ரோஜா பதிவை படிக்க வரும் அனைவருக்கும் மலர் கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.
ரோஜா எந்த நிறந்தில் இருந்தாலும் அழகானதுதான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை ஏந்தி வருவது.
- அன்னை அரவிந்தர்
மலர்களில் ராஜா என்று பாராட்டப்படும் மனம் கவர்ந்த ரோஜா பூக்களின் படங்கள் இந்த பதிவில். மலரே மலரே நீயார் ? என்று மலரிடம் கேட்டதற்கு மலர் சொல்லும் பதிலும் இருக்கிறது பதிவில்.
.
தனது படைப்பின் மீது கடவுள் வத்த அன்பை காட்டுவது ரோஜாவின் மென்மை. சில ரோஜாக்கள் மிகப்பெரியவையாய் , வனப்புள்ளதாய், மகிழ்ச்சி
அளிப்பதாய் இருக்கின்றன.//
-அரவிந்த அன்னையின் மந்திர் மலர்கள்

மனிதர்களை நேசிக்க முடிந்தால் தெய்வத்தின் கருணையில்
சிலிர்ப்பெய்த முடியும்.
இளஞ்சிவப்பு ரோஜா வலிமையைத் தரும்

சிவப்பு ரோஜா மனிதனின் காமத்தை, கோபத்தை , ஆசையை விருப்பத்தை தெய்வீக் அன்பாக மாற்றி விடும்.
இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு என்று எண்ணுவோம்.துன்பத்தின் உச்சியில் இருக்கும் போது நம் மீது நமக்கு நம்பிக்கை போய் விடுகிறது. ஆன்மீகத்தை நாடுகிறது. இறைவன் மேல் பாரத்தை போடுகிறது. வாழ்வில் கர்மவினைகள் நீங்கி விட்டால் நாம் புது மனிதரவோம். நம் வாழ்வும் புது வாழ்க்கை ஆகி விடும்.

மலர்ந்தன மகிழ்விக்க வந்தன அன்பைசொல்ல
அழகு ரோஜா அன்பின் ரோஜா
தோட்டத்தில் பூத்த இருமலர்கள்
மனம்கவர்ந்த ஒற்றை அழகிய ரோஜா
எனக்கு பற்றுக் கோடு வேண்டும் என்று சுவரில் சாய்ந்த ரோஜா
நான் தனித்து நிற்பேன் தைரியமாக எனும் ரோஜா

ராசாத்தி ராசாத்தி ரோசாப்பூ ரோசாப்பூ
மஞ்சள் மலரே மஞ்சள் மலரே ! மனம் கவர்ந்த மஞ்சள் ரோஜாவே!
மங்கலம் தரும் மஞ்சள் மலரே!
அன்பை சொல்லும் மஞ்சள் ரோஜா
சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா!
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
ரோஜா மலரே ராஜ குமாரி
காதல் ரோஜாவே !
மலர்களே மலர்களே அமுத கீதம் பாடுங்கள்.
மலர்கள் எல்லாம் எப்படி இருக்கிறது? நன்றாக இருக்கிறதா?
எனக்கு மலர்கள் பிடிக்கும் என்பதால்( உங்களுக்கு மட்டும் தான் பிடிக்குமா எங்களுக்கும் தான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது )
என் மகன் அவன் வீட்டில் பூத்த ரோஜா மலர்கள் படம் அனுப்பினான், மகன், மருமகளின் நட்பு எனக்கும் நட்பு அவர்கள் அவர்கள் வீட்டில் பூத்த ரோஜா மலர்கள் படம் அனுப்பி வைப்பார்கள் எனக்கு. அந்த மலர்கள் படமும் இதில் இடம்பெற்று இருக்கிறது. எங்கள் குடியிருப்பு வளாகத்தில் கீழ் வீட்டில் வைத்து இருக்கும் பூத்தொட்டியில் பூத்த ரோஜா மலர்களும் இடம் பெற்று இருக்கிறது.
நான் காலையில் தினம் ஸ்டேட்டஸ் "வானம் "படம் போட்டு வாழ்க வையகம்!, வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் மலர்கள் படம் போட்டு "வாழ்க வளமுடன்" என்று போட்டு வருகிறேன். தினம் நான் எடுத்த வானம், மலைகள், சூரியன் என இயற்கை காட்சிகளும், நான் எடுத்த மலர்கள் படமும் போட்டு வருகிறேன்.
காலை மலர்களை பார்த்தால் எல்லோருக்கும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என்பதால் அதை போடுவேன்.
வேதாத்திரி அவர்களின் தத்துவத்தின் படி "மலரின் பயணம்" என்பது மனிதன் தன் அறிவை மலரச்செய்து, குறைகளை நீக்கி , தற்சோதனை மூலம் தெய்வீக நிலையை அடையும்பரிணாமப் பயணத்தை குறிக்கிறது. இது தவம் மற்றும் தவறை உணர்ந்து திருந்துதல் மூலம் மன அமைதி, உறுதி மற்றும் மேன்மையை எய்தும் வாழ்க்கை மலர்ச்சியாகும்.
பயணத்தின் நோக்கம்:- மனிதன் அகத்தாய்வு மற்றும் தவம் மூலம் மனதை தூயமை படுத்தி , அறிவின் முழுமையை அடைவதே மலரின் பயணத்தின் இலக்கு.
தற்சோதனை :- இந்த பயணம் தவறுகளை களைந்து நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு தொடர் செயல் முறை.
தவம்:- தவம் தரும் மன அமைதியால் குறைகளை அறிந்து அவற்றை அகற்றி வாழ்க்கை மலர்ச்சியடைய வழி வகுக்கிறது.
தெய்வீக வாழ்க்கை :- இந்த ஞான பயணத்தின் முடிவில் , மனிதன் தன் குறைகளை நீக்கி இயற்கையோடு இயைந்த் தெய்வீக வாழ்க்கையை வாழ முடியும்.
மலரே மலரே நீயார் உன்
மணமும் அழகும் வண்ணமும் என்
பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன். ( மலரே )
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெற என் கதை சொல்வேன் ( மலரே )
மலரே நீயார் எனக் கேட்டாய்
மறை பொருளான தெய்வமே நான்
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள் ( மலரே )
பரம அணுக்கள் பல கோடி
பண்பாய்க் கூடி ஒரு கூத்து
கரம் கோத்தாடும் நாடகத்தோர்
கட்டம் எந்தத் தோற்றமும் ஆம் ( மலரே )
இறைவன் என்ற ஆதிபரம்
மலரிடம் நீயார்? என்று கேட்டதற்கு அது சொல்லும் பதிலும் இதில் இருக்கிறது. இந்த பாடலை போட்டு தவம் செய்யலாம் மலர் தவம்.
மலரே மலரே என்று மலரிடம் கேட்கும் கேள்விக்கு மறை பொருளான தெய்வம் என்று சொல்லும் மலர். நேரம் இருக்கும் போது கேட்டு பாருங்கள்.
மலர் வழியே விளங்கும் மறைபொருள்
மலரே மலரே நீயார் உன்
மணமும் அழகும் வண்ணமும் என்
பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன். ( மலரே )
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெற என் கதை சொல்வேன் ( மலரே )
மலரே நீயார் எனக் கேட்டாய்
மறை பொருளான தெய்வமே நான்
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள் ( மலரே )
பரம அணுக்கள் பல கோடி
பண்பாய்க் கூடி ஒரு கூத்து
கரம் கோத்தாடும் நாடகத்தோர்
கட்டம் எந்தத் தோற்றமும் ஆம் ( மலரே )
இறைவன் என்ற ஆதிபரம்
எடுத்த பலப்பல கோடி உரு
நிறைந்த பெரிய மண்டலமே
நெடிய விரிந்த பேரண்டம் ( மலரே )
பெரிய இயக்க மண்டலமே
பிரபஞ்சம் எனும் மேடையிலே
அரிய உருவ அழகோடு
ஆடுகிறேன் நான் அவன்கதையாய் ( மலரே )
ஆதியின் அசைவே பரம அணு
அவை ஒவ்வோர் அளவில் கூட
வேதம் கூறும் ஐம்பூதம்
விண்முதல் மண்வரை வேறில்லை ( மலரே )
ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
அவ்வுருவறையில் வந்த கதை
செவ்விய சிறு சொல் பரிணாமம்
சிறப்பை உணர்வாய் நீயுமதே ( மலரே )
என்னை கண்ணால் பார்மலராய்
எனதமாய்ப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு
மூலம் சிவமாம் பிரம்மமதே ( மலரே )
உருவம் மலர்தான் உட்பொருளை
உணர விண்ணெனும் நுண்ணணுவே
அருவம் ஆதி அசைந்த நிலை
அணுகுதல் அகண்ட பேரண்டம் ( மலரே )
உன்னை யாரென்றேன் மலரே
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள்
நிறைந்த பெரிய மண்டலமே
நெடிய விரிந்த பேரண்டம் ( மலரே )
பெரிய இயக்க மண்டலமே
பிரபஞ்சம் எனும் மேடையிலே
அரிய உருவ அழகோடு
ஆடுகிறேன் நான் அவன்கதையாய் ( மலரே )
ஆதியின் அசைவே பரம அணு
அவை ஒவ்வோர் அளவில் கூட
வேதம் கூறும் ஐம்பூதம்
விண்முதல் மண்வரை வேறில்லை ( மலரே )
ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
அவ்வுருவறையில் வந்த கதை
செவ்விய சிறு சொல் பரிணாமம்
சிறப்பை உணர்வாய் நீயுமதே ( மலரே )
என்னை கண்ணால் பார்மலராய்
எனதமாய்ப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு
மூலம் சிவமாம் பிரம்மமதே ( மலரே )
உருவம் மலர்தான் உட்பொருளை
உணர விண்ணெனும் நுண்ணணுவே
அருவம் ஆதி அசைந்த நிலை
அணுகுதல் அகண்ட பேரண்டம் ( மலரே )
உன்னை யாரென்றேன் மலரே
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள்
பின்னை இந்தப் பேரறிவில்
பிறழாதிருப்பேன் விழிப்புடனே ( மலரே )
ஆறறிவாக வாழ் மனிதர்
அதற்கு ஏற்பப் பொருத்தமுள
பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன் ( மலரே )
பிறழாதிருப்பேன் விழிப்புடனே ( மலரே )
ஆறறிவாக வாழ் மனிதர்
அதற்கு ஏற்பப் பொருத்தமுள
பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன் ( மலரே )
- வேதாத்திரி மகரிஷி
பாடல் வரிகளை
வேதாத்திரியம் வாழ்க வளமுடன் யோகா தளத்திலிருந்து எடுத்து போட்டு இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி.
இந்த பாடலை போட்டு மலர் தவம் செய்வோம். கொஞ்ச நாட்களாக செய்யவில்லை. இன்று செய்தேன். மலர் பதிவு ஏற்படுத்திய உணர்வு.
அடிக்கடி செய்ய வேண்டும் இனி. மன கலக்கம், மனச்சோர்வு போக்கும் தவம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

















ரோஜா கொத்தை பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன் கோமதிக்கா.
பதிலளிநீக்குரோஜாக்களின் பல நிறங்களும் அழகும் மனதைக் கவரும் ஒன்று. இயற்கை அளித்திருக்கும் அற்புதம்!
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//ரோஜா கொத்தை பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன் கோமதிக்கா.//
ரோஜா கொத்தை பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி கீதா
//ரோஜாக்களின் பல நிறங்களும் அழகும் மனதைக் கவரும் ஒன்று. இயற்கை அளித்திருக்கும் அற்புதம்!//
ஆமாம் கீதா.
அன்னை அவர்களின் கருத்தும் படித்ததுண்டு. இங்கும் தெரிந்து கொண்டேன் கோமதிக்கா.
பதிலளிநீக்குகீதா
//அன்னை அவர்களின் கருத்தும் படித்ததுண்டு. இங்கும் தெரிந்து கொண்டேன் கோமதிக்கா.//
நீக்குநல்லது கீதா.
மனிதர்களை நேசிக்க முடிந்தால் தெய்வத்தின் கருணையில்
பதிலளிநீக்குசிலிர்ப்பெய்த முடியும்//
அதே ஆனால் அங்குதான் சில சமயம் மனம் தடம் புரளும். யார் எப்படி இருந்தாலும் அடிப்படையான அன்பைக் காட்டினால் நல்லது என்று தோன்றும் வெறுக்காமல் இருந்தாலே போதும்.
கீதா
//அதே ஆனால் அங்குதான் சில சமயம் மனம் தடம் புரளும். யார் எப்படி இருந்தாலும் அடிப்படையான அன்பைக் காட்டினால் நல்லது என்று தோன்றும் வெறுக்காமல் இருந்தாலே போதும்.//
நீக்குஆமாம் , நீங்கள் சொல்வது சரிதான். யாரையும் வெறுக்காமல் இருந்தால் போதும்.
பதிவில் பகிர்ந்தது அன்னையின் உயர்ந்த கருத்து மனிதர்களை நேசிப்பதில் இறைவனை காண்பவர்கள் அவர்கள் அதில் சிலிர்ப்பெய்துகிறார்கள்.
சிவப்பு ரோஜா மனிதனின் காமத்தை, கோபத்தை , ஆசையை விருப்பத்தை தெய்வீக் அன்பாக மாற்றி விடும்.
பதிலளிநீக்குஓ! அப்படினா காதல் மலராகவும் சொல்லப்படுகிறதே!
//இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு என்று எண்ணுவோம்.துன்பத்தின் உச்சியில் இருக்கும் போது நம் மீது நமக்கு நம்பிக்கை போய் விடுகிறது. //
அதேதான். நான் அடிக்கடி நினைப்பது உளவியலும் தத்துவமும் இணையும் புள்ளீ!
கீதா
சிவப்பு ரோஜா மனிதனின் காமத்தை, கோபத்தை , ஆசையை விருப்பத்தை தெய்வீக் அன்பாக மாற்றி விடும்.
நீக்கு//ஓ! அப்படினா காதல் மலராகவும் சொல்லப்படுகிறதே!//
ஆமாம் ,காதல் என்பதும் அன்புதானே !அன்பை தெரிவிக்க தெய்வீக அன்பாக மாற்றும் வல்லமை உடைய சிவப்பு ரோஜாவை அளிக்கிறார்கள் கீதா
இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு என்று எண்ணுவோம்.துன்பத்தின் உச்சியில் இருக்கும் போது நம் மீது நமக்கு நம்பிக்கை போய் விடுகிறது.
//அதேதான். நான் அடிக்கடி நினைப்பது உளவியலும் தத்துவமும் இணையும் புள்ளீ!//
தவறுகளை திருத்தி கொண்டு வாழ தத்துவங்களும், உளவியலும் உதவும் தான்.
கதவில் இடித்து கொண்டாதால் கால் வலி அது நேற்றைய தவறு மீண்டும் கால் இடித்து கொள்ளாமல் கவனமாக இருப்பது போலதான்.
(விழிப்புணர்வுடன் இருப்பது )
அந்த கவனத்தையும் தாண்டி மீண்டும் இடித்து கொண்டு அவதி படும் போது இறைவனிடம் வேண்டுவோம் இறைவா! கவனமாக இருக்க வை என்னை என்று.
ஆமாம் ,காதல் என்பதும் அன்புதானே !அன்பை தெரிவிக்க தெய்வீக அன்பாக மாற்றும் வல்லமை உடைய சிவப்பு ரோஜாவை அளிக்கிறார்கள் கீதா//
நீக்குஓகே ஓகே புரிந்து கொண்டேன் கோமதிக்கா
கீதா
புரிதலுக்கு நன்றி
நீக்குஎனக்கும் மலர்கள் பிடிக்கும். எல்லாமே பிடிக்கும் இப்பூமியில். எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு. ஏன் ரோட்டோரத்தில் இருக்கும் யாசகர் முதல் மனம் பிறழ்ந்தவர் வரை மனதின் ஓரத்தில் ஒரு வருத்தம் வந்தாலும்....அவர்களின் நிலையை நினைத்து யோசிப்பதுண்டு. கதைகள் பிறப்பதுண்டு ஆனால் ஏனோ இப்ப சமீபகாலமாக டக்கென்றுஎ ழுத வருவதில்லை.
பதிலளிநீக்குகீதா
//எனக்கும் மலர்கள் பிடிக்கும். எல்லாமே பிடிக்கும் இப்பூமியில். எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு. //
நீக்குஅது போதும் கீதா, எல்லா வற்றையும் ரசிக்கும் மனம் இருந்தால் மகிழ்ச்சிதான்.
//ஏன் ரோட்டோரத்தில் இருக்கும் யாசகர் முதல் மனம் பிறழ்ந்தவர் வரை மனதின் ஓரத்தில் ஒரு வருத்தம் வந்தாலும்....அவர்களின் நிலையை நினைத்து யோசிப்பதுண்டு.//
பிறர் கஷ்டத்தை யோசிப்பதே பெரிய விஷயம்
//கதைகள் பிறப்பதுண்டு ஆனால் ஏனோ இப்ப சமீபகாலமாக டக்கென்றுஎ ழுத வருவதில்லை.//
கதைகள் பிறக்கும் போது எழுதி வைத்து கொள்ளுங்கள் முடிந்த போது
எழுதி வெளியீடுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா
எனக்கு வேதாத்ரி மகரிஷியை அறிந்த போது கவர்ந்ததே இந்த உளவியல் சார்ந்த தத்துவார்த்தங்கள். தற்சோதனை என்பது மிக முக்கியம். எல்லா தத்துவங்களும் அதைச் சொல்கிறதுதான்....
பதிலளிநீக்குவேதாத்ரி மகரிஷி அவர்களின் தத்துவார்த்தம் ரொம்ப யதார்த்த ரீதியில் இருக்கும். உளவியல் சார்ந்ததாகவும் இருக்கும்.
மனிதன் தன் குறைகளை நீக்கி இயற்கையோடு இயைந்த தெய்வீக வாழ்க்கையை வாழ முடியும்//
அதே.
பாடலும் கேட்டேன் கோமதிக்கா. தர்பாரி கனடாவில் அமைந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது.
கீதா
//எனக்கு வேதாத்ரி மகரிஷியை அறிந்த போது கவர்ந்ததே இந்த உளவியல் சார்ந்த தத்துவார்த்தங்கள். தற்சோதனை என்பது மிக முக்கியம். எல்லா தத்துவங்களும் அதைச் சொல்கிறதுதான்....//
நீக்குஆமாம், நம்மை நாமேசோதனை செய்து கொள்வது நல்லது என்பார்.
ஸ்டாக் லிஸ்ட் எடுப்பது போல அமைதியாக அமர்ந்து நம்மிடம் இருக்கும் வேண்டாத குப்பைகளை கழித்து நல்லவைகளை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். நல்லவைகளை போட போட அல்லவைகள் மறைந்து விடும் என்பார்.
தற்சோதனை மிகவும் முக்கியம் என்பார். தன்னை அறிதல் மிக முக்கியம்.
//வேதாத்ரி மகரிஷி அவர்களின் தத்துவார்த்தம் ரொம்ப யதார்த்த ரீதியில் இருக்கும். உளவியல் சார்ந்ததாகவும் இருக்கும்.//
ஆமாம்.
//மனிதன் தன் குறைகளை நீக்கி இயற்கையோடு இயைந்த தெய்வீக வாழ்க்கையை வாழ முடியும்
அதே.//
ஆமாம் கீதா.
//பாடலும் கேட்டேன் கோமதிக்கா. தர்பாரி கனடாவில் அமைந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது.//
இதை கேட்டால் மனம் லேசாக இருக்கும் இனிமையாக இருக்கும். வேதாத்திரி அவர்கள் எழுதிய கவிதை எல்லாம் எளிமையாக அருத்தம் தேடிகொண்டு இருக்க வேண்டாம் எளிதாக புரியும் நமக்கு.
பாடல் இனிமையாக இருக்கும் கேட்டு ராகத்தையும் சொன்னது மகிழ்ச்சி
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
ஆஹா. அருமை. மலர்க்கொத்தை வாங்கி கொண்டு உள்ளே வருகிறேன்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆஹா. அருமை. மலர்க்கொத்தை வாங்கி கொண்டு உள்ளே வருகிறேன்!//
நன்றி ஸ்ரீராம். மலர் கொத்தை பெற்றுக் கொண்டதற்கு
தனசேகர் மல்லிகா பாடியுள்ள 'மலர்களின் ராஜா.. அழகிய ரோஜா..' பாடல் கேட்டிருக்கிறீர்களா? எனக்கு அது நினைவுக்கு வந்துவிட்டது.
பதிலளிநீக்கு//தனசேகர் மல்லிகா பாடியுள்ள 'மலர்களின் ராஜா.. அழகிய ரோஜா..' பாடல் கேட்டிருக்கிறீர்களா? எனக்கு அது நினைவுக்கு வந்துவிட்டது.//
நீக்குஆமாம், கேட்டு இருக்கிறேன் தனசேகரன் , மல்லிகா அப்புறம் ஏன் பாடவில்லை என்றும் நினைத்தும் இருக்கிறேன். மீண்டும் இன்று கேட்டேன். நினைவு படுத்தியதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
நீக்குரோஜா பாடல்கள் நிறைய உள்ளன. சகோதரர் ஸ்ரீராம் அவர்களுடன் போட்டிப் போட முடியாது. இந்தப்பாடலை குறிப்பிடலாமென நினைத்து வந்தேன். இதையும் அவரே சொல்லி விட்டார். அவர் சொன்ன பாடல்கள் அனைத்தும் அருமை.
நான் கூட என் பதிவில் பாடகர் தனசேகர், மல்லிகா அவர்கள் பாடிய "மலர்களின் ராஜா" என்ற பாடலுக்குகேற்ப எங்கள் வீட்டு மாடியில் பூத்த மலர்களின் படங்களை பாடலுக்கேற்ற வரிகளின்படி வரிசைப்படுத்தி போட்டிருந்தேன். உங்களுக்கு நினைவிருக்குமென நினைக்கிறேன்.ஒரு சில மாதங்களுக்கு முன் பதிவிட்டிருந்தேன்.
உங்கள் பதிவில் ரோஜா கூட்டத்தின் அழகுகள் மனதை கொள்ளையடிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
நீக்கு//ரோஜா பாடல்கள் நிறைய உள்ளன. சகோதரர் ஸ்ரீராம் அவர்களுடன் போட்டிப் போட முடியாது. இந்தப்பாடலை குறிப்பிடலாமென நினைத்து வந்தேன். இதையும் அவரே சொல்லி விட்டார். அவர் சொன்ன பாடல்கள் அனைத்தும் அருமை.//
அவர் பாட்டு பிரியர் அவர் சொன்ன பாடல் அனைத்தும் அருமைதான்.
//நான் கூட என் பதிவில் பாடகர் தனசேகர், மல்லிகா அவர்கள் பாடிய "மலர்களின் ராஜா" என்ற பாடலுக்குகேற்ப எங்கள் வீட்டு மாடியில் பூத்த மலர்களின் படங்களை பாடலுக்கேற்ற வரிகளின்படி வரிசைப்படுத்தி போட்டிருந்தேன். உங்களுக்கு நினைவிருக்குமென நினைக்கிறேன்.ஒரு சில மாதங்களுக்கு முன் பதிவிட்டிருந்தேன்.//
ஓ அப்படியா நீங்கள் அந்த பதிவின் சுட்டியை கொடுத்து இருக்கலாம்.
மறுபடியும் பார்த்து ரசித்து இருப்பேன்.
//உங்கள் பதிவில் ரோஜா கூட்டத்தின் அழகுகள் மனதை கொள்ளையடிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
உங்கள் கருத்துக்கு நன்றி கமலாஹரிஹரன்.
"மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.. பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!" - பொருத்தமான பாடல்.
பதிலளிநீக்கு"//மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.. பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!" - பொருத்தமான பாடல்.//
நீக்குமுன்பு போட்ட ஒரு மலர்கள் பதிவில் இந்த பாடலை பகிர்ந்து இருக்கிறேன் ஸ்ரீராம். பிடித்த பாடல்.
சிவப்பு ரோஜா சற்றே கோபத்தைக் காட்டும் நிறமாய் எனக்குத் தோன்றும். அவரவர் மனம் படிதான் தோன்றுமோ!!
பதிலளிநீக்கு//சிவப்பு ரோஜா சற்றே கோபத்தைக் காட்டும் நிறமாய் எனக்குத் தோன்றும். அவரவர் மனம் படிதான் தோன்றுமோ!!//
நீக்குசிவப்பு நிறமே கொஞ்சம் கோபத்தை காட்டும் நிறம் தான். கோபத்தை மாற்றி தெய்வீக அன்பாக மாற்றி விடும் என்கிறார் அன்னை.
முதலில் சில ரோஜாக்கள் வரிகளின் துணையுடன் வந்தன. அப்புறம் வரும் ரோஜாக்கள் வரித் துணையின்றி தனியாக நிற்கின்றனவே!! அங்கேயெல்லாம் ஒரு ரோஜா பாடல் வரியை கூட அனுப்பி இருக்கக் கூடாதா?
பதிலளிநீக்கு//முதலில் சில ரோஜாக்கள் வரிகளின் துணையுடன் வந்தன. அப்புறம் வரும் ரோஜாக்கள் வரித் துணையின்றி தனியாக நிற்கின்றனவே!! அங்கேயெல்லாம் ஒரு ரோஜா பாடல் வரியை கூட அனுப்பி இருக்கக் கூடாதா?//
நீக்குஅனுப்பி விடுகிறேன்சிறிது நேரம் கழித்து
அடடே... சூப்பர்.
நீக்குஅனுப்பி விட்டேன் ஸ்ரீராம்.
நீக்குவந்து, பார்த்து, படித்து, ரசித்து விட்டேன்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குமலர்களின் படங்கள் பார்த்ததும் மனம் மலர்ந்து விட்டது. மலர்களே இதோ இதோ வருகிறாள் துணைவி என்று கூட சில வரிகளை அனுப்புங்கள். ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று அனுப்புங்கள்!
பதிலளிநீக்கு//மலர்களின் படங்கள் பார்த்ததும் மனம் மலர்ந்து விட்டது. மலர்களே இதோ இதோ வருகிறாள் துணைவி என்று கூட சில வரிகளை அனுப்புங்கள். ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று அனுப்புங்கள்!//
நீக்குஅனுப்பி விடலாம் ஸ்ரீராம்.
மகரிஷியின் வரிகளை படிக்க சிரமமாக இருக்கிறது. மஞ்சள் பின்னணி, சிறிய எழுத்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//மகரிஷியின் வரிகளை படிக்க சிரமமாக இருக்கிறது. மஞ்சள் பின்னணி, சிறிய எழுத்துகள். //
இப்போது படித்து பாருங்கள் எழுத்துக்களை பெரிது செய்து வண்ணத்தை மாற்றி இருக்கிறேன்.
இப்போது எளிதாக படிக்க முடிகிறது அக்கா. நன்றி.
நீக்குமீண்டும் வந்து படித்தமைக்கு நன்றி.
நீக்குரோஜாவின் ராஜா, ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜா ரோஜா ரோஜா ரோஜா, காதல் ரோஜாவே, ராசாத்தி ராசாத்தி ரோசாப்பூ ரோசாப்பூ, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே, ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், ரோஜா மலரே ராஜகுமாரி, சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா, - சட்டென நினைவுக்கு வந்த ரோஜா பாடல்கள்!
பதிலளிநீக்கு//ரோஜாவின் ராஜா, ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜா ரோஜா ரோஜா ரோஜா, காதல் ரோஜாவே, ராசாத்தி ராசாத்தி ரோசாப்பூ ரோசாப்பூ, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே, ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், ரோஜா மலரே ராஜகுமாரி, சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா, - சட்டென நினைவுக்கு வந்த ரோஜா பாடல்கள்!//
நீக்குசட்டென நினைவுக்கு வந்த ரோஜா பாடல்கள் எல்லாம் அருமை.
சில பாடல்களை பூக்களுக்கு ரோஜா பாடல் வரிகளை போட சொன்னீர்கள் அங்கு போட்டு விட்டேன் நன்றி ஸ்ரீராம்.
ஸ்ரீராம் விட்டுப்போன பாடல்கள் என்ன என்று யோசித்தால், சட் என்று நினைவுக்கு வருவது, ராஜா மகள் ரோஜா மலர் வானில் வரும் வெண்ணிலா.
நீக்குவாங்க நெல்லை வாழ்க வளமுடன்
நீக்கு//ஸ்ரீராம் விட்டுப்போன பாடல்கள் என்ன என்று யோசித்தால், சட் என்று நினைவுக்கு வருவது, ராஜா மகள் ரோஜா மலர் வானில் வரும் வெண்ணிலா//
நீங்கள் சொன்ன பாடல்களும் நல்ல பாடல் தான் நெல்லை நன்றி.
சுதந்திர பூமியில்
பதிலளிநீக்குபல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
//சுதந்திர பூமியில்
நீக்குபல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்//
ஆமாம், தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள் தான்.
மலர்கள் அள்ளி தந்த பாடல்கள் பகிர்வு அருமை ஸ்ரீராம்.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி.
இந்தப் பாடல் கேட்டிருக்கிறீர்கள்தானே!
நீக்குகேட்டு இருக்கிறேன் சிவாஜி பாடல்
நீக்குஅருமையான அழகான 'அன்பில் மலர்ந்த நல்ரோஜா' பாடலை விட்டு விட்டேனே... அதையும் கூட மலர்ந்த ஒரு ராஜாவிடம் சேர்க்கலாம், கொஞ்சலாம்.
பதிலளிநீக்கு//அருமையான அழகான 'அன்பில் மலர்ந்த நல்ரோஜா' பாடலை விட்டு விட்டேனே... அதையும் கூட மலர்ந்த ஒரு ராஜாவிடம் சேர்க்கலாம், கொஞ்சலாம்.//
நீக்குமலர்ந்த ஜோஜாவிடம் சேர்க்கலாம் தான்.
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
அருமையான தாலாட்டு பாடல்.
இந்த பாடலும் மிகவும் பிடிக்கும் எனக்கு. அருமையான பாடல்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மஞ்சள் மலர் கொத்து பார்க்கவே மிக அருமையாக உள்ளது. அன்புடன் நீங்கள் தந்த மலர் கொத்தை பெற்று மகிழ்ந்தேன் சகோதரி.
அழகான பலவித ரோஜாக்களின் படங்களும் அதற்கேற்ற வரிகளுமாக பதிவு மணம் வீசுகிறது. அருமையான மணம் நுகர்ந்து, ஆசை தீர பலவித ரோஜாவின் வண்ணங்கள் கண்டு மனம் மகிழ்வுறுகிறது.
தங்கள் மகன், மற்றும் அவரின் நண்பர்கள், தந்த படங்கள் உங்கள் நட்புக்கள் வீட்டில் மலர்ந்த ரோஜாப்பூக்கள் என அனைத்தும் பார்க்கப்பார்க்க மிக அழகாக இருக்கிறது
வேதாந்த மகரிஷி அவர்களின் பாடலும், அன்னை அவர்களின் வரிகளும் மனதிற்கு அமைதியை தருகிறது. மகரிஷி அவர்களின் பாடல் நன்றாக உள்ளது.
/தவம்:- தவம் தரும் மன அமைதியால் குறைகளை அறிந்து அவற்றை அகற்றி வாழ்க்கை மலர்ச்சியடைய வழி வகுக்கிறது./
/இந்த பாடலை போட்டு மலர் தவம் செய்வோம். கொஞ்ச நாட்களாக செய்யவில்லை. இன்று செய்தேன். மலர் பதிவு ஏற்படுத்திய உணர்வு.
அடிக்கடி செய்ய வேண்டும் இனி. மன கலக்கம், மனச்சோர்வு போக்கும் தவம்/
நல்ல பொருளமைந்த பாடலை படித்து ரசித்தேன். மலர் தவத்தின் பொருளுணர்ந்து கொண்டேன். அதற்கு நீங்களும் தவமென்ற செய்த விளக்கமும், கண்டு மகிழ்வடைந்தேன். கண்கள் நிறைந்த பதிவு. கருத்துரைகளும் மனம் கவர்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. மஞ்சள் மலர் கொத்து பார்க்கவே மிக அருமையாக உள்ளது. அன்புடன் நீங்கள் தந்த மலர் கொத்தை பெற்று மகிழ்ந்தேன் சகோதரி.//
நன்றி கமலா
//அழகான பலவித ரோஜாக்களின் படங்களும் அதற்கேற்ற வரிகளுமாக பதிவு மணம் வீசுகிறது. அருமையான மணம் நுகர்ந்து, ஆசை தீர பலவித ரோஜாவின் வண்ணங்கள் கண்டு மனம் மகிழ்வுறுகிறது.//
நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவே இந்த பகிர்வு கமலா
//தங்கள் மகன், மற்றும் அவரின் நண்பர்கள், தந்த படங்கள் உங்கள் நட்புக்கள் வீட்டில் மலர்ந்த ரோஜாப்பூக்கள் என அனைத்தும் பார்க்கப்பார்க்க மிக அழகாக இருக்கிறது//
ஆமாம் , எல்லாம் அழகு மலர்கள்.
//வேதாந்த மகரிஷி அவர்களின் பாடலும், அன்னை அவர்களின் வரிகளும் மனதிற்கு அமைதியை தருகிறது. மகரிஷி அவர்களின் பாடல் நன்றாக உள்ளது.//
ஆமாம் , மனதுக்கு அமைதியை தரும்.
//நல்ல பொருளமைந்த பாடலை படித்து ரசித்தேன். மலர் தவத்தின் பொருளுணர்ந்து கொண்டேன். அதற்கு நீங்களும் தவமென்ற செய்த விளக்கமும், கண்டு மகிழ்வடைந்தேன். கண்கள் நிறைந்த பதிவு. கருத்துரைகளும் மனம் கவர்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
மலர் வைத்தியம் என்று உண்டு மலர்களில் இருந்து கிடைக்கும் மருந்து. அது போல ஒரு அழகான் பூவை கையில் வைத்துக் கொண்டு இந்த பாடலை பாடி மலர் சொல்லும் பதிலை கேட்க மலர் தவம் என்று பெயர் கொடுத்து இருக்கிறார் மகரிஷி.
அமைதியாக இந்த பாடலை கண்களை மூடி கேட்டால் மனம் அமைதி அடையும். உடலும் உள்ளமும் உற்சாகம் பெறும் இது உண்மை கமலா.
உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.
ரோஜாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?
பதிலளிநீக்குநான் இன்னும் அதிகமான நிறங்களில், இன்னும் பெரிதாக ரோஜாக்கள் பார்த்திருக்கிறேன்.
என்ன இருந்தாலும் ரோஸ் நிற ஒரிஜினல் ரோஜா போல வரவே வராது. அந்த மணம் உள்ள ரோஜாவைப் பார்த்தே (நிறமுள்ள ரோஜா பார்க்க முடிகிறது) ரொம்ப வருடங்களாகிவிட்டன
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//ரோஜாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?//
நிறைய சொல்கிறார் அரவிந்தர் அன்னை நான் கொஞ்சம் தான் பகிர்ந்து இருக்கிறேன்.
//நான் இன்னும் அதிகமான நிறங்களில், இன்னும் பெரிதாக ரோஜாக்கள் பார்த்திருக்கிறேன்.//
நானும் முன்பு பெரிதாக உள்ள் ரோஜாக்கள் மகன் வீட்டில் பூத்தது வைத்து பதிவு போட்டு இருக்கிறேன்.
//என்ன இருந்தாலும் ரோஸ் நிற ஒரிஜினல் ரோஜா போல வரவே வராது. அந்த மணம் உள்ள ரோஜாவைப் பார்த்தே (நிறமுள்ள ரோஜா பார்க்க முடிகிறது) ரொம்ப வருடங்களாகிவிட்டன//
மாயவரத்தில் பெரிய தொட்டியில் பன்னீர் ரோஸ் வைத்து இருந்தேன் .
அதை பள்ளிக்கூட பிள்ளைகள் பறித்து சென்று விடுவார்கள் . நாங்கள் பறிக்கும் முன் பார்த்து விட்டால் சிரித்துவிட்டு போவார்கள். சார் "பாவம் குழந்தைகள் போகட்டும் விடு" என்பார்கள்.
பன்னீர் ரோஸ் மணம் சொல்லி முடியாது தொட்ட கை மணக்கும்.
தண்ணீரில் போட்டு அந்த தண்ணியை முகம் கழுவி கொள்வோம் நெடுநேரம் அதன் மணம் இருக்கும்.
இங்கு அம்மா வீட்டில் இருந்தது. நிறைய பூக்கும்.
அந்தக் காலத்தில் என் அப்பாவிற்கு ரோஜாப்பூ மாலை போட்டால், வீட்டிற்குக் கொண்டுவந்து அந்த இதழ்களை வைத்து குல்கந்து செய்வார்கள்.
பதிலளிநீக்குஎழுதும்போதே ரோஜா மணம் வருகிறது.
இப்போ உள்ள ரோஜாக்கள் பளிச் பளீர் என்று நிறமுள்ளதாக இருக்கிறது.
//அந்தக் காலத்தில் என் அப்பாவிற்கு ரோஜாப்பூ மாலை போட்டால், வீட்டிற்குக் கொண்டுவந்து அந்த இதழ்களை வைத்து குல்கந்து செய்வார்கள்.//
நீக்குஆமாம், மாலை யை வீணாக்காமல் குல்கந்து நாங்களும் செய்வோம்.
சாரின் அண்ணாவை ஜனவரி முதல் தேதி அவர்கள் அலுவலகத்திலிருந்து பார்க்க வருபவர்கள் இந்த பன்னீர் ரோஸ் வாங்கி வருவார்கள், நிறைய பழங்கள் , எலுமிச்சை வாங்கி வருவார்கள். பழங்களை ஜாம் செய்வோம்.
எலுமிச்சையை ஜூஸ் போட்டும் ஊறுகாய் போட்டும் வைப்போம். ரோஜா மலர்களை குல்கந்து செய்து இருக்கிறோம்.
அப்போது எல்லாம் நேரமும் எதையும் வீணாக்க கூடாது என்ற எண்ணமும் இருந்தது. இப்போது ரோஜா மாலைகள் வீட்டின் நிலை கதவுக்கு போட படுகிறது, காருக்கு போடப்படுகிறது.
//எழுதும்போதே ரோஜா மணம் வருகிறது.//
ஆமாம், தொட்ட கை மணக்கும்.
//இப்போ உள்ள ரோஜாக்கள் பளிச் பளீர் என்று நிறமுள்ளதாக இருக்கிறது.//
ஆமாம், அதுவும் ஒரு அழகுதான். சிவப்பு ரோஜா பூ கொண்டு வருகிறார்கள் பூக்கார அம்மா அதுவும் நல்ல மணமாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.