செவ்வாய், 23 ஜூலை, 2019

யானைமலை

யானை மலை நோக்கிப் பயணம் . பசுமை நடையின் 101 வது நடை. பிப்ரவரி மாதம் 10.2.2019 ல் 100வது நடை  அதன் பின்  7.7.2019 ஞாயிறு மீண்டும் பசுமை நடை தன் 101 வது நடையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 முதன் முதலில் 36 பேருடன் ஆரம்பித்த யானைமலையை நோக்கித் தன் பசுமை நடைப் பயணத்தை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்து இருக்கும்    அவர்களை வாழ்த்துவோம். இந்த நடைக்கு வந்தவர்கள் 250 பேர்.

சமணர்களின் எண்பெருங்குன்றங்களுள் ஒன்றாக ஆனைமலை அக்காலத்தில்  திகழ்ந்தது.



காலை 6 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு  (இப்போது    எம்.ஜி.ஆர் நிலையம்) எதிரில் இருக்கும் ஓட்டல் சரவணபவனுக்கு வரச்சொன்னார்கள். எல்லோரும் அங்கு வந்து பின் அங்கிருந்து கிளம்பினோம்.
நாங்கள் முன்பே வந்து விட்டதால் அப்படியே காமிறாவை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அக்கம் பக்கம் ஒரு பார்வை ,  ஓட்டலை அடுத்துப் போகும் கால்வாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை,  ஆகாய தாமரை  படர்ந்து இருந்தது.காட்டு ஆமணக்கு, ஊமத்தம்பூச் செடிகள் ஒரத்தில் இருந்தது.

7மணிக்கு எல்லோரும் வந்து விட்டார்கள். அங்கிருந்து பயணம்.  அவர் அவர் வந்த வாகனங்களில் கிளம்பினோம்
நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள  தோரண வாயில்
நரசிம்மர் கோயில் அருகில் இருக்கும் இந்த மலைக்கோவிலின் அருகில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆனைமலையை பார்க்கக் கிளம்பினோம்.
நம்மை வரவேற்றது


கால்வாய் புதிதாகக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
அதனால் ஆனை மலை  சமணச்சின்னம் பலகை மண்ணில் புதையுண்டு கிடக்கிறது. முள்வேலியும் கீழே கிடக்கிறது

மண்குவியலையும் கால்வாயையும் கடந்து உள்ளே போனால்


படிகள் வருகிறது
ஒழுங்கற்ற மேடு பள்ளமான படிகள்
பிடித்துக் கொண்டு ஏறக் கம்பி இருக்கிறது
மேலே போகும் வரை மிகக் கவனமாய்  ஏறவேண்டும், என் போன்றவர்கள் , தரையைக் கவனிக்காமல் தடுக்கி விழுபவள் நான். அதனால் மிகக் கவனமாய்ப் படிகளில் ஏறினேன். ஏறி இறங்கியதில் இரண்டு நாள் வலி இருந்தது கால்களில்.  குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மலை ஏறினார்கள்.


எல்லோரும் அவர் அவர்களுக்கு வசதியான இடம் பார்த்து அமர்ந்து விட்டார்கள்.
பசுமை நடையை துவக்கிய 36 பேருடன் துவக்கிய வரலாறை திரு. முத்துகிருஷ்ண்ன அவர்கள் சொல்கிறார்கள். இந்த மலையை உடைக்கக் கூடாது என்று தங்களுடன் போராட்டங்கள் நடத்தி இந்த மலையை தக்க வைத்துக் கொண்ட கிராம மக்களைப் பற்றியும் சொன்னார்.


தொல்லியல் பேராசிரியர் சாந்தலிங்க ஐயா இங்குள்ள சமணச் சிற்பங்களைப் பற்றியும், கல்வெட்டுக்களைப் பற்றியும் சொல்கிறார்.  இந்த இடம் சமய ஓற்றுமை உள்ள இடமாய் திகழ்ந்தது என்றும் சொல்கிறார். நரசிங்ககிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சமணத்துறவிகளை பாதுகாப்பதாய் உறுதி மொழி எடுத்து கொண்டதையும் சொல்கிறார்.



பேராசிரியர் பெரியசாமி ராஜா அவர்கள் இங்குள்ள நரசிம்மர் கோவில் பற்றியும் இந்த ஆனைமலையைப் பற்றியும் பேசுகிறார். அன்று உள்ள கல்விமுறை, இக்கால கல்வி முறை பற்றியும் பேசுகிறார்.


மஹாவீரர் முக்குடையின் கீழ் இருக்கிறார். கல்வெட்டுக்களும் தெரியும்





யானை மலைமேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில்   நரசிம்மர் கோவில் அருகில் உள்ள லாடன் கோவில் என்று அழைக்கபடும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்த பதிவில்.

                                                   
 பேசுவதை குறிப்பு எடுத்ததைப் படம் எடுத்து இருக்கிறார், பசுமை நடை குழுவில் உள்ள ராஜேஷ்குமார் சுப்பிரமணியம் என்பவர். யானைமலை பதிவு படங்களை( 26 படங்கள், அதில் ஒரு படம் என்படம்)  முக நூலில் பசுமைநடை குழுவில் பகிர்ந்து இருந்தார். அவருக்கு நன்றி.
 வாழ்க வளமுடன்

61 கருத்துகள்:

  1. எப்போதும் போல் மிகத் தெளிவாகவும், அழகாகவும் விளக்கியிருக்கிறீர்கள். படங்கள் துல்லியம். நம் பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெற வேண்டியவை பசுமை நடை ஆர்வலர்களின் தொண்டு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி. ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
    உங்கள் பயண தொடர் படித்துக் கொண்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    படங்களும் அருமையா இருக்கு. சிற்பங்களை இன்னும் பக்கத்திலிருந்து போட்டோ எடுத்திருக்கலாம்.

    இளைய தலைமுறையையும் பசுமை நடையில் ஈடுபடுத்துவதும், அவர்களுக்கும் புரியும்படி விளக்கிச் சொல்வதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு. பசுமை நடையை அவங்களும் வளர்ந்து தொடரச் செய்யணும் அல்லவா?

    நீங்க மலைமேல் நடந்து இத்தகைய இடங்களுக்குச் செல்வதும் ஆச்சர்யமா இருக்கு. உங்க ஆர்வத்தைப் பாராட்டறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      படங்களை தனி தனியாக எடுத்தால் பக்கத்தில் எடுக்கலாம்.அப்படி சில எடுத்து இருக்கிறேன் அது அடுத்த பதிவில்.

      தூரத்திலிருந்து எல்லாவற்றையும் எடுக்க மலையின் கடை கோடிக்கு போக வேண்டும், அதனால் ஒரு இளைஞரை எடுத்து தர சொன்னேன்.

      இன்னும் மேலே ஏறி போனால்தான் யானையின் கண்ணீர் என்று சொல்லபடும் சுனையை பார்க்கலாம். அங்கு போகவில்லை. அடுத்த நிகழ்ச்சி கீழே என்பதாலும், மற்றவர்கள் முன்பே பார்த்து விட்டதால் கீழே கட கட என்று இறங்கி போய் விட்டார்கள்.

      எங்களுக்கு துணையாக நான்கு கல்லூரி மாணவர்கள் வந்தார்கள். பசுமை நடை தலைவர் முத்துகிருஷ்ணன் எல்லோரும் மலையை விட்டு இறங்கி விட்டார்களா என்று பார்த்துக் கொள்ள சொன்னதால் அவர்கள் இருந்தார்கள்.அடுத்த நிகழ்ச்சி நடக்கும் நரசிம்மர் கோவில் வரை துணையாக வந்தார்கள்.

      நீங்கள் சொன்னது போல் இளையதலைமுறை இதை தொடர்ந்தால் நல்லது.

      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  4. அழகாக விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள் சகோ.

    1990 முதல் 1996 வரை நான் சகோதரர் வீட்டுக்கு நரசிங்கம் போய் வந்து இருக்கிறேன்.

    அங்கு எவர்சில்வர் கம்பெனிகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      இப்போது வருவது இல்லையா நரசிங்கம்? தம்பி இப்போது இங்கு இல்லையா?
      எவர்சில்வர் கம்பெனி எனக்கு புதிய செய்தி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. இப்போது அங்கு உறவினர் யாரும் இல்லை.

      நீக்கு
  5. குட்மார்னிங்.

    எண்பெரும் குன்றங்களில் ஒன்றைக் காண நானும் வந்துவிட்டேன். மாட்டுத்தாவணி எதிரே சரவணபவனா? நானாய் இருந்திருந்தால் ஒரு வடை சாப்பிட்டு, ஒரு காஃபி குடித்திருப்பேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      ஜல்லிகட்டு போராட்டங்கள் நடந்த சமயம் மகனுடன் இந்த ஓட்டலுக்கு போய் இருந்தோம்.

      அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க சினிமா நடிகர்கள் வந்து இருந்தவர்களை இந்த ஓட்டலில் பார்த்தோம்.

      நீங்கள் சொன்னது போல் எங்கள் குழுவில் உள்ளவர்கள் நிறைய பேர் காஃபி குடித்து வந்தார்கள்.
      நாங்கள் போகவில்லை.

      நீக்கு
  6. எதிரே ஒரு பெரியவர் சைக்கிள் மிதித்துச் செல்லும் காட்சி... இப்படி போக்குவரத்து பயமில்லாமல் கவலை இல்லாமல் சைக்கிள் செல்லும் காட்சிகள் அபூர்வம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதானவர்கள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்கபட்ட இலவச சைக்கிளை ஓட்டி செல்வதை பார்க்கலாம் மதுரை முழுவதும். நான் குறிப்பிட நினைத்து அப்புறம் விட்டு விட்டேன். நீங்கள் சொல்லி விட்டீற்கள்.

      நீக்கு
  7. ஓ இந்தக்கோவிலா? கீழே உள்ள கோவில் பார்த்திருக்கிறேன். படங்களெடுத்து பேஸ்புக்கிலும் தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் மலை ஏறியதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கோவில் இந்த முரை போகவில்லை . மாயவரத்தில் இருந்து மதுரை வந்த போது ஒரு தடவை பார்த்து இருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு.
      இந்த முறை கோவில் போக நேரமில்லை. இன்னொரு தடவை போக வேண்டும்.

      நீக்கு
  8. இங்கு மேலே செல்லும்வரை படிக்கட்டுகள் இருக்கிறதா? முந்தைய இடங்கள்போல பேருக்கு சில படிக்கட்டுகள் வைத்து விட்டு மற்ற இடங்களை சும்மா விடவில்லை. எவ்வளவு நேரமாயிற்று ஏறுவதற்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு மேலே வரை எப்படி இருக்கிரது என்று தெரியவில்லை.
      நாங்கள் ஏறியவரை ஏற அரைமணி நேரம் ஆனது.
      மற்றவர்கள் பத்து நிமிடத்தில் ஏறினார்கள்.

      நீக்கு
  9. லாடன் கோவில் பார்த்ததில்லை. ன்னலத்தோரு குழுவில் இணைந்திருக்கிறீர்கள். ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம். பழைய சரித்திரங்களை சுவாரஸ்யமாய்ப் பார்க்கலாம். கொடுத்திருக்கும் அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் இருந்த விவரங்கள் படித்துத் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களே நிறைய தடவை நரசிம்மர் கோவில் போய் இருக்கிறோம்.
      லாடன் கோவில் பார்த்தது இல்லை. நரசிம்மர் கோவில் வெளிப்புறம் வலது கை பக்கம் இருக்கிறது. கோவிலில் இரண்டு கல்வெட்டு இருக்கிறது என்றார்கள் அதை எல்லாம் நரசிம்மர் அழைத்தால் மீண்டும் போய் பார்க்க ஆசை. அன்று நரசிம்மர் கோவில் போக நேரமில்லை.

      மலை ஏறுவது ஆரோக்கியம் தான். சரிந்திரங்கள் அறிந்து கொள்வது சுவாரஸ்யம்தான்.
      விவரங்களை படிக்க முடிந்தது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. அன்பு கோமதி,
    சமணர்கள் மதம் செழித்திருந்த காலமா அது.

    யானை மலையைப் பாதுகாப்பதாகக் கிராமத்தார்கள் சொன்னது மகிழ்ச்சி.
    பழைய பாரம்பரியம் பாதுக்காக்கப் படாவிடில்
    சரித்திரம் மறந்து போய் விடும்.

    நல்ல குழுவுடன் இணைந்திருக்கிறீர்கள்.
    அந்தப் படிகளில் ஏறுவது சிரமமாக இருந்திருக்க வேண்டும்.
    நல்ல உடல் நலம் பேண இது போல நடை அவசியம் ஆகிறது.
    படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன.

    அடுத்த பதிவில் இன்னும் படங்க

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
    அப்போது சமய ஓற்றுமை இருந்த காலம் என்றார் தொல்லியல் துறை ஆசிரியர்.
    யானை மலையைப் இப்போதும் பாதுகாக்க பல குழுக்கள் அமைத்து பார்த்து வருகிறார்கள்.
    பொதுமக்கள், (கிராமமக்கள்) தொல்லியல் துறை மற்றும் பசுமை நடை குழுவினர் எல்லோரும் சேர்ந்து பாதுகாக்கிறார்கள்.

    படி ஏறுவது சிரமமாக இருந்தது தினந்தோறும் நடை பயிற்சி செய்வோர்க்கு சிரமம் இருக்காது.
    நான் இப்போது நடைபயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் இப்போது சரியாக செய்யாத காரணத்தால் சிரமம் பட்டேன். இரண்டு நாட்கள் கால்வலி இருந்தது.

    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் அத்தனையும் அழகு. விளக்கங்களும் அருமை. நீங்க ஆர்வத்துடன் செல்றீங்க அக்கா. நடைபயிற்சி நல்லது. உடம்பும் மனசும் ஆரோக்கியமாக இருக்கவேணும் உங்களுக்கு. அடுத்தநாளும் கொஞ்ச தூரம் சும்மாவேணும் நடந்தல் கால்வலி இருக்காது. நடக்காமல் விட்டு நட்ந்தால் வலியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான், மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் நடைபயணத்தால்.

      சில கவலைகளை மறந்தும் இருக்கலாம். நீங்கள் சொல்வது போல்
      அடுத்த நாளும் நடக்க வேண்டும். நான் தினம் கோவிலுக்கு காலை, அல்லது மாலை போவேன். நடை பயிற்சியும் ஆச்சு இறைவனை வணங்கி வந்தது போல் ஆச்சு என்று இப்போது சில தடங்கல் ஏற்பட்டு விட்டது. மீண்டும் உற்சாகமாய் ஆரம்பிக்க வேண்டும்.

      உங்கள் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி அம்மு.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    அத்தனை படங்களும் மிக அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு படங்களுக்கும் மட்டுமில்லாது, யானை மலை பற்றி கையேடுகளும், விளக்கங்களும் தந்து நல்ல அருமையான ஒரு பதிவினை தந்துள்ளீர்கள்.

    இந்த யானை மலை நாங்கள் தி. லிக்கு ரயிலில் போகும் போதெல்லாம் எவ்வளவு பெரிய மலை என்று பிரமித்து பார்த்துக் கொண்டு போவோம். ஆனால் அதைப்பற்றிய விபரங்களை இன்று படிக்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இத்தனை விபரங்களை விளக்கி படிக்க தந்த தங்களுக்கு மிக்க நன்றி.

    மலைக்கு ஏறும் படிகள் கரடுமுரடாய்தான் இருக்கிறது. மெள்ள ஏறி இறங்கினாலும், கால்வலி வருவது உறுதிதான். கால் வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளுங்கள். சிரமம் பாராமல் இந்த சமணர்கள் வாழ்ந்த குகை கோவில்களுக்குப் சென்று விபரங்களை எங்களுக்கும், தொகுத்தளிப்பதற்கு மிக்க நன்றி. சின்ன குழந்தைகளையும்,சிரமம் பாராமல் அழைத்து வந்திருக்கிறார்களே.! இந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்ள அனைவருக்கும் எத்தனை ஆர்வம்..! இந்த பசுமை நடை யினை நடத்தி வருபவர்களுக்கு வாழ்த்துக்கள். உவ்கள் மூலம் நானும் பல இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறேன். தங்கள் பதிவை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் மலை மெள்ள ஏறினாலும் கால்வலிக்கும் தான்.
      வலிக்கு சிகிட்சைகள் எடுத்து கொண்டு இருக்கிறேன். உங்கள் அன்பான விசாரிப்புக்கும், ஆலோசனைக்கும் நன்றி கமலா.

      சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஆர்வமாக வந்தார்கள். ஞாயிறு காலை குழந்தைகள் சீக்கீரம்எழுந்து பார்க்க வந்தது பாராட்டபட வேண்டிய விஷயம்.

      மதுரை வந்து விட்டது என்பதின் அடையாளம் இந்த யானைமலை. எனக்கும் இதை வெகு நாட்களாக பார்க்க வேண்டும் ஆவல் இருந்தது. அதை இப்போது பார்த்து விட்டேன்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. அழகான அவசியமான பதிவு. நல்லதொரு குழுவில் இணைந்து பல அரிய நல்ல சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். இப்படி ஒரு குழு இங்கே இருந்தாலும் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! :( போகட்டும். நரசிம்மர் கோயிலுக்குப் போயிருக்கோம். ஆனால் லாடன் கோயில் பக்கத்திலேயே இருப்பது தெரியாது. மலைமேல் ஏறலாமானு யோசிச்சப்போ அங்கிருந்தவர்கள் துணை இல்லாமல் ஏறாதீங்கனு சொல்லிட்டாங்க! இம்மாதிரிக் குழுவினருடன் போயிருந்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      நல்லதொரு குழுதான். வயது குறைச்சலாக இருக்கும் போது இந்த குழுவில் இணைந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அவர்கள் வேகத்திற்கு நம்மால் இப்போது ஈடு கொடுக்க முடியாது.

      கோவிலுக்கு உள்ளே போகும் முன் வலது கை பக்கம் இருக்கிறது.

      இப்போது வேலி தடுப்பு , காவல் என்று இருக்கிறது முன்பு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை இருந்து இருக்கிறது. படி ஏறும் போது கவனித்து கொள்ள பின்னலேயே வந்தார்கள் உதவி தேவைபடும் இடங்களில் கைதூக்கி விட்டார்கள். துணை இல்லாமல் போவது கஷ்டம் தான்.

      2011 ல் இருந்து தான் மக்கள் போக ஆரம்பித்து இருக்கிறார்கள் போலும். சமணபடுக்கை, யானையின் கண்ணீர் எனும் சுனை எல்லாம் பார்க்க இன்னும் ஏற வேண்டும். அதற்கு போகவில்லை.

      நீக்கு
  15. மலை மேல் ஏறிப் போய் விடாமல் பார்த்துவிட்டு வருவதற்கு உங்களைப் பாராட்ட வேண்டும். இறைவன் இதே அளவுக்கு உடல்நலமும் மனோபலமும் உங்களுக்கு அளிக்கப் பிரார்த்திக்கிறேன். மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் சமீபத்தில் தான் ஆனைமலையைப் பார்க்க முடிந்தது. ஒத்தக்கடை எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பிரபலமானது! அம்மா எனக்குக் கொடுத்த சீர்வரிசைகளில் ஒத்தக்கடை எவர்சில்வர் பாத்திரங்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பாராட்டுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
    சிறிய வயதில் இருந்து இருக்கிறேன் மதுரையில்,(ஊர் ஊராக அப்பவுடன் போய் கொண்டே இருப்போம்) அப்புறம் என் திருமணத்தின் போது இருந்து இருக்கிறேன். மதுரைக்கு விடுமுறைக்கு வந்து உறவினர் வீடுகள், கோவில்கள் போய் வருவோம், விடுமுறை முடிந்து விடும் இந்த மாதிரி இடங்கள் அப்போது போகவில்லை.
    ஒவ்வொன்றுக்கும் நேரம் இருக்கிறது போலும்!
    மனகவலை, உடல்பாதிப்பு என்று வீட்டில் முடங்காமல் இருக்க இந்த பயணங்கள் வயதானவர்களுக்கு பலன் அளிக்கிறது வயதானவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    எவர்சில்வர் பாத்திரம் கேள்வி பட்டது இல்லை. நான் என் தங்கையிடம் விசாரிக்க வேண்டும்.
    என்னைவிட அவளுக்கு தான் மதுரையைப்ப்ர்றி நிறைய தெரியும்.

    பதிலளிநீக்கு
  17. அழகான படங்களும், அருமையான விளக்கங்களும் அசத்துகின்றன அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. இனிய மாலை வணக்கம் கோமதிக்கா ...

    வருகிறேன் படங்கள் எதுவும் லோட் ஆக மாட்டேங்குது. பார்த்து பதிவு வாசித்துவிட்டு வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      மெதுவாக வாங்க.
      நெட் நன்றாக வரும் போது வாங்க.

      நீக்கு
  19. மாமதுரையின் மகத்தான அடையாளங்களுள் யானை மலையும் ஒன்று..

    தஞ்சாவூரிலிருந்து மதுரைக்கு வரும்போது ஒத்தக்கடை எனும் ஊருக்கு முன்பாக சாலையின் இருமருங்கிலும் இருந்த மலைக்குன்றுகள் தவிடு பொடியாக்கப்பட்ட பின் எஞ்சி நிற்பது இது ஒன்று தான்...

    இதை மீட்டெடுத்த நல் உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்..

    வரலாற்றுப் பொக்கிஷமாக இந்தப் பதிவு..

    பற்பல சிரமங்களுக்கிடையில் இந்தப் பதிவினை வழங்கியுள்ள தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்...

    என்றென்றும் வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொன்னது சரிதான் மாமதுரையின் மகத்தான அடையாளம் இந்த யானை மலை.

      எத்தனை மலைக்குன்றுகளை இழந்தோம்!
      இதையும் சிற்பநகரமாய் மாற்றுவோம், ஓவியம் வரைவோம் என்று எழுந்தவர்களை தடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

      இந்த மலை வரலாற்று பொக்கிஷம் தான்.

      எப்படியோ யானைமலையை பார்த்து விட்டோம்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  20. போட்ட கருத்து போகவே இல்லை...மாலை, இரவு நெரங்களில் நெட் படுத்துகிறது.

    அக்கா படங்கள் எல்லாம் அட்டகாசம்.

    குழந்தைகள் கூட அதூவ்ம் குழந்தைகளைக் தூக்கிக் கொண்டு கூட வந்திருக்கிறார்கள் நல்ல ஆர்வம் உள்ள மக்களும் இருக்கிறார்கள்.

    நீங்கள் நோட்ஸ் எடுப்பதும் கூடப் படமாக ஆஹா. பாருங்க நீங்க எங்களுக்காக ஆர்வத்துடன் குறிப்புகள் எடுப்பதற்குப் பாராட்டுகள் கோமதிக்கா..

    மலை அழகாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, நெட் அதிகபயன்பாடு மாலையும் , இரவும் தானே!

      படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      வேலைக்கு போய் வந்து வீட்டுக் கடமைகளை ஆற்றி அதன் பின் வலைத்தளங்களுக்கும் வந்து கருத்து சொல்வது சிரமம் தான். இரவு மகனுடன் பேசுவது என்று உங்கள் பொழுதுகள் சரியாக இருக்கும் இல்லையா?

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. அருமையான பதிவு
    ஒருமுறை யானை மலைக்குச் சென்றிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. பசுமை நடை என்று எறும்புகள் ஊர்ந்து போவது போன்ற படம் அட! கரெக்தானே! என்ரு நல்ல அர்த்தமுள்ள படமாகத் தோன்றியது அந்தை ஐடியா தோன்றியவருக்கு வாழ்த்துகள்!

    சிற்பங்கள் படமும் ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க அக்கா.

    போகும் இடம் நல்ல பசுமையாக இருக்கிறது. பாறை அந்த வடிவம் அமைப்பு எல்லாமே கண்ணிற்கு விருந்தாக இருக்கிறது.

    இந்தக் கமென்ட் போகுதான்னு பார்க்கணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுமை நடை எறும்புகள் ஊர்ந்து போவது போன்ற படம் வ்ரைய காரணம் சொன்னார் தேடி பார்க்க வேண்டும் குறிப்பில்.
      படம் வரைந்தவரை பாராட்டவேண்டும் தான்.
      மலையில் உள்ள அனைத்தையும் நான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து எடுக்க முடியவில்லை. மலையின் கோடியில் இருந்த ஒருவர் படம் எடுத்துக் கொண்டு இருந்தார் அவரிடம் என் சின்ன காமிரவை கொடுத்து படம் எடுக்க சொன்னேன்.
      அப்புறம் நான் எழுந்து போய் படங்களை தனி தனியாக எல்லாம் எடுத்தேன். அடுத்த பதிவில் இடம்பெறும்.
      நீங்கள் அளித்த கருத்துக்கள் எல்லாம் வந்து விட்டன.

      நீக்கு
  23. ஹப்பா ஒரு வழியாகப் போராடிக் கருத்துகள் போய்விட்டது...இனி நாளை வருகிறேன் கோமதிக்கா...இன்னும் அரை மணியில் படுத்தால்தான் காலை 4 மணிக்கு எழ முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. //எல்லோரும் அவர் அவர்களுக்கு வசதியான இடம் பார்த்து அமர்ந்து விட்டாரஎள்.//

    எங்கே போனால் என்ன, அங்கேயும் செல்போன் தான்!..

    செல்போன்கள் நாம் இருக்கும் இடத்தை மறக்கடிக்கும் என்பதால் சொன்னேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      எங்கே போனாலும் செல்போன் இல்லாமல் முடியாத காலம் ஆகிவிட்டது உண்மைதான்.
      தான் ஆனைமலை வந்து விட்டதை வீட்டுக்கு தெரிவிக்க. அங்கு உள்ளவைகளை படம் எடுக்க என்று வேண்டி இருக்கிறது. நிகழச்சி ஆரம்பிக்கும் வரை அதை பார்த்துக் கொண்டு இருப்பார்கள் அப்புறம் எல்லோரும் ஆர்வமாய் பேச்சை செல்போனில் பதிவு செய்தார்கள்.

      நீக்கு
  25. அந்தக் காலத்தில் ஆனைமலை என்று சொல்வோம்.

    ஆனையா, யானையா எது சரி?..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலத்தில் ஆனைமலைதான்.
      தொல்லியல் துறை வைத்து இருக்கும் அறிவிப்பு பலகையும் ஆனைமலைதான்.

      இப்போது உள்ள இளைஞர்கள் நடத்தும் பசுமை நடையில் யானைமலை என்று போட்டு இருக்கிறார்கள்.

      சில ஊர்களில் ஆனைமலை இருக்கிறது, அதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரிய யானை மலை என்று போட்டு இருக்கலாம்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  26. நான் முந்தின கருத்தில் சொல்லிவிட்டேன் உங்களுக்கு இருக்கும் கடமைகளை.
    அதற்கு இடையில் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
    உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
    சீக்கீரம் படுத்தால் தான் சீக்கீரம் எழுந்து கொள்ள முடியும்.
    நானும் 9.30க்கு எல்லாம் படுத்து விடுவேன். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவேன்.
    உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. நரசிம்மர் கோயில் பிற்காலத்ததா? அதில் சமணம் சமபந்தமான தடயங்கள் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கையேட்டை படிக்கவில்லை என்று தெரிகிறது.
      கி.பி 9-10 நூற்றாண்டு கல்வெட்டில் நரசிங்கமங்கலம் எனப்பெயர் பெற்றிருந்தது.
      தற்போது சுருக்கமாய் நரசிங்கமென்று அழைக்கப்படுகிறது.

      இதில் நிறைய சமணம் சம்பந்தபட்ட தடயங்கள் இருக்கிறதாம். நாங்கள் அன்று கோவில் செல்லவில்லை, அவசரமாய் தம்பி வீட்டுக்கு போகவேண்டிய சூழ்நிலை.
      அடுத்த தடவை போய் அதை பார்த்து வந்து உங்களுக்கு கருத்து சொல்கிறேன்

      நீக்கு
  28. ஆனைமலை பற்றி சிலப்பதிகாரத்திலோ அல்லது மணிமேகலையிலோ ஏதாவது குறிப்புகள் உண்டா?..

    பேராசிரியர்கள் எது சொன்னாலும் கேட்டுக் கொள்வீர்களா அல்லது யாராவது சந்தேகம் என்று கேள்விகள் கேட்கும் வழக்கம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தான் சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் எல்லாம் படித்து பதிவுகள் அழகாய் போட்டு வருகிறீர்கள். நான் அவ்வளவு தூரம் படிக்கவில்லை.
      பேராசிரியர்களும் அன்று இதை பற்றி பேசவில்லை.
      திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்று இருப்பதாய் சொல்கிறார்கள். படிக்க வேண்டும்.

      நான் எது சொன்னாலும் கேட்டுக் கொள்கிறேன். வேறு யாரும் கேள்விகள் கேட்கவில்லை.

      நீக்கு
  29. காஸ்யபர் சப்த ரிஷிகளில் ஒருவராவார். அந்த ரிஷி வழிவந்தவர்கள் காஸ்யப கோத்திரம் சார்ந்தவர்கள் என்று கொள்ளலாம்.
    காயிபன் என்ற பெயரை காஸ்யபருடன் எப்படி இணைத்தார்கள், தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  30. //இதை யானைக்கண்ணீர் ஊற்று என்று அழைக்கிறார்கள்.//

    இதை இப்படிப் படித்துப் பாருங்கள்:

    இதை யானைக்கண் நீர் ஊற்று என்று அழைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தும் நன்றாக இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  31. பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
      தொடர்வது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  32. பசுமை நடை அமைப்பினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். பாரம்பரியத்தலங்களைப் பாதுகாக்கும் அவசியத்தை பொதுமக்களும் உணர்ந்து செயல்படும் வண்ணம் சிறப்பாக சேவையாற்றுகிறார்கள். வயது முதிர்ந்தோர், குழந்தைகள் என பலதரப்பினரும் ஆர்வத்தோடு கலந்துகொள்வது மிக்க மகிழ்வளிக்கிறது. தகவல்களும் படங்களும் சிறப்பு. தொடரட்டும் இந்நன்முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
      உங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு நன்றி .
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  33. பசுமை நடை மீண்டும் துவங்கி இருப்பதில் மகிழ்ச்சி. அழகான சிற்பங்கள். இந்த மாதிரி பசுமை நடை இளைஞர்களும் வளரும் சந்ததியினரும் தொடர வேண்டும்.

    படங்கள் அனைத்தும் சிறப்பு. தொடர்கிறேன் மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்
      ஆமாம்,பசுமை நடை மீண்டும் ஆரம்பித்து விட்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி.
      உங்கள் பணிசுமைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி.

      நீக்கு
  34. phone ல் படித்துவிட்டேன் ..அதிலிருந்து கருத்து பதிய முடியாததால் ....தள்ளி போய் மறந்ததே விட்டேன் ...

    இன்று விட்ட பதிவுகளை வாசிக்கும் போது கண்ணில் பட்டார் இந்த யானை மலையார்...


    படங்கள் எல்லாம் அட்டகாசம் ...தூரமாகவே இந்த யானை அமைப்பையும் பார்த்தோம் ...நரசிங்கர் கோவிலுக்கும் சென்றோம் ...

    நீங்கள் சொன்ன இடத்திற்கு அருகில் சென்று வந்தோம் என்று நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      நரசிங்கர் கோவில் போனீர்களா?
      குடவரை கோவிலை அடுத்த முறை பாருங்கள் அனு.
      நரசிங்கர் கோவிலிலும் கல் வெட்டு இருக்கிறதாம் அதையும் அடுத்த முறை பார்க்க வேண்டும்.
      பழைய பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு