வியாழன், 26 பிப்ரவரி, 2015

தேடி வந்த பறவைகள்


                                                                            மணிப்புறா


புல் புல் பறவைகள்
செண்பகப் பறவை
செண்பகப் பறவை 
பெண்குயில்
பெண்குயில்
மணிப்புறா

கருங்குயில்
பெண்குயில்
கருங்குயில்
காகம்
கருங்குயில்கள்
பெண்குயில்


மணிப்புறா
வளைத்து வேப்பழத்தை தின்ன முயல்கிறது
உண்டு களித்து  பறக்க தயார்

                  வேப்பழத்தை தின்று இனிமையாகபிங் பிங் என்று பாட தயார்.

சிறு வயதில் வாரம் ஒருமுறை வேப்பம் கொழுந்து அரைத்து அம்மா ஒரு சின்ன 
உருண்டையாகக் கொடுத்து எங்களை விழுங்கச் சொல்வார்கள்.(அதிகாலையில் வெறும்
 வயிற்றில்) அப்போது கசப்பு பிடிக்காது . முகத்தை சுளித்து வேண்டாம் என்று அழுது 
அடம் செய்து இருக்கிறேன். அதன் நன்மைகள் தெரிந்து என் குழந்தைகளுக்கு கொடுக்கும்
 போது அவர்கள் வேண்டாம் என்று மறுத்தபோது வேப்பம்கொழுந்தின் மகிமைகளைச் 
சொல்லிஅவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

அதுபோல் இந்தப் பறவைகளுக்கும் தெரிந்து இருக்கிறது. அதிகாலையில் வேப்பமரத்தில்
 வந்து அமர்ந்து வேப்பம் பழங்களை வளைத்து வளைத்து 6மணியிலிருந்து 7மணி வரை
 சாப்பிடுகிறது, அனைத்து பறவைகளும். (புல் புல், கருங்குயில், புறா, செண்பகப்பறவை, 
பெண்குயில், காகம்.) எங்கள் ஊருக்குச்சென்று இருந்த போது என் வீட்டு ஜன்னல் 
வழியாக தெரியும் வேப்பமரத்தில் அமர்ந்த பறவைகளை எடுத்தவை.

வேப்பம் காற்று உடலுக்கு நன்மை அளித்து பலநோய்களைக் குணமாக்கிறது.. வேப்பம்
 மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் உடையது. உடல்
 ஆரோக்கியத்திற்கு வேப்ப மரம் மருந்தாகிறது. வேப்பமரக்காற்று உடலுக்கு நல்லது 
என்று கிராமப்புறங்களில்  மரத்தின் அடியில் கட்டிலைப்போட்டுப் படுப்பார்கள்.
 குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டி அதில் படுக்கவைத்து விட்டுப் பெண்கள் 
வயல்வெளியில் வேலைபார்ப்பார்கள்.

 பூச்சிக் கடி, மற்றும் மனநோய்க்கு வேப்பிலை அடித்தலும் உண்டு.  வேப்பிலையால்  வீசி
 வீசி மந்திரிப்பார்கள். அந்தக் காற்றுஉடலுக்குள் சென்று நரம்புத் தளர்ச்சியை 
குணமடைய செய்யுமாம்.
  



வேப்ப மரத்தை வீட்டின் முன் வளர்த்துத் தெய்வமாய் வணங்குகிறார்கள் சிலர்.

                                                            வாழ்க வளமுடன்
                                                      ===========================

48 கருத்துகள்:

  1. பறவைகள் சரணாலயத்துக்குள் வந்த மாதிரி இருக்கின்றது..

    அழகிய படங்கள்.. இதற்காகத் தாங்கள் எத்தனை சிரமப்பட்டிருக்கக்கூடும்?..

    காட்சிக்குக் காட்சி.. கருத்துக்குக் கருத்து!.

    அருமை .. அழகு!..

    பதிலளிநீக்கு
  2. பறவைகள் அழகு.... வேப்ப மரத்தின் பயன் அறிந்திருந்தாலும் அதை நாம் பயன்படுத்துவதேயில்லை...

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள்.

    சிறுவயதில் வேப்பங்கொழுந்து உருண்டை நானும் சாப்பிட்டிருக்கிறேன். பாட்டி தருவார்கள்!

    எங்கள் வீட்டு பெரிய வேப்ப மரத்தில் காக்கை தவிர வேறு பறவைகளைக் காணேன்!

    //வேப்ப மரத்தை வீட்டின் முன் வளர்த்துத் தெய்வமாய் வணங்குகிறார்கள் சிலர்.//

    ஆம். எங்கள் வீட்டிலும்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    அழகிய படங்கள்.. இதற்காகத் தாங்கள் எத்தனை சிரமப்பட்டிருக்கக்கூடும்?..//

    இல்லை சார், பறவைகள் மரத்தில் அமர்ந்தவுடன் குரல் கொடுக்கும், நான் ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்து போட்டோ எடுத்தேன் அவ்வளவுதான்.
    பால் அடிப்பில் இருக்கும் போது ஒரு முறை பொங்கவிட்டு விட்டேன், அவ்வளவுதான்.(அதை துடைத்து சுத்தம் செய்வதுதான் கஷ்டம் ஆனால் படம் எடுக்கும் மகிழ்ச்சியில் அது கஷ்டமாய் தோன்றவில்லை) மாயவரம் வீட்டில் பறவைகளின் ஒலி என்னைமொட்டை மாடிக்கு கூப்பிடும் படம் எடுக்க. மதுரைவீட்டில் வீட்டில் இருந்த படியே எடுத்து விட்டேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  5. வணக்கம் எழில், வாழ்க வளமுடன்.

    வெகு நாட்களுக்கு பின் உங்களை என் வலைத்தளத்தில் பார்க்கிறேன் மகிழ்ச்சி.

    நம் வீட்டு மூலிகை நமக்கு பயன் தராது என்பார்கள். பக்கத்தில் உள்ளவையின் அருமை தெரியாமல் வெளி நாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வோம்.

    வேப்பின் மகிமையைவைத்து பெரிய பதிவு போடலாம். அவ்வளவு நல்லவைகள் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று வீட்டில் வேப்பிலை காப்பு கட்டுவார்கள்.
    நாள் கிழமைகளில். வேப்பிலையும் மஞ்சளும் தோல் நோய்களை தீர்க்கும் அருமருந்து . அம்மன் காப்பு என்பார்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி எழில்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்களும் தப்பிக்கவில்லையா வேப்பிலை உருண்டையிடமிருந்து?

    நான் எல்லா பறவைகளும் வந்தது கிளி வரவில்லையே என்று நினைத்தேன்.
    உங்கள் வீட்டில் காகம் மட்டுமா?
    நீங்கள் வழிபடுவது அறிந்து மகிழ்ச்சி.வேப்பமரத்தை வழிபடுவது நல்லதுதான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.



    பதிலளிநீக்கு
  7. வேப்பபூவில் செய்யும் ரசம், வேப்பம்பூ துவையல் இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் எனக்கு கூட பிடிக்காது. இப்பொழுது பழகிவிட்டது.

    பறவைகளின் படங்கள் அனைத்தும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  8. வேப்பங்கொழுந்து உருண்டை மருந்து குணம் கொண்டது என்று நானும் விழுங்கி இருக்கேன்.படங்கள் அத்தனையும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் ஒரு ORNITHOLOGIST ஆகி இருக்கவேண்டும். பறவைப் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

  10. புகைப்படங்கள் அழகு நலம்தானே,,,,,

    பதிலளிநீக்கு
  11. இயற்கை ரசனை, மருத்துவம், புகைப்படங்கள் என அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ரமாரவி, வாழ்கவளமுடன்.
    சித்திரை வருடப்பிறப்புக்கு வேப்பபூரசம், பச்சடி செய்வோம். மோரில் போட்டு காய வைத்த வேப்பம்பூ துவையல் நன்றாக இருக்கும். காயவைத்த வேப்பம்பூவை லேசாக வறுத்து, சுண்டைக்காய், சுக்கு, மிள்கு, மல்லியோடு அங்காயபொடி செய்வார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி ரமாரவி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பாலமகி, வாழ்க வளமுடன்.
    நீங்களும் வேப்பம் கொழுந்து உருண்டை விழுங்கியது மகிழ்ச்சி.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    நீங்கள் ஒரு ORNITHOLOGIST ஆகி இருக்கவேண்டும். //

    சார், நான் ஏதோ என் வீட்டுப்பக்கத்தில் வரும் பறவைகளை எனக்கு தெரிந்தவரை எடுத்துப் போடுகிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்கவளமுடன்.

    நலம் தான். 10 நாட்கள் ஊருக்கு போய் இருந்தேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் Dr. ஜம்புலிங்கம் சார். வாழ்க வளமுடன்.
    பதிவை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. பறவைகளின் படங்கள் அழகு! எனக்கும் பறவைகளைப் படமெடுக்க மிகவும் பிடிக்கும். ஆனால் அவை தூரத்தில் அமர்ந்து கொண்டு பாடும். புகைப்படமெடுக்க அருகில் சென்றால் பறந்து விடும். உங்களுக்கு மட்டும் இவ்வளவு அழகாக போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்து எனக்கு வியப்பு தான்! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் கலையரசி, வாழ்க வளமுடன்.

    பற்வைகளுக்கு தெரியாமல் தான் எடுக்கிறேன். பார்த்தால் பறந்து போகும்.
    ஜன்னல் வழியாக ஜூம் செய்து எடுத்த படங்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பறவைகள் அழகு மேம்

    வேப்பமரம், பழங்கள் பற்றிக் கூறியது உண்மைதான். நானும் பார்த்திருக்கிறேன். பறவைகள் வேப்பம்பழங்கள் உண்ணும்.

    பதிலளிநீக்கு
  21. வேப்பமரத்தைப் பற்றி நம்மை விட மேலை நாட்டினர் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் . நாம் தான் நம் பொக்கிஷங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.அடுத்தத் தலைமுறைக்கு நம் பாரம்பர்யத்தை எடுத்துசெல்லும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை அழகாய்உணர்த்தி விட்டீர்கள் கோமதி.வேப்பமரமும் பரவைகளுமை இயற்கை எழில் கொஞ்சுகிறத பதிவு .
    பாராட்டுக்கள் .......

    பதிலளிநீக்கு
  22. அழகான படங்கள். எந்தப் படத்தில் எந்தப் பறவை?

    கும்பிடுவதற்கு நம்ம மக்களுக்கு கேட்கணுமா? ஒரு வேளை முன் ஜாக்கிரதையா கடவுள்னு சொல்லிட்டா வேப்ப மரத்துல பேய் வராதோ?

    பதிலளிநீக்கு
  23. பறவைகளின் படங்கள் படு சூப்பர்!
    பால் பொங்கிய போது எடுத்த படங்கள் ஆயினும்,
    வேப்பங்காய் போல் கசக்க வில்லை
    வெல்ல பாகாய் இனித்தது!
    வாழ்க ! வளர்க!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  24. இந்தப் பறவைகளைப் படமெடுக்க எவ்வளவு மெனக்கெட்டு இருப்பீர்கள். அத்தனையும் அழகு. வேப்பம்பழங்களைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று! மனத்துக்கு இதமான அழகிய படங்களும் மலரும் நினைவுகளும். பாராட்டுகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது சரிதான் நம்மிடம் வேப்பின் காப்புரிமையை வாங்க பார்த்தனரே. விழித்துக் கொண்டனர் நம்மவர்கள்.

    மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஆறு மாததிற்கு ஒருமுறை பூச்சி மருந்து கொடுக்க சொல்கிறார்கள். நம் முன்னோர்கள் எளிமையாக வேப்பங் கொழுந்தை அரைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். மீண்டும் பழமைக்கு திரும்பி வருகிறார்கள் மக்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் துரை சார், வாழ்க வளமுடன்.
    நலமா? வெகு நாட்கள் ஆயிற்றே !

    எந்தபடத்தில் எந்த பறவை என்று எழுதி விட்டேன்.

    வேப்பமரத்தை வழி படுவதால் பேய் வராமல் இருக்கிறதோ இல்லையோ மரம் பிழைக்குமே !
    நல்ல காற்றும் அருமையான நிழல்தரும் மரத்தை இழந்துவிடுவோம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.

    பின்னூட்டத்தையும் படித்து அழகாய் கருத்து சொன்னதற்கு நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

    நான் பத்து நாட்கள் மதுரையில் எங்கள் வீட்டிலிருந்து(ஜன்னல்) தினம் தினம் வேப்பமரத்தில் அமரும் பறவைகளை எடுத்தேன். வீட்டுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் வேப்பமரத்தை வழிபடும் படங்களை எடுத்தேன்.
    இணைத்தேன். மாயவரத்தில் பறவைகள் ஒலியை காலை முதல் அவைஅடையும் வரை கேட்பேன். அதுபோல் மதுரையிலும்.
    வேப்பம்பழங்களைப் ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  30. பாராட்டுக்களுக்கு நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  31. அடடா! எத்தனை எத்தனை வகைப் பறவைகள் தேடி வருகின்றன! அவற்றைக் கவனிப்பதே அருமையான பொழுதுபோக்காக இருக்கும். வாழ்த்துகள்.

    அந்நாளில் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியலுக்குப் பின் வேப்பங்கொழுந்து உருண்டை கட்டாயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம், ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    ஊரிலிருந்த போது காலை நேரம் மட்டும் தான் இவற்றை ரசிக்க முடியும் அப்புறம் உறவினர் வீடு, மற்ற கடமைகள் என்று நேரம் சரியாகி விடும். காலை நேரம் அவற்றை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

    ஆமாம், அப்போதெல்லாம் எண்ணெய் குளியல், வேப்பங்கொழுந்து உருண்டை, எல்லாம் உண்டு. காணாமல் போய்விட்டவைகளில் எண்ணெய்குளியலும் உண்டு.

    பதிலளிநீக்கு
  33. வா..வ் சூப்பரா இருக்கு. உங்க பக்கம் மிஸ் பண்ணிட்டேன். ஊரில் பார்க்கும் அத்தனை பறவைகளும் இருக்கு. அழகாக இருக்கு அக்கா உங்க படங்கள். குயில்,புறா,மைனா,புளுனி எனக்கு பிடித்தமானவை. எப்படி மிக துல்லியமா எடுத்தீங்க. அழகு.நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் பிரியசகி, வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்களுக்கு பிடித்தபறவை என்று கேட்கும் போது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம்
    அம்மா
    ஒவ்வொரு படங்களும் மிக அழகு அத்தோடு வேப்பமரத்தின் மருத்துவக்குணத்தை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  36. ஆகா
    அழகுப் பறவைகள்
    மனம் மகிழ்ந்தேன் சகோதரியாரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  37. வார்த்தைகள் இல்லை! அருமை அருமை! எத்தனை அழகான பறவைகள்!!!! நாங்களும் இயற்கைப் பிரியர்கள்!! உங்கள் தளத்தில் பல விடயங்கள் கொட்டிக்கிடக்கின்றன சகோதரி! எனவே ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும்.....இதற்கு முன் ஓரிரு முறை வந்தோம் ஆனால் கருத்திட்டோமா என்று நினைவில்லை..ஆனால் இனி தொடர்கின்றோம்.....நியச்சயமாக...

    துளசிதரன்......, கீதா..

    துளசியின் வீடு கேரளா, மலை சார்ந்த இடம் என்பதால் அவரது தோட்டத்தில் பல பறவைகள் காணலாம், சுற்றுப்புறங்களிலும் இயற்கை மனதை அள்ளும். கீதா சென்னை ஃப்ளாட் கல்சர்.....ம்ம்ம் என்ன செய்ய....

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வண்க்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    நான் பிறந்த ஊரும் கேரளா தான். (திருவனந்தபுரம்) என் தாய் பிறந்த ஊர்.

    இயற்கை எழில் கொஞ்சும் ஊர்தான் கேரளா.

    கீதா சென்னை ஃப்ளாட் கல்சர்.....ம்ம்ம் என்ன செய்ய....//

    எங்கும் இயற்கையை காணலாம்.


    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. நீங்கள் படம் எடுக்க வேண்டும் என அவைகள் காத்திருந்தன போலும்...அழகாக மரத்தில் அமர்ந்து இருக்கின்றன.

    பறவைகள் என்ன ஒரு ஆனந்தம் நமக்கு தருகின்றன இல்லையா...?

    படங்களும் பதிவும் அருமை அம்மா.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.

    பறவைகள் அழகாய் அமர்ந்து இருக்கும், ஆனால் நாம் எடுக்கும் போது பறந்து போகும். பொறுமையாக இருந்து அவற்றிற்கு தெரியாமல் ஜன்னல் வழியாக எடுத்தவை.
    பறவைகள் என்னை நீங்கள் சொல்வது போல் காலை முதல் மாலை வரை மகிழ்ச்சி படுத்துகிறது. இப்போது மணி 7.30 இப்போது கூட குயில் கூவிக் கொண்டு இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வேப்பமரத்தின் மகத்துவத்தையும், அழகான பல பறவைகளின் படங்களையும் அளித்துள இந்தத் தங்களின் பதிவு மிகச்சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. கோமதி மேடம்.. ரொம்ப நாளாச்சேன்னு பாக்கவந்தேன்.. நலம்தானே ? இந்தப்பதிவைப் பார்த்தேனே... காமெண்ட் போடாமல் 'எஸ்' ஆயிட்டேன் போல... அழகான புகைப்படங்கள் .

    வேப்பமரத்தின் காற்றே தனிசுகம் தான்... கிளையில் தாம்புக்கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடின பால்ய நாட்கள்.

    புதுசா எழுதுங்களேன் ஒரு சிறுகதை...

    பதிலளிநீக்கு