வியாழன், 17 செப்டம்பர், 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இந்த வள்ளுவனின் குறள் போல் சொல் வன்மை
மிக்கவர். இன்று ஒரு தகவல் மூலம் எல்லோர்
இதயத்திலும் இடம் பிடித்தவர்.


மூன்று நிமிட நேரத்தில் சொல்லவந்த விஷயத்தை
நகைச்சுவை உணர்வுடன் சொல்லி நம்மை சிந்திக்க
வைத்தவர்.

போன வருடம்” குடந்தை மனவளக்கலை மன்றம்
அறக்கட்டளை உலகப் பொது அருள் நெறி சமய
அறிவுத்திருக்கோயிலில்’ நடந்த கருத்தரங்கத்திற்கு
வந்து இருந்தார், சிறப்பு பேச்சாளராக.அவர்
சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைத்தார்.
கிணற்றில் விழுந்தவரை தூக்கி விடும் போது
கூட வாழ்க வளமுடன் என்று சொல்லி தான்
தூக்கிவிடுவீர்கள் என்றார்.

அவருக்கு கைவலி இருந்ததால் ஒரு நண்பர்
சொல்லி உடற்பயிற்சிகளை ஆழியாரில்
நடக்கும் மனவளக்கலை யோகாப் பயிற்சி,
ஆளுமைப்பேறு திறனூக்கப் பயிற்சி
எடுத்துக் கொண்டார்.சன் டிவியில்
வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை
ஆசை சீர் அமைத்தல், சினம் தவிர்த்தல்
கவலை ஒழித்தல் ஆகியவற்றை அவர் பாணியில்
எல்லோருக்கும் சொன்னார்.

இன்று காரைக்கால் எப் எம்மில் ‘இன்று ஒரு தகவலில்’
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த யோசனை
சொன்னார் அவர் பாணியில்.
ஒரு நண்பர், இன்னொரு நண்பரிடம் புகைபிடிப்பதை
விட யோசனை கேட்டாராம், அதற்கு அவர் நானே
10முறை நிறுத்தி முயற்ச்சித்துஇருக்கிறேன்
என்றாராம்.

இவர் 10 யோசனை சொல்லுகிறார் புகை பிடிப்பதை
நிறுத்த:
1.புகைபிடிக்கும் நண்பரை விட்டு சிறிது காலம்
விலகி இருத்தல்.
2.புகை பிடிப்பதை விட தீவீர பிரச்சாரம் செய்ய உறுதி.
3.இரண்டு தடவை குளிப்பது, வெது வெது தண்ணீரில்
ஒரு முறை, குளிர்ந்த நீரில் ஒரு முறை.
4.உடற்பயிற்சியும்,பிராணாயாமும் செய்யவேண்டும்.
5.சாப்பாடு மிதமாக,பச்சை காய்கறிகள் சாப்பிடவேண்டும்
இவை இரத்த அளவை சரிப்படுத்தும்.
6.இரவு ரொம்ப நேரம் படுக்கைக்கு செல்லாமல் விழித்திருக்க
கூடாது.
7.போதைபொருள்கள் விலக்கவேண்டும்.
8.கடுகு,மிளகு காரம் குறைக்கவேண்டும்,தினம்
9 டம்ளார் நீர் அருந்த வேண்டும்,வெறும் தண்ணீர்
புகை பிடிக்கும் எண்ணத்தை குறைக்கும்.
9.இறை நம்பிக்கை மூலம் பிராத்தனை செய்யவேண்டும்.
10.வேண்டியவர்களிடம் புகைபிடிப்பதை விட்டு விட்டாதாக
சொல்லவேண்டும்.


இதை சொல்லிவிட்டு கடைசியில் அவர் பாணியில்
ஒன்று சொல்வாரே அது:முக்கியமான இடத்தில் அவர்
நின்று கொண்டு இருந்ததாராம்,ஒருவர் அவரிடம்
இங்கு புகை பிடிக்கலாமா? என்று கேட்டாராம்,
அதற்கு இவர் பிடிக்க கூடாது என்றாராம்
அப்படியானால் உங்கள் பக்கத்தில் கிடக்கும் இது
என்ன? என்றாராம்? இவை எல்லாம் என்னிடம்
அனுமதி கேட்காதவர்கள் பிடித்தது என்றாராம்.


புகை பிடிக்கும் நண்பரை விட்டு விலகி இருக்க
சொன்னதை கேட்டவுடன் மகரிஷி சொன்னது
நினைவு வந்தது//,யாராவது முதல் சிகரெட்டை
காசு கொடுத்து வாங்கி இருப்பானா? நண்பன்
குடித்துப் பார் நன்றாக இருக்கும் என்று
கொடுத்து இருப்பான்//இப்படித்தான் ஆரம்பிக்கும்
அவன் முதல் புகை பிடிக்கும் பழக்கம்.


புகை பிடிக்கவேண்டாம் என்று அதன் தீமைகளை
எடுத்து சொல்லும் போது அதில் பெருமிதம் ஏற்பட்டு
விட்டு விடுவான் என்று நம்புகிறார்.

புகை பிடிப்பதை விட சிலர் வாயில் எதையாவது
போட்டுமென்றுக்கொண்டு இருப்பார்கள் இவர்
வெறும் தண்ணீரை குடித்தே விட்டுவிடலாம்
என்கிறார்.


கடைசியில் வேண்டியவர்களிடம் புகை பிடிப்பதை
விட்டு விட்டேன் என சொல்ல சொல்கிறார்
புகை பிடிப்பவர்கள் மத்தியில் இருந்தால்,
ஆசை இருந்தாலும் வேண்டியவர்களிடம் சொல்லி
விட்டோம் குடிப்பது இல்லையென்று என்ற
எண்ணம் சங்கல்பம் மாதிரி செயல்படும் என
நினைக்கிறார்.


வானொலியில் அவர் குரல் ஒலித்துக் கொண்டே
இருக்கும்,தொலைகாட்சியிலும் அவர் குரல்
ஒலித்துக் கொண்டு இருக்கும்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.

புகழ் உடலுடன் வாழ்வது, நிலையான புகழுடன்
இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிக்கே கிடைக்கும்.


இன்று அவர் பூர்விகமான தஞ்சாவூர் மாவட்டம்
கஞ்சனூர் கிராமத்தில் இறுதி சடங்கு,ஏராளமானனோர்
இறுதி அஞ்சலி, நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

அவர் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்வோம்.

வாழ்க சுவாமிநாதன்!!

17 கருத்துகள்:

  1. \\அவர்
    சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைத்தார்.//

    உண்மைதான்.. அவர் ரேடியோவில் பேசிய காலத்தில் அவரை சந்திக்க நிறைய பேரு ஆர்வமா வருவாங்களாம் பின்ன இவரான்னு ஆச்சர்யப்பட்டுப் போவாங்களாம்..

    பதிலளிநீக்கு
  2. அன்பு கோமதி,
    அருமையாக அவருடைய நிகழ்ச்சியை வர்ணித்திருக்கிறீர்கள். இந்த வருத்தமான வேளையில் நீங்கள் எழுதி இருப்பது ஆறுதலாக இருக்கிறதம்மா.

    பதிலளிநீக்கு
  3. //உண்மைதான்.. அவர் ரேடியோவில் பேசிய காலத்தில் அவரை சந்திக்க நிறைய பேரு ஆர்வமா வருவாங்களாம்
    பின்ன இவரான்னு ஆச்சர்யப்பட்டுப்
    போவாங்களாம்//

    ஆமாம் முத்துலெட்சுமி,
    இவரா இப்படிபேசுகிறார் ,மிக எளிமையாக ,ஆடம்பரம்
    எதுவும் இல்லாமல் இருக்கிறாரே ,என்று நினைப்பார்களாம்.

    பதிலளிநீக்கு
  4. மிக எளிமையாக ,ஆடம்பரம்
    எதுவும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக வாழ்ந்து பல அரிய கருத்துக்களை வழங்கி, என்னுடைய சிந்தனைகளே அல்ல அவை என்று வாழ்ந்து போன நல்ல மனிதர்...

    ஆழ்ந்த வருத்தத்துடன் உங்கள் தளத்தில் என் நினைவை பதிந்து வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அன்பு வல்லி,

    தினம் அவர் இன்று ஒரு தகவல் கேட்டு,
    கேட்டு அவர் ரசிகை ஆகி விட்டேன்,
    நான் மனவளகலை ஆசிரியராய் இருப்பாதால், சிந்தனை விருந்து கொடுக்கும் போது அவருடைய தகவல்
    எனக்கு உதவும். அவரும் எங்கள் மனவளக்கலை குடும்பத்தில் ஒருவர்
    ஆனதால் அஞ்சலி செலுத்துவது என்
    கடமை .

    பதிலளிநீக்கு
  6. தெகா,
    நல்ல மனிதரின் நினைவை பதிந்து
    வைத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. /நகைச்சுவை உணர்வுடன் சொல்லி நம்மை சிந்திக்க
    வைத்தவர்/

    ஆமாம், பெரிய விஷயங்களை சுலபமான கதைகள் கொண்டு சொல்லிவிடுவார்.

    அஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
  8. குரல் மட்டுமே கேட்டு பழகியிருந்த காலகட்டத்தில் அவர் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்த வார இதழில் மிக ஆச்சர்யப்படவைத்த விசயமாக குரலுக்கும் மனிதரின் எளிமையான தோற்றத்தினை கூறிய நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றது!

    கணீர் குரல் மறந்து போகுமா அத்தனை எளிதில் !

    பதிலளிநீக்கு
  9. அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள் அவரது சிறப்பை இந்த அஞ்சலியில். குறிப்பாக ‘புகை’யை விட அவர் காட்டிய வழியைப் பகிர்ந்தமை பயனுள்ளது.

    //வானொலியில் அவர் குரல் ஒலித்துக் கொண்டே
    இருக்கும்,தொலைகாட்சியிலும் அவர் குரல்
    ஒலித்துக் கொண்டு இருக்கும்.

    நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
    வித்தகர்க்கு அல்லால் அரிது.

    புகழ் உடலுடன் வாழ்வது, நிலையான புகழுடன்
    இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிக்கே கிடைக்கும். //

    உண்மைங்க. ஆழ்ந்த அஞ்சலிகளை இங்கு பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. //ஆமாம்,பெரியவிஷயங்களை சுலபமான கதைகள் கொண்டு சொல்லிவிடுவார்//

    ஆமாம் முல்லை அதில் தான் அவர்
    வெற்றி.

    பதிலளிநீக்கு
  11. //கணீர் குரல் மறந்து போகுமா அத்தனை எளிதில்//

    ஆமாம் ஆயில்யன் மறக்காது,
    காதுகளில் ஒலித்துக் கொண்டே தான்
    இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. :-(

    செய்தி அறிந்தபோது மிகவும் வருந்தினேன். தன் குரலாலும் கருத்துக்களாலும் வானொலி கேட்கும் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருந்தவர். அவரது குடும்பத்தினருக்கு என் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  13. //வானொலி கேட்கும் அனைவரையும்
    வசியப் படுத்திவைத்திருந்தவர்//

    ஆம் சென்ஷி .

    பதிலளிநீக்கு
  14. தன் வித்தியாசமான குரலினாலும், கருத்துக்களினாலும், கேட்காதவர்களை கூட வானொலியய் கேட்க வைத்தவர் தென்கச்சி...

    அவரை பற்றி நீங்கள் மிகவும் விரிவாக பாராட்டத்தக்க வகையில் எழுதி இருக்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள் கோமதி மேடம்...

    அன்னாரின் புகழ் நீடூடி வாழும் என்பது திண்ணம்...

    பதிலளிநீக்கு
  15. வாங்க கோபி,
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    குட்டி கதைகள் மூலம் தான் சொல்ல
    வந்த விஷயங்களைச் சொல்லி,பிறர்
    மனம் புண்படாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மகத்தான மனிதர்.

    //அன்னாரின் புகழ் நீடுடி வாழும் என்பது திண்ணம்.//

    ஆம் கோபி.

    பதிலளிநீக்கு
  16. "கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
    கபடு வராத நட்பும்கன்றாத வளமையும் குன்றாத இளமையும் ஒரு கழுபிணி இல்லாத உடலும்
    சலியாத மனமும் அன்பஹலாத மனைவியும் தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வராத கொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்
    துய்யனின் பாதத்திலன்புமுதவிப் பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
    ஆதிகடவூரின் வாழ்வே
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாமி! அபிராமியே!
    Neenga Mrs Shivam oda post la Kolu vin pothu nalla healthaii kodu thaaye nnu vendikkarathaa ezhuthi iruntheenga. Unmaithaan ippa irukkira kaala kattaththil antha health keda eththanaiyo vazhigal. Awareness vanthu ellarum nanna irukkanum.

    உங்களூக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நவராத்திரி நல் வாழ்த்துக்கள்.
    useful posts. One about vendakkai is a news

    Thenkachchi swaminathan is a remarkable person. Though he came only for few minutes in AIR he attracted quite a crowd

    பதிலளிநீக்கு