கொரேனா காலங்களும் கோதுமை இடியாப்பமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரேனா காலங்களும் கோதுமை இடியாப்பமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஏப்ரல், 2020

எல்லாம் இருக்கு ஆனால் இல்லை!

கொரோனாவால் வெளியே போக முடியாமல்   இருந்தது. வெள்ளிக்கிழமை  சந்தை கிடையாது.  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த  காய்கறி வண்டி நாங்கள் இருக்கும் வளாகத்திற்கு வந்தது.

ஒரு மூட்டை 250 ரூபாய் . யாரையும் காக்க வைக்காமல் உடனே கொடுத்து அனுப்பிவிட நல்ல யோசனை.

அவர்கள் தேவைப்படும் எல்லாவற்றையும் அருமையாகத் திரட்டிக் கொடுத்து இருந்தார்கள். நாம் வாங்கப் போனால் கூட சிலவற்றை மறந்து வந்து விடுவோம். அவர்கள் தேவையானதைக் கொடுத்து இருந்தார்கள்.

தக்காளி மட்டும் மூட்டையில் இல்லை தனியாக நம் பையில் தந்தார்கள்.
என்ன காய் இருக்கிறது என்று நீங்களே பாருங்ககள்.நான் காய் வாங்கிய வண்டியைப் படம் எடுக்க முடியவில்லை, காய் வாங்கப் போகும் அவசரத்தில்  செல்லை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்.நான் வாங்கிய வண்டியில் நிற்கவே வேண்டாம் பையைக் கொடுத்துக் காசை வாங்கி உடனே அனுப்பி விட்டார்கள். இது நல்ல யோசனை. ஸ்கூட்டரில் வண்டியை தொடர்ந்து  வந்த இரண்டு பெண்கள் அவர்கள் தன் ஆர்வலர்களாம் , உதவி செய்தார்கள். உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் காய்களைக் கழுவி உங்கள் பார்வைக்கு வைத்து இருக்கிறேன்.
இன்னொரு  காய் வண்டியை என் வீட்டு பால்கனியிலிருந்து எடுத்தேன்

இயற்கை உரம் போட்ட காய்வண்டி. தனியார் சேவை. போதுமான இடைவெளி விட்டு வாங்கிச் செல்கிறார்கள்.