கொலுபடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலுபடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

நவராத்திரி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நவராத்திரி  வாழ்த்துக்கள்.
எல்லோரும் நலம் தானே? நாங்கள்  மகன் ஊருக்கு வந்து இருக்கிறோம்.
இங்குதான்  இந்த முறை நவராத்திரி பண்டிகை.
மகன் இருப்பது அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ். போனவாரம் இங்கு வந்தோம்.

Image may contain: indoor

                                                மகன் வீட்டுக் கொலு

திடீர் பிரயாணம். யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. காணோம் என்று தேடினீர்களா?

எல்லோர்  பதிவுகளையும் படிக்க நிதானமாய் வருவேன். பண்டிகை என்பதால் கொலு பார்க்க நண்பர்கள், உறவினர்கள் வருகிறார்கள்.
எங்களையும் கொலுப் பார்க்க சில நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

Image may contain: indoor
இந்த கொலுவில் காய்கறி கல்யாணம் சிறப்பு.

No automatic alt text available.
கத்திரிக்காய் பரங்கிகாய் கல்யாணம்.



No automatic alt text available.
சின்ன மலைக் கோயில் , பார்க், தெப்பக்குளம்.
Image may contain: one or more people and indoor
ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலில்  விளக்கு பூஜை செய்யும் பொம்மை இந்த வீட்டில் நன்றாக இருந்தது.

Image may contain: flower, table and indoor
பார்வதி திருமணம், கார்த்திகை பாலன் பிறப்பு, மற்றும் பூலோக மக்கள்
திருமணக் காட்சி.

Image may contain: 2 people, people standing
உழவுக்கு செல்லும் கணவனுக்கு உணவு எடுத்து செல்லும்
உழவனின்  மனைவி பழையக் கால பொம்மை  அழகு.

Image may contain: indoor
கொலுவிற்கு வரும் கிரிகெட் ரசிகர்களுக்கு  பிடித்த பொம்மை.

Image may contain: 1 person, shoes
மற்றொரு வீட்டில் :-

 கோலம் போடுதல், சாதம் வடித்தல், அம்மி அரைத்தல், ஆட்டுக்கல்லில் அரைத்தல், திருவையில் திரித்தல், முறத்தில் புடைத்தல் சிறப்பு பொம்மை .
உரலில் இடிப்பது விட்டு போனது போல!




அயல் நாட்டில் இருந்தாலும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எல்லா குழந்தைகளும் கர்நாடக இசை பயின்று பாடுவது மிகவும் மகிழ்ச்சியாக் இருக்கிறது.

நவராத்திரி பார்க்க வந்த குழந்தைகள் பாட சொன்னவுடன் உடனே பாடுவது மிக சிறப்பு. நன்றாக பாடுகிறார்கள். சில குழந்தைகள் ஆங்கிலத்தில் பாடலை எழுதி வைத்துக் கொண்டு பாடினார்கள். அரிசோனா தமிழ் பள்ளியில்  படிக்கும் குழந்தை தமிழில் எழுதி வைத்து இருந்த திருப்புகழ் பாடினான்.

விழாக்கள் எல்லாம் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சி. வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் நாள். குழந்தைகள் தனியாக விளையாடிக் கொண்டு இருந்தவர்களுக்கு கூடி விளையாட கிடைத்த நாள். அம்மாக்கள் குழந்தைகளை வீட்டுக்கு போகலாம் வா என்று கூப்பிட்டால் மனசே இல்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அம்மா என்று விளையாட கெஞ்சும் குழந்தைகள். மொத்ததில் மகிழ்ச்சியை தரும் விழாதான்.

தூரத்திலிருந்து வருவதால் தினம் கலவை சாதங்கள் சுண்டல் உண்டு எல்லோர் வீடுகளிலும். சில சமயம் நண்பர்கள் நாங்கள் இந்த பிரசாதம் கொண்டு வருகிறோம் என்று சொல்லி ஆளுக்கு ஒன்று கொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விழாவை சிறப்பிக்கிறார்கள்.

நலங்கள் நல்கும் நவராத்திரி 2013 ல் நியூஜெர்சி யில் கொண்டாடிய  கொலு சுட்டி படிக்கலாம்.

பொளச்சுக் கிடந்தா வரேன் தாயி!

பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம்  பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.


நவராத்திரி வாழ்த்துக்கள்
மாயவரம் புனூகீஸ்வரர் கோயில் நவராத்திரி விழா  மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரங்கள் இந்த பதிவில்.
சகலகலாமாலை, பாடல் பகிர்வும்  இருக்கிறது.

எங்கள் வீட்டுக் கொலு  ;- எளிமையாக வைத்த கொலு.


 அம்மன் அலங்காரம்  மகன் செய்த

ஒலி, ஒளிக்காட்சி சரஸ்வதி சபத காட்சி பின்னனியில் பார்க்கலாம்.
மருமகள் அலங்காரம் செய்தாள்.

நிறைய இருக்கிறது பேசவும், சொல்லவும். நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பதிவுகளை படித்து கருத்திட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

மனபலமும், உடல் நலமும் தெளிந்த நல் அறிவும் வேண்டும் என்று

  அம்மனிடம்  வேண்டிக் கொள்கிறேன்.

அப்பாதுரை சார் சொன்னது போல் கொலுவுக்கு முன்னாலும் உழைக்க வேண்டும், கொலு முடிந்த பின்பும் உழைக்க வேண்டும். அதற்கு  உடல் நலமு, மனபலமும்  வேண்டும். அதை அன்னை அருள்வாள்.

கொலுபடிகளை அமைத்து வைக்கும் வரை மலைப்பு,!வைத்தபின் மகிழ்ச்சி.
அது போல் பொம்மைகளை மீண்டும் அதன் அதன் இடத்தில் பத்திரமாய் எடுத்து வைக்கும் போது மலைப்பு ! எடுத்து வைத்து விட்டால் மகிழ்ச்சி.
கொலுபடிகள் இருந்த இடத்தைப் பார்க்கும் போது வெறுமை ! மீண்டும் அடுத்த வருடத்தை எதிர் நோக்கும் உள்ளம்.

அடுத்த வருடம் வரை நவராத்திரி நினைவுகளை அசைபோடும் உள்ளம்.பேரனின் ஓவியங்க்கள் அவன் விளையாட்டு சாமான்கள் என்று தனியாக அவன் அறையில் வைத்து அனைவரையும் அழைத்து சென்று காட்டி மகிழ்ந்தான்.

மருமகள் பெண்கள்,  ஆண், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பரிசு பொருட்களை தேர்ந்து எடுத்து கொடுத்து மகிழ்ச்சிப் படுத்தினாள்.

விழாக்களில்  குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் அலுப்பும், சலிப்பும் ஏற்படாது. பண்டிகைகளை அனைவரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

                                                   வாழ்க வளமுடன்.