வியாழன், 10 ஏப்ரல், 2025

சஃபாரி வேர்ல்ட் பாங்காக் மிருகக்காட்சிசாலை



2024 நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து தாய்லாந்தில்   நிறைய இடங்களை சுற்றிப்பார்த்தோம்.  5 ஆம்  ம் தேதி தாய்லாந்தில் உள்ள திறந்தவெளி மிருக்காட்சி சாலைக்கு அழைத்து போனான் மகன்.
அங்குப்பார்த்த விலங்குகள், பறவைகள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.








தாய் லாந்து மன்னர்  திரு. வஜிராலோங்கார்ன் ((Vajiralongkorn)
(Rama X) 

எல்லா இடங்களிலும் மன்னர் படம் பெரிது பெரிதாக வைக்கப்பட்டு இருந்தது.


உள்ளே முதலில் போன உடன் முதலில் நிறைய வரிக்குதிரைகள், ஓட்டகசிவிங்கிப்பார்த்தோம்.





கார்ப்பக்கம் வந்தது


பறவையும், மானும், வரிக்குதிரையும்  ஒற்றுமையாக





தலையில் அழகான  கொண்டையுடன்  

கருப்பு கோட் அணிந்து நிற்கிறது.



நிழலும், நிஜமும்



 தண்ணீரில் களித்து இருக்கோம்

மீனை தேடிக் கொண்டு இருக்கிறோம்




மரத்தில் இளைப்பாறல்

குஞ்சுகளுக்கு உணவு ஊட்டல்


மாலை நேரம் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டோம்

குஞ்சு எல்லாம் பத்திரமாக இருக்கா என்ற பார்வை





இந்த காணொளியில்  பறவைகள் சண்டையிடுவது குஞ்சுகளுக்கு உணவு அளிப்பது, மரத்திற்கு மரம் பறந்து அமர்வது எல்லாம் இருக்கும்.

பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது என்று பதிவு. திறந்தவெளி மிருக்காட்சிசாலை படங்கள் இன்னும் வரும் 
அடுத்து  சிங்கம், புலி, கரடி   படங்கள் வரும்.

தாய்லாந்தில் வேறு சில இடங்களும் மகன் அழைத்து சென்றான்.  பறவைகள் எனக்கு பிடித்தது, பறவைகள் படம் போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டதால் முதலில் பறவைகள் பதிவு.  

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

46 கருத்துகள்:

  1. பறவைகள் படம் மிக அழகு. வரிக்குதிரைகளை எனக்கு எப்போதும் பார்க்கப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //பறவைகள் படம் மிக அழகு.//
      நன்றி.

      //வரிக்குதிரைகளை எனக்கு எப்போதும் பார்க்கப் பிடிக்கும்.//
      எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
  2. தாய்லாந்துக்கு ஒரு சமயம் நாங்கள் சென்றிருந்தபோது அப்போதைய மன்னர் இறந்து சில வாரங்களாகயிருந்தன. நாடு துக்கத்தில் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாய்லாந்துக்கு ஒரு சமயம் நாங்கள் சென்றிருந்தபோது அப்போதைய மன்னர் இறந்து சில வாரங்களாகயிருந்தன. நாடு துக்கத்தில் இருந்தது//

      சுவர்ணபூமியில் மன்னர் கடவுளாக மதிக்கப்படுகிறார்.

      நீக்கு
  3. காணொளி அருமை. பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /காணொளி அருமை. பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது//

      ஆமாம். இப்போது எங்கள் வளாகத்தில் பறவைகளின் வரத்து குறைந்து விட்டது. வலை தடுப்புக்கள் போட்டு புறாவையும் தடுத்து வருகிறார்கள். என் உற்சாகமும் குறைந்து வருகிறது. அதை மீட்டு எடுக்கவே இந்த பறவை பதிவு.

      குயில், காகம் , தவிட்டுக்குருவி எப்போதாவது வருகிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. பறவைகள் மிக அழகாக இருக்கின்றன அக்கா.

    தலையில் கொண்டையுடன் இருக்கும் பறவை நெருப்புக் கோழி இனம் போலத் தெரிகிறது. கண்டுப் பிடிக்கிறேன் பெயர் என்னவாக இருக்கும் என்று.

    காணொளி பார்த்துவிட்டேன் யுட்யூபில் வந்ததும்...சூப்பரா தெளிவாக இருக்கு.

    எனக்கு இவ்வளவு தெளிவாக வரவில்லை அக்கா, ரங்கனதிட்டு அடுத்த பகுதிக்கு எழுத வேண்டும் படங்கள் காணொளிகள் செய்ய வேண்டும்.

    ஓரளவு அருகில் போட் சென்ற போது கொஞ்சம் எடுக்க முடிந்தது ஆனால் போட் ஆடியதில் கொஞ்சம் ஷேக் இருக்கு. இந்த அளவு தெளிவாக இல்லை.

    நல்லா இருக்கு வரேன் இன்னும். முழுவதும் பார்த்துவிட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //பறவைகள் மிக அழகாக இருக்கின்றன அக்கா.//

      நன்றி கீதா

      //தலையில் கொண்டையுடன் இருக்கும் பறவை நெருப்புக் கோழி இனம் போலத் தெரிகிறது. கண்டுப் பிடிக்கிறேன் பெயர் என்னவாக இருக்கும் என்று.//

      ஆமாம், பெயர்களை கண்டு பிடித்து போட சோம்பல் நீங்கள் சொல்லிவிடுவீர்கள் என்று தெரியும்.

      //காணொளி பார்த்துவிட்டேன் யுட்யூபில் வந்ததும்...சூப்பரா தெளிவாக இருக்கு.//

      காரில் கண்ணாடி ஜன்னல் வழியாக எடுத்த படங்கள். கீழே நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்.

      //எனக்கு இவ்வளவு தெளிவாக வரவில்லை அக்கா, ரங்கனதிட்டு அடுத்த பகுதிக்கு எழுத வேண்டும் படங்கள் காணொளிகள் செய்ய வேண்டும்.//

      பதிவு போடுங்கள் தயார் செய்து விட்டு என்னை போல பல மாதங்கள் எடுத்து கொள்ளாமல்.

      //ஓரளவு அருகில் போட் சென்ற போது கொஞ்சம் எடுக்க முடிந்தது ஆனால் போட் ஆடியதில் கொஞ்சம் ஷேக் இருக்கு. இந்த அளவு தெளிவாக இல்லை.//

      நன்றாக இருப்பதையும், ஷேக் ஆனதையும் போடுங்கள்.நாம்தானே பார்க்கலாம்.

      //நல்லா இருக்கு வரேன் இன்னும். முழுவதும் பார்த்துவிட்டு//

      வாங்க.

      நீக்கு
  5. என் மகனும் மருமகளும் தேனிலவுக்கு தாய்லாந்துதான் சென்று வந்தார்கள். இந்த மார்ச் ஏப்ரலில் அங்கு நிலநடுக்கம் என்று பார்த்தபோது மனதுக்குள் நடுக்கம் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //என் மகனும் மருமகளும் தேனிலவுக்கு தாய்லாந்துதான் சென்று வந்தார்கள்.//

      தேனிலவுக்கு போக நல்ல ஊர் .

      //இந்த மார்ச் ஏப்ரலில் அங்கு நிலநடுக்கம் என்று பார்த்தபோது மனதுக்குள் நடுக்கம் வந்தது.//

      ஆமாம், நாங்கள் போன இடங்களை நினைத்துப்பார்த்து கொண்டேன் நிலநடுக்க செய்தி வந்த போது.

      நாங்கள் நேபாளம் சென்று இருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது, தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து ஓடி வந்தது நினைவு இருக்கு இப்போதும். நாங்கள் இருந்த ஓட்டல் சேதம் அடையவில்லை, பக்கத்தில் இருந்தவை எல்லாம் சேதம் அதிகமாய் இருந்தது.

      நீக்கு
  6. தாய்லாந்து மன்னர் பெயரைச் சொல்வதற்குள் வாய் சுளுக்கிக் கொள்ளும் போல!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாய்லாந்து மன்னர் பெயரைச் சொல்வதற்குள் வாய் சுளுக்கிக் கொள்ளும் போல!!//

      அடுத்து வரும் ராம என்று முடிவது நன்றாக இருக்க்மே ஸ்ரீராம்.ராம, சீதை எல்லாம் நிறைய இடங்களில் பார்க்கமுடிந்தது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. முதல் படமே அழகு...

    நானும் இப்ப மூன்றாவது பகுதி ரங்கனதிட்டுவை இப்படிப் படங்கள் போட்டுச் சொல்லிப் போகலாம்னு படங்களை எல்லாம் எது போடணும் என்று எடுத்து வைக்கிறேன் தனி ஃபோல்டரில். இல்லைனா குழப்பம் வரும் எது போட்டோம் போடலைனு.,,...நாளையோ நாளை மறுநாளோ ஆகிவிடும் போட என்று நினைக்கிறேன். நேரம் ரொம்ப எடுக்குது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதல் படமே அழகு...//

      நன்றி.

      //நானும் இப்ப மூன்றாவது பகுதி ரங்கனதிட்டுவை இப்படிப் படங்கள் போட்டுச் சொல்லிப் போகலாம்னு படங்களை எல்லாம் எது போடணும் என்று எடுத்து வைக்கிறேன் தனி ஃபோல்டரில். இல்லைனா குழப்பம் வரும் எது போட்டோம் போடலைனு.,,...நாளையோ நாளை மறுநாளோ ஆகிவிடும் போட என்று நினைக்கிறேன். நேரம் ரொம்ப எடுக்குது.//

      தனி தனி போல்டரில் போட்டு வைப்பது நல்லதுதான்.
      ஆமாம் ,படங்களை தேர்வு செய்து போடுவது நேரம் எடுக்கும் தான்.

      நீக்கு
  8. பயங்கர மிருகங்கள் எதுவும் இல்லை போல... சாதுவான பறவைகள், மிருகங்கள்தான் கண்ணில் பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயங்கர மிருகங்கள் எதுவும் இல்லை போல... சாதுவான பறவைகள், மிருகங்கள்தான் கண்ணில் பட்டிருக்கின்றன.//

      அடுத்து வரும் என்று போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.
      சிங்கம், புலி எல்லாம் சாதுவாக நடந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தது, கொக்குகள் பக்கத்தில் உலாத்திக் கொண்டு இருந்தன.

      நீக்கு
  9. காணொளி அழகு. கீதா ரெங்கன் தளத்தில் பார்த்த ஜெயகடா(!!!) பறவைகள்தானே இவை? பறந்து செல்லும் பறவையைப் பார்வை பின் தொடர்ந்ததால் கீழே இருந்த பறவைகள் அழகைக் கண்கள் காண விட்டுப்போக, மறுபடியும் பார்த்து ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி அழகு. கீதா ரெங்கன் தளத்தில் பார்த்த ஜெயகடா(!!!) பறவைகள்தானே இவை? பறந்து செல்லும் பறவையைப் பார்வை பின் தொடர்ந்ததால் கீழே இருந்த பறவைகள் அழகைக் கண்கள் காண விட்டுப்போக, மறுபடியும் பார்த்து ரசித்தேன்!//

      கீதா பதிவில் வந்த பறவைகளும் இருக்கிறது.
      அனைத்தையும் மறுபடிபார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. வரிக்குதிரை நல்ல அருகில் பார்க்க முடிந்ததோ? நல்லா இருக்கு படம்.

    மன்னர் படமும் தான்...

    வரிக்குதிரைகளோடு கறுப்புத் தலை கொக்கு எல்லாம் இருக்கு!! பெலிக்கன்/கூழைக்கடக்காளும் நீந்துகின்றன!

    ஓட்டகச்சிவிங்கிகள் எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு அக்கா.

    அந்த ஊர்களில் எல்லாம் திறந்த வெளி காட்சிகள் நல்லா பராமரிக்கறாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிக்குதிரை நல்ல அருகில் பார்க்க முடிந்ததோ?//
      ஆமாம் கீதா

      //நல்லா இருக்கு படம்.

      மன்னர் படமும் தான்...//

      நன்றி.

      //வரிக்குதிரைகளோடு கறுப்புத் தலை கொக்கு எல்லாம் இருக்கு!! பெலிக்கன்/கூழைக்கடக்காளும் நீந்துகின்றன!//
      ஆமாம்.


      //ஓட்டகச்சிவிங்கிகள் எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு அக்கா.//பொங்களூர் திறந்தவெளி மிருககாட்சி சாலையில் பார்க்கலாம் கீதா.


      //அந்த ஊர்களில் எல்லாம் திறந்த வெளி காட்சிகள் நல்லா பராமரிக்கறாங்க.//

      உங்கள் ஊரில் (பெங்களூர்) நன்றாக பராமரிக்கிறார்கள் தானே கீதா.

      நீக்கு
  11. வண்ண நாரைகள் நிறைய இருக்கு இல்லையா

    இங்கும் நிறைய வண்ண நாரைகள்தான். கொக்கரேபெல்லூர் படங்களில் இருந்தனவே..அது போல இபிஸ் அங்கும் நிறைய இருக்கு...Asian open bill/நத்தைகுத்தி நாரையும் இருக்கே மரத்தின் மேலே அலகுகளுக்கு இடையில் இடைவெளி, சிறகுகளில் கடைசியில் கறுப்பாக இருக்கும் அப்பறைவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வண்ண நாரைகள் நிறைய இருக்கு இல்லையா//

      ஆமாம்.

      //இங்கும் நிறைய வண்ண நாரைகள்தான். கொக்கரேபெல்லூர் படங்களில் இருந்தனவே..அது போல இபிஸ் அங்கும் நிறைய இருக்கு...Asian open bill/நத்தைகுத்தி நாரையும் இருக்கே மரத்தின் மேலே அலகுகளுக்கு இடையில் இடைவெளி, சிறகுகளில் கடைசியில் கறுப்பாக இருக்கும் அப்பறைவை.//

      ஆமாம். மரம் எல்லாம் கூடுகள் பறவைகள் தான். அதன் சத்தம் மாலை நேரம் காதை மூட சொல்லும் அளவு இருந்தது.

      நீக்கு
  12. மாலை நேரம் நு சொல்லியிருக்கும் படம் மற்றும், குஞ்சு எல்லாம் பத்திரமா இருக்கானு உள்ள படங்களில் நத்தை குத்தி நாரைகள்! அதற்கு அடுத்த படமும்....

    ஆமாம் காணொளியில் பறாவைகள் சண்டையிடுவது எல்லாம் நல்லா தெரியுது நல்லாருக்கு, கோமதிக்கா

    மீனைத் தேடிக் கொண்டிருக்கோம் படத்தில் மஞ்ச அலகு வண்ண நாரைகள்! அவற்றிற்கு அலகில் இடைவெளி இருக்காது.

    ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் ரசித்துப்பார்த்து பறவைகளின் பேரை சொல்லி ரசித்தமைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. அழகான படங்கள் ரசித்தேன் மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள் ரசித்தேன் மா//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அனு.

      நீக்கு
  14. தலையில் கொண்டைன்னு போட்டிருக்கும் அந்தப் பறவை அந்தக்காலத்து ஸடைல் போல...காதோரம் தலைமுடியில் பூ செருகி வைப்பாங்கல்லா...அஅது போல இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தலையில் கொண்டைன்னு போட்டிருக்கும் அந்தப் பறவை அந்தக்காலத்து ஸடைல் போல...காதோரம் தலைமுடியில் பூ செருகி வைப்பாங்கல்லா...அஅது போல இருக்கு//

      ஆமாம், கொண்டை மேலே அழகான பூ

      நீக்கு
  15. அந்தக் கொண்டை கொக்கு என்னன்னு தெரிஞ்சுச்சுக்கா, grey crowned crane = சாம்பல் நிற முடிசூட்டப்பட்ட கொக்கு இதை ஆப்பிரிக்காவில் மாஹேம் நு சொல்றாங்களாம்.

    அழகா இருக்குல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தக் கொண்டை கொக்கு என்னன்னு தெரிஞ்சுச்சுக்கா, grey crowned crane = சாம்பல் நிற முடிசூட்டப்பட்ட கொக்கு இதை ஆப்பிரிக்காவில் மாஹேம் நு சொல்றாங்களாம்.

      அழகா இருக்குல்ல?//

      பேரும் அழகு, அது நின்ற தோரணையும் அழகு.

      நீக்கு
  16. அங்க என்ன குளிருதா என்ன? எதுக்கு அந்தக் கொக்கு கோட் போட்டுக் கொண்டிருக்கு!!!!?? ஹாஹாஹாஅ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்க என்ன குளிருதா என்ன? எதுக்கு அந்தக் கொக்கு கோட் போட்டுக் கொண்டிருக்கு!!!!?? ஹாஹாஹாஅ//

      பறவைகளுக்கு நீதி வழங்க வக்கீல் கோட் போட்டு இருக்கு கீதா.

      நீக்கு
  17. காணொளி கண்டேன் சிறப்பாக உள்ளது.

    எனக்கு தாய்லாந்து செல்லும் ஆசை வெகுகாலமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //காணொளி கண்டேன் சிறப்பாக உள்ளது.//

      நன்றி.

      //எனக்கு தாய்லாந்து செல்லும் ஆசை வெகுகாலமாக இருக்கிறது.//

      நிலநடுக்கத்தால் மீண்டும் உயிர் பெற்று வருகிறது தாய்லாந்து.

      சுவர்ணபூமி என்று எங்கு பார்த்தாலும் தங்க புத்தர் தக தகவென்று இருந்தது, கட்டிங்கள் எல்லாம் தங்க கலர் வண்ணம் அடித்து அழகுதான். பார்க்கவேண்டிய இடம் பார்த்து வாங்க.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. ஆஆகோமதி அக்கா அடிக்கடி பதிவு போடுவா, இப்போ காணவில்லை எனத் தேடிப்பார்த்தேன். இப்போ இங்கும் வெயில் காலம் ஆரம்பமாகிட்டுது, அதனால எங்களுக்கும் வீட்டுக்குள் இருக்கப் பொறுமை இல்லை, இருப்பினும் குளிர் இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:), வாழ்க வளமுடன்


      //ஆஆகோமதி அக்கா அடிக்கடி பதிவு போடுவா, இப்போ காணவில்லை எனத் தேடிப்பார்த்தேன்.//

      நீங்கள் தேடியதது அறிந்து மகிழ்ச்சி, அதுதான் நான் பதிவு போட்டு விட்டேன் போலும்.

      //இப்போ இங்கும் வெயில் காலம் ஆரம்பமாகிட்டுது,//
      அப்போ வேப்பம் பூ வடகம், அரிசி வடகம் எல்லாம் போட ஆரம்பித்து விட வேண்டியதுதானே!

      டெல்லி, கஜூராகோ எல்லாம் போய் வந்தீர்களா?

      //அதனால எங்களுக்கும் வீட்டுக்குள் இருக்கப் பொறுமை இல்லை, இருப்பினும் குளிர் இருக்குது.//

      வேலை இருக்கும் தானே! வீட்டுக்குள் எப்படி இருக்க முடியும்.?

      குளிரை அனுபவித்து விடுங்கள். இங்கு வெயில் தாங்க முடியவில்லை.







      நீக்கு
  19. நீங்கள் போனவருடம் தாய்லாந்து வேறும் எங்கோ போக இருப்பதாகச் சொன்ன நினைவு, பின்பு நானும் பிசியானதால இப்பக்கம் வரவில்லை.
    வரிக்குதிரைகள் குண்டுக்குண்டா அழகாக இருக்கு, நான் இப்படி வ.குதிரைகளை அருகில் பார்த்ததில்லை.

    நிறையப் பறவைகளும் இருந்திருக்கே, நீங்கள் போன நேரம் நல்ல நேரம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் போனவருடம் தாய்லாந்து வேறும் எங்கோ போக இருப்பதாகச் சொன்ன நினைவு, பின்பு நானும் பிசியானதால இப்பக்கம் வரவில்லை.//

      ஆமாம். மருமகளின் அக்கா மகனுக்கு தாய்லாந்தில் திருமணம் அதற்கு அழைத்து போன போது அப்படியே ஊரை சிற்றிப்பார்த்து வந்தோம்.

      //வரிக்குதிரைகள் குண்டுக்குண்டா அழகாக இருக்கு, நான் இப்படி வ.குதிரைகளை அருகில் பார்த்ததில்லை.//

      முன்பு ஒரு இடம் அழைத்து போனான் அதில் பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் இடம் அப்போது நிறைய வரிக்குதிரைகள் பக்கத்தில் எடுத்த படங்களை பதிவு செய்து இருக்கிறேன் அதிரா.

      //நிறையப் பறவைகளும் இருந்திருக்கே, நீங்கள் போன நேரம் நல்ல நேரம் போலும்.//

      ஆமாம் அதிரா. மரங்கள் எல்லாம் பறவைகள் கூடுதான்.



      நீக்கு
  20. அடுத்துச் சிங்கம் புலியோ ஆஆஆஆஆ.. நான் ஒட்டி நின்று பார்க்கிறேன் :).
    வீடியோப் பார்த்தேன், பறவைக?ளின் ஒரிஜினல் சவுண்டோடு அழகாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்துச் சிங்கம் புலியோ ஆஆஆஆஆ.. நான் ஒட்டி நின்று பார்க்கிறேன் :).//

      எல்லாம் சாதுதான் பயப்பட வேண்டாம் அதிரா, கொக்கு எல்லாம் சிங்கம், புலி பக்கம் நின்றது.


      //வீடியோப் பார்த்தேன், பறவைக?ளின் ஒரிஜினல் சவுண்டோடு அழகாக இருக்கு.//

      வீடியோப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.
      உங்கள் வரவுக்கும்,, கருத்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கும் போது எல்லாம் அடிக்கடி வாங்க .

      நீக்கு
  21. படங்கள் அழகு. அமெரிக்காவில் இருந்தா தாய்லாந்து போனீங்க?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு. //

      நன்றி.

      //அமெரிக்காவில் இருந்தா தாய்லாந்து போனீங்க?//

      ஆமாம்.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாங்கள் நலமா? வீட்டுக்கு உறவுகள் வரப்போவதாக சொல்லியிருந்தீர்களே..! அதனால், உங்களுக்கு வேலைகள் அதிகமாக இருந்திருக்குமென நினைத்தேன்.

    சிட்டுக்குருவிகள் தினத்தன்று கூட உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் உடல்நிலை சரியாக இருந்து, உறவினர் வருகைகளும் இல்லாமல் இருந்திருந்தால், நீங்கள் சிட்டுக்குருவி பதிவு ஒன்றைப் போட்டிருப்பீர்கள் என நினைத்துக் கொண்டேன்.

    இப்போது இந்த பறவைகளின் பதிவு அதனை நினைவூட்டியது. அழகான பறவைகளை கண்டு களித்தேன். வரிக்குதிரை உரைகளும், ஒட்டக சிவிங்கிகளும் பளபளவென சுத்தமாக இருக்கிறது.

    காணொளியில், நீர் நிலைகளில் பறவைகள் பறப்பதும், தன் இறகை விரித்து ஈரத்தை காயவைப்பதுமாக மிக அழகாக இருக்கிறது. படங்கள் அனைத்தும் அருமை. தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதும் அருமை. நீங்கள் படங்களுக்கு தந்த விமர்சன வரிகளையும் ரசித்தேன். அடுத்து வரவிருக்கும் பதிவை காண ஆவலோடு உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமை.//

      நன்றி.

      தாங்கள் நலமா? //

      நான் நலம் .

      //வீட்டுக்கு உறவுகள் வரப்போவதாக சொல்லியிருந்தீர்களே..! அதனால், உங்களுக்கு வேலைகள் அதிகமாக இருந்திருக்குமென நினைத்தேன்.//

      உறவினர்கள் வந்தார்கள். என் தங்கைதான் வந்தாள் , அவள் எனக்கு உதவியாக இருந்தாள். பிறகு நாங்கள் இன்னொரு தங்கை கணவரின் முதல் ஆண்டு திதிக்கு போய் விட்டோம். மதுரை தான். அங்கு நான் கு தினம் இருந்து விட்டு ஊரிலிருந்து வந்த தம்பி, தங்கைகள் ஊருக்கு போகும் வரை அவர்களுடன் உடன் இருந்து விட்டு வந்தேன்.

      //சிட்டுக்குருவிகள் தினத்தன்று கூட உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.//

      என் நினைவு வந்தது மகிழ்ச்சி.

      //நீங்கள் உடல்நிலை சரியாக இருந்து, உறவினர் வருகைகளும் இல்லாமல் இருந்திருந்தால், நீங்கள் சிட்டுக்குருவி பதிவு ஒன்றைப் போட்டிருப்பீர்கள் என நினைத்துக் கொண்டேன்.//

      பல வருடங்களாக சிட்டுக்குருவி பதிவு போட்டு வருகிறேன். இந்த ஆண்டு எழுத நேரமும் இல்லை, மனமும் இல்லாமல் போய் விட்டது. மனம் இருந்து இருந்தால் மீள் பதிவு கூட போட்டு இருப்பேன்.


      //இப்போது இந்த பறவைகளின் பதிவு அதனை நினைவூட்டியது. அழகான பறவைகளை கண்டு களித்தேன். //

      மகிழ்ச்சி, நன்றி.


      //வரிக்குதிரை உரைகளும், ஒட்டக சிவிங்கிகளும் பளபளவென சுத்தமாக இருக்கிறது.//

      நல்ல சத்தான பழங்கள், கொடுக்கிறார்கள் பார்வையாளர்கள் மற்றும் மிருகக்காட்சிசாலை ஊழியர்கள். அதனால் நல்ல பள பளவென இருக்கிறது.

      //காணொளியில், நீர் நிலைகளில் பறவைகள் பறப்பதும், தன் இறகை விரித்து ஈரத்தை காயவைப்பதுமாக மிக அழகாக இருக்கிறது.//
      ஆமாம், பார்த்து கொண்டே இருக்கலாம், ஆனால் அடுத்து அடுத்து வண்டிகள் வந்து கொண்டு இருப்பதால் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், நிற்க முடியாது.

      //படங்கள் அனைத்தும் அருமை. தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதும் அருமை. நீங்கள் படங்களுக்கு தந்த விமர்சன வரிகளையும் ரசித்தேன். அடுத்து வரவிருக்கும் பதிவை காண ஆவலோடு உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

      நீக்கு
  23. படங்களும் பகிர்வும் மிக அருமை. ஒட்டகச் சிவிங்கிகள், வரிக்குதிரைகள் அழகாக உள்ளன. ரசித்தேன். உயிரியல் பூங்காக்களுக்கு செல்வது எனக்கும் பிடித்தமான ஒன்று. பூநாரை, கூழைக்கடா, அன்றில் பறவைகளின் படங்கள் ரங்கணத்திட்டு பயணத்தை நினைவூட்டின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் மிக அருமை. ஒட்டகச் சிவிங்கிகள், வரிக்குதிரைகள் அழகாக உள்ளன. ரசித்தேன்.//

      நன்றி ராமலக்ஷ்மி.

      //உயிரியல் பூங்காக்களுக்கு செல்வது எனக்கும் பிடித்தமான ஒன்று. பூநாரை, கூழைக்கடா, அன்றில் பறவைகளின் படங்கள் ரங்கணத்திட்டு பயணத்தை நினைவூட்டின.//

      நானும் நிறைய இடங்களில் உயிரியல் பூங்காக்கள் பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது கால்களில் பலம் இல்லை முடிந்தவரை இந்த பூங்காவை சுற்றிப்பார்த்து விட்டேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு