புதன், 24 ஜூன், 2026

வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபம்.



தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில்  உள்ளது இந்த  மணிமண்டபம்

ஜூன் 11 ஆம் தேதி எங்கள் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தோடு  போய்விட்டு திரும்பும் போது   இந்த மணிமண்டபத்தை பார்த்து வந்தோம்.  அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.  பேரன் கட்டபொம்மன்  வரலாறை படித்து  மிகவும் ரசித்துப்பார்த்தான்.


 பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்,

பாஞ்சாலங்க்குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை  எதிர்த்துப் போரிட்டார் . இந்த வரலாறும் அவர் கதையை படமாக எடுக்கப்பட்டு அதில் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்ததும் அனைவரும் அறிவார்கள்.


 

 1799- ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கட்டப்பொம்மன் தூக்கிலிடபட்டார். அந்த இடத்தில் இந்த மணிமண்டபத்தை அமைத்து இருக்கிறார்கள்.


வாசலுக்கு வெளியே இடது பக்கம் சிவலிங்கம் வைக்கப்பட்டு சுப்பையா தேவர்  என்று வருடம் எல்லாம் எழுதி இருக்கிறது. விளக்கு மாடம் இருக்கிறது, அவரின் சமாதி போல் இருக்கிறது.



வீரபாண்டிய  கட்டபொம்மனின் குலதெய்வம் ஜக்கம்மா
வீரபாண்டிய படத்தில் வரும் பாடல் நினைவுக்கு வருகிறதா?



கேட்டுப்பாருங்கள் நன்றாக இருக்கும்.


ஜக்கம்மா



சிறு முயல் நாயை துரத்துவதை கண்டு "வீரம் மிகுந்த நிலம் " என்று பாராட்டி கட்டபொம்மன் அந்த இடத்தில் தன் கோட்டையை அமைத்தார்




மண்டபத்தின் நடுவே கம்பீரமாக சிவாஜி கணேசன் சாயலோடு  கம்பீரமான தோற்றத்தில் 7.25  அடி உயரமுள்ள கட்டபொம்மனின் சிலை நிறுவப்பட்டுள்ளது.  மாடி ஏறி போய் அங்கு இருந்து சிலையை பார்த்து வந்தார்கள். நான் படியேறி போய் பார்க்கவில்லை அங்கு இருக்கும் பணியாளர் படங்களை பார்த்து  வரலாறை சொல்லி சுற்றி காண்பித்தார். வருகை பதிவேட்டில் நம் கையெழுத்தை வாங்கி கொண்டார்.




வரலட்சுமி அவர்களின்   குரலில் மனதை கனிய வைக்கும் பாட்டு திருச்செந்தூர் முருகனை  வழிபாடு செய்யும் பாடல் பாட்டின் முடிவில் போர் செய்தியை கொண்டு வரும் வீரன்



 கனல் பறக்கும் பேச்சு  நினைவுக்கு வந்து இருக்குமே!








கட்டபொம்மனை தூக்கிலிட்ட புளியமரம் பட்டு போய் விட்டது அந்த இடத்தை சிவாஜி கணேசன் அவர்கள்  விலைக்கு வாங்கி 1970 ஆம் ஆண்டு   நினைவு தூண் அமைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு .

அதன் பின்னர் அரசிடம் ஒப்படைத்து விட்டார். மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி  காலத்தில்  மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

புதிதாக கட்டப்பட்டபோது நான்  என் கணவருடன் திருநெல்வேலிக்கு ஒரு திருமணத்திற்கு போன போது  வழியில் இறங்கி இந்த மணிமண்டபத்தை  பார்த்தோம் , அப்போது கட்டப்பபொம்மன் சிலையும், ஒரு படமும் மட்டும் இருந்தது மற்ற படங்கள் சென்னையிலிருந்து சிறிது நாளில் வரும் என்றார்.
அந்த படம்  சிறு முயல் ஒன்று நாயை துரத்தி செல்வதை பார்த்து "வீர மிகுந்த நிலம்"   என்று சொல்லி  தன் பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டையை அந்த இடத்தில் கட்டினார் என்ற படம்.

பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டையைப்பார்த்து படம் எடுத்து பதிவு போட்ட நினைவு இருக்கு தேடினால் கிடைக்கவில்லை. 4வது படிக்கும் போது  பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலா பாஞ்சாலங்க்குறிச்சியும், கயத்தாறும். என் அம்மாவும், அத்தையும் என்னுடன்  சுற்றுலாவில் கலந்து கொண்டது பற்றி எல்லாம் பகிர்ந்து இருந்தேன்.

இந்த தடவை பாஞ்சாலங்க்குறிச்சி போக நேரமில்லை. அது கொஞ்சம் தள்ளி போக வேண்டும். கருணாநிதி அவர்கள் ஆட்சி  காலத்தில் கட்டப்பட்டது.  இங்கு இருக்கும் ஜக்கம்மா கோயிலில் உள்ள பூசாரியுடம் நான் சிறு வயதில் பள்ளிச்சுற்றுலாவில்  வந்து இருக்கிறேன் என்று  சொன்னதும் அவர்  நினைவை பாராட்டினார்.




மணிமண்டபத்தை சுற்றிப்பார்த்து விட்டு  வந்து  உள்ளேயே சற்று தள்ளி இருக்கும் கட்டபொம்மன் தினைவு தூணை பார்க்க போவதற்குள் மழை  வந்து விட்டது. என்னால் வேகமாக நடக்க முடியாத காரணத்தால் சிறு தூறல் சமயம் காரில் ஏற சொல்லி விட்டார்கள். நான் காரிலிருந்து எடுத்த படம்.

குழந்தைகள் விளையாட சிறு பார்க் அமைத்து இருக்கிறார்கள்  தூணை சுற்றி.


நன்றி - கூகுள்



மதுரை பெரியார் பேரூந்து நிலையம் அருகில்  உள்ள கட்டபொம்மன் சிலை 

நன்றி - கூகுள்


நன்றி - கூகுள்



கயத்தாறிலிருந்து திருநெல்வேலி போகும் வழி எல்லாம் இந்த காற்றாலைகளை பார்க்கலாம்.  



வழி எல்லாம் நல்ல மழைதான்.

முதன் முதலில் நடக்க தொடங்கும் குழந்தை போல  தளர் நடை நடக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள் நான் வீட்டில் இருக்கிறேன் என்றாலும் கேட்காமல் வீல் சேர் வாங்கி வந்துவிட்டான் மகன்  அதில் என்னை வைத்து பல இடங்களுக்கு கூட்டி சென்றார்கள்.  படங்கள் எல்லாம் நான் உடகார்ந்து கொண்டு எடுத்தது.   

இன்னும் பதிவுகள் வரும் வெகு நாட்கள் ஆகி விட்டதால் ஒரு சிறிய பதிவு. 

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------

14 கருத்துகள்:

  1. வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபம் நீங்கள் குடும்பத்துடன் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி.

    உங்கள் பதிவு வழி நாங்களும் சென்ற உணர்வு. நன்றிம்மா.

    மறக்க முடியுமா என்ன கட்டபொம்மனின் வீர தீர செயல்களை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் ஊருக்கும் வந்தோம். தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்து அடுத்து போய் கொண்டே இருந்தோம். உங்கள் எல்லோரையும் நினைத்து கொண்டேன்..(திருச்சி பதிவர்கள் சந்திப்பு வைத்து கொள்ள ஆதி, வை. .கோ சார் அழைப்பு விடுத்தார்கள். கீதா சாம்பசிவம் வீட்டுக்கு அழைத்து கொண்டே இருந்தார்கள். சந்தர்ப்பம் வாய்க்க வில்லை.

      //வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபம் நீங்கள் குடும்பத்துடன் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி.

      உங்கள் பதிவு வழி நாங்களும் சென்ற உணர்வு. நன்றிம்மா.

      மறக்க முடியுமா என்ன கட்டபொம்மனின் வீர தீர செயல்களை.....//
      ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் இன்னுயிரை கொடுத்து சுதந்திர உணர்வை ஏற்படுத்திய கட்டபொம்மனின் வீர தீர செயல்களை மறக்க முடியாது .

      வீரபாண்டியகட்டபொம்மன் படம் மூலம் .பந்துலூ அவர்களும் சிவாஜியும் மறக்க முடியாதபடி பதிவு செய்து விட்டார்கள்

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்துக்குப் போய் வந்தீங்களா...அக்கா உள்ள நடந்து போக முடிந்ததா?

    படங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு

    சிவலிங்கம் படம் ரொ ம்பப் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் , வாழ்க வளமுடன்

      //வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்துக்குப் போய் வந்தீங்களா...அக்கா உள்ள நடந்து போக முடிந்ததா?//

      உள்ளேநடந்து போக முடிந்தது படிகள் பழனி யானைபாதையிலிருப்பது போல இருந்தது , கஷ்டம் இல்லை கவின் கையை பிடித்து கொண்டு நடந்து விட்டேன்.

      அங்கு மணிமண்டபத்தை பார்த்து கொள்பவர் எனக்கு நாற்காலி போட்டார் அமர . அமர்ந்து கொண்டு பின் எழுந்து படங்கள் எடுத்தேன். சிறிய இடம் தான் நிறைய நடக்க வேண்டாம்.

      //படங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு

      சிவலிங்கம் படம் ரொ ம்பப் பிடித்தது.//

      நன்றி கீதா

      நீக்கு
  3. ஜக்கம்மா என்றதுமே இந்தப் படத்துல ஒரு பாட்டு உண்டே என்று நினைவுக்கு வர நீங்களும் பகிர்ந்திருக்கீங்க. இப்பவும் கேட்டேன் பாடலை சீர்காழியின் குரலும் அந்த தாள இசையும் கோரஸும் கேட்க நல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜக்கம்மா என்றதுமே இந்தப் படத்துல ஒரு பாட்டு உண்டே என்று நினைவுக்கு வர நீங்களும் பகிர்ந்திருக்கீங்க. இப்பவும் கேட்டேன் பாடலை சீர்காழியின் குரலும் அந்த தாள இசையும் கோரஸும் கேட்க நல்லாருக்கும்//

      ஆமாம் கீதா , பாடலும் காட்சியும் நன்றாக இருக்கும். உணர்ச்சியை கொட்டி பாடி இருப்பார்கள். இசை நன்றாக இருக்கும்.

      நீக்கு
  4. கட்டபொம்மன் தன் கோட்டையை அமைத்த இடத்தின் காரணம் இப்பதான் தெரிகிறது கோமதிக்கா.

    திருச்செந்தூர் விவரம் கூட புதிது எனக்கு.

    வரலட்சுமி அவர்களின் பாடல் கேட்டேன் அக்கா நன்றாக இருக்கிறது. முதல் ஆண் குரல் யார்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கட்டபொம்மன் தன் கோட்டையை அமைத்த இடத்தின் காரணம் இப்பதான் தெரிகிறது கோமதிக்கா.

      திருச்செந்தூர் விவரம் கூட புதிது எனக்கு.//


      நிறைய வரலாறுகள் இருக்கிறது அனைத்தையும் நாம் தெரிந்து கொள்வது இந்த மாதிரி இடங்களில் தான் கீதா.


      //வரலட்சுமி அவர்களின் பாடல் கேட்டேன் அக்கா நன்றாக இருக்கிறது. முதல் ஆண் குரல் யார்?//

      ஆண் குரல் வி,என். சுந்தரம்.

      நீக்கு
  5. கனல் பறக்கும் பேச்சு நினைவுக்கு வந்து இருக்குமே!// இது நன்றாக நினைவுக்கு வந்ததே சிவாஜியின் அனல் தெறிக்கும் வசனம்!

    படங்கள் வழி பல விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கனல் பறக்கும் பேச்சு நினைவுக்கு வந்து இருக்குமே!// இது நன்றாக நினைவுக்கு வந்ததே சிவாஜியின் அனல் தெறிக்கும் வசனம்!

      படங்கள் வழி பல விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது//

      ஆமாம், படங்கள் மூலம் கதையை அழகாய் சொல்லி விட்டார்கள் சுருக்கமாக.

      நீக்கு
  6. கட்டபொம்மனை தூக்கிலிட்ட புளியமரம் பட்டு போய் விட்டது அந்த இடத்தை சிவாஜி கணேசன் அவர்கள் விலைக்கு வாங்கி 1970 ஆம் ஆண்டு நினைவு தூண் அமைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு .

    அதன் பின்னர் அரசிடம் ஒப்படைத்து விட்டார். மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.//

    இது எல்லாமே எனக்குப் புதிய தகவல்கள்.

    ஆமாம் அக்கா அப்பகுதியில் காற்றாலைகள் நிறைய உண்டு.

    கண்ணாடியில் மழை பெய்தது படம் நல்லாருக்கு

    பல விவரங்கள் தெரிந்தது கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கட்டபொம்மனை தூக்கிலிட்ட புளியமரம் பட்டு போய் விட்டது அந்த இடத்தை சிவாஜி கணேசன் அவர்கள் விலைக்கு வாங்கி 1970 ஆம் ஆண்டு நினைவு தூண் அமைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு .

      அதன் பின்னர் அரசிடம் ஒப்படைத்து விட்டார். மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.//

      இது எல்லாமே எனக்குப் புதிய தகவல்கள்.//

      செய்திகளில் படித்தது . அங்கும் சொன்னார்கள்.

      //ஆமாம் அக்கா அப்பகுதியில் காற்றாலைகள் நிறைய உண்டு.//

      பயணிக்கும் போது அந்த பகுதியில் நிறைய காற்றாலைகள் வந்து கொண்டே இருக்கும்.

      //கண்ணாடியில் மழை பெய்தது படம் நல்லாருக்கு//

      உங்கள் ரசனைக்கு நன்றி.

      பல விவரங்கள் தெரிந்தது கோமதிக்கா

      நீக்கு
  7. ஓ வீல் சேர் வாங்கி அதில் கூட்டிக் கொண்டு போனாங்களா நல்ல விஷயம் கோமதிக்கா. என் மனம் மிகவும் சந்தோஷப்பட்டதோடு நெகிழ்ந்தும் போனது. நல்ல குழந்தைகள். உங்கள் ஆர்வத்திற்கு அவங்க அன்போடு மரியாதை கொடுத்தது எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    கவின் நிறைய கற்றுக் கொள்வார் இதிலிருந்து. எப்போதும் நல்லதே நடக்கும் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ வீல் சேர் வாங்கி அதில் கூட்டிக் கொண்டு போனாங்களா நல்ல விஷயம் கோமதிக்கா. என் மனம் மிகவும் சந்தோஷப்பட்டதோடு நெகிழ்ந்தும் போனது. நல்ல குழந்தைகள். உங்கள் ஆர்வத்திற்கு அவங்க அன்போடு மரியாதை கொடுத்தது எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

      //கவின் நிறைய கற்றுக் கொள்வார் இதிலிருந்து. எப்போதும் நல்லதே நடக்கும் கோமதிக்கா//

      ஆமாம் கீதா. வீல் சேர் டெல்லியில் ஆர்டர் செய்து வாங்கி விட்டான். சுற்றிபார்க்க போகும் இடங்களில் காரிலிருந்து இறக்கி என்ன உட்கார சொல்லி தள்ளி கொண்டு போனார்கள்,மகன், மருமகள்,மகள் பேரன் எல்லாம். எனக்கு தான் கஷ்டமாக இருந்தது. சில இடங்களில் நம் வீல் சேர் அனுமதி இல்லை அவர்கள் வீல் சேர் அவர்கள் அனுப்பும் ஆட்கள் அழைத்து சென்றார்கள்.
      பின்னர் பதிவுகளில் வரும்.

      ஆமாம், கவின் எங்கு போனாலும் கவனம் ஆச்சி, கையை பிடித்து கொள்ளுங்கள் பார்த்து வாங்க என்று அழைத்து சென்றான்.தாத்தா, அப்பா போல அவனும் என்னை பார்த்து கொள்கிறான்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி கீதா நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு