வியாழன், 16 ஜூன், 2016

அன்பருடன் ராமர் வந்தார்

இன்று எங்கள் வீட்டுக்கு   எண்ணங்கள்  வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி . கீதா சாம்பசிவம் அவர்கள்  துணைவருடன் வந்து இருந்தார்கள்.

கண்ணனுக்காக
சாப்பிடலாம் வாங்க
பேசும் பொற்சித்திரமே
என் பயணங்களில்
ஆன்மீக பயணம்
எண்ணங்கள்

என்று ஆறு வலைதளங்களில்  சளைக்காமல் எழுதி அசத்துபவர்.
எல்லோரிடமும்  அன்புடன் உரிமையுடன் பேசும் நேசமானவர்.

முகநூலிலும் அசத்தி வருகிறார்.

இன்று அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருவதாய் நேற்று சொன்னார்கள்.  நண்பர் ஸ்ரீராமிடம்   போன் நம்பர் வீட்டு முகவரி  வாங்கி வீட்டுக்கு வந்து விட்டார்கள்.  ஸ்ரீராமுக்குநன்றி.

இன்று காலை மீனாட்சி தரிசனம் முடித்து  எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள்.  அவர்களை முதன் முதலில் பார்த்தாலும் வலைத்தளம் மூலம் பல ஆண்டுகள் பழகியதால்  சந்திப்பு  சரளமாய்  இருந்தது.
அவர்கள் நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையிலும் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.  திரு, சாம்பசிவம் சாரும்   எங்கள் சாரிடம் கல கல என்று நன்கு பேசினார்கள். எங்களை அவர்கள் வீட்டுக்கு வரும் படி அழைத்து சென்றார்கள்.

பதிவர்கள் சந்திப்பு அடிக்கடி நடந்து இருக்கிறது கீதா அவர்கள் வீட்டில்.   அவர்கள் வீட்டில்  சந்திப்பு நடந்த   நிகழ்வுகளை நணபர்கள் அவர் அவர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதை   எல்லோரும் படித்து இருப்பீர்கள்.



இன்று ஸர்வ  ஏகாதசி. ராமநாமம் சொன்னால் நல்லது என்பார்கள்.  கீதா வீட்டுக்குள் வந்தவுடன் என்னிடம் ராமர் பட்டாபிஷேக  படம் என்று சொல்லி  கொடுத்தார்கள் , மிகவும் மகிழ்ச்சி  அடைந்தேன். என்னிடம் அந்த படம் இல்லை.  அவர்கள் வீட்டு பூஜை அறையில் ராமர் பட்டாபிஷேக படம் வைத்து இருப்பார்கள்,  ராமநவமி பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் பழமையான படம் மிக அழகாய் இருக்கும்.   நிறைய படங்களை  மாட்ட இடம் இல்லை இந்த வீட்டில்  சாமி  படங்கள் எல்லாம் பெட்டியில்  அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. பூஜை செய்யும் போது மானசீகமாய் அவற்றிற்கு பூஜை செய்து கொள்வேன்.  அப்படியும் ராமர் வந்து விட்டார் வீட்டுக்கு என்றால் நல்லது தானே!

//நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று  இரண்டு எழுத்தினால்.//
- கம்பராமாயணம்..

இனி நடப்பது எல்லாம் நன்மைதான் என்று  மனம் சொல்கிறது.





அவர்களின் பயணம் இனிதாக வேண்டும். 

                                                           வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

25 கருத்துகள்:

  1. கலகலப்பாக பழக, பேசக் கூடியவர் கீதா மேடம். புதிதாகப் பார்க்கிறோம் என்கிற உணர்வே வராது. ஆனால் எழுத்தில் இருக்கும் வம்பு, கிண்டல் நேரில் பேசும்போது இருக்காது. இனிய சந்திப்புதான்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான சந்திப்பு கோமதி. தம்பதிகள் இருவரும் மிக நல்லவர்கள்.ராமர் படமும் மிக அமைப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பதிவர் சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிதானே. இரு மூத்த பதிவர்களின் சந்திப்பு என்பது இரட்டிப்பு மகிழ்ச்சிதான். மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள்,மதுரை நினைவுகளை எழுதுவார்; குறிப்பாக மதுரையில் வசித்த போது, அழகர் ஆற்றில் இறங்கும்போது,கண்ட காட்சியை எழுதி நான் படித்ததாக நினைவு.

    // அவர்களை முதன் முதலில் பார்த்தாலும் வலைத்தளம் மூலம் பல ஆண்டுகள் பழகியதால் சந்திப்பு சரளமாய் இருந்தது.//

    இதுதான் எதார்த்தம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இனியதொரு சந்திப்பு..
    எளிமையாக அழகாக பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  5. அழகான ராமர் படமும், உங்களின் சந்திப்பும் அருமை அம்மா.

    பதிலளிநீக்கு
  6. இனிய பதிவர் சந்திப்பு. அத்துடன் ஸ்ரீராமரின் அருளும் கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் கோமதி!

    பதிலளிநீக்கு
  7. இவருக்கு ஆறு தளங்கள் இருக்கின்றதா ? இன்றுதான் அறிந்தேன் எனக்குத் தெரிந்தது ‘’எண்ணங்கள்’’ மட்டுமே பதிவர்கள் சந்திப்பு நிகழ்ந்தமைக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான், இனிய சந்திப்புதான்.
    நேரம் தான் போதவில்லை .
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இனிய சந்திப்பை இனிமையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்ன மாதிரி இருவரும் நல்லவர்கள் தான்.

    ராமர் படமும் நல்ல அம்சமாய் இருந்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இனியதோர் சந்திப்பு..... தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்....

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரர் தமிழ் இளங்கோ. வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் பதிவர் சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிதான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் உமையாள் . வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    ஆமாம் ராஜி ராமரின் அருள் கிடைத்து இருப்பது கூடுதல் மகிழ்ச்சி தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    அவர்கள் மற்ற தளங்களையும் வாசித்து பாருங்கள் , அவர் பன்முக திறமை வாய்ந்தவர் என்று தெரியும்.
    உங்கள் வாழ்த்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் தளிர், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் சொல்லித் தான்நீங்க பதிவு போட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. இன்னொரு முறை மதுரை வரச் சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னும் சிறிது நேரம் உங்கள் வீட்டில் செலவு செய்யலாம். :)

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    இன்னொரு முறை வர வாய்ய்ப்பு கிடைக்கும் வருவீர்கள்
    என்ற நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாய் வாருங்கள்.

    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. பட்டாபிஷேகப் படம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  22. அடடே ! நான் மதுரையில் இல்லாமல் போய்விட்டேனே !
    பேனா நண்பர்கள் என்ற காலம் போய் பதிவுலகம் ஒருமித்த கருத்துடையவர்களை இணைப்பது மிகவும் சந்தோஷமாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.
    ராமர் அழைத்து வந்து விட்டார் போலும் என் வலைத்தளத்திற்கு உங்களை.
    நலமா கபீரன்பன்?
    நீங்கள் மதுரையில் இருந்தால் உங்களையும் சந்தித்து இருப்பார் கீதா.
    நீங்கள் சொல்வது போல் முன்பு பேனா நண்பர்கள் இப்போது பதிவுலக நண்பர்கள்.
    ஒருமித்த கருத்துடையவர்களை இணைக்கும் பதிவுலகம் வாழ்க!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. அருமையான சந்திப்பு கீதாக்கா தளத்தில் பார்த்துவிட்டுத்தான் இங்கு வருகின்றோம். மிகவும் கலகலப்பாக எழுதக் கூடியவர். நேரில் சந்தித்தது இல்லை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி கோமதிம்மா

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
    கீதா அவர்கள் நன்றாக எழுதுவார், நன்றாக பேசுவார்.
    அருமையான சந்திப்புதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு