வெள்ளி, 1 செப்டம்பர், 2023

மனைவி நல வேட்பு





 
மயிலாடுதுறையில் இருக்கும் போது உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து   மனவளக்கலை பயின்றேன், ஆழியார் சென்று  ஆசிரியர் பயிற்சி கற்று மயிலாடுதுறை மன்றத்தில் பல வருடம்  பணி செய்தேன்.  முன்பு சொல்லி இருக்கிறேன்.

ஆகஸ்ட் 30ம் தேதி "மனைவி நல வேட்பு நாள்" என்று  கொண்டாடுவார்கள். மகரிஷியின்  மனைவி அன்னை லோகாம்பாள் பிறந்த தினத்தை "மனைவி வேட்பு நாளாக"  கொண்டாடுவோம்.  மாயவரத்தில் இருக்கும் போது எங்கள் மன்றத்தில் நடந்த விழாவில் நானும், என் கணவரும் கலந்து கொண்டோம். நேற்று மகனிடம் பேசி கொண்டு இருந்தேன், ஆழியாரில்  நடந்த விழாவை நேரலையில் பார்த்தேன் என்று.

மகன் முன்பு  மயிலாடுதுறையில்  "நீங்கள் கலந்து கொண்டதை கூகுள் போட்டோ  காட்டியது அம்மா" என்றான். அவனுக்கு நான் அனுப்பிய படங்களை சேமித்து வைத்து இருந்து இருக்கிறான். 

நான் உடனே அனுப்பி வைக்க சொன்னேன், அனுப்பி வைத்தான். அந்த படங்களும், ஆழியாரில் நடந்த விழா படங்களும் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

---------------------------------------------------------------------------------------------------


எத்தனையோ சிறப்பு தினங்கள் இருக்கிறது, மனைவியை  கொண்டாடும் தினம் ஏற்பட்ட காரணம் படித்துப்பாருங்கள் 
படிக்க முடிகிறதா? 

மயிலாடுதுறையில்  மன்றம்

 
கைகளை கோர்த்து கொண்டு  கண்களை நேருக்கு நேர் நீடித்த நிலைத்த பார்வையாக சிறிது நேரம் பார்க்க வேண்டும்.


 பிறகு ஒருவரை ஒருவர் 'வாழ்க வளமுடன்" என்று மூன்று முறை வாழ்த்த வேண்டும். அப்புறம்  மலரை  கணவர் கொடுப்பர் மனைவிக்கு, மனைவி கனியை கொடுப்பார் கணவனுக்கு.

அந்த நேரம் உறுதி மொழி எடுக்க சொல்வார்கள்.

மென்மையான இந்த மலர் போன்ற மனம் கொண்ட நீங்கள் மனைவியாக வந்தற்கு நான் பாக்கியம் செய்தவன் , உன்னை  என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன் என்பார் கணவர்.

மனைவி கனியை கணவருக்கு கொடுத்து இக்கனி போன்ற கனிவான மனம் படைத்த நீங்கள் எவ்வாறு கனியில் உள்ள வித்து முளைத்து மீண்டும் வளர்ந்து பூவாகி, காயாகி, கனியாவது போல் இக் குடும்பத்தில் என்னை ஏற்று மலரச்செய்து கனி  போன்ற சுவை நிறைந்த வாழ்க்கை அளிததற்கு  நன்றி கூறி இக கனியை அளிக்கிறேன். என்பார் மனைவி.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் குடும்ப உறுப்பினர் யாராக இருந்தாலும் தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்கிடையேயுள்ள உயிர்த்தொடர் மூலம்  அவ்வாழ்த்துப்பரவி குடும்பத்தில் அமைதி நிலவி மகிழ்வையும், நிறைவையும் கொடுக்கும் என்பார் மகரிஷி.


இருவரும் தங்களுக்கு  இறைவன் கொடுத்த துணை என்று ஒருவரை ஒருவர் மதித்து  வாழ்த்தி கொள்ளும் நாள்.

அதுவும் தன் வீட்டை துறந்து கணவன் வீட்டுக்கு வந்துதன் குடும்பம் இதுவென்று நினைத்து வாழும்  மனைவியை வாழ்த்தும் தினம்.

நம் நாட்டின் பண்பாட்டின்படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று கூறலாம்.திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே தன் வீட்டு  அன்பு உறவுகளை துறந்து வரக்கூடிய இயல்பு அவர்களுக்கு வந்து விடுகிறது. அப்படி  நம் அன்பை நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவும் அன்பும் கொடுக்க வேண்டியது  அவசியம், உண்மையை உணர்ந்து கொள்வது  பெண்மை, என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் கொடுக்ககூடிய மதிப்பை போல நம் வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அது கடமை.   
 என்று  சொல்லி அதற்கு ஒரு கவிதை சொல்லி இருக்கிறார்.



   
'பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப் '' என்ற மேலே     பகிர்ந்த  மகரிஷி கவிதையை கணவர்கள்  பாடி நிறைவு செய்வார்கள்.

அன்று ஒருநாள் கணவன்    கவி பாடி   வாழ்த்துவதை  பெற மனைவி   விரும்புவார்கள் தானே!.

பெண்ணின் பெருமையை சொல்லும் மகரிஷி கவிதை.


மயிலாடுதுறையில் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவில் கலந்து கொண்ட நினைவுகள் மிகவும் இனிமையானது,  ஒரு வருடம் கலந்து கொண்டதை  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

மலரை கணவரும், கனியை மனைவி வைத்து இருப்பதும் இந்த படத்தில் தெரியும்.
என் கையில் மலர் கொடுத்தார்கள்


இருவரும் அடுத்தவர் நாடித்துடிப்பை உணரும்படி கைகளை கோர்த்து கொள்ள வேண்டும். 

 பெண்ணின் பெருமையை பேசுகிறார் 



தன் பெற்றோர்களுக்கு கனிகளை எடுத்து கொடுத்து மகிழ்ந்த குழந்தைகள்


ஆசிரிய பெருமக்கள்

கீழே ஆழியாரில் நடந்த விழா படங்கள் காணொளி


ஆழியார் அறிவுத் திருக்கோவிலில்  நடந்த விழா 



நேரம் கிடைக்கும் போது விருப்பம் இருந்தால் இந்த காணொளியை கேட்டுப் பாருங்கள். நிறைய பேர் பேசினார்கள். திரு . இறையன்பு அவர்களின் பேச்சு நன்றாக இருக்கிறது கேட்டுப்பாருங்கள்.

குடும்பம் எப்படி ஏற்பட்டது, குடும்ப வகைகள் பற்றி எல்லாம் சொன்னார்.  1. இரத்தவழி குடும்பம், 2. குழுமன குடும்பம் 3. நிரந்தரம் மற்ற குடும்பம் 4. தந்தைவழி குடும்பம், 5.துணை குடும்பம்.   இப்போது உள்ளது துணை குடும்ப அமைப்பை சேர்ந்தது என்றார்.


திருவள்ளுவர் குடும்பம் பற்றி சொன்னதை மிக அழகாய் சொன்னார்.  "வாழ்க்கை துணை"  என்ற சொல்லை திருவள்ளுவர் குறிப்பிட்டதை     கணவன் பொறுப்பு, மனைவி பொறுப்பு  பற்றி சொன்ன  குறள்களை விளக்கமாக சொன்னார்.

குறுத்தொகை பாடலை பாடி அழகான விளக்கம் சொன்னார். குறுத்தொகை பாடலை 40 ஆண்டுகளுக்கு முன் 
கவிஞர் மீரா  மாற்றி பாடியதை சொன்னதை மிக அழகாய் சொன்னார் . கவிதையை கேட்டு பாருங்கள். தெரிந்து இருக்கும் உங்களுக்கு இருந்தாலும் கேட்கலாம்.

ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சமூகம் நன்றாக இருக்கும். .  கணவன், மனைவி ஒரே திசையில் பார்ப்பதுதான் புரிதல்,  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட அடையாளம்   புன்னகை புரிதல்தான் .

இப்போது உள்ள குடும்பத்தை பற்றி சொன்னார். முன்பு கூட்டுக் குடும்பம், அப்புறம் தனிக் குடும்பம்(தனி குடித்தனம்), இப்போது  கணவன் தனி, மனைவி தனி குடும்பம். 


அவர் சொன்னது இந்த விழாவில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். திருமணம் ஆகாதவர்களிடம் இதை கொண்டு செல்லுங்கள். இன்று பெரும்பாலும் கலந்து கொண்டவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்தவர்களாக இருக்கிறார்கள். 
வாழ்வை தொடங்குபவர்களிடம் இந்த  நல்லது சென்று சேர வேண்டும் என்றார்.

30 நாட்கள் மட்டும் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்து விட்டால் 30 வருடம் மகிழ்ச்சியாக கடந்து விட முடியும். 
புதிதாக வாழ்வை தொடங்குபவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்றார்.  சண்டையும் வேண்டும் அதை அப்புறம் போட்டு கொள்ளலாம் என்றார்.

இறையன்பு  அவர்கள் பேச்சை இளைய சமுதாயம் கேட்க வேண்டும். என்று விரும்புகிறேன்.

மிக அருமையாக பேசினார் முன்னாள் கலெக்டர்  திரு . ஸ்வரன்சிங் அவர்கள்.  வரதட்சிணை வாங்கவில்லை, அதனால் சண்டை இல்லை என்றார்.  35 வருடமாக சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதாகவும் சொன்னார். கிராமங்களை தத்து எடுத்து குடிபழக்கத்தை  ஒழித்து குடிக்கும் கணவர்களிடமிருந்து காப்பாற்ற வேன்டும் என்றும் குடிக்கும் பெண்களை பற்றியும் நகைச்சுவையாக சொன்னார்.



அங்கு நடந்த விழா படம்


ஆழியாரில் அறிவு திருக்கோவிலில் நடந்த  மனைவி நல வேட்பு விழா காணொளி  இறையன்பு அவர்கள் பேசிய போது எடுத்த படம். மயிலாடுதுறை அன்பர் அனுப்பி இருந்தார்.

நீ பாதி  நான் பாதி என்று  ஒரு பதிவு ஆகஸ்ட் 30 தேதி 2010 ல் எழுதி இருக்கிறேன்,  நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.


குடும்பத்திலிருந்து அமைதி  தொடங்கி சமுதாய விரிவாக அமைய வேண்டும்.  

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
_----------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

  1. இப்படியொரு வித்தியாசமான விழா நடப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பசி'பரமசிவம் சார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அருமை..
    அருமை..

    சிறப்பான பதிவு..

    ///குடும்பத்தில் இருந்து அமைதி தொடங்கி சமுதாய விரிவாக அமைய வேண்டும். ///

    சிறப்பு..

    மகரிஷி அவர்களுக்கு வணக்கங்கள்..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      அருமை..
      அருமை..

      சிறப்பான பதிவு..//

      நன்றி.

      ///குடும்பத்தில் இருந்து அமைதி தொடங்கி சமுதாய விரிவாக அமைய வேண்டும். ///

      சிறப்பு..

      மகரிஷி அவர்களுக்கு வணக்கங்கள்..

      வாழ்க வையகம்..//

      உங்கள் கருத்துக்கும் குரு வணக்கத்திற்கும் நன்றி.

      நீக்கு
  3. அதிகம் விளம்பரம் இல்லாமல் மக்கள் நலப் பணியாற்றுபவர் தவத்திரு வேதாத்ரி சுவாமிகள். அவர் உண்டாக்கிய மனைவி நல வேட்பு ஒரு புதுமை. நல்லதையே நினைப்பது சிறப்பல்லவா??

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கோடுத்த வரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //அதிகம் விளம்பரம் இல்லாமல் மக்கள் நலப் பணியாற்றுபவர் தவத்திரு வேதாத்ரி சுவாமிகள். அவர் உண்டாக்கிய மனைவி நல வேட்பு ஒரு புதுமை. நல்லதையே நினைப்பது சிறப்பல்லவா??//

      ஆமாம், எப்போதும் நல்லதையே நினைத்தால் அல்லது தானாக மறைந்து போகும். என்பார். கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் மதித்து எப்போதும் ஒருவர் நலத்துக்கு மற்றவர் வாழ வேண்டும் என்பார்.

      மனைவி அமைவதெல்லாம் இறைவன் கோடுத்த வரம்//

      அதையும் மகரிஷி சொல்கிறார் :-

      //அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க அது பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”
      ’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும்//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அருமையான நிகழ்வுகள்..//

      ஆமாம், மனதை விட்டு நீங்காத நிகழவுகள்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. மனமே தெய்வம்...
      உடம்பே கோவில்...//

      ஆமாம்,

      உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
      வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
      தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
      கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'//

      திருமூலரும் இதை தான் சொல்கிறார். மகரிஷியும் இவர் கருத்துகளைதான் சொல்கிறார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. மலரும் நினைவுகளோடு போஸ்ட் மிக அழகாக இருக்குது. மாமா இதில் மிக இளமையாக இருக்கிறார், நீங்கள் இப்போ இதிலிருப்பதைவிட மெலிஞ்சிட்டீங்க ஆனா இப்பவும் இளமையாகவே இருக்கிறீங்க... பின்னாட்களில் போட்ட படங்களை வைத்துக் கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //மலரும் நினைவுகளோடு போஸ்ட் மிக அழகாக இருக்குது//
      நன்றி அதிரா.

      .// மாமா இதில் மிக இளமையாக இருக்கிறார், நீங்கள் இப்போ இதிலிருப்பதைவிட மெலிஞ்சிட்டீங்க ஆனா இப்பவும் இளமையாகவே இருக்கிறீங்க. பின்னாட்களில் போட்ட படங்களை வைத்துக் கூறுகிறேன்.//


      இளமை காலத்தில் எடுத்த படங்கள் இளமையாக இருப்போம் தானே!
      ஆனால் இப்போது சரியான உடற்பயிற்சி செய்யாமல் குண்டாகி இருக்கிறேன் இந்த படத்தில் உள்ளதை விட.
      இப்போது உள்ள உடல் நிலைக்கு ஏற்ற உடல்பயிற்சிகள் மட்டும் செய்து வருகிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

      ..

      நீக்கு
  7. இதனை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  அருள் தந்தை கூறி  இருப்பதை நன்றாகப்படிக்க முடிந்தது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இதனை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அருள் தந்தை கூறி இருப்பதை நன்றாகப்படிக்க முடிந்தது. //

      படிக்க முடிந்தது, படித்தேன் என்பதை கேட்டவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      நீக்கு
  8. ஆம்.  ஓரிடத்தில் பிறந்த பெண்கள் வேறிடத்தில் பயிராகிறார்கள்.  ஓரிடம் வேறிடமாகப் போகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஓரிடத்தில் பிறந்த பெண்கள் வேறிடத்தில் பயிராகிறார்கள். ஓரிடம் வேறிடமாகப் போகிறது.//

      வேறிடமாக இருந்தாலும் தாய்விட்டில் புகுந்த வீட்டை என் வீடு என்கிறாள். புகுந்த வீட்டை தன் வீடாக ஏற்று கொள்ளும் பக்குவம் வந்து விடுகிறது.

      நீக்கு
  9. அந்தப் படத்தில் இருக்கும், பெற்றோருக்கு கனிகள் கொடுத்து மகிழ்ந்த அந்த சிறுவர்கள் இப்போது பெரியவர்கள் ஆகி இருப்பார்கள்.  கண்கள் வழி கண்டு மனதில் இருத்தி மகிழ்ந்த இந்நிகழ்வை அவர்கள் இப்போது பின்பற்றிக் கொண்டிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தப் படத்தில் இருக்கும், பெற்றோருக்கு கனிகள் கொடுத்து மகிழ்ந்த அந்த சிறுவர்கள் இப்போது பெரியவர்கள் ஆகி இருப்பார்கள்.//

      2008 என்று நினைக்கிறேன் ஆண்டு. இப்போது 20, 15, என்று இருக்கும் வயது. ஆனால் ஆண்டு தோறும் வந்து பார்ப்பார்கள் இல்லையா பேச்சுக்களை கேட்டு உள்வாங்கி இருப்பார்கள்.


      //கண்கள் வழி கண்டு மனதில் இருத்தி மகிழ்ந்த இந்நிகழ்வை அவர்கள் இப்போது பின்பற்றிக் கொண்டிருப்பார்கள்.//

      அவர்கள் வாழ்க்கையில் பின் பற்றி ஒற்றுமையாக மகிழ்ச்சியாக ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள்புரிவார்.

      நீக்கு
  10. படத்தில் உங்களையும் சாரையும் பார்த்தது மகிழ்ச்சி.  இறையன்பு அவர்களின் மற்றும் ஸ்வரண்சிங் (செய்தியில் ஈஸ்வரன்சிங் ஆக்கி விட்டார்கள் போல!) பேச்சுத்துளிகளும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படத்தில் உங்களையும் சாரையும் பார்த்தது மகிழ்ச்சி. இறையன்பு அவர்களின் மற்றும் ஸ்வரண்சிங் (செய்தியில் ஈஸ்வரன்சிங் ஆக்கி விட்டார்கள் போல!) பேச்சுத்துளிகளும் சுவாரஸ்யம்.//
      ஈஸ்வரன் சிங் ஆக்கி விட்டார்கள். அவர் பேசிய தமிழ் இனிமையாக இருந்தது.

      கேட்டுப்பாருங்கள் ஸ்ரீராம் நேரம் கிடைக்கும் போது. இறையன்பு அவர்கள். மடை திறந்த வேள்ளம் போல பேசினார் .

      சரக்கு இருக்கிறது இன்னும் ஆனால் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என்றார்.
      ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக அன்பாக , ஒருவரை ஒருவர் மதித்து வாழ ஏற்ற பேச்சு.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. அருமையான கான்சப்ட் மற்றும் விழா.

    உங்கள் நினைவலைகளில் நானும் ஊறிப்போனேன்.

    செத்த பிறகு சிலை எடுப்பதைவிட வாழும்போது அவர்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லி மகிழ்வது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //அருமையான கான்சப்ட் மற்றும் விழா.

      உங்கள் நினைவலைகளில் நானும் ஊறிப்போனேன்.//

      நன்றி.

      //செத்த பிறகு சிலை எடுப்பதைவிட வாழும்போது அவர்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லி மகிழ்வது நன்று.//

      ஆமாம், நெல்லை.
      இருக்கும் போது அவர்கள் செய்த நல்லவைகளை பாராட்டி, மகிழ்வித்து மகிழ்ந்து இருக்கலாம் உண்மை.


      நீக்கு
  12. உன்னை என் வாழ்நாள் முழுதும் போற்றிப் பாதுகாப்பேன் என்று சொன்னதற்குப் பதில். உன் வாழ்நாள் முழுதும் என்று சொல்லியிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உன்னை என் வாழ்நாள் முழுதும் போற்றிப் பாதுகாப்பேன் என்று சொன்னதற்குப் பதில். உன் வாழ்நாள் முழுதும் என்று சொல்லியிருக்கலாமோ?//

      நீங்கள் சொல்வது போல சொன்னால் நல்லதுதான்.

      ஆனால் வாழும் காலத்தில் சிலர் பிரிந்து சென்று விடுகிறார்கள் சில கருத்து வேறுபாடுகளால். அல்லது மனைவியை மதிக்காமல் தினம் சண்டை சச்சரவுகளில் காலத்தை கழிக்கிறார்கள். வீட்டுக்கு பணம் கொடுக்காமல் இருக்கிறார்கள். பொறுப்பை தட்டி கழிப்பவர்களும் உண்டுதானே!

      அதனால் என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன் என்கிறார். இந்த உறுதி மொழி கொடுத்தவர்கள் அவர்கள் இறந்தாலும் மனைவியின் வாழ்நாள் வரை காப்பார் என்று நினைக்கிறேன். (தெய்வமாக உடன் வருவார்கள் என்று நம்புகிறேன்)

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  13. வணக்கம் சகோ
    இப்படியொரு விழாக்கள் அவசியம் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு அவசியம் வேண்டும். இதன் மூலம் விவாகரத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.

    //வாழ்வை தொடங்குபவர்களிடம் இந்த நல்லது சென்று சேர வேண்டும்//

    ஆம் புதிதாக திருமணமானவர்கள் கலந்து கொள்ளும்.

    காணொளி பிறகு காண்கிறேன் மூன்று மணி நேரம் காணொளி பதிவிறக்கம் ஆகிறதே எப்படி ?

    அந்த கடித புகைப்படங்களை பிறகு கணினியில் காணவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      இப்படியொரு விழாக்கள் அவசியம் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு அவசியம் வேண்டும். இதன் மூலம் விவாகரத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.//

      நீங்கள் சொல்வது உண்மை.

      //ஆம் புதிதாக திருமணமானவர்கள் கலந்து கொள்ளும்.//

      ஆமாம் , புதிதாக திருமணமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

      //காணொளி பிறகு காண்கிறேன் மூன்று மணி நேரம் காணொளி பதிவிறக்கம் ஆகிறதே எப்படி ?//
      ஆழியாரிலிருந்து வந்த காணொளி யூ-டியூப் காணொளி.

      //அந்த கடித புகைப்படங்களை பிறகு கணினியில் காணவேண்டும்.//

      நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  14. அக்கா, வேதாத்ரி மகரிஷிகள், அவரது மனவளக்கலை பற்றி முன்பே அறிந்து அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட போது அதன்பின் இது பற்றிக் கேட்டதுண்டு ஆனால் நிகழ்வு இபப்டி என்பதை உங்கள் பதிவு மூலம் அறிகிறேன்.

    மிக மிக மிக அருமையான பதிவு. அதானே எல்லாத்துக்கும் நாள் இருக்கறப்ப மனைவிக்கு என்று நாள். நீங்கள் சொல்லியிருப்பது போல இப்போதைய தலைமுறை இதைக் காண வேண்டும்.

    எனக்கும் இந்த மன வளக் கலை ரொம்பப் பிடித்த விஷயமாயிற்றே அப்படி அறிந்து கொண்ட விஷயம் முன்பு,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      //அக்கா, வேதாத்ரி மகரிஷிகள், அவரது மனவளக்கலை பற்றி முன்பே அறிந்து அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட போது அதன்பின் இது பற்றிக் கேட்டதுண்டு ஆனால் நிகழ்வு இபப்டி என்பதை உங்கள் பதிவு மூலம் அறிகிறேன்//

      கீதா, முன்பே இரண்டு பதிவுகள் இதை பற்றி போட்டு இருக்கிறேன்.அப்போது நீங்கள் என் தளம் வந்தது இல்லை. 2010 ம் ஆண்டு.

      https://mathysblog.blogspot.com/2010/02/blog-post_05.html ,
      "வாழ்க்கை துணைநலம்" என்று போட்டு இருக்கிறேன்.
      அப்புறம் "நீ பாதி நான் பாதி " என்று பதிவுகள் போட்டு இருக்கிறேன்.

      நீ பாதி நான் பாதிக்கு லிங்க் கொடுத்து இருக்கிறேன்.

      //அதானே எல்லாத்துக்கும் நாள் இருக்கறப்ப மனைவிக்கு என்று நாள். நீங்கள் சொல்லியிருப்பது போல இப்போதைய தலைமுறை இதைக் காண வேண்டும்.//

      ஆமாம், கீதா அதுதான் என்விருப்பமும், எல்லோர் விருப்பமும்.

      //எனக்கும் இந்த மன வளக் கலை ரொம்பப் பிடித்த விஷயமாயிற்றே அப்படி அறிந்து கொண்ட விஷயம் முன்பு,//

      எனக்கு முன்பு மயிலாடுதுறையில் வீட்டுக்கு அருகில் இருந்தது, போய் வர எளிதாக இருந்தது. இப்போது இங்கு எங்கு இருக்கிறது என்று அறிந்து கொண்டு என்னை மீண்டும் புதுபிக்க போக வேண்டும்.



      நீக்கு
  15. ஆமாம் அக்கா நீங்க மனவளக் கலை பயின்று சொல்லிக் கொடுது பணி புரிந்தது பற்றி முன்பு நீங்கள் சொல்லி இருந்தது நினைவில் இருக்கிறது. அருமையான விஷயம் கோமதிக்கா. இது எல்லார் குடும்பங்களுக்கும் மிக மிக அவசியம். என்ன கலைகள் அறிந்திருந்தாலும் மனவளம் இல்லை என்றால் வாழ்க்கை தொலைந்தது,

    காணொலி கேட்கிறேன் கோமதிக்கா. மூன்றாவது காது அணியும் இடது காதில் வலி எனவே இன்று மருத்துவரிடம் போகிறேன். காது மெஷின் போட்டுக் கொள்ள அனுமதிக்க மாட்டாங்க எனவே கொஞ்சம் குறைந்து அதை அணியும் போது கேட்கிறேன். காணொளியை என் வாட்சப் நம்பருக்கு அனுப்பிக் குறித்து வைத்துக் கொண்டு விட்டேன். இறையன்பு பேசுவதைச் சொல்லவா வேண்டும் அருமையாக இருக்கும். கேட்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது எல்லார் குடும்பங்களுக்கும் மிக மிக அவசியம். என்ன கலைகள் அறிந்திருந்தாலும் மனவளம் இல்லை என்றால் வாழ்க்கை தொலைந்தது,//

      முன்பு நம் வீட்டு பெரியவர்கள் சொன்ன பாடம் தான். இருந்தாலும் சிறு வயது குழந்தைகள் முதல் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்திற்கு மனவளகலை படித்தால் நல்லது.

      காணொலி கேட்கிறேன் கோமதிக்கா. மூன்றாவது காது அணியும் இடது காதில் வலி எனவே இன்று மருத்துவரிடம் போகிறேன். காது மெஷின் போட்டுக் கொள்ள அனுமதிக்க மாட்டாங்க எனவே கொஞ்சம் குறைந்து அதை அணியும் போது கேட்கிறேன். //

      உடம்பை பார்த்து கொள்ளுங்கள். மருத்துவர் சொன்னபடி நடந்து கொள்ளுங்கள்.

      //காணொளியை என் வாட்சப் நம்பருக்கு அனுப்பிக் குறித்து வைத்துக் கொண்டு விட்டேன். இறையன்பு பேசுவதைச் சொல்லவா வேண்டும் அருமையாக இருக்கும். கேட்கிறேன்//

      ஆமாம், நல்ல விஷயங்கள் நிறைய சொன்னார். அவர் சொற்பொழிவுகள் எல்லாம் மிக அருமையாக இருக்கும் தான்.


      நீக்கு
  16. அருட் தந்தை எழுதியிருப்பது என்ன அருமை இல்லையா? அத்தனை வரிகளும் அருமை. உண்மைதானே! இந்த மனப்பான்மை எல்லாப் பெண்களுக்கும் வந்துவிட்டால் குடும்பப் பிரச்சனைகள் குறைந்துவிடும்.

    நீங்களும் மாமாவும் இருக்கும் படம் மனதை உங்களின் பழைய பதிவுகளை நினைக்க வைத்தது. மாமா பற்றி நீங்க சொன்னவை மற்றும் அவரது பேச்சுகள், அவரும் மகனும் நண்பர்கள் போல இருந்த நிகழ்வுகள், மாமா வரையும் படங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.

    பல குடும்பங்களுக்கு முன்னுதாரணமான குடும்பம் கோமதிக்கா. பிரார்த்தனைகளுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அருட் தந்தை எழுதியிருப்பது என்ன அருமை இல்லையா? அத்தனை வரிகளும் அருமை. உண்மைதானே! இந்த மனப்பான்மை எல்லாப் பெண்களுக்கும் வந்துவிட்டால் குடும்பப் பிரச்சனைகள் குறைந்துவிடும்.//

      அவர் சொன்னதை கடைபிடித்தால் வீட்டில் அமைதி தவழும்.

      //நீங்களும் மாமாவும் இருக்கும் படம் மனதை உங்களின் பழைய பதிவுகளை நினைக்க வைத்தது. மாமா பற்றி நீங்க சொன்னவை மற்றும் அவரது பேச்சுகள், அவரும் மகனும் நண்பர்கள் போல இருந்த நிகழ்வுகள், மாமா வரையும் படங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.//

      நான் இந்த படத்தை தேடி பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். நிறைய படங்கள் அழிந்து விட்டதே என்று மனது வருத்தப்பட்டது. மகனிடம் இருந்தது மகிழ்ச்சி.

      இரண்டு நாட்கள் முன் அவர்களுக்கு பிறந்த நாள் அவர்கள் தம்பி அவர்கள் பேசிய காணொளியை குடும்ப வாட்சப் குழுவில்
      போட்டார்கள். அவர்கள் அண்ணன் படங்கள் போட்டார்கள். நினைத்து கொண்டே இருக்கிறொம்.
      உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  17. மனைவிக்கு மல்ர், கணவருக்குக் கனி கொடுத்து உறுதி மொழி எடுக்கும் அந்த வரிகள் மிகவும் சிறப்பு. கோமதிக்கா.

    //ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் குடும்ப உறுப்பினர் யாராக இருந்தாலும் தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்கிடையேயுள்ள உயிர்த்தொடர் மூலம் அவ்வாழ்த்துப்பரவி குடும்பத்தில் அமைதி நிலவி மகிழ்வையும், நிறைவையும் கொடுக்கும் என்பார் மகரிஷி.//

    ஆமாம் அக்கா. இதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இதைப் பற்றி மகரிஷியின் வரிகளை வாசித்திருக்கிறேன். என் நினைவு சரி என்றால் மங்கையர் மலர் என்று நினைவு,

    நலல்தை எவ்வளவுக்கு எவ்வளவு முன்னிருத்திப் பேசுகிறோமோ அதைவிடப் பன்மடங்கு எதிர்மறை கெட்டவை அமிழ்ந்துவிடும் என்பதிலும் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

    //பெண்ணிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அது கடமை.
    என்று சொல்லி அதற்கு ஒரு கவிதை சொல்லி இருக்கிறார்.//

    அருமை அருமை கவிதைகள் அனைத்தையும். ரசித்து வாசித்தேன்.

    தன் பெற்றோருக்குக் கனிகளைக் கொடுத்து மகிழ்ந்த குழந்தைகளைக் கண்ட போது மனம் மகிழ்ந்தது கூடவே அக்குழந்தைகளுக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்து இன்று அவர்கள் நல்ல குடும்பமாக வாழ்வார்கள் என்றும் தோன்றியது.

    படங்கள் எல்லாமே ரொம்பச்சிறப்பாக இருக்கின்றன அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலல்தை எவ்வளவுக்கு எவ்வளவு முன்னிருத்திப் பேசுகிறோமோ அதைவிடப் பன்மடங்கு எதிர்மறை கெட்டவை அமிழ்ந்துவிடும் என்பதிலும் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.//

      நம்பிக்கை தான் நம்மை வாழ வைத்து கொண்டு இருக்கிறது, உங்கள் நம்பிக்கை வாழ்க!

      நம் வீட்டு பெரியவர்கள் நல்லதே பேசு என்று சொல்வார்கள் அல்லவா அது போலவே அருள் தந்தையும் சொல்கிறார்.

      //அருமை அருமை கவிதைகள் அனைத்தையும். ரசித்து வாசித்தேன்.//

      நன்றி கீதா

      //தன் பெற்றோருக்குக் கனிகளைக் கொடுத்து மகிழ்ந்த குழந்தைகளைக் கண்ட போது மனம் மகிழ்ந்தது கூடவே அக்குழந்தைகளுக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்து இன்று அவர்கள் நல்ல குடும்பமாக வாழ்வார்கள் என்றும் தோன்றியது.//

      அது தான் வேண்டும் கீதா. அங்கு மன்றத்தில் சேர்ந்தவர்கள் பிள்ளைகள் எல்லாம், கடவுள் பக்தி, உறவினர்களை மதித்தல்,
      தொண்டு செய்யும் மனபான்மை எல்லாம் நிறைந்தவர்கள்.
      அவர்கள் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி கீதா.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மயிலாடுதுறையில் தாங்கள் வருடந்தோறும் கலந்து கொண்ட மனைவி நல வேட்பு விழா நிகழ்வுகளும், ஆழியார் வாழ்க வளமுடன் மன்றத்தில் நடை பெற்ற விழாக்களுமாய் பதிவு மிக நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது.

    தாங்களும், தங்கள் கணவருமாய் எடுத்த புகைப்படங்கள் நன்றாக உள்ளது. எல்லா படங்களையும் ரசித்துப் பார்த்து பதிவையும் படித்து ரசித்தேன்.

    அருட் தந்தை கூறியிருக்கும் வாசகங்களை படித்தேன். பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் இவ்விழா பற்றிய விரிவுரைகளை மிக ரசித்தேன். ஆழமான அன்பு ஒன்றுதானே ஒரு அழகான குடும்பத்திற்கு ஆணி வேர். தன்னலம் கருதாது தன்னை சேர்ந்தவர்களுக்கு அதை முழுதாக தரும் பெண்ணைப் போற்றி நடைபெறும் இவ்விழா பெண்ணாகப் பிறந்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது.

    அழகான புகைப்படங்களை பகிர்ந்து, நல்ல குடும்பங்களுக்கு சிறப்பான பெருமை தரும் வண்ணம் நிறைய விஷயங்களை விபரமாக கூறி, நல்லதொரு பதிவை தந்த உங்களுக்கும், இந்தப்பதிவு வெளிவர காரணமாக இருந்த தங்கள் மகனுக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுகள். அன்பான நன்றிகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    இந்தப் பதிவை ரசித்து படித்த அனைவருக்கும் வாழ்க வளமுடன் என கூறிக் கொள்கிறேன். காணொளி பிறகு அவசியம் கேட்கிறேன் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. மயிலாடுதுறையில் தாங்கள் வருடந்தோறும் கலந்து கொண்ட மனைவி நல வேட்பு விழா நிகழ்வுகளும், ஆழியார் வாழ்க வளமுடன் மன்றத்தில் நடை பெற்ற விழாக்களுமாய் பதிவு மிக நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது.//

      நன்றி கமலா.

      //தாங்களும், தங்கள் கணவருமாய் எடுத்த புகைப்படங்கள் நன்றாக உள்ளது. எல்லா படங்களையும் ரசித்துப் பார்த்து பதிவையும் படித்து ரசித்தேன்.//

      நன்றி.

      //அருட் தந்தை கூறியிருக்கும் வாசகங்களை படித்தேன். பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் இவ்விழா பற்றிய விரிவுரைகளை மிக ரசித்தேன். ஆழமான அன்பு ஒன்றுதானே ஒரு அழகான குடும்பத்திற்கு ஆணி வேர். தன்னலம் கருதாது தன்னை சேர்ந்தவர்களுக்கு அதை முழுதாக தரும் பெண்ணைப் போற்றி நடைபெறும் இவ்விழா பெண்ணாகப் பிறந்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது.//

      ஆமாம், நீங்கள் சொல்வது போல பெண்ணாகப் பிறந்த அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தான்.


      //இந்தப்பதிவு வெளிவர காரணமாக இருந்த தங்கள் மகனுக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுகள். அன்பான நன்றிகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      மகனுக்கு உங்கள் அன்பான வாழ்த்துக்கலூக்கும் , பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

      //இந்தப் பதிவை ரசித்து படித்த அனைவருக்கும் வாழ்க வளமுடன் என கூறிக் கொள்கிறேன்.//

      எல்லோரையும் வாழ்த்தியதது மகிழ்ச்சி. என் நன்றிகளும்.

      //காணொளி பிறகு அவசியம் கேட்கிறேன் சகோதரி.//

      நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.

      விரிவான அன்பான கருத்துக்கு நன்றிகள் பல.








      நீக்கு
  19. அருமையான நிகழ்வு மா ...இந்த வருட நிகழ்வு படங்களை ஏற்கனவே கண்டு இருந்தேன் ...

    இன்று தங்களின் படங்களையும், நிகழ்வின் சிறப்பையும் வாசித்தது மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //அருமையான நிகழ்வு மா ...இந்த வருட நிகழ்வு படங்களை ஏற்கனவே கண்டு இருந்தேன் ...//

      நீங்கள் இந்த வருட நிகழ்வு படங்களை ஏற்கனவே பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.

      //இன்று தங்களின் படங்களையும், நிகழ்வின் சிறப்பையும் வாசித்தது மிக மகிழ்ச்சி//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அனு.

      நீக்கு
  20. மனைவி நல வேட்பு - மிக அருமையானதொரு கோட்பாடு. அதை விழாவாக முன்னெடுத்துச் செய்திருப்பது சிறப்பு. படங்களும் குடும்ப ஒற்றுமையைப் போற்றும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      மனைவி நல வேட்பு - மிக அருமையானதொரு கோட்பாடு. அதை விழாவாக முன்னெடுத்துச் செய்திருப்பது சிறப்பு. //

      ஆமாம், சிறப்பான விஷயம்.



      //படங்களும் குடும்ப ஒற்றுமையைப் போற்றும் பகிர்வும் அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  21. மிக இளமையாக இருக்கீங்க இருவரும். இப்படியெல்லாம் ஒரு விழா இருக்குன்னே இப்போத் தான் தெரியும். பார்க்கவும்/படிக்கவும் பரவசம். இத்தனை ஆண்கள் தங்கள் மனைவியருடன் பங்கேற்றதும் ஆச்சரியமே! நீங்கள் ஆசிரியப் பணீ புரிந்ததும் இன்றே அறீந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //மிக இளமையாக இருக்கீங்க இருவரும். இப்படியெல்லாம் ஒரு விழா இருக்குன்னே இப்போத் தான் தெரியும். பார்க்கவும்/படிக்கவும் பரவசம். இத்தனை ஆண்கள் தங்கள் மனைவியருடன் பங்கேற்றதும் ஆச்சரியமே//

      இரண்டு மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன் 2010ல்.
      தொலைக்காட்சி செய்திகளில், செய்தி தாளில் எல்லாம் வருட வருடம் இடம்பெறும். இந்த விழா .

      கணவனும் மனைவியும் உலக சேவ சங்ககத்தில் இருக்கிறார்கள். மனைவி மட்டும், கணவன் மட்டும் பணி செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளும் குடும்ப விழா.

      //நீங்கள் ஆசிரியப் பணீ புரிந்ததும் இன்றே அறீந்தேன்.//

      வலைச்சரத்தில் ஆசிரிய பணி ஏற்கும் போது என்னைப் பற்றி குறிபில் சொல்லி இருக்கிறேன். உடற்பயிற்சி, தியானம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்ததை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.





      !

      நீக்கு