புதன், 24 செப்டம்பர், 2025

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நவராத்திரி விழா



எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடந்த நவராத்திரி விழா படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

என்னால் கோயில்களில் நடக்கும் நவராத்திரி விழாக்களுக்கு போக முடியவில்லை என்ற  நினைப்பே வரவில்லை.

 அம்மன் அருளால் எங்கள் வளாகத்திலேயே நவராத்திரி விழா ஆரம்பித்து விட்டது. 



இந்த வருடம் தான் கொலு வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்







வண்ணக் கோலம் போட்டவர்கள்   சிறு பெண்கள்

பெரியவர்கள் மாக்கோலம் போட்டார்கள்

முதல் நாள் பிள்ளையார் பாடல்  லலிதா சஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,  மஹிஷாஸூரமர்த்தினி ஸ்தோரம் சொன்னோம் 

முதல் நாள் பிரசாதம், கேசரி பட்டாணி சுண்டல்





இரண்டாம் நாள்

"லலிதா சஹஸ்ர நாமாவளி" சொல்லி குங்குமம்,  மற்றும் மலர் அர்ச்சனை செய்யப்பட்டது.




தட்டை பயிறு சுண்டல்,  சர்க்கரை பொங்கல், , ரவா உருண்டை, தேங்காய் பூரணம் வைத்த சுசியம், புளியோதரை, வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு, வளையல் வைத்து  கொடுக்கப்பட்டது.

தினம் பிரசாதங்கள், மங்கலப்பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு   என்று வழங்கப்படுகிறது.

மதம் கடந்து கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை.  இஸ்லாமிய சகோதரி வெற்றிலைப்பாக்கு மஞ்சள் கொடுத்தார். அனைவருக்கும்.


அன்பர்கள் பொம்மை வாங்கி கொடுத்தார்கள், 
என்னால் கடைக்கு எல்லாம் போய் வாங்க முடியாது நீங்களே வாங்கி கொள்ளுங்கள் என்று பணம்  கொடுத்தேன் அவர்கள் 

பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர்  வாங்கி கொண்டார்கள்.  


பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணரை வழிபடும் போது இரு சக்திகளின்  ஆசீர்வாதமும் கிடைப்பதாக கருதப்படுகிறது

அந்தக்கால பாமா, ருக்மணி  சமேத கிருஷ்ணர் பொம்மை மிக அழகாய் இருக்கும். 




முதல் தினம் அம்மனின் அருளையும், பெண்ணின் பெருமையை பேசும் சகோதரி. 

தினம்  எங்கள் குடியிருப்பு வாட்ஸப் குழுவில்  புவனா சந்திர சேகரன் கதை , கட்டுரை எழுதுபவர், எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு அவர்  நாளும் நல்ல கருத்துக்களை நவராத்திரி சிந்தனைகளை பகிர்ந்து வருகிறார். அம்பிகையின் அவதாரங்களை பற்றியும் எழுதி அனுப்பினார்கள்.

 எங்கள் ப்ளாக்கில் செவ்வாய்க்கிழமை   கதை ஒன்று முன்பு பகிர்ந்து இருந்தார். 

இன்று மூன்றாம் நாள் :-
  நட்பு, பொறுமை,  மனிதநேயம்   மனதில் குடியேறும் போது  அரக்க குணங்கள்  தாமாக அழிந்து போகிறன. ஆன்மீகத்தில் மனதை செலுத்தும் போது பக்தி  தானகவே மனதில்  ஊறுகிறது. நல்ல குணங்களை ஆயுதங்களாக பயன் படுத்தும் போது நம்மிடம் உள்ள தீய குணங்கள்  அழிந்து போகின்றன என்கிறார்.



கலந்து கொண்ட அனைவரும்  


நாள் 1 - வெள்ளை (செப்டம்பர் 22, திங்கள்)
நாள் 2 - சிவப்பு (செப்டம்பர் 23, செவ்வாய்)
நாள் 3 - ராயல் ப்ளூ (செப்டம்பர் 24, புதன்)
நாள் 4 - மஞ்சள் (செப்டம்பர் 25, வியாழன்)
நாள் 5 - பச்சை (செப்டம்பர் 26, வெள்ளி)
நாள் 6 - கிரே (செப்டம்பர் 27, சனிக்கிழமை)
நாள் 7 - ஆரஞ்சு (செப்டம்பர் 28, ஞாயிறு)
நாள் 8 - மயில் பச்சை (செப்டம்பர் 29, திங்கள்)
நாள் 9 - இளஞ்சிவப்பு (செப்டம்பர் 30, செவ்வாய்).

முதல் நாள் வெள்ளை உடை அணிந்து சென்றோம்.
அடுத்த நாள் சிவப்பு அணிந்து சென்றோம்
இன்று ராயல் ப்ளூ.


 


ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளாம் மாரியம்மாள்
சித்திர கோபுரம் கட்டவே  பாடலுக்கும் , முருகன் பாடல் ஒன்றுக்கும், அடுத்து கடைசியாக பாரதி கும்மி பாடல் பாடி முடித்தார்கள்.

முருகன் பாடல் கோலாட்டம் சிறிய காணொளிதான் பார்க்கலாம்.

எல்லோரும்  வயது வித்தியாசம் இல்லாமல் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

நிறைவாக ஆரத்தி எடுக்கப்பட்டது.

இறை சிந்தனையுடன்  வளாக அன்பர்கள்    அனைவரும் கலந்து உரையாடவும் இந்த நவராத்திரி  விழா உதவுகிறது.
அப்படியே அவர் அவர்கள் வீட்டில் இருக்கும் நவராத்திரி பண்டிகைக்கு அழைத்தார்கள். நேர்றி ஒருவர் வீட்டுக்கு போனோம்.






நவராத்திரி கொலு பார்க்க வந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள். அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 

----------------------------------------------------------------------------------------------------

24 கருத்துகள்:


  1. ​விரிவான ரிப்போர்ட். படங்களும் பொருத்தம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நிறைய வளாகங்களில் இப்படி கூட்டு கொலு வைத்து கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது.  சிறப்பான பூஜைகளும், அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக கொண்டாடுவதும் சிறப்பு.  இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் பக்கத்து வீட்டிலேயே யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் இது போன்ற கூடிச்செய்யும் கொண்டாட்டங்களால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஶ்ரீராம் ,வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் எல்லோரையும் பார்க்க கலந்து உரையாட வாய்ப்புதான்.
      ஆனால் நேரம் இல்லை இப்போதும் முதல் நாள், இரண்டாம் நாள் நிறைய பேர் வந்தார்கள் நேற்று வரவு குறைவு.

      அவர் அவர் வீட்டில் கொலு வைத்து இருக்கிறார்கள், அதனால் அவர்கள் வீட்டுக்கு அழைத்து இருப்பார்கள் அவர்களை உபசரிக்க அவர்கள் போக வேண்டும், அவர்கள் வேறு வீட்டு கொலுவுக்கு போக வேண்டும் இப்படி பல காரணம் .

      நான் எதிர்பக்கம் இருக்கும் இரு வீட்டார்களுடன் போய் வருகிறேன்
      அவர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது.

      நீக்கு
  4. நீங்கள் வாங்கி கொடுத்திருக்கும் அல்லது உங்கள் செலவில் வந்திருக்கும் பொம்மை சிறப்பு. இஸ்லாமிய சகோதரி தாம்பூலம் கொடுப்பதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஶ்ரீராம், ஆமாம் அவர்கள் வந்து விழாவில் கலந்து கொண்டு தாம்பூலம் கொடுத்தது சிறப்புதான்

      நீக்கு
  5. லலிதா சஹஸ்ரநாமம், கும்மி ஆட்டம் எல்லாம் ஆடிப்பாடி கொண்டாடுவது நல்ல பொழுதுபோக்கு.  ஆரோக்யமும் கூட  - உடலுக்கும், மனதுக்கும்!  

    மைக் எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.  இது மாதிரி விழா நடத்த என்றே இடம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா?  குடியிருப்பில் எத்தனை வீடுகள்?

    பதிலளிநீக்கு
  6. ஆமாம, இப்போது எல்லா கோவில் விழாக்களில் முன்பு போல கும்மி இடம் பெறுகிறது.
    தேவியை புகழ்ந்து ஓவ்வொரு மாதமும் வரும் திருவிழா பேருடன் வரும் பாட்டை பாடி கோலாட்டம் ஆடி இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல மனதுக்கும் , உடலுக்கும் ஆரோக்கியம் தரும் தான் .

    ஆமாம், சின்ன விழாக்கள் நடத்தலாம் . மீட்டிங் நடக்கும் 140 வீடுகள் இருக்கிறது.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உங்கள் வீட்டு வனாக நவராத்தி கொலு அழகாக உள்ளது. குடியிருக்கும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் போது மனதுக்கு மகிழ்வாகத்தான் இருக்கும்.

    நீங்கள் வாங்கித்தந்த கிஷணர் ருக்மணி, சத்யபாமையுடன் அழகாக உள்ளது. அதன் அருகிலேயே நீங்களும் கொலு முன்பாக எடுத்துக் கொண்ட புகைப்படமும் அழகு.

    கொலுவுக்கு விநியோகித்த பிரசாதங்கள் பார்க்கவே அருமையாக உள்ளது. யார் செய்கிறார்கள்.? ஆட்கள் எவரேனும் உள்ளனரா.? இல்லை ஒவ்வொரு வீட்டுக்கும் இன்று இன்னது என வேலைகளை பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? எல்லோரும் சேர்ந்து இப்படி கொண்டாடும் போது மனதிற்கு மகிழ்வாகத்தான் இருக்கும். இன்னமும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      ஆமாம், எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சிதான்.

      //நீங்கள் வாங்கித்தந்த கிஷணர் ருக்மணி, சத்யபாமையுடன் அழகாக உள்ளது. அதன் அருகிலேயே நீங்களும் கொலு முன்பாக எடுத்துக் கொண்ட புகைப்படமும் அழகு//

      நன்றி.

      //கொலுவுக்கு விநியோகித்த பிரசாதங்கள் பார்க்கவே அருமையாக உள்ளது. யார் செய்கிறார்கள்.? ஆட்கள் எவரேனும் உள்ளனரா.? இல்லை ஒவ்வொரு வீட்டுக்கும் இன்று இன்னது என வேலைகளை பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? எல்லோரும் சேர்ந்து இப்படி கொண்டாடும் போது மனதிற்கு மகிழ்வாகத்தான் இருக்கும். இன்னமும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒருவர் பிரசாதங்களை கொண்டு வருகிறார்கள். முதல் நாளே சொல்லி வைத்து கொள்கிறார்கள்.
      எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்து கொண்டு மகிழ்வாய் செய்கிறார்கள்.
      வளாக நிர்வாக பொறுப்பில் இருக்கும் செயலாளர் இதை மிக சிறப்பாக உற்சாகமாக திட்டமிட்டு எல்லோரையும் ஒன்று இணைத்து செயல்படுத்துகிறார். அவர் மனைவியும் ஒத்துழைப்பு.

      நிர்வாகத்தில் இருக்கும் ஒரு பெண்மணியும் அவர் கணவரும் பொறுப்பாய் பார்த்து கொள்கிறார்கள்.

      வாங்க மெதுவாக உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  8. ரொம்ப விரிவாக படங்களுடன் எழுதியிருக்கீங்க.

    மிக அழகான, சக்கரம் மாதிரியான கோலத்தை யாரோ காலினால் அழித்ததுபோல் இருக்கிறது. பார்த்து நடந்திருக்கக்கூடாதா? கோலம் வெகு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      ரொம்ப விரிவாக படங்களுடன் எழுதியிருக்கீங்க.

      //மிக அழகான, சக்கரம் மாதிரியான கோலத்தை யாரோ காலினால் அழித்ததுபோல் இருக்கிறது.//

      ஆமாம், தெரியாமல் யாரோ மிதித்து விட்டர்கள்.


      //பார்த்து நடந்திருக்கக்கூடாதா? கோலம் வெகு அருமை.//

      விழா முடிந்து வீட்டுக்கு போகும் போது படம் எடுத்தார்கள் எல்லோரையும் அப்போது பின்னால் நகர சொன்ன போது இப்படி ஆகி இருக்கலாம். தினம் தினம் அழகான கோலம் போடுகிறார்கள்.
      கோலத்தை பாராட்டியதை அந்த குழந்தைகளிடம் சொல்கிறேன் மகிழ்வார்கள்.

      நீக்கு
  9. தாம்பூலம், பிரசாதம் எல்லாமே அருமை.உங்கள் புகைப்படமும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாம்பூலம், பிரசாதம் எல்லாமே அருமை.

      இன்றும் ஒரு இஸ்லாமிய சகோதரி பிராசாதம் வழங்குகிறார்.


      //உங்கள் புகைப்படமும் நன்று//

      நன்றி.

      நீக்கு
  10. அமெரிக்காவில் எப்படிக் கொண்டாடினார்கள்? புகைப்படங்களுடன் பதிவு வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அமெரிக்காவில் எப்படிக் கொண்டாடினார்கள்? புகைப்படங்களுடன் பதிவு வருமா?//

      அமெரிக்காவில் நன்றாக போகிறது விழா. புகைபடங்களுடன் வரும்.
      என் பதிவுகளை என் மகனின் நண்பர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு முன்பே பார்த்த உணர்வை தரக்கூடாது என்று போடவில்லை . கண்டிப்பாய் பகிர்ந்து கொள்வேன்.

      உங்கள் மகள் வீட்டில் கொலு வைத்து விட்டார்களா?

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. முதல்கொலு படம் பாரம்பரிய முறை கொலு.!

    ரங்கநாதர் செட் சூப்பரா இருக்கு

    அட! சின்ன பொண்ணுங்க கோலம் ரொம்ப அழகா போட்டிருக்காங்க, கோமதிக்கா. அவங்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //முதல்கொலு படம் பாரம்பரிய முறை கொலு.!//

      ஆமாம்.

      //ரங்கநாதர் செட் சூப்பரா இருக்கு//
      வளாகத்தில் ஒருவர் தன் தோழியுடன் இணைந்து செய்து விற்கிறார் , அவர் கொடுத்த பொம்மை.

      //அட! சின்ன பொண்ணுங்க கோலம் ரொம்ப அழகா போட்டிருக்காங்க, கோமதிக்கா. அவங்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க.//

      கண்டிப்பாய் சொல்கிறேன். இன்று போட்டு இருந்த கோலமும் நன்றாக இருந்தது.

      நீக்கு
  12. முதல் நாள் என்ன ஸ்லோகம் என்று போட்டுவிட்டு கீழ பிரசாதம் படம்!! அங்கதான் கண்ணு போகுது!

    இரண்டாம் நாள் பிரசாதம் நிறைய ஸ்வீட்! பிடித்தவை எல்லாம் ஆனால் கண்ணால் பார்ப்பதையே தவிர்த்தேன் ஹாஹாஹாஹா புளியோதரை சுண்டல் மட்டும் பார்த்துக் கொண்டேன்!!!!'

    மதம் கடந்து கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை. இஸ்லாமிய சகோதரி வெற்றிலைப்பாக்கு மஞ்சள் கொடுத்தார். அனைவருக்கும்.//

    வாவ்! சூப்பர் கோமதிக்கா!! பாருங்க மனுஷங்க நல்லவங்காதான். அரசியல் வியாதிகள் மற்றும் சிலசமூகப் பிரமுகர்கள் தான் மக்களிடையே இந்த மத வியாதிகளைப் பரப்புகிறார்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதல் நாள் என்ன ஸ்லோகம் என்று போட்டுவிட்டு கீழ பிரசாதம் படம்!! அங்கதான் கண்ணு போகுது!//

      உணவை ருசியாக சமைப்பவர் அதனால் பார்வை அங்கு.


      //இரண்டாம் நாள் பிரசாதம் நிறைய ஸ்வீட்! பிடித்தவை எல்லாம் ஆனால் கண்ணால் பார்ப்பதையே தவிர்த்தேன் ஹாஹாஹாஹா புளியோதரை சுண்டல் மட்டும் பார்த்துக் கொண்டேன்!!!!'//

      ஆமாம், அன்று இனிப்பு பிரசாதம் அதிகம்.பார்த்தால் என்ன தப்பு?

      //வாவ்! சூப்பர் கோமதிக்கா!! பாருங்க மனுஷங்க நல்லவங்காதான். அரசியல் வியாதிகள் மற்றும் சிலசமூகப் பிரமுகர்கள் தான் மக்களிடையே இந்த மத வியாதிகளைப் பரப்புகிறார்கள்!//

      ஆமாம். இன்றும் இஸ்லாமிய சகோதரி அருமையான கேசரி பிரசாதம் கொடுத்தார்.

      நீக்கு
  13. நீங்க கொடுத்த பணத்துக்கு வாங்கிய பொம்மை நல்லாருக்கு இருந்தாலும் முன்பு இப்பொம்மை ரொம்ப நல்லா.....ஆ கீழ நீங்களும் சொல்லிட்டீங்க!!

    புவனா அவர்கள் எபியில் கதை பகிர்ந்திருந்தது நல்ல நினைவு இருக்கு கோமதிக்கா.

    கோமதிக்கா அழகா இருக்கீங்க! பேரன் நினைவுக்கு வந்தார்! உங்க மகனும்.

    எல்லார்க்கிட்டயும் இப்படி அன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்க கொடுத்த பணத்துக்கு வாங்கிய பொம்மை நல்லாருக்கு இருந்தாலும் முன்பு இப்பொம்மை ரொம்ப நல்லா.....ஆ கீழ நீங்களும் சொல்லிட்டீங்க!!//

      ஆமாம்.

      //புவனா அவர்கள் எபியில் கதை பகிர்ந்திருந்தது நல்ல நினைவு இருக்கு கோமதிக்கா.//

      ஆமாம், உங்களுக்கு நினைவு இருக்கும்.

      //கோமதிக்கா அழகா இருக்கீங்க! பேரன் நினைவுக்கு வந்தார்! உங்க மகனும்.

      எல்லார்க்கிட்டயும் இப்படி அன்//

      நம்மால் வேறு என்ன கொடுக்க இயலும் அன்பு மட்டும் தான்.

      நீக்கு
  14. எல்லார்கிட்டயும் இப்படி அன்று அணிய வேண்டிய கலர் இருக்குமா அக்கா?

    மேலே கருத்து முழுசும் அடிக்கும் முன் வெளியாகிவிட்டது கர்சர் குதித்து வெளியிடுவில் உட்கார்ந்துவிட்டது!

    எல்லாரும் ஒன்று கூடி இப்படிக் கொண்டாடுவது சூப்பர் கோமதிக்கா. உங்க வளாகம் அருமை. இப்ப பெரும்பான்மை வளாகங்கள் கொண்டாடுகிறார்கள் இங்கும். நாங்க இருப்பது தனிவீட்டில் மூன்று குடும்பங்களாக இருப்பதால் எந்த ஒரு ஆக்டிவிட்டியும் இல்லை. எனக்கு இப்படியானக் குடியிருப்புகள் ரொம்பப் பிடிக்கும். அடுத்து மாறினால் அப்படி மாறத்தான் நினைப்பு ஆனால் வாடகை கூடுதலாக இருக்கு

    எல்லாமே அருமை காணொளிகளும் கண்டேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லார்கிட்டயும் இப்படி அன்று அணிய வேண்டிய கலர் இருக்குமா அக்கா?//

      இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இருந்தால் அணிந்து வர போகிறார்கள். இன்று மஞ்சள் என்றார்கள் மஞ்சளில் எத்தனை விதம் உண்டோ அத்தனை விதம் இருந்தது.
      புதிதாக வாங்கி ஒன்று போல அணிந்து வர வேண்டும் என்றால் தான் கஷ்டம், இருப்பதை அணிந்து வருவதில் சிரமம் இல்லை.

      //எல்லாரும் ஒன்று கூடி இப்படிக் கொண்டாடுவது சூப்பர் கோமதிக்கா. உங்க வளாகம் அருமை.//

      எல்லோரும் கலந்து கொள்ள முடியாது கலந்து கொண்டவர்கள் ஈடுபாட்டுடன் செய்தார்கள்.

      //இப்ப பெரும்பான்மை வளாகங்கள் கொண்டாடுகிறார்கள் இங்கும்.//
      பெங்களூரில் என் தம்பி மகள் இருந்த குடியிருப்பில் இப்படி எல்லா பண்டிகைகளும் சிறப்பாக நடக்கும். கிறிஸ்த்துவ, இஸ்லாமிய , ந்ம பண்டிகை எல்லாம் சிறப்பாக நடத்துவார்கள்.

      //நாங்க இருப்பது தனிவீட்டில் மூன்று குடும்பங்களாக இருப்பதால் எந்த ஒரு ஆக்டிவிட்டியும் இல்லை. எனக்கு இப்படியானக் குடியிருப்புகள் ரொம்பப் பிடிக்கும். அடுத்து மாறினால் அப்படி மாறத்தான் நினைப்பு ஆனால் வாடகை கூடுதலாக இருக்கு//

      மூன்று வீடாக இருப்பதும் ஒரு விதத்தில் நல்லதுதான். அவர்களுடன் கலந்து பேசி கொண்டாலே போதும்.

      //எல்லாமே அருமை காணொளிகளும் கண்டேன் கோமதிக்கா//
      அத்தனை வேலைகளுக்கு இடையில் வந்து அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு