல்லை.. :(
கோமதி மேடம்..
பதிலளிநீக்குமிக மிக அருமையான பதிவு...
“நீரின்றி அமையாது உலகு” என்பது பெரியோர் வாக்கல்லவோ!!??
எதையும் பார்த்து செலவழித்தால், எதிர்காலத்திற்கு நல்லது... அது நாடாயினும், வீடாயினும் எதற்கும் பொருந்தும்..
ஊதும் சங்கை நம்பிக்கையோடு ஊதி வைப்போம்... ஏனெனில், கேட்கும் செவியனைத்தும் செவிடல்லவே....
மற்றுமொரு நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள் கோமதி மேடம்..
//நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும்.மழை பொழிந்தால் தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.//
பதிலளிநீக்குவாழ்க்கை ஒரு வட்டம் போல, வாழும் உயிரினங்களுக்கு தேவையான நீரும் சுழற்சி முறையிலேயே உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது! தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில் நம்மால் முடிந்த அளவு மரங்கள் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுதல் வேண்டும்! உபயோகப்படுத்துவதை பற்றி யோசிப்பதை விட, உற்பத்தி பற்றி யோசிப்பதுவும் இப்பொழுது முக்கியம்!
பதிவுக்கு நன்றி அம்மா!
எதையும் பார்த்து செலவழித்தால்,எதிர்காலத்திற்கு நல்லது.அது நாடாயினும் வீடாயினும் எதற்கும் பொருந்தும்.//
பதிலளிநீக்குஆம் கோபி நீங்கள் சொல்வது உண்மை.
வாழ்த்துக்கு நன்றி.
//உபயோகப்படுத்துவதைப் பற்றி யோசிப்பதை விட உற்பத்திப் பற்றி யோசிப்பதுவும் இப்பொழுது முக்கியம்.//
பதிலளிநீக்குஅருமையாக சொன்னீர்கள் ஆயில்யன்!
காலத்தின் கட்டாயம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.
முத்துலெட்சுமி, நீங்கள் சொல்வது போல் திட்டமிட்ட நகரங்கள் இருந்தால் நாடு நலம் பெறும்.
பதிலளிநீக்குநன்றி.
வின்சென்ட்,உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த மாதிரி நல்ல பதிவு எழுத வைத்தமைக்கு.
பதிலளிநீக்குஅன்பு கோமதி,
பதிலளிநீக்குவெகு அழகாக அழுத்தமாகத் தண்ணீர் நலம் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நிலத்தடி நீர் குறைவதைப் பற்றிச் செய்திகள் வரும்போது மிகவும் கவலையாக இருக்கும்.எல்லோரும் உணர்ந்தால் நன்றாக இருக்கும்.
அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம் .
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவான் பனித்துளி !
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. ஆயில்யன் பின்னூட்டமும் ஜுப்பர்.
பதிலளிநீக்குநம்மால முடிஞ்ச வரை சிக்கனமாகவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் முயல்வோம(இன்னும் நிறைய பண்ணலாம்)
பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.
பதிலளிநீக்குஎல்லோரும் உணரும் காலம் வந்து விட்டது.
சங்கர்,உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு//நிலத்தடி நீரை அதிகரிக்க இன்னும்
பதிலளிநீக்குநிறைய பண்ணலாம்//
நிறைய பண்ணலாம்,கபீஷ்.
உங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி.
மிகவும் பொறுமையாக, பல உபயோகமான தகவல்களைத் தொகுத்து, விபரமாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநன்றி சேட்டைக்காரன்,முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும்.
பதிலளிநீக்குஇன்னிக்குத்தான் மின்சாரத்த வீனாக்கரோமுன்னு IPL நைட் மேட்ச திட்டாத கொறையா நா எழுதிருக்கேன். http://madhavan73.blogspot.com/2010/03/i-p-l.html
பதிலளிநீக்குநீங்க சொல்லுறது ரொம்ப ரொம்ப கரெக்டு. தண்ணிய செமிச்சா மின்சாரம் கூட நல்லா கிடைக்கும்.
மாதவன் ,தண்ணீர் சிக்கனம் மாதிரி மின்சாரச் சிக்கனமும் அவசியம்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
பதிலளிநீக்குbogy.
இனிய புத்தாண்டில்
எல்லோரும்,எல்லா நலங்களும் பெற்று வாழ்க வளமுடன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
பதிலளிநீக்குநல்ல விளைநிலங்களையும் செங்கல்சூளைகளாக வீட்டுமனைகளாக மாறிவிட்டன.எங்கள் நிலத்தை மட்டும் என் தந்தை போராடி விவசாயம் செய்து வருகிறார். வயதானவர்கள் கஷ்டப்பட வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார் ஆனால் எவ்வளவுதான் பாடு பட்டாலும் பலன் என்னவோ பூஜ்யம்தான். நீர்வளத்தையும் நில வளத்தையும் இழந்து எதிர்கால சந்ததியினர் எண்ண செய்ய போகிறோம் தெரியவில்லையே.
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள் இந்திரா.
பதிலளிநீக்குநல்ல விளைநிலங்கள், வீட்டுமனையாகவும், செங்கல்சூளையாகவும் தான் மாறி வருகிறது.
உங்கள் அப்பாவை வணங்க சொல்கிறது.
உங்கள் அப்பாவுக்கு வணக்கங்கள்.
உழுபவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட் மிஞ்சாது என்று பழமொழியே இருக்கு என்ன செய்வது!
நிலத்தடி நீர்வளத்தை பெருக்கினால் எதிர்கால மக்களுக்கு நல்லது.
நம்பிக்கையுடன் இருப்போம்.
சித்திரை மாதம் மழை பெய்யும் என்கிறார்கள்.
நீங்கள் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி இந்திரா.