வியாழன், 1 டிசம்பர், 2016

எண்ணம் வாழ்க!

வண்டியூர்த் தெப்பக்குளம் பற்றி   நவம்பர்  19, நவம்பர் 23 ம்  தேதிகளில் நான் போட்ட பதிவுகள்  படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.



 நிரந்தரமாக நீர் தேக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது

இரண்டு பதிவுகளிலும் ”பசுமை நடை” இயக்கத்துடன் வண்டியூர்த் தெப்பக்குளம் சென்று வந்ததைப் பகிர்ந்து இருந்தேன். பின்னூட்டம் கொடுத்தவர்களைவிடப் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பின்னூட்டம் கொடுத்தவர்கள்  எல்லாம் வண்டியூர்த் தெப்பக்குளத்திற்கு நீர் வரவேண்டும் முன்பு போல் இருக்க வேண்டும் என்று கருத்து கொடுத்து இருந்தார்கள், படித்தவர்கள் எண்ணமும்   அதுவாய்த் தான் இருந்து இருக்கும். இப்போது எண்ணம் பலிக்கும் நேரம் வந்து விட்டது அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோரிடமும்  சொல்லி நானும் மகிழ்கிறேன். நீங்களும் செய்தியைப் படித்து இருப்பீர்கள்.

பசுமைநடை இயக்கதாருக்கு நன்றி.

வைகை ஆற்றில் உள்ள கிணறு மூலமும், வடகிழக்குப் பருவ மழையும் சேர்ந்து வண்டியூர்த் தெப்பக்குளத்தை முன்பு போல் சமுத்திரமாய் வைத்து இருக்க வேண்டும்.

மழையும் இப்போது பெய்துகொண்டு இருக்கிறது.

வரும் தைப்பூசத்திற்கு தெப்பத்திருவிழா நடைபெறும் என்று நினைக்கிறேன்.

போன பதிவில் பகிர்ந்து இருந்த செய்திகள்:-

// பேராசிரியர் சுந்தர்காளி  அவர்கள்  நீராழிமண்டபங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.  அவர்களைத் தாண்டி முன் பக்கம் போக வேண்டும். அதனால் பின் புற மண்டபத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டோம்.  நீராழி மண்டபத்தை எப்படிப் பாதுகாப்பது, நீர் வரும் பாதைகளை மீட்டெடுப்பது போன்றவை பற்றிப் பேசினார்.


பசுமை நடை அமைப்பாளர் பேசும் போது இந்த குளக்கரையில் மாலை நேரம்  உணவுக் கடைகள்  நிறைய இருக்கும். இங்கு காற்று வாங்கிப் போக வருபவர்கள் அந்த உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு விட்டு அந்த கவர், தட்டு, டம்ளர்களை போட்டு விட்டு போய் விடுகிறார்கள். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும்  மீண்டும்  வருகிறது. விற்பவர்கள் தங்கள் பொறுப்பில் குப்பைகளை அகற்றும் பணியைச் செய்யலாம் என்றார்கள்.

இன்னொரு அன்பர் ’வெளி’ பற்றிப் பேசினார்.   இது போன்ற வெளி நகருக்குள் இல்லை, அதனால் தெப்பக் குளத்தைச் சுற்றி உள்ள வெளியைப் பாதுகாப்பது நம் கடமை என்றார்.//




மாடுகள் மேயும் படம் போன பதிவில் போடமுடியவில்லை. பதிவுகள் படங்கள் நிறைய ஆகி விட்டதால் இப்போது இந்த செய்திக்குப் பொருத்தமாய் இருப்பதால் பகிர்ந்து இருக்கிறேன்.

நல்ல எண்ணங்கள் செயலுக்கு வர எல்லோரும் வாழ்த்துவோம். செயல்படுத்தப் போகும் அனைத்து அதிகாரிகளையும் அதற்கு ஒத்துழைக்கப் போகும் மக்களையும் வாழ்த்துவோம்.

                                                        வாழ்க வளமுடன்.
*********************************************************************************

21 கருத்துகள்:

  1. அதற்கு முன் நடை போட்ட
    பசுமை இயக்கத்தாரையும்
    அதை அற்புதமாகப் பதிவு செய்து
    அனைவரும் அறியத் தந்த தங்களையும்
    மனமார முதலில் வாழ்த்துகிறோம்
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  2. // பின்னூட்டம் கொடுத்தவர்கள் எல்லாம் வண்டியூர்த் தெப்பக்குளத்திற்கு நீர் வரவேண்டும் முன்பு போல் இருக்க வேண்டும் என்று கருத்து கொடுத்து இருந்தார்கள், படித்தவர்கள் எண்ணமும் அதுவாய் தான் இருந்து இருக்கும். இப்போது எண்ணம் பலிக்கும் நேரம் வந்து விட்டது. அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோரிடமும் சொல்லி நானும் மகிழ்கிறேன்.//

    மிக்க மகிழ்ச்சி. :)

    எண்ணம் பலிக்க உண்மையிலேயே உழைத்துள்ள சம்பந்தப்பட்ட அனைவரையும் வாழ்த்துவோம். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. ,

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோ ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம், கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //எண்ணம் பலிக்க உண்மையிலேயே உழைத்துள்ள சம்பந்தப்பட்ட அனைவரையும் வாழ்த்துவோம்//

    அனைவரையும் வாழ்த்துவோம் சார், உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நல்ல மனம் என்றும் வாழ்க..
    நல்ல மனதின் எண்ணங்களும் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
  10. சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  11. ஆங்காங்கு இவ்வாறான நல்ல நிகழ்வுகள் நடக்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சிறுவயதில் தண்ணீர் நிறைந்து இருந்த தெப்பக்குளமா இப்படி இருக்கிறது என்று நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  13. நல்ல விஷயம். அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஜம்புலிங்கம்சார், வாழ்க வளமுடன்.
    முயற்சி வெற்றி அடைந்தால் எல்லோருக்கும் நன்மை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு