திங்கள், 6 ஏப்ரல், 2020

எல்லாம் இருக்கு ஆனால் இல்லை!

கொரோனாவால் வெளியே போக முடியாமல்   இருந்தது. வெள்ளிக்கிழமை  சந்தை கிடையாது.  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த  காய்கறி வண்டி நாங்கள் இருக்கும் வளாகத்திற்கு வந்தது.

ஒரு மூட்டை 250 ரூபாய் . யாரையும் காக்க வைக்காமல் உடனே கொடுத்து அனுப்பிவிட நல்ல யோசனை.

அவர்கள் தேவைப்படும் எல்லாவற்றையும் அருமையாகத் திரட்டிக் கொடுத்து இருந்தார்கள். நாம் வாங்கப் போனால் கூட சிலவற்றை மறந்து வந்து விடுவோம். அவர்கள் தேவையானதைக் கொடுத்து இருந்தார்கள்.

தக்காளி மட்டும் மூட்டையில் இல்லை தனியாக நம் பையில் தந்தார்கள்.
என்ன காய் இருக்கிறது என்று நீங்களே பாருங்ககள்.நான் காய் வாங்கிய வண்டியைப் படம் எடுக்க முடியவில்லை, காய் வாங்கப் போகும் அவசரத்தில்  செல்லை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்.நான் வாங்கிய வண்டியில் நிற்கவே வேண்டாம் பையைக் கொடுத்துக் காசை வாங்கி உடனே அனுப்பி விட்டார்கள். இது நல்ல யோசனை. ஸ்கூட்டரில் வண்டியை தொடர்ந்து  வந்த இரண்டு பெண்கள் அவர்கள் தன் ஆர்வலர்களாம் , உதவி செய்தார்கள். உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் காய்களைக் கழுவி உங்கள் பார்வைக்கு வைத்து இருக்கிறேன்.
இன்னொரு  காய் வண்டியை என் வீட்டு பால்கனியிலிருந்து எடுத்தேன்

இயற்கை உரம் போட்ட காய்வண்டி. தனியார் சேவை. போதுமான இடைவெளி விட்டு வாங்கிச் செல்கிறார்கள். 

அடுத்து இதே போல் ஒரு மாத மளிகை சாமான்களும்  கொண்டு வந்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

நம் வீட்டுக்குப் பலசரக்குச் சாமான்கள் தந்து கொண்டு இருந்தவர்களே இப்போது தர மாட்டேன் என்கிறார்கள் . போய் தான் வாங்க வேண்டும் கதவை மூடி வைத்துக் கொண்டு நம் கொண்டு போன லிஸ்டை வாங்கி சென்று பொருட்களைக் கொடுக்கிறார்கள் வெளியே வந்து . நாம் கேட்ட கம்பெனி இருக்காது ,வேறு இருக்கும் அல்லது அந்தப் பொருளே இருக்காது .
அவர்கள் கொடுப்பதை வாங்கி வர வேண்டும்.
 முன்பு வாங்கி வைத்து இருந்த மாவுகளை முதலில் காலி செய்கிறேன்.

கொரேனா வருவதற்கு முன் வாங்கிய பொருட்களை முதலில் காலி செய்வோம் என்று  தேடியதில் கிடைத்த கோதுமை  இடியாப்ப மாவு.
முதன் முதலில் இதைச் செய்கிறேன்.

 பாக்கெட் மாவில் பாதியை எடுத்து (ஒன்றரை கப் மாவு இருக்கும்) எடுத்துக் கொண்டேன். 



 மாவை சூடான வெந்நீர் விட்டுப் பிசைந்து இடியாப்ப உழக்கில் போட்டு முதல் ஈடு பிழிந்த போது  எளிதாக இருந்தது. அடுத்துப் பிழியும் போது கை சிவக்க வலி வந்து விட்டது. கஷ்டமாய் இருந்தது. 

இரண்டு தட்டு மட்டும் பிழிந்து விட்டேன் மீதி மாவை  எடுத்து வைத்து விட்டேன் பிரிட்ஜில். இரவு உணவுக்குப்  பச்சைமிளகாய், இஞ்சி கருவேப்பிலை போட்டுத் தாளித்து 


பிழிந்த இடியாப்பங்களை  பச்சைமிளகாய், இஞ்சி கருவேப்பிலை, தேங்காய் பூ போட்டு தாளித்துச் சாப்பிட்டோம். ருசியாக இருந்தது.


நமக்கு ஏதோ கிடைத்துக் கொண்டு இருக்கிறது பொருட்கள்.
தினக்கூலி பெற்று அன்றாடம் சமையலுக்குப் பொருட்கள் வாங்கிச் செல்வோரின் நிலையை நினைத்துப் பார்க்க  வேண்டும் . கட்டிட வேலைக்குப் போவோர், வயல்வேலைக்குப் போவோர்களின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது.

பால் கீழே கொட்டப்படுகிறது, பழங்கள் வீதியில் வீசப்படுகிறது. இதை எல்லாம் காட்சியாகப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது அந்த ஊர் மக்களுக்கு கொடுக்கலமே  என்ற எண்ணம் வரும். யார் போய்க் கொடுப்பது?
யார் வந்து வாங்குவார்கள்?  அவைகளை முறையாக  எல்லோருக்கும் வழங்க ஏதாவது வழி இருக்கா என்று ஆராய்ந்து செயல்படலாம்.

வயல்களில் அறுவடைக்குக் காத்து இருக்கும்  பயிர், மரங்களில் பழங்கள்  அதுவாக வெடித்து கீழே விழுகிறது.வேலைக்கு ஆள் இல்லாமல் .பூக்கள் வாடி விழுகிறது பறிக்க ஆள் இல்லாமல்.

 இயற்கைகொடுத்ததை மனிதன் பெறமுடியவில்லை. எல்லாம் இருந்தும்  சாப்பாட்டுக்கு ஒன்று இல்லாததை (கிடைக்காததை)    நினைக்கும் போது மைதாஸ்  கதை நினைவுக்கு வருது. தொட்டதெல்லாம் தங்கமாக வேண்டும் என்ற வரம் கேட்ட நிலை இப்போது நமக்கு.  எல்லாம் இருக்கு ஆனால் இல்லை என்ற நிலை.

இறைவன் அருளால் எல்லோரும் நலம் அடைய வேண்டும் பழையபடி உலகம் இயங்க வேண்டும்.  அனைத்து வளங்களும், நலங்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இறைவன் அருளவேண்டும். அவர் உணர்த்திய விஷயங்களை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

எல்லோருடைய பிரார்த்தனைகளும் பயனளிக்கும். நம்புவோம். நம்பிக்கை ஓளி பரவட்டும். அச்சம் இன்றி வாழ்வோம்.

                         வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

103 கருத்துகள்:

  1. //தினக்கூலி பெற்று அன்றாடம் சமையலுக்குப் பொருட்கள் வாங்கிச் செல்வோரின் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும் . கட்டிட வேலைக்குப் போவோர், வயல் வேலைக்குப் போவோர்களின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது//

    ஆம் நான் தினம் இவர்களைத்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

    (நான் தனியாக கிடந்து படும்பாடு இறைவனே அறிவான்)

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      எங்கள் வளாகத்தை பராமரிக்கும் தொழிலாளர்கள் விடுமுறை எடுக்காமல் வருகிறார்கள் . அவர்களுக்கு அதிகப்படியாக மேலும் ஒருமாத சம்பளத்தை கொடுக்க முடிவு செய்து கொடுத்து விட்டோம்.

      வீட்டு உதவியாளர்களுக்கும் அப்படியே அவர்கள் மாதச் சம்பளத்தை கொடுத்து அவர்களை வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். நிலைமை சரியாகும் வரை அவர்கள் ஊதியத்தை கொடுத்து உதவ முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
      எங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு சொந்த வீடு இருக்கு வாடகை பிரச்சனை கிடையாது, ஆனால் கணவர் கட்டிட தொழிலாளி வேலை இல்லை அவருக்கு.

      பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள். இந்த மாதிரி உள்ளவர்கள் , பூ விற்கும் அம்மா கீரை விற்பவர் எல்லோரும் கஷ்டபடுகிறார்கள்.

      அவர்களுக்காக சீக்கீரம் சரியானால் நல்லது.

      நீங்கள் அம்மாவுடன் தானே இருக்கிறீர்கள் ஜி?
      பேத்தியை பார்க்க போகவும் முடியாது அவர்களும் உங்கள் ஊருக்கு வர முடியாது இல்லையா ?
      இறைவன் சீக்கீரம் உங்களுக்கும் நல்ல வழி காட்ட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

      நீக்கு
  2. இனியாவது மனிதன் இயற்கையை உணர்ந்து மதம் மறந்து வாழவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான் ஜி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. ஆம் நம்பிக்கைதானே வாழ்க்கை..அந்த நாளை சீக்கிரம் அருளப் பிரார்த்திப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
      எல்லோரும் பிரார்த்திக்கும் போது நல்லதே நடக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. ஆவ் !! கோமதிக்கா இவ்வளவும் 250 ரூபாய்க்கா .நல்லா இருக்கு தேவையான பொருட்கள் சில காய்களை வெட்டி ப்ரீசரில் வைங்க .ஆமாங்க்கா ஏழைகள் பாவம் எப்படி சாப்பிடுவாங்க ஐசோலேஷன்லாம் அவங்களால் முடியுமா ..:(  சீக்கிரம் நிலை மாறி மனுஷங்க உலக முழுதும் சந்தோஷமா வாழணும்னு வேண்டுகிறேன் இறைவனை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      ஒரளவு முதலில் செலவு செய்ய வேண்டிய காயை செலவு செய்து விட்டேன்.

      ஏழைகளை தனிமை படுத்தினால் அவர்கள் எங்கு போவார்கள் உணவுக்கு?
      கஷ்டம் தான். ஒரு டாகடர் எங்கள் வளாகத்தில் உள்ளவர் வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆளுக்கு மூன்று படி அரிசிகள் கொடுத்தார். இப்படி நல் உள்ளங்கள் உதவி செய்யலாம் . நாங்கள் பணமாக கொடுத்து விட்டோம்.
      நாம் நிலை சரியாகி உலகமக்கள் எல்லோரும் நலமாக , வளமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டுவோம் இறைவனை.

      நீக்கு
  5. அக்கா இடியாப்பம் குட்டி அச்சில் பிழிய கஷ்டமாருந்தா அதைவிட கொஞ்சம் பெரிய அளவு  துவாரத்தில் பிழிஞ்சு வெட்டி சேமியா மாதிரி அவிச்சு சாப்பிடுங்க .கேரளா மணிப்புட்டு மாதிரி 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல், நீங்கள் சொல்வது நல்ல யோசனை. ரிப்பன் பக்கோடா அச்சில் பிழிந்து வேகவைக்கலாம். இன்னும் பாதி மாவு இருக்கிறது அதை அப்படி செய்யலாம்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
    2. அக்கா முறுக்கு அச்சு இருக்கே அதைவிட ஒரு சைஸ் மெல்லிசு இருக்கு அதில் பிழியுங்க .பிழியும்போதே வெட்டி விடணும் 
      மணிப்புட்டு என்று கூகிளில் தேடினா அந்த படம் கிடைக்கும் 

      என் சமையல் ப்லாகில் கூட இருக்கு 

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன்.
      உங்கள் பதிவு சுட்டியை கொடுத்து இருக்கலாம்.
      கூகுளில் தேடுகிறேன் இனி அடுத்து செய்யும் போது.

      நீக்கு
    4. https://www.youtube.com/watch?v=4XMMEPbPCeQ
      @ 2.32
      இல் அச்சின் அளவு இருக்கு .நான் செய்தது ராஜ்கிரா மாவு 
      http://paperflowerskitchen.blogspot.com/2018/12/blog-post.html

      நீக்கு
    5. ஏஞ்சல், உங்கள் சுட்டிகளுக்கு நன்றி.

      பார்க்கிறேன் மதியம்.
      நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
    6. நான் சேவை நாழியில் தான் சேவையாகப் பிழிந்து விடுவேன். புழுங்கல் அரிசி அரைத்து இட்லி மாதிரியோ அல்லது மாவைக் கிளறிக்கொண்டு உருண்டைகளை வேகவைத்தோ! அநேகமாக இட்லி மாதிரித் தான்! இந்த இடியாப்ப மாவு ஒரு தரம் சரியாக வராததால் அப்புறம் முயற்சிக்கவே இல்லை. இடியாப்பச் சொப்பை உறவினருக்குக் கொடுத்துவிட்டேன்.

      நீக்கு
    7. //Angeல்

      என் சமையல் ப்லாகில் கூட இருக்கு ///

      ஆவ்வ்வ்வ்வ்வ் ஹையோ ஆண்டவா, அதிரா இங்கின இல்லை எண்டதும் சமையலில் கில்லிபோல அடிச்சு விளாசுறா கர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    8. @ கோமதி அக்கா இப்போ புரியுதா நான் முதலிலேயே லிங்க் இணைக்காததன் காரணம் :)

      நீக்கு
    9. @ கீதாக்கா .எனக்கு ரெடிமேட் மாவு பழகிடுச்சி .இந்த இட்லி போல் அவித்து நாழியில் போடறது ஒருதரம் ட்ரை பண்ணேன் ஹையோ ஒரு வாரம் கை  அசைக்க முடில .elite /nirapara இது ரெண்டும் நல்லா வருது எனக்கு 

      நீக்கு
    10. ஏஞ்சல், காரணம் தெரிந்து விட்டது.
      அதிரா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் "சமையல் கில்லிதானே" தனியாக அதற்கு என்று வலைத்தளம் வைத்து இருக்கிறீர்களே ஏஞ்சல்.
      நீங்கள் இரண்டு சுட்டிகளையும் பார்த்து விட்டேன் பதில் அங்கு போட்டு இருக்கிறேன் ஏஞ்சல்.

      நீக்கு
    11. ஏஞ்சல் கீதாக்கா சொல்லியிருப்பது சேவை. புழுங்கரிசியில் செய்வது ..

      நிரப்பாரா இடியாப்ப மாவு அது பச்சரிசி. இடியாப்பம் பச்சரியில் செய்வது அது இட்லி போல வேக வைக்க வேண்டாம் ஏஞ்சல். உங்களுக்குத் தெரிந்திருக்குமே. சேவை நாழி வேறு இடியாப்ப அச்சு வேறு...இடியாப்ப அச்சில் சேவை ப்ராசஸ் பிழிவது கடினம்...உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே..

      இடியாப்ப மாவு வீட்டில் செய்து விட்டாலும் சிலப்போ வெளியில் வாங்கினால் நிரப்பாரா மாவுதான் அது சூப்பரா வருது.

      கீதா

      நீக்கு
    12. எங்கள் மாமியார் வீட்டில் சேவை நாழி கையால் சுற்றுவது உண்டு. அதில் புழுங்கரிசியை அரைத்து கொழுகட்டையாக வேக வைத்து சூடாக போட்டு பிழிவார்கள். எல்லோரும் போட்டி போட்டு கொண்டு சுற்றி கொடுப்பார்கள். கஷ்டம் தெரியாது, புளிகாய்ச்சல், எலுமிச்சை, தேங்காய் சேவைகள் செய்து சாப்பிடுவோம்.

      நீக்கு
  6. காய்கறி பாக்கெட்... மிக அருமையான விஷயம். மக்களும் வாங்குவதற்கு மிக எளிதானது. வாங்கியதும் உப்பு, மஞ்சள் நீரில் அலம்பி வைத்தது முக்கியமான பாயிண்ட்.

    இங்க, என்ன மளிகைப் பொருட்கள் வேணும்னு சொன்னால், லிஸ்ட் அனுப்பி, ஓரிரு நாட்களில் டெலிவர் செய்துவிடுகிறார்கள். இன்றுவரை பிரச்சனை இல்லை. பசங்களுக்குத்தான் பிரெட் இல்லை என்ற குறையாக இருக்கிறது. இன்று வளாகத்துக்குள் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மொபைல் வண்டிகூட வந்தது.

    எளிய மக்கள் எப்படி நாட்களைக் கடத்துவார்கள் என எண்ணினால் வருத்தமாத்தான் இருக்கு. எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் இல்லையா?

    பால் கொட்டுவது, பழங்களை வீணடிப்பது - இதைப் பார்க்கும்போது அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது. உள்ளூரில் விற்கலாம், யாருக்கேனும் கொடுக்கலாம். சாக்கடையில் கொட்டுவது அறிவுடைமையா? இல்லை விளம்பரத் தந்திரமா?

    கோதுமை இடியாப்பம் அருமை. நானும் நிரபரா இடியாப்ப மாவு வாங்கவேண்டும். அதை வைத்து தேங்காய் சீயன் செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      இப்போது காய் கனிகளை அப்படித்தான் அலம்பி வைக்க சொல்கிறார்கள். மஞ்சள் கிருமி நாசினி.
      வாசலில் மஞ்சள், வேப்பிலை , உப்பு கலந்த தண்ணீரை தெளிக்க சொல்கிறார்கள்.
      முன்பு பசு சாணம் கிடைக்கவில்லை என்றால் வெறும் தண்ணீரில் வாசல் தெளிக்க கூடாது என்று சிறிது மஞ்சள்த்தூள் சேர்த்து தெளிக்க சொல்வார்கள். அது மீண்டும் நடைமுறைக்கு வந்து இருக்கிறது.


      திருவிழா காலங்களில் வாசலில் மஞ்சள் தண்ணீர் கரைத்து வைப்பார்கள்.மாவிலை,
      வேப்பிலையால் தோரணம் அமைப்பார்கள் தொற்று நோய்கள் அண்டாது என்று மீண்டும் அதை செயல்படுத்த ஆரம்பித்து விடார்கள்.

      //எளிய மக்கள் எப்படி நாட்களைக் கடத்துவார்கள் என எண்ணினால் வருத்தமாத்தான் இருக்கு. எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் இல்லையா?//



      ஆமாம், வயிறை காயவிடக்கூடாது என்பார்கள். பசி எனும் தீ அணைக்கப்பட வேண்டிய ஒன்று.

      உங்களுக்கு மளிகை பொருட்கள் கிடைப்பதும் வளாகத்துக்குள் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மொபைல் வண்டி வருவதும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.


      //பால் கொட்டுவது, பழங்களை வீணடிப்பது - இதைப் பார்க்கும்போது அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது. உள்ளூரில் விற்கலாம், யாருக்கேனும் கொடுக்கலாம். சாக்கடையில் கொட்டுவது அறிவுடைமையா? இல்லை விளம்பரத் தந்திரமா?//

      அதுதான் தெரியவில்லை. பாலை கொண்டு கொடுக்க முடியவில்லை வெளியே போக தடை என்பதால் என்கிறார்கள். பழங்கள் வேறு ஊர்களுக்கு அனுப்ப தடை என்பதால் மூட்டையில் கட்டியது அழுகி விட்டது என்கிறார்கள். லாரி லாரியாக வீதியில் கொட்டபட்டு அதன் மேல் வாகனம் ஏறி போவதைப் பார்க்கும் போது மனது மிகவும் வேதனை அளிக்கிறது.

      // நானும் நிரபரா இடியாப்ப மாவு வாங்கவேண்டும். அதை வைத்து தேங்காய் சீயன் செய்யவேண்டும்.//

      உங்களுக்கு நீங்கள் கேட்ட மாவு கிடைத்து தேங்காய் சீயன் செய்து சாப்பிடுங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. இங்கு டீ விற்பவர் மூன்று பாக்கெட் பிரட் 100 ரூபாய்க்கு விற்றாராம். சார் ஒரு பாக்கெட் 30 ரூபாய் என்று வாங்கி வந்தார்கள்.

      குழந்தைகள் ஆசைப் படி பிரட் கிடைக்கட்டும்.

      நீக்கு
    3. 777 சேவை பாக்கெட் தான் வாங்கி வைச்சிருக்கேன். எனக்கு நானே பண்ணணும்னு தான் ஆசை. ஆனால் நம்ம ரங்க்ஸுக்குக் கொஞ்சம் பயம். அதிகம் வேலை செய்ய வேண்டாம் என்பதால் இதை வாங்கி வந்துட்டார். இனிமேல் தான் பண்ணணும்.

      நீக்கு
    4. 777 தயாரிப்புக்கள் நன்றாக இருக்கும்.
      எல்லா வேலைகளையும் செய்து உடம்புக்கு வந்து விட்டால் இந்த மாதிரி சமயம் வேலையை குறைத்துக் கொள்வது நல்லதுதான்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      இதுவும் கடந்து போக வேண்டும் அதுதான் எல்லோர் விருப்பமும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. இங்கே நான் கடைகளுக்கு சென்று வருவது 2 வாரங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டேன். அதற்கு முன்பு வாங்கிய பொருட்களை வைத்து சமாளித்து வருகிறோம் எதையும் இப்போது வேஸ்ட் செய்வதில்லை தேவையான் அளவு செய்து சாப்பிடுகிறோம்....

    வீட்டு வாசலுக்கே காய்கறிகள் வந்து கிடைப்பது என்பது இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே சாத்தியம்.

    சில பேர் செய்யும் தவறுகளை சில பேர் செய்யும் தவறுகளாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் மதத்தை பிரச்சனைகளோடு சம்பந்தப்படுத்தி பார்க்க கூடாது. பல இடங்களில் நம் பதிவர்களே தவ்றான கருத்தை விதைத்து கொண்டிருக்கிறார்கள்... வலைதளங்களில் ஒரு முகமும் மற்றைய சமுக தளங்களில் வேறு முகமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையை தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      இங்கு கடைக்கு போய் தான் ஆக வேண்டிய சூழ்நிலை.
      சில கடைகளை சொல்லி அங்கு சொன்னால் வீட்டுக்கு பொருட்கள் வரும் என்கிறார்கள். அவர்களுக்கு போன் செய்தால் எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

      வாங்கிய பொருட்களை வைத்து தான் சமாளித்து கொண்டு இருக்கிறோம். சாருக்கு வயது ஆகி விட்டது,வெளியே போகச்சொல்லாதீர்கள் என்கிறார்கள்.நானும் போக கூடாது என்கிறார்கள் .

      காய் வீட்டுக்கு வந்ததால் எனக்கு கஷ்டம் இல்லை சமைத்து விடுகிறேன்.

      அதுவும் இப்போது சிலர் பசியால் வாடுகிறார்கள் என்பதை கேட்கும் போது நமக்கு கிடைத்ததை வீணாக்க மனது வரவில்லை.

      சிலபேர் செய்யும் தவறுகளை சில பேர் செய்யும் தவறுகளாகத்தான் பார்க்க வேண்டும் நீங்கள் சொல்வது போல்.
      மதம் கடந்த மனிதநேயம் தான் நல்லது.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி தமிழன்.

      நீக்கு
  9. வயல்களில் அறுவடைக்குக் காத்து இருக்கும் பயிர், மரங்களில் பழங்கள் அதுவாக வெடித்து கீழே விழுகிறது.வேலைக்கு ஆள் இல்லாமல் .பூக்கள் வாடி விழுகிறது பறிக்க ஆள் இல்லாமல்.///அன்பு கோமதி மா. எத்தனை பச்சைப் பசேல் காய்கறிகள்.
    நல்ல உதவி. இடியாப்பம் செய்து கைவலி கண்டு , கொழுக்கட்டை செய்தது அருமை.
    உதவி செய்பவர்களுக்கு
    பணம் கொடுத்ததும் நன்மையே.
    பால்கனி வழியாகவாவது ஒருவரோடுவர் பேசிக்கொண்டு செய்தி பரிமாறி
    மகிழலாம். நீங்கள் சொன்ன தோழி நினைவுக்கு வருகிறார்.

    இதேபோல் அரிசி முதலிய பொருட்களும் வீட்டுக்கு வந்துவிட்டால்
    நிம்மதி. பழக்கம் இல்லாத சுமைகளைத் தூக்குவது
    சிரமம் இல்லையா.

    நிலைமை சீரடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      காய்கறிகள் நல்லதாக கொடுத்ததை பாரட்ட வேண்டும்.

      பழைய மாதிரி எல்லாம் ஆசை படக்கூடாது என்று சொல்கிறது உடல்நிலை. கஷ்டமான வேலைகள் செய்யமுடிவது இல்லை. ஆசைப்பட்டு பிழிந்து விட்டு அப்புறம் கொழுகட்டை. ஏஞ்சல் சொன்னது போல் செய்து பார்க்க வேண்டும் மீதி மாவில்.

      பால்கனி வழியாக யார் பேசுகிறார்கள் யாரும் பேசுவது இல்லை. நீங்கள் சொல்வது போல் செய்தி பரிமாறி மகிழலாம்.
      அவர்கள் வீட்டு பால்கனி வழியாக பாலை கொண்டு வரச்சொல்லி எனக்கு உதவினார் எதிர் வீட்டு அம்மா.

      எல்லாம் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தது முன்பு அக்கா. வீட்டுக்கு அருகில் எல்லா கடையும் இருக்கிறது. கொரோனா பயத்தால் வேலை ஆட்கள் இல்லை கொண்டு வந்து தர ஆள் இல்லை.
      நீங்கள் சொல்வது போல் எல்லாம் விரைவில் சரியாக பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  10. விவசாயம் / விவசாயி - நிலை மிகவும் வருத்தப்பட வைக்கிறது... மனதில் அதீத பயம்...

    அரிசி மூட்டைகள் கொள்முதல் செய்ய ஆளில்லை என, சற்றுமுன்னர் தான் செய்தி பார்த்தேன்...

    விரைவில் நல்லதொரு காலம் பிறக்க வேண்டும் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      விவசாயி நிலை வருத்தம் தான். அரிசி மூட்டைகள் கொள்முதல் இல்லையென்றால் உணவு தட்டுப்பாடு வருமே!

      விரைவில் நல்லதொரு காலம் பிறக்க வேண்டும் அதுதான் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

      நீக்கு
  11. இப்போது அமெரிக்காவில் புலிக்கு, கொரோனா தொற்று வந்துள்ளதாக செய்தி... அனைத்து விலங்குகளுக்கும் பரவும் என்றும் செய்தி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! கொரேனா அரக்கன் விலங்கையும் விட்டு வைக்கவில்லையா?
      இயற்கை பாழ் பட்டு போகுமே செய்தி கவலை அளிக்கிறது.
      அனைத்து வாயில்லா ஜீவன்களை இறைவன் காக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. எல்லாம் இருந்தும் இல்லாத நிலை - விரைவில் சரியாக வேண்டும்.

    எளிய மக்களின் நிலை - கொடுமை தான். இன்றைக்கு பலரும் இந்த பாதிப்பில் இருக்கிறார்கள். விரைவில் எல்லாம் சரியாக வேண்டும்.

    வீட்டில் தனியாக இருப்பது கடினம் தான் கில்லர்ஜி. நேரத்தினை சரியான படி உபயோகிப்பது நல்லது. நான் நிறைய படிக்கிறேன் - எழுதுகிறேன் - சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      எளிய மக்களின் நிலை கொடுமைதான்.
      வேலை இழந்து ஊரை விட்டு சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள் மிகவும் வேதனை தந்தார்கள். விரைவில் எல்லாம் சரியாக வேண்டும்.

      வீட்டில் தனியாக இருப்பது கடினம் தான். தேவகோட்டைஜியின் தனிமை வெறுமையும் இருக்கே வெங்கட். அவர் பேத்தி பேச ஆரம்பித்து விட்டால் பொழுது வேகமாய் ஓடிவிடும்.

      உங்கள் பொழுதுகளை நல்லவிதமாய் கழிப்பது மகிழ்ச்சி.
      ஒய்வு இல்லாமல் வீட்டு வேலை, அலுவலக வேலை என்று இருந்தற்கு இந்த ஓய்வு ஒரு வரபிரசாதம். தூங்க நேரம் கிடைக்கிறதே!

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. தமிழகத்தில் இம்மாதிரி ஆதரவற்றவர்களுக்கும், வெளிமாநில இளைஞர்கள் மற்றும் எளியவர்களுக்கு அரசே கொட்டகை போட்டுத் தங்க வைத்துச் சாப்பாடும் கொடுக்கிறது. இதைப் பலர் சேர்ந்து செய்கின்றனர். முதலமைச்சரைக் கூப்பிட்டு அவர்களுக்கு உடை, உணவு கொடுக்கச் சொல்லித் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

      நீக்கு
    3. ஆமாம், நானும் பார்த்தேன்.
      எல்லா இடங்களிலும் நடந்தால் நன்றாக இருக்கும்.
      கல்யாண மண்டபங்களில் தங்க வைத்து இருக்கிறார்கள்.
      வீதியில் மயங்கி கிடப்போரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள்.

      நீக்கு
  13. ஆஆஆ கோமதி அக்காவும் கொரோனா போஸ்ட்டா? அவ்வ்வ்வ்வ்வ் கொழுக்கட்டையும் செய்திருக்கிறீங்கள்.... வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் தான் . இடியாப்பம் கண்ணில் படவில்லையோ அதிரா. கொழுகட்டை மட்டும் அவசரமாய் வந்து விட்டதே முந்தி கொண்டு.

      வாங்க வாங்க மெல்ல. நானும் தூங்க போகிறேன்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அது கோமதி அக்கா, மொபைலில் பார்த்ததால் முதலில் ஜம்ப் ஆனது கொழுக்கட்டையிலதான், :))

      நீக்கு
  14. இதுவும் கடந்து போகும்.

    இங்கும் காய் கறி வண்டிகள் வருகின்றன. தனித்தனியே தருகிறார்கள். அரிசி மளிகை பொருட்கள் ஆடர் செய்து டெலிவரி செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்களுக்கு வீட்டுக்கு எல்லாம் கிடைப்பது மகிழ்ச்சி.

      இதுவும் கடந்து போகவேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. ஆ...மரக்கறிகள் பார்க்க நல்லாயிருகே. என்னிடமும் இதில் இருப்பவை இருக்கே. செளசெள தவிர. அது என்ன பொன்னாங்காணி கீரையா,அல்லது கறிவேப்பிலையா? இங்கு முருங்கைகாய் கிலோ 7யூரோ சரியான விலை. நேற்று வாங்கியவையில் பப்பாகாய், பீர்க்கை, சுரைக்காய் இருக்கு. கொழும்பிலும் இப்படிதான் லொறியில் கொண்டு வந்து அப்பார்ட்மெண்ட் க்கு விற்கிறாங்க. மாமி
    300 ரூபாய்க்கு ஒரு பாக் வாங்கினாவாம் என சொன்னா. இந்நோய் தொற்றால் இப்படித்தான் நிலமை.
    ஆனா தினக்கூலி செய்பவர்கள் பாடு கஷ்டமா,மனதுக்கு வேதனையா இருக்கு.
    இடியப்பம் நல்ல கலரா இருக்கு. நாங்க சிவப்பரிசிமாவில் செய்வோம். மிகுதியானால் இப்படி தாளித்து(வெங்காயம்,ப.மிளகாய்,காரட்,உ.கிழங்கு ,தேங்காபூ) சாப்பிடுவோம். உங்க இடியப்பம் பார்க்க செய்யவேணும் போல இருக்கு. கொழுக்கட்டையும் சூப்பர் அக்கா. இப்படி நானு மிச்சினால் செய்றதுண்டு. பொருட்களை வீணாக்காமல் பிரயோசனமாக்கினால் நல்லது. இதுவும் இல்லாமல் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிறார்கள்.
    இங்கு இப்ப எல்லா பொருட்களும் வாங்ககூடியதாக இருக்கு. வெயிலும் ஆரம்பம்.
    கூடிய விரைவில் இந்நோய் முற்றிலும் ஒழிந்து, பழமைபடி நிலமை வரவேண்டும் என பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்

      //அது என்ன பொன்னாங்காணி கீரையா,அல்லது கறிவேப்பிலையா?//

      கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா.

      உங்கள் ஊரிலும் காய் வீட்டுக்கு வருவது மகிழ்ச்சி.

      மாதேவியும் அங்கு வீட்டுக்கு காய் வருவதை சொல்லி இருக்கிறார்.

      நாங்களும் சிவப்பரிசிமாவில் , பச்சரிசி மாவில் எல்லாம் செய்வோம் .
      கோதுமைமாவில் இப்போதுதான் செய்கிறேன்.
      இலங்கை போய் இருந்த போது இட்லி மாதிரி சிவப்பரிசி இடியாப்பம் ஓட்டலில் சாப்பிட்டோம்.

      தினக்கூலிகளுக்கு சில இடங்களில் உணவு பொருட்கள் கொடுப்பதாக சொல்கிறார்கள்.எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

      //உங்க இடியப்பம் பார்க்க செய்யவேணும் போல இருக்கு. கொழுக்கட்டையும் சூப்பர் அக்கா.//

      உங்கள் இடியாப்ப தட்டைப் பார்த்தவுடன் இடியாப்ப மாவு நினைவு வந்து செய்தேன்.

      //பொருட்களை வீணாக்காமல் பிரயோசனமாக்கினால் நல்லது. இதுவும் இல்லாமல் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிறார்கள்.//

      ஆமாம் அம்மு. உணவு பொருட்களை வீணாக்கினால் பிறகு அது கிடைக்காமல் கஷ்டபடுவாய் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஓட்டலில் சிலர் நிறைய ஆர்டர் செய்து உணவுகளை வீணாக்குவதை பார்க்கும் போது அது நினைவுக்கு வரும்.


      //இங்கு இப்ப எல்லா பொருட்களும் வாங்ககூடியதாக இருக்கு. வெயிலும் ஆரம்பம்.
      கூடிய விரைவில் இந்நோய் முற்றிலும் ஒழிந்து, பழமைபடி நிலமை வரவேண்டும் என பிரார்த்திப்போம்.//

      எல்லா பொருட்களும் கிடைப்பது மகிழ்ச்சி.
      வெயில் வந்தவுடன் இந்நோய் முற்றிலும் ஒழியட்டும்.
      அனைவரும் பிரார்த்திப்போம்.
      நன்றி அம்மு.










      நீக்கு
    2. உங்கள் ஊரிலும் காய் வீட்டுக்கு வருவது மகிழ்ச்சி.// இது இலங்கையில் கொழும்பில்தான் வருகிறது.. இங்கு (ஜேர்மனி)ஒன்லைனில்தான் ஓடர் கொடுக்கோனும். அல்லது நேரில் சென்று வாங்க வெண்டும்.

      நீக்கு
    3. உங்கள் ஊர் என்று சொன்னது இலங்கையைதான் சொன்னேன் அம்மு.
      மாதேவியும் இலங்கையை சேர்ந்தவர்கள் அவர்களும் வீட்டுக்கு காய் வருவதாக சொன்னார்.

      ஜெர்மனியில் கிடைக்காது என்று தெரியும்.

      நீக்கு
  16. கோமதி அக்கா வந்திட்டேன், கொரொனா வெஜிடபிள்ஸ் அழகாக இருக்குது... இப்படி வாங்கிட்டால் நல்லதுதான், அவர்கள தரும் மரக்கறிகளை வைத்துத்தான் ரெசிப்பி ரெடியாக்கோணும்... ஆனா ஓரளவுக்கு நல்ல மரக்கறிகளே தந்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரொனா வெஜிடபிள்ஸ் என்று பேர் வைத்து விட்டீர்களா?
      ஆந்த காய்களை வைத்து அதற்கு ஏற்றார் போல் குழம்பு, தொடுகறி செய்து கொள்ள வேண்டும். நல்ல மரக்கறிகளே தேர்ந்து எடுத்து கொடுத்து இருக்கிறார்கள்.
      நேற்று கூட்டாம் சோறு எங்கள் வீட்டில். மாங்காய் இல்லை ஆனால் அதற்கு பதில் மாங்காய் பொடி போட்டு செய்தேன்.

      நீக்கு
  17. ஆஹா இடியப்ப மாவிலேயே இடியப்பம் செய்தால், பிழிவதில் கஸ்டமே இருக்காதே கோமதி அக்கா..

    //மாவை சூடான வெந்நீர் விட்டுப் பிசைந்து இடியாப்ப உழக்கில் போட்டு முதல் ஈடு பிழிந்த போது எளிதாக இருந்தது. அடுத்துப் பிழியும் போது கை சிவக்க வலி வந்து விட்டது. கஷ்டமாய் இருந்தது. ///

    தப்பு எங்கிருக்கிறதெனக் கண்டு பிடித்து விட்டேன்.. ஆரம்ப காலம் நானும் இப்படிக் கஸ்டப்பட்டேன், இடியப்ப உரலில் நான் ஒரு பக்கமும் கணவர் ஒருபக்கமுமாகப் பிடிச்சும் பிழிஞ்சிருக்கிறோம் ஹா ஹா ஹா..

    //
    //மாவை சூடான வெந்நீர் விட்டுப் பிசைந்து //
    இங்குதான் தப்பு நடந்து போச்ச்:)).. தண்ணி எப்பவும் கொதி தண்ணியாக இருக்கோணும், இடியப்ப்த்துக்கு, ஆனா கேற்றில் நன்கு கொதிக்கும்போது, அப்படியே தூக்கி மாவில ஊத்தாமல், ஒரு ஜொக்/கப் இல் ஊற்றி எடுத்து பின்பு மாவில் ஊத்தோணும், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கோணும்...

    தண்ணி ஆறிவிட்டால், அல்லது கொதி போதவில்லை எனில் மா இறுக்கமாகிப் பிழிய முடியாமல் போய் விடும்..

    ஆனா கஸ்டப்பட்டாலும் முடிவு அழகாக வந்து விட்டதே..

    ஆஆ மிச்ச மாவில கொழுக்கட்டையோ.. நான் இப்படிச் சம்பவத்தின்போது மிச்ச மாவை எடுத்து ரொட்டி சுட்டேனாக்கும் ஹா ஹா ஹா... ஆனா கொழுக்கட்டை சொஃப்ட்டாக இருந்திருக்காதென நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தப்பு எங்கிருக்கிறதெனக் கண்டு பிடித்து விட்டேன்.. ஆரம்ப காலம் நானும் இப்படிக் கஸ்டப்பட்டேன், இடியப்ப உரலில் நான் ஒரு பக்கமும் கணவர் ஒருபக்கமுமாகப் பிடிச்சும் பிழிஞ்சிருக்கிறோம் ஹா ஹா ஹா..//

      அருமையான தருணம் தான். முன்பு எனக்கும் கல்யாணம் ஆன புதிதில் இப்படி உதவி இருக்கிறார் மாமா.

      நல்ல கொதிக்க வைத்த நீரைதான் விட்டு பிசைந்தேன். எனக்கு பழக்கம் விட்டு போய் விட்டது. குழந்தைகள் இருக்கும் போது அடிக்கடி இடியாப்பம் செய்வேன். மாமாவுக்கு புளிச்சேவை, எலுமிச்சை சேவை, குழந்தைகளுக்கு தேங்காய் சீனி போட்டு கொடுப்பேன்.

      இப்போது செய்வதே இல்லை. அதுவும் வெங்கல முறுக்கு அச்சு அதனால் கை வலிக்கிறது. கையில் வலுவும் குறைந்து விட்டது.
      மரகட்டையில் அதற்கு என்று அச்சு மட்டும் உள்ள இடியாப்ப உரல் வாங்க வேண்டும்.

      //ஆனா கொழுக்கட்டை சொஃப்ட்டாக இருந்திருக்காதென நினைக்கிறேன்.//

      மிக அருமையாக சொஃப்டாக இருந்தது அதிரா.

      நீக்கு
    2. மாவு மிஞ்சினால் சின்னச் சின்னக் கொழுக்கட்டைகளாக உருட்டிக் கொண்டு கொதிக்கும் வெந்நீரில் வேகவிட்டுக் கொண்டு அதிலேயே வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டுத் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொண்டு பால் கொழுக்கட்டை ஆக்கிவிடுவேன். என் அம்மா ஒவ்வொரு முறை சேவை பிழியும்போதும் இது மாதிரிக் கட்டாயமாய்ச் செய்து விடுவார்.

      நீக்கு
    3. என் அம்மா அடிக்கடி செய்வார்கள் நீர் கொழுக்கட்டை. கொழுக்கட்டை வேக வைத்த தண்ணீரில் வெல்லம் தேங்காய் பூ போட்டு குடிக்க நன்றாக இருக்கும்.

      பால் கொழுக்கட்டையும் செய்வேன்.

      இது எல்லாம் என் கணவருக்கு பிடிக்காது குழந்தைகள் இருந்த போது செய்தேன்.
      இப்போது இனிப்பு சாப்பிட கூடாது அவர்களுக்கு அதனால் எல்லாம் காரம் தான். எனக்கு பிடிக்கும் என்றாலும் எனக்கு மட்டும் செய்ய சோம்பல்.

      நீக்கு
    4. ஆஆஆ நான் நினைச்சேன் இடியப்பம் பிழிவது கஸ்டம் என்றதால சொஃப்ட்டாக இருக்காது என, மற்றும்படி முன்பு அம்மாவும் செய்வா, அரிசிமாவில் பயத்தப்பருப்புப் போட்டு, சக்கரை, தேங்காய்ப்பூப் போட்டு பிடிக்கொழுக்கட்டை செய்து ஆவியில் அவிப்பது சூப்பராக இருக்கும்.

      ஆனா இங்கும் வீட்டில் ஒருவருக்கும் பிடிக்காது என்பதனால செய்து பல வருடங்கள் ஆச்சு.

      நீக்கு
    5. அரிசி மாவில் பயத்தப்பருப்புப் வறுத்துப் போட்டு சர்க்கரை பாகு காய்ச்சி விட்டு தேங்காயை பல் பல்லாக கீறி நெய்யில் வறுத்துப் போட்டு கறுப்பு எள் வறுத்துப் போட்டு பிடி கொழுக்கட்டை பெரிய கார்த்திகை விளக்கு அன்றும், பிள்ளையார் சதுர்த்திக்கும் செய்வோம்.

      நீங்கள் சொல்வது போல் ஆவியில் வேக வைத்து எடுத்து வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டு போகாது . நன்றாக இருக்கும். இளம்பாகாய் விட்டு செய்தால் உடனே காலி செய்ய வேண்டும் . இங்கும் மாமாவுக்கு பிடிக்காது. என் பையன் தான் நான் செய்வதை எல்லாம் ருசித்து சாப்பிடுவான்.

      நீக்கு
  18. //கட்டிட வேலைக்குப் போவோர், வயல்வேலைக்குப் போவோர்களின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது.//

    உண்மைதான், அரசாங்கம் அவர்களைக் கவனித்து அரிசி பருப்பு பணம் கொடுக்கிறது என்றார்கள் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உண்மைதான், அரசாங்கம் அவர்களைக் கவனித்து அரிசி பருப்பு பணம் கொடுக்கிறது என்றார்கள் தெரியவில்லை...//

      கொடுக்கிறார்கள் . அரிசி ,பருப்பு மட்டும் போதுமா? வேறு சாமன்களும் வாங்க பணம் வேண்டுமே!
      அவர்கள் எல்லாம் வேலை முடிந்து போகும் போது காய்கள், பலசரக்கு சாமான்கள் எல்லாம் வாங்கி போய் இரவு நன்றாக சாப்பிடுவார்கள்.

      சிலர் மளிகை பொருட்கள் கொடுப்பதாக தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்.

      எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் நல்லது.

      நீக்கு
  19. //வயல்களில் அறுவடைக்குக் காத்து இருக்கும் பயிர், மரங்களில் பழங்கள் அதுவாக வெடித்து கீழே விழுகிறது.வேலைக்கு ஆள் இல்லாமல் .பூக்கள் வாடி விழுகிறது பறிக்க ஆள் இல்லாமல்.//

    ஓ.. ஏன் இப்படி.. இங்கெல்லாம் விவசாயிகளை நன்கு கவனிக்கிறது அரசாங்கம், அவர்கள் வேலைக்குத் தடங்கல் வந்திடாமல் பாஅர்த்துக் கொள்கிறார்கள்.. அதனாலதான் இப்போ நமக்கு மீண்டும் பொருட்கள் தாராளமாக வந்துவிட்டன சூப்பர்மார்கட்ட்களில்.. அதுவும், பழைய நிலைமைபோல , சேல் விலைகளும் போடுகிறார்கள்... விலையில் மாற்றம் இருப்பதுபோல தெரியவில்லை எமக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ.. ஏன் இப்படி.. இங்கெல்லாம் விவசாயிகளை நன்கு கவனிக்கிறது அரசாங்கம், அவர்கள் வேலைக்குத் தடங்கல் வந்திடாமல் பாஅர்த்துக் கொள்கிறார்கள்.. அதனாலதான் இப்போ நமக்கு மீண்டும் பொருட்கள் தாராளமாக வந்துவிட்டன சூப்பர்மார்கட்ட்களில்.. அதுவும், பழைய நிலைமைபோல , சேல் விலைகளும் போடுகிறார்கள்... விலையில் மாற்றம் இருப்பதுபோல தெரியவில்லை எமக்கு...//

      கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
      இங்கும் அது போல வர வேண்டும்.

      நீக்கு
    2. ஆனால் மக்கள் வெளியே போவதில்லை, எங்கும் வெறிச்சோடிக்கிடக்குது கோமதி அக்கா, வெளியே போகவே பயமாக இருக்கு, நேற்றுப் போய் 120 பவுண்டுகளுக்கு வாங்கி வந்திட்டோம் இனி ஒரு கிழமைக்கு போகும் வேலை இல்லை.

      நீக்கு
    3. நல்லது கிடைக்கும் போது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் அதிரா.
      மக்கள் வெளியே போகாமல் இருப்பதே நல்லது.

      நீக்கு
  20. //எல்லோருடைய பிரார்த்தனைகளும் பயனளிக்கும். நம்புவோம். நம்பிக்கை ஓளி பரவட்டும். அச்சம் இன்றி வாழ்வோம்.//

    உண்மைதான் பயம் தான் வருத்தத்துக்கு முதல்க் காரணம்... பயந்து நடுங்கினால் ஃபீவர் வந்துவிட்டதைப்போல இருக்கும் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உண்மைதான் பயம் தான் வருத்தத்துக்கு முதல்க் காரணம்... பயந்து நடுங்கினால் ஃபீவர் வந்துவிட்டதைப்போல இருக்கும் ஹா ஹா ஹா...//

      ஆமாம் அதிரா. பயமே அனைத்தையும் கொண்டு வரும்.
      பயப்படாமல் துணிச்சலுடன் நம் காரியங்களை செய்து கொண்டு இருப்போம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. பயப்பிடாதீங்கோ கோமதி அக்கா.. அதிரா இருக்கிறேனாக்கும், யான் இருக்கப் பயமேன் ஹா ஹா ஹா ஹையோ இது மட்டும் கொரொனாவின் காதில கேட்டுதோ அவ்ளோதேன்..

      எங்கள் பிரதமர் இப்போ அவசரச் சேவைப்பிரிவில சேர்த்திருக்கினம் கோமதி அக்கா.. அவருக்கு கொரொனா என வந்து 10 நாட்களாகி விட்டது, ஆனா நிலைமை கொஞ்சம் மோசமானதால் நேற்று சேர்த்திருக்கினம் .. அது கொஞ்சம் கவலையாக இருக்குது.. அவருக்கு 55 வயசுதான் அதனால பயமிருக்காதென நம்புகிறேன்... எதிர்ப்புசக்தி இருக்கும்.

      நீக்கு
    3. அதிரா இருக்க பயமேன் பயமில்லைதான்.
      பிரதமருக்கு விரைவில் குணமாக வேண்டும் பிரார்த்திப்போம்.

      மீண்டு வருவார்.

      நீக்கு
  21. அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். இயற்கை தரும் வளத்தை மனிதனால் அனுபவிக்க முடியவில்லை. எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத நிலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இயற்கை தரும் வளத்தை மனிதனால் அனுபவிக்க முடியவில்லை. எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத நிலை//

      இந்த முறை நன்றாக இருந்தது விவசாயம். எல்லாவறையும் இந்த வைரஸ் கெடுத்து விட்டது.

      இருந்தும் இல்லாத நிலை வந்து விட்டது.

      நீக்கு
  22. பெரியவனுக்கு வயிறு சரியில்லை என்று ஆப்பிள் வாங்கி வந்தேன். புதுசு என்று தந்தார் அந்த சாலையோர கடைக்காரப் பெண்மணி. ஒரு ஆப்பிள்தான் தேறியது. மற்றவை எல்லாம் வீண். மறுநாள் போய்ச் சொன்னால் சலனமில்லாமல் கேட்டுக் கொள்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு ஆப்பிள்தான் தேறியது. மற்றவை எல்லாம் வீண். மறுநாள் போய்ச் சொன்னால் சலனமில்லாமல் கேட்டுக் கொள்கிறார்.//

      அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு தங்கு தடையின்றி கிடைத்தால் இப்போது வாங்கி கொள்ளுங்கள் விலையை குறைத்துக் கொள்கிறேன் என்பார்கள்.

      ஆனால் பெரிய கடைகளில் (பழமுதிர் சோலைகளில் வாங்கும் பழமே சில நேரம் உள்ளே கருப்பாய் இருக்கும்)

      நீக்கு
    2. இப்போது மகனின் உடல் நிலை எப்படி இருக்கிறது?
      உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.வீட்டிலிருந்து கணினியில் வேலைப் பார்க்கும் போது உடல் சூடாய் ஆகும் அதனால் வயிற்று வலி இருக்கலாம். வெந்தயம், பூண்டு, போட்டு அரிசி கஞ்சி பால் விட்டு கொடுக்கலாம்.

      நீக்கு
  23. பொருட்களை சிக்கனமாகக் கையாளச் சொல்லியிருக்கிறேன் பாஸிடம். கடை திறந்தாலும் அங்கு நிற்கும் வரிசையின் தூரத்தைப் பார்த்தால் அலர்ஜியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான். அவர்களுக்கு நீங்கள் சொல்லாமலே தெரியும்.
      உங்கள் கஷ்டம் அவர்களுக்கும் தெரியும் தானே!

      எல்லா ஊர்களிலும் இதே நிலைதான்.

      நீக்கு
    2. //ஸ்ரீராம்.7 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:37
      பொருட்களை சிக்கனமாகக் கையாளச் சொல்லியிருக்கிறேன் பாஸிடம்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
  24. அனைவரும் பத்திரமாக இருங்கள். நீங்கள் வேலைகளை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டாம். இந்நிலை சீக்கிரம் சரியாக இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டிய நிலைதான்.
      நீங்கள் எல்லோரும் பத்திரமாக இருங்கள்.

      இறைவனைப் பிரார்த்திப்போம், நிலை மாறும் என்று நம்புவோம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  25. இடியாப்பமும் கொழுக்கட்டையும் அருமை. இங்கே என்னமோ தெரியலை இவருக்கு இந்தக் கொழுக்கட்டையே பிடிக்காது. பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை தான் பிடிக்கும். காய்கள் இங்கே கீழே ஒரு அண்ணாச்சி கடை உள்ளது. மதியம் ஒரு மணிக்குள் போய் வாங்கலாம். நாங்க காலையிலேயே தொலைபேசியில் சொன்னால் கொண்டு வந்து கொடுப்பார். இல்லை எனில் ஓர் வணிக வளாகம் இருக்கு. அங்கேயும் கிடைக்கும். ஆனால் காய்கள் புதுசாக இருக்காது. சுமாராகத் தான் இருக்கும். ஓரளவு ஓடுகிறது. இன்னும் எத்தனை நாட்களோ என நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //இங்கே என்னமோ தெரியலை இவருக்கு இந்தக் கொழுக்கட்டையே பிடிக்காது.//

      இவர்களுக்கும் பிடிக்காது தான், இட்லிதான் பிடித்த உணவு. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் இந்த மாதிரி நேரங்களில் சகித்து கொண்டு சாப்பிட்டு விடுகிறார்கள்.

      கொழுக்கட்டை மிகவும் மெதுவாய் ருசியாகவே இருந்தது என்றார்கள்.

      இங்கு எப்போதும் கொடுப்பவர்களே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

      உங்களுக்கு பொருட்கள் கிடைப்பது மகிழ்ச்சி.
      விரைவில் சரியாக வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. வேண்டிய காய்கறிகள் பாக்கெட் நன்றாக உள்ளது. இந்த சேவை அங்கு வாரம் ஒரு முறை வருமா?

    தாங்கள் செய்துள்ள இடியாப்பம் நன்றாக உள்ளது. வெறும் கோதுமை மாவிலா? நானும் புழுங்கல் அரிசியில் (இட்லி அரிசி) அரைத்து இந்த மாதிரி இடியாப்பம் செய்வேன். பிழிய கஸ்டப்படும் மிச்ச மாவை இப்படி பிடி கொழுக்கட்டை மாதிரியோ, உருட்டி வைத்தோ சாப்பிட வேண்டியதுதான்.

    இங்கு பலசரக்கு சாமான்கள் முதலில் ஒரு தடவை கடைக்காரர்கள் ஹோம் டெலிவரி செய்தார்கள். அதன் பின் அங்கு ஆட்கள் குறைவானதால், என் மகன் கடைக்குச் சென்று இந்த மாதிரி தனித்தனியாக நின்று கொஞ்சம் வாங்கி வந்தார். எப்படியோ நாட்கள் ஓடுகின்றன. அதன்படி அனைத்தும் நலமாகி இந்த தொற்றிலிருந்து இறைவன் மக்களை காத்தருள வேண்டுகிறோம். அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். மக்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும். நீங்களும் கவனமாக இருங்கள். பதிவு நன்றாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      காய்கறி மூன்று நாளைக்கு ஒரு முறை என்றார். ஆனால் அடுத்த முறை வந்ததா தெரியவில்லை. அன்று ஸ்பிக்கரில் அறிவித்துக் கொண்டு போன சத்தம் கேட்டு வாங்கினேன்.

      வீட்டுக்குள்ளேயெ இருப்பதால் தெரியவில்லை.

      //நானும் புழுங்கல் அரிசியில் (இட்லி அரிசி) அரைத்து இந்த மாதிரி இடியாப்பம் செய்வேன். பிழிய கஸ்டப்படும் மிச்ச மாவை இப்படி பிடி கொழுக்கட்டை மாதிரியோ, உருட்டி வைத்தோ சாப்பிட வேண்டியதுதான்.//

      நானும் இப்படி செய்வேன்.

      கோதுமை இடியாப்பம் செய்தது இல்லை இதுவே முதல் முறை.

      //இங்கு பலசரக்கு சாமான்கள் முதலில் ஒரு தடவை கடைக்காரர்கள் ஹோம் டெலிவரி செய்தார்கள். அதன் பின் அங்கு ஆட்கள் குறைவானதால், என் மகன் கடைக்குச் சென்று இந்த மாதிரி தனித்தனியாக நின்று கொஞ்சம் வாங்கி வந்தார்.//

      இங்கும் அப்படித்தான் முன்பு வீட்டுக்கு கொடுத்தவர்கள் இப்போது கொடுபது இல்லை.
      கடைக்குள்ளும் நம்மை விடுவது இல்லை. நம் லிஸ்டை வாங்கி கொண்டு அவர்களே எடுத்து கொடுக்கிறார்கள்.

      நாட்கள் ஓடுகின்றதுதான். அது நல்லபடியாக ஓட வேண்டும், இந்த தொற்றிலிருந்து எல்லோரையும் காப்பாற்று இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

      வீட்டில் குழந்தைகளை வெளியில் விடாமல் அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டு என்று உங்கள் பொழுதுகள் சரியாக இருக்கும் இல்லையா?

      நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி'

      நீக்கு
  27. நல்ல ஏற்பாடு. எங்கள் குடியிருப்புக்குள்ளே இருக்கும் சிறிய சூப்பர் மார்கெட்டில் சாமாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.விரைவில் நிலைமை சீராக வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்

      //எங்கள் குடியிருப்புக்குள்ளே இருக்கும் சிறிய சூப்பர் மார்கெட்டில் சாமாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.//

      எல்லாம் கிடைக்கிறதா? நல்லது.
      நிலைமை சீராக வேண்டுவோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  28. இன்று வீட்டுக்கு போன் செய்த போது நூறு ரூபாய்க்கு தொகுப்பாக காய்கள் கொடுத்ததாக சொன்னார்கள்...

    ஏதோ போதாத காலம்... எவனோ செய்த பிழை எல்லோருடைய தலையிலும் விழுந்திருக்கிறது..

    இருந்தாலும் இச்சூழ்நிலை ஒருவகையில்
    மனித மனங்களை மாற்றியிருக்கிறது...

    அனைவரும் சுய கட்டுப்பாடு கொண்டு சிந்திக்க தம்மைத் தாமே உணர்ந்து கொள்ளலாம்...

    அந்தக் கொடுங்கிருமியைப் பற்றி சிந்திக்காமல் இருந்தாலே போதும்...

    வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெலவாரஜூ, வாழ்க வளமுடன்.
      என் தங்கை வீட்டு பக்கமும் ரூ. 100க்கு காய்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்று சொன்னாள்.

      கஷ்டகாலங்களில் மனித மனங்களை தெரிந்து கொள்ளலாம்.
      மனித மனங்கள் பிறரை நேசிக்க, கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் மாற்றங்கள் வந்து இருக்கிறது நீங்கள் சொல்வது போல்.
      பணம் மட்டுமே வாழ்க்கை ஆகாது என்று தெரிந்து கொள்கிறார்கள்.
      நீங்கள் சொல்வது போல சுய அலசலுக்கு (நம்மை நாமே உணர்ந்து கொள்ள) உகந்த காலம்.
      ஆமாம் கொடுங்கிருமியை புறம் தள்ள வேண்டும்.

      நம் மனதை இறை நாமங்களை சொல்வதில் கழிப்போம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன்..

      நீக்கு
  29. விபரங்கள் அருமை! காய்கறிகள் பார்க்க பசுமையாக இருக்கின்றன. இங்கே தஞ்சையில் சில இடங்களில் மட்டும் இப்படித்தருவதாக கேள்வியுற்றேன். நண்பர்கள் காய்கறி வாங்கித்தருகிறார்கள். பல நாட்கள் வரும்படி சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். வெளியில் போகாததால் சிக்கனமாக நடைமுறை வாழ்க்கை செல்லுகிறது.
    கொழுக்கட்டை, கோதுமை இடியாப்பம் அருமை!இந்த மாவில் பால் கொழுக்கட்டையும் செய்யலாம்.
    விரைவில் அனைத்தும் நலமாகி சரியாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      தஞ்சையில் கிடைப்பதாக சகோ துரை செல்வராஜூம் சொல்லி இருக்கிறார்.
      காய்கறிகளை பார்த்து பார்த்துதான் செலவு செய்கிறேன் நானும்.
      பொருட்களையும் பல நாள் வருவது போல் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்தான். எல்லோருக்கும் எல்லா பொருட்களும் கிடைக்க வேண்டும்.

      வெளியில் போகாததால் வாழ்க்கை சிக்கனமாய் தான் போகுது.
      இந்த மாவில் பால் கொழுக்கட்டை எனக்கு மட்டும் செய்ய வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  30. ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம். கோதுமை  மாவு இடியாப்பத்திற்கும் மாகி நூடுல்ஸ்க்கும் , மற்றும் ட்ரு சேமியாவிற்கும் என்ன வித்யாசம். கஷ்டப்பட்டு இடியப்பம் பிழிவதற்கு பதில் நூடில்ஸ் உபயோகிக்கலாம். 

    மதுரையில் அணில் சேமியா கடை ஹாஜி மூஸா பக்கம் உள்ளது. அங்கு விதம் விதமான ( ராகி, கம்பு) சேமியா வகைகள், புட்டு பொடிகள் போன்றவை கிடைக்கும்.  நல்ல  தயாரிப்புகள். 
    இங்கு கேரளத்தில் கோதுமை புட்டும் பிரபலம். 
    காய்கறி பாக்கெட் 250 க்கு மலிவு என்னு தோன்றுகிறது.
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
      சம்பா கோதுமை மாவு வறுத்து பொடி செய்தது.
      சேமியா பிடிக்காது அவர்களுக்கு.
      ராகி, கம்பு, புளியோதரை எலுமிச்சை அணில் சேமியாக்கள் வாங்கி வைத்து இருக்கிறேன்.
      இது வித்தியாசமாக இருப்பதால் வாங்கினேன்.
      கேரளத்தில் புட்டும், கடலைகறியும் பிரபலம்.
      சிவப்பரிசி புட்டு நன்றாக இருக்கும்.
      புட்டு பொடி வைத்து இருக்கிறேன் யாராவது வந்தால் அவசரத்திற்கு கை கொடுக்கும் என்று.

      காய்கறி 250 க்கு மலிவு மட்டும் இல்லை நன்றாகவும் இருந்தது. பெரிய குடும்பத்திற்கு மூன்று நாளில் காலி ஆகி விடும் மறுமுறை வாங்கலாம்.
      எங்களுக்கு இருக்கிறது இன்னும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  31. அக்கா என் தங்கையும் சொன்னாள் தமிழ்நாட்டில் எல்லாம் வீட்டுக்கு சப்ளை செய்யறாங்களே அப்படி இங்கு கேரளத்தில் செஞ்சா நல்லாருக்கும் என்று. அவள் இருப்பது திருவனந்தபுரத்தில் பத்மநாப கோயில் ஸ்ரீவராகம் கோயில்கள் அருகில் கோட்டைக்குள். நல்ல செண்டர்..

    நல்லாருக்கு அக்கா மூட்டை. நானும் காய்களிய எப்போதுமே கழுவி உப்பு மஞ்சள் தண்ணீரில் போட்டு விட்டு மீண்டும் கழுவித்தான் யூஸ் செய்கிறேன்...

    எல்லாமே நன்றாகவும் இருக்கிறது கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      உங்கள் தங்கை இருக்கும் இடம் நல்ல இடம் தான் கடைகள் நிறைய இருக்கும்.
      இன்றும் வந்தார்கள் காய் லாரி 100 ரூபாய் பாக்கெட் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போனார்கள், என்னிடம் அன்று வாங்கிய காய்கள் இன்னும் இருக்கிறது. அது காலியான பின் தான் வாங்க வேண்டும்.

      நீக்கு
    2. என்ன ஒற்றுமை. கீதாம்மா (கீசாக்கா) வோட தங்கையும் ஸ்ரீவராகத்தில்  தான் இருக்கிறார்கள்.
       Jayakumar

      நீக்கு
  32. அக்கா கோதுமை இடியாப்ப மாவு கடையில் வாங்கியதாக இருந்தாலும் கூட ஒரு முறை கொஞ்சம் வறுத்துக்கோங்க.

    இல்லேனா வீட்டில் கோதுமை மாவு பாக்கெட் இருக்குமில்லையா அதை வானலியில் நன்றாக அதாவது அரிசி மாவு வறுப்போமில்லையா அது போல சல சல என்று மணல் போல வரும் பக்குவம் வறுத்துக்கோங்க. அப்புறம் பிழிஞ்சு பாருங்க நல்லாருக்கும். இல்லேனா மாவை வேட்டில் வைத்து எடுத்தும் செய்யலாம். அதுவும் நல்லா ஈசியா வரும் கோமதிக்கா. புட்டும் செய்யலாம் செமையா இருக்கும். நான் செய்வது இப்படித்தான். அதுவும் மர இடியாப்ப அச்சில் மட்டுமே பிழிவேன் வேறு எந்த அச்சும் பயன்படுத்துவதில்லை. பிழிவது கடினம் என்பதால்..

    கொழுக்கட்டையும் சூப்பரா இருக்கு அக்கா இடியாப்பமும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு மைதாமாவை வேட்டில் வைத்து புட்டு, இடியாப்பம் , முறுக்கு எல்லாம் செய்வோம். மைதா சேர்ப்பது நல்லது இல்லை என்றதும் மைதாவே வாங்குவது இல்லை.

      கோதுமை மாவு வறுத்து செய்கிறேன். எளிதாகதான் இருந்தது எனக்கு கழுத்து எலும்பு தேய்ந்து இருக்கிறது என்று டாகடர் சொல்லி விட்டதாலும், இப்போது வீட்டு வேலைகள் அதிகம் என்பதாலும் பிழியவரவில்லை கீதா. அப்புறம் அர அச்சும் இல்லை, வெங்கால நாழி வேறு. கொழுக்கட்டை நன்றாக இருந்தது கீதா.

      நீக்கு
  33. தினக்கூலி பெற்று அன்றாடம் சமையலுக்குப் பொருட்கள் வாங்கிச் செல்வோரின் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும் . கட்டிட வேலைக்குப் போவோர், வயல்வேலைக்குப் போவோர்களின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது.//

    ஆமாம் அக்கா இங்கு அவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். ஒரு பொட்டலம் பிரியாணி அல்லது கலந்த சாதம் அல்லது சாம்பார் சாதம் என்று..ஒரு நேரம் கொடுக்கிறார்கள் வரிசையில் கட்டத்தில் நின்ரு வாங்கிச் செல்லணும் என்றும் சொல்லிடுறாங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நேரம் உணவு கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது.
      வரிசையில் நிற்கனும் அது தான் கஷ்டம்.
      ரேஷ்னில் 1000 ரூபாய் பணமும், அரிசி, துவரம் பருப்பு , பாமாயில் கொடுத்து இருக்கிறார்கள் .
      உழைப்பாளிகள் கூலி பெற்று வீடு திரும்பும் போது அனைத்து சாமான்களும் வாங்கி போய் நன்கு சமைத்து சாப்பிடுவார்கள் இரவு . அது இப்போது முடியாது அதுதான் என் ஆதங்கம்.

      நீக்கு
  34. பால் கீழே கொட்டப்படுகிறது, பழங்கள் வீதியில் வீசப்படுகிறது. இதை எல்லாம் காட்சியாகப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது அந்த ஊர் மக்களுக்கு கொடுக்கலமே என்ற எண்ணம் வரும். யார் போய்க் கொடுப்பது?//

    ஆகா இது நார்மலாகவே சந்தைக்குச் செல்லும் போது இரைந்து கிடப்பதைப் பார்த்து மனம் மிக மிக வேதனைப்படும். இப்போதும் இப்படி வீணாகிப் போனால் கொடுமைதான் யாருக்காவது கொடுக்கலாமே நீங்கள் சொல்லுவது போல..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளி சந்தை அன்று மீந்து போன காய்கள் இரைந்து கிடப்பதில் நல்லதாக எடுத்து சென்று சமைத்து சாப்பிடும் ஆட்கள் உண்டு கீதா.

      பாலகுமரன் எழுதிய 'இரும்பு குதிரை கதையில் அரிசி மூட்டைகளை ஏற்றும் இடத்தில் சிதறி கிடைக்கும் அரிசிகளை கூட்டி அள்ளி சுத்தம் செய்து சாப்பிடும் ஆட்களை பற்றி குறிப்பிட்டு இருப்பார். இப்போது பறவைகள் மனிதர்கள் எல்லாம் கஷ்ட படுகிறார்கள்.

      நீக்கு
  35. தினக் கூலி மக்கள் தான் பாவம் அது போல மருத்துவத்துறையில் இருப்பவர்களும்...

    எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டும் உலகம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம் அதுதானே நமக்கிருக்கும் ஒரே வழி..

    எங்களுக்கு வீட்டு வாசலில் ஏதேனும் வண்டி வந்துவிடுகிறது. கூடியவரை தள்ளுவண்டியில் விற்பவர்களிடம் வாங்குகிறேன் பாவம் அவர்கள் என்று.

    இல்லை என்றால் கடைகள் அருகில் காலை 7 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். சாமான் கடைகள் உட்பட அதற்குள் வாங்க வேண்டும். ஒரு மலையாளி கடையில் உள்ளே மூவர் அல்லது 4 பேர் தான் அனுமதி அவர்கள் வெளியில் வந்த பிறகு தான் அடுத்து உள்ளோர். அவர்களும் மாஸ்க் கையுறை எல்லாம் அணிந்துதான் வேலை செய்கிறார்கள். இந்த ஊர்க் கடைகள் கையுறை எதுவும் அணிவதில்லை. மாஸ்க் போட்டுக் கொள்கிறார்கள்.

    இந்த நிலை விரைவில் மாற வேண்டும் நம்புவோம் ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவதுறை, துப்புரவு செய்யும் மக்கள், தின தொழிலாளி, விவசாயிகள் என்று எல்லோரும் கஷ்டபடுகிறார்கள். எல்லோரும் கலந்து பேசி ஏதாவது மேலும் ஆக்கபூர்வமாக செயல்படனும்.

      வீட்டுக்கு காய் தள்ளு வண்டியில் வருவது மகிழ்ச்சி. பக்கத்தில் பல் பொருள் அங்காடி இருந்தாலும் உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள்.நாம் கொடுக்கும் லிஸ்டை பெற்றுக் கொண்டு அவர்களே தான் இருப்பதை தருகிறார்கள்.

      இப்போது ஒரு கடை லிஸ்டை வந்து கொடுத்து செல்லுங்கள் , ஒரு வாரத்தில் கொண்டு வந்து தருகிறோம் என்கிறார்கள்.

      இறைவன் அருளால் விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்ப வர வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  36. காய்கறிகள் பார்க்கவே புளிச் ன்னு இருக்கும் ...நல்ல சேவை
    கோதுமை இடியாப்பம் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா சாப்பிட்டது இல்ல ...

    உங்கது பார்க்கவே நல்லா இருக்கு ..

    எங்கும் நலம் பெருகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      நல்ல சேவைதான் அனு.
      வேலூரில் மளிகைப் பொருட்களும் வண்டியில் வருகிறது.
      எங்கும் நலம் பெருகட்டும்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அனு.

      நீக்கு