சனி, 15 மார்ச், 2025

சிவப்பு நிலா

ஹோலி பண்டிகை அன்று சந்திர கிரகணம் நிகழும் என்று பேரன் சொன்னான் இரவு 10.30 க்கு எடுக்க ஆரம்பித்து காட்டிக் கொண்டு இருந்தான். பின்  இரவு 12.30 வரை  குளிரை பொருட்படுத்தாமல் படி படியாக நிலா நிறம் மாறுவதை எடுத்து எனக்கு அனுப்பி விட்டான்.


இங்கே பார்க்க முடியாது ஆச்சிக்கு அனுப்பி வை என்றேன் , அனுப்பி வைத்தான். 24 படங்கள் அனுப்பி வைத்தான். அதில் சில படங்களை தேர்வு செய்து இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.


பேரன் எனக்கு  அனுப்பிய நிலா படங்களை நீங்களும் பார்க்க இந்த பதிவு.     "ரத்த நிலா" என்று அழைக்கப்படும் நிலவை  பார்க்கலாம் வாங்க.





கீழே எங்கள் குடும்ப குழுவுக்கு தான் எடுத்த படங்களை அவன் அனுப்பிய படங்கள். அவன் எழுதி இருக்கும் வரிகளுடன் படித்துப்பாருங்கள்.

 
               

                          

        

                                         


                                       


                                       


                 

சந்திரன் பூமியின்  நிழலுக்குள் சென்று நிறத்தை மாற்றும்- சாம்பல் நிறத்தில்  இருந்து இளஞ்சிவப்பு நிறமாகவும், பின்னர் ஆரஞ்சு நிறமாகவும் , இறுதியாக சிவப்பு நிறமாகவும் மாறியதை  பேரன் எடுத்த படங்களை ரசித்தீர்களா?

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. பேரன் அருமையாகவும், பொறுமையாகவும் படம் எடுத்து அனுப்பி இருக்கிறார்.  முழுநிலா குறைநிலா ஆவதையும், நிறம் மாறுவதையும் அழகாய் படம் பிடித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பேரன் அருமையாகவும், பொறுமையாகவும் படம் எடுத்து அனுப்பி இருக்கிறார். முழுநிலா குறைநிலா ஆவதையும், நிறம் மாறுவதையும் அழகாய் படம் பிடித்திருக்கிறார்.//

      ஆமாம், நான் இங்கு பார்க்கமுடியவில்லை என்றேன். உடனே அனுப்பிவிட்டான் எடுத்து , பிறகு எல்லோரும் பார்க்க குடும்ப குழுவிலும் அனுப்பி விட்டான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் பேரன் எடுத்த சிகப்பு நிலா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஆம். இந்தியாவில் இந்த கிரஹணம் சரிவர தெரியாது. இருப்பினும் இந்த தடவை நானும் சில முழுநிலவு போட்டோக்களை பால்கனியிலிருந்தபடி எடுத்தேன். அப்போது நீங்களும் அங்கு உங்கள் வீட்டிலிருந்தபடியே எடுத்திருப்பீர்கள் என நினைத்துக் கொண்டேன். முழு நிலவு படங்கள் எனில், அதுவும் மேகங்கள் மறைக்காத நிலவு எனில், போட்டோ எடுப்பது என் வாடிக்கையாகவும் போய் விட்டது.

    உங்கள் பேரன் கவின் அங்கு நடந்த கிரஹண நிகழ்வுகளை படிப்படியாக அழகான படங்களாக எடுத்து வாசகங்களையும் எழுதி உடனுக்குடன் உங்களுக்கு அனுப்பி உங்களை மகிழ்வித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு ஆர்வம் இருந்தால்தான் கண்டு ரசிக்கத் தோன்றும் இல்லையா.? அவரின் இந்த ஆர்வத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவியுங்கள். அதனால் நாங்களும் இந்த அரிய நிகழ்வினை கண்டு ரசித்தோம். அழகான படங்களை ரசிக்கத் தந்தமைக்கு கவினுக்கு என் நன்றியையும் தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. தங்கள் பேரன் எடுத்த சிகப்பு நிலா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. //

      நன்றி கமலா.

      //ஆம். இந்தியாவில் இந்த கிரஹணம் சரிவர தெரியாது. இருப்பினும் இந்த தடவை நானும் சில முழுநிலவு போட்டோக்களை பால்கனியிலிருந்தபடி எடுத்தேன். அப்போது நீங்களும் அங்கு உங்கள் வீட்டிலிருந்தபடியே எடுத்திருப்பீர்கள் என நினைத்துக் கொண்டேன். முழு நிலவு படங்கள் எனில், அதுவும் மேகங்கள் மறைக்காத நிலவு எனில், போட்டோ எடுப்பது என் வாடிக்கையாகவும் போய் விட்டது.//

      எனக்கு பால்கனியிலிருந்து முழு நிலவை பார்க்க முடியாது. அதிகாலை நிலா அதுவும் தேய்ந்து போன நிலா தான் பார்க்க முடியும் முழு நிலவை பார்க்க முடியாது. மகன் வீட்டில், அப்புறம் இங்கு கோயில் போகும் போது எடுப்பேன். இப்போது பெளர்ணமி பூஜைக்கு போவது இல்லை.

      நீங்கள் எடுத்த படங்களை பதிவில் போடுங்கள்.

      //உங்கள் பேரன் கவின் அங்கு நடந்த கிரஹண நிகழ்வுகளை படிப்படியாக அழகான படங்களாக எடுத்து வாசகங்களையும் எழுதி உடனுக்குடன் உங்களுக்கு அனுப்பி உங்களை மகிழ்வித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு ஆர்வம் இருந்தால்தான் கண்டு ரசிக்கத் தோன்றும் இல்லையா.? அவரின் இந்த ஆர்வத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவியுங்கள். அதனால் நாங்களும் இந்த அரிய நிகழ்வினை கண்டு ரசித்தோம். அழகான படங்களை ரசிக்கத் தந்தமைக்கு கவினுக்கு என் நன்றியையும் தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஆமாம், என்னை மகிழ்வித்து விட்டான்.
      உங்கள் பாராட்டுக்களை, வாழ்த்துக்களை சொல்கிறேன்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.





      நீக்கு
  3. தங்களது பெயரன் கவினுக்கு இந்த வயதிலேயே இவ்வளவு ரசனை இருப்பது மகிழ்ச்சி.

    அழகிய காட்சிகள் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //தங்களது பெயரன் கவினுக்கு இந்த வயதிலேயே இவ்வளவு ரசனை இருப்பது மகிழ்ச்சி.

      அழகிய காட்சிகள் மிகவும் ரசித்தேன்.//

      சிறு வயதில் இருந்தே கை அடக்க காமிராவில் எங்கு போனாலும் படங்கள் எடுப்பான். இப்போது பெரியவன் ஆகி விட்டான் என்று நல்ல காமிரா வாங்கி கொடுத்தேன். இன்னும் கூட நல்ல காமிரா வாங்கலாம் அவன் ஆர்வத்திற்கு . அவன் அப்பா வாங்கி தருவான்.
      படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பொறுமையாகவும் அருமையாகவும் எடுத்துள்ளார் என எண்ணியபடியே வந்தால் ஸ்ரீராமும் அதையே சொல்லியுள்ளார்:). இங்கு 2018_ல் ப்ளட் மூன் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    கவினுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. கவின் மிக மிக அழகாகப் படங்கள் எடுத்து அதை அன்புடன் ஆச்சிக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார் பாருங்க! பொறுமையாக நிதானமாக ஒவ்வொரு படிப்படியாக எடுத்து அழகாக தன் வரிகளுடன் அனுப்பியதை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா.

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு. அதில் ஒவ்வொரு மாற்றத்திலும் நேரமும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு