செவ்வாய், 19 ஜூன், 2018

பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

வணக்கம். நான் வலைத்தளம் வந்து  9 ஆண்டு ஆகி விட்டது.
என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது.

நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார்கள்.



தந்தையர் தினம் அன்று தந்தையர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு பேரனின் பிறந்த நாள் இன்று என்று சொல்லி வாழ்த்து கேட்டு இருந்தேன்.
எல்லோரும் வாழ்த்தினார்கள்.

பேரனின் பிறந்த நாள் மேலும் சிறப்பானது.  நம் சகோதரர்  துரைசெல்வராஜூ அவர்கள் பேரனுக்கு எழுதி அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக்  கவிதை. என் கணவர் சொன்னார்கள் ,"சிறு வயதிலேயே வாழ்த்துக் கவிதை வாங்கி விட்டானே!" என்று.




 
Blogger
பேரனுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்!...

கவின் என்ற சொல் அழகு
கவின் கொண்ட பேர் அழகு...
கவின் என்ற தளிர் வாழ்க
கவின் கொண்டு கவின் வாழ்க!...

பெரியோர்கள் பேர் வண்ணம்
பிழையாமல் பெறும் வண்ணம்
நானிலத்தில் நடை வண்ணம்
நடந்தாலே புகழ் வண்ணம்!...

பேர் கொண்ட சிவ குடும்பம்
சீர் காக்க நீ முனைக...
பேர் தந்த பெற்றோரை
ஊர் போற்ற நீ விழைக!..

கோமதி சிவ சங்கரியாள்
குலங் காத்து நலம் சேர்ப்பாள்..
வான்மதியின் வளர் நிலையாய்
நலங் காத்து புகழ் சேர்ப்பாள்!...

செந்தமிழாள் அருள் புரிவாள்
வளர்ந்திடுக பல்லாண்டு..
சிவ அபிராமி அருகிருப்பாள்
வாழ்ந்திடுக பல்லாண்டு!..

வாழ்க நலம்!..

மகனுக்கு அனுப்பி வைத்தேன் கவிதையை. மகன், மருமகள், பேரன் படித்து விட்டு மிக அருமையாக இருக்கிறது. எங்கள் நன்றியைச் சொல்லுங்கள் என்றார்கள்.

மிகவும் நன்றி சகோ. ஆபீஸ் போய் வந்து எவ்வளவு வேலைகள்  அதை எல்லாம் முடித்து விட்டுத் தூங்கும் நேரத்தை தள்ளிப் போட்டு கவிதையை எழுதி உடனே அனுப்பிய உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.
நீங்கள் பன்முகத் திறமையாளர். அன்பான பெரியவர்களின் ஆசியும், அபிராமி அம்மனின் அருளும் கிடைத்தது  எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறோம். வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.

பதிவுக்கு பின்னூட்டம் அளித்தவர்கள் எல்லோரும் படித்து இருக்க மாட்டீர்கள் என்பதால் இங்கு பகிர்ந்தேன்.





 Geetha Sambasivam said...
கவினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அனைத்துத் தந்தையருக்கும் வாழ்த்துகள். துரை அவர்கள் கவிதை அருமை!
கீதாசாம்பசிவம் மட்டும் படித்து கருத்து சொல்லி இருந்தார்கள்.


//பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் எப்படி இருந்தது கவின் குட்டிக்கு...//
என்று கேட்டு இருந்தார்கள் அனுராதா பிரேம்குமார். அவருக்காக சில  பிறந்த நாள் விழா கொண்டாட்டப் படங்கள்.

மருமகள் செய்த கேக்- ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்து வைத்துக் கொண்டு கேக் செய்வாள். பேரனின் விருப்பப்படி. இந்த முறை எப்போதும் டைடானிக் கப்பல் விளையாட்டு விளையாடியதால் அந்த மாடலில் கேக் செய்து இருக்கிறாள்.
//ஓ இன்று பிறந்தநாளோ?.. குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. என்றும் நலமோடும் மகிழ்வோடும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்.. இது எத்தனையாவது 9 வயசோ? இல்ல 8?..////

அதிராவின் கணிப்பு எப்போதும் சரியாக இருக்கும் என்பதற்குச் சான்று.

இந்த முறை பிறந்த நாள் விழாவிற்கு வந்த புது வரவு -மித்திரன்.
மகனின் நண்பரின் இரண்டாவது குழந்தை.
இந்த முறை இதுவும் புதிது.  விழா என்றால் நம் ஊரில் பஞ்சு மிட்டாய் இடம் பெறும்.  அதனால் இந்த முறை அந்த பஞ்சு மிட்டாய் மிஷின் வாங்கி குழந்தைகளுக்கு செய்து கொடுத்தவுடன் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி
நண்பர் செய்து கொடுக்கிறார். முதலில் சின்னதாகச் செய்து கொடுத்து அது அவர்களுக்கு பிடித்ததால் பெரிதாக செய்து கொடுத்தராம். சிவாவின் யோசனையைப் பாராட்ட வேண்டும்.

இந்த ஆண்டு பேரனின் சில நட்புகள் இந்தியா வந்து விட்டார்கள் விடுமுறைக்கு.  பேரனுக்கு  மகிழ்ச்சி அளிக்க இன்னொரு ஆச்சி (மருமகளின் அம்மா)   வந்து இருக்கிறார்கள். மருமகளும், அவள் அம்மாவும்  , என் மகன், அவன் நட்புகள் சேர்ந்து  பேரனின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டார்கள். நாங்களும் வாட்ஸப் மூலம் நேரில் கலந்து கொண்ட அனுபவம் பெற்றோம்.  


Monday, June 1, 2009

மார்கழியில் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து 
இயற்கை தரிசனம்
எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப்போகும் . - வேதாத்திரி மகரிஷி

நான் முதலில் போட்ட பதிவு.

                                                          வாழ்க வளமுடன்.

68 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆஆவ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)) பூஸோ கொக்கோ:))

    பதிலளிநீக்கு
  2. ///வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது.
    என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது.///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இரண்டும் ஒன்றாக இருக்கிறது.. அப்போ புளொக்கை பேரனாக நினைச்சே கண்ணும் கருத்துமாக கவனிச்சு அடிக்கடி பதிவுகள் போட்டு உற்சாகமாக இருக்க வாழ்த்துகிறேன்ன்...

    பதிலளிநீக்கு
  3. //பேரனின் பிறந்த நாள் மேலும் சிறப்பானது. நம் சகோதரர் துரைசெல்வராஜூ அவர்கள் பேரனுக்கு எழுதி அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை. என் கணவர் சொன்னார்கள் ,"சிறு வயதிலேயே வாழ்த்துக் கவிதை வாங்கி விட்டானே!" என்று.//

    அன்று துரை அண்ணன், வாழ்த்து பின்பு வரும் எனச் சொன்னபோதே நினைச்சேன்ன்.. இப்படி கவிதையாக எழுதப்போகிறார் என...


    மிக அழகான வாழ்த்துக் கவிதை எழுதிட்டார்.

    பதிலளிநீக்கு
  4. அழகிய கேக், சிம்பிள் அண்ட் சுவீட்டாக செய்திருக்கிறா. நானும் முன்பு இப்படி அன்ரியாட்கள், பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு விதம் விதமாக செய்து கொடுத்ததுண்டு, ஆனா எங்கள் பிள்ளைகளுக்கு எப்பவும் ஓடர் கேக்தான் இன்றுவரை:)).. ஏனைய பலகாரங்கள் செய்ய வெளிக்கிடுவதால் நேரம் இருப்பதில்லை.

    அங்கு நிறைய ஏசியன் குடும்பம் இருக்கிறார்கள்போல இருக்கே.. குழந்தைகளைப் பார்க்க. அப்படிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஞானி அதிரா, வாழ்க வளமுடன்.
    நான் நினைத்தேன் இன்று முதலில் வருவார் என்று, அது போலவே வந்து விட்டீர்கள். காலை எத்தனை மணி எட்டு மணியா?

    பதிலளிநீக்கு
  6. // இது எத்தனையாவது 9 வயசோ? இல்ல 8?..////

    அதிராவின் கணிப்பு எப்போதும் சரியாக இருக்கும் என்பதற்குச் சான்று.///

    ஹா ஹா ஹா பார்த்தீங்களோ கோமதி அக்கா.. நான் ஒருவரைப் பார்த்தால் ஓரளவுக்கு அவரின் உடை அளவைக் கணித்து வாங்கி விடுவேன்... ஒரு அண்ணன் ஒருவரை படத்திலே பார்த்து சூஸ் வாங்கிக் குடுத்தோம்ம்.. அவருக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.. எப்படி என் படம் பார்த்து சூஸ் அளவைக் கண்டு பிடிச்சீங்க என ஹா ஹா ஹா.

    ஆனா பேத்தி பேரனுக்கு பத்து வயசெனச் சொல்லிட்டா கர்ர்ர்ர்ர்:)).. அவர் கெதியா வளர்ந்திடோணும் எனும் நினைப்போ ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  7. கிளிக்கோலத்தின் ஓனர் ஆரு? அழகாக இருக்கு..

    பதிலளிநீக்கு
  8. ஒன்பது மணி கோமதி அக்கா. உங்கள் நேரத்திலிருந்து 4 1/2 மணித்தியாலம் பின்னோக்கொ.. இப்போ சமர் என்பதால், பின்பு ஒக்டோபரில் இருந்து இந்த இடைவெளி 5 1/2 ஆகும்.

    பதிலளிநீக்கு
  9. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இரண்டும் ஒன்றாக இருக்கிறது.. அப்போ புளொக்கை பேரனாக நினைச்சே கண்ணும் கருத்துமாக கவனிச்சு அடிக்கடி பதிவுகள் போட்டு உற்சாகமாக இருக்க வாழ்த்துகிறேன்ன்..//

    அப்படியே செய்கிறேன் ஞானி அதிரா.
    அதிரா சொன்னால் சரியாக இருக்கும். பேரனாக நினைத்து கண்ணும் கருத்துமாய் கவனிச்சு பதிவுகள் போட்டு உற்சாகமாக இருக்கிறேன்.

    நீங்கள் சொன்னது போல பதிவுகள் போட்டு உங்கள் எல்லோருடனும் உரையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இறைவன் அருளால் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. //அன்று துரை அண்ணன், வாழ்த்து பின்பு வரும் எனச் சொன்னபோதே நினைச்சேன்ன்.. இப்படி கவிதையாக எழுதப்போகிறார் என..//

    ஞானி அதிரா கணிப்பு சரியாக இருக்கும் என்ரதற்கு மேலும் ஒரு சான்று.

    பதிலளிநீக்கு
  11. கவினுக்கு எல்லா நலமும் இறை ஆசியுடன் கிடைக்க எமது வாழ்த்துகள்.

    அன்பின் ஜியின் வாழ்த்துக்கவி மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
  12. பதிவுலகில் நவரத்தினத்தை கடந்து வெற்றி நடை போடும் தங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் பேரனுக்கு முகநூலில் மட்டும் வாழ்த்து சொல்லி இருந்தேன் என்று ஞாபகம். சென்ற பதிவில் சொல்லவில்லை. இப்போது சொல்லிக் கொள்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அதிரா மறுபடியும் ஆச்சர்யப்படுத்துகிறார். ஏஞ்சலுக்கும் இதே அளவு ஞாபக சக்தி உண்டு.​

    உங்கள் தளத்துக்கும் பிறந்தநாளா? மேலும் பற்பல பதிவுகள் காண வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. துரை செல்வராஜூ ஸாரின் கவிதையை ரசித்தேன். அவர் பன்முகத் திறமையாளர். தமிழ் ஆர்வலர். சிறந்த ஆன்மீகவாதி. அவரின் நட்பு எங்களுக்கும் கிடைத்தது எங்களுக்குப் பெருமை.

    பதிலளிநீக்கு
  16. பஞ்சு மிட்டாய் செய்யும் மெஷினா? அட! என்ன விலை?

    ஆனால் காணொளியில் அது உருவாவது சரியாகத் தெரியவில்லை. தெருவில் கொண்டு வருபவர் வேகமாகச் சுற்றி விட்டு குச்சியில் பிடிப்பார். பெரிதான அளவில் வரும்.

    சுவாரஸ்யம்தான்.

    பதிலளிநீக்கு
  17. //அழகிய கேக், சிம்பிள் அண்ட் சுவீட்டாக செய்திருக்கிறா. நானும் முன்பு இப்படி அன்ரியாட்கள், பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு விதம் விதமாக செய்து கொடுத்ததுண்டு, ஆனா எங்கள் பிள்ளைகளுக்கு எப்பவும் ஓடர் கேக்தான் இன்றுவரை:)).. ஏனைய பலகாரங்கள் செய்ய வெளிக்கிடுவதால் நேரம் இருப்பதில்லை.//

    வித விதமாய் செய்வாள் . பேரன் கேக் சாப்பிட மாட்டான்.


    அங்கு நிறைய ஏசியன் குடும்பம் இருக்கிறார்கள்போல இருக்கே.. குழந்தைகளைப் பார்க்க. அப்படிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கு.

    ஆமாம், நிறைய இருக்கிறார்கள். பள்ளி விடுமுறை என்பதால் அங்குள்ள குழந்தைகள் ஊருக்கு போய் இருக்கிறார்கள். நம் நாட்டு குழந்தைக்ளும் சிலர் இங்கு வந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஹா ஹா ஹா பார்த்தீங்களோ கோமதி அக்கா.. நான் ஒருவரைப் பார்த்தால் ஓரளவுக்கு அவரின் உடை அளவைக் கணித்து வாங்கி விடுவேன்... ஒரு அண்ணன் ஒருவரை படத்திலே பார்த்து சூஸ் வாங்கிக் குடுத்தோம்ம்.. அவருக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.. எப்படி என் படம் பார்த்து சூஸ் அளவைக் கண்டு பிடிச்சீங்க என ஹா ஹா ஹா.//

    என் அம்மா உங்களை போல் கண்ணால் அளவு எடுத்து விடுவார்கள் உடையோ மற்றவைகளோ சரியாக வாங்க்கி விடுவார்கள்.

    உங்கள் திறமையை கண்டு முன்பே சொல்லி இருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன் பன்முகவித்தகி ஞானி அதிரா வாழ்க வளமுடன்.

    //ஆனா பேத்தி பேரனுக்கு பத்து வயசெனச் சொல்லிட்டா கர்ர்ர்ர்ர்:)).. அவர் கெதியா வளர்ந்திடோணும் எனும் நினைப்போ ஹா ஹா ஹா:))//

    ஆமாம் , கணக்கில் கொஞ்சம் வீக் நான்.
    கெதியா வளர்க்க நினைப்பு இருக்கும் தானே பாட்டிக்கு.

    பதிலளிநீக்கு
  19. //கிளிக்கோலத்தின் ஓனர் ஆரு? அழகாக இருக்கு//

    கிளிக்கோலத்தின் ஓனர் நான்தான், நானேதான். மார்கழி மாதம் கோலம் போட்டு மகரிஷியின் கவிதையை தினம் ஒன்று எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  20. //ஒன்பது மணி கோமதி அக்கா. உங்கள் நேரத்திலிருந்து 4 1/2 மணித்தியாலம் பின்னோக்கொ.. இப்போ சமர் என்பதால், பின்பு ஒக்டோபரில் இருந்து இந்த இடைவெளி 5 1/2 ஆகும்//

    அதிரா , தகவலுக்கு நன்றி.

    உங்கள் பின்னூட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.
    அன்பான உரையாடலுக்கு நன்றி.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    //கவினுக்கு எல்லா நலமும் இறை ஆசியுடன் கிடைக்க எமது வாழ்த்துகள்.

    அன்பின் ஜியின் வாழ்த்துக்கவி மிகவும் அழகு.//

    அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
    கவின் என்றால் முருகன் முருகன் என்றால் அழகு
    சகோதரர் கவிதையும் அழகு நீங்கள் சொன்னது பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  22. //பதிவுலகில் நவரத்தினத்தை கடந்து வெற்றி நடை போடும் தங்களுக்கும் வாழ்த்துகள்.//

    வெற்றி நடையா? மகிழ்ச்சி.
    தங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை ஜி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //உங்கள் பேரனுக்கு முகநூலில் மட்டும் வாழ்த்து சொல்லி இருந்தேன் என்று ஞாபகம். சென்ற பதிவில் சொல்லவில்லை. இப்போது சொல்லிக் கொள்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//

    உங்களுக்கும் நினைவாற்றல் அதிகம் தான். முகநூஉலில் மட்டும் சொன்னீர்கள் பதிவில் சொல்லவில்லை.

    பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம்.. நான் ஞாபக சக்தியில் சொல்லவில்லை:), எனக்கு தெரியாது கோமதி அக்காவின் பேரன் எப்போ பிறந்தார் என, ஆனா பேரனின் சமீபகால படங்கள் பார்த்தே ...ஒரு மனக்கணிப்பில் சொன்னேன்... ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  25. //அதிரா மறுபடியும் ஆச்சர்யப்படுத்துகிறார். ஏஞ்சலுக்கும் இதே அளவு ஞாபக சக்தி உண்டு.​

    உங்கள் தளத்துக்கும் பிறந்தநாளா? மேலும் பற்பல பதிவுகள் காண வாழ்த்துகள்.//

    அதிராவை போல ஏஞ்சலுக்கும் நினைவாற்றல் அதிகம் தான்.

    ஆமாம் , தளத்திற்கு பிறந்த நாள்தான். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  26. //துரை செல்வராஜூ ஸாரின் கவிதையை ரசித்தேன். அவர் பன்முகத் திறமையாளர். தமிழ் ஆர்வலர். சிறந்த ஆன்மீகவாதி. அவரின் நட்பு எங்களுக்கும் கிடைத்தது எங்களுக்குப் பெருமை.//

    நீங்கள் சொல்வது உண்மைதான். திறமையானவர் அவர் நட்பு நம் எல்லோருக்கும் பெருமைதான் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  27. //பஞ்சு மிட்டாய் செய்யும் மெஷினா? அட! என்ன விலை?

    ஆனால் காணொளியில் அது உருவாவது சரியாகத் தெரியவில்லை. தெருவில் கொண்டு வருபவர் வேகமாகச் சுற்றி விட்டு குச்சியில் பிடிப்பார். பெரிதான அளவில் வரும்.//

    பஞ்சு மிட்டாய் மெஷின் விலை தெரியவில்லை, இனிதான் கேட்க வேண்டும் கேட்டு சொல்கிறேன்.

    மருமகள், மகனுக்கு வந்தவர்களை கவனிக்கும் வேலை இருந்ததால் கேட்கவில்லை. நாளை பேசும் போது கேட்கிறேன்.

    இதிலும் பெரிதாக செய்யலாம், அதில் போட்டு இருக்கிறேனே கொஞ்சமாய் பொடி போட்டு சின்னதாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பிடிக்குதா என்றுப் பார்த்து விட்டு பெரிதாக செய்தாராம். காணொளி பெரிதாக செய்த போது எடுக்கவில்லை போலும் இன்னொருமுறை பெரிதாக செய்ய சொல்லி காணொளி அனுப்ப சொல்கிறேன்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம்.. நான் ஞாபக சக்தியில் சொல்லவில்லை:), எனக்கு தெரியாது கோமதி அக்காவின் பேரன் எப்போ பிறந்தார் என, ஆனா பேரனின் சமீபகால படங்கள் பார்த்தே ...ஒரு மனக்கணிப்பில் சொன்னேன்... ஹா ஹா ஹா.

    மனக்கணிப்பில் சொன்னதை ஸ்ரீராமிடம் சொல்ல மறந்து போனேன். அதிரா.

    பதிலளிநீக்கு
  29. தங்களது பதிவில் எனது வாழ்த்துரையை வெளியிட்டு
    என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்..

    கீதா.S, ஞானி அதிரா, தேவகோட்டையார் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர்
    அந்த வாழ்த்துரையை வாசித்து விட்டு அளித்த கருத்துரைகள் கண்களை ஈரமாக்குகின்றன...

    இந்த அன்புக்குள் கட்டுண்டு கிடக்கின்றேன்...

    மனமார்ந்த நன்றியுடன்.,
    துரை செல்வராஜூ..

    பதிலளிநீக்கு
  30. துரை சாரின் வாழ்த்துக்கவிதை அருமை.

    தளத்துக்கும் பிறந்தநாளா? வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. மேலும் பல்லாண்டுகள்...
    பற்பல விதமான பதிவுகளைத் தரவேண்டும்...

    முதற்பதிவிலேயே கோலம்...
    கொடியும் கிளியுமாக - எழில் கொஞ்சுகின்றது..

    உள்ளத்தில் உள்ளது தானே -
    சொல்லிலும் செயலிலும்!...

    மகிழ்ச்சி...
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.


    தங்களது பதிவில் எனது வாழ்த்துரையை வெளியிட்டு
    என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்..

    கீதா.S, ஞானி அதிரா, தேவகோட்டையார் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர்
    அந்த வாழ்த்துரையை வாசித்து விட்டு அளித்த கருத்துரைகள் கண்களை ஈரமாக்குகின்றன...

    இந்த அன்புக்குள் கட்டுண்டு கிடக்கின்றேன்...

    அன்பு என்றும் வாழ்க!
    உங்கள் நெகிழ்வான கருத்து உங்கள் அன்பை சொல்கிறது.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  33. மேலும் பல்லாண்டுகள்...
    பற்பல விதமான பதிவுகளைத் தரவேண்டும்...

    முதற்பதிவிலேயே கோலம்...
    கொடியும் கிளியுமாக - எழில் கொஞ்சுகின்றது..

    உள்ளத்தில் உள்ளது தானே -
    சொல்லிலும் செயலிலும்!...

    மகிழ்ச்சி...
    வாழ்க நலம்.//
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் இதற்கு முன்பேபிறந்தநாள் பற்றிஎழுதி இருந்தீர்களா

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

    //துரை சாரின் வாழ்த்துக்கவிதை அருமை.

    தளத்துக்கும் பிறந்தநாளா? வாழ்த்துகள்.//


    என் பதிவு பக்கமே வரவில்லையே ! கொஞ்ச நாளாய்.
    துரை சாரின் கவிதை அழைத்து வந்து விட்டது, மகிழ்ச்சி.

    வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.
    இதற்கு முந்திய தந்தையர்தின வாழ்த்து பதிவில் கவினுக்கு பிறந்தநாள் என்று போட்டு இருந்தேன் சார், நீங்கள் கவனிக்கவில்லை போலும். தந்தையர்தின கருத்து சொன்னீர்கள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. செல்லத்திற்கு அன்பான வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் வாழ்க வளமுடன்.
    செல்லத்திற்கு அன்பான வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. துரை அண்ணாவின் வாழ்த்துக்கவிதை கவினுக்கு அருமை .
    குழந்தை கொடுத்து வைத்தவன் .
    மருமகள் செய்த கேக் அழகா இருக்கு .குழந்தைகள் முகத்தில் எவ்வளவு சந்தோசம் !!
    பஞ்சுமிட்டாய் பாப்கார்ன் சாக்லேட் பவுண்டனெல்லாம் பிறந்த நாளுக்குன்னே இங்கே வாங்குவாங்க .குழந்தைங்க ஆசைப்பட்ட அளவுக்கு செஞ்சி சாப்பிடுவாங்க .
    கவினுக்கும் வலைத்தளத்துக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    வாழ்த்து கவிதை எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது அல்லவா? அதனால்தான் பதிவில் போட்டேன். பின்னூட்டத்தில் சில நேரம் எல்லோரும் படிக்க முடிவது இல்லை.

    ஆமாம், அங்கு அதனால்தானே எல்லாம் விற்கிறார்கள். பாப்கார்ன் , சாக்லேட் பவுண்டன் ஒரு வீட்டில் வைத்து இருந்தார்கள் பார்த்தேன். இங்கு தினமலர் கண்காட்சி வைத்து இருந்த போது சாக்லேட் பவுண்டன் வைத்து இருந்தார்கள். குழந்தைகள் கூட்டம் அங்குதான்.

    என் பேரன் சாக்லேட், கேக் எதும் சாப்பிட மாட்டான். பாப்கார்ன் சாப்பிடுவான்.
    பேரனையும் வலைத்தளத்தையும் வாழ்த்தியதற்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  41. வலைப்பூ தொடங்கி 9 வருடம். மனம் நிறைந்த வாழ்த்துகள் - தொடர்ந்து எழுதுங்கள்.

    துரை செல்வராஜூ ஜியின் கவிதை சிறப்பு.

    கவினுக்கு மீண்டும் ஒரு முறை இங்கே பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. அழகான சொல்லாடலுடன் துரை அண்ணாவின் வாழ்த்துக்கவிதை. மிக அருமையாக எழுதியிருக்கார். அருமையான ஆசிகளும், வாழ்த்தும் கவின் குட்டிக்கு விஷேஷமாக கிடைத்திருக்கு.

    ப்ளாக் நண்பர்களின் வாழ்த்துக்களும் அவரை பல்லாண்டு காலம் நோய்நொடியின்றி, குணத்தில் நல்ல பையானாக,படிப்பினில் கெட்டிக்காரனாக,ஆளாக்கும் அக்கா.

    மிக அழகாக கேக் மருமகள் செய்திருக்கிறா. எல்லாக்குழந்தைகளும் சந்தோஷமாக வந்து கவின்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடியிருக்காங்க. மகிழ்ச்சி.
    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அக்கா. மென்மேலும் பதிவுகள் போட வாழ்த்துகின்றேன்.
    அழகான கோலம் அக்கா. நல்ல க்ருத்தும் கூடவே. நீங்க தைத்த க்றாஸ் ஸ்டிஸ் இருந்தா அதையும் இங்கு பதியுங்க அக்கா.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்.
    மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நீங்கள் எல்லாம் கொடுக்கும் ஊக்கத்தால் தான் நானும் ஏதோ எழுதி கொண்டு இருக்கிறேன்.

    துரைசெல்வராஜூ அவர்கள் கவிதையை ரசித்தமைக்கு நன்றி.
    கவினை மீண்டும் வாழ்த்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.


    //அழகான சொல்லாடலுடன் துரை அண்ணாவின் வாழ்த்துக்கவிதை. மிக அருமையாக எழுதியிருக்கார். அருமையான ஆசிகளும், வாழ்த்தும் கவின் குட்டிக்கு விஷேஷமாக கிடைத்திருக்கு.//

    நல்ல இறைபக்தி உள்ள சகோதரர் அவர்களின் வாழ்த்தும், ஆசிகளும் கவினுக்கு கிடைத்தது எல்லோருக்கும் மகிழ்ச்சி. கொடுத்து வைத்தவன் என்று பேசிக் கொண்டு இருக்கிறோம்.

    //மிக அழகாக கேக் மருமகள் செய்திருக்கிறா. எல்லாக்குழந்தைகளும் சந்தோஷமாக வந்து கவின்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடியிருக்காங்க. மகிழ்ச்சி.//

    ஆமாம், அங்கு உள்ள குழந்தைகள் இது போன்ற விழாக்களில் தான் கலந்து பேசி விளையாட முடியும்.
    எப்போதும் அடுத்து யாருக்கு பிறந்த நாள் என்று கேட்டு கொண்டு போவார்கள் விழா முடிந்து போகும் போது.
    பெரியவர்களும், சிறியவர்களும் அடுத்த சந்திப்பை மிகவும் எதிர்ப்பார்ப்பார்கள்.


    //உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அக்கா. மென்மேலும் பதிவுகள் போட வாழ்த்துகின்றேன்.//

    அனபான வாழ்த்துக்கு நன்றி அம்மு.


    அழகான கோலம் அக்கா. நல்ல க்ருத்தும் கூடவே. நீங்க தைத்த க்றாஸ் ஸ்டிஸ் இருந்தா அதையும் இங்கு பதியுங்க அக்கா.

    ஒன்று தான் இருக்கு. கொலுபெட்டியில் இருக்கு எடுக்கும் போது போடுகிறேன்.
    டிசையன் வரைந்து வைத்தது இருக்கு போடுகிறேன்.

    உங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி அம்மு.





    பதிலளிநீக்கு
  45. அனைத்தும் அருமை கோமதி மேம். துரைராஜ் சகோ அவர்களின் கவிதை வெகு அழகு. கொடுத்துவைத்த கவின். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. :) அன்பும் முத்தங்களும்.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    அன்பு முத்தங்களுக்கு மகிழ்ச்சி.
    கொடுத்து வைத்தவன் தான் கவின் தேனம்மையை அழைத்து வந்து விட்டானே!

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரி

    பேரன் கவினின் பிறந்த நாள் விழா கண்டேன் படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

    பிறந்த நாள் வாழ்த்துகள் அன்றே சொன்னேன் எனினும், இன்றும் நலமுடன், வளமுடன் பல்லாண்டு காலம் வாழ, என்றும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் தங்கள் பேரன் பிறந்தநாளுக்கு பாடிய வாழ்த்துக் கவி மிகவும் அழகாக அருமையாக இருந்தது. வாழ்த்துகள்.

    தங்கள் வலைத்தளத்தின் பிறந்த நாளுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    தங்களின் கிளிக்கோலமும் அதன் அடியில் எழுதியுள்ள வாசகங்களும் மிகவும் அருமை. கோலமும் தங்கள் எழுத்துக்களும் மிகவும் அழகாக இருந்தது. அனைத்தையும் ரசித்தேன்.
    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  48. மனம் நிறைந்த வாழ்த்துகள். வலைத்தளத்தின் பிறந்த நாளுக்கும், வலைத்தளத்தின் பிறந்த நாளுக்கும்.

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் சகோகரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் சகோதரி கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

    //பேரன் கவினின் பிறந்த நாள் விழா கண்டேன் படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

    பிறந்த நாள் வாழ்த்துகள் அன்றே சொன்னேன் எனினும், இன்றும் நலமுடன், வளமுடன் பல்லாண்டு காலம் வாழ, என்றும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.//


    பேரனுக்கு மறுபடியும் அழகாய் வாழ்த்து சொன்னதற்கும், படங்களை ரசித்து கருத்து சொன்னத்ற்கும் நன்றி.




    //சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் தங்கள் பேரன் பிறந்தநாளுக்கு பாடிய வாழ்த்துக் கவி மிகவும் அழகாக அருமையாக இருந்தது. வாழ்த்துகள். //

    நன்றி.

    //தங்கள் வலைத்தளத்தின் பிறந்த நாளுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    நன்றி.

    //தங்களின் கிளிக்கோலமும் அதன் அடியில் எழுதியுள்ள வாசகங்களும் மிகவும் அருமை. கோலமும் தங்கள் எழுத்துக்களும் மிகவும் அழகாக இருந்தது. அனைத்தையும் ரசித்தேன்.
    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.//

    நன்றி கமலா.

    அனைத்தையும் ரசித்து, கருத்து சொல்லி மனதார வாழ்த்திய உங்களுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  51. வணக்க்ம முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  52. துரை சாரின் வாழ்த்துக்கவிதை மிக மிக அருமை....


    தளத்துக்கும் பிறந்தநாள்....ஆஹா வாழ்த்துகள் மா..நிறைய எழுதி வெளியிட..


    கவின் குட்டியின் ஹீரோ of the day tshirt ம் cap ம் சூப்பர்...எல்லா படங்களும் வெகு அழகு...

    கேக் வாவ்..நானும் முன்ன பசங்க பிறந்த நாளுக்கு செஞ்சேன் இப்போ வெளியில் தான் வாங்குவது ...

    இந்த வருடம் அதுவும் இல்லை ஐஸ்கிரீம் கட் பண்ணோம்.....ஒரு change க்கு..

    பதிலளிநீக்கு
  53. வணக்கம், அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    //இந்த வருடம் அதுவும் இல்லை ஐஸ்கிரீம் கட் பண்ணோம்.....ஒரு change க்கு..//

    கோடைக்கு ஏற்றது தான், குழந்தைக்கு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.


    பதிலளிநீக்கு
  54. பேரனுக்கு மனமார்ந்த ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும்!
    உங்களுக்கு நெங்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  55. பிறந்த நாள் வாழ்த்துக்கவிதை அருமை! விழாக் கொண்டாட்டப் படங்களும் கேக்கின் படமும் அருமை. பஞ்சு மிட்டாய் வீட்டிலேயே செய்யலாம் என்பது எனக்குப் புதுச் செய்தி. ஒன்பது வருடம் நிறைவுக்கும் தொடர்ந்து பல வருடங்கள் சிறப்பான பதிவுகளைத் தரவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  56. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    குலதெய்வ வழிபாடு நல்லபடியாக முடித்து வந்து விட்டீர்களா?

    வாழ்த்துக் கவிதையை முன்பே பாராட்டி இருந்த்தீர்கள் மீண்டும் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
    விழா, கொண்டாட்டப் படங்க்கள், மருமகள் செய்த கேக்எல்லாம் ரசித்தமைக்கு நன்றி.
    பஞ்சு மிட்டாய் மிஷின் இந்த ஆண்டு புதிதாக வாங்கி இருக்கிறான்.

    வலைத்தள வாழ்த்துக்கள் மனதை மகிழ வைத்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  57. பேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    மருமகளின் கைவண்ணம் மற்றும் தங்களின் முதல் பதிவின் கைவண்ணம் ரசித்தேன்.
    புகைப்படங்கள் விழாவில் கலந்து கொண்ட நிறைவைத் தந்தது.

    பதிலளிநீக்கு
  58. வணக்கம் நிலாமகள், வாழ்க வளமுடன்.
    பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னத்ற்கு நனறி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  59. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  60. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் கவின் அவருக்கு/தங்கள் பேரனுக்கு!!! எங்கள் இருவரின் வாழ்த்துகளும். நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல மனதுடன் வளர்ந்து பல்லாண்டு வாழ்ந்திட இறைவன் அருளிட பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துகள்!

    துரை ஐயா/அண்ணா அவர்களின் வாழ்த்துக்கவிதை மிக மிக அருமையாக இருக்கிறது.

    படங்கள் வெகு சிறப்பு.

    துளசிதரன், கீதா

    கீதா:உங்கள் மருமகள் கேக் செய்து அசத்துகிறார் கோமதிக்கா. ரொம்ப அழகா செய்யறாங்க..அதுவும் வித விதமான ஷேப்பில் செய்யறாங்க. சூப்பரா இருக்கு.....அங்கு விதவிதமான பொருட்கள் நன்கு கிடைக்கும். இங்கு விட. உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள்...பாராட்டுகள் சொல்லிடுங்க கோமதிக்கா

    இங்கும் பாரிஸ் கார்னர் போனால் இதற்கான கடைகள் உள்ளன வால்டேக்ஸ் ரோடில். ஆனால் எப்போதேனும் செய்வதற்கு அங்கு எல்லாமே பெரிய பேக்காகக் கிடைப்பதால் நாம் பிஸினர் பண்ணுவதாக இருந்தால் வாங்கலாம். ஆனால் இங்கு பேக்கில் அதன் தரம் பற்றி அலல்து என்ன பொருட்கள் கலந்திருக்கு என்ற விவரம் தெளிவாக இருப்பதில்லை. அங்கு அப்படி இல்லை.

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு கேக் அதுவும் அந்தக் கப்பல் ஷேப் எப்படி அழகாகச் செய்திருக்காங்க வாவ்!!!

    பதிலளிநீக்கு
  61. வலைப்பூ தொடங்கி 9 வருடங்கள் அதுவும் தங்கள் பேரனின் பிறந்தநாளுடன் கொண்டாடுவதற்கும் வாழ்த்துகள் மேலும் தங்கள் வலைத்தளம் வளர்ந்திடவும் வாழ்த்துகள்! சகோதரி/கோமதிக்கா

    கிளிக்கோலம் ரொம்ப அழகா இருக்கு...

    கீதா: இந்த இரு பதிவுகளும் கொஞ்சம் குழம்பி விட்டது இரு பதிவுகளா ஒரே பதிவா என்று....

    பதிலளிநீக்கு
  62. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.

    //தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் கவின் அவருக்கு/தங்கள் பேரனுக்கு!!! எங்கள் இருவரின் வாழ்த்துகளும். நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல மனதுடன் வளர்ந்து பல்லாண்டு வாழ்ந்திட இறைவன் அருளிட பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துகள்!//

    உங்கள் இருவர் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளுக்கு நன்றி.

    //துரை ஐயா/அண்ணா அவர்களின் வாழ்த்துக்கவிதை மிக மிக அருமையாக இருக்கிறது.

    படங்கள் வெகு சிறப்பு.

    துளசிதரன், கீதா//

    நன்றி.

    //உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள்...பாராட்டுகள் சொல்லிடுங்க கோமதிக்கா//

    சொல்லி விடுகிறேன் கீதா.

    பதிலளிநீக்கு
  63. //வலைப்பூ தொடங்கி 9 வருடங்கள் அதுவும் தங்கள் பேரனின் பிறந்தநாளுடன் கொண்டாடுவதற்கும் வாழ்த்துகள் மேலும் தங்கள் வலைத்தளம் வளர்ந்திடவும் வாழ்த்துகள்! சகோதரி/கோமதிக்கா//

    சகோ துளசிதரன் நன்றி.
    கீதா நன்றி.

    //இந்த இரு பதிவுகளும் கொஞ்சம் குழம்பி விட்டது இரு பதிவுகளா ஒரே பதிவா என்று....//

    நானும் நினைத்தேன், பதிவை எடுத்து ஒட்டியதால் இந்த குழப்பம்.

    உங்கள் இருவரின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  64. வணக்கம் , சத்ய பாலன் வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  65. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    https://www.tamilus.com

    – தமிழ்US

    பதிலளிநீக்கு
  66. வணக்கம்Tamil Us, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு