வியாழன், 29 அக்டோபர், 2009

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு

ஆதவன் தீபாவளிப் பற்றி தொடர் பதிவு எழுத இரண்டு நாள்களுக்கு முன்பு அழைத்தார்.
தீபாவளி முடிந்து 10 நாட்கள் ஆனாலும் அழைப்பை மறுக்க முடிய வில்லை.

1.உங்களைப் பற்றிய சிறு குறிப்பு?

அன்பான குடும்பத்தின் தலைவி.

2.தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

என் தலை தீபாவளிக்கு கோவைக்கு என் மாமியார் வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்து
விட்டு போனார் என் அப்பா.அது தான் என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது.கார்த்திகை
மாதம் தன் 51வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.தீபாவளி என்றால் அப்பாவின்
நினைவும் மறக்க முடியாது.

3.2009 தீபாவ்ளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

தீபாவளிக்கு கோவையில்.

4.தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளிபற்றி ஒரு சில வரிகள்?

என் கணவருடன் பிறந்தவர்கள் நாலு பேர் என் கணவரையும் சேர்த்து 5 பேர்.
எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.

5.புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்கள்?

எங்கள் ஊரில் தான் வாங்கினேன், இந்த முறை என் மகளும் வாங்கி வந்தாள்.

6.உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?

அதிரசம் மட்டும் செய்தேன்,பாதுஷா,ஓட்டுப் பக்கோடா சமையல்காரர் செய்து
கொடுத்தார்.

7.உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்
(உ.ம்)மின்னஞ்சல், தொலைபேசி,வாழ்த்துஅட்டை)

தொலைபேசி,மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன்.

8.தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

தீபாவளி அன்று காலை புத்தாடைகளை மாமனார் கொடுக்க அதை பெற்று அணிந்து
வீட்டில் பூஜை முடித்து,பின், வயதில் மூத்த பெரியவர்களிடம் வரிசைப் படி
வணங்கி பின் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு
வந்து, வடை பஜ்ஜி, அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பலகாரங்கள்
இட்லி சட்னி என்று எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு உண்டு உரையாடுவோம். இலையில்
எத்தனை அயிட்டங்கள் என்று எண்ணி உண்போம்.எல்லாம் கொஞ்சம் தான் வைக்க வேண்டும்
ருசிபார்க்கத் தான். பிறகு உறவினர்கள், மாமனார் மாமியாரிடம் ஆசி வாங்க வருவார்கள்.
மதியம் உணவு சமைத்தல்,பிறகு மாலை எல்லோரும் குடும்பத்துடன் அன்னபூரணி
கோவிலில் லட்டு தேர் பார்ப்போம்.சிருங்கேரி சாரதா கோவில் எல்லாம்
போய் வருவோம், இப்படி இருக்க எங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
தொலைந்து போக. பண்டிகை சமயத்தில் தான் எல்லோரும் சேர்வதால்
பேச நிறைய விஷயங்கள் இருக்கும்.

9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில்,
அதைப் பற்றி ஒரு சிலவரிகள்?தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின்
பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள்,அல்லது வலைத்தளம்?

நல்ல நாளில் முடிந்த வரை உதவி செய்கிறேன்.

10.நீங்கள் அழைக்க விருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?

அடுத்த வருடம் தான் கூப்பிட வேண்டும்.

29 கருத்துகள்:

  1. தீபாவளியன்று தொலைகாட்சியோடு அல்லாமல் சொந்தபந்தங்களுடன் அதுவும் ஒரே இடத்தில் கொண்டாடும் முறை அருமை!

    கேட்டதற்கிணங்க பதிவுட்டதற்கு நன்றிம்மா :-)

    பதிலளிநீக்கு
  2. லட்டு தேரா நான் பாத்ததில்லயே..காசி அன்னபூரணி லட்டு திருவிழா மாதிரியா.
    தென் திருப்பதி மாதிரி இனி அந்த அந்த சாமிகளை அந்த ஊருகளுக்கு போகாமல் கும்பிட நல்ல வசதி தான்.

    பதிலளிநீக்கு
  3. ஊரிலென்றால் உறவுகளுக்கான முக்கியத்துவத்துடன்தான் பண்டிகைகள். பெருநகரங்களில் தனியாகக் கொண்டாடும் போது அந்தக் களிப்பு இருப்பதில்லைதான். நினைவுகளை அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. இது வரையில் நான் எந்த தொடர் பதிவுகளிலும் பங்கேற்றதில்லை. ஒரு முறை வாய்ப்பு வந்தபோதும் தொடரவில்லை.

    இந்த வாரம் இந்த தொடர்பதிவு, விடாமல் பலரின் பதிவுகளில் தொடர்வதை பார்க்கின்றேன்.

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் அனைத்தையும் படிக்கவில்லை.

    ஆனால் ஒரே விஷயம் பல கோணங்களில் பார்க்கப்படும் என்பதை இந்தப் பதிவுகள் உணர்த்துகின்றன என்பதை நான் கவனித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. உறவுகளோடு இருந்தால்தான் தீபாவளி.
    நல்ல நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  6. \\
    ☀நான் ஆதவன்☀ said...
    தீபாவளியன்று தொலைகாட்சியோடு அல்லாமல் சொந்தபந்தங்களுடன் அதுவும் ஒரே இடத்தில் கொண்டாடும் முறை அருமை!

    \\

    ரீப்பிட்டே ;))

    பதிலளிநீக்கு
  7. விழாக்காலங்களில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுதல் என்பதே மிக மகிழ்ச்சிக்குரிய விசயம் !


    இட்லி சட்னின்னதும் தீபாவளி அன்னிக்கு கணக்கு வழக்கில்லாமல் காலையிலிருந்து மதியம் வரை இந்த காம்பினேஷனோடு பஜ்ஜி,வடை,ஸ்வீட் முறுக்கு என்று கலந்து கட்டி தின்ற ஞாபகம் வந்திச்சு! :))))

    பதிலளிநீக்கு
  8. ஆதவன்,
    என் சிறு வயது தீபாவளி இன்னும் நன்றாக இருந்தது.
    அக்கா,அண்ணன்,தம்பிகள்,தங்கைகள்,
    அப்பா,அம்மாவுடன் கொண்டாடியதை
    எப்போதும் மறக்கமுடியாது.

    அது ஒரு கனாக்காலம் மாதிரி ஆகி விட்டது.

    என் நினைவுகளை பகிர வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி ஆதவன்.

    பதிலளிநீக்கு
  9. முத்துலெட்சுமி,
    அன்னபூரணி கோவிலில் இப்போது சில
    வருடங்களாய் தான் அம்மனுக்கு பின்
    புறம் தேர் வடிவில் அமைத்து லட்டுகளால் அலங்கரித்து இருப்பார்கள்.

    //அந்த அந்த சாமிகளை அந்த ஊருகளுக்கு போகாமல் கும்பிட வசதி
    தான்.//

    ஆம் முத்துலெட்சுமி,வசதிதான்.

    பதிலளிநீக்கு
  10. ராமலக்ஷ்மி,
    உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
    ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
    உறவாடும் நேரம்.அந்த நேரம் தான்
    வாழ்வின் உன்னத நேரம்.(கல்யாணபரிசு
    பாடல் நினைவுக்கு வருகிறதா)

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. செல்வக்குமார்,
    படிக்காமலே ஒரே விஷயம் பல
    கோணங்களில் பார்க்கப் படும்
    என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்
    உங்கள் உணர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சின்ன அம்மிணி,
    நினைவுகளை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கோபிநாத்,
    சொந்தபந்தங்கள் இப்போது பெரியவர்கள்
    மட்டும் தான் கூட முடிகிறது.
    அடுத்த தலை முறைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருப்பாதால் கலந்து கொள்ள முடிவதில்லை.

    பெரியவர்கள் பழசை நினைத்துக்
    கொண்டு இருக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  14. ஆம் ஆயில்யன்,
    நீங்கள் சொன்ன மாதிரி விழாக்காலங்களில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுதல் என்பதே மிக மகிழ்ச்சிக்குரிய விசயம் தான்.

    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே
    நனறாக உள்ளது உங்கள் ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  15. இதுவும் சரிதானோ?

    பெண்களின் முன்னேற்றம் உண்மையா
    http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  16. அன்பு கோமதி, வெகு அழகாக எழுதிவிட்டீர்கள். உங்கள் மாமனார் போன்ற பெஇயவர்கள் இருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். இந்த மகிழ்ச்சி எனக்கும் ஆனந்தம் அளிக்கிறது.
    தங்கள் தந்தையை நினைத்து தான் வருத்தமாய் இருக்கிறது. அருமையான மனுஷி நீங்கள் கோமதி.

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு தீபாவளியிலும்,தந்தையின்
    நினைவும், மாமனார்ப் பற்றிய பெருமிதமும் என்னுள் ஏற்ப்பட்டுக்
    கொண்டுதான் இருக்கும்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    முதல் முதலில்’ நச் ’ கதை எழுதியிருக்கிறேன் ,படித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.

    நன்றி,வல்லிஅக்கா.

    பதிலளிநீக்கு
  18. என் தலை தீபாவளிக்கு கோவைக்கு என் மாமியார் வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்து
    விட்டு போனார் என் அப்பா.அது தான் என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது.கார்த்திகை
    மாதம் தன் 51வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.தீபாவளி என்றால் அப்பாவின்
    நினைவும் மறக்க முடியாது.
    //

    சோகத்தையும் பகிர்ந்திருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  19. வாங்க தேவன்மாயம்,
    கேள்வியில் தீபாவளியில் மறக்க முடியாத சம்பவம் என்று கேட்டு இருந்தார்கள். எனக்கு என் அப்பாவின் நினைவுதான் மறக்க முடியாத சம்பவம்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல பதில்கள் அம்மா.. ரொம்ப நாள் பதிவுலகத்துல பணிச்சுமை காரணமா அதிக அளவு பதிவுகள் படிக்க முடியலை. அதுதான் தாமத பின்னூட்டத்திற்கு காரணம்....

    நினைவில் வைத்து அழைத்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  21. சென்ஷி,
    பணிச்சுமைகளுக்கு இடையே வந்து
    படித்து,கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அதிரசம் செய்வீங்களா?

    எனக்கு ரொம்ப பிடிச்சது. கண்டிப்பா சந்திக்கணும். :))

    பதிலளிநீக்கு
  23. வாங்க புதுகை தென்றல்,உங்களுக்கு
    பிடித்த அதிரசம் செய்து தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல பகிர்வு, இப்போது தான் படிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  25. சர வெடி போல் நச் பதில்கள்.

    /// தீபாவளி என்றால் அப்பாவின்
    நினைவும் மறக்க முடியாது.////

    51 வயதில் தந்தை இறந்தது, மனம் கனத்தது.

    /// 5 பேர். எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம். ///

    பர்ஸ்ட் க்ளாஸ். வாழ்த்துக்கள்.

    /// கோவில் எல்லாம்
    போய் வருவோம், இப்படி இருக்க எங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
    தொலைந்து போக. ////

    தொலைந்தது தொலைக்காட்சி.

    /// நல்ல நாளில் முடிந்த வரை உதவி செய்கிறேன்.///

    இத்தகைய நல்ல எண்ணம் வாழ்வை வாழ்வை சிறக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  26. சிங்க குட்டியின் முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. படுக்காளியின் விரிவான பின்னூட்டத்திற்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. ஊருக்குத் திரும்பியும் புதிய இடுகை ஏதும் எழுத வில்லையா அம்மா?

    பதிலளிநீக்கு