திங்கள், 17 அக்டோபர், 2022

கொலு பார்க்க வாங்க!

மயில்த்தோகை விரிந்தார் போல கொலு படிகள்

விழாக்கள் தரும் மகிழ்ச்சி  என்ற முந்தைய பதிவில் 
"நண்பர்கள் வீட்டுக் கொலு அடுத்த பதிவில் பார்க்கலாம்" என்று சொன்னேன். மகன் அனுப்பிய நண்பர்கள் வீட்டுக் கொலு படங்கள் இந்த பதிவில்.
1


முருகனின் ஆறு படை  வீடுகள்
குத்து விளக்கை அம்மன், சுவாமியாக அலங்காரம்
அவர்கள் வீடுதான்
கண்ணன் கதை பொம்மைகள் 

அவர்கள் வீட்டில் பேரன் பாடுகிறான்
அவர்கள் வீட்டு பார்க்.

2
இந்த  வீட்டில் கொலுவும் ஆண்டாள் கதையும் உண்டு
 தம்பி ஆண்டாளின் கதையை தமிழில் சொல்கிறார்
அக்கா ஆண்டாளின் கதையை ஆங்கிலத்தில் சொல்கிறார்

                                                                    3

இவர்களுக்கு ஊர் மாயவரம் கொலு படியின் மேல் பகுதியில் மயூரநாதர் படம் இருக்கிறது

இவர்கள் வீடு வாங்கிய போது மகன் மயூரநாதர் படம் வரைந்து பரிசு அளித்தான்
மயில் பூஜை செய்யும் பொம்மை அவர்கள் வீட்டில் தான்.

                                                                   4                      
இந்த வீட்டில் மீனாட்சி கல்யாணம் 
படியில் இருந்த மீனாட்சி கல்யாணம் செட்

மேல் படியில் இருந்த பொம்மைகள்
அவர்கள் வீட்டில் திருவண்ணாமலை கோவில் அமைப்பு பேரன் ரசித்துப் பார்க்கிறான் 



5

மேல் படியில் நால்வர் பொம்மை பெரிதாக இருக்கிறது.தஞ்சை கோயிலும் இருக்கிறது.

இந்த வீட்டு கொலுப்படியில் காரம்போர்ட் விளையாடும் பிள்ளையார்கள் இருக்கிறார்கள். எங்கு இருக்கிறார்கள்? என்று கண்டு பிடியிங்க பார்க்கலாம்.
                                                                       6
இந்த வீட்டு கொவில் செட்டியார் பழங்கள் விற்கிறார் பாருங்கள். 

அம்மன் அலங்காரமும் அவர்கள் வரைந்த ஓவியங்களும் இருக்கிறது. சுவரில் கலசங்களுடன் நடராஜர் மண்டபம்  மகன் செய்து கொடுத்தது . நடராஜர் படம் அவன் வரைந்தது.

7
எளிமையாக அழகாய் இருக்கிறது கொலு
மேல்படியில் இடம் பெற்ற பொம்மைகள் .  வீட்டில் பூத்த செம்பருத்தி பூவை ஆண்டாள் கொண்டையில் சூடி இருக்கிறாள்

கொலு எப்படி இருந்தது? வெளிநாட்டில் இருந்தாலும் நவராத்திரியை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதுமையாக ஏதாவது செய்கிறார்கள். 
அதை பார்க்க வரும் நண்பர்களோடும் , உறவினர்களோடும் 10 நாட்களும் உரையாடி மகிழ  சந்தர்ப்பம் கிடைக்கிறது. வேலை வேலை என்று ஓடி கொண்டு இருப்பவர்கள் வேலை பளுவை மறந்து மகிழ்ச்சியாக இருக்க உதவும் நவராத்திரி வாழ்க!
குடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைத்து இந்த பண்டிகையை சிறப்பாக செய்கிறார்கள். அதனால் வீட்டில் அனைவருக்கும் 
உடலுக்கும் , மனதுக்கும்  உற்சாகம் தந்து புது தெம்பை தருகிறது.  

இறைபக்தியும், கலையுணர்வும்,  கொடுத்து மகிழ்தலும் தரும் நவராத்திரி பண்டிகை வாழ்க!.


எல்லோர் வீட்டு கொலுவும் பார்த்து களைத்து விட்டீர்களா?   டீக்கடையில் சூடாக டீ குடித்து போங்க! வர்க்கி ,முறுக்கு, பன் இருக்கிறது ,அதையும் கொஞ்சம் சுவைத்து பாருங்க.  பெஞ்ச் இருக்கு அமர்ந்து  டிரான்சிஸ்டரில் ஒலிக்கும் பழைய சினிமா நவராத்திரி  பாடலை கேட்டு  போங்க சிறிது நேரம்.

 

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------------------------

 

28 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. ஒவ்வொரு வீட்டு கொலுவின் அமைப்பும், அலங்காரங்களும் கண்களையும், மனதையும் ஈர்க்கிறது.

    மயில் வடிவ படிக்கட்டுகளுடன் அமைத்த கொலு, வரிசையாக தெய்வ படங்களுடன் சற்றே அகலமான முறையில் நிறைய பொம்மைகள் வைத்த கொலு, ஆண்டாள் கதைகளை அவர்கள் வீட்டு பிள்ளைகளைக் கொண்டு கூறச் செய்து பக்தியுடன் வழிபடும் கொலு, நன்கு உயரமாக நடுவில் மயூரநாதரின் படத்துடன் உள்ள கொலு, என அத்தனையும் இன்று கண்களுக்கு நல்ல விருந்து.

    ஜோடியான குத்து விளக்கில், ஸ்வாமி, அம்மன் என செய்திருப்பதும் சிறப்பு. தங்கள் பேரன் எல்லோர் வீட்டு கொலுவிலும் அழகாய் அமர்ந்து பாடுகிறாரே ..! அவருக்கு என மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள்.

    இந்த கொலு வைத்தவர்களுக்கெல்லாம் எங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தங்கள் மகன் மூலமாக அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். நம் கலாச்சாரத்தை வெளிநாட்டிலும் பரப்பும் அவர்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

    அனைத்தும் மிக நன்றாக உள்ளது. இறுதியில் அத்தனை கொலுக்களை சுற்றிப்பார்த்த களைப்பு போக (ஆனால் சுத்தமாக களைப்பே வரவில்லை என்பது மட்டும் உறுதி.மற்றபடி தங்களது அன்பிற்காக உணவை எடுத்துக் கொண்டேன். ) அழகான பாடலையும் கேட்டவாறு டீயும், சிற்றுண்டியும் எடுத்துக் கொண்டேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. ஒவ்வொரு வீட்டு கொலுவின் அமைப்பும், அலங்காரங்களும் கண்களையும், மனதையும் ஈர்க்கிறது.//

      நன்றி.

      //மயில் வடிவ படிக்கட்டுகளுடன் அமைத்த கொலு, வரிசையாக தெய்வ படங்களுடன் சற்றே அகலமான முறையில் நிறைய பொம்மைகள் வைத்த கொலு, ஆண்டாள் கதைகளை அவர்கள் வீட்டு பிள்ளைகளைக் கொண்டு கூறச் செய்து பக்தியுடன் வழிபடும் கொலு, நன்கு உயரமாக நடுவில் மயூரநாதரின் படத்துடன் உள்ள கொலு, என அத்தனையும் இன்று கண்களுக்கு நல்ல விருந்து.//

      முன்பு இவர்கள் வீட்டு கொலு படங்கள் போட்டு இருக்கிறேன்.

      ஆண்டாள் கதை சொல்லும் காணொளியும் அனுப்பி இருக்கிறான் பையன். அக்கா, தம்பி இருவரும் நன்றாக சொல்கிறார்கள்.


      //ஜோடியான குத்து விளக்கில், ஸ்வாமி, அம்மன் என செய்திருப்பதும் சிறப்பு. தங்கள் பேரன் எல்லோர் வீட்டு கொலுவிலும் அழகாய் அமர்ந்து பாடுகிறாரே ..! அவருக்கு என மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள்.//

      விளக்கு அலங்காரம் சிறப்புதான். பேரனிடம் சொல்கிறேன் உங்கள் வாழ்த்தை. வாழ்த்துக்களுக்கு நன்றி.

      //இந்த கொலு வைத்தவர்களுக்கெல்லாம் எங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தங்கள் மகன் மூலமாக அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். நம் கலாச்சாரத்தை வெளிநாட்டிலும் பரப்பும் அவர்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.//

      சொல்கிறேன் அவர்கள் எல்லோருக்கும் உங்கள் வாழ்த்துக்களை , பாராட்டுக்களை .

      //(ஆனால் சுத்தமாக களைப்பே வரவில்லை என்பது மட்டும் உறுதி.மற்றபடி தங்களது அன்பிற்காக உணவை எடுத்துக் கொண்டேன். )//
      மனதுக்கும், உடலுக்கும் உற்சாகம் தரும் கொலு இல்லையா?
      எப்படி களைப்பு ஏற்படும்?
      பாடலை கேட்டு சிற்றுண்டி எடுத்து கொண்டது மகிழ்ச்சி.

      அனைத்தையும் ரசித்து விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி.







      நீக்கு
  2. இன்றைய நவராத்திரி அலங்காரம் சூப்பர்.

    திருவண்ணாமலையை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள். அருகில் அண்ணாமலை, கார்த்திகை தீபம் செட்டப்போடு மிக மிக அருமை.

    நடராஜர் படமும், மயூரநாதர் படமும், உங்கள் மகன் வரைந்தது மிக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //இன்றைய நவராத்திரி அலங்காரம் சூப்பர்.//

      ஆமாம், எல்லோரும் மிக அழகாய் அலங்காரம் செய்து இருக்கிறார்கள்.

      //திருவண்ணாமலையை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள். அருகில் அண்ணாமலை, கார்த்திகை தீபம் செட்டப்போடு மிக மிக அருமை.//

      ஆமாம், அதுதான் பேரன் ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறான்.

      //நடராஜர் படமும், மயூரநாதர் படமும், உங்கள் மகன் வரைந்தது மிக அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      நீக்கு
  3. நண்பர்கள் வீட்டுக்குச் செல்லவும், தங்கள் பசங்களை மற்றவர்களோடு நட்புடன் பழகவும், நம் கலாச்சாரத்தைப் பகிர்ந்து, இறுதியில் உணவும் உண்டு வருவது மனதுக்கு மிகவும் உற்சாகம் தரக்கூடியது. நவராத்திரி, அந்த வகையில் மிகவும் சிறப்பான விழா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோர் வீட்டு குழந்தைகளும் நன்றாக நட்புடன் பழகுவார்கள்.
      மகன் வீட்டுக்கு வந்தால் நன்றாக விளையாடுவார்கள். பிரிந்து செல்ல மனம் இல்லாமல் வீட்டுக்கு திரும்புவார்கள்.

      எல்லோரும் கொலு சமயத்தில் உணவு தயார் செய்து விடுகிறார்கள்.
      உணவு உண்டு , பழைய கதைகளை பேசி மகிழ நல்ல வாய்ப்பு.

      நவராத்திரி, அந்த வகையில் மிகவும் சிறப்பான விழா//

      ஆமாம், சிறப்பான விழாதான்.

      நீக்கு
  4. குத்துவிளக்கில் அம்மனையும் (சென்ற பதிவுகளிலும்), சுவாமியையும் (இந்தப் பதிவில்தான் இதனை முதன் முதலில் பார்க்கிறேன்) அலங்காரம் செய்துள்ளது மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குத்துவிளக்கில் அம்மனையும் (சென்ற பதிவுகளிலும்), சுவாமியையும் (இந்தப் பதிவில்தான் இதனை முதன் முதலில் பார்க்கிறேன்) அலங்காரம் செய்துள்ளது மிக அருமை.//

      எங்கள் கொழுத்தனார் மகன் கல்யாண வீட்டில் இப்படி விளக்கிறகு அம்மன், சுவாமியாக அலங்காரம் செய்து இருந்தார்கள். மணமேடை பக்கம். நான் படம் எடுத்து இருக்கிறேன். ஒரு பதிவில் போடுகிறேன் அந்த படத்தை.

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. அற்புதமான படங்களுடன் கூடிய பதிவு.. கடந்த சில ஆண்டுகளில் இப்படியான காட்சிகளைப் பார்த்ததில்லை..

    தஞ்சைக்குத் திரும்பிய நேரத்தில் எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது மிகவும் வருத்தம்.. இந்த அளவுக்கு உடல் நலம் தேறியிருப்பது புண்ணியம்..

    இறையருள் கூடி வரும் நாளில் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்..

    இத்தகைய மங்களகரமான கொண்டாட்டங்களால் சமயமும் கலாச்சாரமும் வாழும்.. வாழ்ந்து கொண்டே இருக்கும்..

    மகிழ்ச்சி.. நன்றி..
    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //அற்புதமான படங்களுடன் கூடிய பதிவு..//

      நன்றி.

      கடந்த சில ஆண்டுகளில் இப்படியான காட்சிகளைப் பார்த்ததில்லை..//

      கொரோனா தொற்று சமயத்தில் இரண்டு வருடமாக யாரும் யாரையும் வீட்டுக்கு அழைக்க வில்லை கொலுபார்க்க.
      இந்த ஆண்டுதான் அழைக்கிறார்கள்.

      //தஞ்சைக்குத் திரும்பிய நேரத்தில் எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது மிகவும் வருத்தம்.. இந்த அளவுக்கு உடல் நலம் தேறியிருப்பது புண்ணியம்..//

      உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கோயில் நவராத்திரி விழாவை பார்க்க முடியவில்லையா?
      இறையருளால் உடல் நிலை தேறி இருப்பது மகிழ்ச்சி.

      //இறையருள் கூடி வரும் நாளில் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்..//

      ஆமாம் இறையருள் கூட்டி வைக்கும். அப்போது பார்க்கலாம்.


      புதுயுகம், சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு வீட்டு கொலு படங்கள் காட்டினார்கள். முன்பு போல இப்போது எளிமை இல்லை நவராத்திரி விழா. எல்லோரும் பிரமாண்டமாக வீடு முழுவதும் கொலு வைத்து இருக்கிறார்கள். ஒரு மாதம் எடுத்து கொண்டு இருப்பார்கள் அந்த காட்சிகளை நம் கண் முன்னால் கொண்டு வர.

      //இத்தகைய மங்களகரமான கொண்டாட்டங்களால் சமயமும் கலாச்சாரமும் வாழும்.. வாழ்ந்து கொண்டே இருக்கும்..//

      உல்லன் நூலில் பொம்மைகள் பின்னி கொலு, துணி கம்பிகள் கொண்டு பொம்மைகள் செய்து அதன் மூலம் புராணகதைகளை சொல்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.






      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. அம்மாடி...   மூன்று செட் படிவரிசை.   ஏழேழு படிகள்..  அதைத்தவிர பார்க், ஓவியங்கள் என்று இன்னும் இன்னும்...   பிரம்மாண்டம் அந்தக் கொலு.  வெளிநாட்டில் இருபப்வர்கள் சொந்த நாட்டை / ஊரை மிஸ் செய்வதால் அந்த நினைவில் அழகாகக் கொண்டாடுகிறார்கள்.  படங்கள் யாவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பிரம்மாண்ட கொலுதான்.ஊரிலிருந்து பெற்றோர்களையும் அந்த சமயத்தில் அழைத்து வந்து இருக்கிறார்கள் சிலர்.

      //வெளிநாட்டில் இருபப்வர்கள் சொந்த நாட்டை / ஊரை மிஸ் செய்வதால் அந்த நினைவில் அழகாகக் கொண்டாடுகிறார்கள். படங்கள் யாவும் அருமை.//

      ஆமாம். நட்புகளே உறவு. சிலருக்கு உறவுகளும் அங்கு இருக்கிறார்கள்.எங்கள் உறவுகளும், மருமகளுகளின் உறவுகள் சிலரும் அங்கு இருக்கிறார்கள், அவர்களை சந்திக்க உரையாட நல்ல வாய்ப்பு கொலு சமயத்தில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. குத்துவிளக்கு அலங்காரம், மயில் பூஜை செய்யும் பொம்மைகள், உங்கள் மகன் வரைந்த நடராஜர் என அனைத்தும் பார்க்கப் பார்க்கப் பரவசம். தமிழிலும்/ஆங்கிலத்திலும் ஆண்டாள் கதை சொல்லுவதையும் பேரன் பாடியதையும் வீடியோவாகப் போட்டிருக்கலாமோ? மிக அமர்க்களமாகக் கொலு வைத்துக் கொண்டாடி இருக்கின்றனர். எங்கே போனாலும் நம் கலாசாரம், பழக்கங்களை மறக்காமல் கடைப்பிடிப்பதும் மனதுக்கு சந்தோஷமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //குத்துவிளக்கு அலங்காரம், மயில் பூஜை செய்யும் பொம்மைகள், உங்கள் மகன் வரைந்த நடராஜர் என அனைத்தும் பார்க்கப் பார்க்கப் பரவசம்.//

      நன்றி.

      //தமிழிலும்/ஆங்கிலத்திலும் ஆண்டாள் கதை சொல்லுவதையும் பேரன் பாடியதையும் வீடியோவாகப் போட்டிருக்கலாமோ?//

      வீடியோ இருக்கிறது போட்டு விடலாம். வீடியோவை பார்க்க ஆசைபட்டதால் அடுத்த பதிவில் போடுகிறேன்.

      //எங்கே போனாலும் நம் கலாசாரம், பழக்கங்களை மறக்காமல் கடைப்பிடிப்பதும் மனதுக்கு சந்தோஷமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது.//

      எங்கே போனாலும் அவர் அவர் குடும்ப வழக்கத்தை கடைபிடித்து பண்டிகைகளை கொண்டாடுவது மகிழ்ச்சி தரும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  10. கோமதிக்கா முதல் படமே மனதைக் கொள்ளை கொள்கிறது...மயில் தோகை விரித்தாடுவது போல கொலு செம அழகு!!!!

    பேரன் ரசித்துப் பார்ப்பது, பாடுவது எல்லாம் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் அதுவும் பாட்டியாகிய உங்களுக்கு இவை எல்லாம் எவ்வளவு சந்தோஷம் தரும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //முதல் படமே மனதைக் கொள்ளை கொள்கிறது...மயில் தோகை விரித்தாடுவது போல கொலு செம அழகு!!!!//
      இன்று மகனிடம் சொல்ல சொல்லி விட்டேன். எல்லோரும் உங்கள் கொலுவை மிக நன்றாக இருப்பதாக சொன்னார்கள் என்று.

      //பேரன் ரசித்துப் பார்ப்பது, பாடுவது எல்லாம் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் அதுவும் பாட்டியாகிய உங்களுக்கு இவை எல்லாம் எவ்வளவு சந்தோஷம் தரும்!!//

      ஆமாம் கீதா. மகிழ்ச்சிதான்.


      நீக்கு
  11. ஒவ்வொரு கொலுவும் ஒவ்வொரு வகையில் அழகு! கண்ணன் கதை பொம்மைகள் ஆண்டாள் கதை பொம்மைகள் ஆண்டாள் கதையை தம்பி தமிழிலும் அக்கா ஆங்கிலத்திலும் சொல்வது என்பது அருமை. அங்க வளரும் குழந்தைகள் கூட இப்படி அழகாக உடை அணிந்து இப்படி எல்லாம் வளர்வது சிறப்பு பெற்றோருக்கு வாழ்த்துகள்.

    சிலர் இருக்கிறார்கள் அங்கு சென்றால் அங்கு போன்று வாழ வேண்டும் என்று. அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒவ்வொரு கொலுவும் ஒவ்வொரு வகையில் அழகு! கண்ணன் கதை பொம்மைகள் ஆண்டாள் கதை பொம்மைகள் ஆண்டாள் கதையை தம்பி தமிழிலும் அக்கா ஆங்கிலத்திலும் சொல்வது என்பது அருமை. அங்க வளரும் குழந்தைகள் கூட இப்படி அழகாக உடை அணிந்து இப்படி எல்லாம் வளர்வது சிறப்பு பெற்றோருக்கு வாழ்த்துகள்.//

      ஆமாம், ஒவ்வொரு கொலுவும் ஒவ்வொரு அழகு.
      அக்கா இந்துஸ்தானி இசை , கர்நாடக இசை கற்று கொண்டு இருக்கிறார். தம்பியும் பாடுவார், அவர்கள் அம்மா பாடுவார்கள்.
      குழந்தைகள் எல்லாம் நாள், கிழமைகளில் , பண்டிகைகளில் நம் உடை அணிவார்கள்.

      பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. பார்க் சூப்பராக இருக்கு.

    உங்கள் மகன் வரைந்த ப்டம் தானே அது மயூரநாதர்!! அருமை அருமை...

    ஆண்டாள் கதை - அந்தக் கொலு நல்ல பெரிதாக வைத்த்ரிஉக்கிறார்கள் அழகு.

    மயில் சிவ பூஜை செய்யும் பொம்மை செம

    மீனாட்சி கல்யாணம், திருவண்ணாமலை கோயில் அமைப்பு செட் ரசித்துப் பார்த்தேன். க்ளோசப்பில் இன்னும் அழகு..

    காரம்போர்ட் விளையாடும் பிள்ளையார்கள் கீழிருந்து இரண்டாவது படியில் வலப்புறம். நன்றாகத் தெரிகிறார்கள் கோமதிக்கா. நவ நாகரீக பிள்ளையார்கள்!

    செட்டியார் பழம் விற்கும் கொலு - கோலம் ரொம்ப அழகான டிசைன்ல அலங்காரம் நன்றாக இருக்கிறது

    ஆண்டாள் வீட்டில் பூத்த செம்பருத்தி சூடியிருப்பது பொம்மை என்றே நினைத்தேன் நிஜம் என்பது நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும்தான் தெரிந்தது.

    கொலு எப்படி இருந்தது? வெளிநாட்டில் இருந்தாலும் நவராத்திரியை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதுமையாக ஏதாவது செய்கிறார்கள். //

    அட்டகாசம் கோமதிக்கா. ஆமாம் புதுமையாக ஏதாவது செய்கிறார்கள். இங்கு செய்வதும் இருக்கிறது என்றாலும் அங்கும் அவர்கள் இதைத் தொடர்வது அதுவும் தங்களின் வேலைகளுக்கு நடுவில் (எல்லாமே அவர்கள்தானே செய்து கொள்ள வேண்டும்!!!) இப்படிச் செய்து நட்புகளோடு குதூகலமாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும்தான்....ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் கோமதிக்கா...புத்துணர்வு தரும். புதுமையாகச் செய்ய மனம் யோசிக்கும் போது கிரியேட்டிவிட்டி எல்லாம் வெளிப்படும். நிறைய நல்ல விஷயங்கள்...

    ஹப்பா....அமர்ந்து டீக்கு இல்லை எனக்கு காப்பிக்கு சொல்லியாச்சு கோமதிக்கா...ஹாஹாஹாஹா பாட்டும் கேட்டுக் கொண்டே நவராத்திரி சுப ராத்திரி!! அருமையான பாடல்..

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா...கடைசியில் முடித்திருப்பது உங்கள் கற்பனைக்குப் பாராட்டுகள்!! கோமதிக்கா

    கீதா





    கீதா





    பதிலளிநீக்கு
  13. //பார்க் சூப்பராக இருக்கு.//

    ஆமாம்.

    உங்கள் மகன் வரைந்த ப்டம் தானே அது மயூரநாதர்!! அருமை அருமை...//

    ஆமாம் கீதா, நன்றி.

    //காரம்போர்ட் விளையாடும் பிள்ளையார்கள் கீழிருந்து இரண்டாவது படியில் வலப்புறம். நன்றாகத் தெரிகிறார்கள் கோமதிக்கா. நவ நாகரீக பிள்ளையார்கள்!//

    கண்டுபிடித்து விட்டீர்கள் மகிழ்ச்சி.

    //ஆண்டாள் வீட்டில் பூத்த செம்பருத்தி சூடியிருப்பது பொம்மை என்றே நினைத்தேன் நிஜம் என்பது நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும்தான் தெரிந்தது.//

    ஆமாம் , இப்போது நிஜப்பூ போலவே செயற்கை பூக்களும் இருக்கே!

    //நட்புகளோடு குதூகலமாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும்தான்....ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் கோமதிக்கா...புத்துணர்வு தரும். புதுமையாகச் செய்ய மனம் யோசிக்கும் போது கிரியேட்டிவிட்டி எல்லாம் வெளிப்படும். நிறைய நல்ல விஷயங்கள்..//

    ஆமாம் கீதா. பாராட்டுக்களும், வாழ்த்துகளும் அவர்களை உற்சாகப்படுத்தி புதிதாக ஒவ்வொரு ஆண்டும் செய்ய வைக்கும்.
    நல்ல விஷயங்கள்தான்.

    //ஹப்பா....அமர்ந்து டீக்கு இல்லை எனக்கு காப்பிக்கு சொல்லியாச்சு கோமதிக்கா...ஹாஹாஹாஹா பாட்டும் கேட்டுக் கொண்டே நவராத்திரி சுப ராத்திரி!! அருமையான பாடல்..//
    பாட்டு கேட்டுக் கொண்டே காப்பியை குடிங்க.
    அருமையான பாடல்தான்.

    அனைத்தையும் ஒன்றுவிடாமல் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.







    .

    பதிலளிநீக்கு
  14. எதைச் சொல்ல எதை விட எனத் தெரியாதபடி அத்தனையும் அருமை. குறிப்பாக மயில் போன்ற படிக்கட்டு அதேநிறத்தில் புடவை விரித்து; திருவண்ணாமலை காட்சிகள்.., உயரமான நால்வர் பொம்மைகள் மற்றும் ஒவ்வொரு படத்துக்கும் உங்களது குறிப்புகள்!! டீக்கடை சூப்பர்:).

    இறுதிப் பத்தியில் சொல்லியிருப்பது உண்மை. இறைவழிப்பாட்டுடன் நட்புகள் உறவுகள் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் அளிக்கும்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

    எதைச் சொல்ல எதை விட எனத் தெரியாதபடி அத்தனையும் அருமை. குறிப்பாக மயில் போன்ற படிக்கட்டு அதேநிறத்தில் புடவை விரித்து; திருவண்ணாமலை காட்சிகள்.., உயரமான நால்வர் பொம்மைகள் மற்றும் ஒவ்வொரு படத்துக்கும் உங்களது குறிப்புகள்!! டீக்கடை சூப்பர்:).//

    ஆமாம், ராமலக்ஷ்மி அனைத்து அருமையாக இருக்கிறது.

    அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    //இறுதிப் பத்தியில் சொல்லியிருப்பது உண்மை. இறைவழிப்பாட்டுடன் நட்புகள் உறவுகள் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் அளிக்கும்.//

    ஆமாம், குழந்தைகளுக்கு இறை பக்தியும், எல்லோருடன் கலந்து உரையாடும் பண்பும், நட்பை போற்றுவது என்ற குண நலன்களும் மேம்படுகிறது. அதற்கு இந்த நவராத்திரி விழா வழி வகுக்கிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லையே...

    இப்பொழுதுதான் கணினியில் பார்த்தேன் அனைத்து படங்களும் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது. தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லையே...//

      நினைத்தேன் அப்படித்தான் இருக்கும் என்று.

      //அனைத்து படங்களும் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது. தரிசனம் நன்று.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு