புதன், 20 ஜனவரி, 2010

வேகம் விவேகம் அல்ல

வேகம் விவேகமல்ல
--------------------
முத்துலெட்சுமி சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தாங்க,
முத்துலெட்சுமி நனறாக எழுதியிருந்தார்கள்.நானும் என்னால் முடிந்ததை
எழுதுகிறேன்.


என் குருநாதர்சொல்லுவார்: இந்த உலகம் எவ்வளவு வலுவுள்ளதாக இருக்கிறது?
தன்னைத் தானே வேகமாகச் சுற்றுகிறது என்றால் ,யார் சுற்றுவது? நமக்கு
அப்பாற்பட்டதாக,எல்லாவற்றையும் அழுத்தம் எனும் உந்து ஆற்றலால் தனக்குள்
அடக்கிக் கொண்டு இருக்கின்ற அந்த சுத்தவெளிதான் இறைநிலை.மெய்ப்பொருள்.
அந்த சுத்தவெளியில் இரண்டு தன்மைகள் அடக்கமாக உள்ளன.1)வேகம்2)விவேகம்
வேகம் என்பது விண்ணாக,சக்தியாக மலர்ந்தது.அதை மீண்டும் அதே சுத்தவெளியில்
சுழல வைத்து,அதுவும் சுழலவும்,அவை பல கூடியது சுழலவும்,இந்த பேரியக்க மண்டலம்
முழுவதும் முறையாக சுழல விட்டு,என்றுமே தவறாது இயங்கிக் கொண்டு இருப்பதனால்
அதற்கு ’அறிவு’ என்று பெயர். பரநிலையில் வேகம் விவேகம் இரண்டும் அடங்கியுள்ளன.
இவை அடங்கியிருப்பது மனித மனத்திற்குத் தெரியவில்லை.

வேகம் விவேக மில்லை.
----------------------
சாலை விபத்திற்கு காரணம் முதலில் வேகம் தான் .அதற்கு தான் வேகத்தடை வைத்தும்
அதிலும் சர்க்கஸில் ஜீப் ஓட்டுபவர் போல் அதி வேகமாய் சாகஸம் செய்கிறார்கள்.
தானத்தில் சிறந்தது நிதானம் தான். நிதானமாய் கவனித்து வண்டி ஓட்டி செல்பவர்களை
பின்னால் வருபவர்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி , அவர்களை முந்தி செல்வதில் மகிழ்ச்சி
அடைகிறார்கள்(என் கணவரை அப்படி அடிக்கடி முந்தி செல்வார்கள்)இகலோகத்தில்
எவ்வளவோ அனுபவிக்க இருக்கும் போது பரலோகத்திற்கு என்ன அவசரம் என்று சிறியவர்களைத் திட்டும் பெரியவர்களையும், ”என்ன பெரிசு ,வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டாயா என்று கேட்கும் சிறியவர்களையும் சாலைகளில் நாம் பார்க்கலாம்.
மெதுவாய் ஓட்டினால் கட்டை வண்டி
ஓட்டுகிறாயா எனறு கேள்வி? வேகமாய் ஓட்டினால் காரில் போனால் கண்ணு மண்ணு
தெரியாதே எனற பேச்சு .இதிலிருந்து தெரிவது ரொம்ப மெதுவாகவும் போக கூடாது,
ரொம்ப வேகமாகவும் போக கூடாது, நிதானமாய் போக வேண்டும் என்பது.

எதிலும் வேகம் எங்கும் வேகம்
----------------------------
வேகம் வேகம் என்று தாங்களே முதலில் முந்திப் போக வேண்டும் என்று எல்லோருமே நினைக்கிறார்கள் .சீக்கிரம் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்கள் .
டிராபிக் ஜாம் ஏற்பட்டால் காத்திருத்தல் என்பது பெரிய குற்றமாய்
கருதப்படும் காலம். இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கிடைக்கிற சந்து
பொந்துகளில் நுழைந்து போய்விடுவார்கள்,(திட்டுகளை வாங்கி கொண்டு).
போதிய இடைவெளி விட்டு வாகனங்களை ஓட்டாமல் பின் செல்லும் போது,
முன்னால் செல்லும் வாகனம் திடீர் எனறு பிரேக் போட்டால் என்ன செய்யமுடியும்?
முன்னாலோ,பின்னாலோ இடிக்க வேண்டி உள்ளது. பிறகு சண்டை,சச்சரவு ,வாக்கு
வாதங்கள்.

சாலை விதிகள்
--------------
இந்தியாவில் சக்கரங்களுள்ள அனைத்து வண்டிகளுக்குமான பாதை விதி
‘இடது பக்கம் செல்லவும்’ என்பதேயாகும். இவ்விதியை அனுசரிப்பதானது
வாழ்வுக்கும் சாவுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகும்.
பாதையில் ஆடு ,மாடுகளை ஓட்டி செல்பவர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்து கொள்ளாமல்
விட்டு விட்டால் ஆடு ,மாடுகள் மேல் வண்டி ஏறாமல் இருப்பதற்காக
ஓட்டுநர் வண்டியை வேறு பக்கம் திருப்ப அதனால் விபத்து ஏற்படுகிறது.
ஆடு ,மாடுகளை ஓட்டி செல்பவர்களும் சாலை விதிகளை மதிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கும் சாலை விதிகளை சிறு வயதிலேயே சொல்லி தர வேண்டும்.
முன்பு நான் சிறுமியாய் இருக்கும் போது நீதி போதனை வகுப்பு உண்டு.
அதில் சாலை குறியீடுகள்,சாலை அடையாள குறிகள்,சாலை விளக்குகள்
பற்றி எல்லாம் பாடம் உண்டு .இப்போது இல்லை.

போக்குவரத்துச் சட்டங்கள்
------------------------
ஓட்டுநர் உரிமையை நேர்மையாக பெறவேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள்
உரிமம் பெறாமலே வண்டிகளில் பறக்கிறார்கள்.சிறு வயதிலேயே
வண்டி ,கையில் செல்,செல்போனில் பேசி கொண்டே போகிறார்கள் .அதை தடை
செய்தால் விபத்துகள் தடுக்கலாம்.குடிபோதையில் ஓட்டுவது,அனுமதியில்லாத
சட்ட விரோதமான வேகப் போட்டியில் ஓட்டுவது எல்லாம் கடுமையாக தடை
செய்ய பட வேண்டும்.மக்கள் போக்குவரத்துச் ச்ட்டங்களை மதித்து நடந்தாலே
விபத்துகளை தடுக்கலாம்.மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்களுக்கு
கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.மற்றவர்கள் தண்டனைக்கு பயந்து
சரியாக நடக்கலாம்.

பொதுவிதி
---------
உலகத் தரம் வாய்ந்த சாலைகள் வேண்டும். மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளில்
போக்குவரத்து காவலர் அதிகம் கண்டிப்பாய் தேவை.விபத்துப் பகுதி என்று
அறிவித்த இடத்தில் ,நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில்
இருக்க வேண்டும்.என் அண்ணனுக்கு விபத்து ஏற்பட்ட போது,அந்த ஊர் வயலில்
வேலை பார்த்துக்கொண்டு இருந்த நல்ல மக்கள் அந்த வழியில் செல்லும் வாகனங்களை
நிறுத்த சொல்லி கேட்டு இருக்கிறார்கள். யாரும் நிறுத்தாமல் போகவே,ஊர் ம்க்கள்
கல் விட்டு எறிந்து பாதை நடுவே நின்று வழிமறித்து பஸ்ஸில் ஏற்றி பக்கத்து
ஊர் ஆஸ்பத்திரியில் சேர்த்தும் பயனின்றி அண்ணன் உயிர் பிரிந்தது.அண்ணன்
இறந்த வருடம் 1989 .அப்போது செல் வசதி கிடையாது .ஆனால் இப்போது எல்லா
வசதியும் இருந்தும் ஆள்படைகள் இருந்தும் ஒரு காவல் துறை ஆய்வாளர் உயிர் போனது
வருந்த தக்க நிகழ்ச்சி .

மக்களிடம் விழிப்புணர்வு தேவை.மித வேகம் நன்று.
வேகம் தேவை இல்லை,விவேகம் தான் தேவை.

அருட்காப்பு
”அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்
பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும்
அமையுமாக!வாழ்க வளமுடன்!”

18 கருத்துகள்:

  1. //ஓட்டுநர் உரிமையை நேர்மையாக பெறவேண்டும்//

    நிறையபேர் அப்படி இருந்தால் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்... முத்தாய்ப்பாக இந்த அறிவுரையுடன்...

    //”அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்
    எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்
    பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும்
    அமையுமாக!வாழ்க வளமுடன்!”//

    தொடர் பதிவு எழுதுவதற்கு உங்களை அழைத்த முத்துலெட்சுமிக்கும், அதை சிறப்பாக எழுதிய உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் கோமதி மேடம்...

    பதிலளிநீக்கு
  3. முதல் வருகைக்கு நனறி,
    சின்ன அம்மிணி.

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுக்கு நன்றி கோபி.


    அறிவுரை மகரிஷி அருளியது.

    பதிலளிநீக்கு
  5. எனக்கு ஓட்டிக்காட்டமலே தான் ஓட்டுனர் அட்டை கொடுத்தார்கள் அதனால் தான் நான் கார் ஓட்டுவதில்லை... :)

    நிச்சயமாக நிதானமும் விவேகமும் கடைபிடித்து பாதுகாப்பாக இருப்போம். பதிவுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  6. //மக்கள் போக்குவரத்துச் ச்ட்டங்களை மதித்து நடந்தாலே
    விபத்துகளை தடுக்கலாம்//

    itha itha first ellarum follow pannanum signal greenuku marama vandi eduka koodathu...

    பதிலளிநீக்கு
  7. விவேகமற்ற வேண்டாத வேகம் ஒரு மயிரிழையில் வாழ்வையே திசை திருப்பி விடும். மிக அருமையாக தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் அண்ணனுக்கு நேர்ந்த நிகழ்வுக்கு என் வருத்தங்கள்.

    //இப்போது எல்லா
    வசதியும் இருந்தும் ஆள்படைகள் இருந்தும் ஒரு காவல் துறை ஆய்வாளர் உயிர் போனது//

    இந்த நெருடல் எளிதில் மறையாது எவருக்கும்.

    நல்ல இடுகைக்கு நன்றிம்மா!

    பதிலளிநீக்கு
  8. அம்மா நீங்களும் இந்த வேகத் தொடர்பதிவில கலந்துகிட்டீங்களா, நான் நேற்றே படிச்சிட்டேன்.

    //இதிலிருந்து தெரிவது ரொம்ப மெதுவாகவும் போக கூடாது,
    ரொம்ப வேகமாகவும் போக கூடாது, நிதானமாய் போக வேண்டும் என்பது.//

    இதான் சாலையில், வாகனத்தை கையாளும் பொழுது நான் கடைபிடிக்கிற அணுகுமுறை, இருந்தாலும் இன்றைய உலகம் ரொம்ப வேகமா இருக்கிறதுனாலே, போட்டுருக்க ஸ்பீட் லிமிட்க்கு மேலே ஒரு 10ல இருந்து 15க்கு மேல போட்டு ஓட்டுறதுதான் சோ கூல் இங்க எல்லாம்... அதில ஒரு த்ரில் இருக்காம் :)

    பதிலளிநீக்கு
  9. முத்துலெட்சுமி முறைப்படிஓட்டுனர் உரிமை வாங்கி நன்றாக கார் ஓட்டுங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கார்த்தி,நீங்கள் சொல்வது போல்
    சிக்னலை மதித்து நடந்தாலே
    பாதி விபத்துக்கள் நடக்காது.

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ராமலக்ஷ்மி,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

    என் அண்ணனுக்கு நேர்ந்த நிகழ்வுக்கு
    வருத்தம் தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஆம் தெகா, நீங்கள் சொன்னது போல் உலகம் ரொம்ப வேகமாய்த் தான் உள்ளது.

    நீங்கள் நிதானமாய் போங்கள்.

    பதிலளிநீக்கு
  13. மிக நல்ல பதிவு, நானும் இதில் பங்கேற்று பதிவிட்டுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி..:)

    பதிலளிநீக்கு
  14. :) நல்ல அறிவுரை கலந்த பதிவும்மா

    பதிலளிநீக்கு
  15. :) நல்ல அறிவுரை கலந்த பதிவும்மா

    பதிலளிநீக்கு
  16. பயனுள்ள குறிப்புகள் - அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! :-)

    பதிலளிநீக்கு
  17. நல்லா எழுதி இருக்கீங்க கோமதி.

    பதிலளிநீக்கு
  18. ஆதவன்,முல்லை,பா.ரா மூவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு