சரஸ்வதி அம்மன்:
கோலம்:
மான்குன்றம்:
பூங்கா:
கோலம்:
கொலு:
சாலைக்காட்சி:
நவராத்திரி நிறைவு அடைந்து தீபாவளி வரும் சமயம்
எங்கள் வீட்டு கொலுப் பற்றி எழுதுகிறார்களே என்று
நினைக்கிறீர்களா? எனக்கு இப்போது தான் நேரம்
கிடைத்தது.
இந்த தடவை மிகவும் எளிமையாக படிகள் அமைக்காமல்
அப்படியே அலமாரியில் 5 தட்டு உள்ளது வைத்துவிட்டோம்.
கொலுப் பார்க்க வரும் குழந்தைகளுக்காக சிறு பூங்கா.
மலையிலிருந்து தண்ணீர் வருகிறமாதிரி செட்டிங்.
இந்த மலை செட் 12 பன்னிரண்டு வருடங்களுக்கு முன் என் கணவரே
சிமெண்ட்டில் செய்து வண்ணம் பூசியது .
இந்த ஆண்டு மலை கோவிலில் ஊட்டி மான் குன்றத்தில்
உள்ள குமரன் குடிக்கொண்டார்.
சரஸ்வதி பூஜை அன்று என் கணவர் சரஸ்வதி அம்மன்
செய்வார். கணவர் செய்யும் அம்மன் தான் சரஸ்வதி
பூஜை அன்று அனைவரின் பாராட்டையும் பெறும்.
என் அம்மா செய்த கை வேலைப்பாட்டு பொம்மைகள்,
என் மகன் வரைந்த ஒவியங்கள்,பேத்தி வரைந்த
ஒவியம் என கொலுவில் இடம் பெறும்.
குழந்தைகள் இருந்தபோது மிகவும் குதுகலமாய்
இருந்த நவராத்திரிப் பண்டிகை இப்போது கொஞ்சம்
உற்சாகம் குறைந்தாலும், பக்கத்துவீட்டில் இருக்கும்
குழந்தைகளுக்காக உற்சாகத்தை வரவழைத்துக்
கொண்டு செய்தோம், திடீர் வரவாக தம்பி தன்
மனைவி குழந்தைகளுடன் வந்து எங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.
மற்றும் ஒரு திடீர் வரவாக உள்ளூர் தொலைகாட்சி
நிலையத்திலிருந்து வந்து படம் பிடித்து ஒலி
பரப்பினார்கள்.
நவராத்திரி நாயகியர்களிடம் நல்ல உடல் பலத்தையும்
மனபலத்தையும் தரச்சொல்லிக் கேட்டுக் கொண்டு
நவராத்திரியை நிறைவு செய்தோம்.
கோலம்:
மான்குன்றம்:
பூங்கா:
கோலம்:
கொலு:
சாலைக்காட்சி:
நவராத்திரி நிறைவு அடைந்து தீபாவளி வரும் சமயம்
எங்கள் வீட்டு கொலுப் பற்றி எழுதுகிறார்களே என்று
நினைக்கிறீர்களா? எனக்கு இப்போது தான் நேரம்
கிடைத்தது.
இந்த தடவை மிகவும் எளிமையாக படிகள் அமைக்காமல்
அப்படியே அலமாரியில் 5 தட்டு உள்ளது வைத்துவிட்டோம்.
கொலுப் பார்க்க வரும் குழந்தைகளுக்காக சிறு பூங்கா.
மலையிலிருந்து தண்ணீர் வருகிறமாதிரி செட்டிங்.
இந்த மலை செட் 12 பன்னிரண்டு வருடங்களுக்கு முன் என் கணவரே
சிமெண்ட்டில் செய்து வண்ணம் பூசியது .
இந்த ஆண்டு மலை கோவிலில் ஊட்டி மான் குன்றத்தில்
உள்ள குமரன் குடிக்கொண்டார்.
சரஸ்வதி பூஜை அன்று என் கணவர் சரஸ்வதி அம்மன்
செய்வார். கணவர் செய்யும் அம்மன் தான் சரஸ்வதி
பூஜை அன்று அனைவரின் பாராட்டையும் பெறும்.
என் அம்மா செய்த கை வேலைப்பாட்டு பொம்மைகள்,
என் மகன் வரைந்த ஒவியங்கள்,பேத்தி வரைந்த
ஒவியம் என கொலுவில் இடம் பெறும்.
குழந்தைகள் இருந்தபோது மிகவும் குதுகலமாய்
இருந்த நவராத்திரிப் பண்டிகை இப்போது கொஞ்சம்
உற்சாகம் குறைந்தாலும், பக்கத்துவீட்டில் இருக்கும்
குழந்தைகளுக்காக உற்சாகத்தை வரவழைத்துக்
கொண்டு செய்தோம், திடீர் வரவாக தம்பி தன்
மனைவி குழந்தைகளுடன் வந்து எங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.
மற்றும் ஒரு திடீர் வரவாக உள்ளூர் தொலைகாட்சி
நிலையத்திலிருந்து வந்து படம் பிடித்து ஒலி
பரப்பினார்கள்.
நவராத்திரி நாயகியர்களிடம் நல்ல உடல் பலத்தையும்
மனபலத்தையும் தரச்சொல்லிக் கேட்டுக் கொண்டு
நவராத்திரியை நிறைவு செய்தோம்.
இந்தக் கொலு 'செட்' போட்டவங்களுக்கு ஒரு சபாஷ் :-), அருவி எல்லாம் வைச்சு, யானை படித்துறையில நின்னு மூங்கில் சாப்பிடுற மாதிரிக்கா அசத்தலான நிறைய டீடைல்ஸ் ...
பதிலளிநீக்குசரஸ்வதி அம்மனும்
பதிலளிநீக்குமலைக்கோவில் செட்டும் வெகு நேர்த்தி.
உங்கள் கணவருக்கு எங்கள் பாராட்டைச் சொல்லுங்கள்.
தாம்பாளத்தில் தாமரை அழகு.
தாமதமானாலும் காணத் தந்த காட்சிகளுக்கு மிக்க நன்றி.
சூப்பர் கொலு.
பதிலளிநீக்குஇனிய பாராட்டுகள்.
தாம்பாளத்தில் பூ & தாமரை டிசைன் டாப் டக்கர் :))
பதிலளிநீக்குதட்டில் கிருஷ்ணர் நல்லா வந்திருக்கார். ஜவ்வரிசில போட்டீங்களா
பதிலளிநீக்குதெகா,
பதிலளிநீக்குஎன் கணவருக்குத் தான் உங்கள்
சபாஷ்.
நன்றி.
ராமலக்ஷ்மி,
பதிலளிநீக்குஎன் கணவருக்கு உங்கள்
பாராட்டை தெரிவித்து விட்டேன்.
தாமரையை ரசித்தற்கு நன்றி.
இனிய பாராட்டுக்கு நன்றி.
பதிலளிநீக்குஆயில்யன்,
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி.
சின்ன அம்மிணி,
பதிலளிநீக்குகோலமாவில் போட்ட கோலம் தான்.
உங்கள் வரவுக்கு நன்றி.
லேட்டா எழுதினாலும், கண்ணுக்கு நிறைவா லேட்டஸ்டாதானே இருக்கு...
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு கோமதி மேடம்...
அப்படியே என்னென்ன சுண்டல் வினியோகம் நடந்ததுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா, வாங்கி சாப்பிட்டவர்கள் சார்பில் ஒரு ஏப்பம் விடுவேன்...
நாங்களும் கொலு வச்சம், ஆனால் இது போல வரல....
பதிலளிநீக்குஅருமையான கொலு வடிவமைப்பு அம்மா..! படங்களைப் பார்த்ததும் நேரில் பார்க்காமல் விட்ட வருத்தம் ஏற்படுகிறது..
பதிலளிநீக்குபிரம்மாண்டமான கொலுவா இருக்கும் போலயே....
பதிலளிநீக்குபை பாஸ் ரோடு நல்லா இருக்குங்க :)
ஒவ்வொண்ணையும் தனித்தனியா விமரிசையா பாராட்டனும்னு தோணுது. அத்தனையும் அப்படி ஒரு அழகு!
பதிலளிநீக்குகுறிப்பாய் வெள்ளைத் தாமரையாள் சரஸ்வதி அம்மனின் அலங்காரமும், கோ பால கிருஷ்ணனின் தட்டுக்கோலமும், மலைக்குன்றத்தினைச் சுற்றியுள்ள திருவிழாக் கண்காட்சியும் சிந்தை மகிழ்விக்கின்றன.
தங்களின் கொலுவினைச் சிறப்புற வடிவமைத்துத் தந்த குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அம்மா!
பால்ய வயதுகளில் அழகாக அர்த்தத்துடன் அடுக்கி வைக்கப்படும் பார்ப்பதற்காகவே கொலு அடுக்கி வைக்கும் வீடுகளைச் சுற்றிக் கொண்டிருப்போம். கொலு பொம்மைகளுக்குரிய கதைகளை சரியாக கண்டுபிடிப்பது ஒரு விளையாட்டாகவே தொடர்ந்தது. கரகாட்டக்காரன் வந்த போது செந்தில் கவுண்டமணியின் பொம்மைகள் கூட கொலுவில் சேர்ந்திருந்தது. அப்படி சமகால நிகழ்வுகளை சேர்த்து கொலு அடுக்கி வைத்திருப்பார்கள். சுற்றிப்ப்பார்க்க செல்பவர்களுக்கு சுண்டல் இலவசம் :-)
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு சிறிய வயது கூத்துக்களை நினைவிற்கு கொண்டு வந்து விட்டது உங்கள் வீட்டு கொலு. சுண்டல் போட்டோவையும் சேர்த்திருந்தால் பிரசாதமாக கொண்டிருப்போம் போல..
மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்!
கோபி,
பதிலளிநீக்குகொலுவை பாராட்டியதற்கு நன்றி.
சுண்டல் படம் எடுக்க மறந்து விட்டது,
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதம் செய்தேன்,முதல் நாள் அமாவாசை அன்று சர்க்கரை பொங்கல்,
அப்புறம் தட்டைபயறு சுண்டல், கொண்டகடலைசுண்டல்(வெள்ளை கொண்டக்கடலை),பாசிப்பருப்புசுண்டல்,பச்சைப்பட்டாணிசுண்டல்,அவல்புட்டு,
உளுந்து வடை,கடலைப்பருப்பு சுண்டல்,கறுப்புகொண்டகடலை சுண்டல்,காப்புஅரிசி,பால்பாயாசம் என
நைவேத்தியங்கள் வினியோகம் ஆனது.
இனி ஏப்பம் விடலாம்.
நன்றி பிரபா ,முதல் வருகைக்கு,
பதிலளிநீக்குபாராட்டுக்கு.
//நீண்ட நாட்களூக்குப் பிறகு சிறிய வயது கூத்துக்களை நினைவிற்கு கொண்டு வந்து விட்டது உங்கள் கொலு
பதிலளிநீக்குசுண்டல் போட்டோவையும் சேர்த்திருந்தால் பிரசாதமாக கொண்டிருப்போம் போல//
சென்ஷி உங்களின் மனம் கனிந்த வாழ்த்துக்கள் மனதை நெகிழ செய்கிறது.
நாங்களும் பழையநினைவுகளை மீண்டும் பெறவே கொலுவை தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கிறோம்
நீங்கள் எல்லோரும் கொடுக்கும்
ஆதரவும்,பாராட்டுக்களும், மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது.
சுண்டல் போட்டோ அனுப்ப மறந்து
விட்டது.
நன்றி நன்றி.
சூப்பர் கொலு! பகிர்ந்தமைக்கு நன்றி! பப்புவுக்குக் காட்டினேன். யாரோட சொப்பு என்கிறாள்! :-)
பதிலளிநீக்குமுல்லை பாராட்டுக்கு நன்றி.
பதிலளிநீக்குபப்புவிடம் சொல்லுங்கள்,சொப்பு பப்புக்குதான் என்று.