திங்கள், 25 ஜனவரி, 2010

உடல் நலம்

உடல் நலம்
-----------
“வரும் முன் காப்பதே அறிவுடைமை!”
-----------------------------------

இப்போது சமுதாய மக்களிடையே உடல் நலத்தைப் பற்றி நல்ல விழிப்புணர்வு உள்ளது.
உடல் நலத்தைப் பற்றி திருவள்ளுவர்,திருமூலர், எண்ணிறந்த சித்தர்கள் வள்ளலார் மற்றும் பல மெய்ஞ்ஞானிகள் சொல்லி உள்ளார்கள்.அரவிந்தர்,அன்னை,ராம்கிருஷ்ணர், வேதாத்திரி
மகரிஷி ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள்.தினம் ஒருவராய்ப் பார்க்கலாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று. என்னுடன் நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.


வேதாத்திரி மகரிஷி
----------------
மனிதன் துன்பங்கலவாத இன்பத்தை தான் பெரிதும் விரும்புகிறான். இன்பத்தை உடலால் தான் அனுபவிக்கிறோம். உடலானது முழுநலத்துடனும்,ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்,மேலும் தொடரும். உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வரும் இன்பம் கெட்டு துன்பம் வந்து விடுகிற்து. துன்பத்தின் உக்கரம் சில நேரங்களில் பொறுக்க முடியாத நிலையிலும் நோயால் ஏற்படும் பாதிப்புச் சில நேரங்களில் எதிர்கால இன்பத்தையும், வாழ்வையும் கூட கொள்ளை கொண்டு விடுகிறது. ஆகவே நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

உடலில் ஏற்கனவே இருக்ககூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை அதை சிகிட்சை என்று சொல்வார்கள்.நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்ன வென்றால் நோய் வராமலே தடுத்துக் கொளவது என்பதாகும். அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு, அதற்குரிய செயல் ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக் கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத தடுத்து கொள்வது சுலபமானது, தெரியவரும்.

“கருவமைப்பு,ஆகாரம்,எண்ணம்,செய்கை
ககனத்தில் கோள்கள் நிலை சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும் மாற்றம் தரமொக்க இன்ப துன்பம்
தகுந்த அளவாம் இதிலோர் சக்தி மீறிப்
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறிப்
பின்னும் அதிகரித்து விட மரணம் ஆகும்”

உணவு, எண்ணம்,செய்கை ஆகிய வற்றால் ஏற்படும் மாற்றங்களைத் தக்கவாறு கணித்து என்னென்ன உணவு அல்லது எண்ணம் அல்லது செய்கை என்ன விதமான மாற்றத்தைத் தருகிறது. என்வே எந்த உணவை அல்லது எண்ணத்தை அல்லது செயலைத் தொடர்வது அல்லது விடுவது என்பது போன்று ஆராய்ந்து தக்க நடவடிக்கை மூலம் உடல் நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

சந்தர்ப்ப மோதுதலால் வரும் மாற்றங்களைப் பொதுவாக ஏற்றுக் கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் கருவமைப்பாலும் கோள் நிலையாலும் ஏற்படும் மாற்றங்களை நமது மனவளக்கலை மூலம் பெரும்பாலும் மாற்றி நற்பயன் துய்க்கலாம். கூடவே முறையான ஒழுக்கப் பழக்கங்களும் நல்லெண்ணம்,நற்செய்கைகளும் வேண்டும்.உடற்பயிற்சி கூட அதில் அடக்கமே.

நோயற்ற உடலில் தான் அறிவும் திறம்பட இயங்கும். இன்பங்களைத் துய்க்க இயலும் .
எனவே ஒவ்வொருவரும் நோயற்ற வாழ வழி கண்டாக வேண்டும். மனத்தூய்மை, ஒழுங்கான உணவு,அளவான உழைப்பு, இவற்றுடன் கூடிய வாழ்க்கை உடல் இருக்க உதவும். பொறாமை,சினம்,வஞ்சம்,கவலை,காம எண்ணங்கள் இவை உடல் காந்த சகதியினைஅழித்து விடும். தவத்தாலும்,ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றிவிடலாம். வெற்றி நிச்சியம் என்கிறார். உடற்பயிற்சி,உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும்,இனிமையும் பெற்று வாழலாம்.

தினந்தோறும் நாம் காலையிலிருந்து மாலை வரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம். சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன் ;சுத்தப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்? அதே போல தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக்கிறோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்கு தயாராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?


உடலுக்குக் கொடுக்கக்கூடிய ‘உடற்பயிற்சி’ மனதிற்குக் கொடுக்கக் கூடிய ‘தியானப்பயிற்சி’ உயிருக்குறுதி அளிக்கும் ‘காயகல்பப் பயிற்சி’ இம் மூன்றும் உடலையும்,உள்ளத்தையும்,உயிரையும் மேன்மைப் படுத்தி,தூய்மைப் படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பவையாகும். என்கிறார்.


ஆறுகுணங்களை சீர் செய்ய வேண்டும் என்கிறார்.

பேராசையை- - -------- நிறைமனமாகவும்
சினத்தை - - ---------- சகிப்புத்தன்மையாகவும்
கடும்பற்றினை ----------- ஈகையாகவும்
முறையற்றபால்கவர்ச்சியை---------------- கற்பாகவும்
உயர்வு தாழ்வு மனப்பான்மையை---------- சமநோக்காகவும்
வஞ்சத்தை ---------- மன்னிப்பு ஆகவும்

மாற்றி அமைத்தாலன்றி மனிதன் மனிதாக இருக்க முடியாது.

அடுத்து தற்சோதனை செய்ய சொல்கிறார்.

1.எண்ணம் ஆராய்தல்
2.ஆசைசீரமைத்தல்
3.சினம் தவிர்த்தல்
4.கவலை ஒழித்தல்
5.தன்னிலை விளக்கம்-நான் யார்?

1.எண்ணம் என்பது என்ன? அதன் ஆற்றல் எவ்வளவு? அது எப்படி தோன்றுகிறது?ஏன் அந்த
எண்ணம் வந்தது? அதற்குக் காரணம் என்ன?என்று கண்டு “அந்த எண்ணத்தைச் செயல் படுத்தினால் என்ன விளைவுஏற்படும்?அந்த விளைவு நமக்கும்,பிறர்க்கும் நன்மை தருமா?” என்பதைத் தெரிந்து கொண்டு அந்த விளைவு துன்பம் தரத்தக்கதாக இருந்தால் அப்போதே
பல தடவைகள் சங்கற்பம் செய்து அந்த எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றிக் கொள்ள ஏற்ற பயிற்சியே எண்ணம் ஆராய்தல்.

2.ஆசைசீரமைத்தல்;(ஆசை ஆசை இப்போழுது பேராசை . ஆசை கூடும் காலம் எப்போழுது) நமது மனதின் வேகம்,விரைவு மிக அதிகம். மனது ஒரு மணி நேரத்தில் பத்து நூறு ஆசைகளைக் கூட உண்டு பண்ணிவிடும்.ஆனால் அந்த ஆசைகளை உடலின் ஆற்றலுக்குத் தக்கவாறுதானே நிறைவு செய்ய முடியும்?அப்படி உண்டு பண்ணிய ஆசை நிறைவேறாமல் தேங்கி நிற்குமேயானால் மனம் சோர்வடையும். வாழ்க்கை நன்றாக இருக்காது.ஆகையால் நாம் ஆசைப்பட்டாலும் அது நம்மால் முடிக்க கூடியதாக இருக்க வேண்டும் .நலம் தரும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு திட்ட்மிட்டுச் செயலாற்றுவதே ஆசை சீரமைத்தல் .

3.சினம் தவிர்த்தல்:சினம் எழாமலேயே தடுப்பதற்கு, மனதை விழிப்பு நிலையிலேயே
வைத்துப் பயிற்சி செய்வது. அதிகமாக யாருடைய நன்மைக்காக நீங்கள் பாடுபடுகிறீர்களோ அதிகமாக அவர்கள் மீதுதான் சினம் வருவது இயல்பாக இருக்கிறது.அந்த மாதிரி
ரொம்ப நெருங்கியவர்கள் மீது சினம் வந்து வந்து அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொண்டால் வாழ்க்கையில் நிறைவு பெறமுடியாது. அவர்களுடைய புண்பட்ட மன அலை உங்களுக்குச் சாபமாகி,பின் அவர்களுக்குக் சாபமாகி இரண்டு பேருமே நோய்வாய்ப்படும் நிலை உருவாகும்.அடுத்தவர்கள் செய்வது தவறாக இருந்தாலும்,பொறுத்துக்கொண்டு அன்பு காட்டி, வாழ்த்தி வாழ்த்தி அதனை சரிப்படுத்தி விடலாம்.


4.கவலை ஒழித்தல்: அதாவது,நாம் தவறாகப் புரிந்து கொண்டு எடுக்கும் தவறான முடிவுகளே கவலைகளுக்குக் காரணம்.அதாவது உங்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையில் துண்டு விழுகிறபோது,நீங்கள் எதிர்பார்க்கிறதுக்கும்,நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது,உங்கள் கற்பனைக்கும் இயற்கையாக நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது தன்னுடைய எண்ணத்துக்கும் இன்னொருவர் எண்ணத்திற்கும் முரண்பாடு காணுகிறபோது கவலைப்படுகிறோம்.நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.சிந்தனை செய்ய வேண்டும் .அறிவில் தெளிவு உண்டாகிறது.கவலை ஒழிகிறது.

5.நான் யார்? எனற வினாவை எழுப்பி,அந்த வினாவில் இந்த உடல் உயிர்,மனம்,அறிவு,மெய்ப்பொருள்,அதாவது பிரபஞ்சம் முழுமையும் இயங்குவதற்குக் காரணமாகவும், ஒவ்வொரு பொருளிலும் இயக்க நியதியாகவும் உள்ள ஒரு பொருளைப் பற்றி விளங்ககூறி,அந்தப் பொருளுக்கும் தனக்கும் உள்ள உறவு,இணைப்பு இதையும் எடுத்துக்காட்டி விளங்க வைப்பது.

ஒன்பது மையங்களில் எப்படி உயிர்ச் சக்தியை இயக்குவது ஒவ்வொரு சுரப்பிக்கும் மூளையில் ஒரு நேர் பகுதி தொடர்பு உள்ளது.அதனால் ஒவ்வொரு மையத்திலும் தவம் செய்யும் போது மூளையில் அதற்கு தொடர்புள்ள பகுதியின் இயக்கம் தூண்டி விடப்படும். இதனால் நோய் தடுப்பு சக்தி உடலுக்கும் ,மனதுக்கும் கூடுகிறது. அதனால் வாழ்வில் உடலுக்கோ மனதுக்கோ ஏற்படக் கூடிய அதிர்ச்சிகளை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியை
ஒன்பது மைய தவம் தருகிறது.ஆழ்ந்த அமைதியைப் பாதிக்காதவாறு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு காணக்கூடிய சக்தியும் இந்த ஒன்பது மைய தவத்தால் ஏற்படுகினறன.

இன்னும் பஞ்ச இந்திரிய தவம்.பஞ்சபூத தவம், நித்தியானந்த தவம் முதலிய சிறப்பு தவங்கள் உடலுக்கும் மனதுக்கும் அமைதி ஆனந்தம் தரும்.
இது தவிர ஜீவகாந்த பெருக்க பயிற்சி ! இது ஜீவகாந்த சகதியை பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெற செய்யும்.

வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது உடல் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். ந்ம்மிடம் தொடர்பு கொள்பவர்களும் நல்லவர்களாய் இருப்பார்கள். நம்மை சுற்றிலும் நல்ல அலை இயக்கம் இருக்கும். தனி மனிதன் நலமாக, அமைதியுடன் வாழ வேண்டுமானால், இந்த உலகம் முழுவதும் வளமாக இருந்ததால் தான் முடியும்.
காலை எழுந்தவுடன் “வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!”என்று கூறி வையகத்தை
வாழ்த்த வேண்டும். வையகம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

17 கருத்துகள்:

  1. ஒரு பத்து நாள் உடற்பயிற்சி செய்தால் அதற்கு பிறகு தொடரமுடியாமல் போகுது... :(

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.

    "எந்த உணவை அல்லது எண்ணத்தை அல்லது செயலைத் தொடர்வது அல்லது விடுவது என்பது போன்று ஆராய்ந்து தக்க நடவடிக்கை மூலம் உடல் நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்." நல்ல கருத்து.

    உடல்பயிற்சி, தியானம் என்பது எல்லோருக்கும் இலகுவானதல்ல.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா இதையெல்லாம் அப்படியே செய்து வந்தால் ஆரோகியத்துடன் வாழலாம் தான்.

    ம்ம் ஆனா எங்கம்மா முடியுது?

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்...நீங்க சொல்லிட்டிங்கம்மா..இங்க சாப்பாடுன்னாலே ரொம் குஷ்டம்..இதுல பயிற்சியா!!!!..ஆனா நோட் பண்ணிக்கிட்டேன்..நேரம் வரும் போது கண்டிப்பாக செய்வோம் ;))

    பதிலளிநீக்கு
  5. கோபிநாத்,
    நேரம் கிடைக்கும் போது செய்யுங்கள்,
    நலமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. //அதிகமாக யாருடைய நன்மைக்காக நீங்கள் பாடுபடுகிறீர்களோ அதிகமாக அவர்கள் மீதுதான் சினம் வருவது இயல்பாக இருக்கிறது//

    என்னுடைய கோபத்திற்கு இப்படி நான் சால்ஜாப்பு சொல்லிக்கொண்டாலும், கோபம் கொள்வது தவறு என்று தெரிந்தாலும், அந்நேரட்தில் மனம் அடக்குவது... இனி அடக்கணும்.

    நன்றி அக்கா நல்ல பதிவுக்கு.

    பதிலளிநீக்கு
  7. மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள். மகிரிஷி சொன்ன சீர் செய்ய வேண்டிய ஆறு குணங்கள், தற்சோதனை ஆகியன நல்ல பகிர்வு. கடைசியாக நல்ல அலை இயக்கம் பற்றிய கருத்து அருமை. காலையில் எழும்போது ‘எல்லோரும் இன்புற்றிருக்க..’ சொல்வது வழக்கம். இனி சேர்த்துக் கொள்கிறேன் “வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!”

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. முத்துலெட்சுமி,
    தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நல்லது.முதலில் பழக்கமாகி பின்
    வழக்கமாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  9. ஆதவன்,
    தினம் நம் உடல் நலத்துக்காக ஒரு 1மணி நேரம் ஒதுக்க முடியாதா?

    பதிலளிநீக்கு
  10. ஹீஸைனம்மா,
    முதல் வரவுக்கு நன்றி.

    //என்னுடைய கோபத்திற்கு இப்படி
    சால்ஜப்பு சொல்லிக் கொண்டாலும், கோபம் கொள்வது தவறு எனறு தெரிந்தாலும் அந்நேரத்தில் மனம் அடங்குவது ...இனி அடக்கணும்//

    இந்த விழிப்புணர்வு வந்தாலே போதும் மனம் நம் வச்மாகும்.

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி ராமலக்ஷ்மி,

    மகரிஷியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்கு.

    நல்ல விஷயங்கள் எங்கு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் வந்து விட்ட உங்களுக்கு மறுபடியும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //திருவள்ளுவர்,திருமூலர், எண்ணிறந்த சித்தர்கள் வள்ளலார் மற்றும் பல மெய்ஞ்ஞானிகள் சொல்லி உள்ளார்கள்.அரவிந்தர்,அன்னை,ராம்கிருஷ்ணர், வேதாத்திரி
    மகரிஷி ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள்.தினம் ஒருவராய்ப் பார்க்கலாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று. என்னுடன் நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.//

    ஆஹா.... நல்ல விஷயத்திற்கு யார் அழைத்தாலும் போவது தானே நல்ல குணம்... அதனால், கண்டிப்பாக வருவோம்...

    //இன்பத்தை உடலால் தான் அனுபவிக்கிறோம். உடலானது முழுநலத்துடனும்,ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்,மேலும் தொடரும். உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வரும் இன்பம் கெட்டு துன்பம் வந்து விடுகிற்து//

    மிக மிக சரியே...

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...

    //நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்ன வென்றால் நோய் வராமலே தடுத்துக் கொளவது என்பதாகும்.//

    ம்ம்ம்ம்... சரிதான்... இதையே தான் வெள்ளையர்கள் “PREVENTION IS BETTER THAN CURE" என்று சொன்னார்கள்...

    //நோயற்ற உடலில் தான் அறிவும் திறம்பட இயங்கும். இன்பங்களைத் துய்க்க இயலும் .//

    உண்மைதான்... உடல் உபத்திரவத்தை கொண்டிருந்தால், அதை சரி செய்யும் முயற்சியிலேயே வாழ்நாள் கழிந்து விடும்...

    //தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக்கிறோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்கு தயாராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?//

    நல்ல யோசனை மற்றும் ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கருத்து...

    //பேராசையை- - -------- நிறைமனமாகவும்
    சினத்தை - - ---------- சகிப்புத்தன்மையாகவும்
    கடும்பற்றினை ----------- ஈகையாகவும்
    முறையற்றபால்கவர்ச்சியை---------------- கற்பாகவும்
    உயர்வு தாழ்வு மனப்பான்மையை---------- சமநோக்காகவும்
    வஞ்சத்தை ---------- மன்னிப்பு ஆகவும்//

    சிந்தையில் நிறுத்த வேண்டிய ஆறு கட்டளைகள் இவை...

    //வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது உடல் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். ந்ம்மிடம் தொடர்பு கொள்பவர்களும் நல்லவர்களாய் இருப்பார்கள். நம்மை சுற்றிலும் நல்ல அலை இயக்கம் இருக்கும். தனி மனிதன் நலமாக, அமைதியுடன் வாழ வேண்டுமானால், இந்த உலகம் முழுவதும் வளமாக இருந்ததால் தான் முடியும்.
    காலை எழுந்தவுடன் “வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!”என்று கூறி வையகத்தை
    வாழ்த்த வேண்டும். வையகம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.//

    நல்ல மனிதர்கள் இருக்கும் சூழலிலே தான், நல்ல எண்ணங்கள் இருக்கும்.. நல்ல எண்ணங்களின் விளைப்பாடே நல்ல செயல்கள்...

    இது ஒரு சுழற்சி... நல்லவர்களாக இருப்போம்... குறைந்தபட்சம், முயற்சிப்போம்...

    நல்ல பதிவு கோமதி மேடம்...

    பதிலளிநீக்கு
  13. கோபி பதிவை ஆழ்ந்துப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    //நல்ல மனிதர்கள் இருக்கும் சூழ்லிலே தான் நல்ல எண்ணங்கள் இருக்கும்..நல்ல எண்ணங்களின் விளைப்பாடே நல்ல செயல்கள்...

    இது ஒரு சுழற்சி... நல்லவர்களாக இருப்போம் ...குறைந்த பட்சம், முயற்சிப்போம்.//

    நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீகள்,கோபி. மீண்டும் உங்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சினம் தவிர்த்தல் & கவலை ஒழித்தல் - படித்துவிட்டேன் ஒழித்துவிட முடியுமென நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  15. அற்புதமான கருத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ராம்.

    பதிலளிநீக்கு