வியாழன், 16 செப்டம்பர், 2021

பிரவுன் த்ரஷர் பறவை ( Brown Thrasher Bird)


பிரவுன் த்ரஷர் ஜார்ஜியாவின் மாநிலப் பறவை.

மகள் வீட்டுத்தோட்டத்திற்கு இன்று  காலை வந்த பறவை. மழை சிறு தூறலாக பெய்து கொண்டு இருந்தது. அதை வேடிக்கைப்பார்க்க நின்று கொண்டு இருந்தேன். இந்த பறவை வந்தது. உடனே காமிராவை எடுத்து வந்து எடுத்து விட்டேன்.

 ஞாயிறு ஒரு இடத்திற்கு போய் இருந்தோம். அங்கு வரக்கூடிய பறவைகளைப் பற்றி போட்டு இருந்தார்கள். அதில் ஒன்று இந்த பறவை. அங்கும் இந்த  பறவையை  படம் எடுத்தேன் . அந்த இடத்தைப்பற்றி எழுதும் போது அங்கு பார்த்த பறவை படத்தை  போடலாம் என்று வைத்து இருக்கிறேன்.

மரத்திலிருந்து கீழே இறங்கி  புல்வெளியில் அமர்ந்து சிறிது நேரம் பார்வை
தேடல் ஆரம்பித்து விட்டது
ஒன்றும் கிடைக்கவில்லை
மீண்டும் அங்கும் இங்கும் பார்வை




சிறிய காணொளிதான் பாருங்கள். புல்லில் விழுந்து கிடக்கும் சிவப்பு இலைகளை கொத்தி கொத்திப் போட்டு தேடுகிறது உணவை. இங்கு உள்ள பறவைகள் எல்லாம் அதிகமாக சிவப்பு  வண்ணத்தில்  இருக்கிறது. 

1970  இல் ஜார்ஜியா சட்டமன்றத்தால் அதிகாரப்பூர்வ மாநிலப் பறவையாக அங்கீகரிக்கப்பட்ட பறவையாம்.  கூகுளில் தேடிய போது கிடைத்தது. நன்றி கூகுளுக்கு.


இதன் பாடும் குரலை நான் பதிவு செய்ய முடியவில்லை. நான் உணவு தேடும் போது காணொளி எடுத்தேன், பறவை அப்போது பாடவில்லை. இந்த காணொளி youtube ல் பார்த்து பகிர்ந்து இருக்கிறேன். சிறிய காணொளிதான் நேரம் இருந்தால் பார்க்கலாம். மேலே உள்ள காணொளியில் பார்க்க முடியவில்லை என்றால் 

https://www.youtube.com/watch?v=6-yTbJen4UQ&t=36s இந்த சுட்டி மூலம் பார்க்கலாம்.

மகன் ஊரில் இதே பறவை அந்த ஊருக்கு ஏற்ற வண்ணத்தில் இருந்தது. முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------------

22 கருத்துகள்:

  1. எவ்வளவு எச்சரிக்கையுணர்வு?  பயந்த பறவை என்று சொல்ல முடியாது.  அதன் ஜீன்களில் ஆழமான எச்சரிக்கை இருக்கிறது போல.  இரண்டு நொடிக்கொருமுறை சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொள்கிறது.  சுறுசுறு என்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பறவைகள் எல்லாமே எச்சரிக்கை உணர்வுடந்தான் இருக்கின்றன.
      தலையை இடமும், வலமும் திரும்பி பார்க்கும்

      //இரண்டு நொடிக்கொருமுறை சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொள்கிறது. சுறுசுறு என்றிருக்கிறது.//

      நீங்கள் சொல்வது போல தான் இருக்கும் இடத்திலிருந்து படம் எடுப்பது மிகவும் கடினமான வேலை. இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அந்தப் பறவைதான் எவ்வளவு அழகு..

    படங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன//
      நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. அக்கா என்ன அழகாகக் குரல் எழுப்புகிறது!!

    இதே போன்று ஒன்று முன்பு நீங்கள் பகிர்ந்த் நினைவு இருக்கு அக்கா

    தரஷர் ரொம்ப அழகாக இருக்கு உங்கள் படங்களும் செமையா இருக்கு.

    இலையைக் கொத்தும் போது (உங்கள் காணொளி) அங்கும் இங்கும் பார்த்துக் கொள்வது டக்கென்று பறக்கலாமே ஆபத்து வந்தால் என்று இருக்கும்...யாராவது வந்தால்..பொதுவாகவே எல்லாப் பறவைகளுக்கும் இந்த உணர்வு இருக்கும் தான் போல் தெரிகிறது அக்கா.

    ரொம்ப க்யூட்

    இதே பறவை அந்தந்த ஊர் கால நிலைக்கு ஏற்ப போல் நிறம் எல்லாம் கொள்ளும் போல...

    படங்கள் எல்லாம் மிகவும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் , வாழ்க வளமுடன்
      நிறைய பறவைகள் காலையில் பாடுகிறது.
      இப்போதுதான் 'இது இந்த பறவையின் குரல் 'என்று தெரிந்து கொண்டு வருகிறேன்.

      //யாராவது வந்தால்..பொதுவாகவே எல்லாப் பறவைகளுக்கும் இந்த உணர்வு இருக்கும் தான் போல் தெரிகிறது அக்கா.//

      ஆமாம். நமக்கு அவை உல்லாசமாய் பறப்பது போல் காட்சி அளிக்கிறது. ஆனால் அவைகளின் வாழ்க்கை அச்சம் நிறைந்த வாழ்க்கைதான்.


      //இதே பறவை அந்தந்த ஊர் கால நிலைக்கு ஏற்ப போல் நிறம் எல்லாம் கொள்ளும் போல...//

      ஆமாம் கீதா.

      படங்களை , காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. நீங்கள் நல்ல போட்டோகிராபர் ஆகி விட்டீர்கள். படம் எடுப்பது எந்த காமெரா என்று குறிப்பிடலாம்.காரணம் ஜூம் மற்றும் கிளாரிட்டி பிக்சல் சைஸ்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //நீங்கள் நல்ல போட்டோகிராபர் ஆகி விட்டீர்கள். //
      நன்றி, எனக்கு தெரிந்த மாதிரி எடுத்து கொண்டு இருக்கிறேன்.
      Canon , 20.3 MEGA PIXELS

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  6. சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதம்மா!!!!!!
    அருமை அருமை அருமை.
    வாழ்க வளமுடன் அன்பின் கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      சின்ன்ஞ்சிறிய வண்ணப் பறவை நிறைய சொல்கிறது.
      நல்ல பாடல் நினைவுக்கு வந்து இருக்கிறது அக்காவிற்கு.

      நீக்கு
  7. இங்கேயும் அந்தப் பறவையின் சத்தம் கேட்கும்.
    ஆனால் பார்த்ததில்லை.
    படங்களும் காணொலியும் மிக அற்புதம் மா.
    அந்தக் கழுத்தை அப்படியும் இப்படியும்
    திருப்பி எத்தனை எச்சரிக்கையாக
    இருக்கிறது.

    உணவு தேடும்போதும் அந்த உணர்வு தொடர்கிறது. அழகு வண்ணப்
    பறவை. அன்பின் கோமதி,
    இங்கும் பறவைகள் காட்சி கொடுப்பது
    நன்மையே.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவை அங்கும் வருகிறதா? காணொளிகளை பார்த்தற்கு நன்றி அக்கா.
      எவ்வளவு நேரம் தான் நணினியில் இருப்பது? ஊரில் சொந்தங்களுடன் பேசுவது, சாமி கும்பிடுவது, புத்தகங்கள் வாசிப்பு, பாடல்கள் கேட்பது என்று இருந்தாலும் இடை இடையே பறவைகளை கவனிப்பதுதான் மனதுக்கு பிடித்த பொழுது போக்கு.

      அதற்கு வாய்ப்பு இருக்கிறது இங்கும்.

      //உணவு தேடும்போதும் அந்த உணர்வு தொடர்கிறது. அழகு வண்ணப்
      பறவை.//
      கூட்டை விட்டு பறந்து வரும் போது உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாது அவைகளுக்கு.

      ஏதோ அன்று படியளக்கிறார் இறைவன்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.



      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    நல்ல படங்களுடன் இந்த பறவை பதிவு நன்றாக இருக்கிறது. இந்த த்ரஷர் பறவை நல்ல கலராக பார்ப்பதற்கே நன்றாக உள்ளது. எல்லா பறவைகளின் பெயர்களையும் அதன் பழக்க வழக்கங்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அதற்கே உங்களை பாராட்ட வேண்டும். மேலும் அது வீட்டருகே வரும் போது அதை அருமையாக படங்கள் எடுத்து அதனைப் பற்றிய விபரங்களையும் தொகுத்து எங்களுக்கு தருகிறீர்கள். உங்கள் ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை."பறவைகளின் நேசர்" என்ற பெயர் உங்களுக்கு மிகப் பொருத்தம்தான். வாழ்த்துகள் சகோதரி.

    அதன் குரல் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பறவைக்கும் நல்லதொரு குரலினிமையை தந்து அதன் வாழ்வை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி வரும் இறைவனுக்கு எந்நாளும் நன்றி சொல்வோம். அது உணவை தேடும் போது எத்தனை பத்திரமான உணர்வுடன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே இருக்கிறது. எல்லா படங்களும், காணொளியும் நன்றாக உள்ளது. நேற்று இந்தப் பதிவுக்கு என்னால் உடனே வர இயலவில்லை. தாமதமாக வந்து கருத்திடுவதற்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      உடல் நிலை எப்படி இருக்கிறது?
      நலமாக இருக்க வேண்டும்.

      //நல்ல படங்களுடன் இந்த பறவை பதிவு நன்றாக இருக்கிறது. இந்த த்ரஷர் பறவை நல்ல கலராக பார்ப்பதற்கே நன்றாக உள்ளது. //

      ஆமாம், பார்க்க அழகாய் இருக்கிறது. இங்கு வரும் நிறைய பறவைகள் இளம்சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது.

      நேற்று ஒரு பற்வை வந்தது அதற்கு உடல் அழகாய் இருந்தது தலைமுடி இல்லாமல் இருந்தது. அது பிறவியே அப்படியா? அல்லது நோய்வாய்பட்டு முடி கொட்டி விட்டதா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்.

      //எல்லா பறவைகளின் பெயர்களையும் அதன் பழக்க வழக்கங்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அதற்கே உங்களை பாராட்ட வேண்டும்.//
      பறவைகளின் பேரை தேடினேன் கூகுளில் வந்தது போடுகிறேன். பாராட்டுக்கு நன்றி.

      தேடி போகாமல் வீட்டு வாசலில் , தோட்டத்தில் வந்து நிற்கும் போது எடுக்கிறேன்.
      //"பறவைகளின் நேசர்" என்ற பெயர் உங்களுக்கு மிகப் பொருத்தம்தான். வாழ்த்துகள் சகோதரி.//

      ஆஹா! பட்டம் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி, நன்றி.
      பறவைகளுக்கு நான் நன்றி சொல்லவேண்டும் என்னை இயங்க வைப்பது அவைகள்தான்.


      //எல்லா படங்களும், காணொளியும் நன்றாக உள்ளது.//
      நன்றி. எல்லாவற்றையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நேற்று இந்தப் பதிவுக்கு என்னால் உடனே வர இயலவில்லை. தாமதமாக வந்து கருத்திடுவதற்கு வருந்துகிறேன்.//
      வருந்த வேண்டாம், குடும்ப பொறுப்புகள், உடல் நலம் இல்லை இவைகளுடன் நட்புக்காக வந்து படித்து கருத்து சொல்வது பெரிய விஷயம்.

      உங்களுக்கு நன்றிகள் பல.










      நீக்கு
  9. அழகான பறவை. அழகான காணொளி. பறவைகளைப் பார்த்தாலே மனது இறுக்கம் குறைந்து தளர ஆரம்பிக்கும். தேடித் தேடிச் சென்று பறவைகளைப் பதிவு செய்கிறீர்கள். இந்தப் பறவையின் குரலும் நன்றாக இருக்கிறது. இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்

      //பறவைகளைப் பார்த்தாலே மனது இறுக்கம் குறைந்து தளர ஆரம்பிக்கும்.//
      உண்மை. அவைதான் இறுகிய மனதை தளர வைக்கிறது, என்னை இயங்க வைக்கிறது முடக்கி போடாமல்.



      தேடித் தேடிச் சென்று பறவைகளைப் பதிவு செய்கிறீர்கள். இந்தப் பறவையின் குரலும் நன்றாக இருக்கிறது. இனிமை.//

      வீட்டுதோட்டத்திற்கு வந்தது எடுத்தேன். மரங்களில் ஒளிந்து இருப்பதை தேடி எடுப்பதும் உண்மை.

      இந்த பறவையின் குரல் இனிமைதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அழகிய குருவி.உணவு தேடும்போது நமது ஊர் மைனா போலவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      உங்கள் ஊர் மைனா போல இருக்கா!

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. அழகான பறவை. நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் நன்று. முதல் காணொளி கண்டு ரசித்தேன். இரண்டாவது காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன்.

    தொடரட்டும் உங்கள் பறவைப் பார்வை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      பங்க்களை, காணொளியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு