திங்கள், 4 மார்ச், 2019

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!


மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்.
அவன் அருளால் அவன் 
தாள் வணங்குவோம்.


சிவன் ராத்திரிக்கு நாம் சிவனின்  பெருமைகளை அவரின் கருணையை ப்பேசி நினைத்து வணங்கி மகிழ்வோம். இன்று என்ன செய்யலாம் என்று  யோசித்த போது கிடைத்த படங்கள் (அவன் அருளால் கிடைத்தது.) 

அதில் திருக்கச்சூர்   கோவிலுக்குப் பல வருடங்களுக்கு முன்  போனபோது எடுத்த சில படங்கள் கிடைத்தன. அந்த கோவில் மஹா சிவராத்திரி பதிவுக்கு ஏற்ற கதை கொண்ட தலவரலாறு அமைந்த கோவில். இந்தப் பதிவில் இடம்பெறுகிறது.

மற்றும் அலைபேசியில்  நான் எடுத்து சேமித்த படங்கள்  வாட்ஸ் அப்பில் வந்த படங்கள் கலந்த கலவையான பதிவு.

காஞ்சிபுர மாவட்டம்  செங்கல்பட்டிற்கு  அருகில் உள்ள திருக்கச்சூர்
திருக்கச்சூர்

மலையில் மருந்தீஸ்வரர் (என் கணவரின் அண்ணன்)

என் கணவரின் தம்பி
எனது ஓர்ப்படிகள் -ஸ்ரீ விருந்திட்ட ஈஸ்வரர் சன்னதி முன்

சுந்தரர் திருக்கழுக்குன்றம் சென்று விட்டுக் காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார். நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும் பசியாலும் வாடினார்.  அவர் பசியைப் போக்க இறைவர்  முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரிடம் 'இங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருங்கள்! இதோ உணவுடன் வருகிறேன்' என்று சொல்லி திருவோடு ஏந்தி வீட்டு வீடாகச் சென்று உணவு பெற்று சுந்தரருக்கும் அவருடன் வந்த அடியார்களுக்கும் அமுது படைத்தார்.



சுந்தரருக்காக இரந்து உணவு பெற்றதால் இரந்தீஸ்வரர்,    என்றும், விருந்து படைத்த சிவன் விருந்திட்டீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார்.
மலையில் மருந்தீஸ்வரர் , அடிவாரத்தில் இரந்தீஸ்வரர், பிரகாரத்தில் தனி சன்னதியில் விருந்தீஸ்வரர் என மூன்று கோலங்களில் சிவன் அருள் செய்யும் தலம்.

சிவன் தனது மூன்று கண்களின் அம்சமாகவும், முக்காலத்தை உணர்த்துவதாகவும், இக்கோலத்தைச் சொல்கிறார்கள். காஞ்சிப்புராணத்தில் ஆதி காஞ்சி என்று இத் தலம் குறிப்பிடப்படுகிறது.
சுந்தரர் தேவாரப் பதிகம் பாடி இருக்கிறார்.


தலவரலாறு:- தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க மத்தாகப் பயன்படுத்திய மந்திரமலை கடலில் அழுந்தத் துவங்கியது.
கச்சப(ஆமை) வடிவம் எடுத்து மகாவிஷ்ணு மலையைத்  தாங்க எண்ணம்
கொண்டார். ஆமை வடிவில் இத்தலம் வந்து  தீர்த்தம் உண்டாக்கி  அதில் நீராடி  வழிபட்டு  மலையைத் தாங்கும் ஆற்றல் பெற்றார். அதனால் இங்குள்ள சிவனுக்குக் கச்சபேஸ்வரர் என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது.

அம்பாள் அஞ்சனாட்சி, மக்களைக் கண்போல் காப்பதால் இந்தப் பெயர்.
அழகு மிகுந்தவளாக இருப்பதால் சுந்தரவல்லி.அம்மன். சன்னதி முன் ஸ்ரீ சக்கரம் உள்ளது.

விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன்  விஷ்ணுக்கு தியாகராஜராக அஜபா நடனம் ஆடிக் காட்டினார். ( திருவாரூரில் திருமாலின்  மார்பில் இருந்த ஈசன் விஷ்ணுவின் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் என்பர்)

 எனவே இத்தலம் உபயவிட தலமாகச் சொல்லப்படுகிறது.  உற்சவராக சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழா நடைபெறும்.

அருணகிரியார் இத்தலமுருகனுக்கு இரண்டு திருப்புகழ் பாடல்கள் பாடி இருக்கிறார்.

மருந்தீஸ்வரர் -பெயர்க் காரணம்:-  இந்திரன் தான் பெற்ற சாபத்தால் நோய்  உண்டாகி அவதிப் பட்டான், அசுவினி தேவர்கள் இந்திரன் நோயைக் குணப்படுத்த மூலிகை தேடி பூவுலகம் வந்து நாரதர் ஆலோசனைப்படி மருந்துமலை என்று அழைக்கபடும் இந்தலம் வந்து இறைவனை வணங்கினர். மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள் செய்தார்.
அவர் காட்டிய போது தேவர்களால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை.  அவர்கள் மேல் இரக்கம் கொண்ட அன்னை, மூலிகை மீது ஒளியைப் பரப்பி அதனைச் சூழ்ந்து இருந்த இருளை அகற்றினார். அதனால் அம்பாள் இருள்நீக்கியம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோயில் கொடி மரத்தின் அருகில் ஒரு மண்குழியில் உள்ள மண் மருந்து என்கிறார்கள்.

தேவர்கள், பலா, அதிபலா எனும் மருந்தை எடுத்துச் சென்று இந்திரனின்நோயை குணப்படுத்தினர்.



                                     திருநீலகண்டன்

பாற்கடலை கடையும் போது வாசுகி கக்கிய விஷத்தை இறைவன் கட்டளைப்படி  சுந்தரர் உருண்டையாக உருட்டிக் கொண்டு வந்து கொடுத்தார். 

தேவர்களைக் காப்பதற்காக அந்த விஷத்தைச் சாப்பிட்டார் ஈசன். அன்னை சக்தி பதறிப்போனாள். உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை. விஷம் அன்னையின் கைபட்டு கழுத்துப் பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார்.

அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.

மதுரையில் உள்ள வெள்ளி அம்பலம். ராஜசேகர பாண்டியன் விருப்பபடி கால்மாறி ஆடினார். (வலது காலைத் தூக்கி ஆடினார்)


வித்தியாசமான நடனம்

மேலக்கடம்பூர் போன போது வாங்கிய ரிஷபத் தாண்டவ மூர்த்தி  படம்.
இது  உறவினர் அனுப்பிய படம். அசலும் நகலும்
சீர்காழிக்குத் 'தோணிபுரம்' என்ற பெயரும் உண்டு. தோணியப்பர் சன்னதியில் சுவர் ஓவியம் -நான் எடுத்த படம்.


பிரளய காலத்தில் இறைவனும் இறைவியும் அனைத்து உயிர்களையும்  தோணியில் வந்து காத்தது போல் இப்போதும்  காக்க வேண்டும். இந்த வாழ்க்கை சாகரத்திலிருந்து  தோணிப்பர் நம்மைக் காக்க வேண்டும்.

No photo description available.

Image may contain: 1 person, standing

Image may contain: one or more people and people standing

நாங்கள்  பிரதோஷத்திற்குப் போகும் கோவில் -நேற்று பிரதோஷ சமயம் எடுத்த படம். இன்று,  முதல் கால பூஜை 10 மணிக்கு, அடுத்து 12, அடுத்து 2 மணி அப்புறம் 4 மணியுடன் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெறப் போகிறது.    திருவிளையாடல் படம், அகத்தியர் படம், சிவபுராணம் ஓதுவது என்று அடியார்கள் விழித்து இருக்க ஏற்பாடு நடக்கிறது.  

                                                                 வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------

51 கருத்துகள்:

  1. படங்கள் மிக அருமை.

    அசலும் நகலும் ரசித்தேன்.

    மூன்று சிவக் கோலங்கள் திருக்கச்சூரிலா?

    வித்தியாசமான நடராஜர் சிலையை முதல் தடவையா பார்கிறேன். இது நடன கரணத்தில் எது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

      படங்களை ரசித்தமைக்கு நன்றி.
      மூன்று சிவக் கோலங்கள் திருக்கச்சூரில் தான்.
      வித்தியாசமான நடராஜர் எந்த கரணம் என்று தெரியவில்லை, தாய்லாந்து, இந்தோனிஷியா நடராஜர் போல் இருக்கிறார்.
      எனக்கு உறவினர் அனுப்பிய வாட்ஸ் அப் படம்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. வித்தியாசமான நடனம் எனப் போட்டிருப்பது காரைக்கால் அம்மையார் திருக்கயிலைக்குத் தலையாலே நடந்து சென்ற கோலம் இல்லையோ? ம்ம்ம்ம்ம்? கூகிள் தேடலில் இப்படம் இணையவில்லை. முயன்று பார்த்தேன். இமேஜ் செர்ச் வரவில்லை. :(

      நீக்கு
    3. ஆனால் முயலகன் இருக்கிறான். நான்கு கைகள் இருக்கின்றன. செஞ்சடை விரிந்து காண்கிறது. எதுக்கும் படத்தைச் சேமித்துக் கொண்டு யாரிடமானும் கேட்டுப் பார்க்கிறேன்.

      நீக்கு
    4. காரைக்கால் அம்மையார் இல்லை இது நடராஜர் தான். இதன் உடை அலங்காரம், கை, கால் அமைப்பு எல்லாம் இந்தோனேஷியா சிலை போல் இருக்கிறது. கேட்டு பாருங்கள்.
      உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

      நீக்கு
    5. இந்த படம் 2015ல் எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த படம். நன்றாக இருக்கிறது என்று சேமித்து வைத்தேன்.

      நீக்கு
  2. அம்மாடி... எத்தனை படங்கள்... சிவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      நிறைய இருக்கா படங்கள்?

      சிவராத்திரி வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. பாஸ் ஒருகால பூஜை மட்டும் பார்த்து வந்தார். சிவராத்திரி புராணம் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். படங்கள் எல்லாமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் ஒரு கால பூஜை போய் வந்தது மகிழ்ச்சி. நாங்களும் பக்கத்தில் இருக்கும் கோவில் போனோம். 7.30கே முடித்து விட்டார்கள் முதல் கால பூஜையை, அடுத்து ஒரு மணி என்றார்கள்.

      சிவாராத்திரி புராணங்கள் எல்லாம் செவி வழி செய்திதானே ! ஒவ்வொருவர் சொல்வதும் ஒவ்வொரு விதமாய் தான் இருக்கும்.
      படங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் அழகு.

    சிவபெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. ஆஆஆ மீ 1ஸ்ட்டூ இல்லே:)...
    அழகிய படங்கள், அந்தக் கோபுரம் கண்ணைக் கவருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      புதிதாக கும்பாபிஷேகம் செய்து இருந்தார்கள் , நாங்கள் போன போது.
      நிறைய படங்கள் எடுத்தேன் காமிராவில் பேர் போட்டு சேமித்து வைக்கவில்லை போலும் அதனால் அவை தேடமுடியவில்லை. உறவினர்கள் இருக்கும் படங்களை அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியது மட்டும் இருந்தது அதை வைத்து பதிவு போட்டாச்சு.

      நீக்கு
  6. ///இது உறவினர் அனுப்பிய படம். அசலும் நகலும்///
    ஹா ஹா ஹா சூப்பர்.

    தலவரலாறு அருமை.
    போஸ்ட்டின் கீழே நிறைய இடைவெளி விட்டிட்டீங்க கோமதி அக்கா, டிலீட் பண்ணிவிடுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசலும், நகலும் படத்தை ரசித்தமைக்கு நன்றி.
      நேற்று கோவிலுக்கு போகும் அவசரம். (கால்வலி குத்தல் வலி மீண்டும் வந்து தொந்திரவு.) இப்பொது சரி செய்து விட்டேன்.
      தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  7. தோணியப்பர், தோணியில் சவாரி செய்வது சூப்பர்.

    தீபாராதனை நாமும் பார்க்கக் கொடுத்து வைத்ததில் மகிழ்ச்சி.
    ஏன் கோமதி அக்கா, மாமாவை நீங்களும் சார் என்றுதான் சொல்லுவீங்களோ? அல்லது கூச்சப்பட்டு அப்படிச் சொல்றீங்களோ?:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர்காழி எனும் தளத்தில் மேல் தளத்தில் இந்த தோணியில் இருப்பது போலவே மிக பெரிய சிலை வடித்து வைத்து இருக்கிறார்கள், மிக அழகாய் இருக்கும்.
      மாமாவைதான் இங்கு உள்ளவர்களிடம் சார் என்று சொல்வேன்.
      இங்கு உள்ளவர்களிடம் சாரின் அண்ணா, சாரின் தம்பி என்று சொல்லி சொல்லி அப்படியே வந்து விட்டது. முன்பு உள்ள பதிவுகளில் என் கணவர் என்று தானே குறிப்பிட்டு இருப்பேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  8. அருமையான படங்கள். வித விதமான கோலத்தில் நடராஜ தாண்டவம் பார்க்க
    நேர்ந்ததது எங்கள் பாக்கியமே. சிவனாரை நினைக்கப் பாபங்கள் நீங்கும்.

    நானும் தோழிகளும் சிவராத்திரிக்கு விழித்திருந்த நினைவுகள்
    மனதில் ஓடுகின்றன.
    ஈசன் எந்தை நிழல் நம்மைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      நடராஜரின் வித விதமான தாண்டவ கோலங்கள் இருக்கிறது பார்க்க பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது அத்தனையும் பகிர.

      நானும் இரண்டு முறை விழித்து இருக்கிறேன். மலரும் நினைவுகள் மனதில் வந்தது மகிழ்ச்சி அக்கா.
      ஈசன் எல்லோரையும் காக்க வேண்டும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. கோமதிக்கா வணக்கம். நேற்று உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் தான் ஆனால் இரவு ஆகிப் போனதால் வந்து கருத்து சொல்ல முடியவில்லை...

    படங்கள் அத்தனையும் அழகு. மீண்டும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      உங்கள் எதிர்பார்ப்புதான் என்னை பதிவு போட வைத்து விட்டது, நன்றி கீதா.
      நேற்று மதியம் முதல் படம் தேடுதல் வேலை. அப்புறம் வீட்டில் சிவலிங்களுக்கு அபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் என்று நேரம் ஆகி விட்டது. சிவன் ராத்திரிக்கு விழித்து இருப்பவர்கள் படிக்கட்டும் என்று போட்டு விட்டேன் பதிவை.

      வாங்க வாங்க மெதுவாய்.

      நீக்கு
    2. மீண்டும் வந்துவிட்டேன் கோமதிக்கா...தாள் வணங்குவோம் படம் செம...அதானே அவன் தாள் பணிந்தால் மனம் ஒரு சமநிலை அடையத்தான் செய்கிறது. வேண்டி அல்ல...உன் பாடு உங்கிட்ட விட்டாச்சு நீ பார்த்துக்கப்பா...நான் முயற்சி எடுப்பேன் மற்றதெல்லாம் உன்னிடம் விட்டாச்சு என்று....Love God, work hard and leave the rest to God...என்று என் ஆசிரியை அடிக்கடிச் சொல்லிக் கொடுத்தது....மனதில் தோன்றியது..

      கீதா

      நீக்கு
    3. இந்தக் கோயில் சென்றதில்லை கோமதிக்கா. சென்னை அருகில் என்று தோன்றுகிறது. சீர்காழிசென்றிருக்கிறோம். கோயிலில் சட்டை நாதர் மேலே ஏறிச் சென்று வணங்க வேண்டுமே அதையும் வணங்கியுள்ளோம்.

      நீங்கள் கீதாக்காவுக்குச் சொன்னதிலிருந்துதான் தெரிந்தது பூ வைத்துக் கொள்ளக் கூடாது வாசானித்திரவியமும் கூடாது என்று.

      ஆனால் எனக்கு இது அப்போது தெரியாது. நான் பொதுவாகவே பூ வைக்கும் பழக்கம் இல்லாததாலும் வாசனைத் திரவியம் பயன்படுத்துவதும் இல்லை என்பதாலும் விட்டுருப்பார்களோ என்று தோன்றியது..

      கதையும் தெரிந்துகொண்டேன் நிறைய வெர்ஷன்ஸ் இருக்கு போல...

      நல்ல தரிசனம் அக்கா உங்கள் படங்களின் வாயிலாக..

      கீதா

      நீக்கு
    4. கீதா, உங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது நல்ல விஷயம்.
      நம் கடமையை ஒழுங்காய் செய்து விட்டு போனால் போதும் மீதி அவன் பொறுப்பு.அன்பு செய்து வாழ்வோம்.

      நீக்கு
    5. சென்னைக்கு அருகில்தான் இருக்கிறது திருக்கச்சூர். முடிந்த போது போய் பார்த்து வாருங்கள் மூன்று பேர்களுடன் மூன்று மூர்த்திகள் இருக்கிறார்கள்.

      சீர்காழி சென்று தரிசனம் செய்து இருப்பது மகிழ்ச்சி.
      நானும் வாசனை திரவியம் பூசிக் கொள்வது இல்லை.
      பூ கோவிலில் கொடுப்பதை வைத்துக் கொண்டாலும் எடுத்து விடவேண்டும், சட்டை நாதரையும், பைரவரையும் பார்க்க போகும் போது.
      சட்டை நாதருக்கு புனுகு சாத்துவார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. படங்களும் பதிவும் நன்றாக உள்ளன. சீர்காழியில் தோணியப்பரைப் படம் எடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி, ஆச்சரியம். கலவையாக! மேலே கட்டுமலைக்கும் நாங்கள் போனோம். ஆனால் அங்கே மேலே செல்ல நிபந்தனைகள். பூ வைத்துக்கொண்டோ, வாசனைத் திரவியங்கள் தடவிக்கொண்டோ போகக் கூடாது என! இன்னொரு முறை போக ஆசைதான். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      தோணியப்பர் படம் மேலே தோணியப்பர் சன்னதி சுற்றுசுவரில் வரைய பட்டது.
      அதற்கு மேலே உள்ள கோவிலில் சட்டை நாதர் இருக்கிறார் அவருக்கு பூ வைத்துக் கொண்டு போக கூடாது. கோவில் வெளிபிரகாரத்தில் இருக்கும் அஷ்ட பைரவரை பார்க்க போகும் போதும் பூ வைத்துக் கொண்டு போக கூடாது.
      இன்னொரு முறை பார்த்து வாருங்கள், இறைவன் அருள்வார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. https://aanmiga-payanam.blogspot.com/2011/04/blog-post_23.html

      https://aanmiga-payanam.blogspot.com/2011/05/blog-post.html சீர்காழி சென்று வந்தது குறித்த பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

      நீக்கு
    3. படிக்கிறேன் கீதா.
      பார்க்கிறேன், நன்றி.

      நீக்கு
    4. ஒரு சுட்டி படிக்க முடிந்தது, இன்னொரு சுட்டி படிக்க முடியவில்லை.

      நீக்கு
    5. இரண்டுமே அடுத்தடுத்த பதிவுகள் தான். ஒன்றில் தோணியப்பர் என்னும் தலைப்பு, இன்னொன்றில் சீர்காழி தொடர்ச்சி என வரும். எனக்கு இரண்டுமே இங்கே இருந்தே திறந்தது. படித்ததுக்கு நன்றி.

      நீக்கு
  11. சிவராத்திரியின் பின்புல வரலாறு அறிந்தேன். அழகிய காட்சிகளின் தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. சிவன்ராத்திரியில் நல்லதொரு பதிவு அக்கா. படங்கள் எல்லாமே அழகு. அசலும் நகலும் ரசித்த படம். நீலகண்டன் படம் யார் வரைந்தது. 3 நடராஜர் படங்களும் வித்தியாசமாக இருக்கு. உங்க பதிவின் மூலம் சிவனை தரிசித்தாயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
      இலங்கையில் சிவன்ராத்திரி பொன்னபலவாணர் கோவிலிருந்து நேரடி ஒலிபரப்பு செய்வார்கள் வானொலியில்.
      நீங்கள பதிவையும் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அம்மு.

      நீக்கு
    2. திருநீலகண்டன் படம் யார் வைரந்தது என்று அதில் போடவில்லை, அதுவும் வாட்ஸ் அப்பில் வந்த படம் தான்.
      மிகவும் அழகாய் இருந்த காரணத்தால் சேமித்தேன் அம்மு.

      நீக்கு
  14. கடைசி 3 நடராஜர் படங்களை குறிப்பிட்டேன் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று படங்களும் சிவன் ராத்திரி வாழ்த்து சொல்லி வந்த படங்கள்.
      நன்றி அம்மு.

      நீக்கு
  15. சுந்தரருக்காக இரந்து உணவு பெற்றதால் இரந்தீஸ்வரர்...


    அம்பாள் இருள்நீக்கியம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்....


    என்ன அருமையான பெயர் காரணங்கள்...


    எல்லா படமும் சிவன் புகழ் பாடுகிறது ...அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      அம்மனுக்கு மூன்று பேர், சுவாமிக்கு மூன்று பேர் உள்ளது.
      ஒரு கோவிலுக்கு இத்தனை கதைகள் இருப்பது அந்த கோவிலின் சிறப்பு.
      சிவன்ராத்திரியில் சிவன் புகழ் பாடுவது நல்லது என்பதால் தான் இந்த பகிர்வு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    அருமையான படங்கள் அழகான விளக்கங்கள் என பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    திருக்கச்சூர் ஸ்தல புராணம் தங்களால் தெரிந்து கொண்டேன். சிவராத்திரியின் சிறப்பை கூறும் கதையும், படங்களும் மிகவும் அழகாக உள்ளது. இறைவனுக்கும், இறைவிக்கும் காரண பெயர்கள் அமைந்த விதங்களும், படிக்க நன்றாக இருந்தது.

    ஆடலரசரின் அற்புத நடன படங்களும், அசலும், நகலும், படமும், வித்தியாசமான நடன சிவனாரின் படமும் மனதை கொள்ளை கொண்டன. தங்களால் சிவராத்திரி ஈஸ்வரரின் நிறைவான தரிசனம் காண முடிந்தது. மிகவும் அழகாக பக்தி பரவசத்தோடு எழுதியுள்ளீர்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      ஒவ்வொன்றையும் ரசித்து படித்து அருமையாக கருத்து சொல்லி உற்சாகப்படுத்திய உங்களுக்கு நன்றி கமலா.

      நீக்கு
  17. சீர்காழிக்குத் 'தோணிபுரம்' என்ற பெயரும் உண்டு. இது எனக்கு இதுவரை தெரியாது. கோயில் பற்றிய பதிவு விவரமாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அபயா அருணா, வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. இணையம் சில நாட்களாக மிக மோசமான நிலையில் உள்ளது... கணினியைத் திறந்தால் இயங்குவதே இல்லை...

    கையிலுள்ள கேலக்ஸியில் பதிவைத் திறந்தால் அது எல்லா தளங்களையும் காட்டுவதில்லை....

    அதனால் தான் இந்தப் பதிவு விடுபட்டிருக்கிறது...

    ஓடத்தில் தோணியப்பர் படம் என்னிடமும் உள்ளது... பதிவில் சேர்ப்பதற்கு சரியான தருணம் அமையவில்லை...

    படங்களும் பதிவும் அருமை...

    பலா, அதிபலா என்பவை மந்திரங்கள்..
    பசி தாகம் தோன்றாது என்பது குறிப்பு...
    விஸ்வாமித்ரர் - ராமனுக்கும் இளைய பெருமாளுக்கும் உபதேசித்தார்...

    இங்கே பதிவில் மருந்து என்று வந்திருக்கிறது...

    காரைக்குடிக்கு அருகிலுள்ள திருப்பத்தூர் திருத்தளி நாதர் திருக்கோயிலில் ஸ்ரீ யோக வயிரவர்.... அமர்ந்த கோலம்..
    இவரது சந்நிதியிலும் வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டு நுழையக் கூடாது....

    நமது மக்கள் உணரத் தவறிய விஷயங்கள் எத்தனையோ உள்ளன...
    அன்பின் மகளிர் தின நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    இணையம் சரிவர இயங்கவில்லை என்றால் என்ன செய்வது?

    //பலா, அதிபலா என்பவை மந்திரங்கள்..
    பசி தாகம் தோன்றாது என்பது குறிப்பு...
    விஸ்வாமித்ரர் - ராமனுக்கும் இளைய பெருமாளுக்கும் உபதேசித்தார்...//

    நானும் படித்தேன், இந்த கோவில் தலவரலாறில் மந்திரங்கள் என்று சொல்லாமல் மருந்துகள் என்று இருக்கிறது.

    நாங்களும் யோக பைரவரை தரிசனம் செய்து இருக்கிறோம்.

    (எங்கள் மன்றத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தில் ) தியானம் செய்யும் போது பூ அணிந்து வராமல் இருப்பது நல்லது என்பார்கள். பூ வாசம் நாசியில் சென்று தும்மல், இருமலை உண்டாக்கும் அதனால் தவம் சரிவர செய்ய முடியாது என்பதால் இருக்கலாம்.

    உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  20. >>> பூ வாசம் நாசியில் சென்று தும்மல், இருமலை உண்டாக்கும் அதனால் தவம் சரிவர செய்ய முடியாது..<<<

    நறுமண வாசனாதி திரவியங்கள் மனதை ஆழ்நிலைக்குச் செல்ல விடாமல் தடுப்பவை..

    தொடக்க நிலையிலுள்ள யோக சாதகனால் இவற்றை வெல்ல இயலாது போகும்...

    துறவியர்க்கும் தாம்பூலம், நறுமணமுடைய மலர்கள் வாசனைத் திரவியங்கள் பொன்னாபரணங்கள் ஆகியன விலக்கப்பட்டவை..

    ஆனால் - இன்றைய நவீன ஆஸ்ரம சுகவாசிகளுக்கு தாம்பூலம் தவிர்த்த ஏனையவை தான் அடையாளங்கள்..

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் சொல்வது சரி.
    ஆரம்ப சாதகனுக்கு புற பாதிப்புகள் சங்கடம் செய்யும், ஆழ்ந்து போய்விட்டால் இவை பொருட்டே இல்லை.
    அன்று உள்ள துறவிகள், இன்று உள்ள துறவிகள் மாற்றங்கள் நிறைய.
    உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு