புதன், 6 ஜூலை, 2016

பட்டமங்கலம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவில்

 பட்டைமங்கை என்று இருந்த ஊர் இப்போது பட்டமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு அருள் செய்யும் தட்சிணா மூர்த்தியின் வரலாறு.

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் மட்டுமே  கிழக்கு   நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். வேறு எங்கும் கிடையாது.


கோபுர வாயில்

சிவன் சன்னதியும், தட்சிணா மூர்த்தி சன்னதியும்
சிவன் சன்னதியில்  உள்ளே தூண்களில்  அழகிய  சிலைகள், கஜசம்ஹார மூர்த்தி.
                                                     கண்ணப்பர் வரலாறு
                                                      சிவன் ரிஷபத்துடன்

மயில் மீது ஆறுமுகன், 

                                                        வில்லேந்திய ராமன்
                                            சஞ்சீவி மலையுடன் அனுமன்
சிவதனுசுடன் ராமர்
மேல் விதானத்தில் அழகான தட்சிணா மூர்த்தி , சனகாதி முனிவர்கள்
தட்சிணா மூர்த்தி ஆலமரத்தின் அடியிலிருந்து அருள்பாலிக்கும் இடம்.
தண்ணீர் இல்லா திருக்குள நீராழி மண்டபம்
ஐயப்பன் சன்னதி. வாசலில் இருமருங்கும் சுதை ச்சிற்பம்
காளி அம்மன் , சுதைச்சிற்பங்கள், தட்சிணா மூர்த்தி சனகாதி முனிவர்கள் - கம்பித் தடுப்புக்குள்
அரளி மரத்தின் கீழ் நிறைய இது போன்ற சுதைச் சிற்பங்கள்

தலவிருட்சம் ஆலமரம் -அதன் கீழ் கார்த்திக்கைப் பெண்கள் அறுவர்.
சுற்றி வர வேலி போட்டு இருக்கிறார்கள் ஆலமரத்தின் விழுதுகள் நிறைய  பெரிய மரத்தைத் தாங்கி நிற்கிறது. பரந்து விரிந்து இருக்கிறது மரம்.

வாழ்க வளமுடன்
-------------

23 கருத்துகள்:

  1. வணக்கம் ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    தற்கால கோவில் இல்லை, பழமையான கோவில்தான்.
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஏற்கெனவே இரண்டுமுறைப்
    போயிருந்தாலும் கூட
    இத்த்னை அற்புதமான சிலைகளையும்
    விக்ரகங்களையும் இப்பதிவில்தான்
    கண்டு தரிசிக்கிறேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. தெளிவான படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள்..... பட்டமங்கலம் என்ற ஊர் பெயர் கேட்டிருந்தாலும் அதன் காரணம் அறிந்ததில்லை..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  6. இதுவரையிலும் பட்டமங்கலம் சென்றதில்லை..
    தங்களுடன் பயணம் செய்தது போன்ற உணர்வு..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ரமணி சார், வாழ்கவளமுடன்.
    நானும் இரண்டு மூன்று முறை போய் இருக்கிறேன். (சென்றமாதம் போனோம்)
    தூண் சிற்பங்களில் இப்போது தான் வண்ணம் அடித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    அந்த இடம் அழகும் அமைதியும் குடி
    கொண்டு இருந்தது. காலை போய் இருந்தோம்
    சிறப்பு பூஜை முடிந்து சர்க்கரை பொங்கல் பிரசாதம் கிடைத்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
    முன்பு எல்லாம் குருக்கள் நமக்கு வரலாறு சொல்வார்.
    ஆனால் அவர் இப்போது வரும் கூட்டத்திற்கு அர்ச்சனை செய்யவே
    நேரம் சரியாக இருப்பதால் குமுதம் பக்தி ஸ்பெஷலில் வந்த வரலாறு அதை பிரேம் செய்து போட்டு இருப்பதை எடுத்து கொண்டேன்.
    கார்த்திக்கை பெண்களுக்கு பார்வதி உபதேசிக்கும் படி கேட்டுக் கொண்டதால் கார்த்திகை பெண்கள் பாடத்தை கவனிக்காமல் இருந்த குற்றத்தில் பங்கு தண்டனை பார்வதிக்கும் கிடைத்தது காளியாக இருந்து இருக்கிறார்.(கதை நிறைய இருக்கு) படிக்க சிரமம் என்று தேவையானதை மட்டும் கொடுத்து இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    பார்க்க வேண்டிய கோவில் தான்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சிற்பங்களின் மேல் வண்ணப்பூச்சு அடையாளங் காண்பதை எளிதாக்கி இருக்கும் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. அத்தனை படங்களும் அருமை. அனுமன், இராமர் சிற்பங்கள் அழகாக உள்ளன. பகிர்வுக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான் , வண்ணபூச்சு அடையாளம் காண்பதை எளிதாக்கி விட்டாலும் பழமையான அழகை கெடுத்து விட்டதாய் தோன்றுகிறது. வண்ணம் பூசப்படாதசிற்பங்கள் இன்னும் அழகாய் இருப்பதாய் தோன்றுகிறது அல்லவா?
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வண்க்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  15. வண்ண ஓவிய தீட்டல்கள் ஆளை அசத்துகின்றன.

    பட்டமங்கலத்தையும் அருள்மிகு தட்சிணாமூர்த்தி தெய்வக் கோயிலையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அழகான படங்களும்...அருமையான விளக்கமும்...நன்றி அம்மா

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    மேல்விதான வ்ண்ண ஓவியம் மிக அழகாய் இருந்தது. வரைந்தவர்
    திறமையானவர்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    என்ன காரணம் தெரியவில்லை, தமிழ்மண பட்டை வரவில்லை என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன், பதிவை பார்க்க முடியவில்லையா?

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. தங்கள் பதிவு மூலம் அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு