வெள்ளி, 20 மார்ச், 2020

சிங்காரச் சிட்டுக்கள்


இன்று உலக சிட்டுக்குருவி தினம்!

இந்த  தினத்தில் சிட்டுக்குருவி பற்றி ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடும் நான் போடவில்லை என்றால்  குருவி அதிராவின் மூலம் கேட்டு விட்டது.

//இன்றைய சிட்டுக்குருவிகளைக் கொண்டாட மறந்திட்டீங்களே கோமதி அக்கா:)//


அதிராவிற்கு  நான் அளித்த பதில் :- சிட்டுக்குருவி தினத்தை மறக்கவில்லை. முகநூலில் பகிர்ந்து இருக்கிறேன்.
நான் மறந்தாலும் மார்க் மறக்காமல் போன வருடம் போட்டதைக் காட்டியது அதைப் போட்டு விட்டேன்.


  அதிரா கேட்டதால் அதிரா படிக்காத  2014ல் பதிவு செய்த  "சிட்டுக்குருவியைத் தேடித் தேடி "என்ற பழைய பதிவை இங்கு மீள் பதிவாக்கி விட்டேன்.

நாங்கள் மயிலாடுதுறையில்  இருந்த போது போட்ட பதிவு.  அங்கு நான் இருந்த வீட்டில் பல பறவைகள் வரும். ஆனால் சிட்டுக்குருவி வரவில்லை.
ஆனால் இப்போது மதுரையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நிறைய இருக்கிறது. அதனைப் படம் எடுத்து நிறைய பதிவுகள் போட்டு விட்டேன்.
சிட்டுக்குருவிகள் நான் இருக்கும் மயிலாடுதுறையில் இல்லை.   வேறு ஊர்களில் சிட்டுக்குருவிகளைப் பார்த்துவிட்டால் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்.என் மகன் ஊரில், மகள் ஊரில் எல்லாம் இருக்கிறது. அங்கு போகும் போது எல்லாம்சிட்டுக்குருவிகள் உல்லாசமாய் கீச் கீச்  என்று  ஒலி எழுப்பிச் செல்லும்போது ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் மகிழ்ந்து பார்ப்பேன்.

                                          
கூட்டின் மீது உட்கார்ந்து இருக்கும் பறவை சிட்டுக்குருவி இல்லை
                                          - ஏங்கிரிபேர்டு (சிவப்புப் பறவை)

நியூஜெர்சி போனபோது மகன் வீட்டுத்தோட்டத்தில் குருவிகள் வருவதைப்பார்த்து சிட்டுக்குருவிக்கு வீடு (கூடு) வாங்கி வைத்தார்கள் என் கணவர் . குருவி அதன் மேல் வந்து  வந்து உட்கார்ந்து பார்க்கும். ஆனால் உள்ளே போகாது. கூட்டிற்கு வாசல் சரியில்லை என்று நினைக்கிறேன். கூட்டின் வாசலில்  முதலில் வந்து உட்கார்ந்து அங்கும், இங்கும் பார்த்து பின் தான் உள்ளே போகும் குருவி . இவர்கள் வாங்கிய வீட்டில் அப்படி இல்லை   சிறு வட்டம் போல்மட்டும் வாசல் இருக்கிறது. அதில் அது உட்கார்ந்து பார்க்க வசதி இல்லாத காரணத்தால் வரவில்லை போலும்.


சிட்டுக்குருவிகள் தினம் அல்லவா இன்று ! நான் சேமித்து வைத்து இருக்கும் படங்கள் கிடங்கில் தேடித் தேடி சிட்டுக்குருவியை எடுத்துப் பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் இருக்கு குருவி படங்கள் - அடுத்த முறை.  இன்னும் தேடினால்  சிட்டுக்குருவிகள் தினம் முடிந்துவிடும்.


இரண்டு சிட்டுக்குருவிகள் பேசுவது என்ன?





பேசி முடித்து எங்கு போகிறது?
உறவுகளை அழைத்துவரப்போனதா?

உறவோடு உறவாடி மகிழ்வோம் உணவுகளை பகிர்ந்து உண்போம்.
சிட்டுக்குருவியில் இது ஒரு வகை
இறக்கை விரித்து பறக்க ஆயத்தம்
சிவப்பு கலர்  உள்ள சிட்டுக்குருவி
சாம்பல் நிறக்குருவி


’பின் பக்கம் ஒளிந்து இருக்கிறேன் பாருங்கள்.’
’இதோ வந்து விட்டேனே!’


நான் பகிர்ந்த சிட்டுக்குருவிகளைக் கண்டு மகிழ்ந்தீர்களா!

வாழ்க வளமுடன்!

44 கருத்துகள்:

  1. அழகான காட்சிகள் சிட்டுக்குருவிகளை வாழவைப்போம்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உடனே குரு அழைத்து விட்டதே உங்களை!
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் அதுதான் மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  2. சிட்டுகுருவிகள்தான் இங்கு என் நண்பர்கள். நிறைய வருவினம். நானும் ப்திவு ஏற்கனவே போட்டிருக்கிறேன். இப்போ இங்கு கொஞ்சம்வெயில் வந்ததால் அவர்களுக்கு குதூகலம். அவர்கள் கொரோனா பயமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறாங்க.
    அழகான படங்கள் அக்கா. இப்படிதான் வரிசையா வந்து இருப்பாங்க. அழகா இருக்கும். பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      உங்களுக்கு நண்பரகளா? முன்பு போட்ட பதிவு படித்த நினைவு இருக்கிறது.
      வெயில் வந்தபின் அவர்கள் வருகை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அவைகளுக்கு கொரானா பாதிப்பு தெரிய வேண்டாம் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கட்டும்.
      அவைகள் கூட்டமாக மண் குளியல் செய்வதை, கூட்டமாக நீர் நிலையில் குளிப்பதை எல்லாம் முன்பு பதிவு போட்டு இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  3. சின்ன வயதில், வீட்டுக்குள்ளேயே கூடு கட்டி (வீடு நெடுக இருக்கும். வாசலுக்கும் கொல்லைப்புறத்துக்கும் 100 மீட்டருக்கு மேல் இருக்கும்) விர் விர் என்று பறந்துபோகும். கூடத்தில் வைத்திருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி (பெல்ஜியம், 3 அடிக்கு 4 அடி)யில் ரசம் போனதுக்குக் காரணம் குருவி கொத்துவதுதான் என்று அப்போ சொல்வார்கள்.

    சிட்டுக்குருவி.... நமக்கெல்லாம் பரிச்சியமான குருவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      நேற்றைய பதிவு படிக்கவில்லையா?
      குருவி உங்களை அழைத்து வந்து விட்டது, உங்கள் மலரும் நினைவுகளை பகிர.
      குருவி மர பீரோ கண்ணாடியை கொத்துவதைப் பார்த்து என் அம்மா கண்ணாடியை மறைக்க அழகான் திரைச்சிலை தைத்து போட்டார்கள்.

      நமக்கு பரிச்சியமானதுதான் குருவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. சிட்டுக்குருவிகள் இன்னும் வெளிவரவில்லை.
    குருவிகள் நலம் வாழட்டும். அவற்றின் சுறுசுறுப்புக்கு இணையே இல்லை.
    எத்தனை அழகான படங்கள் கோமதி.
    மிக நன்றி மா. வசந்தம் வந்து எல்லாப் பறவைகளும் நன்றாக
    இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      குளிர் குறைந்தால் தானே குருவிகள் வெளி வரும்.
      சிட்டுக்குருவி போல சுறு சுறுப்பாய் இருக்கும் பெண்களை சிட்டு போல் இருக்கிறாள் என்று சொல்வோம் அல்லாவா?
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
      தினம் ஒரு செய்தி படிக்கவில்லையே நீங்கள்.(போன பதிவு)

      நீக்கு
  7. மகிழ்ச்சி அழகிய படங்கள். சிட்டு குருவிகள் தின வாழ்த்துகள். பறவைகள் இனிதாக வாழட்டும்.
    எங்கள் வீட்டுக்கும் தினம்தோறும் பறவைகள் வருவினம் தண்ணீர் சாப்பாடு வைத்துள்ளோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //எங்கள் வீட்டுக்கும் தினம்தோறும் பறவைகள் வருவினம் தண்ணீர் சாப்பாடு வைத்துள்ளோம்.//

      கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கும் குருவிக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும் நன்றி.

      நீக்கு
  8. ஆவ்வ்வ்வ்வ் கோமதி அக்கா, சிட்டுக்குருவிகள் மகிழ்ச்சியின் துள்ளுகிறார்கள் கோமதி அக்கா பதிவு போட்டு விட்டா என.. ஹா ஹா ஹா.. போன பதிவுக்கு கொமெண்ட்ஸ் இன்னும் குடுக்கவில்லை என இப்போதான் நேரம் கிடைச்சு ஓடி வந்தேன், பார்த்தால் புதுப்போஸ்ட்..

    //இந்த தினத்தில் சிட்டுக்குருவி பற்றி ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடும் நான் போடவில்லை என்றால் குருவி அதிராவின் மூலம் கேட்டு விட்டது.///

    ஹா ஹா ஹா அதுதானே, விடிய வட்சப்பில் சிட்டுக்குருவிகள் தினம் பார்த்ததும், உடனேயே நினைச்சு ஓபின் பண்ணினேன், கோமதி அக்கா போஸ்ட் போட்டிருப்பா என, ஆனா அது வேறு போஸ்ட் என்றதும் சிட்டுக்களுக்காக அதிரா ஏஏஏஏஏஏஏஏஏஏ மாஆஆஅந்தேஏஏஏஏஎன்ன்ன்:)).. ஹா ஹா ஹா..

    நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //ஆவ்வ்வ்வ்வ் கோமதி அக்கா, சிட்டுக்குருவிகள் மகிழ்ச்சியின் துள்ளுகிறார்கள் கோமதி அக்கா பதிவு போட்டு விட்டா என.. ஹா ஹா ஹா..//

      சிட்டுக்குருவிகளும் மகிழும், சிட்டுக்குருவி போல் மகிழ்ச்சியாக பறந்து வந்து கருத்து சொல்லும் அதிராவிற்கு இந்த பதிவு.


      //சிட்டுக்குருவிகள் தினம் பார்த்ததும், உடனேயே நினைச்சு ஓபின் பண்ணினேன், கோமதி அக்கா போஸ்ட் போட்டிருப்பா என, ஆனா அது வேறு போஸ்ட் என்றதும் சிட்டுக்களுக்காக அதிரா ஏஏஏஏஏஏஏஏஏஏ மாஆஆஅந்தேஏஏஏஏஎன்ன்ன்:)).. ஹா ஹா ஹா..//

      அதிராவை அக்கா ஏமாறவிடவில்லை.

      நீக்கு
  9. //அதிரா கேட்டதால் அதிரா படிக்காத 2014ல் பதிவு செய்த "சிட்டுக்குருவியைத் தேடித் தேடி "என்ற பழைய பதிவை இங்கு மீள் பதிவாக்கி விட்டேன்.
    //

    ஓ ஓகே ஓகே நன்றி நன்றி.. படிக்கப்போகிறேன் இதோஓஓஒ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அதிரா தங்கச்சி கேட்டு அக்கா பதிவு போடவில்லை என்றால்" அதுதான் தேடி போட்டு விட்டேன். மகிழ்ச்சிதானே? பார்த்து மகிழ்ந்தீர்கள்தானே?

      நீக்கு
  10. //.என் மகன் ஊரில், மகள் ஊரில் எல்லாம் இருக்கிறது. அங்கு போகும் போது எல்லாம்சிட்டுக்குருவிகள் உல்லாசமாய் கீச் கீச் என்று ஒலி எழுப்பிச் செல்லும்போது ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் மகிழ்ந்து பார்ப்பேன்.//


    ஆஆஆ பறவைகள் என்றாலே என் மனதில் முதலில் வருவது கோமதி அக்காதான், போன கிழமைகூட ஒருநாள், ஓரிடத்தில் புறாக்க?ளும் சீ ஹல்ஸ் உம் கூட்டமாக இருந்தன, கோமதி அக்காவை நினைச்சுக் கொண்டே படமெடுத்தேன்.

    இங்கும் சிட்டுக்கள் வரும் கோடையில், ஆனா டெய்சிப்பிள்ளை ஒவ்வொரு வருடமும் குறைந்தது 3,4 சிட்டுக்களை ஆவது பிடித்து விடுவா கர்:)).. அதிகாலையில் வெளியே அவவி விட மாட்டோம் இதுக்காகவே ஆனா இவ நல்லா வேட்டையாடுவா:)).. சிலசமயம் கலைத்துப் பிடிச்சு காப்பாற்றி விட்டும் இருக்கிறோம்.. என்ன பண்ணுவது அது இறைவனின் படைப்பு, நான் பேசினால் டெய்சியை, சின்னவர் சொன்னார்.. அது நச்சுறல் அம்மா.. அப்படிப் பேசக்கூடாது என ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆஆஆ பறவைகள் என்றாலே என் மனதில் முதலில் வருவது கோமதி அக்காதான், போன கிழமைகூட ஒருநாள், ஓரிடத்தில் புறாக்க?ளும் சீ ஹல்ஸ் உம் கூட்டமாக இருந்தன, கோமதி அக்காவை நினைச்சுக் கொண்டே படமெடுத்தேன்.//

      ஆஹா! இந்த வார்த்தைகளை கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.


      //நான் பேசினால் டெய்சியை, சின்னவர் சொன்னார்.. அது நச்சுறல் அம்மா.. அப்படிப் பேசக்கூடாது என ஹா ஹா ஹா..//

      சின்னவர் சரியாக சொல்லி இருக்கிறார்.
      இயற்கை ஒவ்வொன்றை ஒவ்வொன்றுக்கு என்று படைத்து இருக்கிறார். சிறு வயதில் வீட்டில் பல்லி பூச்சியை பிடித்து சாப்பிட்டால் வருத்தம் அடைவேன், ஏன் இப்படி பல்லியின் பக்கத்தில் போய் மாட்டிக் கொள்கிறது என்று! இறைவன் பல்லிக்கு அந்த பூச்சியை உணவாக கொடுத்து இருக்கிறார் என்று என் அப்பா சொல்வார்கள்.

      நீக்கு
  11. //கூட்டின் மீது உட்கார்ந்து இருக்கும் பறவை சிட்டுக்குருவி இல்லை
    - ஏங்கிரிபேர்டு (சிவப்புப் பறவை)//

    அதுதானே பார்த்தேன், பயந்துவிட்டேன் சிவப்பில் சிட்டோ என..:)..

    //குருவி அதன் மேல் வந்து வந்து உட்கார்ந்து பார்க்கும். ஆனால் உள்ளே போகாது. //
    அப்படித்தான் கோமதி அக்கா, இங்குள்ள பறவைகளுக்குக் கிட்னி:)) அதிகம்:)) உசாராகத்தான் இருப்பினம் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதுதானே பார்த்தேன், பயந்துவிட்டேன் சிவப்பில் சிட்டோ என..:)..//

      குருவிக்கு வாங்கிய கூட்டை காட்ட அந்த படத்தை போட்டேன். குருவி அமர்ந்து இருக்கும் படம் கிடைக்கவில்லை.

      பறவைகளுக்கு மூளை அதிகம் தான். உசாராக இருக்கட்டும்.

      நீக்கு
  12. ஆஹா அந்த இரண்டு சிட்டுக்களும் அமர்ந்திருப்பதைப் பார்க்க மிக அழகு, மிக நன்றாகப் படமெடுத்திருக்கிறீஇங்க, பிரேம் பண்ணிப்போட்டதைப்போல இருக்கு, போஸ்ட்டில் போடும்போதே இப்படியான படங்களை.. எக்ஸ்ராலாச் சைசில் போடுங்கோ.. அப்போதான் பார்க்க இன்னும் சூப்பராக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சிலருக்கு நான் பெரிது செய்து போட்டால் நிறைய படம் போடுவதால் திறக்க நேரம் ஆகிறது என்றார்கள் நான் முன்பு போஸ்ட் போட்ட போது அதனால் அவர்களே படத்தை பெரிது செய்து பார்த்துக் கொள்ளும் வண்ணம் வைத்து விட்டேன்.
      நீங்கள் பெரிது செய்து பாருங்கள்.

      நீக்கு
  13. //பேசி முடித்து எங்கு போகிறது?//

    ஆவ்வ்வ்வ்வ் பேசிக்கொண்டிருக்கும்போதே கணவன்- மனைவி சண்டை வந்துவிட்டது போலும் ஹா ஹா ஹா.. இனி விட்டுக்குடுக்கப்போவது யாரோ?:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா தீர்க்கதரிசிதான்.
      கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை உற்சாகமாய் ஆரம்பித்து பின் பழைய கதைகளில் ஏதாவது கசப்பு இருந்தால் அதில் முடிந்து சண்டை வருவது சகஜம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

      நீக்கு
  14. //உறவுகளை அழைத்துவரப்போனதா?//

    ஆஆஆஆ இல்லை இல்லை கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போயிட்டா பெண்சிட்டு:)) அவவை சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கின்றனர் கணவரோடு சேர்த்து விட ஹையோ ஹையோ:))) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவன், மனைவி உறவுகளில் நடந்து வருவதை நீங்கள் நகைச்சுவையாக குறிப்பிட்டாலும் நடப்பதை சொல்கிறார் அதிரா என்று ஏற்றுக் கொள்கிறேன்.
      உறவுகள் இணைக்கும் பாலமாக இருக்கிறார்கள், பிரிக்கும் பாலமாகவும் இருக்கிறார்கள்.
      உறவுகளால் நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான்.

      நீக்கு
  15. ஒன்றில் கொண்டை இருக்குது போலவே, சிட்டுக்களில் இவ்வளவு வகை உண்டோ..

    //பின் பக்கம் ஒளிந்து இருக்கிறேன் பாருங்கள்.’//
    நான் கோமதிஅக்கா ஒளிச்சிருக்கிறா என தேடித்தேடிப் பார்த்து ஏமாந்தேன்ன் சே..சே.. இன்று ஏமாறும் நாள்போலும் எனக்கு ஹா ஹா ஹா.

    //’இதோ வந்து விட்டேனே!’//

    வாங்கொ வாங்கோ.. அடுத்த வருடம் தான் இனிச் சிட்டுக்களை இங்கு காண முடியுமாக்கும்... அழகிய போஸ்ட் கோமதி அக்கா, நலமே இருங்கோ அனைவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒளிந்து இருக்கும் குருவியின் தலை மட்டும் பின் பக்கம் தெரியும் படத்தை பெரிது செய்து பாருங்கோ !
      ஏமாறும் நாள் இல்லை. அக்கா ஏமாற்றுவேன் அதிராவை என்று நினைத்தீர்களோ?

      //வாங்கொ வாங்கோ.. அடுத்த வருடம் தான் இனிச் சிட்டுக்களை இங்கு காண முடியுமாக்கும்... அழகிய போஸ்ட் கோமதி அக்கா, நலமே இருங்கோ அனைவரும்.//

      ஜன்னல் வழியே பகிர்வில் குருவி வரும் போதெல்லாம் படம் எடுத்து போட்டு வருகிறேனே!

      நலமாக இருக்கட்டும் குருவி இனங்கள். அவைகளால் நாம் எப்போதும் நமக்கு உதவி செய்து வருகிறது.

      குருவியை போல் சுறு சுறுப்பாய் இரண்டு பதிவுகளுக்கும் வந்து நிறைய பின்னூட்டங்கள் கொடுத்து அக்காவை உற்சாகப்படுத்தும் அதிரா வாழ்க!

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  16. சிட்டுக்குருவிகளைக் கண்ணில் காணுவதே உற்சாகம் தரும்.   நானும் நேற்று பேஸ்புக்கில் பார்த்துவிட்டு, பேஸ்புக்கில் சிட்டுக்குருவி பதிவு போடலாம் என்று யோசித்தபின் நேற்று எனக்கு எதற்குமே நேரம் இல்லாமல் போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      "சிட்டுகுருவிக்கு என்ன கட்டுபாடு" அந்த பாடலை நீங்கள் போட்டு இருக்கலாம்.
      இப்போது உங்களுக்கு நேரம் கிடைப்பது கஷ்டம் தான்.
      தினம் தினம் போஸ்ட் போடுவது மிகவும் கடினமான வேலை. அடுத்து அடுத்து போஸ்ட் போட்டுவிட்டு அதற்கு வந்து இருக்கும் பின்னூட்டங்களுக்கு பதில் தரும் போது "எங்கள் ப்ளாக்கை " நினைத்துக் கொள்வேன் . தினம் பின்னூட்டங்களை படித்து கருத்து சொல்ல நேரம் ஒதுக்க வேண்டுமே!

      நீக்கு
    2. உண்மைதான் கோமதி அக்கா...   நன்றி புரிந்துகொண்டிருப்பதற்கு.

      இரண்டு மூன்று வருடங்களுக்குமுன் சிட்டுக்குறி பாடல்கள்தான் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.  நீங்கள் சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு பாடல் சொல்கிறீர்கள் இல்லையா?  நான் பாதை தெரியுது பார் பாடலை சிபாரிசு செய்கிறேன்!  "தென்னங்கீற்று ஊஞ்சலிலே..."

      கொஞ்சம் முன்கூட்டி யோசித்திருந்தால் நேற்றைய வெள்ளி வீடீயோவை இந்தப் பாடலால் அலங்கரித்திருக்கலாம்.  இதுவும் பி பி எஸ் பாடல்தான்!

      https://www.youtube.com/watch?v=o7ghy77qPNk

      நீக்கு
    3. எனக்கும் பிடித்த பாடல் "தென்னகீற்று ஊஞ்சலிலே தென்றலில் ஆடும் சோலையிலே"

      எத்தனை பாடல் இருக்கிறது சிட்டுக்குருவி பாடல்கள்.

      //கொஞ்சம் முன்கூட்டி யோசித்திருந்தால் நேற்றைய வெள்ளி வீடீயோவை இந்தப் பாடலால் அலங்கரித்திருக்கலாம். இதுவும் பி பி எஸ் பாடல்தான்!//

      ஆமாம், நாங்களும் கேட்டு மகிழ்ந்து இருப்போம்.
      நானும் இப்போது காலை வர முடிவது இல்லை பதிவு பக்கம்.
      காலை விட்டு போய் இருந்த தியானம், உடற்பயிற்சியை செய்ய ஆர்ம்பித்து இருக்கிறேன், அப்புறம் காலை வேலை. சில நாள் பேரன் ஸ்கைப்பில் பேசுகிறான் அவனுக்கு விடுமுறை என்பதால். அதனால் மெதுவாக வந்து பதிவுகளை படிக்கிறேன்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  17. இங்கும் சிட்டுக்குருவிகள் படம் உற்சாகத்தைத் தருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் பார்த்து இங்கும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.சிட்டுக்குருவிகள் பார்க்க உற்சாகம் வருவது உண்மைதான்.

      நீக்கு
  18. அதானே..

    தங்களிடமிருந்து பதிவைக் காணோமே என்றிருந்தேன்...

    இப்படியெல்லாம் படங்களைப் பார்க்கையில் மனது மிகவும் உற்சாகம் அடைகின்றது...

    சின்னஞ்சிறு பறவைகள் நம்மைச் சுற்றித் திரிந்த சூழ்நிலையை விட்டு எப்படி வெளியேறினோம்....

    மனித சமுதாயம் எத்தனை பெரிய தீங்கினைச் செய்திருக்கிறது?...

    ஈரமுள்ள நெஞ்சினராலே இவ்வுலகம் சுழன்று கொண்டு இருக்கிறது...

    சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் இனியேனும்.

    அழகான படங்களுடன்
    அருமையான பதிவு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்

      //அதானே..

      தங்களிடமிருந்து பதிவைக் காணோமே என்றிருந்தேன்..//

      நீங்களும் நினைத்தீர்களா? மகிழ்ச்சி.
      முகநூலில் போட்டு விட்டு விட்டு விடலாம் என்று இருந்தேன், அதிரா விடவில்லை.
      நீங்கள் சொல்வது போல் இந்த சின்னஞ்சிறு பற்வைகள் நமக்கு மகிழ்ச்சியை அள்ளி தருவது உண்மை.

      மக்கள் இயற்கையை நேசித்தால் இவ்வகை உயிரினங்கள் வாழும்.
      நீங்கள் சொல்வது போல் ஈரமுள்ள நெஞ்சினராலே இவ்வுலகம் சுழன்று கொண்டு இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். ஒருவர் தன் வீட்டில் இந்த் குருவிக்கு என்று எத்தனை கூடுகள் அமைத்து இருக்கிறார்! அவர் வீட்டில் குருவிகள் உறசாகமாய் கீச் கீச் என்று சுற்றி திரிகிறது.

      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கும் வாழ்த்து சொன்னதற்கும் நன்றி, நன்றி.




      நீக்கு
  19. சிட்டுக் குருவிகளை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது சிங்காரச் சிட்டுக்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வலை ஒலை, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் என் பதிவை உங்கள் தளத்தில் இணைத்தற்கும் நன்றி.

      நீக்கு
  20. அழகான படங்கள்...

    சிட்டுக்குருவிகள் தினம். உங்கள் பதிவு இந்தத் தினத்திற்கு கூடுதல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  21. கோமதிக்கா இரவு வணக்கம் சொல்லி கருத்து போடுறேன் ஹா ஹா ஹா..

    வந்தாச்சுன்னு ஒரு அட்டெண்டென்ஸ் வைக்கணுமில்லையா இன்னும் பலருக்கும் வருகைப் பதிவேட்டில் பதியலை போணும்..

    நானும் உங்களையும் துரை அண்ணாவையும் நினைத்துக் கொண்டேன் நேற்று இருவரும் பதிவு போட்டிருப்பாங்களேன்னு...ஆனா வர முடியலை. துரை அண்ணா போட்டிருக்காரான்னும் பார்க்கணும்.

    சிட்டுக்குருவிகள் படங்கள் அனைத்தும் மிக மிக அழகு...ரொம்பவும் ரசித்தேன் கோமதிக்கா.

    கூட்டிற்குள் செல்வதற்கு முன் இடப்பக்கமும் வலப்பக்கமும் கழுத்தைத் திருப்பி ஒடித்துப் பார்த்துவிட்டு உள்ளே செல்லும் அழகு ஹையோ அப்படியே எடுத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்கும். என்ன சுறு சுறுப்பு...சிட்டெனப் பறப்பதால் சிட்டுக் குருவினு பெயர் வந்துருக்குமோ?

    அழகான பதிவு அக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
    உங்களை வரவேற்றேன் எங்கள் "ப்ளாக்கில்"
    நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை.
    தொடர்ந்து நீங்கள் வலைத்தளம் வர வாழ்த்துக்கள்.
    பதிவை ரசித்தும், உங்கள் கருத்தை அழகாய் சொன்னதற்கும் நன்றி கீதா.

    பதிலளிநீக்கு