எருமையின் வெண்கல சிற்பம்
ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அரிசோனாவிற்கு அருகில் இருக்கும் ஃ பிளாக்ஸ்டாப் என்ற இடத்தில் அமைந்துள்ள "எருமை பூங்காவிற்கு" அழைத்து சென்றான் மகன். சான் பிரான்சிஸ்கோ சிகரம் என்று அழைக்கப்படும் மிக அழகான மலைச்சிகரம் பின் புலத்தில் தெரியும் அழகான பெரிய பூங்கா. அரிசோனாவிலிருந்து 120 மைல் தூரத்தில் உள்ளது . வேறு சில இடங்களும் பார்த்து விட்டு ஞாயிறு மாலை வீடு வந்து சேர்ந்தோம். இந்த பதிவில் பூங்கா இடம் பெறுகிறது.