சனி, 26 அக்டோபர், 2019

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

தீபாவளி உல்லாசம் பொங்கும் இன்பத்  தீபாவளி  சிலருக்கு. சிலருக்கு உறவுகளுடன் கொண்டாட முடியாமல் விடுமுறை கிடைக்காமல் இருக்கும்.   முன்பு ஊரில் கொண்டாடிய நினைவுகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளும் தீபாவளியாக இருக்கிறது.

சுகமான நினைவுகளை மனச்சுமையோடு  போனிலும், நேரடியாக வீடியோ காட்சியாகவும் பரிமாறிக் கொள்ளும் தீபாவளி சிலருக்கு.

பெற்றோர்  அக்கா,அண்ணன், தம்பி, தங்கைகள் இவர்களுடன் கொண்டாடிய தீபாவளி ஒரு தனி  இன்பம்.  அடுத்துக் கணவர் வீட்டாருடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி.  அடுத்துக் குழந்தைகள் வீடுகளில்.
இப்போது நாங்கள் மட்டும், உறவினர்கள் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார்கள்.  பண்டிகை உற்சாகம் குறைந்து தான் காணப்படுகிறது. அதைப் போக்க 'தீபாவளி அன்றும் இன்றும்'  என்று கொஞ்சம் கதம்பப் பதிவு. 



மங்கையர் மலரில் வந்த சிரிப்பு வெடி :- துணிக்கடையில் எதுக்கு சார் டாக்டர் ? என்ற கேள்விக்கு மனைவி வாங்கும் புடவையின் விலையைப் பார்த்து மயக்கம் போட்டு விழும்  கணவருக்கு உதவ  என்று சொல்கிறது.

ஆனால் இப்போது துணிக்கடைக்குப் போகாமல் யூ-டியூப்பில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வாங்கிக் கொள்கிறார்கள். மதுரை  அம்மன் சன்னதியில் உள்ள பழைய  துணிக் கடையில் புடவைகளைக் காட்டிப் பிடித்து இருந்தால் போன் நம்பர் கொடுத்து இருக்கிறார்கள்  போனில் எந்த புடவை பிடித்து இருக்கோ பதிவு செய்து கொள்ளலாம் என்கிறார்கள் கடையின் பெயர் 'நடராஜா' எல்லோரும் புதுமைக்கு மாறி விட்டார்கள்.

முன்பு தீபாவளிக் கூட்டத்தில் இடிபடாமல் இருக்க நவராத்திரி சமயம் தீபாவளித் துணிகளை எடுத்து விடுவோம் எங்கள் வீட்டில். மலைபோல் சேலைகள் குவிந்து கிடக்கும் கடையில், முன்பு  கடைகளில் ஆட்கள் குறைச்சலாய் இருப்பார்கள் மடித்து வைத்து மாளாது என்று  அப்படியே கடை மேஜையில் கிடக்கும்.

இப்போது ஆட்கள்  நிறைய இருக்கிறார்கள், ஆனால் எல்லாம் ஹேங்கரில் தொங்க விட்டு இருக்கிறார்கள்.  பிடித்த சேலையை எடுத்தால் பக்கத்தில் இருக்கும்  விற்பனைப் பெண்கள் பிரித்து விரித்து காட்டுவார்கள்.

விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் மட்டுமே எடுத்துக் காட்டப்படுகிறது. 
முன்பு  வார, மாத இதழ்களில் புதுடிசைன்  விளம்பரங்கள் வரும்

இப்போது இணையத்தில் விளம்பரம்



ஆன்லைனில் பதிவு செய்து வீட்டுக்குத் துணிமணிகள்  எல்லா நாளும் வாங்கிக் கொள்கிறார்கள் அதனால் தீபாவளி அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. அக்கம் பக்கத்தில் காட்டி மகிழ்வது இப்போது அவ்வளவாக இல்லை. குழந்தைகள் மட்டும்தான்   தீபாவளி  புது உடை, வாங்கப் போகும் வெடி என்று  எதிர்பார்ப்பில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.



முன்பு நம் அம்மா, மாமியார் , அக்கம் பக்கம், செய்முறைகள், மற்றும்  தீபாவளி சிறப்பு மலரில் வரும்  பட்சணங்கள் செய்து பார்த்து வீட்டில் உள்ளோரை மகிழ்விப்பதும், திகில் ஊட்டுவதும் உண்டு. அந்த அனுபவ தொடர்கள் வரும் பத்திரிக்கைகளில்- இப்போது  பதிவுகளிலும் உண்டு. 

இப்போது எல்லா நாளும் யூ-டியூப் , தொலைக்காட்சிகளில் எல்லா பண்டிகைகளுக்கும் அதற்குரிய பலகாரங்களும் செய்து காட்டுகிறார்கள். எல்லா நாளும் வித விதமான இனிப்புகள், காரங்கள் பார்க்கிறோம். அப்புறம்  திங்கள் கிழமை 'எங்கள் ப்ளாக்கில்'' வித விதமான பலகாரங்கள் செய்முறை வருகிறது.   இப்போது    எப்போது வேண்டுமென்றாலும் செய்து சாப்பிட வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கிறது.

பலகாரங்களும் ஆர்டர் செய்யலாம் -ஆன் லைனில் 

இப்படி பலதரப்பட்ட இனிப்புகள் ஒரே டப்பாவில் வைத்து விற்கிறார்கள்  கடைகளில் பரிசு என்று. அக்கம்பக்கத்துக்குக் கொடுக்க.

                                               வீட்டுக்கு வந்த விளம்பரம் 



பண்டிகைக்காலங்களில் மருதாணி முக்கிய இடம்பெறும்

மருதாணி இலையைப் பறித்து அரைத்து வைப்பது இல்லை,  மெஹந்தி கோன் வாங்கிக் கைகளில்  வித விதமாக வரைந்து கொள்கிறார்கள் சிலர். அவர்களுக்கு வேண்டிய  டிசைன் மேலே உள்ள பத்திரிக்கையில்.

பண்டிகைக் காலங்களில் அம்மா இரண்டு கையில் மருதாணி , கால்களில் மருதாணி வைத்து விடுவார்கள், மருதாணி காய்வதற்குள் அவர்களை எத்தனை பாடுபடுத்துவோம். காய்ந்த பின் சிவந்த வண்ணத்தைப் பார்த்து குதூகலிப்போம். அக்கம் பக்கம் இருக்கும் மருதாணி மரங்கள் மொட்டை ஆகும்  பண்டிகைக் காலங்களில்.

மாயவரத்தில் இரண்டு சிமெண்ட் தொட்டியில் மருதாணி வைத்து இருந்தேன், நாள் கிழமைகளில் முதல் நாளே அரைத்து வைத்து விடுவேன். மருதாணி கோன் பிடிக்காது.

பண்டிகைக் கால ஜாலி கற்பனை

தீராதே இட்லி என்று இதில் சொல்கிறார்கள், ஆனால்
எங்கள் வீட்டில் பலகாரங்கள் கொஞ்சம் கொஞ்சம் வைக்க வேண்டும். இலையில் சூடான இட்லி  சட்னிதான் வேண்டும்.
துணிமணிகள், பலகாரம் அதனுடன் வெடிகள் - விளம்பரம் -தமாஷ் கற்பனையாம் டூபாக்கூர் பட்டாசு கடை தயாரித்த ஸ்பெஷல் வெடிகளாம்.


வடநாட்டில்  தீபாவளி அன்று புதுக் கணக்கு லட்சுமி பூஜை உண்டு.  வண்டலூரில் உள்ள லட்சுமி குபேர கோவில் பற்றி தீபாவளி மலரில்.

தீபாவளி அன்று கங்கையும், லட்சுமியும்  நம் இல்லம் நோக்கி வருகிறார்கள்.
அன்று குளிக்கும் வெந்நீரில் கங்கையும், நல்லெண்ணெயில் லட்சுமியும் உள்ளார்கள். இன்று தன்வந்திரி ஜெயந்தி. வட நாட்டில் பெண்கள் நோய் விலக வேண்டுகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி பெருமானுக்குத் தனி சன்னதி  உள்ளது.

காசியில் தங்க அன்னபூரணி லட்டுத் தேரில் வருவார்.  நாம் வீட்டில் இருந்த படியே அன்னபூரணியை வணங்கிச் சகல பாக்கியங்களையும் பெறுவோம்.  

காலை பூஜைகள் செய்து  லடசுமி, குபேர அருள் பெற்று எல்லோரும்  எல்லோரும் பண்டங்கள்  கொடுத்து உறவுகளுடன், நட்புகளுடன் மகிழ்ந்து இருங்கள். 

அமாவாசை வந்து விடுவதால் நம் முன்னோர்களையும் அன்று வழிபடுவோம்.


வயதானவர்களைச் சந்தித்து அவர்களின் ஆசி பெற்று  அவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துங்கள்.

அப்படியே  ஆதரவற்றவர்களுக்கும்  நம்மால் முடிந்த  பண்டங்களை கொடுக்கலாம். நம் வலை நட்புச் சகோதரி கீதாரெங்கன்  தன் வீட்டுக்கு அருகில் உள்ள 16 ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பலகாரங்கள் கொடுக்க  இருக்கிறார்.(கீதாவே செய்த பலகாரங்கள் கடையில் வாங்கியது இல்லை) நல்ல உள்ளத்தை பாராட்டுவோம்!

 நேற்று பார்த்த காட்சி:- பள்ளி வேனில் வந்து குழந்தைகள்   இனிப்பு , காரம்  இரண்டு பெட்டிகளை எடுத்துக் கொண்டு  ஒரு வீட்டுக்குள் போனார்கள். இரண்டு ஆசிரியர்கள் குழந்தைகளை வழி நடத்திக் கூட்டிப் போனார்கள் அந்த வீட்டின் வாசலில் ''ஏசு அழைக்கிறார் உங்களை என்று இருந்தது.'' செல் போன் எடுத்து போகவில்லை கடைத்தெருவிற்கு அதனால் போட்டோ எடுக்க முடியவில்லை. அந்த குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள்!

நண்பர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் நம் பலகாரங்களை  கொடுத்து மகிழலாம்.

உறவுகள், உடன்பிறப்புகள் பலகாரங்கள் கொடுத்து விட்டு அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.

தம்பி திருநெல்வேலி ஹல்வா, மிச்சர்
தங்கை அதிரசம், நெயுருண்டை, ரவா லாடு, தேன்குழல், மைசூர்பாக்
என் அண்ணி மைதா உடம்புக்கு  தீங்கு என்று கோதுமை மாவில் சோமாஸி செய்து இருந்தார்கள். நன்றாக இருந்தது. மிச்சர், ரவா உருண்டை
மருமகளின் உறவினர் பாதுஷா, தட்டை


நான் வீட்டுக்கு வாங்கியது லட்டு, ஓலை பக்கோடா -நகரத்தார் அம்மா செய்து கொடுத்தது, நன்றாக இருக்கிறது .வீட்டுத் தயாரிப்பு
 தீபாவளி இனிப்பு என்று  வியாழன் அன்று   சாய் கோவிலில் கொடுத்த ரவா கேசரி , மலர் பிரசாதம்.

அனைவருக்கும் ''இனிய  தீபாவளி  நல் வாழ்த்துக்கள்! "

                                                                வாழ்க வளமுடன்.

52 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    அழகான தீபாவளி பதிவாக பல செய்திகளை புதுசும், பழசுமாக கலந்து கட்டி வெளியிட்டிருக்கிறீர்கள். அத்தனையும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. முந்தியெல்லாம் கடைக்குப் போய் துணி மணிகள், இதர சாமான்கள் என பார்த்து,பார்த்து வாங்குவோம். இப்போது எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே வாங்கிக் கொள்ள முடிகிறது. இது வர்த்தகர்களுக்கு லாபமா? இல்லை நமக்கு நஷ்டமா? எனத் தெரியவில்லை.ஆனால் விஞ்ஞான முன்னேற்றம் மட்டும் புரிகிறது. பத்திரிக்கைகளில் வந்த துணுக்குகள், நகைச்சுவைகள் என அனைத்தும் சிறப்பாக இருந்தது.

    அம்மா வீட்டிலும் உறவுகளுடன் சேர்ந்து நவராத்தி சமயத்தில் தீபாவளிக்கு துணிகள் வாங்கி விடுவோம். புடவைக்கு அப்போதே பிளவுஸ் தைக்க கொடுத்தால்தான் தீபாவளி முதல் நாளாவது கைக்கு வந்து சேரும். நாளை புது துணிகள் அணியப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பே ஒரு மகிழ்வான சூழ்நிலையை உண்டாக்கியது இப்போது நினைத்தால் புதுசை வாங்கி அனுபவிக்கிறோம்.அது போல் இனிப்புக்களும் எப்போது வேண்டுமோ வாங்கியோ, செய்தோ ருசிக்கும் சூழ்நிலைகள் உண்டாகி விட்டது. பண்டிகைகளின் வரவின் தாக்கம் முன்பு போல், நம்மை பாதிக்கவில்லை. குழந்தைகளும் வெளிநாடு என்றிருந்தால், அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கும் போது ஒரு மாதிரிதான் உள்ளது. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே...!

    தங்கள் உறவுகளின் மூலம் வந்திருக்கும் தீபாவளி படசணங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. நீங்கள் சாஸ்திரத்திற்கு மட்டும் படசணங்கள் பண்ணினால் போதும். ஆனால் தந்த வர்களுக்கு மறுபடியும் முறைப்படி தர வேண்டுமென்றால் அதிகமாகச் செய்யத்தான் வேண்டும்.சகோதரி கீதா ரெங்கன் அவர்களின் நல்ல மனதிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பதிவு அருமை. ரசித்துப் படித்தேன். பகிர்வினுக்கு மிக்க நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், தங்கள் உறவினர்களுக்கும்,இனிதான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      விஞ்ஞான முன்னேற்றத்தால் கடைகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு நன்மை.
      வர்த்தகர்களுக்கு நன்மைதான் எவ்வளவு விளம்பரங்கள் செய்கிறார்கள்.

      நீங்கள் சொல்வது சரிதான் துணி தைக்க கொடுத்து வாங்குவது ஒரு பெரிய வேலை.
      அந்தக்காலத்தில் தீபாவளி காலத்தில் தையல் கடைக்கார நகைச்சுவை எல்லாம் நிறைய இருக்கும்.

      வெளினாட்டில் இருப்போர் நம்மையும்,நாம் அவர்களையும் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் வேறு என்ன செய்யமுடியும்?

      வடை, அவல் பாயாசம் மட்டும் தான் நாளை. உறவினர்களுக்கு லட்டு, ஒலை பக்கோடா கொடுத்து தட்டை முறுக்கு கொடுத்து விட்டேன்.

      கீதாவை பாராட்டியது மகிழ்ச்சி. அந்த குழந்தைகளுக்கு நிறைய நல்லதுகள் செய்ய ஆசை கீதாவிற்கு.

      அனைத்தையும் ரசித்து படித்து அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

      குழந்தைகளுக்கு இனிப்புகள் அவர்களுக்கு பிடித்த காரங்கள் வாங்கி கொடுங்கள் பண்டிகை இல்லையென்றால் அவர்கள் மனது வருத்தபடும்.





      நீக்கு
  2. தீபாவளி சிறப்பு பகிர்வு மிகவும் நன்று. வாழ்த்துகள் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்களுக்கும் ஆதி, ரோஷ்ணிக்கும் வாழ்த்துக்கள்
      கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. படம் பார்க்கும் போதே எச்சில் ஊறுகிறது. சாந்தி ஸ்வீட் அல்வா. தீபாவளி குறள் நன்றாக இருக்கிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்
      சாந்தி ஸ்வீட் அல்வா பிடிக்குமா? இருட்டுகடை அல்வா கடையில் பயங்கர கூட்டமாம், அதனால் சாந்தி கடை அல்வா. இதுவும் நன்றாகத்தான் இருக்கும்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. அழகிய படங்களுடன் கதம்ப தொகுப்பு அருமை.

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      கதம்ப தொகுப்பை ரசித்தமைக்கு நன்றி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கண் அறுவை சிகிட்சை நன்றாக நடந்து இருக்கும்.ஓய்வு எடுத்துக் கொண்டு வந்தது மகிழ்ச்சி. உங்கள் பதிவை படிக்க வேண்டும்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. மிக சூப்பரான கதம்பம். ரசித்துப் படித்தேன்.

    அதிலும் பலதரப்பட்ட பட்சணங்கள்... ஆஹா.... அருமை... கேடரிங் விலைப்பட்டியல் (இனிப்புகள்) அதை மட்டும் பெரிதுபடுத்திப் பார்க்கிறேன். ஆசையைத் தூண்டுகிறது.

    முன்பெல்லாம் தீபாவளி மலர் வாங்குவீர்களா? இப்போது வாங்கினீர்களா? ஆம் என்றால் எந்த எந்த தீபாவளி மலர்கள்?

    இப்போதான் கவனிக்கிறேன்... எல்லாம் வரவு வந்த பட்சணங்கள். நீங்க என்ன என்ன பண்ணினீங்க?

    உங்களுக்கும் சாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் வாழணும்னு ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      பட்சணங்கள் விலைப்பட்டியலில் இனிப்பை மட்டும் பெரிது பட்டுத்தி பார்த்தீர்களா?
      இனிப்பு சாப்பிட மாட்டேன் என்கிற விரதத்தை தள்ளி வைத்து இனிப்பை சாப்பிடுங்கள்.

      முன்பெல்லாம் தீபாவளிக்கு கோவை போய் விடுவோம் வருடா வருடம் மாமனார் வீட்டுக்கு அப்போது ரயிலில்தான் போவோம். நிறைய தீபாவளி மலர்கள் வாங்குவோம். விகடன், கலைமகள் எல்லாம் சொல்லி வைத்து வாங்குவோம். அதை எல்லாம் தேடி எடுக்க வேண்டும்.
      நவராத்திரிக்கு புத்தக அலமாரியை கொலு பொம்மைகள் வைக்க மாற்றியதால் புத்தகங்கள் ஒவ்வொன்றும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள் .

      நான் வடையும் , பஜ்ஜியும், அவல் பாயாசமும் நாளை செய்ய போகிறேன் . அவ்வளவுதான் இந்த தடவை.

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி நன்றி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். நீங்கள், உங்கள்மகள், மனைவி என்ன பலகாரம் செய்தார்கள் என்று சொல்லுங்கள் .
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்... நான் இனிப்பு 4 டிசம்பர் வரை சாப்பிடறதில்லைனு விரதம். பெண் ரொம்ப பிஸி.. அவளுக்கு இனிப்புல இஷ்டம் இல்லை. மனைவியை ஒரு ஸ்வீட் (ஒக்கோரை- உக்காரை என்பது செட்டிநாட்டுப் பெயர்), ஒரு காரம் மட்டும் பண்ணு, தீபாவளி மருந்து பண்ணுன்னு சொன்னேன். அவள் சிறிய அளவில், நான்கு இனிப்புகள் (ஒக்கோரை, 7 கப் கேக், இன்னொரு கேக், ஜாங்கிரி), காரத்தில் தேன்குழல் (இப்போ அந்த மாவை முள்ளுமுறுக்கு அச்சில் நான் கொஞ்சம் செய்தேன்), தீபாவளி மருந்து பண்ணியிருக்கா. ஜாங்கிரி, சரியாக வரலை. மற்றவை பார்க்க நன்றாக வந்துள்ளன. (நான் இஷ்டப்படி டிசைனில் முள்ளுமுறுக்கு பிழிந்தேன்..ஹாஹா).

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நாளை நானும் மிளகாய் பஜ்ஜி மதியத்துக்கு பண்ணலாம் என்று நினைத்திருக்கிறேன். பாயசம் பண்ணுவாள்னு நினைக்கறேன் (ஆனா நான் சாப்பிடமாட்டேன்...விரதம் ஹாஹா)

      நீக்கு
    3. டிசம்பர் 4 வரை என்ன கணக்கு? விரதம் இருந்தால் நல்லது தான். நாள் கிழமையில் இனிப்பு சாப்பிடவில்லை என்றால் வீட்டில் வருத்தபடுவார்களே அதனால் சாப்பிட சொன்னேன் இனிப்பை.

      நானும் உக்காரை செய்யலாம் என்று நினைத்தேன் இனிப்பு சார் சாப்பிடுவது இல்லை.
      உறவினர் கொடுத்த இனிப்புகள் நிறைய இருக்கிறது . வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

      உங்கள் இஷ்டபடி முள்ளு முறுக்கு பிழிந்தது நன்றாகத்தான் இருக்கும் பார்க்க.
      ஜாங்கிரி எப்படி இருந்தாலும் வீட்டில் செய்து விட்டார்கள் அதுதான் சிறப்பு.

      நான் இன்று சாமி கும்பிட வாழைக்காய் பஜ்ஜி, அப்பம், உளுந்து வடை செய்தேன். மதியம் குடை மிள்காய் பஜ்ஜியும், பாயசமும் செய்ய வேண்டும்.
      கோவில் போய் வந்தேன் பக்கத்தில் .

      நல்ல விரதம் போங்க.
      ஞாயிறு விரதம் இருப்போம் சாருக்கு விரதம் இருக்க கூடாது என்று டாகடர் சொன்னதால் விட்டு விட்டோம்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி.


      நீக்கு
  7. அன்றும்,இன்றும் பதிவாக இருக்கிறது. உண்மையில் ஊரில் தீபாவளி,வருஷம்,பொங்கல் என்ரால் நாங்களும் இப்படித்தான் கொண்டாடியிருப்போம். இங்கு இம்முறை லீவு நாளானபடியால்,சமையல் சாப்பாடுதான். இனி எப்ப லீவு நாளில் வருமோ தெரியாது. நான் மிக்ஸர்,பூந்தி லட்டு,முறுக்கு செய்தேன் அக்கா. நாளை சமைத்து சாப்பிடவேண்டியதுதான்.
    இந்த தீபாவளி மலர்கள் எல்லாம் வரும்,(ஊரில் அப்பா எல்லா புத்தகங்களும் வாங்குவார்.) எதை வாசிப்பது என் என சகோதரிகளுக்குள் போட்டி.
    உங்களுக்கு வந்திருக்கும் பலகாரங்கள் அருமை. கீதாரெங்கனுக்கு என வாழ்த்துக்கள்.
    இப்போ எல்லாமே மாறிவிட்டது. எல்லாமே ஆன்லைனில் கிடைக்கும் வகை தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால் எல்லாமே இயந்திரதனமாகிவிட்டது. முன்பு வாழ்த்து அட்டைகளால் தபால்காரர் திணறிபோவார். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. நாங்கள் அன்பை ,வாழ்த்தை இப்படி பரிமாறி இருக்கோம். பின்பு அவர்கள் வீட்டுக்கு போனாலோ,அல்லது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலோ குதூகலமாகி இருக்கும் அந்நாட்கள். இப்போ இவை அனைத்தும் மறைந்துபோகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்நாளில் அதனை நினைத்துப்பார்க்கவேண்டிய்துதான்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      புத்தகங்கள் வாசிக்க போட்டி தான் இருக்கும் சிறு வயதில்
      கல்யாணம் ஆனவுடன் பஸ் பயணம், ரயில் பயணத்தில் தீபாவளி சிறப்பு மாத , வார புத்தகங்கள் வாங்கி ஆளுக்கு ஒன்றாய் போட்டி இல்லாமல் படித்து போவோம்.

      அன்பை பரிமாறி ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்த்து அட்டை அனுப்பி கொள்வோம் நாங்களும்.

      இப்போது வாட்ஸப் வாழ்த்து. நானும் இன்று புதிதாக ஒரு வாழ்த்து அனுப்பினேன். தீபாவளி பரிசு, ரகசியம் என்றெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்து புதுபுதிதாக வாழ்த்துக்கள் . காலத்துக்கு ஏற்றார் போல் அனுப்பியாச்சு.

      நீங்கள் செய்த பலகாரங்களை படம் எடுத்து உங்கள் வீட்டு தீபாவளியை பதிவு போடுங்கள் அம்மு.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அம்மு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. காலம்பரயே படிக்க உட்கார்ந்தேன். பாதியில் வேலை வந்துவிட்டது. இப்போத் தான் முழுசும் படிச்சேன். அருமையான கதம்பம். கெட்டிக்கதம்பம். மரிக்கொழுந்துக் கதம்பம். அதான் நீண்ட நாட்கள் வாசனை வரும்படி எழுதி இருக்கிறீர்கள். பக்ஷணங்கள் அனைத்தும் பார்க்கவே நன்றாக இருக்கிறது. அதிலும் உறவுகளின் அன்பும் சேர்ந்துள்ளதே! நன்றாகவே இருக்கும். நீங்கள் கொஞ்சம் போல் எண்ணெய்ச் சட்டி வைத்துப் பண்ணி இருந்திருக்கலாம். உடம்பு ஒண்ணும் இல்லை தானே! மிகச் சோர்வில்/மனச்சோர்வு? இருக்கீங்க போல. குழந்தைகளை நினைத்தும் மனசோர்வு வரும். நாங்க இன்னிக்குக் காலம்பர இரண்டு பேருமா உட்கார்ந்து இந்தியாவில் உள்ள உறவுகள், நட்புகள், வலைப்பதிவு நெருங்கிய நட்புகள், வாட்சப் குழுமங்களில் உள்ளவர்கள் என அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துச் சொன்னோம். ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. எல்லோரிடம் இருந்தும் வரும் பதில்களைப் படிக்கவும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. நம்மை நாமே இப்படித் தான் உசுப்பி விட்டுக்கணும். மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இனிமையான தீபாவளியாக அமையப் பிரார்த்தனைகள். உங்கள் கணவரையும் கேட்டதாகச் சொல்லவும். தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //அருமையான கதம்பம். கெட்டிக்கதம்பம். மரிக்கொழுந்துக் கதம்பம். அதான் நீண்ட நாட்கள் வாசனை வரும்படி எழுதி இருக்கிறீர்கள்//

      உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி.
      நாளை வடை, பஜ்ஜி, அப்பம் , பாயாசம் செய்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

      அப்படித்தான் நானும் எல்லோருக்கும் வாழ்த்து சொன்னேன். நினைவுகளை பரிமாறி கொண்டோம்.

      உடம்பு ஒண்ணும் இல்லை, கால்வலி, கைவலி வந்து வந்து போகும்.

      //இனிமையான தீபாவளியாக அமையப் பிரார்த்தனைகள். உங்கள் கணவரையும் கேட்டதாகச் சொல்லவும். தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்.//

      உங்கள் வாழ்த்துக்களையும் விசாரிப்பையும் தெரிவித்து விட்டேன். தங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      பேத்திகளுக்கு அன்பும் ஆசீர்வாதங்களும். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் அம்மா...தீவாவளி வாழ்த்துகள்.
    அன்றைய தீபாவளி அருமையான நினைவுகளாய் இன்றும் இருக்கிறது. ஆனால் இப்போது எல்லாம் இயந்திரத்தனம் ஆகிவிட்டது. பலகாரகங்களும் கடைகளில் கிடைத்து விடுகிறது.

    நாம் செய்து கொடுத்து மகிழ்வது தனி சுகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      ஆமாம் , நானும் ஒரு ஆச்சியிடம் ஓட்டு பக்கோடா, லட்டு வாங்கினேன்
      வைத்து கொடுக்க. நன்றாக செய்து இருந்தார்கள்.
      நாமே செய்தால் அதில் மகிழ்ச்சி, அதை மற்றவர்கள் பாராட்டினால் கிடைக்கும் மேலும் மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. தங்களுக்கும் ஐயா அவர்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

      நீக்கு
  11. தங்களது பதிவு இப்படித்தான் இருக்கும் என முன்பே நினைத்திருந்தேன்...

    அருமை.. அருமை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவை யூகித்து விட்டீர்களா?
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. இனிய தீபாவளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  13. //இப்போது நாங்கள் மட்டும், உறவினர்கள் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார்கள்.//
    இல்லை, நாங்களும் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், உங்கள் வார்த்தை மகிழ்ச்சி அளிக்கிறது.
      நன்றி.

      நீக்கு
  14. இனிய நினைவுகள்...   பழைய நினைவுகளை அசைபோட்டதும் நன்று.  எங்கள் தளத்தைச் சொன்னதும் நன்று!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி பழைய நினைப்புதானே வ்யதானவர்களுக்கு
      அசை போட்டு கொண்டு இருக்க வேண்டியது தான்.

      உங்கள் தளம் திங்கள் கிழமையை சொல்லாமல் இருக்க முடியுமா?

      உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அவர்கள் உண்மைகள், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. இந்தப் பகிர்வே தீபாவளி போல் உள்ளது அம்மா...

    தீபத்திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  17. சிறப்பான தீபாவளி பகிர்வு.

    பெற்றோருடன் கொண்டாடிய தீபாவளி என இனிய நினைவலைகள் எம் மனத்திலும்.
    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      இனிய நினைவலைகள் உங்களுக்கும் வந்தது மகிழ்ச்சி.
      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      நீக்கு
  18. நினைவுகளை மலரச் செய்தது தங்கள் பகிர்வு. இப்போதைய கொண்டாட்டங்கள் குறித்தான தங்கள் கருத்துகள் முற்றிலும் உண்மையே.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      நீக்கு
  19. அருமையான கதம்பம். காலத்திற்கேற்றாற்போல் சொல்ல வேண்டுமென்றால் கரகரப்பு, மொறுமொறுப்பு கொண்ட சுவையான மிக்ஸர்.  பழைய நினைவுகளை படங்களோடு பகிர்ந்து கொண்டுள்ள விதம் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க்ம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் விமர்சனம் மிக அருமை.
      நன்றி.

      நீக்கு
  20. /அக்கம் பக்கத்தில் காட்டி மகிழ்வது இப்போது அவ்வளவாக இல்லை.//  இல்லவே இல்லை எனலாம். 
    //அக்கம் பக்கத்தில் காட்டி மகிழ்வது இப்போது அவ்வளவாக இல்லை.//  இல்லவே இல்லை எனலாம். 
    உங்கள் உறவினர்கள் கொண்டு வந்திருக்கும் பட்சணங்கள் பார்க்கவே நன்றாக இருக்கின்றன. சுவையிலும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு , வாழ்க வளமுடன், அக்கம் பக்கம் என்பது அடுக்குமாடி குடிபிருப்புகளில் இல்லை. மற்றபடி சில குடியிருப்புகளில் இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று சிலருக்கு தெரியாது தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை.

      உறவினர் வீட்டு போய் இருந்தேன் , ஊரிலிருந்து வந்த குழந்தைகளை பார்க்க.
      இப்போது தான் வந்தேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  21. அருமையான பதிவு

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Yarlpavanan, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  22. அன்பு கோமதி,
    இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.
    காலையிலிருந்து இங்கு இணையம் சரியில்லை. அது சரியானபோது உங்கள் எல்லோருக்கும் தீபாவளி பூர்த்தியாகி இருக்கும்.

    அருமையான அன்றும் இன்றும் பதிவு.
    நல்ல நினைவுகள் தாம் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

    வந்திருக்கும் அத்தனை பலகாரங்களும் பார்க்கவே ஜோர்.
    அதுவும் நாட்டார் செய்த ரிப்பன் பக்கோடா வண்ணம் மிக அழகு.

    இங்கு மருமகள், சம்பிரமமாக காலை உணவு, மதிய உணவு என்று
    செய்து அமர்க்களப் படுத்திவிட்டார்.

    குழந்தைகள் இதோ மத்தாப்பு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
    இந்த அன்பு தான் நமக்கு வேண்டும். தொலைபேசி அழைப்புகளும், வீடியோ விசாரணைகளும் மகிழ்ச்சி கூட்டின.
    என்றும் இறைவன் அருள் கூடி நிற்கக் குழந்தைகள் வாழ்வு செழிக்க நம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
      தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி அக்கா.

      //நல்ல நினைவுகள் தாம் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.//

      ஆமாம் அக்கா, நீங்கள் சொல்வது உண்மை.

      //வந்திருக்கும் அத்தனை பலகாரங்களும் பார்க்கவே ஜோர்.
      அதுவும் நாட்டார் செய்த ரிப்பன் பக்கோடா வண்ணம் மிக அழகு.//

      நீங்கள் சொல்வது சரிதான் வண்ணமும் அழகு ருசியும் நன்றாக இருக்கும்.


      இங்கு மருமகள், சம்பிரமமாக காலை உணவு, மதிய உணவு என்று
      செய்து அமர்க்களப் படுத்திவிட்டார்.

      //குழந்தைகள் இதோ மத்தாப்பு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
      இந்த அன்பு தான் நமக்கு வேண்டும். தொலைபேசி அழைப்புகளும், வீடியோ விசாரணைகளும் மகிழ்ச்சி கூட்டின.//

      இந்த அன்புதான் நமக்கு வேண்டும். மகிழ்ச்சியும் அதுதான்.


      //என்றும் இறைவன் அருள் கூடி நிற்கக் குழந்தைகள் வாழ்வு செழிக்க நம் பிரார்த்தனைகள்//

      பிரார்த்தனைகள் செய்வோம் அக்கா அதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  23. உண்மைதான் கோமதி அக்கா, இப்போ கடைகடையாக தேடி வாங்குவதைவிட, ஓன் -லைனில் ஈசியாக வாங்க முடியுது. நானும் இப்போ அதிகம் ஓன் -லைன் ஓடர்தான்.. உடுப்பு என்றில்லை.. அனைத்தும்.

    ஆனாலும் நீங்க சொன்னதுபோல் முன்பு எனில் புத்தகங்களில் பார்க்கும் மகிழ்ச்சி இப்போது இல்லைத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      கடை கடையாக அலைந்து தேவையானதை அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி வாங்கு வதில் ஆனந்தம் இருந்தது. ஆன் லைனில் அதற்கும் வசதி இருக்கிறது.

      இன்னது என்று இல்லாமல் அனைத்தும் கிடைக்கிறது.
      முன்பு புத்தகங்களில் (பேசும் படம்) நடிகைகள் தீபாவளி சமயம் புடவைக்கு ஏற்ற ஜாக்கெட் , எல்லாம் அணிந்து போஸ் கொடுத்து விள்ம்பரம் செய்வார்கள்.
      பார்க்க அழகாய் இருக்கும். வித விதமாய் ஜாக்கெட் மாடல் பார்ப்பார்கள்.

      நீக்கு
  24. ஓ உங்களுக்கும் நிறையப் பதார்த்தங்கள் அதுவும் தீபாவளிக்கு முன்னமே வந்து விட்டதே.. அதிகம் இனிப்பெனில் எப்படிச் சாப்பிடுவது.

    தங்கையின் அதிரசம் மிகப் பெரியதாக இருக்குதே. நானும் இன்று செய்தேன், கெளரி காப்புக்காக.. ஆனா நாங்கள் குட்டிக் குட்டியாகத்தான் தட்டுவோம்..

    அழகிய பதிவு மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்குத்தான் ச்ச்சோ ரயேட்ட்ட்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய இனிப்பு வந்து இருக்கிறது , நான் படம் எடுத்து போட்ட பின். டப்பா டப்பாவாக.
      குழந்தைகள் இருக்கும் உறவினர் வீட்டுக்கு இன்று கொடுத்து வந்தேன்.
      மாமா இனிப்பு சாப்பிட மாட்டார்கள்., நானும் அவ்வளாவ விரும்புவது இல்லை.
      நான் சின்ன சின்னதாக தான் அதிரசம் செய்வேன். அவள் வைத்து கொடுக்க என்று பெரிதாக செய்து இருக்கிறாள்.
      கெளரி கேதார விரதம் செய்வீர்களா?
      கந்த சஷ்டி விரதம் இருக்கிறீர்கள் தானே! எப்போதும் தீபாவளிக்கு பின் இந்த கந்தசஷ்டி விரதம் வந்து விடும் உடல் நலத்தை காப்பாற்ற.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. நவராத்திரியில் ஆரம்பித்தால், கெளரிவிரதம் காப்பெடுத்து அப்படியே தொடர்ந்து கந்தசஷ்டியும் முடித்தபின்பே பாரணை செய்வோம்...

      நீக்கு
    3. நல்லது அதிரா. விரதமுறை தெரிந்து கொண்டேன்.
      உங்கள் விரதம் நல்லபடியாக நடந்து நிறைவு பெற வெற்றிவேல் முருகன் அருள்வார்.
      கந்தவெள் முருகனுக்கு அரோகரா
      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

      நீக்கு