சனி, 16 மார்ச், 2019

பேச்சிப்பள்ளமும், தீர்த்தங்கரர்களும்


அமணமலை, அமிர்தபராக்கிரமநல்லூர், திருவுருவகம், குயில்குடி எனப் பல பெயர்களில்  இந்த  மலையும் ஊரும் அழைக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலை புதுக்கோட்டை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்குப் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில்  சமணமலை அமைந்துள்ளது. சமணமலையின் கிழக்கு த்திசையில் கீழக்குயில்குடி என்னும் அழகிய சிற்றூர் உள்ளது.

மதுரை பெரியார்  பேருந்து நிலையத்திலிருந்து கீழக்குயில்குடிக்கு 21 சி வழித்தட எண்ணில்  பேருந்து வருகிறது.

அய்யனார் கோவிலை ஒட்டிய  பாதைவழியாக  மலை மீது ஏறலாம்.


சென்ற பதிவில் நாங்கள் மேலே ஏறி அங்கு என்ன இருக்கிறது என்பதைப் பார்த்தோமா என்பதை அடுத்த பதிவில் என்றேன்.

                                      அய்யனார் கோவிலிருந்து எடுத்த படம்.

கீழே இறங்கி வந்தவரைக் கேட்டால் மேலே போகப் போகப் படிகள் இல்லை கம்பியைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும் கொஞ்சம் சிரமம் தான் என்றார்.

அதனால் கஷ்டப்பட்டு ஏற வேண்டுமா என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் , என் கணவர் ஏறிப் பார் முடியவில்லை என்றால் இறங்கி விடுவோம் என்றார்கள்.

கைப்பைகளை, மற்றும் காமிரா எல்லாம் காரில் வைத்து விட்டுச் சின்ன தண்ணீர் பாட்டில், அலைபேசியை மட்டும் எடுத்துக் கொண்டு ஏற ஆரம்பித்தோம்.

நான் இறைவனை வணங்கிக் கால்களுக்கு நல்ல பலத்தைத் தரச்சொல்லி மேலே பார்க்காமல் ஏற ஆரம்பித்தேன்.

மேலே ஏன் பார்க்கவில்லை என்றால் நீண்டு போகும் படிகள் மலைக்க வைத்தன.

முன்பு படிகள் இல்லை போலும் . தொல்லியல் துறையினரால் இந்தப் படி அமைக்கப்பட்டதாம், இரண்டு பக்கம் கம்பிகள் இருக்கிறது, பிடித்துக் கொண்டு ஏற வசதியாய். பாதி தூரத்திற்கு மேல் படிகள் இல்லை.   செருப்பு வழுக்கி விடும் போல் இருந்தது, அதனால் அந்த இடத்தில் என் செருப்பைக்  கழற்றி வைத்து விட்டேன்.

அதன் பின் மெதுவாய்க் கம்பியை இரண்டு கைளால் பிடித்துக் கொண்டு ஏற ஆரம்பித்து விட்டேன். மேல் இருந்து இரண்டு பேர் இறங்கி வந்தார்கள் இருவரும் 30 வயது மதிக்கத் தக்கவர்கள் அவர்களிடம் கேட்டேன். இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று கேட்டேன் , இன்னும் கொஞ்ச தூரம் தான் இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்களே ! அம்மா  ஏறிவிடலாம் என்று நம்பிக்கை தந்து சென்றார்கள்.

சிறிது தூரம் நடந்த பின் பேச்சிப்பள்ளம் என்ற இடம் வந்தது. அந்த இடத்தில் எட்டு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், செதுக்கியவர்கள் பெயர்களும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. அழகான இடம். மலையை க்குடைந்து  செதுக்கிய சிற்பங்களும் அழகிய சுனையும் ஏறி வந்த களைப்பைப் போக்கியது. சூரிய பகவானும் தன் கதிர்களை மறைத்துக் கொண்டதால் சிரமம் இல்லாமல் மேலே அந்த இடம் வரை ஏறி வந்து விட்டோம்.


முக்குடை நாதர்,  பாகுபலி,  பார்சுவநாதர்  ஆகியோரின் சிலைகள்.
கீழே நீர்ச் சுனையில் இவர்களின் உருவம் தெரிகிறது.


நீர்ச் சுனைக்குள் யாரும் இறங்காமல் இருக்கக் கம்பி வேலி போட்டு  இருக்கிறார்கள்.
நான் மேலே ஏறிப் பார்த்து விட்டேன் என்பதற்கு சாட்சியாகப் படம்.
பாகுபலி  


கி.பி 9-10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு.
முக்குடை நாதரின் முகம் உடைக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டுக்கள்
பேச்சிப்பள்ளம் வரை நாங்கள் போனோம், அதற்கு மேல் ஏறிப் போகிறவர்கள் போனார்கள். ஒருவர் மேலே போய் கீழே இருப்பவருக்கு  போஸ் கொடுத்தார்.

தண்ணீர்த் தொட்டி போல இருக்கிறது. மழை நீர் சேமிப்புத் தொட்டியாகவும் இருக்கும் போல


 பேச்சிப் பள்ளத்திற்கு மேலே மக்கள் போகிறார்களே! அங்கு என்ன இருக்கிறது?  என்று  அங்கு போய்ப் பார்த்துவிட்டு இறங்கிக் கொண்டு இருப்பவரிடம் கேட்டேன், அவர்  அலைபேசியில் எடுத்தைக் காட்டினார் ஒரு பெரிய தூண் இருக்கிறது என்று . கஷ்டமாய் இருக்கிறதா அந்த இடம் போக என்றேன். வேண்டாம் அம்மா படம் தான் பார்த்து விட்டீர்களே என்று சிரித்தார். என் கணவர்  போகலாம் என்று நினைத்து வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்கள். கொஞ்சம் ஏற்றமாக இருந்தது பிடித்துக் கொள்ள ஒன்றும் வசதி இல்லை. கீழே  வெயில் வருவதற்குள் இறங்க வேண்டும் என்ற எண்ணம் வேறு. அதனால் மேலே பார்க்காமல் வந்து விட்டோம்.

நீங்கள் யாராவது போக ஆசைப் பட்டால் போகலாம் அல்லவா? அதனால் 'மதுர வரலாறு ' என்ற புத்தகத்தில் உள்ள விவரங்களை உங்களுக்காக இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.


//இந்த பேச்சிப்பள்ளத்திற்கு சற்று மேலே உள்ள இடத்தில் கி.பி 10 நூற்றாண்டில் செயல்பட்ட மாதேவிப் பெரும்பள்ளி என்னும் சமணப்பள்ளியின் அடித்தளம்  காணப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள வட்டெழுத்துக்கள் பராந்தக வீரநாராயணன் (கி.பி. 860 -905) என்னும் பாண்டிய மன்னன்  தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் இந்த சமணப்பள்ளியை கட்டி உள்ளான். இந்தச் சமணப்பள்ளி இடிந்தபின் இங்கிருந்த இயக்கியர் உருவங்களைக் கீழே உள்ள அய்யனார் கோயிலில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் பராமரிப்புக்காக 'மாடக்குளக்கீழ்' என்னும் நாட்டுப்பிரிவில்  அமைந்திருந்த புளிங்குன்றூரில் இரு வேலி நிலம் கொடையளிக்கப்பட்டுள்ளது. புளிங்குன்றூர் என்னும் ஊரே இன்று சமணப்படுகைகள் அமைந்துள்ள கொங்கர் புளியங்குளம் என்ற ஊராகும்.

மாதேவிப் பெரும்பள்ளியினடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையேறிச் சென்றால் கிழக்கிலிருந்து  தெற்காகச் செல்லும் மிகப் பெரிய நீண்ட மலை ஒன்றுள்ளது  அதன் உச்சியில் ஒரு தீபத்தூணை வைத்து மக்கள் வழிபடுகிறார்கள். அதன் கீழே கன்னடக் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டு உள்ளன.

ஆரிய தேவரு
ஆரிய தேவர்
மூலசங்க பெளகுள தவள
சந்திர தேவரு நமி தேவரு சூரிய
பிரதாப ஆஜித சேனதேவ(ரு) மா
(கோ) தானதேவரு நாக
தர்ம தேவரு  மட

இந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் கர்நாடகாவில் உள்ள  சரவணபெளகுளா
பகுதியிலிருந்துவந்து சென்ற சமணத்துறவிகளின் பெயர்களாக இருக்கலாம்.
இரண்டாம் கல்வெட்டு மட்டும் தமிழிலும் மற்றவை கன்னடத்திலும் உள்ளன.
மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையுச்சியிலுள்ள  தீபத்தூணை நோக்கிச் செல்லாமல் , மலைப்பகுதி வழியாக மலையின் தென்புறம் நோக்கிச் சென்றால் அங்குள்ள பாறையின் கீழ் தமிழ்  பிராமிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக் கல்வெட்டை  2012ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு. முத்துக்குமார் கண்டுபிடித்துள்ளார்.

இக் கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு வல்லூர்கள் முனைவர் சொ. சாந்தலிங்கம், பொ . இராசேந்திரன் சொ. சந்திரவாணன் ஆகியோர் படித்து கல்வெட்டைப் படியெடுத்துள்ளனர்.
" பருதேரூர் குழித்தை அயஅம்" என 13 எழுத்துக்களை இத்தமிழ் பிராமிக் கல்வெட்டு கொண்டுள்ளது. இதன் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு . பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பது  இதன் பொருளாகும்.//


மலை ஏற சிறந்த நேரம் காலை 5.30, அல்லது ஆறுமணி. வெயில் இல்லாமல் இருந்தால் ஏறுவது சிரமம் இல்லை. சிறு வயதுப் பசங்க சரிவில் அப்படியே ஓடி வந்து தாமரைக்குளம் அருகில்  சட்டென்று நின்றார்கள். படிவழியே போகாமல் சரிவில் ஏறிப் போனார்கள் எந்த பிடிமானமும் இல்லாமல்.

மலை மேல் இருந்து நாலா பக்கமும்   ஊரைப் பார்க்க மிக அழகாய் உள்ளது .
காமிரா எடுத்துப் போகாமல் போனது வருத்தம் தான். அலைபேசியில் எடுத்த படங்கள் கீழே.

மலைமேலிருந்து பார்க்கும்போது தூரத்தில் யானைமலை, திருப்பரங்குன்றம், நாகமலை, யானைமலை, மற்றும் மதுரை நகரம் முழுவதும் தெரிகிறது.

                           






                                             

மலைச்சரிவில் ஓடி வந்தால் தாமரைத் தடாகத்தில் வந்து நிற்கும் இடம்.


தாமரைத் தடாகத்தில்  கருப்பு மீன்களும், வெள்ளை மீன்களும் நிறைய இருக்கிறது. பொரி போட்டார்கள், அதைச் சாப்பிட மேலே வந்தபோது எடுத்த காணொளி.

கீழக்குயில்குடி  இத்துடன் நிறைவு பெற்றது.

பசுமை நடையின் 100வது நடை தொல்லியல் திருவிழாவாக நடந்தது அல்லவா? அதன் நிறைவுப் பகுதியின்  மாலை விழா, மதுரை உலகத்தமிழ் சங்க வளாகத்தில்  நடைபெற்றது .


அடுத்து  அந்த விழாவில் கலந்து கொண்டது பற்றியது

53 கருத்துகள்:

  1. வணக்கம் கோமதிக்கா..

    அக்கா முதல் படம் அந்தத் தடாகம் இந்த ஆங்கிளும் இன்னும் அழகாக இருக்கிறது அக்கா...குளம் முழுவதும் தாமரை இலைகளால் பசுமை நிறைந்து மிக மிக அழகாக இருக்கிறது...படம் மிக மிக அழகு என்றால் கீழே பாறையின் கீழ் இருக்கும் இத்தடாகப் பகுதி ஹையோ செமையா இருக்கு...மிகவும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      தொடர் பதிவுக்கு என்று எல்லா தடாக படங்களையும் ஒரே பதிவில் போடவில்லை.
      ஒவ்வொரு படத்தையும் நீங்கள் ரசித்தமைக்கு நன்றி கீதா.
      காணொளி பார்க்கவில்லையா? மீன்கள் பொரி சாப்பிடுவதை.

      நீக்கு
  2. முக்குடை நாதர், பாகுபலி, பார்சுவநாதர் ஆகியோரின் சிலைகள்.//

    இப்படம் கொள்ளை அழகு என்றால் அதற்கு அடுத்த படத்தில் சுனை நன்றாகத் தெரிகிறது வாவ் போட வைத்தது. பார்க்க வேண்டும் என்ற ஆவல்..ஆனால் குளிர்காலத்தில்தான் போக வேண்டும். அடுத்தடுத்த படங்களும் செம...

    பாகுபலி!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பாகுபலி படம் நினைவுக்கு வந்தது இதற்கும் அந்த அரசனுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டோ? கூடவே நம்ம அனுஷ் நினைவுக்கு வந்துவிட்டாரே!!

    இந்த இடம் சூப்பராக இருக்கிறது அக்கா பேச்சிப்பள்ளம்!! இப்படி இந்தப் பாறைகள் மட்டும் இருக்கும் இடத்திற்குக் கூடப் பெயர் எல்லாம் உண்டோ ஊர்ப்பெயர் போல!!??

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாகுபலி!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பாகுபலி படம் நினைவுக்கு வந்தது இதற்கும் அந்த அரசனுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டோ?//

      கீதா , அந்த சினிமாவிற்கும் இந்த சமணத் துறவிக்கும் தொடர்பு கிடையாது.
      இவர் சமணர்களின் முக்கிய அருக தெயவம்.

      இவர் சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவரான ரிசபதேவருக்கு நூறு புதல்வர்கள், முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி.

      பரதனுக்கு முடிசூட்டு விழா ஈன் முடிவு செய்யபடும் போது பாகுபாலி சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி பெறுவார் போரில் தோற்ற தமையனின் வாடிய முகம் கண்டு, பகுபாலி துறவறம் மேற் கொண்டு கானகம் சென்று விடுவார். மலைக்கு சென்று தவம் செய்வார். கர்நாடக மாநிலத்தில் சரவணபெலகோலாவில் பெரிய சிலை உள்ளது அல்லவா அவர் கோமதீஸ்வரர் என்று அழைக்கபடுபவர்.

      ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு பேர் இருக்கிறது கீதா.

      நீக்கு
    2. பாகுபலியின் அப்பா தான் இரு பெண்களுக்கு நடுவில் இருப்பவர் அவருக்கு இரு மனைவியர். ராஜ்ஜியத்தை பெரிய மகன் பரதனுக்கு கொடுத்து விட்டு விந்தியகிரி மலைக்கு தவம் செய்ய போய் விடுவார். பரதன் அனைத்து நாடுகளையும் வெற்றி பெற்று தன் தம்பி வைத்து இருக்கும் நாட்டையையும் பிடுங்க வரும் போது பாகுபலி தமையனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெறுவார், பின் அண்ணனிடம் சண்டை யிட்டதை நினைத்து வருந்தி தமையனிடம் நாட்டை கொடுத்து விட்டு தன் தந்தை தவம் செய்யும் இடம் சென்று அவரிடம் தீட்சை பெற்று நிர்வாண நிலையில் தவம் இருப்பார் ஒரு வருட காலம். தன் அண்ணன் தன்னிடம் சண்டையிட்டது வருத்தம் இருக்கும், அண்ணன் வந்து மன்னிப்பு கேட்டதும் அவர் மனது அமைதிஅடைகிரார்.

      நீக்கு
    3. கூடவே நம்ம அனுஷ் நினைவுக்கு வந்துவிட்டாரே!!//

      பாகுபலி என்றதும் அனுஷ் நினைவுக்கு வந்தது வியப்பு இல்லை. அந்த படத்தில் அவர் ஆளுமை அப்படி.

      நீக்கு
  3. உங்கள் சாட்சிப் படம் ஹா ஹா ஹா ஹா ஹா இல்லைனா கோமதிக்கா ஏறினேன் என்று சொன்னால் நாங்கள் நம்பாமலா இருக்கப் போறோம்!!!

    அது இருக்கட்டும் சாட்சியை விடுங்க...பாகுபலியுடன்!!! லடம் எடுக்காமல் விட முடியுமோ!!!...அனுஷ்தான் மிஸ்ஸிங்க்!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கூடவே நம்ம அனுஷ் நினைவுக்கு வந்துவிட்டாரே!!//

      //அனுஷ்தான் மிஸ்ஸிங்க்!! ஹிஹிஹிஹி//

      அடடே... கீதா நானும் இதையேதான் சொல்லியிருக்கிறேன்!

      நீக்கு
    2. கீதா, வரலாறு முக்கியம் இல்லையா? சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைக்கு அதுவும் கால்வலியுடன் நான் ஏறி போய் பார்த்து வந்து இருக்கிறேன் என்றால் . எனக்காக போட்ட படம்.

      அந்த படத்தைப் பார்க்கும் போது மலைக்கு ஏறி போய் வந்து விட்டீர்கள் காலில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று எல்லோரும் எனக்கு தைரியம் சொல்லும் போது நான் மகிழ்ச்சி அடைவேன். அதற்கு தான். நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பதற்காக போட்டேன் என்பது இல்லை.

      நீக்கு
    3. //கூடவே நம்ம அனுஷ் நினைவுக்கு வந்துவிட்டாரே!!//

      //அனுஷ்தான் மிஸ்ஸிங்க்!! ஹிஹிஹிஹி//

      அடடே... கீதா நானும் இதையேதான் சொல்லியிருக்கிறேன்!//


      ஸ்ரீராம், பாகுபலி என்றதும் அனுஷ் நினைவுக்கு வந்தது வியப்பு இல்லை. அந்த படத்தில் அவர் ஆளுமை அப்படி.

      அதுவும் நீங்கள் தேடாவிட்டால்தான் ஆச்சிரியம்.

      நீக்கு
  4. சிரமம் பார்க்காமல் ஏறி விட்ட உங்கள், ஸார் மனா உறுதியை வியக்கிறேன். ஸார் டி ஷர்ட்டில் கலக்குகிறார்! யாரும் இறங்கி அசுத்தம் செய்யாததால் சுனைநீர் சுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், சார் வெள்ளியங்கிரி மலை நான்கு முறை ஏறி இருக்கிறார்கள்.
      அவர்களுக்கு இது சுலபமான மலை பயணம். அது மிக கடினமாய் இருக்கும் என்பார்கள்.

      இந்த மலையில் மேலே போய் விளக்கு தூணைப் பார்க்க ஆசை , நானும் வருகிறேன் என்றால் போய் இருப்பார்கள் .

      சாரிடம் சொன்னேன் உங்கள் பாராட்டை . சிரித்துக் கொண்டார்கள்.

      இறங்கியும் அசுத்தம் செய்யவில்லை, குப்பைகளையும் போடவில்லை அதுதான் மகிழ்ச்சி. சுனை நீர் சுத்தமாக இருந்தது.

      நீக்கு
  5. //நான் மேலே எரிப்பு பார்த்து விட்டேன் என்பதற்கு சாட்சியாய்ப் படம்..//

    ஹா... ஹா... ஹா... அக்கா.. யார் நம்பாமல் இருக்கப் போகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாவிற்கு சொன்ன பதிலை படித்து கொள்ளுங்கள் ஸ்ரீராம்.
      அது எனக்கே எனக்காகதான்.

      நீக்கு
  6. உறுதியான பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கண்ணைக்கவர்கின்றன.

    பாகுபலி என்று போட்டிருக்கிறீர்கள். என் கண்கள் அனுஷ்காவைத் தேடுகின்றன!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், நீங்கள் தேடாவிட்டால்தான் ஆச்சிரியம்.

      நீக்கு
  7. முக்குடை நாதரின் முகம் உடைத்த மூடர்கள் யாரோ... அருமை தெரியாதவர்கள்.

    மேலேயிருந்து தெரியும் காட்சிகள் அழகு. மதுரையே அழகு. மேலே எற எவ்வளவு நேரம் பிடித்தது உங்களுக்கு? நானெல்லாம் எப்போது இந்த இடைத்தைப் பார்ப்பது?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்குடை நாதரின் சிலை வடிக்க எவ்வளவு கஷ்டபட்டு இருப்பார்கள்? இவர்கள் இப்படி வேலைமெனக்கட்டு சிதைக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களை அருமை தெரியதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

      மேலே ஏற அரை மணி நேரம் ஆகும் என்றார்கள், நான் கொஞ்சம் மெதுவாக ஏறியதால் 40 நிமிடம் ஆச்சு.

      பார்க்கலாம் இப்போதும் அண்ணனை பார்க்க வரும் போது வந்து பார்க்க வேண்டியது தானே.

      என்னைவிட வயதானவர்கள் நாங்கள் போகாமல் வந்த அந்த விளக்குதூணையும் போய் பார்த்து வந்தார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பேச்சிப்பள்ளத்தின் மேல் பகுதியின் வரலாறு அறிந்தோம் அக்கா.

    மலை மீதிருந்து உள்ள நாலாபக்கமும் உள்ள காட்சிகள் செமையா இருக்கு...அழகு!! ஊர்ப் படங்கள் ஜூம் செய்து எடுத்தீங்களோ அக்கா?

    மலைச்சரிவு கீழ் தடாகம் ரொம்ப அழகு!!

    வீடியோ சைட் வாகில் இருக்கிறது அக்கா..

    அதனை ரைட் க்ளிக் செய்து டர்ன் லெஃப்ட் கொடுத்தால் சரியாகிவிடும்...இல்லையா அக்கா

    பதிவு சூப்பர் அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைபேசியில் ஜூம் செய்து எடுத்தேன் அவ்வளவு சரியாக வரவில்லை.
      காமிரா என்றால் அழகாய் இருந்து இருக்கும்.
      வீடியோ லோடு ஆக நேரம் எடுத்தது அதை மறுபடி சரி செய்ய நேரம் இல்லை அனுப்பி விட்டேன். ஆனால் மீன் தெரிகிறது இல்லையா? அதுதான் இருகட்டும் என்று விட்டு விட்டேன்.
      மலைச்சரிவு தடாகத்தில் மேலே இருந்த சிறுவர்கள் ஓடி வந்தார்கள் தட தட வென்று பார்க்கவே அழகாய் இருந்தது.
      பதிவை ரசித்து படித்து அழகான கருத்துக்கள் அதிகமாய் கொடுத்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நன்றி கீதா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    படங்கள் அருமை. முதல் படம் கண்களை கவர்கிறது. சென்ற பதிவின் போது மலையின் மேல் தைரியமாக ஏறிச் சென்று விடுவீர்கள் என்று நான் சொன்னது மாதிரியே ஏறி, அங்குள்ள அழகிய தீர்த்தங்கரர்களையும், மலையின் வனப்பையும் படமாக்கி தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களுடன் நன்றிகள்.

    மலையின் மேல் சுனை உள்ளதோ?பார்க்கவே மிக அழகாக இருந்திருக்கும் இல்லையா? .

    மலை எவ்வளவு அழகாக இருக்கிறது. இறுதியில் ஏறும் போது கொஞ்சம் கஸ்டப்பட்டு ஏறினீர்களோ? தாங்கள் மலை ஏறி சென்று எடுத்தப் படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன. அலைபேசியில் எடுத்த சுற்றுச்சூழல் படங்களும் இயற்கை வனப்போடு அழகாக வந்திருக்கின்றன. மீன்கள் பொரி சாப்பிடும் காணொளியும் மிக அருமையாக உள்ளது. தங்களால் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, வாழ்க வளமுடன்.
      நீங்களும், கீதாவும் மேலே ஏறி போய் வந்து இருப்பீர்கள் என்று நம்பிக்கையாக சொன்னீர்கள். நம்பிக்கைக்கு நன்றி.
      ஏறி விட்டேன். மீரா பாலாஜிக்கு நன்றிகள், பதிவின் ஆரம்பத்தில் சொன்னேன்.
      மீண்டும் இந்த மலைபயணம் நிறைவிலும் சொல்ல வேண்டும். அவர் சொன்ன வைத்தியத்தால்தான் மலை ஏற முடிந்தது.

      போட்டு இருக்கிறேன் கமலா சுனை படம். மிக அழகாய் இருந்தது.

      மேலே மேலே போகும் போது படிகள் இல்லை அதனால் கொஞ்சம் கஷ்டம். நான் புல்தடுக்கி விழுபவள் அதனால் சமதளமாக இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் எனக்கு. மற்றவர்களுக்கு கடினமாய் இருக்காது.

      காணொளி கண்டதற்கு மகிழ்ச்சி.
      உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி கமலா.

      நீக்கு
  10. ஆஆஆ கோமதி அக்கா...லேட்டாத்தான் வருவேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      வார இறுதி நாட்களில், குழந்தைகளுடன் இருங்கள். வேலைகள் இருக்கும் மெதுவாய் வாங்க

      நீக்கு
  11. //நான் மேலே ஏறிப் பார்த்து விட்டேன் என்பதற்கு சாட்சியாகப் படம்//

    ஹா.. ஹா.. ரசிக்க வைத்த வார்த்தைகள்.

    அழகாக சொல்லி வந்த விவரங்கள்.
    படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
      ரசித்து சிரித்தமைக்கு நன்றி.
      படங்கள், பதிவு ரசித்து படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.காணொளி பார்க்கவில்லையா?

      நீக்கு
  12. படங்கள் அனைத்தும் மிக மிக அழகாக இருக்கின்றன சகோதரி.

    விவரணங்களும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. / மலையை க்குடைந்து செதுக்கிய சிற்பங்களும் அழகிய சுனையும் ஏறி வந்த களைப்பைப் போக்கியது./ இந்த அனுபவம் எனக்கும் அடிக்கடி ஏற்படுவதுண்டு, பல கி.மீ நடந்து நல்ல சில காட்சிகள் கிடைத்து விடும் போது :).

    /முக்குடை நாதர், பாகுபலி, பார்சுவநாதர் ஆகியோரின் சிலைகள்./

    சிற்பங்களும் நீரில் பிம்பமும் அருமை. ரசித்துப் படமாக்கியிருக்கிறீர்கள்.

    /மலை மேல் இருந்து நாலா பக்கமும் ஊரைப் பார்க்க மிக அழகாய் உள்ளது./

    இனிய அனுபவமாக இருந்திருக்கும்.


    /கீழே வெயில் வருவதற்குள் இறங்க வேண்டும்/

    சரவணபெலகுலா கோமதீஸ்வரர் ஆலயத்திற்கு சிரமப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் எடுத்து 700 படிகள் ஏறிச் சென்ற பிறகு அங்கே இருக்க முடிந்ததோ பத்தே நிமிடங்கள். கிடைத்த நேரத்தில் வெகு சில படங்கள் மட்டுமே எடுத்தேன். ஏனென்றால் மலைமேலிருந்து பார்க்கையில் கருமேகங்கள் திரண்டு வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மழைவரும் முன் இறங்க வேண்டுமெனக் கிளம்ப வேண்டியதாயிற்று. அது ஒரு ஆற்றாமைதான் எனக்கு. மீண்டும் செல்ல நினைத்தால் மலையேற்றம் மலைப்பாக இருக்கிறது:).

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான், சில அபூர்வமான காட்சிகள் கிடைத்தால் காமிர கையில் இருக்கும் உங்களுக்கு களைப்பு எல்லாம் பறந்துவிடும் தான்.

    கஷ்டபட்டு போய் சாமி தரிசனம் கிடைத்தால் , களைப்பு, கஷ்டம் எல்லாம் பறந்து விடும்.


    உங்கள் பதிவில் அழகிய காட்சிகளை பார்த்த நினைவு இருக்கிறது.
    மழை வந்தால் ஒதுங்க இடம் கிடையாது அல்லவா? கோமதீஸ்வரர் ஆலயம் பார்க்க எங்ககு ஆவல் 700 படி மலைப்பாய் இருக்கிறது. வேறு வழியே இல்லையா தரிசனம் செய்ய?

    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதானவர்களை டோலி எனப்படும் மூங்கில் கூடைகளில் அமர வைத்து இருவர் சுமந்து செல்லும் சேவை உள்ளது. விருப்பமானவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. மகத்தான தலத்தை எத்துணை அழகாக காட்சிப்படுத்தி எங்களுக்கு வழங்கியிருக்கின்றீர்கள்.... பிரமிப்பச்க இருக்கிறது... காலில் வலி இருந்த போதும் அதனைப் பொருட்படுத்தாமல் எங்களுக்காகவும் வரும் சந்ததியர்க்காகவும் ஆகிய தங்களது உழைப்பினைச் சிறப்பிப்பதற்கு வார்த்தைகளே இல்லை...

    தாங்கள் நலங்கொண்டு நல்வாழ்வு வாழ்தற்கு வேண்டிக் கொள்கிறேன்...

    ஓம் சக்தி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
      எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன். கால்வலி மீராபாலாஜியின் மருத்துவகுறிப்பால் மற்றும் உங்கள் எல்லோர் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள் மூலம் நலமடைந்து வருகிறது.
      நடக்காமல் இருந்து விடக்கூடாது என்று தான் முயற்சி செய்து நடந்து வருகிறேன்.


      பதிவை படித்து அருமையான பின்னூட்டம் தந்தமைக்கும், உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி.

      ஓம் சக்தி ஓம்.

      நீக்கு
  17. படங்கள் அனைத்தும் அழகு.

    மலைமீது ஏறிச் சென்று இந்த இடங்களைப் பார்ப்பது சிரமம் என்றாலும் சென்று வந்தது சிறப்பு. நாங்கள் இப்படி சிறுமலை மீது ஏறிச் சென்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.

      நீங்கள் ஏறுவது கஷ்டம் இல்லை, உங்கள் காமிராவிற்கு நல்ல அழகிய இடங்கள். நேரம் கிடைக்கும் போது, நண்பர்கள், மற்றும் குடும்பத்துடன் பாருங்கள்.
      கூட்டமாய் போனால்தான் இது மாதிரி இடங்கள் நன்றாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. ஒருமுறை இம்மலையில் ஏறிப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தங்களின் படங்களும் பதிவும் தூண்டிவிட்டுள்ளன
    சித்தன்னவாசலைவிட பெரிய உயரமான மலையாகத் தெரிகிறது
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      பார்க்க வேண்டிய இடம் தான்.
      ஒரு முறை வந்து பாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. மலை மேல் ஏறிப்போய்ப் பேச்சிப்பள்ளம் வரை பார்த்ததுக்கு வாழ்த்துகள். முக்குடைநாதர் முகத்தை உடைத்திருப்பது வருத்தமாக இருக்கிறது. என்ன அருமையான தகவல்கள். சரித்திர காலத்துக்கே கொண்டு சென்று விட்டீர்கள். இதை எல்லாம் பார்க்க அதுவும் நேரில் பார்க்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.கொஞ்சம் இல்லை, நிறையப் பொறாமையுடன்! :)))) 2,3 பதிவுகள் படிக்கலைனு நினைக்கிறேன். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      பசுமை நடை புண்ணியத்தில் போய் வந்தோம். தனியாக என்றால் நாங்கள் இரண்டு பேரும் எப்படி போவது?
      நீங்கள் கொஞ்ச நாளாக பிஸி. அதனால் பதிவுகள் படிக்கமுடியவில்லை.
      பொறுமையாக படியுங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. ஆஹா...

    படங்களை காணும் போது இங்கு செல்லும் ஆசை வருகுதே ...குறித்துக் கொண்டேன் ..வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வருகிறோம் ...


    நேற்று தான் சரவணபெலகோல சென்று ...பாகுபலி யை நேரில் கண்டு ரசித்தோம் இன்று தங்கள் தளத்திலும் ...


    அங்கு 23 தீர்த்தங்கரர்களின் சிலைகளும் உள்ளன...


    உங்கள் வழி பல புதிய இடங்களை அறிந்துக் கொள்கிறேன் மா...மிகவும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      பாகுபலியை தரிசித்து வந்து விட்டீர்களா?
      சரவணபெலகோலவில் 23 தீர்த்தங்கரர்களும் இருக்கிறார்களா?
      போட்டோ எடுக்க அனுமதி உண்டா? படங்கள் எடுத்தீர்களா?
      உங்கள் பதிவில் பார்க்கிறேன்.
      குழந்தைகள் விடுமுறையில் வந்து பாருங்கள் அழகான பார்க்க வேண்டிய இடம் தான்
      பேச்ச்சிப்பள்ளம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. தாமதமாக வந்து படிக்கிறேன் மன்னிக்கணும் கோமதி. நிலைமை அப்படி. நீங்கள் மலை ஏறியது நான் ஏறிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மலை மேல் படங்களும், சுனையும் காணத் தெவிட்டாத காட்சிகள்.
    மழை நீருக்காகாக தொட்டி, திறந்திருக்கிறதே. பாதுகாப்பாக இருக்க வேண்டும். காணொளி மிக அழகு. மீன் களும் அவை பொரி சாப்பிடும் வேகமும் அருமை.

    இன்னும் பல பயணங்கள் மேற்கொண்டு எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      தாமதமாக என்ற வார்த்தையே வேண்டாம் அக்கா.
      நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கலாம்.
      உடல் நலமாக இருக்கிறீர்களா?
      மழை நீருக்காகாக் தொட்டி திறந்திருப்பது பாதுகாப்பாக இருக்குமா என்று நானும் நினைத்தேன். நாம் வேண்டிக் கொள்வோம் பாதுகாப்பாய் இருக்க.
      பொரியை மீன்கள் சாப்பிடுவது அழகாய் இருந்தது அக்கா அதுதான் காணொளி எடுத்தேன்.
      பயணங்கள் போனது நிறைய இருக்கிறது அக்கா, எழுத நேரம் கூடி வரவில்லை.
      உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  22. வந்திட்டேன் கோமதி அக்கா..

    ஆஹா குளத்திலே அங்காங்கு சில வெள்ளைத்தாமரைகள் தெரியுதே..

    அந்த மலை அவ்வளவு கருங்கல்லாக இருக்குதே.. ஒரு செடிகூட இல்லை.. அப்போ கோடை காலத்தில் இதில் எப்படி ஏற முடியுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      முதல் பதிவில் வெள்ளைத்தாமரையை குளோஸ் அப் படம் போட்டு இருந்தேனே அதிரா.
      செடிகள் இல்லாத மலைதான். கோடைக்காலம் ஏறுவது கஷ்டம்.
      அதனால் தான் வெயிலுக்கு முன் போய் பார்த்து இறங்கி விட வேண்டும் என்றார்கள்.

      நீக்கு
  23. நீரோடைக்கு மேலே, கருங்கல்லில் சிற்பம் செதுக்கி இருப்பது அழகு.

    //நான் மேலே ஏறிப் பார்த்து விட்டேன் என்பதற்கு சாட்சியாகப் படம்.//

    ஹா ஹா ஹா நான் நம்பமாட்டேன்ன்:).. மேலே ஏறியிருந்தால் முகம் களைச்சிருக்குமே:) கோமதி அக்காவில் களைப்புத் தெரியவில்லை.. ஆனா மாமாவில் தெரியுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மட்டும் பறந்து போய் அங்கு நின்றுவிட்டேன் போலும் அதுதான் களைப்பு தெரியவில்லை போலும். சிற்பங்களை பார்த்ததும் மனது மகிழ்ச்சியில் களைப்பு ஓடி விட்டது அதிரா.

      மாமாவுக்கு களைப்பா? மாமா சிரிக்க மறுக்கிறார் அதுதான் களைத்த தோற்றம்.
      அதுவும் இல்லாமல் என்னை கீழே விழாமல் நல்லபடியாக கீழே அழைத்து செல்லவேண்டும் என்ற பொறுப்பை தூக்கி சுமந்து கொண்டு இருந்தால் பாரமாய் களைப்பாய் இருக்கும் தான்.

      நீக்கு
  24. ஓ பாகுபலி உண்மையில் தெய்வமோ? ஆவ்வ்வ்வ்வ்:).

    குன்றில் வழுக்கினால் அவ்ளோதான், இடையில் பிடிக்க ஏதுமில்லையே.. பார்க்கவே பயங்கரம்.

    //படிவழியே போகாமல் சரிவில் ஏறிப் போனார்கள் எந்த பிடிமானமும் இல்லாமல்.//
    எனக்கு அப்படி ஆரும் ஓடுவதைப் பார்த்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகுபலி மனிதராக பிறந்து நல்ல குணத்தால் தெய்வமாக உயர்ந்தவர்.
      குன்றில் பிடிக்க ஏதும் இல்லாமல் ஓடுவது அச்சம் இல்லா, பொறுப்புகள் இல்லா காலத்தில் உள்ள இளம் கன்றுகள்.

      பயம் இருப்பவர்களுக்கு அதை பார்த்தால் ஹார்ட் அட்டாக் வரும் தான்.
      லேசாக கால் இடறினால் பார்த்து பார்த்து கவனம் என்று பதறுவது நம் வழக்கம்.

      நீக்கு
  25. மலையிலிருந்து யூமிங்:) அழகு.. வீடியோவில் என்னா அழகிய வெள்ளை மீன்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையிலிருந்து ஊரின் அழகை, வெள்ளை மீன்களை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
      விடுமுறை முடிந்து பதிவுகளை படித்து உற்சாகமான கருத்துக்களை கொடுத்தமைக்கு நன்றி.

      நீக்கு