புதன், 13 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில் பகுதி- 2




  இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

சைவ, வைணவக்  கதைகளைக் கூறும் சிற்பங்கள் அழகாய் உள்ள கோபுரம் என்று முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். போன பதிவில் வைணவ கதைகள் கோபுரங்களில் இருந்ததைப் பார்த்தோம்.
இந்த பதிவில் சைவகதைகள் உள்ள கோபுரக்காட்சிகள்.

 இன்னும் வரும் ,அய்யனார் கோவில் சிற்பங்கள் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். கீழே வருவது அய்யனார் கோவில் பிரகாரத்தில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள கதை சொல்லும் சிற்பங்கள் , கோபுரம் தாங்கும் பொம்மைகள் காலத்தைச் சொல்கிறது.  கேரளத்தினர், வட மாநிலத்தவர், நாடோடிகள் (குறவர்கள்)  ஆகியோர் கோபுரத்தில் இருக்கிறார்கள்.

ஆலமர் கடவுள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் - கேரள ஆண், பெண்


அய்யனார் இருக்கும் கருவறை விமானத்தில்  தட்சிணாமூர்த்தி, பைரவர்  மற்றும் கோபுரம் தாங்கும் பொம்மைகள் வித்தியாசமான தோற்றத்தில்


கோபுரம் தாங்கும் பொம்மைகளில் பெண் சூடிதார் அணிந்து இரட்டை ஜடை, ஆண் இரண்டு பாக்கெட் வைத்த காலர் பெரிதாக உள்ள சட்டை, பேண்ட் அணிந்து   இருக்கிறார். (நவீன உடை அணிந்து இருக்கிறார்கள்)

மேலே வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், கோபுரத்தின் கீழ்ப் பகுதியில்
நடுவில்  கால சம்ஹார மூர்த்தி. எமதர்மராஜா பாசக்கயிறைக் கையில் தூக்கிப் பிடித்து இருக்கிறார் மார்கண்டேயர் சிவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சி.

 இடது பக்கம் வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி.  சிவன் முகம் குழந்தை முகம் போல் சாந்தமாய் இருக்கிறது. கடைக் கோடியில் சங்கரநாராயணர் காட்சி அளிக்கிறார்.

கோவிலுக்குள் கல் குதிரை, பின்புறம் குதிரைக்கு அடியில் ஒரு பக்கம் கண்ணன், பாமா, ருக்குமணி
இன்னொரு குதிரை காலடியில் சிவனடியார் போல் உள்ளது, விவசாயப் பெண் உணவு எடுத்துச் செல்வது போலும் இருக்கிறது. கரடி தலையில் வைத்து இருப்பது தேன் குடுவை போல் இருக்கிறது. என்ன கதை என்று தெரியவில்லை. தமிழ்ச்சங்கத்தில் நடந்த மாலை விழாவில் ஒருவர் ஒரு கதை சொன்னார். கரடியை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மகிழ்வாய் இருப்பதைப்பற்றி. அதற்கும் இதற்கும் சம்மந்தம் உண்டா, தெரியவில்லை.
அடுத்த பதிவில் கரடிக் கதையைச் சொல்கிறேன்.


மதுரை வீரன், கருப்பசாமிகள் இருக்கும் மேல் விதானத்தில்  வீரபத்திரர், கருப்பர்கள், மற்றும் வீரர்கள், மற்றும் காளி, கொற்றவை. கிராம தெய்வங்கள்
கோவில் பிரகாரத்தில் உள்ள பிள்ளையார் புது ஆடை உடுத்தி இருந்தார். கோவிலில் அன்றைய உபயதாரர்கள் அணிவித்து இருப்பார்கள் போலும்.
நாங்கள் போன போது காலை 7 மணி என்பதால் எல்லாத் தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார்கள். 
வில்வமரத்தடி  சிவன் -வில்வ இலைகள் மிகக் குட்டி குட்டியாக இருந்தது.



இரண்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து பொங்கல் வைக்கப்போகிறார்கள். ஒரு குடும்பத்தினர்,  தாமரைத் தடாகத்தில் அரிசி களைந்து  பொங்கல் பானையில் போடுகிறார்கள், அந்தத் தண்ணீரில் பொங்கல் வைக்கிறார்கள்.
இன்னொரு குடும்பம்  பொங்கல் வைக்க சுள்ளிக் கட்டு மற்றும் பொருட்களுடன் கோவிலுக்கு உள்ளே போகப்போகிறார்கள்.
பால் வியாபாரம் செய்பவருக்கு கேன்களைக் கழுவத் தாமரைத்தாடகம் உதவுகிறது.  பூக்கள் கட்டவோ? அல்லது உணவு சாப்பிடவோ தாமரை இலைகள் எடுத்து வைத்து இருக்கிறார் கேன்கள் மீது.


அய்யனார் கோவில்களில் குதிரை எடுப்பு விழாக்கள் உண்டு என்பார்கள் , குதிரைகள் வண்ணம் இழந்தாலும் அழகாய் இருக்கிறது.


குதிரைகள் அணிவகுத்து நிற்கும் காட்சி அழகாய் இருக்கிறது தானே?


பாண்டிய மன்னர்கள்.

                                                                       பைரவர்கள்

                                                               மீனாட்சி கல்யாணக் காட்சி
 இசை, நடன கலைஞர்கள் , நாதஸ்வரகாரர் கையில் வாட்ச் அணிந்து இருக்கிறார்,  நடனமணியின் உடை , மற்றும் கம்மல் ஆட்டத்திற்கு ஏற்றார் போல் இருக்கிறது. தவில் வாசிப்பர் கையில் தாயத்து , காப்பு, தவில் அடிக்கும் குச்சி எல்லாம் அழகாய் நேர்த்தியாக வடித்து இருக்கிறார்கள்.




கோவிலுக்கு வெளியே இடது புறம் இன்னொரு தாமரைத் தடாகம் இருந்து இருக்கிறது அதை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள், புதிதாக மீன்கள் விட்டார்கள்.
அய்யனார் கோவிலின்  தோற்றம் பக்கத்து மலைமேல் இருந்து எடுத்த படம்.

கால்வலி சரியாகி வரும்போது இந்தப் படிகளில் ஏறி மீண்டும் வலியை அதிகப்படுத்துவதா? ஏறலாமா? வேண்டாமா என்ற சிந்தனையில் இருந்தேன், நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்றேன், அவர்கள் நீயும் வந்தால் போலாம் இல்லையென்றால் வேண்டாம் என்றார்கள். பசுமை நடைத் தலைவர் காலை 5, ஆறு மணிக்கு ஏற ஆரம்பித்து விட வேண்டும் வெயிலுக்கு முன் என்றால் நன்றாக இருக்கும் என்றார்கள்.

நாங்கள் புத்தக வெளியீடு விழா, அய்யனார் கோவில் எல்லாம் முடித்து விட்டு போகலாம் என்றால் மணி 9 ஆகி விட்டது. வெயில் அவ்வளவாக இல்லை மழை மேகம் இருந்தது. பசுமை நடை குழுவில் இங்கு நிறைய தடவை வந்து  மலைக்கு போய் இருப்பதாலும், மாலையில் விழா இருப்பதாலும் அவர்கள் யாரும் ஏறவில்லை. புதிதாக வந்தவர்கள் ஒரு சிலர் ஏறிக் கொண்டு இருந்தார்கள்.

இறங்கி வந்தவரை  (சின்ன வயது ஆனால் கொஞ்சம்  குண்டாக இருப்பவர்) பார்த்தேன் வேர்க்க விறு விறுக்க வந்தார், அவரிடம் கேட்டதற்கு மேலே போகப் போகப் படிகள் இல்லை கம்பியைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும் கொஞ்சம் சிரமம் தான் என்றார்.

நாங்கள் மேலே ஏறி அங்கு என்ன இருக்கிறது என்பதைப் பார்த்தோமா என்பதை அடுத்த பதிவில்.

                                                               வாழ்க வளமுடன்.

81 கருத்துகள்:

  1. இறங்கி வந்தவர் பயமுறுத்தி இருப்பதைப் பார்த்தால் எச்சரிக்கையாக ஏறாமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      இறங்கி வந்தவர் எச்சரிக்கையால் ஏறாமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறதா?
      அடுத்த பதிவில் தெரிந்துவிடும் நாங்கள் ஏறினோமா இல்லையா என்று.
      உங்கள் காத்து இருப்புக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. முதல் இரண்டு படங்களுமே அருமை. தடாகமும் சரி, க்ளோசப் கோபுரமும் சரி... மாடர்ன் பெண்களும் கோபுரச் சிற்பங்களில் இருப்பது ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபுர சிற்பங்கள் பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.
      மாடர்ன் பெண்களும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
      கோபுரம் மாற்றி அமைக்க பட்ட போது இந்த சிற்பங்கள் இடம் பெற்று இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. சாந்தசிவன், கண்ணன் பாமா ருக்மணி... எல்லாம் அழகு. கரடிக்கதைக்கும் காத்திருக்கிறேன். திருவிழாக்கள் வரும்போது அந்தக் குதிரை பொம்மைகள் நிறம்பெறும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் சிற்பங்களை எல்லாம் ரசித்து கருத்து சொல்லி, கரடிக்கதைக்கு காத்திருக்கிறேன் என்று சொல்வதை கேட்கும் போது மகிழ்ச்சி.
      திருவிழாக்கள் போது புதுக்குதிரை வரும், இதற்கும் வண்ணம் கொடுப்பார்களா என்று தெரியாது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. பக்கத்து மலைமேலிருந்த எடுத்த காட்சி அருமை. கடைசி இரண்டு படங்களும் கண்ணைக்கவர்கின்றன. ஏறிப்போகப்போகும் பிரமிப்பும் மனதில் படர்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், இந்த மூன்று படங்களும் அலைபேசியில் எடுத்த படங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. நீங்கள் பார்த்து மகிழ்வதைப் படம் பிடிக்கிறீர்கள்கோபுர சிற்பங்கள் சிலைகள் வடித்த காலம்பற்றி கூறுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நான் பார்த்து மகிழ்ந்த காட்சிகளை நீங்களும் பார்த்து மகிழ பகிர்ந்து இருக்கிறேன்.
      சிற்பங்கள் காலம் கூறும் கண்ணாடிதானே!
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. வாவ்வ்வ்வ் தாமரைக்குளம் வந்து விட்டது.... வருகிறேன்ன்ன்ன்ன் கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      வாங்க வாங்க . தாமரைக்குளம் வித விதமான கோணங்களில் இருக்கிறது இதில் பாருங்கள்.

      நீக்கு
  7. உன்னிப்பாக கவனித்து உள்ளீர்கள் அம்மா... அருமை... சிற்பங்களில் தான் எத்தனை கலைநயம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      கோபுர சிற்பங்களை வடித்தவர் நல்ல கலைத்திறன் உடையவர் மட்டுமல்லாமல் ரசித்தும் செய்து இருப்பார் போலும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. ஒவ்வொரு படமும் கருத்துடன் எடுத்திருக்கிறீர்கள். பொம்மைகளை வடித்தவரின் கலைத்திறன் மிகவும் பாராட்டுக்குரியது.
      காலக் கண்ணாடி என்பதே தகும். அளவிலும் சரி அழகிலும் சரி சிற்பங்கள் ஏகப்பட்ட கதைகளைச் சொல்கின்றன.
      அன்பு கோமதி ,அந்தப் படிகளைப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
      தாமரைத் தடாகம் உணவுக்கும் உபயோகப் படுகிறது. பாத்திரம் கழுவவும் உபயோகப் படுகிறதா.
      எல்லோருடைய பக்தி சிரத்தை யைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
      அருமையான தகவல்களைப் பகிர்ந்த விதம் மேன்மை. வாழ்க வளமுடன்.

      நீக்கு
    3. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      சில கோபுரங்களில் உள்ள சிலைகள் நம்மை கவரும் அது போல் இந்த கோவில் கோபுரம் அக்கா.கலைத்திறனை பாராட்ட வேண்டும். அந்தக் காலத்தில் ஊருக்குள் இருக்கும் ஆறு குளங்களில் குளித்து குடங்களை கழுவி தண்ணீர் எடுத்து செல்வார்கள். மீன்கள் ஆறு, குளங்களில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்து விடும்.

      படிகளை பார்க்க ஏறி போகிறவர்களை பார்க்க பிரமிப்பாகத்தான் இருந்தது அக்கா.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  8. கோபுர சிலைகள் மனசை கொள்ளை கொள்ளுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பற்பல கோணங்களில் பசுமைக் கோயிலைப் படம் எடுத்து ஒருமுறை நாமும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்...

    ஐயன் அருள் உண்டு..
    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வாரஜூ, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களூக்கும் நன்றி.
      ஐயன் அருள் எல்லோருக்கும் உண்டு.

      நீக்கு
  10. .// (நவீன உடை அணிந்து இருக்கிறார்கள்)//

    எப்படி அக்கா ? ஆச்சர்யம் !! சமீபத்தில் கட்டி வடிவமைத்தார்களா ?
    அய்யனார் கோவில் குதிரைகள் அழகு .எனக்கு கருப்பு பெயிண்ட் கிடைச்ச முதலில் அவற்றின் கண்களுக்கு வர்ணம் தீட்டுவேன் அவற்றின் அழகே ஒளிவீசும் அந்த பார்வைதான் .
    படங்கள் எல்லாம் எப்பவும் போல் அழகுக்கா .
    அந்த படிகள் மலைமேல் எப்படி ஏறினீங்க !! சீக்கிரம் அடுத்த பதிவில் சொல்லுங்க மருத மலைக்கு அகலமான படிகள் ஆனலும் பலர் மேலே ரோட்டு வழியா காரில் வந்து கோவிலை அடைந்தாங்க அப்படி ஏதும் வசதி இருந்ததா இங்கே

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

    // (நவீன உடை அணிந்து இருக்கிறார்கள்)//

    //எப்படி அக்கா ? ஆச்சர்யம் !! சமீபத்தில் கட்டி வடிவமைத்தார்களா?//

    பழைய காலத்து கோபுரம் பழுது அடைந்த பின் மீண்டும் கட்டும் போது இப்படி அமைத்து இருக்கலாம். தெரியவில்லை, கோவில் கட்டிய வருடம் எல்லாம் போடவில்லை.
    குதிரையின் கண்கள் அழகுதான். உங்கள் வண்ணம் தீட்டும் கை குதிரைகளுக்கு வண்ணம் தீட்ட துடிக்கிறது.

    மருதமலைக்கு போவது போல் கார் போகும் வசதி இல்லை, படிகளின் வழியே தான் ஏறி போக வேண்டும். சமணர்கள் இருந்த இடங்கள் எல்லாம் மலையில் ஏறிதான் போக வேண்டும்.
    சிறுவயது ஆண், பெண் எல்லாம் படி வழியாக போகமல் மலைசரிவில் ஏறியும், வரும் போது வேகமாய் ஓடியும் வந்தார்கள். முன்னால் போகும் ஆள் மீது பின்னால் வரும் ஆள் மோதினால் அப்படியே உருண்டு தாமரைக்குளத்தில் வந்து விழ வேண்டும்.
    சீக்கீரம் அடுத்த பதிவு போடுகிறேன் ஏஞ்சல், வந்து விடுங்கள் அடுத்த பதிவுக்கு.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நனறி.

    பதிலளிநீக்கு
  12. அழகிய சிற்பங்கள். படங்களும் பகிர்வும் அருமை. தாமரைத் தடாகம் அழகு. மேல் ஏறிச் சென்றீர்களா என அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

    படங்களை பற்றிய கருத்துக்கு நன்றி.
    உங்கள் காத்திருப்புக்கும் நன்றி ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரி

    முதல் படம் கண்ணை கவர்கிறது. நீல வானமும் திட்டு திட்டாக வெண் மேகமும், பச்சை பசேலென தாமரைக் குளமும், மலையும், மலைஅடிவாரத்தில், அழகான கோபுரங்களையுடைய கோவிலுமென அந்தப் படத்தை நல்லதொரு கோணத்தில் எடுத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    கோபுர தாங்கியாக எத்தனை வண்ண சிற்பங்கள்,.! இக்கால நாகரீகம் அப்போதும் உள்ளதோ என எண்ண வைக்கும் சிற்பங்கள், இன்னமும் அனேக தெய்வ சிற்பங்கள் என மனதை நிறைத்தது கோபுர தரிசனங்கள்.

    குதிரைகளின் அணிவகுப்பும், குதிரைகளின் அடியில் வனப்புடன் செதுக்கிய கதை சொல்லும் சிற்பங்களும் அழகு. அடுத்த பதிவில் கரடி கதையையும் எதிர்பார்க்கிறேன்.

    புத்தாடையுடன் தனியே அமர்ந்து வரப்போக இருப்பவர்களை ரசித்துக் கொண்டிருக்கும், விநாயகரும், சிவனாரும் மிக அழகாக இருக்கிறார்கள்.

    தாங்கள் எடுத்த ஒவ்வொரு படங்களும் மிக மிக அழகாக இருக்கின்றன. மிகுந்த பொறுமையுடன் படங்கள் எடுத்து ஓவ்வொன்றுக்கும் விளக்கமும் தந்திருக்கும் தங்களது செயலால், நானும் தங்களுடன் சுற்றிப் பார்த்த நிறைவை அடைந்தேன்.

    தாமரைக்குளம் எல்லாவற்றிற்கும் பயனளிக்கிறது என அறியும் போது தண்ணீரின் பயன் நினைத்து மனம மகிழ்ச்சியடைகிறது.

    பால்கேன்களை கழுவியவர் தாமரை இலைகளை தைத்து சாப்பிடுவதற்கு தட்டாக பயன்படுத்துவதற்காக அந்த இலைகளை பறித்து வைத்திருக்கிறாரோ?

    மலை ஏற இவ்வளவு படிகளை அமைத்து வைத்திருப்பதை பார்க்கும் எனக்கே படி ஏறி மலையின் மேலே என்ன இருக்கிறது என பார்க்க ஆசை வருகிறது நேரில் பார்த்து ரசித்த தாங்களும் ஏறிச்சென்று விட்டுதான் வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் அதை குறித்து அறியும் ஆவலில் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் ஆரவமான பின்னூட்டம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
      ஒவ்வொரு படத்தையும் ரசித்து பார்த்து கருத்து சொல்வது அருமை.
      அன்று உள்ள கோபுரங்களில் உடை அலங்காரம், நன்றாக இருக்கும். சில கோவில் கோபுரங்களில் கோபுரம் தாங்கும் பொம்மைகள் வித விதமாய் இருக்கும். சில கொடுமையாக இருக்கும். இதில் எல்லாம் குறை சொல்ல முடியாத அளவு இருந்தது. மனதுக்கு நிறைவு.

      கரடி கதை மாலை நிகழ்வில் பேசினார்கள் அந்த பதிவு வரும் போது சொல்கிறேன்.

      தாமரை இலை பூக்கள் கட்டி விற்கிறார்கள் அப்புறம் சாப்பிடவும் பயன்படுத்தலாம். அவ்வளவு பெரிது இலைகள். மதுரையில் த்ண்ணீர் தட்டுபாடு இருக்கிறது, வீட்டில் இத்தனை பால்கேனை கழுவ தண்ணீர் நிறைய வேண்டுமே! அவருக்கு இந்த குளம் வரபிரசாதம்.

      கமலா காத்து இருங்கள். படிகள் கொஞ்சம் தான் இருப்பதாகவும் அப்புறம் பாறையில் செங்க்குத்தாக ஏறி போவது போல்தான் இருக்கும் என்றார்கள்.
      உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நன்றி.

      நீக்கு
  15. படங்கள் பார்க்கும்போதே மகிழ்ச்சி. எத்தனை கலைநயம் அந்த சிற்பங்களில்...

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் தொடர்ந்து வருவதற்கும் நன்றி.

      நீக்கு
  16. ஆவ்வ்வ்வ் தாமரைக்குளம்.. தடாகம் சூப்பராக இருக்கு.. இதைப் பார்க்கவே மீ வெயிட் பண்ணினேன் ஆசையோடு.. என்ன ஒரு அழகிய இடம், மலை அடிவாரத்தில அமைஞ்சிருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா , நீங்கள் தாமரை தாடகம் பற்றி கவிதை எழுதலாம் அல்லவா?
      எனக்குதான் கவிதை வர்வைல்லை, நீங்கள் கவிதாயினி அல்லவா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்:).. எனக்கு சிலசமயம் தானா உதிக்கும் கவிதை கோமதி அக்கா, சிலசமயம் புரண்டு புரண்டு அழுதாலும் வராது ஹா ஹா ஹா..

      ஸ்ரீராம் எழுதுவார் என நினைக்கிறேன் இப்படி டக்குப் பக்கென.

      நீக்கு
    3. இன்றாவது
      இறைவனடி சேரமுடியுமா?
      நீரில் நின்று தவம் செய்கின்றன
      தாமரை மலர்கள்.

      மூழ்காமல் இருக்க
      முட்டு கொடுத்து
      துணை நிற்கின்றன
      நீர் ஒட்டா தாமரை இலைகள் !

      நீக்கு
    4. அதிராவின் வார்த்தையை மெய்பட வைத்து விட்டீர்கள்.
      டக்குப் பக்கென கவிதை எழுதி.
      தாமரை கவிதை அருமை.
      நன்றி ஸ்ரீராம்.
      தாமரை மலருக்கு நீர் ஒட்டா தாமரை இலைகள் துணை, அருமை அருமை.

      நீக்கு
    5. ஆவ்வ்வ்வ்வ் நான் ஜொன்னனே.. நான் ஜொன்னனே.. ஸ்ரீராமால்தான் இன்ஸ்டண்ட் கவிதை வடிக்க முடியுமென...

      அழகான கற்பனை ஸ்ரீராம்.. இப்படி குட்டிக் குட்டிக் கவிதைகள் நிறைய ட்ரை பண்ணலாமே நீங்க...

      இன்ஸ்டண்ட் கவிஞர் ஸ்ரீராம் வாழ்க!!!..

      நீக்கு
    6. நீங்கள் சொன்னது போல் ஸ்ரீராம் உடனடியாக கவிதை கொடுத்து விட்டார்.
      கவிதையை படித்து மேலும் கவிதை எழுத உற்சாக பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றி.
      ஏற்கனவே குட்டி குட்டி கவிதை எழுதுவார். மேலும் எழுத அவருக்கு இந்த பாராட்டுக்கள் உதவும்.

      நீக்கு
    7. நன்றி அதிரா.... எனக்கு ஃபில்டர் தான் பிடிக்கும். இன்ஸ்டன்ட் பிடிக்காது!

      இருவருக்கும் நன்றி Pin sales க்கு!

      நீக்கு
    8. ஹா ஹா ஹா எப்பவும் சாப்பாட்டு நினைப்பு ஶ்ரீராமுக்கு:)... இன்ஸ்டண்ட் ஜோக்கும் சொல்லுறீங்க இப்போ:)..

      நீக்கு
  17. கோபுரமும் சிலைகளும் என்னா ஒரு அழகு.. உள்ளம் கொள்ளை போகுதே..

    //கோபுரம் தாங்கும் பொம்மைகளில் பெண் சூடிதார் அணிந்து இரட்டை ஜடை//
    ஓ ஹா ஹா ஹா அப்பவே சுரிதார் இருந்திருக்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, கோபுர சிற்பங்கலை ரசிப்பீர்கள் என்றுதான் இங்கு பகிர்ந்தேன்.
      ஒவ்வொரு கோபுரங்களை உற்று கவனித்தால் நமக்கு நிறைய இது போன்ற ஆச்சிரியம் ஊட்டும் படங்கள் கிடைக்கும்.

      நீக்கு
  18. நீங்க சொல்வதைப் பார்த்தால், சமணர்களும் நம்மைப்போலத்தானே அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.. எதிலே வேறு பட்டு நிற்கிறார்கள் நம்மோடு? அதுபற்றித் தெரியுமோ கோமதி அக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, சமணர்கள் வழிபாடு பற்றி முன்பே உங்களிடம் சொன்னேன் அதிரா.
      அவர்கள் தங்கள் முன்னோடிகள் சொன்ன அறப்பாதையில் பயணம் செய்தவர்கள்.
      கடவுள் என்பது சக உயிர்களை மதித்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், முதலியவற்றை கொடுத்தவர்கள். எல்லா உயிர்களின் மீது அன்பு செய்தவர்கள். கொல்லாமையை வலிஉறுத்தியவர்கள்.

      தங்களுக்கு போதித்த வர்களின் பாதத்தை வைத்து பாத வழிபாடு செய்தவர்கள்.
      பின்பு அவர்களின் உருவத்தை வழிபாடு செய்தவர்கள்.
      சமண மத கோட்பாடுகளை பாடத்தில் (வரலாறு) படித்து இருக்கிறோம் அதிரா
      நன்னம்மிக்கை, நன்னெறி, நற்செயல் இதுதான் அவர்களின் கோட்பாடக இருந்தது.
      அன்பும் அறனும் நிறைந்த கோட்பாடுகளை தன்னகத்தே வைத்து இருந்தவர்கள், யாகம், பூஜை உயிர்பலி இவற்றை வெறுத்தவர்கள்.
      அவர்களின் குருமார்கள் தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கபட்டார்கள். 10ம் வகுப்பில் படித்தது.


      நிறைய கலை, இலக்கியம் இவைகளை படைத்தவர்கள்.


      நம்மவர்கள் சமணர்கள் இருந்த இடங்களில் நம் கோவிலை கட்டிக் கொண்டார்கள்.

      நீக்கு
    2. அதிரா, சமணர்கள் இந்திரனை வழி பட்டார்கள், தமிழ் சமணர்கள் கோவில் கட்டி இருக்கிறார்கள். அய்யனார் கோவில்கள் ஊருக்கு வெளியே இருந்தது, சமணர்களும் ஊருக்கு வெளியே இருந்தார்கள்.
      சமணர்கள் சைவர்களாக மாறிய போது சாஸ்தாவை வணங்க ஆரம்பித்தார்கள்.
      பெரிய ஆராய்ச்சிக்குறிய விஷயங்கள் , சமணமும் தமிழும் என்ற நூல் கிடைத்தால் படித்து பாருங்கள்.
      சமணர்களைப் பற்றி தெரியும் . எவ்வளவு மக்கள் மதுரையில் வாழ்ந்தார்கள் மடிந்தார்கள் எல்லாம் வருகிறது , திருவாரூர், மதுரை பகுதிகளில் சமணர்கள் நிறைய வாழ்ந்து இருக்கிறார்கள்.
      500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் தலை சிறந்து விளங்கி இருக்கிறது.

      நீக்கு
    3. அப்போ இப்போ சமண சமயம் இல்லையோ? அழிஞ்சுபோச்சோ? ஆனா வைஸ்ணவர்கள் இருக்கிறார்களே.. நெலைத்தமிழன் சொன்னதை வச்சுச் சொல்கிறேன்.

      நீக்கு
    4. சமணம் அழியவில்லை தீர்க்கதரிசி. தமிழ்ச் சமணர்கள் திருவண்ணாமலைப் பக்கம் அதிகம் இருக்கிறார்கள். சமணக் கோயில்களும் அங்கே அதிகம் பார்க்கலாம். திருவண்ணாமலை செல்லும் வழியெல்லாம் சமணக் கோயில்கள். இப்போ பாகிஸ்தான் கிட்டே மாட்டிக் கொண்டு பின்னர் விடுதலை ஆகி வந்த அபிநந்தன் வர்த்தமான் தமிழ்ச் சமணர் தான். வர்த்தமான் என்பது அவங்க குடும்பப் பெயர். அம்பத்தூரில் எங்க வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு தமிழ்ச் சமணர் இருந்தார். அரிசிக்கடை வைத்திருந்தார். அதே போல் முன்னால் தமிழகக் காவல் துறை டிஜிபியாக இருந்த ஸ்ரீபால் அவர்களும் அவர் மனைவி பெண்களுக்கான மருத்துவர் ஆன கமலி ஸ்ரீபாலும் தமிழ்ச் சமணர்களே. இன்னும் பலர் இலக்கிய உலகிலும் இருக்கிறார்கள்.

      நீக்கு
    5. //தமிழகக் காவல் துறை டிஜிபியாக இருந்த ஸ்ரீபால் அவர்களும் அவர் மனைவி பெண்களுக்கான மருத்துவர் ஆன கமலி ஸ்ரீபாலும் தமிழ்ச் சமணர்களே.//

      தமிழகத்தில் உள்ள சமண கோவில்களை தொகுத்து அந்த கோவில்களைப்பற்றி விரிவான செய்திகளை அளித்து வருகிறார்கள். பொதிகையில் அவர்கள் தொகுத்த கோவில்கள், அங்கு நடக்கும் பூஜைகள், அபிசேகங்களை முன்பு அடிக்கடி காட்டுவார்கள்.
      வேலூர் பக்கம் . செஞ்சி கோட்டை பக்கம் எல்லாம் அவர்கள் கோவில் இருக்கிறது.
      ஆண்டு தோறும் சமணக் கோவில்களில் திருவிழாக்கள் நடைபேறுவது உண்டு. உற்சவ காலங்களீல் உறசவ்மூர்த்திகளையும் பரிவாரத் தெய்வங்களையும் விமானத்திலும், வாகனங்களிலும் எழுந்தருளச் செய்கிறார்கள்.சமண மூர்த்திகள் வீதிவலமாக எழுந்தருளும் போது அம்மூர்த்திகளுக்கு முன்னர் தருமச்சக்கரம் எழுந்தருளும். ஒன்றின் ஒன்றாக அமைந்தமுக்குடைகளுடன் உற்சவ மூர்த்தி எழுந்தருள்வார்.
      முன்பு சமண் மடம் காஞ்சீபுரம்,கடலூர் ஆகிய இடங்களில் இருந்தது இப்போது சித்தாமூரில் உள்ளது.திண்டிவனம் தாலுகாவில் உள்ளது சித்தாமூர்.

      சமண் கோவில்களில் சாஸ்தா, இயக்கி முதலிய தெய்வங்கள் பரிவார தெய்வங்களாக வழிபடபடுகிறார்கள்.
      தொண்டை நாட்டில், வட ஆற்காடு மாவட்டத்தில் இப்போதும் சமண்ர் அதிகமாக உள்ளார்கள்.ஆர்காடு, போளூர், வந்தவாசி, தாலுக்காவில் இவர்கள் அதிகமாய் இருக்கிறார்கள்.

      நீக்கு
  19. ஓ கண்ணன்.. பாமா.. ருக்மணி ஹா ஹா ஹா அழகு.

    ஹா ஹா ஹா கரடியார் என்ன அழகாக தலையில் தூக்கிப் போகிறார்.. இது சமணர் சமயத்தில் வந்த கதையாக இருக்கலாம்.. எனகும் இதுபற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா கரடிக் கதை. கரடி விடுகிறார்கள் என்பார்கள் சொல்வார்கள் இல்லையா ? அது போல் பெண்களின் கஷ்டங்களை உணரா ஆண்களுக்காக பெண் எழுதிய கதை.அவர் சொன்னது புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய கதையாம், நான் குறிபெடுத்த் வரை ஒரு பதிவில் சொல்கிறேன்.

      நீக்கு
    2. நன்றி. கேட்க ஆவலாக இருப்பதற்கு.

      நீக்கு
  20. ஓ புது வெள்ளை ஆடையுடன் இருப்பது பிள்ளையாரோ? பார்க்க அம்மன் என நினைச்சிட்டேன்.. தலையைப் பார்க்க அப்படி தெரியுது.. கையிலே என்ன அது தேசிக்காய்போல இருக்கு.. அப்போ மோதகமோ..

    வில்வமரட்த்ஹடியில் சிவலிங்கம் சூப்பர்ர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா , பிள்ளையார் தான் அவர் கையில் வைத்து இருப்பது எலுமிச்சை பழம் தான்.
      பிள்ளையாரின் இரண்டு பக்கமும் நாகர்கள் இருக்கிறார்கள்.
      வில்வ மரத்தடி சிவனும் என்னை கவர்ந்தார். அவர் பின் புறமும் நிறைய நாககர்கள் இருக்கிறார்கள்.

      நீக்கு
  21. ஓ தடாகத் தண்ணியில் பொங்கலோ? நேர்த்திக்கடனாக இருக்கலாம், ஆனாலும் தண்ணி சுத்தமிலையே... நாம் அது சொல்லக்கூடாது..

    // அல்லது உணவு சாப்பிடவோ தாமரை இலைகள் எடுத்து வைத்து இருக்கிறார் கேன்கள் மீது.//

    ஓ அது வாழை இலை என நினைச்சேன்.. அவ்ளோ பெரிசா இருக்கு.

    ஹா ஹா ஹா குதிரைப் பிள்ளைக்குப் பசிபோலும் வாயத் திறந்து நிக்கிறார்:)..

    ஓ மை வைரவர்...வைரவரைப் பார்த்தால் வித்தியாசமாக இருக்கிறார்ர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலதெய்வம் கோவில் போகும் போது அங்கு உள்ள ஏரி, குளம் தவிர வேறு தண்ணீர் வசதி இருக்காது அந்தக் காலத்தில். அதனால் அந்த தண்ணீரை எடுத்து வந்து தான் பொங்கல் வைப்பார்கள், அந்த ஏரி, குளத்தில் குளித்து விட்டு ஈர ஆடையோடு பொங்கல் வைப்பார்கள்.

      இப்போது வண்டி வசதிகளுடன் போவோர் தண்ணீர், கொண்டு செல்கிறார்கள்.
      ஆனால் இன்னும் இந்தக் காலத்திலும் பழைய காலம் போல் குளத்தில் தண்ணீர் எடுத்து பொங்கல் வைப்பது நேர்த்திக்கடனாகத்தான் இருக்கும். குளத்தில் மீன்கள் இருப்பதால் தண்ணீர் சுத்தபடுத்தபட்டு இருக்கும்.

      தாமரை இலை நல்ல பெரிதாக இருக்கிறது அதிரா.
      குதிரை பிள்ளை வெகு தூரம் காவல்தெய்வத்துடன் ஓடி வருவதால் வாய் திறந்து மூச்சு வாங்கும் தோற்றத்தில் இருக்கிறார்.
      வைரவர் தோற்றம் நிறைய இருக்கிறது அதிரா, ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பேர் உண்டு. இங்கு சூலாயுதம் தாங்கியும், நாய் வாகனம் இல்லாமலும் இருக்கிறார்.

      நீக்கு
  22. மலைக்குப் பொகும் படிகள், சிலைகள் தடாகம் அனைத்துமே சூப்பரோ சூப்பர்ர்.. நிட்சயம் போய்ப் பார்க்கலாம்..

    அனைத்தும் இன்று அருமையாக இருக்குது கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலை படிகள், தடாகம் அனைத்தும் அனைவரையும் அகவரும் வாங்க வாங்க பார்க்க.
      உங்களுக்காக தான் படங்களை நிறைய பகிர்ந்தேன் அதிரா.

      நீக்கு
  23. அழகிய சிற்பங்களுடன் கோபுரம் மிகவும் அழகாக இருக்கிறது! புகைப்படங்கள் அனைத்தும் அழகு! சென்ற பதிவில் போய் பார்த்தேன். மரமும் மலையும் தடாகமுமாக கீழக்குயில்குடி கிராமம் அழகாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமினாதன், வாழ்க வளமுடன்.
      பழைய பதிவுகளையும் படித்தமைக்கு மகிழ்ச்சி.
      கீழக்குயில்குடி அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கிறது.
      அதற்கு அழைத்து சென்ற பசுமை நடைக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  24. கோமதிக்கா வணக்கம். முதல் படமே அட்டகாசமாக இருக்கிறது. இந்த ஆங்கிள் இன்னும் சூப்பராக இருக்கிறது கோமதிக்கா…
    கோபுரங்கள் வெகு அழகு…நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்த பின் தான் கோபுரத்தில் கேரள நங்கை இருப்பது எல்லாம் தெரிந்தது…புரிந்தது…
    கோபுரத்தில் சுடிதார் பேன்ட் அதுவும் லெக்கிங்க்ஸ் போல இருக்கு இல்லையா…அட!!! நவீன உடை அப்போவே இருந்திருக்குதான்…ஆமாம் நாம பழைய படங்கள் பாடல்களில் கூடப் பார்த்திருக்கிறோமே…அப்புறம் எதுக்கு இப்போது பழைய காலத்தையும் இப்போதைய காலத்தையும் கம்பேர் செய்து பேச வேண்டும்…..என்று எனக்குச்சில சமயம் தோன்றும்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      முதல் படத்தை ரசித்தமைக்கு நன்றி.
      பழைய உடைகள் நாகரீகம் தான் மீண்டும் மீண்டும் வருகிறது.காலங்கள் மாறினாலும் மீண்டும் மீண்டும் ஒரு காலகட்டத்தில் அது நாகரீகமாய் திரும்பி வந்து கொண்டு இருக்கும்.

      நீக்கு
  25. கரடியுடன் ஒரு பெண் இருப்பது போன்ற சிற்பமும் கதையும் இதற்கானதோ…உங்கள் கதை அறிய ஆவலுடன்…

    தெய்வப்படங்கள் எலலம் அழகாக இருக்கின்றன. வில்வம் பழம் அத்தனை சிறப்பானது. அதைக் கூட தேன் நெல்லி போடுவது போல் தேனில் ஊறவைத்து கேண்டியாக விற்கிறார்கள். வில்வம் ஜூஸ் நல்லது. விளாம்பழமும் அப்படியேதான் அதில் சட்னி பச்சடி எல்லாம் செய்யலாம்…பெங்காலில் வில்வம் விளாம்பழம் ஒரு வகை ரெசிப்பி தெருக்களில் ரொம்ப ஃபேமஸ்…குறிப்பாக வில்வம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரடியுடன் பெண் இருப்பது போன்ற சிலைக்கும் அதுக்கும் சம்பந்தம் இருப்பது போல் தான் இருக்கிறது. ஆனால் கதை எழுதியவர் இங்கு வந்து இந்த சிலையை பார்த்தார்களா என்று தெரியவில்லை.
      வில்வம் ஜூஸ், விளாம்பழம் குறிப்புகள் அருமை.

      நீக்கு
  26. ஓ தாமரைத் தடாகத்தண்ணீரில் பொங்கலா? தண்ணீர் நன்றாக இருக்கிறதோ? மீன்கள் உண்டோ? இருந்தால் அவை அழுக்கை எல்லாம் சாப்பிட்டுவிடும். இல்லை என்றால் தண்ணீர் சுத்தமாக இருக்காதே. என்னதான் நாம் பொங்கும் போது அது காய்ச்சப்பட்டாலும் சில நுண்ணுயிரிகள் இறப்பதில்லை…

    பால்கேன்கள் கழுவட்டும்…சோப் போடாமல்தானே கழுவினார்கள்? இது போன்ற செயல்கள்தானே நம் அழகான குளங்கள் ஆறுகல் எல்லாவற்றையும் அசிங்கப்படுத்துகின்றன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் இல்லாத ஊரில் ஜனங்கள் தவிக்கும் போது இது போன்ற நீர்நிலைகளை அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்துவார்கள்.
      பெரிய பெரிய மீன்கள் விட்டு இருக்கிறார்கள் குளத்தில் .

      நீக்கு
  27. குதிரைகள் மிக மிக அழகாக இருக்கின்றன..மீனாட்சி கல்யாணக் காட்சி, கலைஞர்கள் இருக்கும் காட்சி எல்லாம் மிக அழகு..
    புதிய தடாகம் வாவ்!! அதுவும் அதில் மீன்கள் விட்டது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கு அக்கா..

    ஐயனார் கோயில் படம் மிக அழகு பக்கத்து மலை மீதிருந்து எடுத்தது..
    மலயில் ஏறும் படிகள் அழகாக இருக்கிறது..

    சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்கள் ஏறியிருப்பீர்கள் என்றே தோன்றுகிறது கோமதிக்கா விடமாட்டாங்களே புதிய இடத்தைத் தெரிந்து கொள்வதையும் அதை ஃபோட்டோ எடுத்து நமக்குத் தருவதற்காகவும் கண்டிப்பாகப் போயிருப்பாங்கனு அடுத்த பதிவுக்கு ஆவலுடன்..

    கீதா




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதியதடாகம் இல்லை பழசுதான். அதைல் உள்ள தாமரை கொடிகளை அப்புறபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் வேறு வளர்க்க போகிறார்கள் என்று நினைக்கிறேன்.
      உங்கள் நம்பிக்கை வியக்க வைக்கிறது.
      அடுத்த பதிவில் படிக்கலாம்.
      அய்யனார் கோவில் படத்தை ரசித்தமைக்கு நன்றி.
      அனைத்து படங்களையும் பார்த்து ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  28. சென்ற பதிவும் வாசித்தேன் இப்போதைய பதிவும் வாசித்தேன் படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன. விவரங்கள் எல்லாமே மிகவும் சிறப்பு...சகோதரி.கொஞ்சம் வேலைப்பளு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      பழைய பதிவுகளையும் படித்தது அறிந்து மகிழ்ச்சி.
      நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  29. கோபுரப் பொம்மைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அதிலும் நவீன உடை அணிந்தவர்கள்! மிக நுணுக்கமாகக் கவனித்திருக்கிறீர்கள். எல்லாப் படங்களும் நன்றாக வந்துள்ளன. தாமரைத் தடாகம் உட்பட. எங்க ஊர்க் கோயில் பூசாரி தாமரைக் குளத்து நீர் பயன்படுத்துவதற்கு நல்லதில்லை என்பார். ஏனெனத் தெரியவில்லை. அங்கே குளத்தில் தாமரை வளர்க்கவில்லை. ஊருக்கு வெளியே இருக்கும் சில குளங்களில் தாமரைகள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      போன பதிவு வாசிக்கவில்லையா நீங்கள்?
      உங்கள் ஊர் பூசாரி ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லையே!
      படங்களை பற்றி கருத்து சொன்னத்ற்கு நன்றி.

      நீக்கு
  30. கரடியை மணந்த பெண் பற்றி முகநூலில் கூட 2 நாட்கள் முன்னர் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. கரடிக்கதையைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மலைப்பாதையைப் பார்த்ததுமே நான் ஏறியே இருக்க மாட்டேன். நீங்கள் ஏறினீர்களா இல்லையா எனத் தெரிந்து கொள்ள ஆவல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரடியை மணந்த பெண் பற்றி படித்து விட்டீர்களா?
      உங்கள் ஆவலுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  31. பதிவில் சுவாரஸ்யமான விடயங்கள்.
    படங்கள் நல்ல தெளிவாக உள்ளது.
    இந்த பதிவு தொடக்கத்திலேயே படித்து விட்டேன் சகோ கருத்துரை இட மறந்து விட்டேன் போல...
    தகவலுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      தலைப்பு ஒரே மாதிரி இருப்பதால் படித்து விட்டோம் என்று நினைத்து வரவில்லை போலும் என்று நினைத்தேன்.
      நீங்கள் போன பதிவில் அய்யனார் கோவில் படங்கள் வரட்டும் என்று கேட்டு இருந்தீர்கள் அதனால்தான் தகவல்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  32. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப விமானங்களில் சிற்பங்களை அமைக்கிறார்கள் என்பதை எங்களின் பயணத்தில் கண்டுள்ளேன். நீங்கள் உன்னிப்பாக பார்த்து, பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
      ஆமாம் ஐயா, காலகட்டத்திற்கேற்ப விமானங்களில் சிற்பங்கள் அமைக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  33. ஒவ்வொரு படமும் அழகு ...

    அதிலும் நீங்க குடுத்த குறிப்புகளுடன் படிக்கும் போது சுவாரஸ்யம் ...

    சல்வார் போட்ட சிலை, கை கடிகாரம் எல்லாம் நீங்கள் சொல்ல வில்லை என்றால் எனக்கு தெரிந்து இருக்காது ...

    தாமரை தடாகம் ...ஆஹா வெகு அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதாபிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      படங்களைப் பார்த்து , பதிவைப் படித்துக் கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி அனு.

      நீக்கு
  34. புஷ்கலை பூரணகலை சமேத ஸ்ரீ மலையடி அய்யனார் கருப்பணசாமி தான் என் குல தெய்வம்.. மேலும் தகவல் இருந்தால் தொடர்பு கொண்டு சொல்லுங்கள் அய்யா நன்றியும் மகிழ்ச்சியும்.... வரலாற்றை தேடும் பிள்ளை நான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை சிவா, வாழ்க வளமுடன்.

      //புஷ்கலை பூரணகலை சமேத ஸ்ரீ மலையடி அய்யனார் கருப்பணசாமி தான் என் குல தெய்வம்..//

      அப்படியா , மகிழ்ச்சி.

      எனக்கு தகவல்கள் தெரிந்தவரை கொடுத்து விட்டேன்.
      குலதெய்வம் என்பதால் மேலும் விவரங்கள் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு