சனி, 17 பிப்ரவரி, 2024

ஆலப்புழா படகு வீடு பயணம் - பகுதி 4 (நிறைவு பகுதி )


ஆலப்புழா படகு வீட்டில் மகன் குடும்பத்துடன் ஜூன் மாதம் பயணம் செய்தோம். அங்கு பார்த்த இடங்களும் , படகு பயணத்தில் பார்த்த காட்சிகளும் பதிவில் இடம்பெற்று வருகிறது. இந்த பதிவு நிறைவு பகுதி.



படகின் உள்ளே இருந்து படகுகளை கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தோம்.


படகின் உள்புறம்



ஏரியின் நீர்  அலைகளுடன் அழகு, வீடுகள் எல்லாம்  பசுமையான  செடி, கொடி மரங்களுடன் கண்களுக்கு குளுமையாக

படகு பயணத்தில் கைவினைப்பொருட்கள் விற்கும் கடைபக்கம் நிறுத்தினார்கள்

பேரன் படகு வீடு வாங்கினான் கொலுவில் வைக்க 
ஐயப்பன் கோவில்

படகு வீடு
அழகு மயில்கள்
அலைமகள் சிறிய கடைதான் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் படகில் ஏறி  வலம் வந்தோம்.


ஆயுர்வேத  அழகு நிலையம் இருந்தது அங்கு போய்
ஆயுர்வேத ஃபேசியல், மற்றும் ஆயிர்வேத  மசாஜ் செய்து கொள்ளலாம் என்று ஒரு இடத்தில் நிறுத்தினார் படகை 

மகனும், மருமகளும் போய் பார்த்து வந்தார்கள் உள்ளே போய். நாங்கள் போகவில்லை . படகில் இருந்தோம். 

அங்கு இளநீர் கடையும் இருந்தது, இளநீர் வாங்கி பருகினோம். 


பயணத்தில்  பார்த்த "ஏசு அழைக்கிறார்" சிறிய தேவாலயம்

பாலமும், படகில் பயணம் செய்ய காத்து இருக்கும் இடமும்(படகு நிறுத்தம்)

மக்கள் இது போன்ற விசை படகிலும் பயணம் செய்து ஏரியை சுற்றி வருகிறார்கள்.


படகு பின் புறம்  தென்னைமரங்கள் பார்க்க அழகு

ஆகாயத்தாமரைகள் நகர்ந்து செல்கிறது
நாம் படகில் பயணம் செய்வது போல பறவைகள் வெங்காயத்தாமரை, அல்லது ஆகாயத்தாமரை என்று அழைக்கப்படும் தாவரத்தில் பயணம் செய்கிறது. தினம் பறவைகளை பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.






நாரைகள்



முக்குளிப்பான் பறவை



அன்ன பறவை போல வெள்ளை வாத்து   நீந்தி போவது பார்க்க அழகு அதுவும்  வாத்துகள், அதன் குஞ்சுகள்(குஞ்சுகள் என்றுதான் நினைக்கிறேன், படகு வேகமாய் போனதால் சரியாக தெரியவில்லை)   ஆகாயதாமரையுடன் ஜம் என்று பயணம் செய்கிறது.https://www.facebook.com/100002082731829/videos/pcb.6504852832927410/6255115064583549
முகநூலில் இருக்கிறது நேரம் இருந்தால் பாருங்கள். நான் என் சேமிப்பில் தேடினேன் ,  அது டெலிட் ஆகி விட்டது போல.



தாவரங்கள் மிதந்து போவது பார்க்க அழகு. மக்கள் தூக்கி போட்ட காலி பாட்டில்களும் தாவரத்தின் மீது பயணம் செய்கிறது. மக்கள் நீர் நிலையில் தூக்கி போடுவதை பார்க்க வேதனைதான். இதுவும் மிதந்து போவதை காணொளி எடுத்து இருந்தேன், டெலிட் ஆகி விட்டது. நிறைய படங்கள் காணவில்லை.

மழை த்துளி

மழை பெய்த போது மழைத்துளி சூரிய ஒளியில் வெள்ளியாக மின்னியது.


ஏரியில் ஆகாயத்தாமரை நகர்ந்து போவதை பார்ப்பதும் அழகு சிறிய காணொளிதான் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

எங்கள் படகில் உணவு பொருள் தேவைபட்டபோது இன்னொரு படகு வீட்டில் வந்து கொடுத்தார்கள், அதை படம் எடுத்து வைத்து இருந்தேன் அதையும் காணவில்லை.
தட்டானும் எங்களுடன் பயணம் செய்தது

பேரன் ஆசைபட்டு வாங்கிய காத்தாடியை படகில் கட்டி விட்டான் படகு போகும் போது அது அழகாய் காற்றில் சுற்றியது பார்க்க அழகாய் இருந்தது.  வரும் போது அது படகில் இருக்கட்டும் என்று  சொல்லி விட்டான்.



படகு துறையை விட்டு வெளியே வரும் வழியில் பார்த்த பறவைகள்.

மூன்று நாட்கள் படகு வீட்டில்  பயணம் மிக நன்றாக இருந்தது. இயற்கையை ரசித்தோம்,  பறவைகளை கண்டு மகிழ்ந்தோம்.


தொடர் பதிவில் தொடர்ந்து வந்து   கருத்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

படகு வீடு பயணத்தொடர் நிறைவு பெற்றது, அடுத்து போன இடம்  வைக்கம் கோயில்  அது அடுத்த பதிவில்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

  1. படங்கள் வழக்கம் போல அழகு

    //பேரன் ஆசைபட்டு வாங்கிய காத்தாடியை படகில் கட்டி விட்டான்//

    பாராட்டுக்குரியது.

    காணொளிகள் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் வழக்கம் போல அழகு//

      நன்றி.

      //பேரன் ஆசைபட்டு வாங்கிய காத்தாடியை படகில் கட்டி விட்டான்//

      பாராட்டுக்குரியது.//

      அவன் சொன்ன காரணம் அடுத்த படகில் வருகிறவர்கள் காத்தாடி சுற்றுவதை பார்க்கட்டும் என்றான். உங்கள் பாராட்டுக்களை கவினிடம் சொல்லி விடுகிறேன்.


      //காணொளிகள் கண்டேன்.//

      காணொளிகளை பார்த்தது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  2. படகுப் பயணம் நாங்களும் அங்குப் போகவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது.

    படங்களும் மிக அழகாக வந்துள்ளன. கடைகள், பறவைகள் போன்றவையும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //படகுப் பயணம் நாங்களும் அங்குப் போகவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது.//

      வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள் குடும்பத்தோடு

      //படங்களும் மிக அழகாக வந்துள்ளன. கடைகள், பறவைகள் போன்றவையும் சிறப்பு//

      நன்றி.

      நீக்கு
  3. இத்தகைய நிறுத்தக்களில் பொருட்களின் விலை அதிகமாக இருக்குமே. அப்படித் தோன்றியதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இத்தகைய நிறுத்தக்களில் பொருட்களின் விலை அதிகமாக இருக்குமே. அப்படித் தோன்றியதா?//

      நான் பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன், எதுவும் வாங்கவில்லை, மகன் தான் வாங்கினான். விலை தெரியவில்லை, இது போன்ற இடங்களில் விலை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  4. மயில்கள் கைவினைப் பொருட்கள் அழகு. இதனைப் போன்ற ஒன்றை இந்தோனேஷியா ஏர்போர்டில் பார்த்து மனைவிக்காக வாங்க முயன்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மயில்கள் கைவினைப் பொருட்கள் அழகு. இதனைப் போன்ற ஒன்றை இந்தோனேஷியா ஏர்போர்டில் பார்த்து மனைவிக்காக வாங்க முயன்றோம்.//

      வாங்க முயன்றோம் என்றால் வாங்கவில்லையா? இந்தோனேஷியா கலை வேலைப்பாடு நன்றாக இருக்குமே!

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. ஆகாயத் தாமரை மற்றும் மின்னும் ஏரி காணொளிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆகாயத் தாமரை மற்றும் மின்னும் ஏரி காணொளிகளை ரசித்தேன்.//

      காணொளிகளை ரசித்தமைக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  6. கரையோரங்களில் வீடுகள் இருந்தனவா?  ஆற்றில் தண்ணீர் பெருகி வந்தால் வீடுகளுக்கு பாதிப்பிருக்காதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கரையோரங்களில் வீடுகள் இருந்தனவா? ஆற்றில் தண்ணீர் பெருகி வந்தால் வீடுகளுக்கு பாதிப்பிருக்காதா?//

      கரையோரங்களில் வீடுகள், பள்ளிகள், தேவாலயம், எல்லாம் இருந்தது.
      வீட்டுக்கு பின் புறம், முன்புறம் எல்லாம் ஏரி நீர் தான். ஏரியில் தண்ணீர் பெருகினால் பாதிப்பு இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
      ஓவ்வொரு வீட்டிலும் சொந்தமாக படகு வைத்து இருந்தார்கள். கரையோரம் இரண்டு மரங்களுக்கு இடையில் ஊஞ்சல் கட்டி இருந்தார்கள். சிமெண்ட் பெஞ்ச் அமைத்து இருந்தார்கள், மாலை நேரம் அமர்ந்து இயற்கையை ரசிக்க. அதை எல்லாம் படம் எடுத்து இருந்தேன், மெமரி கார்டில் எப்படியோ டெலிட் செய்து இருக்கிறேன்.

      நீக்கு
  7. விசைப்படகு பஸ் போல தோற்றமளிக்கிறது. படங்கள் யாவும் கண்களுக்கு விருந்து, குளிர்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விசைப்படகு பஸ் போல தோற்றமளிக்கிறது. படங்கள் யாவும் கண்களுக்கு விருந்து, குளிர்ச்சி.//

      காலை பள்ளி, அலுவலகம் செல்ல ஏற்றார் போல அடிக்கடி போய் கொண்டு இருந்தது.

      நீக்கு
  8. படகின் பின்புற தென்னைமர பின்னணி பார்க்க அழகு.  இன்னும் க்ளோஸ் அப்பில்  எடுத்து பொங்கல் வாழ்த்து தயாரிக்கலாம்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படகின் பின்புற தென்னைமர பின்னணி பார்க்க அழகு. இன்னும் க்ளோஸ் அப்பில் எடுத்து பொங்கல் வாழ்த்து தயாரிக்கலாம்!!!!//

      ஆமாம், ராமலக்ஷ்மி எடுத்த படகு படத்தை சுற்றுலா துறையில் வைத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். முன்பு குமரகம் என்று பதிவு போட்டு இருந்தார் , உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். மிக துல்லியமாக அவர் எடுத்த படங்கள் இருக்கும்.

      நீக்கு
  9. நாரையா?  நாறையா?  முன்னதுதான் சரி என்று தோன்றுகிறது.  ஆகாயத்தாமரை சவாரி..  ஹா..  ஹா..  ஹா...   கண்டுபிடித்து வைத்திருக்கின்றன பறவைகள்!  காணொளிகள் கண்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாரையா? நாறையா? முன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. ஆகாயத்தாமரை சவாரி.. ஹா.. ஹா.. ஹா... கண்டுபிடித்து வைத்திருக்கின்றன பறவைகள்! காணொளிகள் கண்டேன், ரசித்தேன்.//

      நாரைதான் சரி . சிப்ட் எடுக்காமல் அடித்து இருக்கிறேன். திருத்தி விட்டேன், நன்றி.

      வெள்ளை வாத்து வேகமாக நீந்தி செல்வது, மற்றும் பல வாத்துக்கள் பயணம் முகநூலில் போட்டு இருந்தேன் பார்த்து இருப்பீர்கள். இப்போது இங்கு முகநூல் சுட்டி கொடுத்து இருக்கிறேன்.
      காணொளிகளை பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. பட்கின் உட்புறம் சூப்பர், கோமதிக்கா. அது போல கைவினைப்பொருட்கள் எல்லாமே அழகோ அழகு. பேரன் படகு வாங்கியது மகிழ்ச்சி. ஆமாம் கொலுவிலும் நினைவாகவும் வைக்கலாம். கொலுவில் தண்ணீர் டாங்க் போல உருவாக்கி படகைத் தண்ணீரில் வைக்க முடியாது என்றால் கரையில்இருப்பது போன்று வைத்து அதில் சின்ன பொம்மைகளை வைத்தால் (பேரனிடம் நிறைய இருக்கும்) படகு வீட்டு நினைவு கொலுவிலும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் வாழ்க வளமுடன்

      //படகின் உட்புறம் சூப்பர், கோமதிக்கா. அது போல கைவினைப்பொருட்கள் எல்லாமே அழகோ அழகு//

      ஆமாம் கீதா.

      //பேரன் படகு வாங்கியது மகிழ்ச்சி. ஆமாம் கொலுவிலும் நினைவாகவும் வைக்கலாம். கொலுவில் தண்ணீர் டாங்க் போல உருவாக்கி படகைத் தண்ணீரில் வைக்க முடியாது என்றால் கரையில்இருப்பது போன்று வைத்து அதில் சின்ன பொம்மைகளை வைத்தால் (பேரனிடம் நிறைய இருக்கும்) படகு வீட்டு நினைவு கொலுவிலும்!!//

      உங்கள் யோசனைகள் அருமை. நினைவுக்கு வாங்கியதுதானே!






      நீக்கு
  11. கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழ்கு அதுவும் படகு வீடு மனதை ரொம்ப ஈர்க்கிறது அழகான கைவண்ணம்.

    ஆமாம் கரையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் உண்டு. சிலர் அங்கு சென்று செய்து கொள்வதுண்டு. சுற்றுலாவிற்கென்றே யோசித்து நிறைய செய்திருக்காங்க அந்த காயலில்.

    நிறுத்தும் இடத்தில் பாலம் மிக அழகு.

    தண்ணீரில் நிறைய ஆகாயத்தாமரைகள் மிதக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழ்கு அதுவும் படகு வீடு மனதை ரொம்ப ஈர்க்கிறது அழகான கைவண்ணம்.//

      ஆமாம்.

      //ஆமாம் கரையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் உண்டு. சிலர் அங்கு சென்று செய்து கொள்வதுண்டு. சுற்றுலாவிற்கென்றே யோசித்து நிறைய செய்திருக்காங்க அந்த காயலில்.//

      மருமகள்ஃ பேசியல், மகன் மசாஜ் செய்து வந்தார்கள்.

      //நிறுத்தும் இடத்தில் பாலம் மிக அழகு.//
      ஆமாம்

      //தண்ணீரில் நிறைய ஆகாயத்தாமரைகள் மிதக்கின்றன.//

      தண்ணீரை மறைக்கும் அளவு ஆகாயத்தாமரைகள் உள்ள இடமும் இருக்கிறது. அங்கு படகு போக்குவரத்து இல்லை.

      நீக்கு
  12. கரைகளில் வீடுகள் ஆஹா! நிறைய பார்த்திருக்கிறேன் நான். அமர்ந்து வேடிக்கை பார்த்துஇயற்கை அழகை ரசிக்கலாம் மிகவும் ரசிக்கலாம். தண்ணீர் பெருக்கெடுக்கும் போது என்ன ஆகும் என்பது மட்டும் தோன்றும். நீர்ப்பாம்புகள் வரும் ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் பழகியிருக்கும்.

    ரயிலடியில் இருந்தால் வீடுகளில் இருந்து நாம் ரய்லில் செல்பவர்களைப் பார்த்து கை அசைப்போமே அது போல இப்படியான வீடுகளில் இருப்பவர்கள் கை அசைப்பாங்க!!! தினமும் பார்த்துக் கொண்டிருப்பாங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கரைகளில் வீடுகள் ஆஹா! நிறைய பார்த்திருக்கிறேன் நான். //
      நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

      //அமர்ந்து வேடிக்கை பார்த்துஇயற்கை அழகை ரசிக்கலாம் மிகவும் ரசிக்கலாம். தண்ணீர் பெருக்கெடுக்கும் போது என்ன ஆகும் என்பது மட்டும் தோன்றும்.//

      ஆமாம், அதையெல்லாம் நினைத்தால் அவர்கள் தினம் நிம்மதியாக வாழ முடியாது.


      நீர்ப்பாம்புகள் வரும் ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் பழகியிருக்கும்.//
      ஆமாம். திருவெண்காட்டில் இருக்கும் போது 15 நாள் இருந்த வீட்டின் பின்னால் இருக்கும் ஓடையில் தண்ணிர் பாம்புகள் சல சலத்து ஓடும் நான் பயந்து இருக்கிறேன். அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள் நான் பயந்து போனதை சொன்னபோது சிரித்தார்கள். அவ்ரகளுக்கு பழகி விட்டது. வேறு மாடி வீடு குடிபுகுந்து விட்டேன்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படகு சவாரி படங்கள் அனைத்தும் வழக்கம் போல் துல்லியமாக அமைந்துள்ளது. இயற்கை வளத்துடன் நீங்கள் பயணித்த பகுதிகள் மனதை கொள்ளை கொள்கின்றன. தென்னை மர பிண்ணனி படம் மிக அருமை

    படகிலிருந்து இறங்கி நீங்கள் பார்க்கச் சென்ற கைவினைப் பொருட்கள் அங்காடி அனைத்தும் நன்றாக உள்ளது. மற்ற பொம்மைகளுடன் மயில் பொம்மை ரொம்ப அழகாக உள்ளது.

    தங்கள் பேரன் ஆசையுடன் வாங்கியிருக்கும் படகு வீடும் காத்தாடியும் மிக அழகாக இருக்கிறது. அதை (காத்தாடி) படகில் கட்டி அவர் அழகு பார்த்து இருப்பதும் மிக அருமை. படகிலிருந்து பயணம் முடிந்து இறங்கும் சமயத்திலும் அதை கழட்ட மனம் வராமல் அதை பிறர் கண்டு களிக்கட்டும் என விட்டு வந்த அவரின் மனப்பாங்கு பாராட்டத்தக்கது. அவருக்கும் என் வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.

    ஆகாய தாமரை நீரில் பயணம் செய்யும் அழகு மனதை கவர்கிறது. அதில் அமர்ந்து அதனூடேயே பயணிக்கும் பறவையும் மிக அழகாக இருக்கிறது.

    வாத்து, மற்றும் தன் குஞ்சுகளுடன் கூட்டமாக பயணிக்கும் படங்களும் நீங்கள் தந்த சுட்டி வழி சென்று பார்த்து வந்தேன். நான் முகநூலில் இல்லை. இருப்பினும் தாங்கள் தந்த சுட்டி எனக்கு எப்படியோ கைப்பேசியில் வருகிறது.

    .இந்த மாதிரி படகு பயணம் இனி எப்போது வருமோ என தட்டாரபூச்சியும் ஜாலியாக உங்கள் படகுடன் வருகிறது. அந்த படத்தையும் ரசித்தேன்.

    காணோளிகளையும் பார்த்தேன். மழைத்துளி நீரில் விழும் அழகை தாங்கள் ஒப்பிட்ட விதம் அருமை.

    உங்களுடன் இந்தப் படகுபயணத்தில் நானும் பயணித்த திருப்தியை தந்தது தாங்கள் இதுவரை போட்ட பதிவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படகு சவாரி படங்கள் அனைத்தும் வழக்கம் போல் துல்லியமாக அமைந்துள்ளது. இயற்கை வளத்துடன் நீங்கள் பயணித்த பகுதிகள் மனதை கொள்ளை கொள்கின்றன. தென்னை மர பிண்ணனி படம் மிக அருமை//

      நன்றி கமலா.

      மயில் பொம்மை ரொம்ப அழகாக உள்ளது.//

      அதனால் தான் அதை மட்டும் தனியாக எடுத்தேன்.

      //தங்கள் பேரன் ஆசையுடன் வாங்கியிருக்கும் படகு வீடும் காத்தாடியும் மிக அழகாக இருக்கிறது. அதை (காத்தாடி) படகில் கட்டி அவர் அழகு பார்த்து இருப்பதும் மிக அருமை. படகிலிருந்து பயணம் முடிந்து இறங்கும் சமயத்திலும் அதை கழட்ட மனம் வராமல் அதை பிறர் கண்டு களிக்கட்டும் என விட்டு வந்த அவரின் மனப்பாங்கு பாராட்டத்தக்கது. அவருக்கும் என் வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.//

      பேரன் கவினிடம் கண்டிப்பாய் உங்கள் வாழ்த்தை பாராட்டை சொல்லி விடுகிறேன். கத்தாடி படகு பயணத்தில் சுழல்வதை நிறைய காணொளி எடுத்தேன், அவையும் டெலிட் ஆகி விட்டது மகன் எடுத்த காணொளி இருக்கிறது . ஒரு நாள் போடுகிறேன்.

      //ஆகாய தாமரை நீரில் பயணம் செய்யும் அழகு மனதை கவர்கிறது. அதில் அமர்ந்து அதனூடேயே பயணிக்கும் பறவையும் மிக அழகாக இருக்கிறது.//

      ஆமாம், பார்க்க அருமையாக இருந்தது.

      //வாத்து, மற்றும் தன் குஞ்சுகளுடன் கூட்டமாக பயணிக்கும் படங்களும் நீங்கள் தந்த சுட்டி வழி சென்று பார்த்து வந்தேன். நான் முகநூலில் இல்லை. இருப்பினும் தாங்கள் தந்த சுட்டி எனக்கு எப்படியோ கைப்பேசியில் வருகிறது.//

      அது எல்லோரும் பார்க்கும் படி போட்டு இருந்தேன், அதனால் பார்க்க முடிகிறது உங்களுக்கு. நண்பர்களுக்கு மட்டும் என்றால் பார்க்க முடியாது. நீங்கள் அந்த காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //இந்த மாதிரி படகு பயணம் இனி எப்போது வருமோ என தட்டாரபூச்சியும் ஜாலியாக உங்கள் படகுடன் வருகிறது. அந்த படத்தையும் ரசித்தேன்.//

      ஆமாம், வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தட்டானுக்கு தெரிகிறது.

      //காணோளிகளையும் பார்த்தேன். மழைத்துளி நீரில் விழும் அழகை தாங்கள் ஒப்பிட்ட விதம் அருமை.//

      நன்றி .

      //உங்களுடன் இந்தப் படகுபயணத்தில் நானும் பயணித்த திருப்தியை தந்தது தாங்கள் இதுவரை போட்ட பதிவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      தொடர்ந்து வந்து பதிவுகளை படித்து விரிவான கருத்துக்கள் அளித்தமைக்கு நன்றி கமலா ஹரிஹரன்.







      நீக்கு
  14. கவின் காற்றாடியை படகில் வைத்து அழகு பார்த்தது!! அவரது ரசனையைக் காட்டுகிறது. ரசித்தேன் இதை. நானும் இவ்வகை!! ஒவ்வொரு சிறு விஷயத்தையும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று நினைப்பேன்.

    விசப்படகு பொதுவாகப் போக்கு வரத்திற்கு. என் தங்கை குடும்பம் சென்று வந்தது இப்படகில்தான் ஆனால் உணவுடன்.

    பறவைகள் ஆகாயத்தாமரையில் பயணிப்பது கண் கொள்ளாக் காட்சி!

    அது குளத்துக் கொக்குதான் கோமதிக்கா. பான்ட் ஹெரான். கழுத்தை கொஞ்சம் நிமிர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் பின் புறம் மெலிய ப்ரௌன் நிறம். இன்னும் கொஞ்சம் அடர்த்தியான ப்ரௌன் என்றால் அது பருவகாலத்தில் இருக்கிறது எனலாம்.

    அடுத்து இருக்கும் கருப்பு - கார்மொரான்ட். நீர்க்காகம் சின்ன நீர்க்காகம். ஆமாம் நீரில் மூழ்கி விடும் கொஞ்ச நேரம் காணாமல் போகும். மீண்டும் சிறிது தூரம் சென்று மேலே வரும் அதுவும் நாம் இருக்கிறோம் என்று தெரிந்தால் அப்படிச்செய்யும். நான் இந்திய கார்மொரான்ட், சின்ன கார்மொரான்ட், பெரிய நீர்க்காகம் எல்லாம் எடுத்திருக்கிறேன். தொகுக்க வேண்டும். இதில் மிகவும் கருப்பாக இருப்பதும் உண்டு. shag என்றும் சொல்லப்படுகிறது. பரவலாகக் காணப்படும்.

    முக்குளிப்பான்னு இதைச் சொன்னாலும், தமிழில் முக்குளிப்பான் என்பவை கிரெப்ஸ் grebe எனப்படும் கொஞ்சம் குண்டா வாத்து போல ப்ரௌன் கலர்ல கழுத்து கொஞ்சம் சிவப்பா கண் சிவந்த பட்டன் போல அதுவும் டபக்குனு தண்ணிக்குள்ள மூழ்கிடும். ரொம்ப டபக்கு டபக்குனு. நான் படங்கள் எடுத்து பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டதுதான். இல்லைனா எப்படித் தெரியும் ஹிஹிஹிஹி!!!

    ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க. கோமதிக்கா காணொளி செம மழை பெய்வதும் ஆ தாமரைகள் நகர்வதும்

    எங்கள் ஊர்ல இந்த ஆ தாமரைகளை ரசித்திருக்கிறேன் சின்ன வயசுல. இப்பவும் இங்கு ஏரியில் அதோடு அந்த சம்பு நாணல் படுகை மிதப்பதும் பார்த்திருக்கிறேன்.

    எங்கள் ஏரி இப்ப அடுத்து வரும் பருவ காலத்திற்குத் தயாராகிறது. கிரெப்ஸ் அங்கு முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யும், நாமக்கோழி, எல்லாம்...படுகைகள் இப்ப கரை ஓஒரமா எல்லாம் ஒதுங்கி அடர்த்தியா, கதிர்கள் கொஞ்சம் முற்றி வெடித்து என்று இருக்கு இன்னும் நான்கு ஐந்து மாதங்கள் சென்ற பின் எல்லாம் ஆக்டிவ் ஆகிடும்.

    முன்பு எடுத்தவற்றை ஒவ்வொன்றாகப் போட வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவின் காற்றாடியை படகில் வைத்து அழகு பார்த்தது!! அவரது ரசனையைக் காட்டுகிறது. ரசித்தேன் இதை. நானும் இவ்வகை!! ஒவ்வொரு சிறு விஷயத்தையும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று நினைப்பேன்.//

      ஒவ்வொரு சிறு விஷயத்தையும் அனுபவித்து மகிழ்வது மகிழ்ச்சியான நல்ல விஷயம் கீதா.

      //விசப்படகு பொதுவாகப் போக்கு வரத்திற்கு. என் தங்கை குடும்பம் சென்று வந்தது இப்படகில்தான் ஆனால் உணவுடன்.//
      ஓ அப்படியா?

      //பறவைகள் ஆகாயத்தாமரையில் பயணிப்பது கண் கொள்ளாக் காட்சி!//

      ஆமாம், படகு போய் கொண்டு இருந்த போது விரைவாக எடுக்க வேண்டி இருந்தது. பார்த்து கொண்டு இருக்கலாம், ஆனால் பயணத்தில் பார்த்தது அந்த நொடியை விரைவில் படம் எடுத்தேன்.
      பறந்து கொண்டு இருந்த நீர் காகங்களை படம் எடுத்தேன், அதுவும் காணவில்லை. கிருஷ்ண பருந்துகள் பறந்து வந்து தென்னைமரத்தில் அமருவதை எடுத்தேன் அதுவும் காணவில்லை.


      //அது குளத்துக் கொக்குதான் கோமதிக்கா. பான்ட் ஹெரான். கழுத்தை கொஞ்சம் நிமிர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் பின் புறம் மெலிய ப்ரௌன் நிறம். இன்னும் கொஞ்சம் அடர்த்தியான ப்ரௌன் என்றால் அது பருவகாலத்தில் இருக்கிறது எனலாம்.//

      கடைசி படத்தில் வெள்ளை கொக்குகுகளுடன் இந்த பறவையும் இருக்கும்.

      //அடுத்து இருக்கும் கருப்பு - கார்மொரான்ட். நீர்க்காகம் சின்ன நீர்க்காகம். ஆமாம் நீரில் மூழ்கி விடும் கொஞ்ச நேரம் காணாமல் போகும். மீண்டும் சிறிது தூரம் சென்று மேலே வரும் அதுவும் நாம் இருக்கிறோம் என்று தெரிந்தால் அப்படிச்செய்யும். நான் இந்திய கார்மொரான்ட், சின்ன கார்மொரான்ட், பெரிய நீர்க்காகம் எல்லாம் எடுத்திருக்கிறேன். தொகுக்க வேண்டும். இதில் மிகவும் கருப்பாக இருப்பதும் உண்டு. shag என்றும் சொல்லப்படுகிறது. பரவலாகக் காணப்படும்.//

      நானும் பார்த்து இருக்கிறேன்.


      //முக்குளிப்பான்னு இதைச் சொன்னாலும், தமிழில் முக்குளிப்பான் என்பவை கிரெப்ஸ் grebe எனப்படும் கொஞ்சம் குண்டா வாத்து போல ப்ரௌன் கலர்ல கழுத்து கொஞ்சம் சிவப்பா கண் சிவந்த பட்டன் போல அதுவும் டபக்குனு தண்ணிக்குள்ள மூழ்கிடும். ரொம்ப டபக்கு டபக்குனு. நான் படங்கள் எடுத்து பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டதுதான். இல்லைனா எப்படித் தெரியும் ஹிஹிஹிஹி!!!//

      நானும் கூகுளில் தேடிதான் பறவைகளின் செய்திகளை போடுவேன்.

      //ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க. கோமதிக்கா காணொளி செம மழை பெய்வதும் ஆ தாமரைகள் நகர்வதும்//

      நன்றி கீதா.

      //எங்கள் ஊர்ல இந்த ஆ தாமரைகளை ரசித்திருக்கிறேன் சின்ன வயசுல. இப்பவும் இங்கு ஏரியில் அதோடு அந்த சம்பு நாணல் படுகை மிதப்பதும் பார்த்திருக்கிறேன்.//

      நாணல் படுகையை பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்கள்.


      //எங்கள் ஏரி இப்ப அடுத்து வரும் பருவ காலத்திற்குத் தயாராகிறது. கிரெப்ஸ் அங்கு முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யும், நாமக்கோழி, எல்லாம்...படுகைகள் இப்ப கரை ஓஒரமா எல்லாம் ஒதுங்கி அடர்த்தியா, கதிர்கள் கொஞ்சம் முற்றி வெடித்து என்று இருக்கு இன்னும் நான்கு ஐந்து மாதங்கள் சென்ற பின் எல்லாம் ஆக்டிவ் ஆகிடும்.//

      உங்களுக்கு ரசிக்க படம், காணொளி எடுக்க நல்ல வாய்ப்பு எடுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.


      //முன்பு எடுத்தவற்றை ஒவ்வொன்றாகப் போட வேண்டும்//

      நேரம் கிடைக்கும் போது போடுங்கள்.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  15. அக்கா நீங்க மகிழ்ச்சியாக அனுபவித்து ரசித்து படங்கள் எடுத்து எழுதியிருக்கீங்க. கடைசியில் வெள்ளைக் கொக்குகள் கூட்டம் என்ன அழகு இல்லையா...

    அக்கா படங்கள் காணாமல் போவது மொபைலில் ஒரு வேளை இடப் பற்றாக்குறை ஏற்பட்டு அது தானாகச் சிலவற்றை அழித்துவிடுகிறது என்று தோன்றுகிறது. எனக்கும் இப்படி ஆனதுண்டு. அல்லது நாம் எடுத்தாலும் சேவ் ஆகாமல் போகும்.

    நீங்க ஒன்று செய்யலாம் அக்கா மொபைலை அதற்கான அந்த வயர் உண்டு இல்லையா அதை கணினியில் செருகினால் மொபைலின் உட்பக்க ஃபோல்டர்ஸ் வரும். அதை இணைத்ததும் வரக் கூடிய மெசேஜை கவனமாகத் தேர்ந்தெடுத்தால் உள்ளிருப்பவை வரும் அதில் கேமரா என்பதில் சென்று பாருங்க சில சமயம் அங்கு இருக்கும். மெமரி கார்டில் உள்ள கேமராவிலும் பார்க்கலாம். முயற்சி செஞ்சு பாருங்க.

    படங்கள் அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா. எனக்கும் இப்ப படகுப் பயணம் போகணும்னு ஆசை வந்திடுச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா நீங்க மகிழ்ச்சியாக அனுபவித்து ரசித்து படங்கள் எடுத்து எழுதியிருக்கீங்க. கடைசியில் வெள்ளைக் கொக்குகள் கூட்டம் என்ன அழகு இல்லையா...//

      ஆமாம் , கூட்டமாய் இருக்கும் வெள்ளைக்கொக்குகளை பார்க்கும் போது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் .

      //அக்கா படங்கள் காணாமல் போவது மொபைலில் ஒரு வேளை இடப் பற்றாக்குறை ஏற்பட்டு அது தானாகச் சிலவற்றை அழித்துவிடுகிறது என்று தோன்றுகிறது. எனக்கும் இப்படி ஆனதுண்டு. அல்லது நாம் எடுத்தாலும் சேவ் ஆகாமல் போகும்.

      நீங்க ஒன்று செய்யலாம் அக்கா மொபைலை அதற்கான அந்த வயர் உண்டு இல்லையா அதை கணினியில் செருகினால் மொபைலின் உட்பக்க ஃபோல்டர்ஸ் வரும். அதை இணைத்ததும் வரக் கூடிய மெசேஜை கவனமாகத் தேர்ந்தெடுத்தால் உள்ளிருப்பவை வரும் அதில் கேமரா என்பதில் சென்று பாருங்க சில சமயம் அங்கு இருக்கும். மெமரி கார்டில் உள்ள கேமராவிலும் பார்க்கலாம். முயற்சி செஞ்சு பாருங்க.//

      நான் காமிராவில் எடுத்தேன் கீதா சில படங்கள். செல்லில் எடுத்தது இருக்கிறது. காமிராவில் எடுத்ததுதான் இல்லை. பதிவு செய்யாமல் டெலிட் செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

      //படங்கள் அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா. எனக்கும் இப்ப படகுப் பயணம் போகணும்னு ஆசை வந்திடுச்சே!!!//
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி. நீங்களும் ஒரு நாள் படகு பயணம் செய்து வருவீர்கள் கீதா.

      நீக்கு
  16. படகு வீடு அருமையான புகைப்படங்கள். நல்ல கேமரா என்று நினைக்கிறேன்.
    ஆகாயத்தாமரையில் யாத்திரை செய்யும் பறவைகளும் படகில் கூடவே யாத்திரை செய்த அந்தத் தட்டான் அழ்கு எனும் வேளையில் ஆகாயத்தாமரையில் கூடவே பாட்டிலும் என்பது வேதனை.

    எல்லாப் பறவைகளையும் பார்த்ததில் ஒன்றைக் கூட விடாமல் மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள். மிக நன்றாக இருக்கின்றன படங்கள்.

    பேரன் வாங்கிய படகு அங்கு இவை எல்லாம் கொஞ்சம் விலை கூடுதலாக இருக்கிறதோ? சுற்றுலாத்தலம் இல்லையா?

    எல்லாம் நேரில் பார்த்தது போல் இருந்தது. ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //படகு வீடு அருமையான புகைப்படங்கள். நல்ல கேமரா என்று நினைக்கிறேன்.//

      பறவைகளை எடுத்த படம் காமிராவில் எடுத்த படம் தான்.

      //ஆகாயத்தாமரையில் யாத்திரை செய்யும் பறவைகளும் படகில் கூடவே யாத்திரை செய்த அந்தத் தட்டான் அழ்கு//

      நன்றி.

      //எனும் வேளையில் ஆகாயத்தாமரையில் கூடவே பாட்டிலும் என்பது வேதனை.//

      சுற்றுலா செல்லும் மக்கள் ஏரியை சுத்தமாக வைத்து கொண்டால் நல்லது.

      //எல்லாப் பறவைகளையும் பார்த்ததில் ஒன்றைக் கூட விடாமல் மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள். மிக நன்றாக இருக்கின்றன படங்கள்.//

      காகம், மைனா, பருந்து எல்லாம் எடுத்தேன். பறவைகளை போகும் இடமெல்லாம் காண்பது மகிழ்ச்சி.

      //பேரன் வாங்கிய படகு அங்கு இவை எல்லாம் கொஞ்சம் விலை கூடுதலாக இருக்கிறதோ? சுற்றுலாத்தலம் இல்லையா?//

      விலை பற்றி தெரியவில்லை, நம் பூம்புகாரில் படகு வீடு என்ன விலை என்று தெரிந்தால் , இங்கு விலை என்ன தெரிந்தல்தான் கூடுதலா, குறைவா என்று தெரியும் எனக்கு.

      //எல்லாம் நேரில் பார்த்தது போல் இருந்தது. ரசித்தேன்//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.




      நீக்கு
  17. நாரைகள், முக்குளிப்பான் சரி.. தட்டானும் அழகு..

    படகுப் பயணம் இனிமையானது.. சிங்கப்பூரில் கடலில் சென்றிருக்கின்றேன்..

    பதிவு பலவகையிலும் சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //நாரைகள், முக்குளிப்பான் சரி.. தட்டானும் அழகு..//

      நன்றி.

      //படகுப் பயணம் இனிமையானது.. சிங்கப்பூரில் கடலில் சென்றிருக்கின்றேன்..//

      ஓ சரி , பயணம் நன்றாக இருந்து இருக்கும்.

      பதிவு பலவகையிலும் சிறப்பு..//

      நன்றி.

      நீக்கு
  18. ஆகாயத்தாமரை கூடவே பாட்டிலும்

    இதெல்லாம் சகஜம்..

    இங்கே காவிரி மணலில் காலை வைத்து நடப்பதற்கு பயமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆகாயத்தாமரை கூடவே பாட்டிலும்

      இதெல்லாம் சகஜம்..//

      சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைதான்.
      அமக்களாக பொறுப்பு உணர்ந்து காலி பாடில்களை குப்பை கூடையில் போட்டால்தான் உண்டு.

      //இங்கே காவிரி மணலில் காலை வைத்து நடப்பதற்கு பயமாக இருக்கின்றது//

      கண்ணாடி பாட்டில்கள் கிடக்கிறதா?
      பயம் தான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  19. படங்களும் தகவல்களும் நன்று. படகுப் பயணம் குறித்த தங்களது பதிவுகளை மிகவும் ரசித்தேன். இப்படியான படகு வீடுகளில் ஒரு நாளேனும் தங்க வேண்டும் என எனக்கும் ஆசை உண்டு - ஆசைக்கு தான் அளவேது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்களும் தகவல்களும் நன்று. படகுப் பயணம் குறித்த தங்களது பதிவுகளை மிகவும் ரசித்தேன். இப்படியான படகு வீடுகளில் ஒரு நாளேனும் தங்க வேண்டும் என எனக்கும் ஆசை உண்டு - ஆசைக்கு தான் அளவேது!//

      உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள். பயணம் செய்து கொண்டே இருக்கும் நீங்கள் இதற்கும் மனது வைத்தால் முடியும். குடும்பம், நண்பர்கள் என்று மகிழ்ச்சியாக தங்கி வரலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  20. படகு வீட்டுப் படங்கள் தென்னைமர பின்னணி என்ன அருமையான படங்கள்.

    விற்பனைப் பொருட்களும் அழகு.

    படகு வீடு வாங்கியதில் பேரனின் மகிழ்ச்சியான படம். என அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      இலங்கையில் இப்படி தென்னைமரங்கள் சூழ வீடும் கடற்கரை பகுதிகளில் பார்த்து இருக்கிறேன். உங்கள் ஊர் இயற்கை வளம் நிறைந்த ஊர்.

      //விற்பனைப் பொருட்களும் அழகு.

      படகு வீடு வாங்கியதில் பேரனின் மகிழ்ச்சியான படம். என அனைத்தும் அழகு.//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி

      நீக்கு
  21. படங்களும் பகிர்வும் அருமை. பறவைகளைப் பொறுமையாகப் படமாக்கியுள்ளீர்கள். காணொளிகள் நன்று. பேரன் கொலுவுக்காகப் படகு வீட்டை வாங்கிக் கொண்டதும், காத்தாடியைப் படகுக்கு அளித்ததும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் அருமை. பறவைகளைப் பொறுமையாகப் படமாக்கியுள்ளீர்கள். காணொளிகள் நன்று. //

      பறவைகளை படகு ஓடும் போது துரிதமாக எடுத்த படங்கள்.
      மூன்று நாள் பயணத்தில் எடுத்த படங்கள்.

      //பேரன் கொலுவுக்காகப் படகு வீட்டை வாங்கிக் கொண்டதும், காத்தாடியைப் படகுக்கு அளித்ததும் சிறப்பு.//

      பேரன் நாம் படகு போகும் போது காத்தாடி சுற்றுவதை ரசித்தது போல இனி வருபவர்கள் ரசிக்கட்டும் என்று சொல்லி விட்டான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.




      நீக்கு