சனி, 1 டிசம்பர், 2018

சிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது


எங்கள் வீட்டில்  முனியா குருவி  கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று.

புள்ளிச்சில்லை (முனியா பறவை)  

இந்த பறவை எங்கள் வீட்டில் கூடு கட்டியது பற்றி எழுதிய  பதிவுக்கு  ஸ்ரீராம் கொடுத்த பின்னூட்டம்.

//பறவைகளுக்கு தெரிந்திருக்கிறது.. தங்களுக்கு பத்திரமான இடம் எது என்று! நன்றாய் கூடுகட்டி, அழகாய் பிள்ளை பெற்று சௌக்கியமாய்க் கிளம்பட்டும்.//

ஸ்ரீராமின் வாக்கு படி அழான பிள்ளை செளக்கியமாய்  கிளம்பி பறந்து போனது . (ஒன்று மட்டும் இன்று பறந்து போனது.)

கவனம் 

குஞ்சும் தாயும்

எதிர்வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் பறந்து  பழகியது. தாய்க் குருவி  பதட்டத்துடன் கூடவே இப்படி ஓடக் கூடாது நிதானம் என்பது போல் ஏதோ பேசிக் கொண்டே  குஞ்சுடன் அங்கும் இங்கும் சென்றது.
மாலை 4மணி இருக்கும் குருவிகளின் சத்தம் கேட்டு என் கணவர் போய் பார்த்து வந்து என்னிடம் சொன்னார்கள், குஞ்சுக்குபறக்க சொல்லி கொடுக்குது கீழ்வீட்டு கொடி கம்பியில் நிற்கின்றன குருவிகள் என்று அழைத்தார்கள். நான் காமிராவை தூக்கி கொண்டு ஓடினேன்.

 கீழ் வீட்டுக் கொடிக்கம்பியில் அமர்ந்து  இருந்தவற்றையும் அங்கும், இங்கும் பறந்து கொண்டு இருந்ததையும் படம் ஆக்கினேன், ஆனால் அவை எல்லாம் வீடியோ மோடில் வைத்து இருந்ததால் காணொளி ஆகி விட்டது. சின்னதாக கட் செய்து ஒரு காணொளியை இரண்டாகக் கொடுத்து இருக்கிறேன் பாருங்கள். ஓரளவு வந்து இருக்கு ,குஞ்சும், தாய்க் குருவியும்.

மீண்டும் கூட்டுக்குள் போவதும் பறப்பதும் என்று விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஆறு மணி ஆகிவிட்டது, இப்போது சத்தம் இல்லை, கூட்டில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  அவை மிகச் சின்னதாக இருக்கிறது, கொஞ்சநாள் கழித்துத் தான் கூட்டை விட்டுப் பறந்து போகும் என்று நினைக்கிறேன்.

நல்லபடியாகப் பறந்து போகட்டும் மற்ற குஞ்சுகளும்.
                                                          வாழ்க வளமுடன்.

53 கருத்துகள்:

  1. நல்லது குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய தங்களது மனதுக்கு ஒரு சல்யூட்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    குருவிகளுக்கு தான் என் நன்றி.
    உங்கள் சல்யூட் குருவிகளுக்கு.
    மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் அந்த சின்ன பறவைகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
    இன்று சிட்டுக்குருவி வீட்டுக்குள் வந்து வீட்டைச்சுற்றிப்பார்த்து விட்டு சென்றது. மின்விசிறி மேல், டியூப் லைட் மேல் எல்லாம் உட்கார்ந்து எங்களைப்பார்த்து விட்டு சென்றது மகிழ்ச்சி தந்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகான பதிவு! காணொளியும் அழகு! தலைப்பிலுள்ள‌ பாடலை எப்போது கேட்டாலும் மனம் கனமாகி விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
      சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு என்று ஆரம்பிக்கும் பாடல் நினைவு வந்து விட்டதா?
      மனதை கனக்க வைக்கும் பாசம் தோய்ந்த பாடல்தான்.
      நன்றாக இருக்கும் பாடல்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      தஞ்சை வந்து இருக்கிறீர்களா?

      நீக்கு
  4. காணொளி அருமை அம்மா...

    பாடல் மனதை உருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      ஆமாம் தனபாலன், பாடல் மனதை உருக்கும்தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. முனியா குருவியோ கோமதி அக்கா... இது வும் சிட்டுக்குருவி இனம்தான் போல இருக்கே... அதென்ன தனித்தனியா பறப்பினமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      முனியா குருவி என்று தான் சொல்கிறார்கள்.
      சிட்டுக்குருவி இனம் தான். முதலில் நிறைய உணவு பெற்றுக் கொண்ட குருவி முதலில் பறந்து விடுகிறது. இதுவரை நான் பார்த்த குருவிகள் எல்லாம் அப்படித்தான்.
      எல்லாம் சேர்ந்து பறப்பது இல்லை.

      நீக்கு
  6. உங்கள் ஏரியாவில் பூஸ் அட்டகாசம் இல்லைப்போல இருக்கு அதனால்தான் எல்லோரும் கூடு கட்ட இடத்தை அங்கு தெரிவு செய்கிறார்கள் போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூஸ் இருந்தாலும் அதற்கு பயம் இல்லை உயரத்தில் தான் கூடு கட்டுகிறது.பூஸார் கீழே நடைபயில்வார். புறக்களுடன் ஓடிபிடித்து விளையாடுவார்.
      ஒரு நாள் காணொளி எடுக்க வேண்டும்.

      நீக்கு
    2. ஆமாம் அதிரா பூஸ் இருந்தால் அவ்வளவுதான் பாவம் பறவைகள் வேறு சேஃப் இடம் தேடி போகும்..

      ஆனால் ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் எல்லா உயிரினங்களுமே தங்கள் பிரசவகாலத்தில் இடம் தேடும் பாருங்கள்! ரொம்ப அழகா தேடி பல செக்கிங்க் செய்யும்...அவை எல்லாவற்றிற்கும் அறிவு பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும்...

      கீதா

      நீக்கு
  7. வீடியோ இரண்டும் நன்றாக இருக்கு, ஒரு குருவிக்கு கீழ் உடம்பில் கறுப்பு பற்றன் தெரியுதே... அப்பாக்குருவியாக இருக்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ பார்த்தது மகிழ்ச்சி.
      பழைய பதிவைப்பார்த்தால் இந்த பறவையின் படம் இன்னும் தெளிவாக தெரியும்.
      ஆண், பெண் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண் பறவைக்குக்கு தான் உடம்பில் புள்ளி இருக்கிறது. ராமலக்ஷ்மி இந்த குருவி பற்றி தினமலரில் எழுதி இருந்தார்கள் படித்து சொல்கிறேன். முன்பு எழுதிய பதிவில் அவர் எழுதிய பதிவுக்கு சுட்டிக் கொடுத்தேன்.

      நீக்கு
  8. இப்போதுதான் வந்தது போல இருக்கிறது. அதற்குள் பறந்து விட்டனவா? அட... "தாய் வீட்டை" நினைவு வைத்திருக்குமா அவை?

    சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      இந்த பறவை வந்து பல மாதம் ஆச்சு, நான் பதிவு போட நாள் ஆச்சு.
      //அட... "தாய் வீட்டை" நினைவு வைத்திருக்குமா அவை?//

      இந்த குருவிகள் கூட்டமாய் வாழதான் ஆசைபடுமாம்.
      ஒரு கூட்டுக்குள் இரண்டு ஜோடிகள் இருக்கிறது. கூட்டமாய் பறந்து வருது வீடு வீடாய்
      பழைய கூட்டில் தான் மீண்டும் சரி செய்து சிட்டுக்குருவிகள் முட்டையிடுகிறது.அவை திரும்ப கூட்டுக்கு வருவதால் குருவிகளும் தாய்வீட்டை நினைவு வைத்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.

      சிட்டுக்குருவிக்கு கட்டுப்பாடும் இல்லை, இப்போது தட்டுப்பாடும் இல்லை. எல்லா இடங்களிலும் சிட்டுக் குருவிகள் காணப்படுகிறது. இருக்கும் இடத்தில் நம்மை போல வாழ பழகி விட்டது போல!


      நீக்கு
    2. ஸ்ரீராம் உணவு தண்ணீர் கிடைக்கிறது என்றால் மீண்டும் வரும் இங்கேயே....ஆனால் நினைவு பற்றி தெரியவில்லை...இருக்குமாக இருக்கும்...அவற்றின் மொழியிலிருந்து அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்...

      கீதா

      நீக்கு
    3. //சிட்டுக்குருவிக்கு கட்டுப்பாடும் இல்லை, இப்போது தட்டுப்பாடும் இல்லை.//

      சிருக்குருவிக்கு கட்டுப்பாடு இல்லை... அதாவது அது எங்கு வேண்டுமானாலும் பறக்கும். அதைக் கட்டுப்படுத்த முடியாது!

      நீக்கு
    4. சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கு இது சொந்தவீடு, பூலோகம் முழுதும் பறந்து பறந்து வந்து விளையாடு பாடல் நினைவுக்கு வருது.
      அமெரிக்கா சென்று இருந்த போதும் இந்த சிட்டுக்குருவிகளை நிறைய இடங்களில் படம் எடுத்தேன்.
      உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. காணொளியிலேயே புகைப்படம் எடுக்கும் வசதி இருக்கிறது போலும். ஆங்காங்கு நிக்கிறதோ?

    அடுத்த பிரசவம் போதோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஏன் நிற்கிறது என்று தோன்றியது...இல்லை பாஸ் போட்டு மீண்டும் எடுத்தாங்களோ அக்கா...என்றும் நினைத்தேன்...ஸ்ரீராம் அப்படி ஒரு ஃபெசிலிட்டி இருக்கா....காணொளி எடுக்கும் போதே படம் எடுக்கவும்...அட!

      கீதா

      நீக்கு
    2. நாண் காணொளி மோடில் வைத்து விட்டு எடுத்து விட மறந்து விட்டு படம் எடுத்து இருக்கிறேன் அதுதான் இடையில் நிற்பது.
      அடுத்து இந்த பறவை சிட்டுக்குருவி போல் பழைய கூட்டுக்கே வருமா என்று பார்க்க வேண்டும்.

      நீக்கு
    3. //அடுத்த பிரசவம் போதோ?!!//

      "மறுபடி அதை நாம் பார்க்கவேண்டும் என்றால்" என்கிற வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது!

      மறுபடி அதை நாம் பார்க்கவேண்டும் என்றால் அடுத்த பிரசவம் போதுதானோ?

      நீக்கு
    4. இன்றும் எல்லா குருவிகளும் கொடி கம்பியில் வந்து உட்கார்ந்து போனது. கூட்டுக்குள்ளும் சத்தம் இருக்கு. கூட்டமாய் வாழும் என்பதால் அடிக்கடி ஒருவர் மாற்றி ஒருவர் முட்டையிடுவார்கள் தானே!
      முன்பு கூட்டுபெரிய குடும்பத்தில் புது வரவுகள் அடிக்கடி நிகழும் தானே!
      அதனால் பார்க்கலாம் குருவிகளை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  10. முனியா தனியா போய்விட்டது போலும்! என்னுடைய பின்னூட்டத்தை எடுத்துக் போட்டிருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனியா தனியா போய் விட்டது போலும் வார்த்தை ஜாலத்தை ரசித்தேன்.
      நீங்கள் சொன்னது போல் பத்திரமாய் பறந்து போனதே!
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயம். பகிர்ந்தமைக்கு நன்றி. அவற்றுக்கும் தம் குஞ்சுகளிடம் எத்தனை அக்கறை என்பதைக் கூடவே பறந்து காட்டியதில் இருந்து புரிய வருது. எங்கும் தாய்ப்பாசம் என்பது அனைத்து உயிர்களிடத்தும் ஒரே மாதிரித் தான் இருக்கு! வாய் பேசமுடியாவிட்டாலும் இவை எல்லாம் தம் செய்கைகளால் காட்டுகின்றன. நல்லபடி வாழட்டும். அடுத்துச் சிட்டுக்குருவியும் கூடு கட்டிக் குஞ்சுகள் பொரிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் தான். உறவுகள், குழந்தைகள் , நட்புகளுடன் உரையாடினாலும் தனிமை உணர்வை போக்க முடியவில்லை, மாயவரம் போல் இல்லை.
      இந்த பறவைகள் தான் இப்போது மகிழ்ச்சி, சொந்தம் எல்லாம்.
      தாய்மை உணர்வு எல்லா உயிர்களிடத்திலும் ஒரே மாதிரிதான். அன்பை வெளிகாட்டும் முறைகள் வேறு அவ்வளவுதான்.
      உங்கள் கருத்துக்கும், நல் வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நான்றி.

      நீக்கு
  12. இரண்டு காணொளிகளும்நல்லாருக்கு அக்கா. ஓடி ஓடிப் போய் படம் பிடிக்கிறீர்கள் எங்களுக்கும் பகிர்வது மிக்க மிக்க மகிழ்ச்சியா இருக்கு அக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      காணொளிகளை கண்டது மகிழ்ச்சி.
      நான் அடைந்த மகிழ்வை நீங்களும் அடைய வேண்டும் இல்லையா கீதா அதுதான் இந்த பகிர்வு.

      நீக்கு
  13. குருவிகள் அழகு....எப்படியோ பாதுகாப்பாகப் பிரசவம் நடந்து அதுவும் நம்ம கோமதிக்கா ஸார் இவர்களின் ஆதரவில்.....பறந்து போகும் தினம் சமீபத்துவிட்டது போலும்...மகிழ்வுடன் அவற்றிற்கான காலம் வரை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கட்டுபாடிலலாமல் வாழட்டும் அக்கா!...

    மிகவும் ரசித்தேன் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவிகள் பாதுகாப்பாகப் பிரசவம் நடந்து பறந்து கொண்டு இருக்கு.
      இறைவன் அருளால் வேறு பெரிய பறவைகளிடம் மாட்டாமல் சுதந்திரமாய் பறந்து திரியட்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. காணொளிகளும் படங்களும் அருமை. நலமாகக் கிளம்பிச் சென்றதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      முந்திய பதிவில் உங்கள் பதிவு சுட்டி கொடுத்து இருந்தேன்.
      நலமாக பறந்து சென்றால் தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் - அந்தக் குருவிகள்!...

    காணொளி எனது கணினியில் இயங்குவதில்லை.. ஏதோ பிரச்னை..
    படங்கள் அழகாக மனம் கவர்கின்றன...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      குருவிகளின் எங்களுடன் இணைந்து இருக்க நாங்களும் கொடுத்து வைத்து இருக்கிறோம் , இறைவனுக்கு நன்றி.
      காணொளி ஏன் பார்க்க முடியவில்லை என்பது தெரியவில்லை. மிகவும் சின்ன காணொளிதான்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. உங்கள் வீட்டின் குருவிகளுக்காக
    இந்தப் பாட்டு...

    வாழும் வரை கூட்டில்
    வகை கொண்டு வாழ்ந்து
    வா என்றழைத்த வானேறிப்
    பறந்தனவே இன்று...

    அன்பு எனும் நெஞ்சத்தின்
    ஆதரவை அறிந்தவையாய்
    அடுத்தொரு நாள் சூல் கொண்டு
    தலைவாசல் வந்திடுமே மீண்டு!..

    தானளந்த அன்பு கண்டு
    வானளக்கும் குருவிகளும்
    வாழ்த்திடும் - நலம் வாழ்க
    என்றே மனதாரப் போற்றிடும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! அருமையான கவிதை.

      அன்பு எனும் நெஞ்சத்தின்
      ஆதரவை அறிந்தவையாய்
      அடுத்தொரு நாள் சூல் கொண்டு
      தலைவாசல் வந்திடுமே மீண்டு!.//

      உங்களை போன்றவர்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும் எதிர்பார்ப்புக்கும் அவை மீண்டும் வரும்.

      //தானளந்த அன்பு கண்டு
      வானளக்கும் குருவிகளும்
      வாழ்த்திடும் - நலம் வாழ்க
      என்றே மனதாரப் போற்றிடும்//

      அன்பாய் தங்களைப் பற்றி கவிதை எழுதிய அன்பு நெஞ்சத்தை கண்டு வாழ்த்திடும் மனதார குருவிகள்.

      அவைகளின் வாழ்த்தும், வருகையும் என்றும் கிடைக்கட்டும் எங்களுக்கு உங்கள் வாக்குப்படி.

      உங்கள் அன்பான கவிதைக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.


      நீக்கு
  17. அழகான படங்கள். காணொளியும் சிறப்பு. பறவைகளைக் கவனிப்பது ஒரு அலாதியான விஷயம்.

    பதிவு கண்டு மகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      பறவைகளை கவனிப்பது மகிழ்ச்சியான விஷயம், அவற்றின் வாழ்வின் கஷ்ட நஷ்டங்கள் நமக்கு படிப்பினை.
      நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது அவற்றின் வாழ்விலிருந்து.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  18. குருவிகளை தத்துஎடுக்காத குறைதான்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    தத்து எடுத்தால்தானா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அழகான படங்கள்...மனதிற்கு இதம் அளிக்கின்றன..

    அருமை மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      குருவிகளை காண்பதே மனதுக்கு இதம்தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. பறவைகள் குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுத்தரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியொரு அற்புதமான தருணம் அது. குஞ்சுகள் நல்லபடியாகப் பொரிந்து பறக்கக்கற்றுக்கொண்டு பறந்துசென்றுவிட்டன என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி. நாங்களும் ரசிக்க உதவிய உங்களுக்கு மிகவும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி வாழ்க வளமுடன்.
      நீங்களும் பற்வைகளை படம் பிடிப்பவர் ஆச்சே!
      நீங்கள் பகிரும், பறவைகள், விலங்குகள், மலர்கள் எல்லாம் அற்புதமாய் இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  22. அருமையான படங்கள்
    காணொளி அருமை, தெருவில் நடந்து போகும் போது நின்று ரொம்ப ரசித்து பார்ப்பேன்.

    //எதிர்வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் பறந்து பழகியது. தாய்க் குருவி பதட்டத்துடன் கூடவே இப்படி ஓடக் கூடாது நிதானம் என்பது போல் ஏதோ பேசிக் கொண்டே குஞ்சுடன் அங்கும் இங்கும் சென்றது//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜலீலா, வாழ்க வளமுடன்.
      ஆமாம், குருவிகளை பார்ப்பதே மகிழ்ச்சி, அதிலும் குஞ்சுகளுடன் பார்க்கும் போகும் ரசிக்க பிடிக்கும் தான்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  23. புதிதாய் பதிவு எதையும் காணோமே..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      கொஞ்சம் உடல் நலக்குறைவால் எழுதவே தோன்ற வில்லை.

      மருத்துவரிடம் சென்று வந்து கொண்டு இருக்கிறேன்.
      இப்போது நலமடைந்து வருகிறேன்.

      ஊர்களுக்கு செல்லும் அவசியமும் இருக்கிறது.
      12ம் தேதி தம்பி மகளுக்கு வளைகாப்பு, 29ம் தேதி அத்தை அவர்களுக்கு முதல் ஆண்டு திவசம் அதற்கு போக வேண்டும். இப்படி சிந்தனைகளால் எழுத ஓட மாட்டேன் என்கிறது
      உங்கள் அன்பான விசாரிப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  24. சிட்டுகள் மனதை கவர்கின்றன. வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு