ஞாயிறு, 7 மார்ச், 2010

மகளிர் தின வாழ்த்துக்கள்

” பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்னபெருமை
இதைவிடப் பேசுதற்கு”
-மாக்கோலம்.

” மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”
கவிமணி தேசியவினாயகம் பிள்ளை அவர்கள்.

காதலொருவனைக் கைபிடித்தே யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்

பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா

என்றெல்லாம் பெண்மையை ஆண்கள் போற்றி புகழ்ந்து சொல்கிறார்கள்.
பெண் முதலில் தன் பெருமையை உணர வேண்டும்.ஆண்களுக்கு உடல்
பலம் என்றால் பெண்களுக்கு மன பலம்.சின்ன விஷயங்களுக்கும் உடைந்து போகாமல்
தன்னைக் காத்துக் கொண்டு,தன் குடும்பத்தையும் பேணுபவளே பெண்.

பெண்கள் சமமாக எல்லாத் துறையிலும்முன்னேறி வர வேண்டும்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் குடும்பத்தினுடைய முன்னேற்றம்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!

16 கருத்துகள்:

  1. மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா :)

    பதிலளிநீக்கு
  2. //பெண் முதலில் தன் பெருமையை உணர வேண்டும்.//

    சரிதான்.. அப்படியே ஆண்களை குறை சொல்வதும் தானா குறையுமே :)

    மகளிர் தின வாழ்த்துகள் அம்மா :)

    பதிலளிநீக்கு
  3. மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் ;-)

    பதிலளிநீக்கு
  4. மகளிர் தின ஸ்பெஷல் வாழ்த்துகள்!
    (மகளிர் தினத்தை ஒட்டிய என் பதிவைப் படிக்கவும் :
    http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_07.html)

    பதிலளிநீக்கு
  5. மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்...

    பதிலளிநீக்கு
  6. //ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்//

    ரொம்ப சரியே....

    மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. ஆயில்யன்,ஆதவன்,கோபிநாத்,பெயர்
    சொல்லவிருப்பமில்லை,முத்துலெட்சுமி,துளசிகோபால்,சந்தனமுல்லை,
    விடிவெள்ளி,சென்ஷி,ஹீஸைனம்மா,
    ராமலக்ஷ்மி,கோபி எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா

    பதிலளிநீக்கு
  9. கண்மணி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மகளிர் தின வாழ்த்துக்கள் கோமா அம்மா

    பதிலளிநீக்கு