புதன், 17 அக்டோபர், 2018

கொலுப் பார்க்க வாருங்கள் - 6




நவராத்திரிக்கு   கோவில்களில், வீடுகளில் உள்ள  கொலுவைத் தொடர் பதிவாக பதிவு செய்வதைப் பார்த்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தத் தொடரில் கடல் கடந்து வந்து இருக்கும் கொலு படங்கள்.

மகனின் நண்பர் வீட்டில் உள்ள கொலு படங்கள்.

போன வருடம் நாங்கள் நவராத்திரிக்கு மகன் ஊரில் இருந்தோம் அப்போது கொலுவிற்கு நிறைய நண்பர் வீடுகளுக்குப் போய் கொலு பார்த்து வந்ததைப் பதிவு செய்து இருந்தேன்.

போன வருடம் போக முடியாத நண்பர்கள் வீடுகளுக்கு  இப்போது போய் வந்து  நாங்கள் பார்க்க படங்கள் அனுப்பினான் மகன், அதை இங்கு நீங்கள் பார்க்க இங்கு பதிவாய்.





அவர்கள் கைவண்ணம் 

அவர்களே செய்த களிமண் செட்டியார் செட்டியார் அம்மா பொம்மை.
அவர்கள் செய்த பிள்ளையார்
கலைப்பொருட்களை வைத்து அவர்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி அமைப்பது ஒரு திறமை. கலைத்திறமைகளைக் காட்டும் நவராத்திரி நாள்.
எத்தனை எத்தனை கலைப்பொருட்கள் சேகரிப்பு !  நவராத்திரி கொலுவிற்கு அவற்றை அழகாய் அமைத்து வரும் விருந்தினர் பாராட்டு மழையில் நனைந்து  இந்த பத்து நாட்களும் மகிழ்ந்து இருப்பார்கள். 

இன்னொரு நண்பர் வீட்டுக் கொலு -சின்ன பூங்கா
தேவி கொலுவிருக்கும் வீடு -படிக்கு அருகில் கண்ணனின் லீலைகள் இருக்கிறது






அனைத்தும் எப்படி இருக்கிறது நன்றாக இருக்கிறதா?
அனைவருக்கும் சரஸ்வதி  பூஜை வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

33 கருத்துகள்:

  1. படங்கள் எதுவுமே எனக்கு திறக்கவில்லை பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      என்ன காரணம் என்று தெரியவில்லையே!

      நீக்கு
    2. படங்கள் அனைத்தும் அழகு மட்டுமல்ல! மிகத்தெளிவு.

      உங்களுக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் சகோ.

      நீக்கு
    3. பாத்து விட்டீர்களா?
      நன்றி சகோ.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  2. இவற்றையெல்லாம் காணும் போது மகிழ்ச்சியால் மனம் துள்ளுகின்றது..

    >>> கலைப் பொருட்களை வைத்து அவர்கள் மனதுக்குப் பிடித்தமாதிரி அமைப்பது ஒரு திறமை. கலைத் திறமைகளைக் காட்டும் நவராத்திரி நாள்..<<<

    கலைத் திறமைகளைக் காட்டுவது மட்டுமல்ல
    கலைத் திறமைகளை வளர்ப்பதும் நவராத்திரி நாள்!..

    அம்பாள் அனைவருக்கும் அனுக்ரஹம் செய்வாளாக!..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்ர்வதும் நவராத்திரி விழாதான்.
      நீங்கள் சொன்னது போல் கலைத்திறமைகளை வளர்ப்பதும் நவராத்திரி விழாதான்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  3. தங்களுக்கு உடல் நலம் சற்றே குறைவு என்று ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்களது தளத்தில் கண்டேன்...

    அங்கே கருத்திடும்போது கிடைத்த வாக்கு ஒன்றினைப் பதிவு செய்துள்ளேன்...
    அதனை மீளவும் சொல்ல இயலாது..

    அவர்களது தளத்தில் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    வாழ்க நலம்.. வளர்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால் பாதத்தின் மேல் பகுதியில் ஒரு வலி தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறது, கைவைத்தியம் சரிப்படாமல், டாகடரிடமும் போய் வருகிறேன்.
      அம்பாள் இந்த வலியை போக்குவாள் என்று நம்புகிறேன்.

      கீதாசாம்பசிவம் என் ராசி என்பார்கள் அதனால் அவர்களுக்கு உடல் தொந்திரவு என்றார்கள் அது போல் எனக்கும் தொந்திரவு என்றேன்.
      ஒரு சமயம் அவர்கள் கையில் சுட்டுக் கொண்டார்கள் எனக்கும் அன்று கையில் சூடு பட்டது. தற்செயல் நிகழ்வு பொருத்தமாய் இருந்தது.
      உங்கள் வாக்கினை படிக்க முடியவில்லை, கீதா இன்னும் வெளியிடவில்லை.
      பிறகு படிக்கிறேன்.
      உங்கள் அன்பான வாக்கிற்கு நன்றி.


      நீக்கு
    2. அன்புடையீர்..

      தங்களிருவருக்கும் ஒரே ராசி.. ஆச்சர்யம்..

      தவிரவும்..

      >>> உங்கள் வாக்கினை படிக்க முடியவில்லை..<<<

      என் வாக்கு அல்ல.. உபாசனாமூர்த்தி அருளியது...

      அவர்களே இன்னும் அதைப் பார்க்கவில்லை என்பதாகின்றது..
      எதற்கும் நேரம் வரவேண்டுமே!..

      அம்பாள் துணையிருப்பாளாக..

      நீக்கு
    3. சரியாக சொன்னீர்கள் சகோ.
      நேரம் காலம் எதற்கும் உண்டு.
      எனக்கு தகுந்த நேரத்தில் உபசானாமூர்த்தி அருள்வார்.
      திருமுறை நூலில் நூல் போட்டு எந்த பக்கத்தில் என்ன தேவார பாடல் வருகிறதோ அதை படிப்பேன். அப்போது வந்த துன்பத்தை தாங்கவும், போக்கவும் முடியும் . தொன்று தொட்டு வரும் பழக்கம்.
      அது போல் உங்கள் உபாசனாமூர்த்தி சொல்வதை கடைபிடிக்கிறேன்.
      அம்பாள் துணையிருப்பாள் என்ற சொல் அந்த அன்னையே சொன்னது போல் உணர்கிறேன்.
      நன்றி நன்றி.

      நீக்கு
    4. நான் சுந்தரகாண்டத்தைப் பிரிப்பேன். அதில் வருவதற்கு ஏற்ப நடந்து விடும். அநேகமாய் அனுமனின் விஸ்வரூப தரிசனம் அல்லது கணையாழி கொடுத்தது அல்லது சீதைக்குத் திரிசடை சொல்லும் நல்வாக்கு என்று வரும். மனதுக்கு ஆறுதலாக இருக்கும். இல்லை எனில் ஞானசம்பந்தரின், "மண்ணில் நல்ல வண்ணம்" பதிகம் படிப்பேன்.

      நீக்கு
    5. நல்ல விஷயம் பகிர்ந்து கொண்டீர்கள்.
      வரும் துன்பங்களை இறைவன் அருளால்தான் போக்கி கொள்ள முடியும்.
      மனதுக்கு ஆறுதல் தருவது இறைவனின் துணைதான்.
      நல்வாக்கு வருவது நல்ல விஷயம்.

      நீக்கு
  4. அவர்கள் கைவண்ணம் அழகு. அவங்கக்கிட்ட என் வாழ்த்துகளை சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
      கண்டிப்பாய் சொல்கிறேன். அது அவர்களுக்கு சந்தோஷம் தருமே.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. கொலு எனில் குட்டிக் குட்டிச் சிலைகள் பொம்மைகள் என நினைச்சிருந்த எனக்கு.. பக்கம் பக்கமாக படம் போட்டு பலதை தெளிவு படுத்துறீங்க.. குட்டி வீடுகளையு கொலுவாக்கி இருக்கினமே அனைத்தும் அருமை அழகு.. உயிரோட்டத்தோடு இருப்பதுபோல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      கொலுவைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?
      எங்கள் வீட்டு கொலுவின் சுட்டிகள் தருகிறேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
      இன்னும் விருப்பபட்டால் வரும்.
      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  7. கொலுப்படங்கள் மிகவும் அருமை. அங்கேயும் விருந்தினர்களுக்கு சுண்டல் போன்றவை உண்டா இல்லை கோகோகோலாதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      அங்கே விருந்தினர்களுக்கு பலவித உணவுகள். சுண்டல் மட்டும் இல்லை. கலந்த சாதம், இனிப்பு என்று தினம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு அயிட்டம் கொண்டு வருவோரும் உண்டு.

      //கோகோகோலாதானா?//

      அவர்களே தயார் செய்த ஜூஸ் வகையும் கொடுக்கிறார்கள். இடலி, சாம்பார், பொங்கலும் உண்டு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. எங்க பொண்ணு சாப்பாடாகவே கொடுப்பதால் குறிப்பிட்ட நாட்களுக்கு இத்தனை பேர் என அழைப்பாள். மருமகள் முன்னர் செய்து கொண்டிருந்தாள். இப்போது குட்டிக் குஞ்சுலு குழந்தையை வைத்துக் கொண்டு முடியலை! அடுத்த வருஷம் குழந்தையே கொலுவுக்குத் தயார் ஆகி விடுவாள். :))))

      நீக்கு
    3. மருமகளும் ,அப்படித்தான் குறிப்பிட்ட நாட்களுக்கு அழைப்பாள் கதம்பசாதம், தயிர்சாதம், பொங்கல் , சாம்பார் சாதம், எலுமிச்சை, புளியோதரை என்று இருக்கும்.
      வட இந்தியர்கள் நம், பொங்கல், இடலிக்கு ஆசை படுவார்கள் அதனால் அதுவும் செய்வாள்.
      அடுத்த ஆண்டு பேத்தி உங்கள் வீட்டு கொலுவிற்கு வந்தால் எப்படி இருக்கும்?
      மிகவும் மகிழ்ச்சியான நேரம் அது இல்லையா?

      நீக்கு
  8. காசு கொடுத்து வாங்கும் பொம்மைகளை விட மதிப்பானவை நம் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களும் பொம்மைகளும். அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      நீங்கள் அருமையாக சொன்னீர்கள்.
      என் பெரிய சகோதரி வீட்டில் அக்கா செய்த பொம்மைகள் மட்டுமே இடம் பெறுகிறது
      மற்ற பொம்மைகளை கோவிலுக்கு கொடுத்து விட்டார்கள்.

      நீக்கு
  9. எல்லாப் படங்களும் / பொம்மைகளும் அழகு. இந்த வருடம் ஏகப்பட்ட கொலு படங்கள் வெளியிட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டு கொலு இந்த வருடம் இல்லை, அதனால் நேரம் இருந்தது.
      பூஜைகள் கிடையாது. அம்மன் பாட்டுக்களை படிப்பதுடன் சரி.
      கொலு வைத்தால் விருந்தினர் வருகை , வீட்டு வேலை அம்மன் பூஜை என்று பொழுது சரியாக இருக்கும். இன்னும் சின்ன தங்கை வீட்டுக் கொலு போடவில்லை. நேற்றுதான் அனுப்பினாள்.

      நீக்கு
    2. இந்த வருடம் கொலு இல்லையே! எங்கள் வீட்டு கொலுப் பார்க்க வாங்க என்றாள் , ஆசைதான் பயணம் செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை.
      மகன் அவன் வீட்டுக் கொலு, நண்பர்கள் வீட்டுக் கொலு எல்லாம் அனுப்பினான்.
      முகநூலில் உறவினர் மகன், மகள் கொலு படங்களை என் தளத்தில் பதிந்து வைத்து இருக்கிறார்கள்.
      கொலு பொம்மைகளை பார்ப்பது மகிழ்ச்சிதானே?

      நீக்கு
  10. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. ஒவ்வொரு கொலுப் படங்களிலும் உரியவர்களின் ரசனை மிளிர்கிறது. பகிர்வுக்கு நன்றி. தங்களுக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மை ராமலக்ஷ்மி ,
    ரசனையான கொலு ஒவ்வொருவர் ரசனையும் நாம் அறிந்த் கொள்ள முடிகிறது.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. எல்லா கொலுப் படங்களும் அருமை! நன்கு ரசனையுடன் வைத்திருக்கின்றனர். உழைப்பு மிகவும் வேண்டும் வீட்டினரின் ஒத்துழைப்பும் தேவை! என் கணவர் படி எல்லாம் கட்டிக் கொடுத்துடுவார். பொம்மைகள் வைப்பது தான் என் வேலை. இப்போல்லாம் படியே கட்ட முடியவில்லை. அதோடு ஸ்டீல் படிகளையும் சேர்த்து பொம்மைகளோடு கொடுத்துட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது உண்மை படி கட்டுவது பெரிய வேலை அதை என் கணவர் செய்வார், அதற்கு கூட கூட மாட பிடித்துக் கொள்வேன்.வீட்டினர் அனைவருக்கும் வேலை கொடுக்கும் பண்டிகை அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு செய்தால்தான் கொலு நன்றாக இருக்கும். வீட்டினர் ஓத்துழைக்க முடியவில்லை என்றால் கஷ்டம்.
      முடிந்தவரை வைப்போம் அப்புறம் ஆண்டவன் விட்டவழி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு