அழகான கொலு
நமக்கு கொலு பார்ப்பது பிடிக்கும் தானே ! அதுதான் உங்களை எல்லாம் அழைத்தேன் கொலு பார்க்க .
சிறு வயதில் பார்த்த கொலுக்கள், நம் வீடுகளில் மிகவும் மகிழ்ச்சியாக வைத்த கொலு, கொலு நினைவுகள் எல்லாம் நவராத்திரி காலத்தில் நினைவுக்கு வரும். உங்களுக்கும் மலரும் நினைவுகள் வந்தால் சொல்லுங்கள்.
போன ஆண்டு கொலுவுக்கு மகன் ஊரில் இருந்தேன் (அரிசோனா) அப்போது மகன் நண்பர்கள் வீட்டுக் கொலுவுக்கு அழைத்து சென்றான் . சென்ற ஆண்டு அதில் சிலவற்றை தான் பகிர்ந்து இருந்தேன். மீதியை இந்த ஆண்டுப்பார்க்கலாம்.
இந்த பதிவில் ஒரு வீட்டில் வைத்து இருந்த கண்ணன் கதைகளை சொல்லும் கொலு படங்கள் இடம் பெறுகிறது.
எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நவராத்திரி விழா இதற்கு முந்திய பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
கண்ணன் பிறப்பு காட்சிகள்
குழந்தை கண்ணன் ஆனந்த ஊஞ்சலில்
வானம், பச்சை வயல், இயற்கை காட்சி என்று பின் புறம் அழகு . யமுனை ஆறும் கண்ணன் கதைகளும் காட்சி அமைப்பு அழகு.
கம்சனின் சிறையில் குழந்தை கண்ணன் பிறப்பு, குழந்தை கண்ணனை கூடையில் சுமந்து வசுதேவர் யமுனை ஆற்றை கடந்து செல்லும் காட்சி
காளிங்க நர்த்தனம் ஆற்றில் இருக்கிறது
கோவர்த்தனக் கிரி
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
திருமண வீட்டுக் காட்சி சீர்வரிசை ,
கோயில் வழிபாடு, அரசமரத்து பிள்ளையார் பூஜை
கல்யாண வீட்டு விருந்தில் சாப்பிடுவதை வீடியோ எடுக்கிறார்
கண்ணன் நண்பர்களுடன் விளையாடுதல்
கடைத்தெரு
கிராமத்துக் காட்சிகள்
அவர்கள் வீட்டில் இருந்த அஷ்ட லட்சுமிகளும் பெருமாளும்
எல்லோருக்கும் இவர்களின் ஆசியும் வேண்டும் தானே!
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் மகனின் நட்புகளின் வீட்டு கொலு காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
இப்போது இந்த மாதிரி எல்லாமே செட்டாகவே கிடைக்கிறது. முன்பு இப்படி கிடைப்பதில்லை. அதனால் இப்போது கொலு வைப்பதும் சுலபமாக உள்ளது. ஆனால், அடுத்த வருடம் வரை எடுத்து வைத்து பாதுகாத்து என மிகவும் பொறுமை வேண்டு்ம். ஆர்வமும் கண்டிப்பாக வேண்டும்.
எங்கள் அம்மா வீட்டில் என் சின்ன வயதிலிருந்தே இன்னமும், தவறாது வைத்து வருகிறார்கள் நாங்களும், என் திருமணமானதிலிருந்து பல வீடுகள்/ஊர்கள் மாறினாலும், தவறாமல் கொஞ்சம் பொம்மைகள் வைத்து கொலு வைத்து வந்தோம். இப்போது பத்து வருடமாக வைக்க இயலாமல் போய் விட்டது. மறுபடியும் இறைவன் அருளால், ஆரம்பிக்க வேண்டும்.
கிருஷ்ணர் பிறப்பிலிருந்து அவரின் விளையாட்டு பருவ நிகழ்ச்சிகள் என அனைத்தும் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது.காளிங்க நர்த்தனம், சத்யபாமாவின் அகந்தையை களையும் காட்சியென அனைத்து பொம்மைகளும் அழகு. பெருமாளும், சுற்றிலும் அஷ்டலட்சுமி போட்டோக்களும் அருமையாக உள்ளது. கண்குளிர அனைத்தும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன். உங்களுக்கும், உங்கள் மகன் குடும்பத்திற்கும், மற்றும் கொலு பொம்மைகளை வைத்து பூஜிக்கும் நட்புக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா ஹரிஹரன் மேடம்... கொலு வைக்க ஆரம்பித்தாலும் சுண்டல், புட்டு பண்ணும் பொறுப்பு உங்களுடையதுதான்.
நீக்குவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. உங்கள் மகனின் நட்புகளின் வீட்டு கொலு காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//
ஆமாம், ஒரு நண்பர் வீட்டில் மட்டும் எடுத்த கொலு படம்.
//இப்போது இந்த மாதிரி எல்லாமே செட்டாகவே கிடைக்கிறது. முன்பு இப்படி கிடைப்பதில்லை. அதனால் இப்போது கொலு வைப்பதும் சுலபமாக உள்ளது. ஆனால், அடுத்த வருடம் வரை எடுத்து வைத்து பாதுகாத்து என மிகவும் பொறுமை வேண்டு்ம். ஆர்வமும் கண்டிப்பாக வேண்டும்.//
ஆமாம், அவர் அவர் திறமையை காட்டவும் கலைத்திறன்களை காட்டவும் உள்ள ஒரு விழா இது தானே! பாட்டு, நடனம், கைவேலைகள் எல்லாம் காட்ட ஒரு வாய்ப்பு. மகன் வீட்டுக் கொலுவில் குழந்தைகள், பாடுவதை , ஆடுவதை பார்த்து கொண்டு இருக்கிறேன் நேர்லையில்.
//எங்கள் அம்மா வீட்டில் என் சின்ன வயதிலிருந்தே இன்னமும், தவறாது வைத்து வருகிறார்கள் நாங்களும், என் திருமணமானதிலிருந்து பல வீடுகள்/ஊர்கள் மாறினாலும், தவறாமல் கொஞ்சம் பொம்மைகள் வைத்து கொலு வைத்து வந்தோம். இப்போது பத்து வருடமாக வைக்க இயலாமல் போய் விட்டது. மறுபடியும் இறைவன் அருளால், ஆரம்பிக்க வேண்டும்.//
உங்கள் இளமைகால் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.மறுபடியும் குழந்தைகளுக்காக அவர்களுக்கு ஆர்வம் இருந்தால் வையுங்கள். இறைவன் அருளால் அது நடக்கும்.
//கிருஷ்ணர் பிறப்பிலிருந்து அவரின் விளையாட்டு பருவ நிகழ்ச்சிகள் என அனைத்தும் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது.காளிங்க நர்த்தனம், சத்யபாமாவின் அகந்தையை களையும் காட்சியென அனைத்து பொம்மைகளும் அழகு. பெருமாளும், சுற்றிலும் அஷ்டலட்சுமி போட்டோக்களும் அருமையாக உள்ளது. கண்குளிர அனைத்தும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.//
அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//உங்களுக்கும், உங்கள் மகன் குடும்பத்திற்கும், மற்றும் கொலு பொம்மைகளை வைத்து பூஜிக்கும் நட்புக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
உங்கள் வாழ்த்துக்களை அவர்களிடம் சொல்கிறேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்கள் வளாக கொலு மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் வளாக கிளப் ஹவுஸில் வைத்திருக்கிறீர்களா? மேலே இருக்கும் படத்தில் இருக்கும் கொலு அரிஸானோ கொலுவா?
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் வளாக கொலு மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் வளாக கிளப் ஹவுஸில் வைத்திருக்கிறீர்களா?//
ஆமாம்.
//மேலே இருக்கும் படத்தில் இருக்கும் கொலு அரிஸானோ கொலுவா?//
இந்த பதிவில் உள்ள கொலு படங்கள் முழுக்க அரிசோனாவில் உள்ள மகனின் நண்பர் வீடு தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கொலு படங்கள் அழகு. அதில் ஒரு படத்தில் இருக்கும் வசுதேவர் பொம்மை நேற்றுதான் வாங்கி வந்தோம். பொம்மை விலை எல்லாம் கன்னாபின்னா என்று ஏறிவிட்டன. இத்தனூண்டு பொம்மை 600 ரூபாய்.
பதிலளிநீக்குகும்பகோணம் போகும்போது, கும்பேசுவர்ர் கோயில் கடைகளில் விலை மலிவு. நாங்கள் அங்குதான் பொம்மைகள் வாங்கி பெண்ணுக்கு சென்ற வருடம் அனுப்பினோம்.
நீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//கொலு படங்கள் அழகு. அதில் ஒரு படத்தில் இருக்கும் வசுதேவர் பொம்மை நேற்றுதான் வாங்கி வந்தோம். பொம்மை விலை எல்லாம் கன்னாபின்னா என்று ஏறிவிட்டன. இத்தனூண்டு பொம்மை 600 ரூபாய்.//
ஆமாம், இப்போது பொம்மைகள் விலை அதிகம் தான் இப்போது.வசுதேவர்மட்டுமா?
பொம்மை நெல்லைத்தமிழன் சொன்னது போல எங்கள் மகனுக்கு கும்பேசுவரர் கோயிலில் சில பொம்மைகள் வாங்கி அனுப்பினோம் விலை மலிவா என்று தெரியாது ஆனால் பொம்மைகள் அழகாய் இருக்கும்.
கண்ணனின் கதை விரிவாக பொம்மைகளாக வைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இது மாதிரி செட் செட்டாக பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் அறுபடை வ வீடும், தசாவதாரம் மட்டும்தான் செட்டாக வைத்திருக்கிறோம்! உங்களுக்கு எங்கள் வீட்டு கொலு வீடியோ அனுப்பினேனோ?
பதிலளிநீக்கு//கண்ணனின் கதை விரிவாக பொம்மைகளாக வைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இது மாதிரி செட் செட்டாக பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் அறுபடை வ வீடும், தசாவதாரம் மட்டும்தான் செட்டாக வைத்திருக்கிறோம்! உங்களுக்கு எங்கள் வீட்டு கொலு வீடியோ அனுப்பினேனோ?//
நீக்குஒவ்வொரு வருடம் ஒவ்வொரு செட்டை வைத்து கதை காட்சிகள் வைக்கிறார்கள்.
முன்பு திருவல்லிக்கேணி 64 உற்சவ விழா அதைசுற்றி கடைகள் என்று வைத்து இருந்த கொலு படங்களை முன்பு பதிவு செய்து இருந்தேன்.
நேற்று ஏழு வீடுகளுக்கு கொலுசுற்று சென்று வந்தோம். சாலைகளிலேயே பாதி நேரம் போனது.மதியம் பனிரெண்டு மணிக்கு கிளம்பி வீடு திரும்பும்போது இரவு பத்தரை மணி!
பதிலளிநீக்கு//நேற்று ஏழு வீடுகளுக்கு கொலுசுற்று சென்று வந்தோம். சாலைகளிலேயே பாதி நேரம் போனது.மதியம் பனிரெண்டு மணிக்கு கிளம்பி வீடு திரும்பும்போது இரவு பத்தரை மணி!//
நீக்குநீங்களும் கொலு வைத்து இருக்கும் போது ஏழு கொலு போய் வந்தது சாதனைதான், அதுவும் சென்னை மாதிரி ஊரில்.
மகன் சில வீடுகளுக்கு போய் வருகிறான்.
அவன் வீட்டு கொலுவுக்கும் ஆட்கள் வந்து கொண்டு இருப்பதால் அனைத்து வீடுகளுக்கும் போய் வர முடிவது இல்லை.
உங்கள் கருத்துக்குளுக்கு நன்றி.
கொலு சம்பந்தமான படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குஎன் பெண் வீட்டில் கொலு வைக்கிறார்கள்.
வணக்கம் நெல்லைததமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//கொலு சம்பந்தமான படங்கள் அனைத்தும் அருமை.
என் பெண் வீட்டில் கொலு வைக்கிறார்கள்./
அவர்கள் வெளி நாட்டில் தானே இருக்கிறார்கள்?
அவர்கள் வீட்டுக்கும் எல்லோரும் வருவார்கள் கொலு பார்க்க இல்லையா?
10 நாட்களும் நல்ல விதமாக போகும்.
உங்கள் பெண்ணுக்கு இது முதல் வருட கொலு இல்லையா? வாழ்த்துக்கள் அவர்கள் வீட்டு கொலுவுக்கு வாழ்க வளமுடன்.
இது இரண்டாவது வருடம்.
நீக்குஓ அப்படியா! நான் முதல் வருடம் என்று நினைத்தேன்.
நீக்குகொலு பொம்மைகளின் தரத்தையும் அழகையும் பொறுத்து விலை வித்தியாசம் உண்டு.
பதிலளிநீக்குஆமாம், கொலு பொம்மைகள் தரத்தையும், அழகையும் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது உண்மைதான். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
நீக்குகொலு படங்கள் நன்றாக உள்ளன. வெங்கடாசலபதியும் அஷ்ட லக்ஷ்மிகளும் கொள்ளை அழகு.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கண்ணன் வாழ்வு நிகழ்ச்சிகளுடன் கூடிய கொலு படங்களை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். ரொம்ப அருமையாக ரசனையுடன் அமைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குகோவர்தன கிரி, யமுனை ஆறு, கண்ணனை வசுதேவர் ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்வது, காளிங்க நர்த்தனம் என்று அனைத்தும் மிக அருமை
//கண்ணன் வாழ்வு நிகழ்ச்சிகளுடன் கூடிய கொலு படங்களை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். ரொம்ப அருமையாக ரசனையுடன் அமைத்திருக்கிறார்கள்.//
நீக்குஆமாம், நல்ல ரசனையுடன் அமைத்து இருந்தார்கள்.
//கோவர்தன கிரி, யமுனை ஆறு, கண்ணனை வசுதேவர் ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்வது, காளிங்க நர்த்தனம் என்று அனைத்தும் மிக அருமை//
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால் பதிவுகள் போடுகிறேன்.
கணினி கொஞ்சம் தொந்திரவு கொடுக்கிறது, விட்டு பிடித்து தான் பதிவு செய்ய வேண்டி உள்ளது. பதில்களும் அது அனுமதிக்கும் போது தான் கொடுக்க முடிகிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
கொலு பார்க்க வந்துவிட்டேன் கோமதிக்கா.
பதிலளிநீக்குஆமாம் கொலு பார்க்கவும் பிடிக்கும், வைக்கவும் பிடிக்கும் ஆனால் முன்பு 30 வருடங்களுக்கு முன்பு வைத்தேன் அதன் பின் ஒவ்வொரு வீடு மாற்றலின் போதும் முடியாமல் போனது அதன் பின் பொம்மைகளைப் பலருக்கும் கொடுத்துவிட்டேன்.
ஆனால் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கொலு பார்க்க வந்துவிட்டேன் கோமதிக்கா.//
வாங்க வாங்க கீதா
//ஆமாம் கொலு பார்க்கவும் பிடிக்கும், வைக்கவும் பிடிக்கும் ஆனால் முன்பு 30 வருடங்களுக்கு முன்பு வைத்தேன் அதன் பின் ஒவ்வொரு வீடு மாற்றலின் போதும் முடியாமல் போனது அதன் பின் பொம்மைகளைப் பலருக்கும் கொடுத்துவிட்டேன்.
ஆனால் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.
//
ஆமாம், வீடு மாற்றும் போது கஷ்டம் தான். என் அம்மாவை நினைத்துக் கொள்வேன் , அப்பாவுக்கு அடிக்கடி மாற்ற்ல் ஆகும், அனைத்தையும் பத்திரமாக எடுத்து வைத்து கொலு வைப்பார்கள் ஒவ்வொரு ஊரிலும். அப்பாவும், அண்ணனும், அக்காவும் இறந்த பின் கொல்ய் வைப்பது இல்லை, என் தங்கையிடம் கொடுத்து விட்டார்கள் அவள் வைக்கிறாள்.
கண்ணனின் பிறந்த காட்சிகள் செமையா இருக்கு. ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க.
பதிலளிநீக்குகுழந்தை கண்ணன் ஆனந்த ஊஞ்சலில்//
இதையும் ரொம்ப அழகா யோசித்துச் செய்திருக்காங்க. நல்ல கற்பனை!
வானம், பச்சை வயல், இயற்கை காட்சி என்று பின் புறம் அழகு . யமுனை ஆறும் கண்ணன் கதைகளும் காட்சி அமைப்பு அழகு.//
வாவ்!!!! ரொம்ப ரொம்ப அழகான வடிவமைப்பு கற்பனை. செமையா 3 டி எஃப்ஃபெக்ட் கொண்டு வர முயற்சித்திருக்காங்க.
எனக்கு இப்படியான கொலு பார்க்க ரொம்ப பிடிக்கும். பாரம்பரிய கொலுவும் பிடிக்கும் என்றாலும் இப்படியான கற்பனை வளம் எனக்குப் பிடித்த ஒன்று.
அட! பாமா ருக்மணி துலாபாரம் எல்லாம் கூட இப்ப செட் கிடைக்கிறதா? என்னதான் இல்லை என்று கேட்கறீங்களோ? அதுவும் சரிதான். தேடித்தேடி வாங்கறாங்க போல! நல்ல ஆர்வம்.
கீதா
கண்ணனின் பிறந்த காட்சிகள் செமையா இருக்கு. ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க.//
நீக்குஆமாம், நல்ல கலைநயத்தோடு ஒவ்வொன்றையும் செய்து இருக்கிறார்கள்.
//அட! பாமா ருக்மணி துலாபாரம் எல்லாம் கூட இப்ப செட் கிடைக்கிறதா? என்னதான் இல்லை என்று கேட்கறீங்களோ? அதுவும் சரிதான். தேடித்தேடி வாங்கறாங்க போல! நல்ல ஆர்வம்//
ஆமாம், நல்ல ஆர்வம் தான் அவர்களுக்கு இந்த முறை குழந்தைகள் எல்லாம் படிக்க வெளியூர் போய் விட்டதால் கொலுவை மிக எளிமையாக வைத்து இருக்கிறார்களாம். யாரையும் அழைக்கவில்லையாம்.
//வாவ்!!!! ரொம்ப ரொம்ப அழகான வடிவமைப்பு கற்பனை. செமையா 3 டி எஃப்ஃபெக்ட் கொண்டு வர முயற்சித்திருக்காங்க.//
ஆம்.
கல்யாண வீட்டுக் காட்சிகள், சீர் வரிசை எல்லாமே ரொம்ப நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குகண்ணன் நண்பர்களுடன் விளையாடுவது எல்லாமே ரொம்ப ரொம்ப அழகாக யோசித்து பொம்மைகள வாங்கியிருக்காங்க. செட் செட்டாகச் சிலது, சிலதை கற்பனையில் சேர்த்து வைச்சிருக்காங்க என்றும் தெரிகிறது ரொம்ப அழகான காட்சி அமைப்புகள். கண்ணன் காட்சிகள் அனைத்தும்.
கீதா
//கல்யாண வீட்டுக் காட்சிகள், சீர் வரிசை எல்லாமே ரொம்ப நன்றாக இருக்கின்றன.
நீக்குகண்ணன் நண்பர்களுடன் விளையாடுவது எல்லாமே ரொம்ப ரொம்ப அழகாக யோசித்து பொம்மைகள வாங்கியிருக்காங்க. செட் செட்டாகச் சிலது, சிலதை கற்பனையில் சேர்த்து வைச்சிருக்காங்க என்றும் தெரிகிறது ரொம்ப அழகான காட்சி அமைப்புகள். கண்ணன் காட்சிகள் அனைத்தும்.//
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
கிராமத்துக் காட்சிகள், கடைத்தெரு காட்சிகள் அனைத்தும் அட்டகாசம்.
பதிலளிநீக்குகடைசி படமும் சூப்பர்.
அனைத்தும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா
கீதா
//கிராமத்துக் காட்சிகள், கடைத்தெரு காட்சிகள் அனைத்தும் அட்டகாசம்.
பதிலளிநீக்குகடைசி படமும் சூப்பர்.
அனைத்தும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா//
ஊரிலிருந்து வந்த அலுப்போடு கொலுவை பார்க்க வந்து அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
கொலுப் பொம்மைகள் அழகு எல்லாம் மனதைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குகண்ணன் பிறப்பு, கிராமத்துக் காட்சிகள் பிடித்திருந்தன.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//கொலுப் பொம்மைகள் அழகு எல்லாம் மனதைக் கவர்ந்தது.
கண்ணன் பிறப்பு, கிராமத்துக் காட்சிகள் பிடித்திருந்தன.//
ஆமாம், கண்ணையும் கருத்தையும் கவர்வதாக இருந்தது அதனால் உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால் பகிர்ந்தேன் மாதேவி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.